Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண விவசாயிகள் படும்பாடு - தமிழ்த் தலமைகள் என்ன செய்யப்போகின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசு சாராத விவசாய நலன்புரி சங்கங்கள் அமைத்து சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அனைத்து விவசாயிகளும் கட்டாய உறுப்பினர்களாக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கான காப்புறுதி திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதிக விளைச்சல் காலங்களில் நிலத்திற்கடியிலான சேமிப்பு கலன்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

நன்றி நிழலி.

சின்னவெங்காயம் விற்கேலாமல் கொட்டினதை  இப்பதான் கேள்விப்படுறன்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

சின்னவெங்காயம் விற்கேலாமல் கொட்டினதை  இப்பதான் கேள்விப்படுறன்.

பீற்றூட் தானே கொட்டியதாக சொல்கிறார்கள்.சின்ன வெண்காயம் புடிகட்டி நீண்டகாலம் வைத்திருக்லாம்.விலை ஏறும் நேரம் பார்த்து விற்கலாம்.

நாங்கள் தோட்டம் செய்த காலத்தில் (வயல் தறை)நெல்லு முடிய மரவள்ளியும் வெண்காயமும்.விலைவாசியைப் பார்த்து விற்பது அல்லது கட்டுவது.6 மாதத்தில் மரவள்ளி திருவிழா காலத்தின் போது தயாராக இருக்கும்.ஒவ்வொரு சந்தை நாளைப் பார்த்து அந்தந்த சந்தைக்கு அதிகாலை கொண்டோட்டம்.திருவிழா காலங்களில் கீரை போடுறது.
சந்தோசமான காலம்.

காணொளியில் நிறைய விசயங்கள் பகிர்ந்திருக்கின்றார்கள். விவசாயம் ஒரு கட்டமைப்பின் கீழ் இல்லை ஆனால் அதை இப்போது விரும்புகின்றார்கள் என்பது வரை மகிழ்சியானது. விவசாயிகள் எல்லோரும் சேர்ந்துதான் ஒரு சங்கத்தை அமைக்கவேணும், இவ்வாறு காணொளியை  பதிவிடுவதில் ஆர்வமுள்ளவர்களே ஒரு கட்டமைப்பை உருவாக்குவதில் ஈடுபடுதல் பொருத்தமானது தவிர தமிழ்த் தலமைகளை இந்த விசயத்தில் நம்பி ஒரு பயனும் கிடையாது. இதற்கும் தமிழ்த் தலமைகளுக்கும் என்றைக்கும் தொடர்பே இருந்ததில்லை. 

கட்டுப்பாடற்ற மருந்துப் பாவனையால் காய்கறி விற்பனை பாதிக்கப்படுகின்றது என்று அவர்களே சொல்கின்றபோது அதில் மாற்றத்தை கொண்டுவராமல் விட்டால் விவசாயம் மேலும் பின்னடைவைச் சந்திக்கும். உரம் மருந்து பாவனை குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை. அவரவர் எடுக்கும் முடிவாக இருக்கின்றது. கோவாவை சனம் விரும்பாததற்கு காரணம் அளவுக்கதிகமான மருந்து என்கின்றார்கள். சொந்த மண்ணில் விழையும் காய்கறிகளை சொந்த மக்களே வாங்க முடியாத சூழுல் ஏற்பட்டால் வேறு எங்கு சந்தைப்படுத்துவது ? விவசாயிகள் சங்கம் அமைத்து ஒருங்கிணைவதும் கலந்துரையாடுவதும் பல்கலைக்கழக விவசாய மாணவர்கள் தம்மாலான ஆதரவை அறிவுபூர்வமாக செய்வதும் என தன்னார்வமாக நிறைய காரியங்கள் அவசியமாகின்றது,. 

 

  • தொடங்கியவர்

இவர் புலம்பெயர் மக்களை நோக்கி இறுதியில் வைக்கும் வேண்டுகோள் கவனிக்க வேண்டியவை.

