Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எனக்கு ஒரு பதின்மூன்று பதின்நான்கு வயதிருக்கும்.  எனது அன்ரி மன்னாரில் ஒருபாடசாலையில படிப்பிச்சுக்கொண்டு இருந்தா. நான் அதுவரை அங்கு சென்றதில்லை. ஒரு பெரிய பள்ளி விடுமுறைக்கு அன்ரி எங்களை எல்லாம் அங்கு கூட்டிக்கொண்டு போவதாகக் கூறியவுடன் மனதில ஏற்பட்ட சந்தோசத்தைச் சொல்ல முடியாது. அங்க போற நாளை ஒவ்வொருநாளும் எண்ணியபடி காத்திருக்க ஆரம்பிச்சம் நானும் என் தம்பி தங்கைகளும்.  அப்போதெல்லாம் எந்த விடயத்தையும் மனதில் வைக்க முடியாது அக்கம் பக்கத்தில் உள்ள எம் வயதுக்காரருக்குச் சொல்லிவிடுவோம்தானே. அப்பிடி நாங்கள் மன்னார் போவதும் பக்கத்து வீட்டு எதிர் வீட்டு ஆட்களுக்கு எல்லாம் தெரிய, எங்களோட வர அவர்களும் ஆசைப்பட, என்னும் இரண்டு பேரை மட்டும் எம்மோடு கூட்டிக்கொண்டு போக அன்ரியும் சம்மதிக்க, என் தம்பிக்கு மற்றவர்களைக் கூட்டிக்கொண்டு போவது பிடிக்காது அவை எங்களுடன் வரவேண்டாமென்று அன்ரியுடன் சண்டைபோட ஆரம்பித்தான்.

எங்களோட வர இருந்தது எங்கள்  மாமிமார்தான். மாமிமாரென்றால் கிழடு கட்டை எண்டு எண்ண வேண்டாம். அவையில ஒருத்திக்கு எனிலும் ஒருவயதும் மற்றவாவுக்கு மூண்டு வயதும்தான் வித்தியாசம்.

அதுக்கு முதல் இன்னொண்டும் சொல்லவேணும். என்ர அன்ரி மன்னாரில் ஒரு குடும்பத்தோடதான் இருந்தவ. அவைக்கு நாலு பிள்ளையள். ஒரு பெட்டை மூண்டு பெடியள். மூத்த பெடியனுக்கு ஒரு இருபது வயது இருக்கும். இரண்டாவது பெட்டைக்கு ஒரு பதினெட்டும் மூன்றாவதுக்கும் நாலாவதுக்கும்  இரண்டிரண்டு வயதைக் குறைச்சுப் பாருங்கோவன்.

ஆனால் அப்ப எங்களுக்கு முதல் இரண்டுபேரை மட்டும்தான் தெரியும். ஏனெண்டா அவை இரண்டுபேரும் அன்ரியோடை அல்லது  மூத்தவர் தனியா யாழ்ப்பாணத்திலே ஏதும் அலுவலிருந்தா வந்து எங்கட வீட்டிலதான் தங்கிப்போறவை. அவை வந்து நிக்கிற நாட்களிலே வீடே இரண்டுபடுமளவு ஒரே சிரிப்புச் சத்தம் தான் கேட்கும். இரவிரவா நான் என்ர  பக்கத்துவீட்டு மாமி, தம்பி, அவர் ... அதுதான் தினேஷ் எல்லாரும் சேர்ந்து தாயம் விளையாடுவம். கரம்போர்ட் விளையாடுவம் அல்லது வீடியோ வாடகைக்கு எடுத்து இரண்டுமூன்று படம் என்று பார்ப்பம். அதனால அவை வந்தால் நேரம் போவது தெரியாது. அவை வந்தால் அம்மாவும் நல்லா அவையை உபசரிப்பா. தினேஷ் தனிய வந்தாலும் சரி.தங்கையோட வந்தாலும் சரி அம்மா என்னிடம் தான்  மக்கில் தேநீர் அல்லது கோப்பி போட்டுத் தருவா. தங்கைக்கு சிறிய சோசர் தான் பிடிக்கும் அதனால அவவுக்கு அதில குடுப்பன்.

ஒருக்கா நாங்கள் எல்லாரும் சேர்ந்து வின்சர் தியேட்டருக்கு படம் பார்க்கப்போனால் அவருக்குப் பக்கத்தில இருக்கிறதுக்கு என்ற மாமிமார் இரண்டுபேரும் நான் நீ எண்டு சண்டை போட நான் எதை பற்றியும் யோசிக்காமல் அவரின் தங்கைக்குப் பக்கத்தில் போய் இருந்திட்டன். எனக்குப் பக்கத்தில தம்பி வந்து இருக்க அவர் இரண்டுமாமிமாருக்கும் நடுவில இருந்து என்ர பக்கமா அடிக்கடி எட்டிப்பார்த்துக் கொண்டு இருந்தது என்ர கடைக்கண்ணுக்குத் தெரிஞ்சிது. மனதில ஒரு சந்தோசமும் எட்டிப்  பார்த்தது.

