Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே: சந்திரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே: சந்திரிக்கா

Feb 18, 20190

போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே: சந்திரிக்கா

இறு­திக் கட்­டப்­போ­ரில் எவர் போர்க்­குற்­றம் இழைத்­தி­ருந்­தா­லும் அவர்­கள் தண்­டிக்­கப்­ப­ட வேண்­டும். அதில் மாற்­றுக் கருத்­துக்கு இட­மில்லை. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­யைப் பெற்­றுக் கொடுக்­க­வேண்­டும் என்று முன்­னாள் ஜனாதிபதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்­தார்.

இந்திய ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை தொடர்­பில் தீர்­மா­னம் கொண்டு வரப்­பட்­டால் அதனை இந்­தியா ஆத­ரிக்­கும் என்றே எதிர்­பார்க்­கின்­றேன். என்றும் கூறினார்.

http://www.samakalam.com/செய்திகள்/போர்க்குற்றம்-இழைத்தவர்/

  • Replies 65
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவர் செய்த கொலைகளுக்கு எப்போ யாரால் தண்டனை வழங்கப்படும்?

59 minutes ago, nunavilan said:

இவர் செய்த கொலைகளுக்கு எப்போ யாரால் தண்டனை வழங்கப்படும்?

இறு­திக் கட்­டப்­போ­ரில் எவர் போர்க்­குற்­றம் இழைத்­தி­ருந்­தா­லும் அவர்­கள் தண்­டிக்­கப்­ப­ட வேண்­டும். அதில் மாற்­றுக் கருத்­துக்கு இட­மில்லை. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­யைப் பெற்­றுக் கொடுக்­க­வேண்­டும் என்று முன்­னாள் ஜனாதிபதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்­தார்.

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி படுகொலைகள்  போன்றவை இவரால் செய்யப்பட்டது. அதற்கு  தண்டனையை யார் கொடுப்பது?  

மற்றவர்களுக்கு தண்டனையை வாங்கி கொடுக்க நினைக்கும் இவர் தான் செய்த கொலைகளை மூடி மறைக்க நீங்களும் காரணமாகிறீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nunavilan said:

செம்மணி படுகொலைகள்  போன்றவை இவரால் செய்யப்பட்டது. அதற்கு  தண்டனையை யார் கொடுப்பது?  

மற்றவர்களுக்கு தண்டனையை வாங்கி கொடுக்க நினைக்கும் இவர் தான் செய்த கொலைகளை மூடி மறைக்க நீங்களும் காரணமாகிறீர்கள்.

கோடி சுகங்களுக்காக மறப்போம் மன்னிப்போம் கோஷ்டிகளாக  மாறிவிட்டார்கள்.

6 minutes ago, குமாரசாமி said:

கோடி சுகங்களுக்காக மறப்போம் மன்னிப்போம் கோஷ்டிகளாக  மாறிவிட்டார்கள்.

மறப்போம் மன்னிப்போம் என்பது  தமிழினத்திற்கு ஐ.நா போட்ட பிச்சை.

வேறு வழியில்லை, ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, thulasie said:

மறப்போம் மன்னிப்போம் என்பது  தமிழினத்திற்கு ஐ.நா போட்ட பிச்சை.

வேறு வழியில்லை, ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

ஏற்றுக்கொண்டாலும் அதை நிறைவேற்றுவதற்கு இன்னுமொரு அறுபது வருடங்கள் போதுமா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, thulasie said:

மறப்போம் மன்னிப்போம் என்பது  தமிழினத்திற்கு ஐ.நா போட்ட பிச்சை.

