Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதாபிமானம் (சிறு கதை)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மனிதாபிமானம் (சிறு கதை)
 
அண்மையில் ஒரு உணவகத்தில் சாப்பிடச்சென்றிருந்தேன்.
அது ஒரு அல்யீரிய நாட்டவருக்கு சொந்தமான உணவகம்.
அன்று PSG இன் உதை பந்தாட்டம் இருந்ததால் உணவை ஓடர் செய்து விட்டு
அவரது அகண்ட திரையில் விளையாட்டையும் பார்க்க தயாரானேன்.
 
சிறிய நேரத்தில் அந்த உணவக முதலாளி ஒருவரை அழைத்து வந்து
எனக்குப்பக்கத்து மேசையில் இருந்தி விட்டு என்ன சாப்பிடுகின்றீர்கள் என்று கேட்க
அவரும் ஒரு சிறிய சாப்பாட்டை சொல்லி இன்று இது மட்டும் போதும் எனக்கு என்றார்.
குடிக்க என்ன வேண்டும் என்ற கேள்விக்கு ஒன்றும் வேண்டாம் என்றபடி முதலாளியை இரு கையெடுத்துக்கும்பிட்டார்.
 
அப்பொழுது தான் அவரை கவனித்தேன்.
அவர் வீதியில் நின்று வயலின் வாசித்தபடி பிச்சை எடுக்கும் ஒரு பிரெஞ்சுக்காறர்..
வழமையாக நடப்பது போல் எனது தோளிலிருந்த துணியால் மூக்கை மூடிக்கொண்டேன்.
அவரது வயலினும் தோள்ப்பையும் அவருடனேயே இருந்தன.
 
எனக்கும் அவருக்கும் சாப்பாடுகள் வந்தன.
அவர் கேட்டதைவிட அதிகமான சாப்பாடும்
குடிக்க Juice d'Orange ஒன்றையும் வைத்து விட்டு போக
மீண்டும் அவர் கையெடுத்துக்கும்பிட்டார்.
 
அதிலிருந்து இது அடிக்கடி நடப்பது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
தனது கடைக்குள் கொண்டு வந்து இலவசமாக சாப்பாடு போடும் முதலாளியின் மனதாபிமானமும்
அவனது நாட்டில் அவரை கண்டவுடன் மூக்கை பொத்தும் எனது மனநிலையும் வெட்கித்தலைகுனிய வைத்தன.
 
சாப்பிட்டு முடிய எனக்கு மட்டுமே பில் வந்தது.
பில்லுக்கு அதிகமான பணத்தை வைத்து விட்டு விடை பெற
மேலதிக பணம் வேண்டாம் இது எனது சிறு உதவி என்றார் முதலாளி.
பரவாயில்லை இன்று மட்டும் எனது என்றபடி வந்து விட்டேன்.
 
மனிதாபிமானம் இன்றும் வாழ்கிறது
செய்யும் ஒருவர் மூலம் அது மற்றவர்களையும் பற்றிக்கொள்கிறது.
எனவே உதவுவோம். உதவுவோம்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானம் அனேகரது உள்ளத்தில் இருக்கின்றது. ஆனால் பலருக்கு அதை வெளிகாட்டிடத் தெரிவதில்லை. நீங்கள் காட்டி இருக்கின்றிர்கள் விசுகு வாழ்த்துக்கள்.....!   😁 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:
மனிதாபிமானம் (சிறு கதை)
----------
அதிலிருந்து இது அடிக்கடி நடப்பது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
தனது கடைக்குள் கொண்டு வந்து இலவசமாக சாப்பாடு போடும் முதலாளியின் மனதாபிமானமும்
அவனது நாட்டில் அவரை கண்டவுடன் மூக்கை பொத்தும் எனது மனநிலையும் வெட்கித்தலைகுனிய வைத்தன.
 
சாப்பிட்டு முடிய எனக்கு மட்டுமே பில் வந்தது.
பில்லுக்கு அதிகமான பணத்தை வைத்து விட்டு விடை பெற
மேலதிக பணம் வேண்டாம் இது எனது சிறு உதவி என்றார் முதலாளி.
பரவாயில்லை இன்று மட்டும் எனது என்றபடி வந்து விட்டேன்.

