Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தின் வாசல் வரைக்கும் போய் வந்திருக்கின்றீர்கள் போல உள்ளது!

கொஞ்சம் விபரமாக எழுதிறது....!😀

இந்த மனுசிமார்.....எப்பவுமே இப்பிடித் தான்....!

  • Replies 145
  • Views 14.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

                                       வாயால் மூச்செடுத்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் தலையை தண்ணீருக்குள் விட்டிருக்கிறேன் போல மூச்சை உள்வாங்கும் போது மூச்சுக்கு பதிலாக உப்புத் தண்ணீர் குடித்து பிரக்கேறி தெரிந்த நீச்சலும் போய் தாழத் தொடங்கிவிட்டேன்.பிரக்கடித்ததோடு சினோக்கிளையும் கழற்றிவிட்டேன்.நீந்த முயற்சிக்கிறேன் உடம்ப சோர்ந்து கொண்டு போகிறது.பக்கத்தில் உதவ யாருமே இல்லை.என் வாழ்வு கடேசி நிமிடங்களே தெரிகிறது.ஏற்கனவே ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போவதை உணர்ந்து மகள் நான் நின்ற இடம் நோக்கி வந்திருக்கிறார்.நான் தாண்டு தாண்டு எழும்ப மகள் மேலே மேலே தள்ளி சினோக்கிளைப் போடுங்கோ என்கிறாள்.என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை.சரி ஒன்றும் செய்ய வேண்டாம் பயப்படாதைங்கோ யாரையும் பிடிச்சுப் போடாதைங்கோ என்று நான் தாளத் தாள மேலே தள்ளித் தள்ளி ஒரு மாதிரி கரை சேர்ந்தோம்.எட்டக் கூடிய தண்ணீரில் கூட என்னால் நடக்க முடியவில்லை.இதுகளை கரையிலிருந்து எமதுறவுகள் துடிதுடிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.நிறைய உப்புத் தண்ணி குடித்திட்டார் தண்ணி போத்திலை எடுத்துக் கொண்டு வாங்கோ நிறைய தண்ணி குடிக்க வேணும் என்று மகள் சொல்ல ஒரு போத்தலை எடுக்க 4-5 பேர் ஓட்டம்.

மேலுள்ள பந்தியை வாசிக்கும் போது... 
எமக்கும் அந்தச்  சூழ்நிலையுடன் ஒப்பிட்டுகையில், பயமாக இருந்தது ஈழப்பிரியன். 
கடல் பொல்லாத இடம், எம்மை அறியாமலே... ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.
ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில், ஒன்றும் நடக்காமல் இருந்தது ஆறுதல்.
இது, எல்லோருக்கும் ஒரு அனுபவமாக இருக்கட்டும்.

அண்ணா!

யமன் பாசக் கயிற்றுடன் நிற்கவில்லை . (இணைய) வலையுடன் தான் நின்றிருக்கிறான், அது தான் மீண்டு  வந்திருக்கிறீர்கள். . திருகோணமலையில் எடுத்த படங்களையும் இணைத்து விடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புங்கையூரன் said:

மரணத்தின் வாசல் வரைக்கும் போய் வந்திருக்கின்றீர்கள் போல உள்ளது!

கொஞ்சம் விபரமாக எழுதிறது....!😀

இந்த மனுசிமார்.....எப்பவுமே இப்பிடித் தான்....!

இதைவிட விபரமாக எழுத சுவியரிடம் தான் பயிற்சி எடுக்க வேண்டும்.

மனைவி துடித்துப் போனதில் குறை காணமுடியவில்லை.
சாதாரண படங்கள் பார்க்கும் போதே உயிர் போகுற மாதிரி கட்டங்கள் வரும் போது எவ்வளவு துடித்துப் போகிறோம்.குடும்ப உறவு ஒன்று கண் முன்னே கடலில் மூழ்கும் போது பார்க்க எவ்வளவு கொடுமையாக இருந்திருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

மேலுள்ள பந்தியை வாசிக்கும் போது... 
எமக்கும் அந்தச்  சூழ்நிலையுடன் ஒப்பிட்டுகையில், பயமாக இருந்தது ஈழப்பிரியன். 
கடல் பொல்லாத இடம், எம்மை அறியாமலே... ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.
ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில், ஒன்றும் நடக்காமல் இருந்தது ஆறுதல்.
இது, எல்லோருக்கும் ஒரு அனுபவமாக இருக்கட்டும்.