வெறும் தரிசாக நிலங்கள் வீணாக போவதை விட எவருக்காவது குத்தகைக்கு கொடுப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

இவர் புலம்பெயர் மக்களை நோக்கி இறுதியில் வைக்கும் வேண்டுகோள் கவனிக்க வேண்டியவை.

வெறும் தரிசாக நிலங்கள் வீணாக போவதை விட எவருக்காவது குத்தகைக்கு கொடுப்பது நல்லது.

எமதூர் வயல்தரையானாலும் நெல்லு ஒரு போகமும் பயிர் ஒரு போகமும் செய்தார்கள்.இப்போ நெல்லோடு நிற்கிறார்கள்.கேட்டால் ஆளணி இல்லாமல் எப்படி தோட்டம் செய்வதென்கிறார்கள்.கூலி வேலை செய்ய மக்கள் தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமாகவே சிந்திக்க வேண்டிய பதிவு..........!

இவர்கள் தாங்களே பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் முறைக்கு மாறினால் வரும் இழப்புகளைத்  தவிர்க்க முடியும்.......!

உதாரணமாக மிளகாயை செத்தல் ஆகவும், தூள் ஆகவும் செய்வதுபோல் , தக்காளி போன்றவற்றை ஜாமாக,பீற்ரூட்டாய் பதமாக அவித்து பைக்கட்டுகளாகவும் செய்யலாம்.....!

மேலும் இவர்கள் சொல்வதை பார்த்தால் அத்தனை மரக்கறிகளும்  அளவுக்கு அதிகமாய் மருந்துகள் குடித்துதான் வருகுது போல .......!

  • தொடங்கியவர்

கடந்த முறை யாழ்ப்பாணத்திற்கு போனபோது என்னுடன் படித்து இன்று அங்கு மருத்துவராக இருக்கும் நண்பி சொன்னது 'இங்கிருக்கும் ஒவ்வொரு படலையையும் தட்டி கேட்டால், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவராவது அவர்களது வீட்டிலோ உறவுகளிலோ இருப்பர்" என்று. இதற்க்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பயிர்களுக்கு போடும் அளவுக்கு அதிகமான பூச்சி கொல்லிகளும் இருக்குது.

இங்கு வீடியோவில் இருந்து அறிய கூடியதாக இருப்பது, தோட்டம் செய்யும் எல்லாருக்கும் சந்தைப்படுத்தலில் இருந்து பூச்சிகொல்லியின் பாதகம் வரைக்கும்  பிரச்சனை என்னவென புரிகின்றது, ஏன் தாம் நட்டமடைகின்றனர் என்பதுவும் புரிகின்றது, எதனால் இப்படி ஆகின்றது என்பதும் புரிகின்றது...ஆனால் தீர்வுக்காக ஒன்றிணைய மட்டும் பின்னடிக்கின்றனர்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நிழலி said:

இவர் புலம்பெயர் மக்களை நோக்கி இறுதியில் வைக்கும் வேண்டுகோள் கவனிக்க வேண்டியவை.

வெறும் தரிசாக நிலங்கள் வீணாக போவதை விட எவருக்காவது குத்தகைக்கு கொடுப்பது நல்லது.

இப்ப இருக்கிற நிலைமையிலை விளைஞ்ச மரக்கறியளையே சந்தைப்படுத்தேலாமல் சனம் தவிக்கிது.செய்தியின் சாரம்சமே அதுதான்......இதுக்குள்ளை தரிசுநிலம்......அதிலை விளைச்சல் கண்டு??????? எனக்கு விளங்கேல்லை..😎

  • கருத்துக்கள உறவுகள்

வேறொரு திரியில் மரவள்ளி பொரியல் சந்தைப்படுத்தல் பற்றி குறிப்புகள் போய்க் கொண்டிருக்கின்றன
இங்கே 100 கிராம் பொரித்த வெங்காயம் - பிளாஸ்டிக் போத்தலில் அடைத்தது - தாய்லாந்து தயாரிப்பு - $3  இற்கு மேற்பட்ட விலையில் விற்கிறார்கள்.  கிலோக்கணக்கில் உள்ள பாக்கெட் இலும் சந்தைப்படுத்துகிறார்கள்.
இலங்கை வட பகுதியில் இருந்து   சோற்றுக் கற்றாழையை ( Aloe  Vera   ) வெற்றிகரமாக ஏற்றுமதி செய்து கொண்டிருக்கின்றனர்.
வெங்காயப் பொரியும் இந்த வரிசையில் விரைவில் சேர்ந்து கொள்ள வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றது .