வேறு வழியில்லை, ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

உங்களிடம் ஒரு கேள்வி, போரில் எவரையாவது நீங்கள் இழந்திருக்கிறீர்களா? அல்லது போரில் தமது உறவுகளை இழந்து இன்றுவரை அவர்களைத் தேடிக்கொண்டிருக்கும் உறவுகளுடன் கலந்துரையாடி இந்த முடிவிற்கு வந்தீர்களா? அல்லது அவர்கள்தான்  எல்லாவற்றையும் மன்னிப்போம் என்று உங்களிடம் கூறச் சொன்னார்களா? அப்படியானால் இன்றுவரை ஆங்காங்கே அரச அலுவலகங்கள் முன்னால் கண்ணீரும் கம்பலையுமாய்த் தவமிருக்கும் தாய் தந்தையர், சகோதரங்கள், பிள்ளைகள் எல்லாம் எதற்காக அழுகிறார்கள்? இங்கே மன்னிப்போம் மறப்போம் என்று சொல்லும் நீங்கள் ஏன் அவர்களிடமே போய், போனால் போகட்டும், விட்டு விடுங்கள், மன்னிப்போம் மறப்போம், நீங்கள் என்னதான் தலகீழாய் நின்றாலும் எதுவுமே நடக்காது என்று சொல்லிப் பார்க்கலாமே? 

அப்படியில்லை என்றால், மறப்போம் மன்னிப்போம் என்று சொல்வதற்கு நீங்கள் யார்? 

இதுதான் நடக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டு, அதையே நோக்கி நடந்துவந்தால் அதுதான் நடக்கும். இதற்கு இன்னொரு பெயர் இருக்கிறது, சரணாகதி அரசியல். நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான். ஏனென்றால், நீங்கள் ஆதரிக்கும் ஆள் அப்படி. அவர் சொல்வதைத்தானே நீங்களும் சொல்லவேண்டும், அது எவ்வளவுதான் மக்களின் நோக்கங்களுக்கு விரோதமாக இருந்தாலும்கூட. 

15 hours ago, கிருபன் said:

போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே: சந்திரிக்கா

இவர் போதையில் உளறுகிறாரா அல்லது நிதானத்துடன் பேசுகிறாரா என்பதை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, thulasie said:

மறப்போம் மன்னிப்போம் என்பது  தமிழினத்திற்கு ஐ.நா போட்ட பிச்சை.

வேறு வழியில்லை, ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

நீங்கள் யார் சார்பாகப் பேசுகிறீர்கள்? ரணில் சார்பாகவா? ஏனென்றால், அவர் கிளிநொச்சியில் வைத்து இதைத்தான் சொன்னார்.

அல்லது சுமந்திரன் சார்பாகவா? அவர் இனிமேல்த்தான் அதைச் சொல்லப் போகிறார்.

இனவாதிகளின் குரலாகவும், அவர்களை ஒத்தூதூம் ஒருவரின் குரலாகவும் நீங்கள் இருக்கவேண்டிய தேவை என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragunathan said:

உண்மையில் இது அவசியமா? அவர் காணாமல் போனவர்களை, உறவுகளைச் சிறுமைப் படுத்தியிருந்தால் இந்தக் கேள்விகள் இன்றி அவரைக் கண்டிக்க முடியாதா? யார் யார் பக்கம் நிற்க வேண்டும் யாருக்காகப் பேச வேண்டும் என்று விதிமுறைகள் நிர்ணயிக்கவும் காரணம் கேட்கவும் உங்களுக்கோ யாருக்குமோ உரிமை இல்லை என நினைக்கிறேன்! இது என் தாழ்மையான கருத்து மட்டுமே!

உண்மையை உணர்த்தும் நல்ல கேள்விகள்?

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Justin said:

உண்மையில் இது அவசியமா? அவர் காணாமல் போனவர்களை, உறவுகளைச் சிறுமைப் படுத்தியிருந்தால் இந்தக் கேள்விகள் இன்றி அவரைக் கண்டிக்க முடியாதா? யார் யார் பக்கம் நிற்க வேண்டும் யாருக்காகப் பேச வேண்டும் என்று விதிமுறைகள் நிர்ணயிக்கவும் காரணம் கேட்கவும் உங்களுக்கோ யாருக்குமோ உரிமை இல்லை என நினைக்கிறேன்! இது என் தாழ்மையான கருத்து மட்டுமே!

