Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணித்த மூவர் கைது!- பாக். தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணித்த மூவர் கைது!- பாக். தெரிவிப்பு (2ஆம் இணைப்பு)

பாகிஸ்தானினால் சுட்டுவீழ்த்தப்பட்ட இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்களில் பயணித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

அதில் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் கஃபூர் தெரிவித்துள்ளார்.

மேலும், காஷ்மீர் எல்லையை கடந்து பயணித்தமையினால் தற்பாதுகாப்பு நிமித்தமே குறித்த இந்திய விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதனை நிராகரித்துள்ள இந்தியா, தமது விமானங்களதும், விமானிகளதும் உண்மை நிலை குறித்து தாம் அறிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இரு இந்திய விமானப்படைகள் விபத்திற்குள்ளாகியிருப்பதாவும், அதில் பயணித்த இரு விமானிகளும், பொதுமகன் ஒருவரும் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய விமானங்களை சுட்டுவீழ்த்தியது பாகிஸ்தான்! – எல்லையில் போர் பதற்றம்

இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரு விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சு உறுதிபடுத்தியுள்ளது.

காஷ்மீரில் முன்னெடுக்கப்பட்ட விமானத் தாக்குதலில் குறித்த இரு விமானங்களும் தமது வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து விமானியொருவர் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், இது ஒரு விபத்து என தெரிவித்துள்ள இந்திய தரப்பு தாக்குதல் இடம்பெற்றதையும், விமானி கைது செய்யப்பட்டதையும் நிராகரித்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பரஸ்பர தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/category/india-news/

 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

இதனால் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எப்ப  தொடங்க போறாங்க ஆவலுடன் காத்து இருக்கிறேம் ......................

  • கருத்துக்கள உறவுகள்

கெத்து காட்ட வெளிக்கிட்டு உள்ளதும் போச்சா?!
விபத்து என்று சொல்லி சமாளிக்கிறாங்களோ?

பாகிஸ்தான் தாக்குதல்: விமானியை காணவில்லை என்று உறுதிப்படுத்தியது இந்தியா | LIVE

indianairforceபடத்தின் காப்புரிமைHTTP://INDIANAIRFORCE.NIC.IN

பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைத் தாண்டி இந்திய வான் எல்லைக்குள் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் வான் எல்லையில் நுழைந்த இரு இந்தியப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த இயலவில்லை.

3:30 PM: நேற்று பாலகோட்டில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாக இன்று பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் இந்தியா துரிதமாக செயல்பட்டு பதிலடி கொடுத்ததாகவும் இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

பதில் தாக்குதலில் ஈடுபட்ட விமானத்தின் விமானியை காணவில்லை என்றும் பாகிஸ்தான் அவர்கள் வசம் விமானி இருப்பதாக கோருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கோரியுள்ளது.

2:30 PM: இந்தியத் தலைநகர் டெல்லிக்கு வடக்கே உள்ள விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்திய ஆளுகையில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் லேஹ் ஆகிய இடங்களிலும், அமிர்தசரசு, சண்டிகர் மற்றும் டேராடூன் ஆகிய இடங்களிலும் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

2:00 PM: பிடிக்கப்பட்ட விமானியின் வீடியோ என்று பாகிஸ்தானால் பகிரப்பட்ட, வீடியோவில் விமானியின் பெயர் அபிநந்தன் என்று அவர் தெரிவிக்கிறார்.

அந்த வீடியோ பாகிஸ்தானால் பகிரப்பட்டுள்ளது. இந்திய அரசு இதுகுறித்து இதுவரை எந்த பதிலும் கூறவில்லை.அதன் உண்மைத் தன்மை குறித்து பிபிசியால் உறுதி செய்ய இயலவில்லை.

பிபிசிபடத்தின் காப்புரிமைTWITTER Image captionபாகிஸ்தானால் பகிரப்பட்ட வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட படம். பிபிசியால் இதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய முடியவில்லை

1:30 PM: இந்திய விமானிகள் இருவரை சிறைபிடித்துள்ளோம் என்றும், அவரிடம் இருந்து ஆவணங்கள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் தெரிவித்தார். எனினும் இது குறித்து இந்தியத் தரப்பு எதையும் உறுதிசெய்யவில்லை.

பிடிபட்ட விமானிகளின் ஒருவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இன்னொருவர் தங்கள் காவலில் இருப்பதாகவும் ஆசிஃப் கஃபூர் கூறினார்.