விசுகு,  இந்த இரண்டு பந்திகளிலும்.... 
நீங்கள் செய்த தவறையும், அதற்கு செய்த பிராயச் சித்தமும்...
மனிதாபிமானம்... இன்றும், உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது, என்பதை காட்டியது. 👍

6 hours ago, விசுகு said:
அதிலிருந்து இது அடிக்கடி நடப்பது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
தனது கடைக்குள் கொண்டு வந்து இலவசமாக சாப்பாடு போடும் முதலாளியின் மனதாபிமானமும்
அவனது நாட்டில் அவரை கண்டவுடன் மூக்கை பொத்தும் எனது மனநிலையும் வெட்கித்தலைகுனிய வைத்தன.
 
சாப்பிட்டு முடிய எனக்கு மட்டுமே பில் வந்தது.
பில்லுக்கு அதிகமான பணத்தை வைத்து விட்டு விடை பெற
மேலதிக பணம் வேண்டாம் இது எனது சிறு உதவி என்றார் முதலாளி.
பரவாயில்லை இன்று மட்டும் எனது என்றபடி வந்து விட்டேன்.
 
மனிதாபிமானம் இன்றும் வாழ்கிறது
செய்யும் ஒருவர் மூலம் அது மற்றவர்களையும் பற்றிக்கொள்கிறது.
எனவே உதவுவோம். உதவுவோம்.

நாம் செய்யும் சிறு உதவி கூட சூழவுள்ள மனிதர் மற்றும் பிற உயிரினங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. நீங்கள் கூறியபடி அந்த மனப்பான்மை மற்றோருக்கும் பரவக்கூடியது. ஆங்கிலத்தில் இதனை 'Pay it forward' என்பார்கள். 

இதற்கு உங்கள் கதை (அல்ல நிஜம்!) நல்ல ஒரு எடுத்துக்காட்டு, விசுகு அண்ணா. மேலும் தொடருங்கள்! 😊

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, விசுகு said:

மனிதாபிமானம் இன்றும் வாழ்கிறது

 வணக்கம் விசுகர்! மனிதாபிமானம்  நல்ல அனுபவகதை.👍

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், நீங்கள் செய்தது ஒரு நல்ல விடயம்! எனினும் நீங்கள் மப்ளரால் முகத்தை மூடியமை அவனது மனதில் நிச்சயம் நெருடலை ஏற்படுத்தியிருக்கும் எனினும் ... கடைக் காரர் உங்கள் மேசையில் அவரை இருத்தியதும்... கடைக்காரரின் தவறே! உங்கள் மனிதாபிமானம் ...அவனது மன நெருடலை... நிச்சயம் குறைத்திருக்கும்! தொடர்ந்தும் எழுதுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:
அப்பொழுது தான் அவரை கவனித்தேன்.
அவர் வீதியில் நின்று வயலின் வாசித்தபடி பிச்சை எடுக்கும் ஒரு பிரெஞ்சுக்காறர்..
வழமையாக நடப்பது போல் எனது தோளிலிருந்த துணியால் மூக்கை மூடிக்கொண்டேன்.
அவரது வயலினும் தோள்ப்பையும் அவருடனேயே இருந்தன.

விசுகு முதலாளி வேணுமென்றால் அவருக்கு என்று ஒரு தனி இடம் ஒதுக்கி அவரை வரவேற்றிருக்கலாம்.முதலாளி செய்தது மிகப் பெரிய தவறு.உங்களில் தவறேதும் இல்லை.யாராவது சாப்பிடும் போது கூடாத மணம் வந்தால் எப்படிச் சாப்பிடுவார்கள்.

நீங்கள் இன்னொன்றையும் செய்திருக்க வேண்டும். முதலாளியை தனியே கூப்பிட்டு இப்படி ஊத்தை வேலை இனிமேல் செய்யாதை என்று எச்சரித்திருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

மனிதாபிமானம் அனேகரது உள்ளத்தில் இருக்கின்றது. ஆனால் பலருக்கு அதை வெளிகாட்டிடத் தெரிவதில்லை. நீங்கள் காட்டி இருக்கின்றிர்கள் விசுகு வாழ்த்துக்கள்.....!   😁 

நன்றியண்ணா

19 hours ago, தமிழ் சிறி said:

விசுகு,  இந்த இரண்டு பந்திகளிலும்.... 
நீங்கள் செய்த தவறையும், அதற்கு செய்த பிராயச் சித்தமும்...
மனிதாபிமானம்... இன்றும், உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது, என்பதை காட்டியது. 👍