சிறி இப்படிப்பட்ட இடருகள் தண்ணீரில் தான் வரும் என்றில்லை.எந்த உருவத்திலும் வரலாம்.
அன்று காப்பாற்ற மகள் இருந்தபடியால் தப்பினேன்.
இல்லை என்றால் சுற்றுலா போன அமெரிக்க பயணி கடலில் மூழ்கி மரணம் என்று பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கும்.
கொஞ்ச நாள் போக உங்களுக்கும் செய்தி பரவி துயர்பகிர்வோமில் கொஞ்ச நாட்களுக்கு அலசப்பட்டிருப்பேன்.

7 hours ago, ஜெகதா துரை said:

அண்ணா!

யமன் பாசக் கயிற்றுடன் நிற்கவில்லை . (இணைய) வலையுடன் தான் நின்றிருக்கிறான், அது தான் மீண்டு  வந்திருக்கிறீர்கள். . திருகோணமலையில் எடுத்த படங்களையும் இணைத்து விடுங்கள்.

யமன் பழைய கயிற்றுடன் நின்றதால் கயிறறுந்து தப்பிவிட்டேன்.

தண்ணீருக்குள் போவதென்றபடியால் பிள்ளைகள் கமரா கொண்டுவரவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

                                             வீடு திரும்பிய பின்பு வீடே அமைதி.அடுத்த நாள் கோணேஸ்வரம் போய் அங்கிருந்து வீடு திரும்புவது தான் திட்டம்.ஆனபடியால் சைவ சாப்பாடு என்று முதலே சொல்லி வைத்திருந்தோம்.காலையில் எல்லோரும் ஆறுதலாகவே எழும்பினார்கள்.நான் வெளியே வர எல்லோரும் பாவமாகவே பார்க்கிறார்கள்.இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பது தெரிகிறது.தரையிலும் நான் தடக்குபட்டு விழுந்துவிடுவேனோ என்று எங்கு போனாலும் யாரோ ஒருவர் பின் தொடர்கிறார்கள்.இது எரிச்சலூட்டினாலும் வெளிக்காட்ட முடியவில்லை.

                                             இந்த இடத்தில் எனது மனைவியின் குடும்பத்தையும் சிறிது சொல்ல வேண்டும்.
                                            எனது தகப்பனாரும் மனைவியின் தகப்பனாரும் மிகவும் நெருங்கி பழகுவார்கள்.இருவரது வீடும் அரை மைல் தூரம் தான்.கொஞ்சம் சொந்தமும் கூட.மனைவிக்கு 13-14 இருக்கும் போதே காதலிக்கத் தொடங்கிவிட்டோம்.அவர்களது குடும்பத்தில் எட்டு சகோதர சகோதரிகள்.இன்று வரை எவருமே அத்தான் மச்சான் என்று அழைப்பதில்லை.அண்ணன் என்று தான் அழைப்பார்கள்.நானும் ஒரு அண்ணனாகவே இருக்கிறேன்.எல்லோரையும் வாடா போடா போடி வாடி என்று சிறு வயது முதல் கதைத்து பழகியதால் இப்போதும் தொடர்கிறது.இப்படி பழகியதாலோ என்னவோ எல்லோரும் ரொம்பவும் உடைந்துவிட்டனர்.

                                            காலை சாப்பாடு முடிய அவர்களது கொடுப்பனவுகளையும் முடித்துக் கொண்டு திருமலை நகரையும் பார்த்துக் கொண்டு கோணேஸ்வரம் கோவிலுக்கு போனோம்.சிறிய கோவில் அமைந்திருந்த இடம் எல்லாமே எல்லோருக்கும் மிகவும் பிடித்திருந்தது.எனது பெயருக்கு அரிச்சனை இது எதிர்பார்த்தது தான்.கோவிலின் கீழ்பகுதி கடல் அங்கு தான் சுழியோடிப் பார்க்க திட்டம் போட்டிருந்தனர்.மனைவியும் மாமியும் ஆளாளுக்கு நேத்திக்கடன் வைத்துவிட்டு வந்துவிட்டார்கள்.இனி எப்ப இலங்கை போனாலும் கோணேஸ்வரம் கோவிலுக்கு போயே ஆகவேண்டும்.வெளியே உள்ள கடைதெரு எல்லாம் சிங்கள மக்களே கூடுதலாக காணப்பட்டார்கள்.இது கொஞ்சம் நெருடலாக இருந்தது.எல்லாம் முற்று முழுதாக தமிழர்கள் வாழ்ந்த இடம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.இப்போது எல்லாமே மாறியிருக்கிறது.