காவலில் இருக்கும் விமானியின் காணொளி என்று கூறப்படும் காணொளி என்று ஒன்றையும் அவர் வெளியிட்டார். அவரது கூற்றுகளை பிபிசியால் சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை.

1:23 PM - பாகிஸ்தான் படைகள் திறன் வாய்ந்தவையாக உள்ளன. எனினும் தமது நோக்கம் அமைதிதான் என கூறியுள்ள ஆசிஃப் கஃபூர் ஊடகங்களும் பொறுப்புடன் செய்தி வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் மீது போர் திணிக்கப்பட்டால் எதிர்கொள்ளத் தயார் என்றும், இரு இந்திய விமானப்படை விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய ஊடகங்கள் பாகிஸ்தானின் F16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்திய ஊடகங்களை காட்டுகின்றன. இந்த தாக்குதலில் அந்த ரக விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தவே இல்லை என ஆசிஃப் கஃபூர் மறுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஆசிஃப் கஃபூர்

1:15 PM - நிலைமையை மோசமடையச் செய்யத் தாங்கள் விரும்பவில்லை. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இந்தப் பிராந்தியத்தின் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று பாகிஸ்தான் படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் கூறியுள்ளார்.

இந்திய எல்லைக்குள் ஆறு ராணுவ மற்றும் நிர்வாக நிலைகளை குறிவைத்தோம். அவற்றின் மேல் தாக்குதல் நடத்துவது நோக்கமல்ல என்பதால், திறந்த வெளியிலேயே தாக்குதல் நடத்தினோம் என்று அவர் தெரிவித்தார்.

இது உண்மையான தாக்குதல் நடவடிக்கை அல்ல, பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்கும் திறனை வெளிக்காட்டும் செயல்பாடு மட்டுமே என ஆசிஃப் கஃபூர் கூறினார்.

1:10 PM - அமைதியைக் கடைபிடிக்குமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை மீண்டும் வலியுறுத்துவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லு காங் தெரிவித்துளார்.

1:00 PM - கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் 12 முதல் 15 இடங்களில், செவ்வாய் இரவு பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்பு படைகளின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

12:41 PM - இந்தியா தங்கள் நிலையை பிரசாரம் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், அங்கு விரைவில் தேர்தல் வருவதை மனதில் கொள்ள வேண்டும் என்றும் குரேஷி கூறியுள்ளார்.

12:35 PM - பாகிஸ்தான் படைகளின் தயார் நிலையை கேள்விக்கு உட்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல என்று கூறியுள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, நிலைமையைத் தாங்கள் சீர் செய்யவே விரும்புவதாக கூறினார். பாகிஸ்தான் படைகள் எப்போதுமே தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.

இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியபின், தாமதமாக இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்தியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் உள்ளது," என்றார்.

12:30 PM - பாகிஸ்தான் மண்ணில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்திய மதரஸாக்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்ததாக இந்தியா கூறுவது உண்மையல்ல என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் கூறியுள்ளார்.

பர்வேஸ் கட்டாக் மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

12:25 PM - இந்திய ஆளுகையின்கீழ் உள்ள காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் இரு விமானங்கள் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் லேஹ் உள்ளிட்ட விமான நிலையங்கள் பயணிகள் விமானப் போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விமான நிலையங்கள் வழியாக செல்லும் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

12:20PM - கைபர் பகுன்குவா மாநிலத்திலுள்ள பாலகோட் பகுதியில் இந்திய விமானங்கள், செவ்வாய் காலை நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்கு பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தானில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @ANI

SSP Budgam on military aircraft crash in J&Ks Budgam: Some aircraft has fallen. As of now we aren't in a position to ascertain anything. Technical team is here, they'll ascertain facts. We have found 2 bodies so far and have evacuated them. Search is going on here. pic.twitter.com/9YgEIwxFRw

— ANI (@ANI) 27 பிப்ரவரி, 2019

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @ANI

12:12 PM - "சில விமானங்கள் கீழே விழுந்துள்ளன. இப்போது எதையும் கூற முடியாது. தொழில்நுட்ப குழுவினர் நடந்ததை அனுமானிப்பார்கள். இரு இறந்த உடல்களை கண்டுபிடித்து அவற்றை அப்புறப்படுத்தியுள்ளோம்," என பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த காவல் அதிகாரி கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.