அவரைப் பற்றிக் கொஞ்சம் நான் சொல்லத்தான் வேணும். பார்த்தால் தலை இழுப்புத் தொடக்கம் பெல்பொட்டம், சேர்ட் போடுறது வரை இளவயதுக் கமல்காசன் போல இருப்பார்.

 

 

  • Replies 95
  • Views 12.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்ப எனக்கு ஒரு பதின்மூன்று பதின்நான்கு வயதிருக்கும்.  .......

அவர் இரண்டுமாமிமாருக்கும் நடுவில இருந்து என்ர பக்கமா அடிக்கடி எட்டிப்பார்த்துக் கொண்டு இருந்தது என்ர கடைக்கண்ணுக்குத் தெரிஞ்சிது. மனதில ஒரு சந்தோசமும் எட்டிப்  பார்த்தது.

அவரைப் பற்றிக் கொஞ்சம் நான் சொல்லத்தான் வேணும். பார்த்தால் தலை இழுப்புத் தொடக்கம் பெல்பொட்டம், சேர்ட் போடுறது வரை இளவயதுக் கமல்காசன் போல இருப்பார்.

 

அவர் தானோ.... இவர்... இப்பத்தயன்  அத்தார்? எண்டதை முதலிலேயே சொல்லிப் போடுங்கோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 அக்காளுக்கு பலத்த போட்டிகளுக்கிடையிலை ஒரு கனாக்காலம் நடந்திருக்குடோய்......😎

பள்ளிக்கூடம் போகேக்கையே நாங்கள் பேர் சொல்ல மாட்டமாம்....அவர்.....அவர்....அவர்.....கமலகாசன் மாதிரியாம்...:grin:

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒருக்கா நாங்கள் எல்லாரும் சேர்ந்து வின்சர் தியேட்டருக்கு படம் பார்க்கப்போனால் அவருக்குப் பக்கத்தில இருக்கிறதுக்கு என்ற மாமிமார் இரண்டுபேரும் நான் நீ எண்டு சண்டை போட நான் எதை பற்றியும் யோசிக்காமல் அவரின் தங்கைக்குப் பக்கத்தில் போய் இருந்திட்டன். 

பார்த்தால் தலை இழுப்புத் தொடக்கம் பெல்பொட்டம், சேர்ட் போடுறது வரை இளவயதுக் கமல்காசன் போல இருப்பார்.

நமது பள்ளிக்காலத்தில் வின்சர் தியேட்டர் பக்கம் போகும் போது இங்கு ஒரு காலத்தில் நிறையப் படங்கள் ஓடினதாம் என்ற அளவில் தான் தெரியும்.

எமது தலைமுறை தவறவிட்ட அந்த இனிய நாள் இனிய அனுபவங்களைத் தொடருங்கள் சுமே அக்கா. அந்தக் கால யாழ்ப்பாணம் எப்படி இருக்கு என்று பார்ப்போம்! 😊

Edited by மல்லிகை வாசம்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்  கனாக் காலத்தை   காண ஆவல் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவரைப் பற்றிக் கொஞ்சம் நான் சொல்லத்தான் வேணும். பார்த்தால் தலை இழுப்புத் தொடக்கம் பெல்பொட்டம், சேர்ட் போடுறது வரை இளவயதுக் கமல்காசன் போல இருப்பார்.

நாங்களும் 70 களில் பெல்போட்டம் போட தொடங்கியவர்கள் தான்.இப்போ அதை நினைக்க வெட்கமாக இருக்கிறது.

3 hours ago, Nathamuni said:

அவர் தானோ.... இவர்... இப்பத்தயன்  அத்தார்? எண்டதை முதலிலேயே சொல்லிப் போடுங்கோ...

ஆடறுக்க முதல் ...................கொஞ்சம் பொறுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொண்ணு மனம் திறந்து தன்ர கதையச் சொல்ல விடுங்கோ!
நீங்க சொல்லுங்கோ அக்கா.(விடுப்பு கேக்கிற குணம் என்று பேசவேணாம்)😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

அவர் தானோ.... இவர்... இப்பத்தயன்  அத்தார்? எண்டதை முதலிலேயே சொல்லிப் போடுங்கோ...