                                            மீண்டும் மதியச்சாப்பாட்டுக்காக நகரத்துக்கு போய் சாப்பிட்டு இனி என்ன வீட்டுக்கு தான் என்றதும் ஒரு நிம்மதி.பிற்பகல் முருகண்டி போய் வழியாடு அடுத்து வீடு.சாரதியும் அண்ணே சமாதானத்தின் பின் நீண்டகாலமாக வான் ஓடுகிறேன்.வந்தவர்களுக்கெல்லாம் நாங்கள் தான் பாதைகாட்ட வேண்டும்.போற இடத்தில் இரவு தங்குவதற்கு இடம் ஒழுங்கு செய்து கொடுக்க வேண்டும்.நல்ல சாப்பாட்டுக்கடை தேடிப் பிடிக்க வேண்டும்.சாப்பாடு கூடாதென்றால் அதுக்கும் பேச்சு வாங்க வேணும். இப்படி பல பிரச்சனைகளுடன் கொண்டுவந்து இறக்குவோம்.முதல் தடவையாக எனக்கு எந்தவிதமான தொந்தரவுமில்லாமல் போய்வந்திருக்கிறேன் என்று விடைபெற்றார்.

                                           அடுத்த நாள் நல்லூர் தேர் முக்கியமாக காவடிகள் பார்க்க வேண்டும் என்று வேளைக்கே எல்லோரும் படுக்கைக்கு போய்விட்டோம்.

இன்னும் ஒருநாள் இணைந்திருங்கள்.

61-CF4-F5-A-9-DE2-4-A3-A-9-EE1-F52619-AF

5-DCFC21-C-E850-4-D5-A-8551-448-A7-F2007

AAEEDD57-0-CB9-49-CA-AB03-7-CF9845302-E8

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி இப்படிப்பட்ட இடருகள் தண்ணீரில் தான் வரும் என்றில்லை.எந்த உருவத்திலும் வரலாம்.
அன்று காப்பாற்ற மகள் இருந்தபடியால் தப்பினேன்.
இல்லை என்றால் சுற்றுலா போன அமெரிக்க பயணி கடலில் மூழ்கி மரணம் என்று பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கும்.
கொஞ்ச நாள் போக உங்களுக்கும் செய்தி பரவி துயர்பகிர்வோமில் கொஞ்ச நாட்களுக்கு அலசப்பட்டிருப்பேன்.

யமன் பழைய கயிற்றுடன் நின்றதால் கயிறறுந்து தப்பிவிட்டேன்.

தண்ணீருக்குள் போவதென்றபடியால் பிள்ளைகள் கமரா கொண்டுவரவில்லை.

சும்மா விசர்க்கதை கதைச்சுக்கொண்டிருக்காமல் பழசை மறந்து முன்னோக்கி பாருங்கோ....எல்லாம் ஒரு படிப்பினையும்....பாடமும் தான்..:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

சும்மா விசர்க்கதை கதைச்சுக்கொண்டிருக்காமல் பழசை மறந்து முன்னோக்கி பாருங்கோ....எல்லாம் ஒரு படிப்பினையும்....பாடமும் தான்..:)

சொன்னா நம்பமாட்டீர்கள் நான் தலைபோற விடயமென்றாலும் நன்றாக சாப்பிட்டு படுத்தவுடன் நித்திரை கொண்டு நிம்மதியாக இருப்பேன்.மனைவி தானும் தூங்காமல் எனது தூக்கத்தையும் இஞ்சை பார் இவ்வளவு பிரச்சனைக்குள்ளும் நல்லா திண்டுட்டு கொறட்டை விட்டு படுத்திருக்கு என்று நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

இதைவிட விபரமாக எழுத சுவியரிடம் தான் பயிற்சி எடுக்க வேண்டும்.