11:50 AM - பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனெரல் ஆசிஃப் கஃபூர், பாகிஸ்தான் வான் பரப்பில் இரு இந்திய விமானப்படை விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒரு விமானம் பாகிஸ்தான் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீருக்குள்ளும் இன்னொரு விமானம் இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரிலும் விழுந்ததாக கூறியுள்ள அவர், ஒரு இந்திய விமானியை தாங்கள் கைது செய்துள்ளதாக கூறியுள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @OfficialDGISPR

In response to PAF strikes this morning as released by MoFA, IAF crossed LOC. PAF shot down two Indian aircrafts inside Pakistani airspace. One of the aircraft fell inside AJ&K while other fell inside IOK. One Indian pilot arrested by troops on ground while two in the area.

— Maj Gen Asif Ghafoor (@OfficialDGISPR) 27 பிப்ரவரி, 2019

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @OfficialDGISPR

11:44 AM - கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் இருக்கும் பாகிஸ்தான் வான் வெளியில் இருந்து இந்திய நிலைகளை நோக்கி தங்கள் விமானப் படை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் கூறியுள்ளார்.

இது இந்தியா தங்கள் எல்லைக்குள் நுழைந்ததற்கான பதிலடி அல்ல என்று கூறியுள்ள அவர், மனித உயிரிழப்புகள் மற்றும் பிற சேதங்கள் ஏற்படாத வகையில் ராணுவ அமைப்புகள் அல்லது இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமைREUTERS Image captionசித்தரிப்புப் படம்.

எவ்விதமான ஆதாரங்களும் இல்லாமல் தீவிரவாதிகளின் கூடாரங்கள் என்று அவர்கள் கூறும் இடங்களைத் தாக்கினால், இந்திய ஆதரவுடன் பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்கள் மீது பதிலுக்குத் தாக்குதல் நடத்த எங்களுக்கும் உரிமை உண்டு என ஃபைசல் தெரிவித்துள்ளார்.

11:40 AM - இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டர் பகுதியில் இருக்கும் இந்திய வான் எல்லைக்குள் பாகிஸ்தான் ஜெட் போர் விமானங்கள் நுழைந்ததாக மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த அந்த விமானங்கள், இந்திய வான் பரப்பில் கண்காணிப்புப் பணியில் இருந்த ஜெட் விமானங்களால் திருப்பி அனுப்பப்பட்டன என்று அவர் கூறியுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையம் மூன்று மணிநேரம் மூடப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

பாகிஸ்தான் வான் எல்லைக்குள் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியபிறகு, பாகிஸ்தான் ஆளுகையின் கீழுள்ள காஷ்மீரில் இந்திய படைகள் தாக்குதல் நடத்திய காட்சிகள்.

https://www.bbc.com/tamil/india-47383114

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஏராளன் said:

கெத்து காட்ட வெளிக்கிட்டு உள்ளதும் போச்சா?!
விபத்து என்று சொல்லி சமாளிக்கிறாங்களோ?

INDIA-PAKISTAN-KASHMIR-CONFLICT-MILITARY

  • கருத்துக்கள உறவுகள்

437604_9281527_pilot-details-4_updates.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று முழுக்க இந்திய விமானபடை தாக்குதல் என்று சிரியாவில் us ஆமியின் விமானத்தாக்குதலை கொப்பி பண்ணி போட்டு அதகளம் பண்ணினவையல் இன்னிக்கு எல்லாரும் அமைதியாகி உள்ளனர் .

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஏராளன் said:

கெத்து காட்ட வெளிக்கிட்டு உள்ளதும் போச்சா?!
விபத்து என்று சொல்லி சமாளிக்கிறாங்களோ?

mig வகை விமானங்கள் Sukhoi வகையின் நேரடியான முன் பரம்பரை விமானங்கள்.

பாகிஸ்தானின் இந்த தாக்குதலில் பின்ணணியில் சீனாவின் கரங்கள் இருந்திருக்கலாம்.

கிந்தியா தரைவழி தாக்குதல் அறிகுறியை கொடுத்து விட்டு, வான் வெளி தாக்குதலை மேற்கொண்டது.

இது சீனாவின் பரிசோதனை களமாக அமையப்போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் மோதல்களினால் காஸ்மீர் சனங்கள்தான் பாவங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்க ஒண்டும் நடவாது பாருங்கோ கந்தப்பர்...