உப்பிடி அவசரப்படப்பிடாது கண்டியளோ ??😀

12 hours ago, குமாரசாமி said:

 அக்காளுக்கு பலத்த போட்டிகளுக்கிடையிலை ஒரு கனாக்காலம் நடந்திருக்குடோய்......😎

பள்ளிக்கூடம் போகேக்கையே நாங்கள் பேர் சொல்ல மாட்டமாம்....அவர்.....அவர்....அவர்.....கமலகாசன் மாதிரியாம்...:grin:

அட அட அட என்னமா இரசிச்சு வாசிக்கிறியள் 😁

12 hours ago, மல்லிகை வாசம் said:

நமது பள்ளிக்காலத்தில் வின்சர் தியேட்டர் பக்கம் போகும் போது இங்கு ஒரு காலத்தில் நிறையப் படங்கள் ஓடினதாம் என்ற அளவில் தான் தெரியும்.

எமது தலைமுறை தவறவிட்ட அந்த இனிய நாள் இனிய அனுபவங்களைத் தொடருங்கள் சுமே அக்கா. அந்தக் கால யாழ்ப்பாணம் எப்படி இருக்கு என்று பார்ப்போம்! 😊

யாழ்ப்பாணப் புதினம் எழுத வெளிக்கிட்டா என்ட புதினத்தை எப்ப எழுதி முடிகிறது மல்லிகைவாசம் ??😃

10 hours ago, நிலாமதி said:

தொடருங்கள்  கனாக் காலத்தை   காண ஆவல் 

நன்றி அக்கா வரவுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

நாங்களும் 70 களில் பெல்போட்டம் போட தொடங்கியவர்கள் தான்.இப்போ அதை நினைக்க வெட்கமாக இருக்கிறது.

ஆடறுக்க முதல் ...................கொஞ்சம் பொறுங்கோ.

80  களிலேயும் பெல்பொட்டம் தானே

9 hours ago, ஏராளன் said:

ஒரு பொண்ணு மனம் திறந்து தன்ர கதையச் சொல்ல விடுங்கோ!
நீங்க சொல்லுங்கோ அக்கா.(விடுப்பு கேக்கிற குணம் என்று பேசவேணாம்)😀

அதானே???? முதல்ல கதையாகி சொல்ல விடவேணும் 😆

  • கருத்துக்கள உறவுகள்

அசத்தலான ஆரம்பம்........ அட்டகாசமாய் எழுதுங்கோ ,இந்த மாமிமார்தான் பெரிய பிரச்சினை .......!  😁

23 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாழ்ப்பாணப் புதினம் எழுத வெளிக்கிட்டா என்ட புதினத்தை எப்ப எழுதி முடிகிறது மல்லிகைவாசம் ??😃

யாழ்ப்பாணப் புதினம் என்றில்லை அக்கா. 70, 80களில் நம்மவர்களின் வாழ்க்கை முறையை உங்கள் கதையூடாக மேலும் அறியலாம் என்று தான். 

சரி, உங்கள் புதினத்தைத் தொடருங்கள் அக்கா! 😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அவர் கமலஹாசன் மாதிரியெண்டு சொல்லி முடியமுதலே உங்கட கற்பனை எப்பிடி எல்லாம் ஓடுது எண்டு எனக்கு விளங்குது. அதுக்காக நான் கண்டபடி கற்பனையில் மிதக்கேல்லை.
படம் ஓடிக்கொண்டு இருக்குது. பின் பக்கம் இருந்த எவனோ காலை என் கதிரைக்கு மிண்டு கொடுத்தானோ என்னவோ அடிக்கடி கதிரை ஆட்டுப்பட்டுக்கொண்டே இருக்குது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கொங்சம் முன்னே நகர்ந்து இருக்கிறேன். எத்தனை நேரம் நிமிர்ந்து இருப்பது. மீண்டும் சாய்ந்தால் அதே தொந்தரவு. நான் செய்வதறியாது நெளிந்தபடி தினேஷின் பக்கம் பார்க்க,அவர் என்னைப்பார்த்து என்ன என்பதுபோல் சைகையால் கேக்கிறார். பின்னுக்கு கால என்று மட்டும் சொல்லிவிட்டு பின்பக்கம் திரும்பவே பயந்து திரையைப் பார்த்துக்கொண்டு இருக்க, எடடா காலை என்று தினேஷ் பின் பக்கம் பார்த்துச் சொல்ல எனக்கு நெஞ்சுக்குள் பதட்டம் வந்து சேர்க்கிறது. உடனே தினேஷ் எழுந்து நிவேதா இதில வந்து இருங்கோ என்றபடி தன் இடத்தைக்காட்டி விட்டு என்னிடத்தில் வந்து அமர்கிறார். உடனே மாமியு ம் மற்றவர்களும் என்ன என்ன என்று என்னைக் கேட்கிறார்கள். சத்தம் போடாமல் படத்தைப் பாருங்கோ என்று தினேஷ் கூற மற்றவர்கள் அடங்கிப் போகின்றனர்.