மனைவி துடித்துப் போனதில் குறை காணமுடியவில்லை.
சாதாரண படங்கள் பார்க்கும் போதே உயிர் போகுற மாதிரி கட்டங்கள் வரும் போது எவ்வளவு துடித்துப் போகிறோம்.குடும்ப உறவு ஒன்று கண் முன்னே கடலில் மூழ்கும் போது பார்க்க எவ்வளவு கொடுமையாக இருந்திருக்கும்.

மன்னிக்கவும்.....ஈழப்பிரியன்!

ஆர்வக் கோளாற்றில்...கொஞ்சம் விளையாட்டுத் தனமாகக் கருத்தெழுதி விட்டேன் போல உள்ளது!

எவ்வளவு சீரியாசான விடயம்...என்று பின்னர் தான்.....ஓடி வெளித்தது...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, புங்கையூரன் said:

மன்னிக்கவும்.....ஈழப்பிரியன்!

ஆர்வக் கோளாற்றில்...கொஞ்சம் விளையாட்டுத் தனமாகக் கருத்தெழுதி விட்டேன் போல உள்ளது!

எவ்வளவு சீரியாசான விடயம்...என்று பின்னர் தான்.....ஓடி வெளித்தது...!

இதிலே ஒன்றுமே இல்லை.
கருத்துக்களமென்பது மனதிலெழுந்ததை எழுதுவது தானே.
ஒவ்வொருவரையும் குளிர வைப்பதற்காக எழுதுவதில்லையே.
ஆனபடியால் இன்னும் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

.....சாரதியும் அண்ணே சமாதானத்தின் பின் நீண்டகாலமாக வான் ஓடுகிறேன்.வந்தவர்களுக்கெல்லாம் நாங்கள் தான் பாதைகாட்ட வேண்டும்.போற இடத்தில் இரவு தங்குவதற்கு இடம் ஒழுங்கு செய்து கொடுக்க வேண்டும்.நல்ல சாப்பாட்டுக்கடை தேடிப் பிடிக்க வேண்டும்.சாப்பாடு கூடாதென்றால் அதுக்கும் பேச்சு வாங்க வேணும். இப்படி பல பிரச்சனைகளுடன் கொண்டுவந்து இறக்குவோம்.முதல் தடவையாக எனக்கு எந்தவிதமான தொந்தரவுமில்லாமல் போய்வந்திருக்கிறேன் என்று விடைபெற்றார்.

                                           அடுத்த நாள் நல்லூர் தேர் முக்கியமாக காவடிகள் பார்க்க வேண்டும் என்று வேளைக்கே எல்லோரும் படுக்கைக்கு போய்விட்டோம்.

Bildergebnis für nallur kavadi gif

ஈழப்பிரியன், உங்களுக்கு வாகனம் ஓடிய சாரதியை...
உங்களுடன் பயணிக்கும் ஒருவராக... நீங்கள்  நல்ல முறையில் கவனித்த படியால் தான்....
அவரும் தன்னால் இயன்ற அளவு அதிக அக்கறை எடுத்து, 
தங்குமிடம், உணவு விடயங்களில் நல்ல இடங்களாக தெரிவு செய்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து, ஊருக்கு இப்படி பெரிய சுற்றுலா செய்யும் போது...
உணவு விடயத்தில்... சுகாதாரமான இடங்களை,  எம்மால் கண்டு பிடிப்பது கஷ்டம்.
உணவு விடயத்தால்... பயணிக்கும், ஒருவராவது....  நோய் வாய்ப்பட்டால்..
அந்தச்  சுற்றுலாவை ரசிக்க முடியாமல், பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். 
அந்த விடயத்தில்... உங்களின் சாரதி, பெரிதும் ஒத்தாசையாக இருந்து இருக்கின்றார்.

நல்லூர் காவடி பார்க்க... ஆவலாக  உள்ளோம். தாமதிக்காமல் எழுதுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சரி மிச்சத்தையும் எழுதி முடியுங்கோ கெதியா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

நல்லூர் காவடி பார்க்க... ஆவலாக  உள்ளோம். தாமதிக்காமல் எழுதுங்கள்

கோவிலுக்கு முன்னால கொண்டு போய் கெதியாய் எழுதி முடியப்பா என்று விட்டிருக்கிறியள்.காவடியுடன் தொடர்கிறேன்.

