Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா அம்மானை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லை – சார்ள்ஸ் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மானை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லை – சார்ள்ஸ் கேள்வி

tna-.jpg

தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினராக இருந்த கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லையென கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

மிக முக்கியமாக இலங்கையில் யுத்தம் ஏற்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த பயங்கரவாத தடைச்சட்டம் யுத்தம் முடிந்து 10 வருடங்களாகியும் இன்று வரை நடைமுறையில் இருக்கின்றது.

அந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் அதாவது சாட்சிகள் இல்லாமல் ஒருவரை கைது செய்ய முடியும்.

கைது செய்கின்ற நபர் அவரை துன்புறுத்தி அந்த துன்புறுத்தலின் மூலம் அவர் தான் குற்றங்களை செய்ததாக ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு நீண்டகால தண்டனை வழங்குவதற்கு விசாரணையற்ற முறையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு குற்றத்தடுப்பு பிரிவுக்கு ஜனாதிபதியால் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

அந்த சட்டத்தின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மறைமுகமாக உதவி செய்ததின் அடிப்படையில் 100 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் கைதிகளாக 10 வருடங்களுக்கு மேலாக இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் சிறு சிறு குற்றங்கள் செய்ததாக தெரிவித்திருக்கின்றனர். இவர்கள் அரசியல் ரீதியான கைதிகள்.

தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரனை அதாவது கருணா அம்மான் என்று கூறுகின்ற அந்த நபரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாங்கள் ஏன் கைது செய்யவில்லை? விசாரணை செய்யவில்லை? என்பதை அமைச்சர் இந்த சபைக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் தெளிவுப்படுத்த முடியுமா? என்று நான் கேட்டு கொள்ள விரும்புகின்றேன்.

அதேபோன்று கே.பி மற்றும் பிள்ளையான் ஆகியோர் கைது செய்யப்படவில்லை அல்லது விசாரணைக்கு உட்படுத்தபடவில்லை என்பது குறித்து அமைச்சர் இந்த சபைக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரியுள்ளார்.

http://athavannews.com/கருணா-அம்மானை-பயங்கரவாத/

  • கருத்துக்கள உறவுகள்

கணகாலம் உயிரோடு இருக்கோணும் என்று ஆசை இல்லை போல 🤐
 
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

கணகாலம் உயிரோடு இருக்கோணும் என்று ஆசை இல்லை போல 🤐
 
யாரை கேட்கிறீங்க ?

கருணா expiry date (காலாவதியாகி கனகாலம் )

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

யாரை கேட்கிறீங்க ?

கருணா expiry date (காலாவதியாகி கனகாலம் )

காலாவதியான ஆளைப் பார்த்து சாள்ஸ் ஏன் கூவுகிறார் 😀

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரதி said:

காலாவதியான ஆளைப் பார்த்து சாள்ஸ் ஏன் கூவுகிறார் 😀

பிழை விட்டவர் விட்டவர் தான் தண்டனை அவர்களுக்கு காத்துகொண்டு இருக்கும் உலக வழக்கம் அது தானுங்க .

  • கருத்துக்கள உறவுகள்

சொறி லிங்காவின் யாப்பிற்குள்ளும், சட்டதிற்குள்ளுமே இந்த கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

22 minutes ago, ரதி said:

காலாவதியான ஆளைப் பார்த்து சாள்ஸ் ஏன் கூவுகிறார்

சொறி லங்காவின் யாப்பிற்குள்ளும், சட்டதிற்குள்ளுமே இந்த கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.  

சட்டப்படியும், அவர் செய்தவைகள் காலாதியாகவில்லை.

ஆனால், சொறி லங்கா அரசிற்கு கருணாவின் உபயோகமும், அறிவை பயன்படுத்தும் தேவையும் கலாதியாகிவிட்டது.  

இது ஏற்கனவே பல இடங்களில் யாழில் கலந்துரையாடப்பட்டிருக்கிறது.

54 minutes ago, ரதி said:

கணகாலம் உயிரோடு இருக்கோணும் என்று ஆசை இல்லை போல

ங்கள் UK இல் வசிப்பவர் என்றே நான் எண்ணுகிறேன். நீங்கள் சொல்லியது, UK anti terrorism legislation படி குற்றமாக கருதப்படுவதற்கு இடமுண்டு.  ஏனெனில், நீங்கள் சொல்லியவர் வேறு ஓர் அரசாங்கத்தின் பிரதிநிதி.

13 hours ago, ரதி said:

காலாவதியான ஆளைப் பார்த்து சாள்ஸ் ஏன் கூவுகிறார் 😀

கருணாவின் இன்றய நிலை , இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன ...அவ்வளவு தான் .....

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பெருமாள் said:

பிழை விட்டவர் விட்டவர் தான் தண்டனை அவர்களுக்கு காத்துகொண்டு இருக்கும் உலக வழக்கம் அது தானுங்க .

நான் கேட்டதிற்கு உதுவா பதில் 😏
 
  • கருத்துக்கள உறவுகள்

கர்ணாவையெல்லாம் கைது பண்ண முடியாது அது அரசாங்கத்தாலும் முடியாது இது தெரிந்தும் இந்தாள் ஏன் கூவுது  கூவுறது இந்த கூத்தமைப்பு வேலையாப்போச்சுது 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கர்ணாவையெல்லாம் கைது பண்ண முடியாது அது அரசாங்கத்தாலும் முடியாது இது தெரிந்தும் இந்தாள் ஏன் கூவுது  கூவுறது இந்த கூத்தமைப்பு வேலையாப்போச்சுது 

கூவியும் பிரபலமாக வரலாமல்ல‌

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் மட்டக்கிளப்பில் பிள்ளையானை விடுவிக்க சொல்லி ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது...அதில் பங்கு பற்றியவர்களில் ஒரு பிரபல்ய பாடசாலையில் அதிபராய் இருந்து ஒய்வு பெற்ற ஒருவரும்,சில அதிகாரிகளும் இருந்தனர்..

