Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று தமிழ்ப்புத்தாண்டா? அது உண்மையா?

Featured Replies

53 minutes ago, tulpen said:

நன்றி மல்லிகை வாசம். இது உங்களுக்கும் எனக்குமான  தனிப்பட்ட விவாதம் அல்ல. 

கண்டிப்பாக தனிப்பட்ட விவாதம் அல்ல துல்பென். மலர்களுக்கிடையான விவாதம்! (Tulip vs Jasmine) 🤣 சற்று நேரத்தில் Mr. Shadow (நிழலி) வருவார். இனி அவர் என்ன சொல்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். 😃

  • Replies 89
  • Views 9.3k
  • Created
  • Last Reply
57 minutes ago, tulpen said:

இதை வாசிக்கும்  பல்லாயிரக்கணக்கான யாழ்கள வாசகர்களிடம் பழமை வாதத்தை களையெடுப்பதற்கான ஊக்கப்படுத்தல் நிகழும். அவர்களிடம் புதிய கேள்விகள் எழும். அறிவிற்கு சிறிதும்  பொருத்தமற்ற பல பழக்கங்களை கொண்டிருக்கும் எமது சமுதாயத்தில் நிச்சயம் மாற்றம் வரும். 

இப்படியான கேள்விகள் ஆராய்ச்சிகள் தவறல்ல. ஆனால் மதநம்பிக்கை இல்லாமல் கொஞ்ச காலம் இருந்து பார்த்தேன். அப்போது அதன் அருமை புரிந்தது. மீண்டும் வழிபாடு, விரதங்கள் எனத் தொடர மீண்டும் மனதில் நிம்மதி வந்தது. ஆன்மீக, உளவியல் நுட்பங்கள் மதச் சடங்குகளில் நிறைய உண்டு. அதனால் தான் முன்னோர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தான் சடங்குகளை அறிமுகப்படுத்தினார்கள் என்று உணர்ந்தேன். நீரோட்டத்துக்கு முரணாக நீந்திக் களைத்தேன். அதனால் மதங்கள் எனும் நீரோட்டத்துடன் கொஞ்சம் சுய புத்தியையும் பிரயோகித்துக் கொண்டு ஓடுகிறேன். வாழ்க்கை அழகாகத் தெரிகிறது. கருத்தாடலுக்கு நன்றி. 😊

  • தொடங்கியவர்
37 minutes ago, ரதி said:

இதை உங்களிடம் மட்டும் கேட்கவில்லை...உங்களுக்கு ஆதரவாய் கருத்து எழுதும் சுமோ , நிழலி போன்ற எல்லோரிடம் தான் கேட்கிறேன்... வருசத்தில் பெயர்கள் வேண்டுமானால் சமஸ்கிரதமாக இருக்கலாம். ஆனால் இந்த விழாக்கள் எங்களுக்கு உரியது ..உப்ப எதெற்கெடுத்தாலும் ஆங்கில பெயர்களை சூட்டுவது மாதிரி அந்தக் காலத்து தமிழர்கள் சமஸ்கிரத பெயர்கள் ஸ்டைலாய் இருக்குது என்று சூட்டி இருக்கலாம்(அது சரி என்று சொல்ல வரவில்லை). ஆனால் பெயர்களை மட்டும் வைத்துக் கொண்டு இது எங்களுடைய வருடப் பிறப்பு இல்லை என்று சொல்வது முட்டாள்தமானது...இங்க பிறக்கின்ற பிள்ளைகளுக்கு ஆங்கில,பிரென்சு பேர்களை வைக்கினம் அதற்காக அவர்கள் எங்கட பிள்ளைகள் இல்லையா? 

சீனர்கள் தொடங்கி அரபிகள் வரை தங்களுக்கு என்று கலண்டர் வருசம் தொடங்கி அதை கடைப் பிடிக்கினம்...ஆனால் தமிழன் செய்யும் போது தான் 1008 முட்டுக்கட்டைகளும்,நொண்டிச் சாட்டுகளும்,குறைகளும் உங்களை போன்ற ஆட்கள் சொல்ல தொடங்குவார்கள் .உங்கள் இன,கலாச்சாரத்தை மதிக்கா விட்டாலும் பரவாயில்லை. தயவு செய்து அழிக்காதீர்கள்..மூட நம்பிக்கைகள் பிடிக்கவில்லை அதை தடுக்க வேண்டும் என்று நினைப்பது வேறு. ஆனால் எப்ப பார்த்தாலும் உங்களை மட்டும் புத்திசாலியாய் நினைத்துக் கொண்டு வ.பிறப்பு எங்களுடையது இல்லை. தீபாவளி எங்களுடையது இல்லை. ...சரி அப்ப எது  எங்கள் உடையது?