நன்றி சிறி

எல்லாவற்றிற்கும் ஏதாவது  ஒரு உந்துதல்

அல்லது ஒரு தொடங்குதல்  தேவைப்படுகிறது

இந்தக்கதை  கூட  யாழின் 21வது வருட  வாழ்த்துக்கு  எதையாவது  எழுதணும்  என்ற உந்துதல் தான் காரணம்

16 hours ago, மல்லிகை வாசம் said:

நாம் செய்யும் சிறு உதவி கூட சூழவுள்ள மனிதர் மற்றும் பிற உயிரினங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. நீங்கள் கூறியபடி அந்த மனப்பான்மை மற்றோருக்கும் பரவக்கூடியது. ஆங்கிலத்தில் இதனை 'Pay it forward' என்பார்கள். 

இதற்கு உங்கள் கதை (அல்ல நிஜம்!) நல்ல ஒரு எடுத்துக்காட்டு, விசுகு அண்ணா. மேலும் தொடருங்கள்! 😊

எழுத  நேரம்  கிடைக்காத போதும்

இந்த  கருவும்

யாழின்  21 வருடமும் எழுதத்துண்டின

நன்றி  வாழ்த்துக்கும்  ஊக்குவிப்புக்கும்..

இனி  உங்கள் போன்றவர்கள் தான் தொடரணும் யாழையும்.

13 hours ago, குமாரசாமி said:

 வணக்கம் விசுகர்! மனிதாபிமானம்  நல்ல அனுபவகதை.👍

நன்றியண்ணா

உடல் நலத்தை  கவனியுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

விசுகர், நீங்கள் செய்தது ஒரு நல்ல விடயம்! எனினும் நீங்கள் மப்ளரால் முகத்தை மூடியமை அவனது மனதில் நிச்சயம் நெருடலை ஏற்படுத்தியிருக்கும் எனினும் ... கடைக் காரர் உங்கள் மேசையில் அவரை இருத்தியதும்... கடைக்காரரின் தவறே! உங்கள் மனிதாபிமானம் ...அவனது மன நெருடலை... நிச்சயம் குறைத்திருக்கும்! தொடர்ந்தும் எழுதுங்கள்!

நன்றியண்ணா

தொடரலாம் அண்ணா

10 hours ago, ஈழப்பிரியன் said:

விசுகு முதலாளி வேணுமென்றால் அவருக்கு என்று ஒரு தனி இடம் ஒதுக்கி அவரை வரவேற்றிருக்கலாம்.முதலாளி செய்தது மிகப் பெரிய தவறு.உங்களில் தவறேதும் இல்லை.யாராவது சாப்பிடும் போது கூடாத மணம் வந்தால் எப்படிச் சாப்பிடுவார்கள்.

நீங்கள் இன்னொன்றையும் செய்திருக்க வேண்டும். முதலாளியை தனியே கூப்பிட்டு இப்படி ஊத்தை வேலை இனிமேல் செய்யாதை என்று எச்சரித்திருக்க வேண்டும்.

நன்றியண்ணா

நான்  அவசரத்தில்  எழுதியதால் குறிப்பிடத்தவறிவிட்டேன்

நான் அவரைக்கண்டதும் வழமை  போல் (இப்படியானவர்கள்  எவரைக்கண்டாலும்  செய்வது போல்)

மூக்கை  மூடினேனே  ஒழிய  அவரிடமிருந்து  எந்த  மணமும் அன்று வரவில்லையண்ணா

இது  அவர்கள்   இருவருக்குமிடையிலான  நெடு  நாள் புரிதலாக  இருக்கலாம்

நன்றியண்ணா

உங்கள்  இருவரது  கருத்துக்களும் வேறு  ஒரு கருவை  தந்துள்ளது

நேரம்  கிடைக்கும் போது பார்க்கலாம்

Edited by விசுகு

9 hours ago, விசுகு said:

நன்றியண்ணா

நன்றி சிறி

எல்லாவற்றிற்கும் ஏதாவது  ஒரு உந்துதல்

அல்லது ஒரு தொடங்குதல்  தேவைப்படுகிறது

இந்தக்கதை  கூட  யாழின் 21வது வருட  வாழ்த்துக்கு  எதையாவது  எழுதணும்  என்ற உந்துதல் தான் காரணம்

எழுத  நேரம்  கிடைக்காத போதும்

இந்த  கருவும்

யாழின்  21 வருடமும் எழுதத்துண்டின

நன்றி  வாழ்த்துக்கும்  ஊக்குவிப்புக்கும்..

