Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில்- எழுச்சிப் பேரணி!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில்- எழுச்சிப் பேரணி!!

பதிவேற்றிய காலம்: Mar 16, 2019

போர்க்­குற்­றம் தொடர்­பில் பன்­னாட்டு விசா­ர­ணையை வலி­யு­றுத்­தி­யும், இலங்கை அர­சுக்கு கால அவ­கா­சம் வழங்­கக் கூடாது என­வும் கோரிக்­கை­களை முன்­வைத்து யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக சமூ­கம் மேற்­கொள்­ளும் பேரணி இன்று இடம்­பெ­ற­வுள்­ளது.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் அமர்வு தற்­போது இடம்­பெற்­று­வ­ரும் நிலை­யில், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கம் இந்­தப் பெரும் பேர­ணிக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

போர்க்­குற்­றம் தொடர்­பில் இலங்­கைக்கு எதி­ரான பன்­னாட்டு விசா­ரணை அவ­சி­யம், இலங்கை அர­சுக்கு தொடர்ந்­தும் கால அவ­கா­சத்­தையோ அல்­லது கால நீட்­டிப்­புக்­க­ளையோ ஐ.நா. வழங்­கக்­கூ­டாது என்று வலி­யு­றுத்தி யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கம் இந்­தப் பேர­ணிக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கத்­தில் இருந்து ஆரம்­பிக்­கும் இந்­தப் பேரணி முற்­ற­வெளி வரை­செல்­லும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ் அர­சுக் கட்சி, தமிழ் மக்­கள் கூட்­டணி, தமிழ் மக்­கள் முன்­னணி, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி. சமத்­து­வம் மற்­றும் சமூக நீதிக்­கான மக்­கள் அமைப்பு, ஈ.பி.டி.பி. உள்­ளிட்ட பல்­வேறு கட்­சி­கள் மற்­றும் அமைப்­புக்­கள் இந்­தப் போராட்­டத்­துக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.

‘இலங்கை அர­சின் இணை அனு­ச­ர­ணை­யு­டன் முன்­வைக்­கப்­பட்ட வெளி­நாட்டு நிபு­ணர்­க­ளின் பங்­க­ளிப்­பு­டன் கூடிய போர்க்­குற்ற விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­க­வல்­ல­தான நீதி­மன்­றப் பொறி­மு­றை­யொன்று இன்­ன­மும் அமைக்­கப்­ப­ட­வில்லை. மாறாக போர்க்­குற்ற விசா­ரணை தொடர்­பான செயற்­பா­டு­களை ஆரம்­பிப்­ப­தற்கு இலங்கை அரசு கால அவ­கா­சம் கேட்­கின்ற நிலை­யும், மனித உரி­மை­கள் பேர­வை­யா­னது அதற்­கான அவ­கா­சத்தை வழங்­கு­கின்ற நிலை­மை­யுமே காணப்­ப­டு­கி­றது. இந்த நிலை­யில்­தான் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் குரல்­களை வலுப்­ப­டுத்தி உட­ன­டித் தீர்­வை­யும் நீதி­யை­யும் நோக்கி அவர்­களை நெறிப்­ப­டுத்­தும் வகை­யிலே இந்­தப்­பே­ரணி நடத்­தப்­ப­டு­கி­றது’ என்று யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக ஆசி­ரி­யர்­கள் சங்­கத் தலை­வர் முன்­ன­தா­கத் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

https://newuthayan.com/story/08/யாழ்ப்பாணத்தில்-எழுச்சி.html

பேரணி ஆரம்பம்!!

பதிவேற்றிய காலம்: Mar 16, 2019

53698428_268074897446068_25502841837379953730294_224440241754730_46588258185316953817057_774362919605736_102150095566274போர்க்­குற்­றம் தொடர்­பில் பன்­னாட்டு விசா­ர­ணையை வலி­யு­றுத்­தி­யும், இலங்கை அர­சுக்கு கால அவ­கா­சம் வழங்­கக் கூடாது என­வும் கோரிக்­கை­களை முன்­வைத்து யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக சமூ­கம் மேற்­கொள்­ளும் பேரணி சற்றுமுன்னர் ஆரம்பமானது.