24 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சரி மிச்சத்தையும் எழுதி முடியுங்கோ கெதியா

என்ன அவசரம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

                       காலையில் எழுந்து கோவிலுக்கு போவோமென்றால் ஆக்கள் கூடினால் அவர் குளிக்கட்டும் இவர் குளிக்கட்டும் என்று ஆளையாள் சாட்டி வெளிக்கிட்டு போகவே நேரம் போய்விட்டது.
                      0-DEAE5-CB-1829-47-BF-9-A8-A-9-ECD46-CD2

2-BDE205-C-71-C6-46-D2-8595-BAADE17-CD34

233-D8-E60-1-ECF-47-AC-AAA9-958967-D3797
                       கோவிலில் நிறைய கூட்டம்.வெக்கை வேற பிள்ளைகள் களைப்பாக இருக்கிறது போவோம் என்றார்கள்.விரைவாகவே வந்துவிட்டோம்.அடுத்தடுத்த நாள் பயண ஏற்பாடும் உறவினர்களின் பிரியாவிடையுடன் கொழும்பு வந்து இருநாட்கள் கொழும்பில் நின்று சுற்றி பார்த்துத்தோம்.கொழும்பில் நின்ற காலத்தில் யூபர் கணக்கு பிள்ளைகளிடம் இருந்ததால் அதிலேயே எல்லா இடமும் போனோம்.ஏறத்தாள ஆட்டோவுக்குண்டான கட்டணம் தான் இதற்கும்.ஏசி போடுவார்கள் பாதுகாப்பானதுமாக இருந்தது.

                       ஊரில் நின்றவேளைகளில் நான் தான் மாடு மேச்சலுக்கு கொண்டுபோய் வாறது.ஒருநாள் நான் மாடு கொண்டுவர போகிறேன் என்று மருமகனும் கொண்டுவந்தார்.அவர் மாடு மேய்க்கும் படத்தைக் கண்டதும் தான் இதை எழுத தூண்டியது.

B6-F762-DC-F18-C-4-CA5-ADAE-A0084-B1-BA1

                      எப்படித் தான் 70 நாட்கள் போனதோ தெரியவில்லை.அவர்கள் சன்பிரான்சிஸ்கோவுக்கும் நாங்கள் நியூயோர்க்குக்குமாக வெவ்வேறு விமானங்களில் புறப்பட்டு பிறந்த ஊரிலிருந்து புகுந்தவீடு வந்து சேர்ந்தோம்.
                     இத்தனை நாளாக பச்சை புள்ளிகளாலும் பின்னூட்டங்களாலும் சில உறவுகள் கட்டாயம் ஊக்கம் கொடுக்க வேண்டுமென்றும் உற்சாகப்படுத்தி இதனை எழுதி முடிக்க ஒத்தாசையாக இருந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
வணக்கம்.

முற்றும்.

  • கருத்துக்கள உறவுகள்

70 நாள் பயணத்தை 7 நாளில் எழுதி முடித்துவிட்டீங்களே!

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிறப்பான + த்ரில்லிங்கான பயணக் கட்டுரை.......பாராட்டுக்கள் ஈழப்பிரியன்......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விவரிப்புகள் அருமை. உங்களோடு கூடவே நாங்களும் ஓசியில் ஊர் சுற்றிப் பார்த்தாச்சு.

நல்ல தலைப்பும் விறுவிறுப்பும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, suvy said:

மிகவும் சிறப்பான + த்ரில்லிங்கான பயணக் கட்டுரை.......பாராட்டுக்கள் ஈழப்பிரியன்......!  👍

2 hours ago, ஏராளன் said:

70 நாள் பயணத்தை 7 நாளில் எழுதி முடித்துவிட்டீங்களே!

ஆர்வத்துடன் தொடங்கினாலும் பின்னர் முழுசாட்டமாக இருந்தது.நீங்களெல்லோரும் இவ்வளவு உற்சாகம் தரவில்லை என்றால் ரொம்ப கஸ்டப்பட்டிருப்பேன்.மீண்டும் நன்றி.

சுவி எழுதியவைகளில் எங்கெங்கு இன்னும் சுவாரிசமாக எழுதி இருக்கலாம்.எங்கு சிலவற்றை தவிர்த்திருக்கலாம் என்று நேரம் இருக்கும் போது அறியத்தாருங்கள்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் ஈழப்பிரியன் அண்ணா...ஆனால்,இன்னும் கொஞ்சம் விரிவாய் எழுதி இருக்கலாம் 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் விவரிப்புகள் அருமை. உங்களோடு கூடவே நாங்களும் ஓசியில் ஊர் சுற்றிப் பார்த்தாச்சு.