இனி  உங்கள் போன்றவர்கள் தான் தொடரணும் யாழையும்.

நன்றியண்ணா

உடல் நலத்தை  கவனியுங்கள்

யாழின் 21ஆவது அகவை தான் என்போன்றவர்களையும் மீண்டும் இங்கே எழுதத் தூண்டியது. நேரம் இருக்கும் போது மேலும் எழுதுங்கள் அண்ணா. 😊

  • கருத்துக்கள உறவுகள்
On 2/23/2019 at 9:17 AM, ஈழப்பிரியன் said:

விசுகு முதலாளி வேணுமென்றால் அவருக்கு என்று ஒரு தனி இடம் ஒதுக்கி அவரை வரவேற்றிருக்கலாம்.முதலாளி செய்தது மிகப் பெரிய தவறு.உங்களில் தவறேதும் இல்லை.யாராவது சாப்பிடும் போது கூடாத மணம் வந்தால் எப்படிச் சாப்பிடுவார்கள்.

நீங்கள் இன்னொன்றையும் செய்திருக்க வேண்டும். முதலாளியை தனியே கூப்பிட்டு இப்படி ஊத்தை வேலை இனிமேல் செய்யாதை என்று எச்சரித்திருக்க வேண்டும்.

நாமெல்லாம் எங்க மாறப்போறம் 😀

மனிதாபிமானமும் சில நேரம் மரித்து போகிறது 

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான மனிதாபிமான கதை தொடர்ந்து எழுதுங்கள்  விசுகு...

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இல்லாதவர்களுக்கு உதவுவதல்லவோ மனிதாபிமானம். ஏற்கனவே கடைக்கார்ர்தான் அவருக்கு உணவுகொடுக்க உள்ளே கூட்டிவந்துவிட்டாரே??? மூக்கைப் பொத்திவிட்டோம் என்னும் குற்ற உணர்வில் அல்லது முதலாளியிடம் நல்லபெயர் வாங்கவேண்டும் என்றே நீங்கள் மேலதிகமாக பணத்தை கொடுத்தது போல்ல்லோ இருக்கு அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இல்லாதவர்களுக்கு உதவுவதல்லவோ மனிதாபிமானம். ஏற்கனவே கடைக்கார்ர்தான் அவருக்கு உணவுகொடுக்க உள்ளே கூட்டிவந்துவிட்டாரே??? மூக்கைப் பொத்திவிட்டோம் என்னும் குற்ற உணர்வில் அல்லது முதலாளியிடம் நல்லபெயர் வாங்கவேண்டும் என்றே நீங்கள் மேலதிகமாக பணத்தை கொடுத்தது போல்ல்லோ இருக்கு அண்ணா

ஒரு கருத்து  அல்லது எடுபொருள்

பலராலும் பலவாறும் கிரகிக்கப்படக்கூடும்  சுமே..

நானும் கன  நாளாக  என்னுள் ஒரு  கொள்கை வைத்திருக்கின்றேன்

அது  பற்றி  இங்கும் எழுதியிருக்கின்றோம்

உதவி  தேவைப்படுபவர்களுக்கு

அல்லது வேறெவரும் உதவாதவர்களுக்கு  மட்டுமே  உதவுவது  என்பது.

ஆனால்  இங்கே ஒருத்தர்  தொடர்ந்து  உதவும் போது 

நம்மால் முடிந்தால்  ஒரு நாள்  அவரது சுமையை  குறைக்கலாமே...??

அம்புட்டுத்தான்...

மற்றும்படி  கதையின்  கரு உதவ  தூண்டுதல்.

நன்றி சுமே

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கடை முதலாளியின் மனிதாபிமானமும், ஒரு வீடற்றவனின் அழுக்கால் விசுகு ஐயா மூக்கைப் பொத்தியதும் அவரவர் ஊறிய கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் இருந்து வந்தன.

அழுக்கானவரின் நாற்றத்தைச் சகித்துக் கொண்டு சாப்பிட்ட விசுகு ஐயாவுக்கு முதலாளி பில் தராமல் விட்டிருக்கலாம்😬

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.