53678753_547823052374564_72101137361267553781867_2292212414358439_1015334383353053835413_851183235219365_45985424392490853850263_2313863582228696_6696507571047454207500_432861720788483_48955960182565754224925_305171926832927_29578042700589954233713_997588317118808_15288067387262254349900_374223096756540_91198756601672454414019_391008921478706_40652168939029154522627_2343886158978516_90281608683989

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கத்­தில் இருந்து ஆரம்­பித்த பேரணி முற்­ற­வெளி நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது.

 

https://newuthayan.com/story/10/பேரணி-ஆரம்பம்.html

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகிய எழுச்சிப்பேரணி முற்றவெளியில் கவனயீர்ப்பு போராட்டத்துடன் நிறைவுபெற்றது.

இதன்போது காணாமலாக்கப்பட்ட உறவுகளின் ஒளிப்படங்களை கைகளில் ஏந்தி, ‘மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்’ என கோசம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இங்கு கண்டன அறிக்கையும் வாசிக்கப்பட்டது.

இந்த பேரணி இன்று (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகியது.

அங்கிருந்து வைத்தியசாலை வீதியூடாக முற்றவெளியை வந்தடைந்த நிலையில், தமிழர்களுக்கு நீதி வேண்டும் என ஐ.நாவைக் கோரிய இந்த நீதி கோரும் போராட்டம் கண்ணீருடன் நிறைவுபெற்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஊடாக இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

IMG_1873.jpg

jaffnap2.jpg

 

 

 

 

 

ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரும் எழுச்சி பேரணி யாழில் ஆரம்பம் (2ஆம் இணைப்பு)

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரும் எழுச்சி பேரணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.

மதத் தலைவர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த பெருமளவான மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், காணமலாக்கப்பட்டோரின் உறவுகள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் இந்தப் ரேணியில் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்களோடு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமான செ.கஜேந்திரன் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் பெருமளவில் கலந்துகொண்டுள்ளனர்.

பால், வயது வேறுபாடின்றி கடும் வெயிலுக்கு மத்தியில் பெருமளவானோர் இந்த பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள்,  ஐ.நா மனித உரிமைப் பேரவையில் ஈழத்தமிழருக்கு நீதி வேண்டும் என கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்தியவாறு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக முன்றலில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் ஆரம்பமாகிய இந்த பேரணி, முற்றவெளி வரை பயணிக்கவுள்ளதோடு, அங்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரும் மக்கள் எழுச்சி பேரணி!   

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஊடாக ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த பேரணி இன்று (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகவுள்ளது.

யாழில் ஆரம்பமாகவுள்ள இந்த பேரணி, முற்றவெளி வரை செல்லவுள்ளது. அங்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது காணாமலாக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும், தமிழர்கள் விடயத்தில் ஐ.நா. இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளனர்.

இந்த பேரணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த பேரணியில் கலந்துகொள்ளுமாறு வடக்கு கிழக்கிலுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், பொதுமக்கள் நலன் விரும்பிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய போராட்டம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை யாழ். பல்கலை மாணவர்களினால் முன்னெடுக்கப்படவுள்ள எழுச்சி பேரணிக்கு ஆதரவு கோரி வட. மாகாணம் தழுவிய வாகன பவனி யாழில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

யாழ். மாவட்டம் முழுவதும் பயணித்த இந்த வாகன பவனி, அதனைத் தொடர்ந்து வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கும் சென்றிருந்தது.

இதனைத்தொடர்ந்து 19ஆம் திகதி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கிழக்கில் முன்னெடுக்கப்டவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் குறித்த வாகன பவனி, கிழக்கு நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jaffnap3.jpg

jaff3.jpg

jaff2.jpg

jaff.jpg

jaff5.jpg


jaff4.jpg

http://athavannews.com/ஈழத்தமிழர்களுக்கு-இழைக்/

 

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

வருடம் முழுக்க நாட்டிலும் புலத்திலும் நீதிதான் கோருகிறார்கள் நீதியோ நேர்வழி மறந்து சென்று பலகாலம் ஆகிவிட்டது என்று தெரியாமல் 

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில  பயங்கரவாதம்  தான்  நடந்தது என்கிற ஆட்கள் இதுகளை  பார்ப்பதில்லையே.....???