இடைவேளைக்கு அறிவிப்போடு லையிற் போட அப்பதான் நான் சிறிது துணிவுவரப்பெற்று  முதலில் இருந்த கதிரையைப் பார்க்கிறேன். இரண்டு கதிரைகளிலும் எவரையும் காணவில்லை. ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வாறன் என்று எழுந்த தினேசை நான் அவசரமாகத் தடுக்கிறேன். நீங்கள் போகாதேங்கோ அவன் வெளியில நிண்டு எது பிரச்சனை பண்ணினாலும் என்று பயத்துடன் கூற தினேசும் வெளியே செல்லவில்லை. மாமிமார் தான் குனிந்து என்னடி நடந்தது என்று இரகசியமாக கேட்கினம். நான் சொல்ல திரும்ப வருவங்களோடி என்று பயத்துடன் கேட்கிறா மாமி. எனக்குத்தெரியுமே  என்று சொல்லிவிட்டு படம் தொடங்கியதும் பார்த்தால் அவங்களைக் காணேல்லை. மனதுக்குள்  பெரிய  நின்மதியோட படம் பார்த்து முடிச்சாச்சு.

படம் பார்த்து முடிய எல்லாரும் சுபாஷ் கபேக்கு ஐஸ்கிரீம் குடிக்கப் போவம் எண்டு தினேஷ் எங்களைக்கூட்டிக்கொண்டு போனார். இரண்டு மாமிகளையும்  தவிர்த்துவிட்டு எனக்குப் பக்கத்திலேயே நடந்துவர முயற்சி செய்தும் முடியேல்லை. ஏனெண்டா என் தம்பி என்னை விட்டு அங்காலை இங்காலை அரக்காமல் என்னோடயே ஒட்டிக்கொண்டு வந்ததுதான் காரணம். கடைக்கு உள்ளபோன  உடன அந்த ஏசி சுகமே ஒருவித நின்மதியைத் தர நான் கடைசியாக நிக்கிறன். நாலுபேர் இருக்கிற ஒரு மேசைதான்  காலியாக கிடக்கு. தம்பி உடன ஒரு கதிரையில இருக்க மாமிமார் இரண்டுபேரும் ஒராளை ஒராள் பாத்துக்கொண்டு நிக்க அவையைப் பார்த்து இருங்கோவன் என்று தினேஷ் சொல்ல மாமிமார் வேற வழி இல்லாமல் எதிரும் புதிருமாப் போய் இருக்கினம். மிகுதி நாங்கள் மூன்று பேர். இருப்பது ஒருகதிரை. உடனே தினேஷ் நிஷா நீ இதில இரு என்றுவிட்டு சுற்றிவரப் பார்க்கிறார்.

அடுத்தவரிசையில் சுவரோரம் இரண்டு இருக்கைகள் காலியாக இருக்க வாங்கோ நிவேதா என்றபடி நகர வெளிக்கிட, பின்னால் இரு மேசைகளில் இருந்தவர்களும் எழும்ப, பார்த்துக்கொண்டிருந்த தங்கை அண்ணா எல்லாரும் பின்னுக்குப்போவம் என்றபடி எழுந்து வர முன்னே நின்றுகொண்டிருந்த நான் வேறுவழியின்றி முதலில் போய் சுவர் பக்கம் இருக்காது மற்றப்பக்கமாக இருந்துகொள்ள எனக்குப்பக்கத்தில் என்தம்பி வந்து இருக்க எதிர்ப்பக்கம் தினேஷின் தங்கையும் ஒருமாமியும் இருக்க மறுபக்கத்தில் தினேசும் மற்ற மாமியும் போயிருக்க எனக்கு அந்தக் குளிரிலும் எரிச்சல் எட்டிப் பார்க்கிறது.  

அவர் எல்லாருக்கும் இரண்டு இரண்டு ரோல்ஸ் சொல்ல அப்ப ஐஸ்கிரீம் இல்லையோ என்கிறான் என் தம்பி. அது கட்டாயம் வரும். முதல்ல இதைச் சாப்பிடுங்கோ என்று சொல்லி வாய் மூட முதல் ரோள்ஸ் வருது. அந்தக்காலத்தில் அடிக்கடி சாப்பிடாததில ரோள்ஸ் நல்ல சுவையா இருக்கும். அதுவும் நாங்கள் உப்பிடி வெளியில போனால்த்தான் அவற்றையெல்லாம் சாப்பிடுவது. சாப்பிட்டுமுடிய ஐஸ்கிரீம் வர நாங்களெல்லாம் அதை சாப்பிடுறதில மும்மரமாக இருந்தமே தவிர எனக்கு ஏற்பட்ட எரிச்சல்கூட ஐஸ்கிரீமின்ரை சுவையில் இல்லாமல் போட்டுது.

எல்லாக் கப்பும் காலியாக இன்னும் ஒண்டு ஓடர் செய்யவோ என்று என்னைப் பார்த்துக் கேட்கிறார். தனியா இருந்தால் நான் ஓம் என்றுதான் சொல்லியிருப்பன். ஆனா மற்றவையும் முக்கியமா மாமிமாருக்கும் ஏன் இரண்டாவதை வாங்கிக் குடுக்கவேணும் என்று ஓடிய எண்ணத்தில வேண்டாம் வேண்டாம் வயிறு புல் என்கிறேன் நான்.