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தலைமைகள் என்ன செய்யப் போகின்றன - தலைமைகள் செய்யக்கூடாதென்றில்லை மற்றவை என்ன செய்யப் போகினம் - 18  வயதில ரெஜிஸ்ட்டர் பண்ணீற்று வெளியில போக ஏஜென்சிக்கு காசு கட்டி விட்டு மோட்டார் சைக்கிளோட காலம் தள்ளப் போக்கினமே.

தலைமைகளில் 70களில் துரைரத்தினம் MP இஸ்ரவேல் இனால் வரும் போது ஒவ்வொரு இடமாக இறங்கி தண்ணி தெளித்து வாடாமல் கொண்டு வந்த  திராட்ச்சைப்பழக் கொடியை  வடக்குக்கு அறிமுகப்படுத்திய பின்னர் எதுவும் பெரிதாக நடக்கவில்லை போல் தெரிகிறது .

            

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தலைமைகளுக்கு..... இப்படியான விடயங்களில், 
அடிப்படை அறிவோ... தூர நோக்கோ... கிடையாது.
அவர்களுக்கு தெரிந்ததெல்லாம்.... யாருக்கு முட்டுக்  கொடுப்பது என்பதே...
அவர்களை நம்பினால்... நடுக் கடலில் தான் நிற்க வேண்டும்,

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு இயற்கை பசளை மற்றும் இயற்கை விவசாய முறைகளை கற்று தரலாம், விவசாய தொழிலாளர்களின் கூலி அதிகம் என்பதற்காக களை பிடுங்காது அவற்றுக்கு கிருமி நாசினியை தெளிக்கின்றனர்.

நாங்கள் நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட போது மாட்டுச்சாணம், சருகுகளை குப்பையில் சேமித்து ஆடி/ஆவணி மாதங்களில் எருச்சிந்தி பின்பு மாடுகள் மூலம் உழவு செய்து அதன் விதைப்பு நடைபெறும்.

நெல்லுக்க வரும் புல்லு ஆக்கள் மூலமாக பிடுங்கி எடுத்து கால்நடைகளுக்கு உணவாக்குவோம். உரமும் போடுவதில்லை, கிருமி நாசினி தெளிப்பதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2019 at 5:22 AM, குமாரசாமி said:

இப்ப இருக்கிற நிலைமையிலை விளைஞ்ச மரக்கறியளையே சந்தைப்படுத்தேலாமல் சனம் தவிக்கிது.செய்தியின் சாரம்சமே அதுதான்......இதுக்குள்ளை தரிசுநிலம்......அதிலை விளைச்சல் கண்டு??????? எனக்கு விளங்கேல்லை..😎

முதல் குண்டுச் சட்டிக்குள்ள இருந்து வெளியே வர வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தலைமைகளுக்கு மண்டைக்க ஒன்றுமில்லை. எப்படி தமிழனை சிங்களவனுக்கும் முஸ்லீமுக்கும் காட்டிக்கொடுக்கிறது விலை விக்கிறது என்பது தான் அவைட சிந்தனை.

இதனைக் கையாள வேண்டியது.. சமூகத்தில் உள்ள கல்வியாளர்களும்.. விவசாயிகளும்.. பல்கலைக்கழகங்களும்... கைத்தொழில் நிறுவனங்களும் தான்.