உங்கள் கருத்தாக அது இருக்கலாம், அதுபற்றி நான் சொல்வதற்கு எதுவுமில்லை. நான் கேட்டது காணாமல்ப் போகச் செய்யப்பட்ட அல்லது கொல்லப்பட்ட மக்களின் உறவுகள் மன்னிப்போம் மறப்போம் என்பதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதும், அவர்கள் சார்பாக இவரால் கேட்க முடியுமா என்பதும்தான். ஏனென்றால் நானும் இந்தப் போரில் உறவுகளை இழந்தவன் , என்னால் மன்னிப்போம் மறப்போம் என்று இருந்துவிட முடியாது.  

என் உணர்வுகள் பற்றிக் கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்குக் கிடையாது. உங்களது அரசியல் பற்றி நான் அறிய விரும்பவுமில்லை, தேவையுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ragunathan said:

ரகு, நானும் இந்தப் போரில் உறவுகளை இரண்டு தரப்பாலும் இழந்தவன் தான். ஆனால் அந்த வேதனை  மற்றவரின் அரசியல் நிலையை கட்சி ஆதரவு நிலையை அடக்கும் விசேட உரிமை எதையும் எனக்குத் தந்ததாக நான் கருதவில்லை! உங்கள் உணர்வுகள் உங்களோடு இருக்க வேண்டும், அவை மற்றவரின் உரிமைகளை யாழ் களம் போன்ற ஒரு பொது இடத்தில் கட்டுப் படுத்துவதாக இருக்கக் கூடாது! அப்படி இருந்தால் அது கேட்கப் படும், பேசப் படும்! இது fair game!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நான் யாரையும் கட்டுப்படுத்தவில்லை, கேள்விகேட்கவுமில்லை. என்னை ஒரு விடயம் தொடர்பான கருத்து பாதித்ததால் கேட்டேன். மற்றும்படி என் உணர்வுகளை விளங்கிக் கொள்ளவேண்டும் என்று உங்களிடம் அல்லது வேறு எவரிடமோ கேட்கும் தேவையும் எனக்கில்லை. 

எனக்கு எதிராகப் பாவிக்கப்படும் உங்களின் Fair game கேள்விகள் விமர்சனங்கள் உங்களுக்கெதிராகவும் வைக்கப்படும் என்பதையும் மறக்க வேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ragunathan said:

என் உணர்வுகள் பற்றிக் கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்குக் கிடையாது. உங்களது அரசியல் பற்றி நான் அறிய விரும்பவுமில்லை, தேவையுமில்லை. 

ரகு  உங்களுக்கு இவரின் சட்டம்பி அரசியல் தெரியாத என்ன? 

மறப்போம் மன்னிப்போம் என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் சொல்லவேண்டும். அதை செய்தவனும் அதற்கு பின்கதவால் வந்து முண்டு கொடுப்பவர்களும் அல்ல!

14 hours ago, thulasie said:

இறு­திக் கட்­டப்­போ­ரில் எவர் போர்க்­குற்­றம் இழைத்­தி­ருந்­தா­லும் அவர்­கள் தண்­டிக்­கப்­ப­ட வேண்­டும். அதில் மாற்­றுக் கருத்­துக்கு இட­மில்லை. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­யைப் பெற்­றுக் கொடுக்­க­வேண்­டும் என்று முன்­னாள் ஜனாதிபதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்­தார்.

இறுதிப்போரின்போது இருபக்கமும் விதிமீறல்களை செய்திருந்தது. அதில் ஒன்று தண்டிக்கப்பட்டு இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது. மீதமிருப்பது ஒரு சாராரே! அப்படியிருக்க அதனை கோடிட்டு காட்ட வேண்டிய அவசியம் என்ன? இது அப்பட்டமான விளக்கமில்லாத புலியெதிர்ப்பு அரசியல் தானே?