அதுக்குப்பிறகு பஸ்சுக்குப் போய் நிண்டா  காங்கேசன்துறை போற பஸ் நிறைய ஆட்களோட நிக்குது. இது போய் அடுத்த பஸ் வந்து .... பிறகு அது எப்ப வெளிக்கிடுதோ .. நிண்டு அடுத்ததில போவமோ என்று என்னைப்  பார்த்தே கேட்கிறார். என்ன இவர் என்னைப் பார்த்து கேட்க மாமி ஆட்கள் என்னவும் நினைக்கப் போயினம் எண் ட பயமும் மனதில எட்டிப் பாக்குது. இல்லை இதிலையே போவம் என்கிறேன் நான்.

நான் வேம்படியில் படித்ததால் ஒவ்வொருநாளும் பஸ்ஸில் போய்ப் பழக்கம். மாமியும் தம்பியும் தினேஷின் தங்கையும் அடிக்கடி போகாதபடியால் முண்டியடித்து பஸ்ஸில் எற கடைசியாய் நானும் தினேசும் ஏறுகிறோம். ஒரு ஐந்து நிமிடத்தில் பஸ் வெளிக்கிட்டு நிடவைபோனவை ஓடிவந்து ஏறி, இனியாரும் எற இடமில்லையென்ற அளவுசனம். நான் எப்போதும் பஸ்ஸின் முன்பக்கக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு இருப்பதுதான் வழக்கம். அக்கம் பாக்கக் கண்ணாடியைப் பார்த்தால் தலை சுற்றும். எனக்கு முன்னால் நின்ற மாமி என்னையே முறைத்துப் பார்க்கிறா என்று யோசித்தபடி திரும்பினாள் எனக்குப் பின்னால் மிக அருகில் தினேஷ் நிற்பது தெரிகிறது. ஒரு செக்கன் உடல் முழுதும் ஒரு சந்தோசம் பரவ மாமியின் பார்வை மறுசெக்கன்  நினைவில் வந்து  என் சந்தோசத்தை சடிண் பிரேக் போட்டு நிறுத்த நான் என் உடலை ஒடுக்கியபடி நின்றுகொண்டேன்.   

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ,உங்களுக்கு நல்ல கொசிப்புகளை 😂எழுதுற திறன் இருக்கு...தொடருங்கோ ...நானும் விடுப்பறிய🤣 ஆவல்😃 ...20 வயது இளைஞருக்கு ,அவ்வளவு பேருக்கும் செலவழிக்க  அந்தக் காலத்திலேயே நல்ல காசு இருந்திருக்கு....ரியோ கூல் பார் எவ்வளவு காலமாய் யாழில் இருக்கு?
 

20 hours ago, Nathamuni said:

அவர் தானோ.... இவர்... இப்பத்தயன்  அத்தார்? எண்டதை முதலிலேயே சொல்லிப் போடுங்கோ…

முந்தி ஒரு காதற் கதையும்,கல்யாணம் கட்டின கதையும் சுமோ எழுதினவல்லவோ! அது யாற்றை  கதை😕  

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

சுமோ,உங்களுக்கு நல்ல கொசிப்புகளை 😂எழுதுற திறன் இருக்கு...தொடருங்கோ ...நானும் விடுப்பறிய🤣 ஆவல்😃 ...20 வயது இளைஞருக்கு ,அவ்வளவு பேருக்கும் செலவழிக்க  அந்தக் காலத்திலேயே நல்ல காசு இருந்திருக்கு....ரியோ கூல் பார் எவ்வளவு காலமாய் யாழில் இருக்கு?
 

அதையும் சொல்லுறன் ரதி அடுத்த பகுதியில 😆

றியோ இருந்தாலும் நான் முன்னர் ஒரு தடவை கூட அங்கு சென்றதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவவுக்கும் தியேட்டருக்கும் எட்டாப்பொருத்தம் போலை கிடக்கு.......ஏனெண்டால் எல்லாரும் தனகிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுமே......!


எவ்வளவு தான் கிரைண்டர்.....அது ...இது என்று வந்தாலும்......அந்த அம்மிக்கல்லில்....அரைக்கும்...சம்பலின் சுவை என்றுமே தனித்துவமானது....!  

பதின்மூன்று....பதினான்கு வயதிலேயே.....இந்தக் கோலமெண்டால்.....?