உதாரணத்துக்கு.. சந்தையில் ஒரு விளை பயிர் மிகுதியாகுது என்றால்.. உடனடியாக அதனை இன்னொரு உற்பத்திக்கான மூலப் பொருளாக்கினால்.. நட்டத்தைக் குறைக்கலாம்.. அல்லது ஈடு கட்டலாம்.

இப்போ வெங்காயம்.. விலை குறையுது என்றால்.. சீனிச் சம்பல்.. வெங்காய ஜாம்.. அச்சாறு.. அல்லது பதப்படுத்திய வெங்காயம்.. செய்யிற கைத்தொழில் நிறுவனங்கள் இருந்தால்.. அவற்றை ஏற்றுமதி தரத்துக்கு பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பலாம். உள்ளூர் விவசாயிகளுக்கும் நியாயமான விலை கிடைக்கும்.. மூலம் பொருளுக்கு அதிக விலை கொடுக்கத் தேவை இல்லை என்பதால்.. உற்பத்தியாளர்களுக்கு இலாபமும் கிடைக்கும்.

அல்லது விவசாயிகள்.. முடிவுக்கு வரனும்.

தமது விவசாயப் பொருட்களுக்கு நல்ல சந்தை கிடைக்கவில்லை என்றால்.. அவற்றை வேறு உற்பத்திகளுக்கான.. மூலப் பொருளாக்கிக் கொள்ளும் வகைக்கு தம்மை தயார் செய்யனும்.

இதற்கான அறிவூட்டல்.. வழிகாட்டல்... தொழில்நுட்ப.. உபகரண உதவிகள்.. தர நிர்ணயம்.. பராமரிப்பு.. வெளிநாட்டு ஏற்றுமதிக்கான வழிமுறைகள் வழிகாட்டல்களை.. கல்விச் சமூகமும்.. வர்த்தக சமூகமும்.. பல்கலைக்கழக சமூகம்.. விவசாய சமூகத்துடன் இணைந்து செய்ய வேண்டும். சொறீலங்கா தமிழ் அரசியல் தலைமைகள்.. சிங்கள அரச திணைக்களங்களை நம்பி இருந்தால்.. நிலைமை எப்பவும் போல வறுமையில் தான் விவசாயிகளை வைச்சிருக்கும்.

வெங்காய ஜாம்

image.jpeg.d56faadeca7932520f5c3df0cdf042bd.jpeg

சீனிச் சம்பல்

Related image

பதப்படுத்திய மற்றும்.. சுவை கூட்டிய வெங்காயம்.

Image result for preserved onions

வெங்காய ஊர்காய்.

Image result for preserved onions

வெட்டி குளிரூட்டி சேமிக்கப்பட்ட வெங்காயம். மேற்குலகில் எப்படி வியாபாரம் ஆக்குகிறார்கள்.. பாருங்கள். 

Waitrose Cooks' Ingredients diced onion

 

இப்படி எத்தனையோ வழிமுறைகளில் மூலப் பொருளை வைச்சுவ், காலத் தேவைக்கு ஏற்ப.. புதிய.. உப உற்பத்திகளை உருவாக்கலாம். அதுக்கும் வழிகாட்டனும்.

மேலும்.. பங்கீட்டுப் பயிற்செய்கை குறித்து விவசாயிகள் தமக்குள் ஒத்துப் போகனும். ஒருவர் ஒரு வருடத்தில் குறித்த பயிருக்கு முதன்மை அளித்தால்.. மற்றவர் இன்னொன்றுக்கு. அதுக்கு அடுத்த வருடம் முன்னையவருக்கு.. மற்றவர் இடமளிக்க வேண்டும். இவ்வாறும் சந்தையில் உற்பத்திக்கு நியாய விலையை வைச்சிருக்கலாம்.. நுகர்வோருக்கும்.. கஸ்டமில்லாமல். விவசாயிகள் கொள்ளை இலாபத்தில் குறி வைக்கக் கூடாது. நுகர்வோரின் நுகர்வு தன்மையையுடனும் விலை நிர்ணயம்...  ஒரு சமநிலைக்கு வரணும்.. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.