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேரணி முற்றவெளியில் கவனயீர்ப்பு போராட்டத்துடன் நிறைவு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

365y-5.jpg?zoom=1.2100000262260437&resiz
இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட போர் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் , இலங்கைக்கு கால அவகாசாம் வழங்க கூடாது என கோரிக்கையை முன் வைத்தும் யாழ்.பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேரணி முற்றவெளியில் கவனயீர்ப்பு போராட்டத்துடன் நிறைவுபெற்றுள்ளது

ஐ.நா மனிதவுரிமை சபையின் அமர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மாணவர்கள் குறித்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். யாழ்.பல்கலைகழக முன்றலில் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பித்த குறித்த பேரணி அங்கிருந்து பலாலி வீதியூடாக , முற்றவெளியினை சென்றடைந்திருந்தது.

குறித்த பேரணி தமிழ் கட்சிகள் , சிவில் அமைப்புக்கள் , உள்ளிட்ட பெருமளவானவர்கள் ஆதரவளித்ததுடன் , பேரணியிலும் கலந்து கொண்டனர்.

படங்கள் :- பாலசிங்கம் கஜீபன்

365y-1.jpg?zoom=1.2100000262260437&resiz365y-2.jpg?zoom=1.2100000262260437&resiz365y-3.jpg?zoom=1.2100000262260437&resiz365y-4.jpg?zoom=1.2100000262260437&resiz  365y-6.jpg?zoom=1.2100000262260437&resiz365y-7.jpg?zoom=1.2100000262260437&resiz365y-8.jpg?zoom=1.2100000262260437&resiz365y-9.jpg?zoom=1.2100000262260437&resiz

http://globaltamilnews.net/2019/116164/

 

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்காக குரல் கொடுத்த எல்லோருக்கும் பாராட்டுக்கள்.

3 hours ago, விசுகு said:

நாட்டில  பயங்கரவாதம்  தான்  நடந்தது என்கிற ஆட்கள் இதுகளை  பார்ப்பதில்லையே.....???

இனிமேல் ஹர்த்தால் என்று ஏழைகளின் வயிற்றில் புளியை கரைக்கப் போறானுங்கள். 

அன்றாடம் உழைத்து வாழும் மக்கள் அம்பேல் 

உங்களுக்கென்ன பரிசில் உங்கள் ரெஸ்டாரண்ட்டுக்கு விடுமுறையா விடப்போறீங்கள் 

ஐயா ஜாலியோ ஜாலி உங்கிருந்து கூவுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

இனிமேல் ஹர்த்தால் என்று ஏழைகளின் வயிற்றில் புளியை கரைக்கப் போறானுங்கள். 

அன்றாடம் உழைத்து வாழும் மக்கள் அம்பேல் 

உங்களுக்கென்ன பரிசில் உங்கள் ரெஸ்டாரண்ட்டுக்கு விடுமுறையா விடப்போறீங்கள் 

ஐயா ஜாலியோ ஜாலி உங்கிருந்து கூவுங்கள் 

இது  கருத்துக்களம்

சிரிப்புக்கு  வேறு பகுதி இருக்கு  சகோ..

1 minute ago, விசுகு said:

சிரிப்புக்கு  வேறு பகுதி இருக்கு  சகோ..

அடுத்த முறை தமிழருக்காக யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் நடக்கும்போது உங்கள் ரெஸ்டாரண்டை மூடிவிடுங்கள் - உங்களை மதிக்கின்றேன்.

இங்கு தீலீபனே உண்ணாவிரதம் இருந்து எதுவுமே ஆகவில்லை - இதுதான் இலங்கை + இந்தியா. 

இங்கு ஹர்த்தால் என்ற பெயரில் ஏழைகளின் வயிற்றில் அடிப்பதே நடக்குது. யாருமே திரும்பிப்பார்ப்பதில்லை. உங்கிருந்து உசுப்பேத்துவதில் பலனில்லை.