நினைக்கவே குலைப்பன் எடுக்குது...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/17/2019 at 8:43 PM, ரதி said:

சுமோ,உங்களுக்கு நல்ல கொசிப்புகளை 😂எழுதுற திறன் இருக்கு...தொடருங்கோ ...நானும் விடுப்பறிய🤣 ஆவல்😃 ...20 வயது இளைஞருக்கு ,அவ்வளவு பேருக்கும் செலவழிக்க  அந்தக் காலத்திலேயே நல்ல காசு இருந்திருக்கு....ரியோ கூல் பார் எவ்வளவு காலமாய் யாழில் இருக்கு?
 

 

 

தங்கச்சி! கூடுதலாய் ஒவ்வொரு லேடீஸ் கூட்டத்துக்குள்ளையும் பணவசதி படைச்ச பாவப்பட்ட சீவன் ஒண்டு பில் கட்டுறதுக்கெண்டே கடவுளாய்   பாத்து படைச்சு வைச்சிருப்பார்..☹️

  • கருத்துக்கள உறவுகள்
On 3/17/2019 at 7:20 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

படம் பார்த்து முடிய எல்லாரும் சுபாஷ் கபேக்கு ஐஸ்கிரீம் குடிக்கப் போவம் எண்டு தினேஷ் எங்களைக்கூட்டிக்கொண்டு போனார்

ஒரு காலத்தில் ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் வேறு வேறு பெயர் போன கடைகள் இருந்தன.
சுபாஸ் றியோ ஐஸ்கிறீம்.(இதில் றியோ பின்னர் வந்தது)
வடைக்கு பெயரே வருதில்லை.(தாமோதரவிலாசோ)
சர்பத் லிங்கம் கூல்பார்.
புட்டு குறுமா மொக்கன்கடை.

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒரு காலத்தில் ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் வேறு வேறு பெயர் போன கடைகள் இருந்தன.
சுபாஸ் றியோ ஐஸ்கிறீம்.(இதில் றியோ பின்னர் வந்தது)
வடைக்கு பெயரே வருதில்லை.(தாமோதரவிலாசோ)
சர்பத் லிங்கம் கூல்பார்.
புட்டு குறுமா மொக்கன்கடை.

 

கீரை வடையெண்டால்.....மலேயன் கபே...!

கடலை வடையெண்டால்....கன்ரீன் நடராசா அண்ணை....!😀

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புங்கையூரன் said:

கடலை வடையெண்டால்....கன்ரீன் நடராசா அண்ணை....!😀

ஏன் போண்டா எப்படி?
ஒன்று தின்றா 3-4 மணிநேரம் தாக்குப் பிடிக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/17/2019 at 9:51 PM, குமாரசாமி said:

இவவுக்கும் தியேட்டருக்கும் எட்டாப்பொருத்தம் போலை கிடக்கு.......ஏனெண்டால் எல்லாரும் தனகிறாங்கள்.

🤓

On 3/17/2019 at 10:36 PM, புங்கையூரன் said:

தொடருங்கள் சுமே......!


எவ்வளவு தான் கிரைண்டர்.....அது ...இது என்று வந்தாலும்......அந்த அம்மிக்கல்லில்....அரைக்கும்...சம்பலின் சுவை என்றுமே தனித்துவமானது....!  

பதின்மூன்று....பதினான்கு வயதிலேயே.....இந்தக் கோலமெண்டால்.....?

நினைக்கவே குலைப்பன் எடுக்குது...!

போதாது மூடிக்கொண்டு படுங்கோ😆

15 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி! கூடுதலாய் ஒவ்வொரு லேடீஸ் கூட்டத்துக்குள்ளையும் பணவசதி படைச்ச பாவப்பட்ட சீவன் ஒண்டு பில் கட்டுறதுக்கெண்டே கடவுளாய்   பாத்து படைச்சு வைச்சிருப்பார்..☹️

🤔🤔

9 hours ago, புங்கையூரன் said:

கீரை வடையெண்டால்.....மலேயன் கபே...!

கடலை வடையெண்டால்....கன்ரீன் நடராசா அண்ணை....!😀

மலையன் கபே தெரியும் மற்றது கேள்விப்படாதே இல்லை.

9 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு காலத்தில் ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் வேறு வேறு பெயர் போன கடைகள் இருந்தன.
சுபாஸ் றியோ ஐஸ்கிறீம்.(இதில் றியோ பின்னர் வந்தது)
வடைக்கு பெயரே வருதில்லை.(தாமோதரவிலாசோ)
சர்பத் லிங்கம் கூல்பார்.
புட்டு குறுமா மொக்கன்கடை.

 

நான் அங்கே இருக்குமட்டும் சுபாஸ்கபேக்கு மட்டும்தான் போனது

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் அங்கே இருக்குமட்டும் சுபாஸ்கபேக்கு மட்டும்தான் போனது

அத்தாருக்கு அது மட்டும் தான் தெரியும் போல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

அத்தாருக்கு அது மட்டும் தான் தெரியும் போல.