7 hours ago, ragunathan said:

நீங்கள் யார் சார்பாகப் பேசுகிறீர்கள்? ரணில் சார்பாகவா? ஏனென்றால், அவர் கிளிநொச்சியில் வைத்து இதைத்தான் சொன்னார்.

அல்லது சுமந்திரன் சார்பாகவா? அவர் இனிமேல்த்தான் அதைச் சொல்லப் போகிறார்.

இனவாதிகளின் குரலாகவும், அவர்களை ஒத்தூதூம் ஒருவரின் குரலாகவும் நீங்கள் இருக்கவேண்டிய தேவை என்ன? 

புலிகள் செய்த அட்டூழியங்கள், இராணுவம் செய்த அட்டூழியங்களுக்கு நிகரானவை, என்று தமிழர்களே சர்வதேசத்திடம் திருவாய் மலர்ந்து கன காலம்.

ஆக, சர்வதேசமே முன்னின்று - மன்னிப்போம் மறப்போம் என்ற திருவாசகத்தைப் பாடுவார்கள்.

நாம் ஆமோதிப்பதைத் தவிர, வேறு வழியில்லை.

46 minutes ago, thulasie said:

புலிகள் செய்த அட்டூழியங்கள், இராணுவம் செய்த அட்டூழியங்களுக்கு நிகரானவை, என்று தமிழர்களே சர்வதேசத்திடம் திருவாய் மலர்ந்து கன காலம்.

ஆக, சர்வதேசமே முன்னின்று - மன்னிப்போம் மறப்போம் என்ற திருவாசகத்தைப் பாடுவார்கள்.

நாம் ஆமோதிப்பதைத் தவிர, வேறு வழியில்லை.

முன் பின் எந்த ஒன்றும் புரியாதவர்கள் மாதிரி ...சுமந்திரனின் அதே சாக்கடை அரசியல் கொள்கை என்பது வெளிச்சம் .....புலி எதிர்ப்பாளராக இருந்துவிட்டு போவதை தவிர .... 

4 hours ago, Justin said:

ரகு, நானும் இந்தப் போரில் உறவுகளை இரண்டு தரப்பாலும் இழந்தவன் தான். ஆனால் அந்த வேதனை  மற்றவரின் அரசியல் நிலையை கட்சி ஆதரவு நிலையை அடக்கும் விசேட உரிமை எதையும் எனக்குத் தந்ததாக நான் கருதவில்லை! உங்கள் உணர்வுகள் உங்களோடு இருக்க வேண்டும், அவை மற்றவரின் உரிமைகளை யாழ் களம் போன்ற ஒரு பொது இடத்தில் கட்டுப் படுத்துவதாக இருக்கக் கூடாது! அப்படி இருந்தால் அது கேட்கப் படும், பேசப் படும்! இது fair game!

உண்மையாக இழந்தவன் இப்படி கையேந்தும் நிலைக்கு போகமாட்டான் .....இழப்பு தெரியாதவர் சுமந்திரன் என்கிற சாபக்கேடு ...

5 hours ago, Eppothum Thamizhan said:

ரகு  உங்களுக்கு இவரின் சட்டம்பி அரசியல் தெரியாத என்ன? 

மறப்போம் மன்னிப்போம் என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் சொல்லவேண்டும். அதை செய்தவனும் அதற்கு பின்கதவால் வந்து முண்டு கொடுப்பவர்களும் அல்ல!

இறுதிப்போரின்போது இருபக்கமும் விதிமீறல்களை செய்திருந்தது. அதில் ஒன்று தண்டிக்கப்பட்டு இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது. மீதமிருப்பது ஒரு சாராரே! அப்படியிருக்க அதனை கோடிட்டு காட்ட வேண்டிய அவசியம் என்ன? இது அப்பட்டமான விளக்கமில்லாத புலியெதிர்ப்பு அரசியல் தானே?

புலிகளும் போர்க்குற்றம் இழைத்தது என்று நீங்களே ஒப்புவிக்கிறீர்கள்.