நல்ல தலைப்பும் விறுவிறுப்பும்

நன்றி சுமே.நடந்ததை எழுதியபடியால் இலகுவாக இருந்தது.ஆனாலும் இந்தளவுக்கு நீழும் என நினைக்கவில்லை.
ஒரு கட்டத்தில் இப்படி நீண்டு எழுதிக் கொண்டே போனால் யாருமே பார்க்கமாட்டார்கள் என மனைவி எச்சரிக்கை செய்திருந்தார்.அதையும் மீறி எல்லோருடைய ஊக்கம் பெருமையாக இருக்கிறது.

6 minutes ago, ரதி said:

பாராட்டுக்கள் ஈழப்பிரியன் அண்ணா...ஆனால்,இன்னும் கொஞ்சம் விரிவாய் எழுதி இருக்கலாம் 
 
அம்மா தாயே இதை எழுதி முடிக்கவே ரொம்பவும் சிரமப்பட்டுவிட்டேன்.மனைவி வேற வெருட்டத் தொடங்கிவிட்டா.
நன்றி ரதி.

9 minutes ago, ரதி said:

பாராட்டுக்கள் ஈழப்பிரியன் அண்ணா...ஆனால்,இன்னும் கொஞ்சம் விரிவாய் எழுதி இருக்கலாம் 
 
அத்தோடு அனுபவமின்மையும் ஒரு முக்கிய காரணம்.

சுவியரைக் கேட்டிருக்கிறேன் நிறைகுறை சொன்னால்த் தான் தெரியும்.பார்ப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/20/2019 at 6:53 PM, ஈழப்பிரியன் said:

சொன்னா நம்பமாட்டீர்கள் நான் தலைபோற விடயமென்றாலும் நன்றாக சாப்பிட்டு படுத்தவுடன் நித்திரை கொண்டு நிம்மதியாக இருப்பேன்.மனைவி தானும் தூங்காமல் எனது தூக்கத்தையும் இஞ்சை பார் இவ்வளவு பிரச்சனைக்குள்ளும் நல்லா திண்டுட்டு கொறட்டை விட்டு படுத்திருக்கு என்று நடக்கும்.

சேம் பிளட் பிரதர்...☹️

Vadivelu Whyblood GIF - Vadivelu Whyblood Sameblood GIFs

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் ஊர்  ஊருக்கு சென்று வந்த  உணர்வுடன்  யாழ் இணையம் உங்களை  ஒரு  கதாசிரியர்

 ஆக்கி இருக்கிறது . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

ஊரில் நின்றவேளைகளில் நான் தான் மாடு மேச்சலுக்கு கொண்டுபோய் வாறது.ஒருநாள் நான் மாடு கொண்டுவர போகிறேன் என்று மருமகனும் கொண்டுவந்தார்.அவர் மாடு மேய்க்கும் படத்தைக் கண்டதும் தான் இதை எழுத தூண்டியது.

B6-F762-DC-F18-C-4-CA5-ADAE-A0084-B1-BA1

ஒரு மாட்டை வைச்சு....ஏதோ 100 மாட்டை மேய்க்க கொண்டு போன பீலிங் உங்களிட்டை நிறையவே இருக்கு ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

ஒரு மாட்டை வைச்சு....ஏதோ 100 மாட்டை மேய்க்க கொண்டு போன பீலிங் உங்களிட்டை நிறையவே இருக்கு ....

நான் மாடு என்று தானே எழுதியுள்ளேன்.மாடுகள் என்றா வாசித்தீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாடு என்றாலும் அதைக் கொண்டு போய் மேய்க்கிற சுகம் இனி எப்ப தான் வருமோ?
தண்ணி வாளியை கொண்டு போகும் போது எவ்வளவு ஆவலாக வரவேற்கும்.

2 hours ago, நிலாமதி said:

நாங்களும் ஊர்  ஊருக்கு சென்று வந்த  உணர்வுடன்  யாழ் இணையம் உங்களை  ஒரு  கதாசிரியர்

 ஆக்கி இருக்கிறது . 

நீங்களெல்லாம் கற்பனையில் எழுதக் கூடியவர்கள்.எனக்கு நடந்ததை எழுத மட்டுமே தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.