9 minutes ago, ஜீவன் சிவா said:

உங்களுக்கென்ன பரிசில் உங்கள் ரெஸ்டாரண்ட்டுக்கு விடுமுறையா விடப்போறீங்கள் 

முடிந்தால் நான் மேலே சொன்னதை நடத்திக் காட்டுங்கள் நான் சிரிக்காமல் விடுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஜீவன் சிவா said:

இனிமேல் ஹர்த்தால் என்று ஏழைகளின் வயிற்றில் புளியை கரைக்கப் போறானுங்கள். 

அன்றாடம் உழைத்து வாழும் மக்கள் அம்பேல் 

உங்களுக்கென்ன பரிசில் உங்கள் ரெஸ்டாரண்ட்டுக்கு விடுமுறையா விடப்போறீங்கள் 

ஐயா ஜாலியோ ஜாலி உங்கிருந்து கூவுங்கள் 

கிழக்கில் ஹர்த்தால் 19 திகதியாம், அதற்கு வடக்கின் ஆதரவும் கோரப்பட்டுள்ளது.
எனக்கும் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள் பாதிக்கப்படுவதில் உடன்பாடு இல்லை, ஏதாவது மாற்று திட்டங்கள் இருந்தால் கூறுங்கள் அண்ணா.

4 minutes ago, ஏராளன் said:

கிழக்கில் ஹர்த்தால் 19 திகதியாம், அதற்கு வடக்கின் ஆதரவும் கோரப்பட்டுள்ளது.
எனக்கும் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள் பாதிக்கப்படுவதில் உடன்பாடு இல்லை, ஏதாவது மாற்று திட்டங்கள் இருந்தால் கூறுங்கள் அண்ணா.

மாற்றுத்திட்டம் என்னவென்றால் ஹர்த்தாலை ஆதரிக்கும் புலம் பெயர்ந்த சகல தமிழர்களும் அன்று தமது வணிகத்தை அங்கேயும் மூடவேண்டும் 

இல்லையென்றால் தமது வணிகத்தை திறந்து அன்று வரும் வருமானத்தை இங்கு தமது வருமானத்தை இழந்த நாட் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டும்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஜீவன் சிவா said:

மாற்றுத்திட்டம் என்னவென்றால் ஹர்த்தாலை ஆதரிக்கும் புலம் பெயர்ந்த சகல தமிழர்களும் அன்று தமது வணிகத்தை அங்கேயும் மூடவேண்டும் 

ஹர்த்தால் செய்யாமல் ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பை காட்ட வேறு வழிகள், மாற்று திட்டங்கள் இருந்தால் கூறுங்கள் சக உறவுகளே.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஜீவன் சிவா said:

மாற்றுத்திட்டம் என்னவென்றால் ஹர்த்தாலை ஆதரிக்கும் புலம் பெயர்ந்த சகல தமிழர்களும் அன்று தமது வணிகத்தை அங்கேயும் மூடவேண்டும் 

இல்லையென்றால் தமது வணிகத்தை திறந்து அன்று வரும் வருமானத்தை இங்கு தமது வருமானத்தை இழந்த நாட் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டும்.

அங்கே  நடக்கும் போராட்டத்துக்கு

புலத்தில்   கடைகளை   மூடும் மாற்றுத்திட்டத்தை  கண்டு

கருத்தாளர்கள்  அழப்போகிறார்கள்

பாவம்   நீங்க  வைச்சுக்கிட்டா  வஞ்சகம் செய்கிறீர்கள்???

1 minute ago, ஏராளன் said:

ஹர்த்தால் செய்யாமல் ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பை காட்ட வேறு வழிகள், மாற்று திட்டங்கள் இருந்தால் கூறுங்கள் சக உறவுகளே.

எனது அறிவு கம்மி - எனக்கு தெரிய சேர்ந்து வாழ்வதைத்தவிர வேறெதுவுமில்லை.

உண்ணாவிரதம் இருந்தோம் 

ஹர்த்தால்கள் செய்தோம்

ஆயுதம் தூக்கி நமக்குள்ளேயே அடிபட்டு செத்தோம் 

இது என்னிடம் கேட்கவேண்டிய கேள்வியே இல்லை 

அடியா பிடியா இங்கும் சிலர் உலாத்துகிறார்கள் - அவர்களைக்கேட்டால் தமிழனை படுகுழிக்குள் தள்ள ஏதாவது சொல்வார்கள்.