இப்படி நானோ, சுமந்திரனோ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரோ சொன்னால், 'புலியெதிர்ப்பு' என்ற பதத்திற்குள் வருகிறது என்று சொல்வீர்கள்.

4 hours ago, பிரபாதாசன் said:

உண்மையாக இழந்தவன் இப்படி கையேந்தும் நிலைக்கு போகமாட்டான் .....இழப்பு தெரியாதவர் சுமந்திரன் என்கிற சாபக்கேடு ...

இரு வருடங்களின் முன்னர் ஒருவர் எனது வீட்டு வாசல் கதவை தட்டினார். நான் உழைப்பவர்கள் 1000 ரூபாய் கூலி கேட்டால் அதற்குமேலேயும் கொடுப்பவன், ஆனால் ஒரு நாளும் பிச்சை போடுவதில்லை. ஆனாலும் அன்று கதவைத் திறந்து போனபோது 30 வயது மதிக்கக்கூடிய ஒருவர் பொய்க்காலுடன் + ஒரு கையுடன் நின்றார். தான் ஒரு முன்னைய போராளி என்று சொல்லி, தடைமுகாமில் இருந்து வந்தது முதல் சகல ஆதாரத்தையும் காட்டினார். நம்பிக்கை வரவில்லை - வெறும் 500 ரூபாய் கொடுத்து அனுப்பி விட்டேன். ஆனால் பின்னர் இதுவரை அவர் என் வீட்டு பக்கம் வரவேயில்லை. அவர் பொய்யாக வந்திருந்தால். மறுபடியும் வந்திருப்பார். இன்றும் மனதை வருடுகிறது. இவருக்கு ஒரு வேலை போட்டுக்கொடுத்திருக்கலாம் அல்லது வேறு ஏதாவது செய்திருக்கலாம் என்று.

எமக்காக உயிரை மதிக்காது போராடப் போனவர்கள் பலரின் நிலை இதுதான் 

வெறுமனே விசைப்பலகையில் போராடாமல் அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, thulasie said:

புலிகளும் போர்க்குற்றம் இழைத்தது என்று நீங்களே ஒப்புவிக்கிறீர்கள்.

இப்படி நானோ, சுமந்திரனோ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரோ சொன்னால், 'புலியெதிர்ப்பு' என்ற பதத்திற்குள் வருகிறது என்று சொல்வீர்கள்.

புலிகள்  போர்க்குற்றம் செய்தார்களோ இல்லையோ அவர்கள் அழிக்கப்பட்டுவிட்டார்கள்.  அவர்கள்  செய்த குற்றங்களை விசாரணை செய்து யாருக்கு தண்டனை கொடுக்கப்போகிறீர்கள். மீதமிருப்பது ஸ்ரீலங்கா அரசாங்கம் மட்டுமே. அப்போ விசாரணையும் தண்டனையும் யாருக்கு அவர்களுக்கு என்றுதானே அர்த்தமாகிறது.

தலைப்பையும் செய்தியையும் நன்றாகவாசித்து கருத்து எழுதுங்கள். அதைவிட்டு மறப்போம் மன்னிப்போம் என்று நரி ஊளையிட்டால் நீங்களும் ஒத்து ஊதாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ragunathan said:

நான் யாரையும் கட்டுப்படுத்தவில்லை, கேள்விகேட்கவுமில்லை. என்னை ஒரு விடயம் தொடர்பான கருத்து பாதித்ததால் கேட்டேன். மற்றும்படி என் உணர்வுகளை விளங்கிக் கொள்ளவேண்டும் என்று உங்களிடம் அல்லது வேறு எவரிடமோ கேட்கும் தேவையும் எனக்கில்லை. 

எனக்கு எதிராகப் பாவிக்கப்படும் உங்களின் Fair game கேள்விகள் விமர்சனங்கள் உங்களுக்கெதிராகவும் வைக்கப்படும் என்பதையும் மறக்க வேண்டாம். 