இஞ்ச உப்பிடிக் கதைக்கக் கூடாது

😂😂

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 3

சினிமாவுக்குப் போனதன் பிறகு அடுத்த நாள் தினேசும் தங்கையும் திரும்பப் போட்டினம். நாங்களும் பள்ளிக்கூடம் சோதினை எண்டு எங்கடபாட்டைப் பாக்க வெளிக்கிட்டிட்டம். அப்ப போனும் இல்லை உந்த முகலாலும் இல்லை. தினேசும் ஒரு எட்டு ஒன்பது மாதங்களா வீட்டுப்பக்கம் வரவும் இல்லை. அன்ரியும் ஆசிரியை எண்டதனால பள்ளிக்கூட லீவு விடேக்குள்ளதான் யாழ்ப்பாணம் வருவா. அப்பத்தான் அம்மா எழுதின கடிதத்துக்கு தான் இம்முறை லீவுக்கு வரும்போது எங்களை மன்னாருக்கு கூட்டிப்போவதாக அன்ரி எழுதியிருந்தா.

எனக்கு தினேசும் அங்கே இருக்கிறார் என்பதைவிட தினேஷின் தங்கை வர்ணித்து எங்களைக் கடுப்பேற்றும் வயல்வெளிகளும் வாய்க்கால்களும் பெரிய தாமரைக்குளமும் கட்டாயம் பார்த்தே தீரவேண்டும் என்னும் அவாவை என்னுள் ஏற்படுத்தியிருந்தன. அத்தோடு போற வழியில் திருக்கேதீஸ்வரம் கோயிலுக்கும் போய் பாலாவியில் குளிக்கலாம் என்று கடிதத்தில் எழுதியிருந்த வரிகளும் ஒரு எல்லையற்ற எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருந்தன. எட்டு வயதாக இருக்கும்போது பெற்றோருடன் கேதீச்சரத்துக்குப் போனதும் படிகளில் இருந்தே காலையில் நடுங்கிநடுங்கிக் குளித்ததும் பாலாவின் மேல் பரவியிருந்த புகைமூட்டம் போல  நினைவில் நின்றாலும்  தெளிவில்லாமல் இருந்தது.

அன்ரி வீட்டுக்கு வந்தவுடன் இம்முறை எங்கள் அலாதியான வரவேற்பும் மாறிமாறி நாங்கள் கேட்ட
கேள்விகளும் அவவைத் திக்குமுக்காட வைத்தன. எண்ணி ஐந்தே நாள்த்தான் அங்கு நிற்பதாகத் திட்டம். எங்களை அம்மா அதுவரை தனியே அனுப்பியதில்லை. அதனால் அன்ரியுடன்தான் என்றாலுமே அதிகநாள் நிக்கவிட விம்பவில்லை.

அங்க யாற்ற வீட்டில நிக்கிறது என்று மாமி கேட்டா. தினேஷ் ஆக்களின்ர வீட்டிலதான் என்று அன்ரி சொன்னா.
தினேஷின் அப்பா ஒரு பெரிய கடையும் வேறு இரு வியாபாரங்களும் செய்துகொண்டு இருந்தாராம். திடீரெண்டு ஒருநாள் விபத்தில இறந்துபோக மூத்த மகனான தினேஷ் A/L ஓட படிப்பை நிப்பாட்டிப்போட்டு வியாபாரத்தையும் வயலையும் பாக்கிறாராம் என்று அன்ரி சொல்ல அப்ப அதுக்குமேல அவர் படிக்கேல்லையோ என்று நான் கேட்டேன். தாய் படிக்கச் சொன்னதுதான். ஆனால் கேட்காமல் நல்ல வடிவா குடும்பத்தைப்பாக்கிது. நல்ல பொறுப்பான பெடியன் எண்டெல்லாம் அன்ரி அம்மாவுக்குச் சொல்லிக்கொண்டிருந்தா. எனக்குச் சினிமாக் கதை கேட்கிறமாதிரி இருந்ததுதான் ஆனாலும் மேல படிக்கேல்லை எண்டதும் ஒரு நெருடலாத்தான் இருந்தது.

எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில இருந்தே எனக்கான பொருட்களை தங்கைகளானானும் சரி நான் யாருடனும் பங்கிடுவதில்லை.  சவுக்காரம், துவாய், பவுடர், பொட்டு, ரிபன்  .....இப்பிடி சிலது. நான் மூத்த பிள்ளை எண்டதால சலுகைகளும் கொஞ்சம் எனக்கு கூடத்தான். அதனால் வீட்டில இருந்த ஒரு வடிவான பாக்கில என் பொருட்களையெல்லாம் அடுக்கினன் . தம்பி தங்கையினதை இன்னொரு பாக்கில் அடுக்கி தம்பியின் பொறுப்பில் கொடுத்தாச்சு. இங்கேயிருந்து எல்லாம் காவத் தேவையில்லை. என்னட்டை எல்லாமிருக்குத்தானே என்று அன்ரி கூறியும் நான் கேட்கேல்லை.