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

அண்மையில் மட்டக்கிளப்பில் பிள்ளையானை விடுவிக்க சொல்லி ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது...அதில் பங்கு பற்றியவர்களில் ஒரு பிரபல்ய பாடசாலையில் அதிபராய் இருந்து ஒய்வு பெற்ற ஒருவரும்,சில அதிகாரிகளும் இருந்தனர்..

எடுத்துக் காட்டுகளை எல்லாம் இப்படி பொறிக்கி எடுக்க வேண்டி இருக்கிறதே!

  • கருத்துக்கள உறவுகள்
On ‎4‎/‎3‎/‎2019 at 8:53 PM, MEERA said:

எடுத்துக் காட்டுகளை எல்லாம் இப்படி பொறிக்கி எடுக்க வேண்டி இருக்கிறதே!

உங்களுக்கு விளங்கவில்லை என்று நினைக்கிறேன்...பிள்ளையான் உள்ளுக்குள்ள இருக்கிறார்...அவரை விடுவிக்க சொல்லி அங்கிருக்கும் படித்த சமூகத்தினர் கொஞ்ச பேர் ஆர்ப்பாட்டம் செய்திருக்கினம் ..நேற்று 5,6 பேர் செய்தவை,இன்டைக்கு 100,200 பேர் செய்வினம்.அதே நாளைக்கு 1000 ஆக கூடலாம்.

கூ ட்டமைப்பின் மேல் நம்பிக்கை இல்லாமல் போனது.அல்லது பிள்ளையான் போன்றோரால் மட்டும் தான் தங்கட இடங்களையும்,மக்களையும் காப்பாற்ற முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள் ..என்னுடைய ஆதங்கம் என்ன என்றால் கூட்டமைப்பினரோ அல்லது புலம் பெயர் தமிழர்களோ இவர்களுக்கு உதவவில்லை என்றால் அது கிழக்கு பிரிவினைவாதத்திற்கு அடி கோலும் என்று நினைக்கிறேன்.முக்கியமாய் மட்டு மக்கள் இப்படி இறங்கி இருப்பது ஒன்று பிள்ளையான் மேல் உள்ள நம்பிக்கை அல்லது அவர்களுக்கு வேறு வழியில்லை.
 
On 4/2/2019 at 12:13 AM, ரதி said:

கணகாலம் உயிரோடு இருக்கோணும் என்று ஆசை இல்லை போல 🤐
 
அதாவது கருணா கும்பல் செய்த கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கொலை போல பலநூறு கொலைகளின் வழியில் இன்னொரு கொலையும் அரங்கேறும் என்று நம்புகிறீர்களோ?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2019 at 6:30 AM, தனிக்காட்டு ராஜா said:

கர்ணாவையெல்லாம் கைது பண்ண முடியாது அது அரசாங்கத்தாலும் முடியாது இது தெரிந்தும்

ஏன் முடியாது? தேவையற்றதாக இருக்கலாம்.

சொறி லங்கா அரசால் முடியும், அரசாங்கத்திற்கு விருப்பம் இல்லையாயினும்.

இதன் காரணமோ அல்லது வேறு விடயமோ, கருணா பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

இதன் காரணமோ அல்லது வேறு விடயமோ, கருணா பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

அப்படி செய்த ஓர் வேளையில், சரத் பொன்செவால் கருணா பகிரங்கமாக அதட்டப்பட்டது வெளிப்படையானது.

இப்பொது சரத் பொன் உள்நாட்டு மிகவும் முக்கிய பொறுப்பில், உள்நாட்டு பாதுகாப்பின் அம்சமும் கொண்டது சரத்தின் பொறுப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kadancha said:

ஏன் முடியாது? தேவையற்றதாக இருக்கலாம்.

சொறி லங்கா அரசால் முடியும், அரசாங்கத்திற்கு விருப்பம் இல்லையாயினும்.

இதன் காரணமோ அல்லது வேறு விடயமோ, கருணா பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

இதன் காரணமோ அல்லது வேறு விடயமோ, கருணா பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

அப்படி செய்த ஓர் வேளையில், சரத் பொன்செவால் கருணா பகிரங்கமாக அதட்டப்பட்டது வெளிப்படையானது.

இப்பொது சரத் பொன் உள்நாட்டு மிகவும் முக்கிய பொறுப்பில், உள்நாட்டு பாதுகாப்பின் அம்சமும் கொண்டது சரத்தின் பொறுப்பு.

ஹாஹா  கருணாமீது கைவைத்தால் ஒட்டிமொத்தமாக கோர்வையாக செல்ல நேரிடும் அது சரத்பொன்சேகாவையும் சேர்த்துதான் அதனால் கர்ணா எந்த அரசு வந்தாலும் செல்லபிள்ளையாத்தான் இருப்பாரு ஒருவேளை போர்க்குற்றம் எனும் வரும் போது விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் ஆனால் சிறைப்படுத்தமுடியாது , பிள்ளையானைப்போல் இல்லை கர்ணா அம்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.