13 hours ago, ragunathan said:

நீங்கள் யார் சார்பாகப் பேசுகிறீர்கள்? ரணில் சார்பாகவா? ஏனென்றால், அவர் கிளிநொச்சியில் வைத்து இதைத்தான் சொன்னார்.

அல்லது சுமந்திரன் சார்பாகவா? அவர் இனிமேல்த்தான் அதைச் சொல்லப் போகிறார்.

இனவாதிகளின் குரலாகவும், அவர்களை ஒத்தூதூம் ஒருவரின் குரலாகவும் நீங்கள் இருக்கவேண்டிய தேவை என்ன? 

இதைத் தான் கேட்டேன்!

இந்த fair game மிரட்டல் எல்லாம் நான் மட்டுமல்ல, சுமந்திரனை, ரணிலை, டக்கியைப் பற்றிப் பேசுவோர் யாவரும் கேட்டாயிற்று! புதிதாக நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை!

(இந்தக் களத்திலேயே ஒரு இயக்கத்தில் இருந்த தந்தையை இன்னொரு இயக்கம் கொன்றதால் இழந்த மகனும் இருக்கிறார், களவிதிகளை மீறாமலிருக்க இதற்கு மேல் சொல்லாமல் விடுகிறேன். ஆனால் "களையெடுக்க வேணும்" என்போரும், சகோதரப் படுகொலையை நக்கலோடு விளிப்போரும் இருக்கிறார்கள். அந்த நேரம் அவர்கள் உணர்ச்சியை அடக்க வேணும், உங்கள் உணர்ச்சியை மட்டும் நீங்கள் மற்றவரை அடக்க அவர் முகத்தில் வீச வேண்டும்! இது "எனக்கு வந்தால் இரத்தம், மற்றவனுக்கு வந்தால் தக்காளி சோஸ்" கதை தான்! )

6 hours ago, Eppothum Thamizhan said:

இறுதிப்போரின்போது இருபக்கமும் விதிமீறல்களை செய்திருந்தது. 

புலியெதிர்ப்பு செய்திகளை இங்கு நீங்கள் தவிர்ப்பது  நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபாதாசன் said:

உண்மையாக இழந்தவன் இப்படி கையேந்தும் நிலைக்கு போகமாட்டான் .....இழப்பு தெரியாதவர் சுமந்திரன் என்கிற சாபக்கேடு ...

நான் சொன்னேனே மேலே ரகுவுக்கு, உங்களுக்கு தமிழ் விளங்கினால் விளங்கிக் கொள்ளுங்கள்!

என் இழப்பைப் பற்றி யோசிக்காதீர்கள்! நான் அதை இங்கே கொண்டு வந்து உங்கள் பேசும் உரிமையைக் கட்டுப் படுத்தப் போவதில்லை, அதனால் நீங்கள் நம்புவது நம்பாதது தும்முவது முக்குவது எதுவும் எனக்குப் பொருட்டில்லை!😎

17 hours ago, ragunathan said:

இதுதான் நடக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டு, அதையே நோக்கி நடந்துவந்தால் அதுதான் நடக்கும். 

தான் ஒன்றை நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது, நாம் அறிந்தது.

இதுதான் நடக்கும், இப்படித்தான் நடக்கும், இப்படித்தான் நடக்கவும்  வேண்டும் என்று மனிதன் ஒருபோதும், தீர்மானிக்க முடியாது.

அப்படிக் கற்பனை செய்தாலும், நடைமுறைச் சாத்தியம் அற்றது.

நமது கற்பனையிலும் வராததுதான், நம் வாழ்வில் எல்லாரும் சந்திக்கிறோம். 

எமது விதி - கடவுளின் விதி என்று பின்னாளில் உணர்ந்து, நாம் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புகிறோம்.

'மன்னிப்போம், மறப்போம்' என்பதை கடவுளின் விதியாக ஏற்று,  தமிழினம் இயல்பான வாழ்க்கைக்கு பயணிப்பதுதான் சிறந்தது.

Edited by thulasie

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.