விடியக் காலை ஏழு மணிக்கு வீட்டில இருந்து வெளிக்கிட்டு நாங்கள் ஏழுபேரும் பஸ்ஸில யாழ்ப்பாணம் வந்து அங்கேயிருந்து திருக்கேதீஸ்வரம் நோக்கிப் போறம். விடிய இடியப்பமும் சொதி சம்பலோட உருளைக்கிழங்குப் பிரட்டலும் அம்மா செய்து தந்ததால் பசியில்லை. ஆனால் தண்ணி விடாய். அம்மா கரைச்சுத் தந்த எலும்மிச்சைத் தண்ணியும் குடிச்சு முடிஞ்சுது. பஸ்ஸில யன்னல் கரையில இருந்து வாற காத்தும் காலை வெய்யிலும் நல்லாய் இருக்க இயற்கையை ரசித்துக்கொண்டு வந்தாலும் நீண்ட தூர பயணம். கண்ணை சொக்கிக்கொண்டு வர கொழும்பில என்னை விட்டுவிட்டு இறங்கினமாதிரி இவையும் இறங்கினா என்ன செய்யிறது என்ற பயத்தில வந்த நித்திரையை அடிச்சுக்க கலைச்சுப்போட்டு பார்த்துக்கொண்டே இருந்தால் எனக்குப் பக்கததில இருந்த தம்பியும் சின்ன மாமியும் அன்ரியோட இருந்த தங்கையும் நல்ல நித்திரை.

மன்னாருக்குப் போய் இறங்க பதினோரு மணியாய் போச்சு. பிறகு திருக்கேதீஸ்வரம் போக மத்தியானம் ஆச்சு.
நல்ல வெய்யிலுக்க போய் பாலாவியில குளிக்க இரண்டு படியை விட்டு இறங்க அன்ரி விடேல்லை. விட்டாலும் நாங்கள் தள்ளிப்போயிருக்க மாட்டம். ஏனெண்டால் ஒருத்தருக்கும் நீச்சல் தெரியாது என்பது ஒன்று. குளித்துக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் பெண்களும் கிழவிகளும் தான். ஒரேயொரு ஆண்  மட்டும் நீந்திக்கொண்டு இருக்க நாங்கள் அதிசயமாய் பாத்துக்கொண்டு நிண்டம். குளிச்சு முடிய ஒருமண்டபத்தில போய் உடுப்புகளை மாத்திப்போட்டு கோயிலுக்குள்ளே போய் சுத்திக் கும்பிட்டுவிட்டு வெளியே வந்தால் சரியான பசி.

அன்ரி எங்களைக் கூட்டிக்கொண்டு ஒரு சாப்பாட்டுக் கடைக்கு கூட்டிக்கொண்டு போய் வடையும் டீயும் வாங்கித் தர, பசியோட இருந்த எங்களுக்கு என்னடா இது இதை வாங்கித் தந்து பேக்காட்டிறாவே என்ற நினைப்பு ஒடியது. தினேசின்ர அம்மா எங்களுக்கு எல்லாம் சமைச்சிருப்பா. இன்னும் ஒருமணித்தியாலத்தில அங்க போயிடலாம் என்று அன்ரி சொல்ல மனம் நின்மதியானது. பஸ்ராண்டில போய் நிக்கேக்குள்ளயும் பாக்கில வச்சிருந்த பிஸ்கற்றை எங்களுக்குத் தர வயிறு நிறைஞ்சிட்டுது.

தினேஷ் வீட்டுக்குப்  பக்கத்திலேயே பஸ்ராண்ட். பஸ்ஸால நாங்கள் எல்லாரும் இறங்கவே  தினேசும் தங்கை தம்பி எல்லாம் பஸ்ராண்டில நிக்கினம். வீட்டுக்குள்ள போனதும் வாங்கோ பிள்ளையள்  எண்டு தினேஷின் அம்மா எங்களை ஒவ்வொருவராகக் கட்டி அணைக்கிறா . பெரிய வீடு. எங்கள் பாக்குகள் பைகளை எல்லாம் இங்கே கொண்டு வந்து வையுங்கோ எண்டு அன்ரி தன் அறைக்குள் கூட்டிக்கொண்டு போனா. பாக்குகளை வைத்துவிட்டு வந்து விசிற்ரிங் ரூமில வந்து இருந்தால் சுவர்களில் ஜேசு, மாதா படங்கள். இவை கிறிஸ்தவரா என்று பெரிய மாமி அன்ரியை இரகசியமாகக் கேட்க அன்ரி ஓம் என்று மெதுவாகக் கூறுவது என் காதிலும்  கேட்கிறது.  

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இது ஒருத்தரையும் இந்தப்பக்கம் காணேல்லை. கிழுகிழுப்பா இருந்தாத்தான் வருவினைபோல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.