தேர்தல் வருகுதெல்லே.... மோடி, இம்ரானுக்கு போனை போட்டு..... இரண்டு பக்கமும் நாலு வெடியை போட்டு விளையாடுவம்.... நான் வெண்டாப் பிறகு... உனக்கு தேர்தல்  வரேக்கு இன்னோரு விளையாட்டு போடலாம்.... என்ன.. தம்பி ஓகேயா என்று சொல்லி இருப்பார்... விடுங்க. 😀

20 minutes ago, கந்தப்பு said:

இவர்களின் மோதல்களினால் காஸ்மீர் சனங்கள்தான் பாவங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானப்படை விமானி அபினந்தன்: வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்தது

Published :  27 Feb 2019  15:58 IST
Updated :  27 Feb 2019  16:24 IST YouTube
 
D0ZzvJeUwAAgLZDjpg
இந்திய விமானப்படை விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கியதை வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இதனை உறுதிப்படுத்தினார்.

கடந்த 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் நேற்று (பிப் 27) தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக இன்று காலை, பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டது.

எல்லையில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் குறித்து விவரித்த வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், இந்திய விமானப்படை விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கியதை உறுதி செய்துள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், "இன்று அதிகாலை இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்திய தரப்பில் மிக் 27 ரக விமானங்கள் பதில் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்திய விமானத்தை வீழ்த்தியதாகக் கூறும் பாகிஸ்தான் அதிலிருந்த விமானி அபினந்தனை கைது செய்துள்ளதாகக் கூறியுள்ளது. அபினந்தன் இன்னும் திரும்பவில்லை. உண்மையை கண்டறியும் முயற்சியில் உள்ளோம்.

இந்த சந்திப்பில் வேறு எந்த கேள்விகளுக்கும் நாங்கள் பதிலளிக்கப்போவதில்லை. மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தகவல் கிடைக்கும்போது உங்களுக்கு தெரிவிக்கிறோம்" என சுருக்கமாகக் கூறிச் சென்றார்.

வைரல் வீடியோ:

இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் வேகமாக ஒரு வீடியோ பரவிவருகிது. அதில், கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறம் கட்டப்பட்ட நபர் ஒருவர், எனது பெயர் அபினந்தன். நான் இந்திய விமானப்படையின் விமானி. எனது சர்வீஸ் எண்  27981, எனது மதம் இந்து என்று கூறுகிறார். மேலும், சில தகவல்களைக்கோர இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல அனுமதியில்லை என்கிறார். நான் பாகிஸ்தான் ராணுவத்திடமா இருக்கிறேன் என்றும் விசாரிக்கிறார்.

இந்த வீடியோ வைரலான நிலையில்தான் பாகிஸ்தான் ராணுவத்திடம் அபினந்தன் சிக்கியதை இந்திய தரப்பும் உறுதி செய்துள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர்: 

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கிய இந்திய விமானப்படை விமானை அபினந்தன் சென்னையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் தாம்பரம் விமானப்படையில் பயிற்சி பெற்றவர் எனத் தெரிகிறது. கடந்த 2004-ம் ஆண்டு இவர் விமானப் படையில் இணைந்துள்ளார். இவரது தந்தை வர்த்தமானும் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thehindu.com/india/article26385075.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • கருத்துக்கள உறவுகள்

அபிநந்தன போட்டு அடிக்கிற வீடியோ jvpnews ல பாத்தன். 

எல்லாம் அவன் செயல்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அபிநந்தன போட்டு அடிக்கிற வீடியோ jvpnews ல பாத்தன். 

எல்லாம் அவன் செயல்..

இதை ஹிந்திய இணைதளங்களில் இணைப்பதத்திற்கு வழிவகை#காலை தேடித் பாருங்கள்.

அநேகமான ஹிந்தியை இணைத்தள ஊடகங்கள்  தெற்கசியாவிற்க்கு வெளியில் இருந்து comment போடா முடியாது.

மிகவும் அப்பாவித்தனமாக உங்களது கருது இருக்க வேண்டும்.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
52 minutes ago, ஏராளன் said:

அபிநந்தன போட்டு அடிக்கிற வீடியோ jvpnews ல பாத்தன். 

எல்லாம் அவன் செயல்...

எங்கை போனாலும் தமிழன் தான் அடிவாங்கிறான்.

மோடியைக்  கொடுத்து  விமானி அபிநந்தனை வெளியே எடுப்பது குறித்து இந்திய அரசு யோசிக்கலாம்.