1 minute ago, விசுகு said:

அங்கே  நடக்கும் போராட்டத்துக்கு

புலத்தில்   கடைகளை   மூடும் மாற்றுத்திட்டத்தை  கண்டு

கருத்தாளர்கள்  அழப்போகிறார்கள்

பாவம்   நீங்க  வைச்சுக்கிட்டா  வஞ்சகம் செய்கிறீர்கள்???

உங்களுக்கு வந்தா அது இரத்தம் மற்றவனுக்கு வந்தா தக்காளி சோஸா 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

ஹர்த்தால் செய்யாமல் ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பை காட்ட வேறு வழிகள், மாற்று திட்டங்கள் இருந்தால் கூறுங்கள் சக உறவுகளே.

 

நான் பென்சன்   எடுத்த  பின்னர் தாயகத்துக்கு போகின்றேன்

இன்னிடம் இதே கேள்வியை  கேட்டால்  என்ன  பதில்   சொல்வேன்

ஒன்றும் வேண்டாம்

என்னை யாலியாக  இருக்க  விட்டால் போதும் என்று தானே??

1 minute ago, விசுகு said:

 

நான் பென்சன்   எடுத்த  பின்னர் தாயகத்துக்கு போகின்றேன்

இன்னிடம் இதே கேள்வியை  கேட்டால்  என்ன  பதில்   சொல்வேன்

ஒன்றும் வேண்டாம்

என்னை யாலியாக  இருக்க  விட்டால் போதும் என்று தானே??

மாற்றுத்திட்டம் என்னவென்றால் ஹர்த்தாலை ஆதரிக்கும் புலம் பெயர்ந்த சகல தமிழர்களும் அன்று தமது வணிகத்தை அங்கேயும் மூடவேண்டும் 

இல்லையென்றால் தமது வணிகத்தை திறந்து அன்று வரும் வருமானத்தை இங்கு தமது வருமானத்தை இழந்த நாட் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டும்.

முடிந்தால் உங்கள் வணிகத்தை இங்கு ஹர்த்தால் நடக்கும்போது மூடிவிட்டு சொல்லுங்கள் - ஏற்றுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

மாற்றுத்திட்டம் என்னவென்றால் ஹர்த்தாலை ஆதரிக்கும் புலம் பெயர்ந்த சகல தமிழர்களும் அன்று தமது வணிகத்தை அங்கேயும் மூடவேண்டும் 

இல்லையென்றால் தமது வணிகத்தை திறந்து அன்று வரும் வருமானத்தை இங்கு தமது வருமானத்தை இழந்த நாட் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டும்.

முடிந்தால் உங்கள் வணிகத்தை இங்கு ஹர்த்தால் நடக்கும்போது மூடிவிட்டு சொல்லுங்கள் - ஏற்றுக்கொள்கிறேன்.

 

அதை  அங்குள்ள  வர்த்தகர்கள் செய்கிறார்கள்

அல்லது  அங்குள்ள மக்கள்  பணியாளர்கள்

மக்கள் சேவகர்கள்  கேட்கட்டும்

மக்களின் போராட்டங்களை  எள்ளி  நகையாடுபவர்கள்  சொல்ல  வேண்டாம்

5 minutes ago, விசுகு said:

 

அதை  அங்குள்ள  வர்த்தகர்கள் செய்கிறார்கள்

அல்லது  அங்குள்ள மக்கள்  பணியாளர்கள்

மக்கள் சேவகர்கள்  கேட்கட்டும்

மக்களின் போராட்டங்களை  எள்ளி  நகையாடுபவர்கள்  சொல்ல  வேண்டாம்

 

மீன் பிடிக்க யாரும் செல்வதில்லை 

காரணம் - ஹர்த்தால் அன்று மீன்களை வாங்கி விற்கும் நபர்கள் வரமாட்டாங்க

தோட்டத்தில் இருந்து காய்கறிகள் பறிக்கப்படாது - காரணம் சந்தை இல்லை 

கடைகள் பூட்டு - அங்கு வேலை செய்பவர்களுக்கு எவன் சம்பளம் கொடுப்பான்

 

அல்லது  அங்குள்ள மக்கள்  பணியாளர்கள்

மக்கள் சேவகர்கள்  கேட்கட்டும்

மக்களின் போராட்டங்களை  எள்ளி  நகையாடுபவர்கள்  சொல்ல  வேண்டாம்

அப்ப ஏன் புலிகளின் கடைசி மூச்சை காப்பாற்ற அங்கு போராட்டம்.

இங்கு ஹர்த்தாலை ஆதரிப்பவர்கள் அங்கும் தமது வணிக நிலையத்தை மூடி தார்மீக ஆதரவு தரவேண்டும் - இல்லை இந்த மக்களை வாழவிடுங்கோ.

உங்களுக்கு வந்தா அது இரத்தம் மற்றவனுக்கு வந்தா தக்காளி சோஸா 

இந்த  கோமாளித்தனத்தை வடிவேலு படத்தில ஏற்கனவே பார்த்தாச்சு.  

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

 

 

2 hours ago, ஜீவன் சிவா said:

 

புலவர்களே, அமைதி, அமைதி, யாழ் களத்தில் அவையடக்கதுடன் பொருள் புரிந்து பேசுதல் நன்று.

முதலாவதாக இந்த ஆர்ப்பாட்டம், மக்கள் எழுச்சி வரவேற்க்க தக்கது.

சிங்கள சிறிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தபோது யாழில் மக்கள் தாக்கப்பட்டனர். கொழும்பில் ரத்தக்காயத்துடன் அமிர்தலிங்கத்தை பார்த்து, பண்டாரநாயக்காக்கே என்ற சிங்களவராக மாறி இருந்த தமிழர் எள்ளி நகையாடினார்.

இன்று காலம் ஓர் சுற்று சுற்றி வந்துள்ளது.

பண்டாரவண்ணியன் போன்றோர் தூக்கிடப்பட்ட காலத்தில், பிரிட்டன் மக்களை அச்செய்திகள் தாமதமாக சேர்ந்த போது மக்கள் அபிப்பிராயம் கிடைக்கவிலலை. 

அதேவேளை காந்திகாலத்தில், தந்தியுகம், பிரிட்டன் மக்கள் அபிப்பிராயம் திரள, இந்திய விடுதலை சாத்தியமானது.

தகவல்கள் செக்கன்களில் உலகடையும் இக்காலத்தில், இது போன்ற ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் தான் வெற்றி பெற்று தரும் என்பதை மக்கள் உணரவேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அரசியல் நோக்கம் இல்லாத, சுயநலமில்லா தலைவன் ஒருவர் வேண்டும்.

Edited by Nathamuni

மேற்படி எழுச்சி பேரணி இலங்கையில் வசிக்கும் மக்களால் நடத்தப்பட்டுள்ளது. ஜீவன் சிவா நீங்கள் இலங்கையில் வசிக்கிறீர்கள். உங்களுக்கு இப்படியான பேரணி பிடிக்காவிட்டால் அங்கு மக்களை மற்றும் ஏற்ப்பாட்டாளரைச் சந்தித்து எனக்கு இது பிடிக்கவில்லை ஆகவே  இதனை நடத்தவேண்டாம் என்று கூறி அதை தடுத்து நிறுத்த இலகுவான வழி இருந்தும் அதை விடுத்து இங்கு வந்து   வெட்டித தனமாக பேரணியுடன் எந்த தொடர்பும் அற்ற புலம் பெயர்ந்ந்து வாழ்பவர்களுடன்இது பற்றி முட்டி மோதி  தேவையில்லாமல் பொழுது போக்கு விவாதம் நடத்திவது ஏன் ? 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

அதேவேளை காந்திகாலத்தில், தந்தியுகம், பிரிட்டன் மக்கள் அபிப்பிராயம் திரள, இந்திய விடுதலை சாத்தியமானது.

இலங்கை உட்பட பல ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளும் இந்த காலத்தில் விடுதலை பெற்றன. மக்கள் அபிப்பிராயம், காந்தி எல்லாம் இந்த விடுதலையில் சம்பந்தப்படவில்லையே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.