(இயன்ற அளவுக்கு பெறுமதி குறைந்த பொருளைக்கொடுத்து பெறுமதி கூடிய பொருளை பெறுவதே சிறந்த ராஜதந்திரம்) 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் ராணுவம் மரியாதையாக நடத்துகிறது என்கிறார் இந்திய விமானி அபிநந்தன்

 
அபிநந்தன்படத்தின் காப்புரிமை twitter.com/OfficialDGISPR

பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்தமான் சென்னையை சேர்ந்தவரென தகவல் வெளியாகி உள்ளது.

பிபிசி இன்னும் தாமாக இதனை உறுதிப்படுத்தவில்லை.

இவரது தந்தையும் இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணி புரிந்தவர் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில், பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானி கைது செய்யப்பட்டது போல ஒரு காட்சி உள்ளது.

அவரது சீருடையில் ஆங்கிலத்தில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் தனது சர்வீஸ் எண்ணை கூறுவது போல அந்த காட்சியில் உள்ளது.

விவரிக்கும் காட்சி

கைது செய்யப்பட்ட அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் பேசுவது போல ஒரு காணொளியும் வெளியாகி உள்ளது.

அதில் அந்த நபர், ஒரு கும்பலிடமிருந்து பாகிஸ்தான் ராணுவம் தன்னை மீட்டதாகக் கூறுகிறார்.

இந்த காட்சியின் உண்மைதன்மை குறித்து பிபிசி பரிசீலித்து உறுதி செய்யவில்லை.

அந்த காணொளியில் என்ன உள்ளது என்பதை மட்டும் இங்கே வழங்குகிறோம்.

அந்த காட்சியில் சாதாரண உடையில் தேநீர் கோப்பையுடன் அபிநந்தன் உள்ளார்.

தன்னை பாகிஸ்தான் ராணுவம் மரியாதையாக நடத்துவதாக கூறுகிறார்.

அவரிடம் அவரது இருப்பிடம் குறித்தும், ராணுவ இலக்கு குறித்தும் கேட்கிறார்கள்.

இதற்கு பதிலளிக்கும் அவர், "என் இருப்பிடத்தைக் கூற எனக்கு அனுமதியில்லை. இந்தியாவின் தென் பகுதியை சேர்ந்தவன் தான் என்றும், இலக்கு குறித்து தாம் கூறமுடியாது" என்கிறார்.

இந்த சூழலில் பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் ஒரு டிவீட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒரே ஒரு இந்திய விமானி மட்டுமே உள்ளதாகவும், ராணுவ நடைமுறைகளின்படி அவர் நடத்தப்படுவதாகவும் பகிர்ந்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-47388745

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

எங்கை போனாலும் தமிழன் தான் அடிவாங்கிறான்.

அபிநந்தன் சென்னையில் வசித்தாலும், அவரின் குடும்பம் கேராளவை... சேர்ந்தவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, tulpen said:

மோடியைக்  கொடுத்து  விமானி அபிநந்தனை வெளியே எடுப்பது குறித்து இந்திய அரசு யோசிக்கலாம்.

(இயன்ற அளவுக்கு பெறுமதி குறைந்த பொருளைக்கொடுத்து பெறுமதி கூடிய பொருளை பெறுவதே சிறந்த ராஜதந்திரம்) 

பண்டமாற்று எல்லாம் எதற்கு?????

இந்த பிரசித்தி பெற்ற  உண்ணாவிரதத்தை  வைத்து  ஈழப்போரை  நிறுத்தியது  போல்  பாகிஸ்தான் - இந்திய போரை நிறுத்த முடியாதா? :cool:

karuna+3hr.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உந்த மிக் அடிவாங்காத இடமே இல்லை. இதை எல்லாம் சுட்டு விழுத்திறது கெட்டித்தனம் கிடையாது. இருந்தாலும்.. இன்னும் விழுத்தினது சந்தோசம். வன்னியிலும் இப்படி ஒன்று விழுந்ததாச் செய்தி வந்தது.. முந்தி. இவை தான் சொறீலங்காவுக்கு கொடுத்தவை.. தமிழனை அழிக்க. 

ஆனால்.. பாகிஸ்தான் இன்னும் நிறையச் செய்ய வேண்டும். பதிலுக்கு ஹிந்தியாவும் அடிக்கனும்..பாகிஸ்தானை. அப்ப தான் சுவாரசியமா அமையும். 😋

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.