ஒரு  பக்கத்தால் கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகிறார்கள். இன்னொரு பக்கத்தால் முஸ்லீம்கள் மதம் மாற்றுகிறார்கள்...இன்னொரு பக்கத்தால் சிங்களவர்கள் அடியோடு அழிக்கிறார்கள்  ..நீங்கள் செய்வது   இவர்களையும் விட கேவலமானது.இதுவும் ஒரு வித இன, மத அழிப்பு தான் ....நீங்கள் தெரிந்தோ,தெரியாமலோ உங்களை புத்திசாலியாய் காட்ட இந்த அழிப்பிற்கு துணை போகிறீர்கள்.

உங்களுக்கு இப்படியானவற்றை கொண்டாட விருப்பமில்லா விட்டால் கொண்டாட வேண்டாம்...வெளிநாட்டில் இருக்கிறோம் வெள்ளையன் தான் அறிவாளி என்று அவன்ட காலை  பிடிச்சு கொண்டு இருங்கோ ..அல்லாட்டில் சுமோவை மாதிரி நான் இதெல்லாம் கொண்டாடுவதில்லை 😋என்று சொல்லி கொண்டு கொண்டாடுகிறீர்களோ தெரியாது...ஆனால் தயவு இன, மத சம்மந்தமான கருத்துக்களை எழுதும் போது பொறுப்புணர்ந்து செயற்படுங்கள் 
 
சொல்ல ஒன்று இல்லாததால்  வழமை போல உங்கள் பாணியில் கரிச்சு கொட்டிப் போட்டு போயிருக்கிறீங்க. 😂😂.  🧙‍♀️ 😂😂😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

சொல்ல ஒன்று இல்லாததால்  வழமை போல உங்கள் பாணியில் கரிச்சு கொட்டிப் போட்டு போயிருக்கிறீங்க. 😂😂.  🧙‍♀️😂😂😂😂😂😂

உங்களிடம் இப்படித் தான் பதில் வரும் என்று தெரியும்..உங்களிடம் இருப்பது மத குரோதமே தவிர வேறு ஒன்றுமில்லை...தயவு செய்து யாராவது எழுதினால் அவர்களுக்கு பின்னால் வால்  பிடித்துக் கொண்டு வர வேண்டாம் 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎4‎/‎14‎/‎2019 at 6:00 PM, பெருமாள் said:

இங்கு இப்படி கொள்ளுபட கோவில்கள் பக்கம் கொஞ்சம் எட்டி பார்த்தால் சப்பாத்துக்கள் கழட்டி வைக்கும் ராக்குகள் நிரம்பி வழிகின்றன வெம்பிளி ஈழபதீஸ்வரர்க்கு அய்யர் மார் விழுந்து விழுந்து மணி அடிச்சு பூசை செய்வது வெளியில் இருந்தே பார்க்க கூடியதாக இருக்கு .

நாங்கள் என்ன குத்தி முறிந்தாலும் சனம் கோவிலுக்கு தீபாவளிக்கும் போகுதுகள்  ஆங்கில வருடபிறப்புக்கும் போகுதுகள் தைபொங்கலுக்கும் போகினம் சித்திரை வருசமான இன்றும் அய்யர் கூட்டத்தின் கல்லாவை நிரப்ப அடிபட்டுக்கொண்டு வரிசையில் நிக்குதுகள் . இதுகளை திருத்த நூறு சீமான் வந்தாலும் காணாது . போற போக்கிலை குருக்கள் எனும் ஐயரிடம் தைப்பூசம் எண்ணத்துக்கு கொண்டாடுறாங்கள் என்று கேட்டு துலைக்க ஐயர் எஸ்கேப் எனக்கும் உண்மயில் எனக்கும் தெரியாது இங்கு யாருக்கும் தெரியுமா ?

மொரிசியஸ் தமிழை மறந்த தமிழர் ஒவ்வொரு வருடமும் ஆர்ச்வே முருகனுக்கு காவடி எடுப்பார் அவரிடமும் கேட்டன் அவரும் தனக்கு தெரியாது தன் பெற்றோர் தைபூசம் நாளில் கும்பிடுறவை நானும் கும்பிடுறன் என்கிறார் . இப்படித்தான் எங்கடை எதிர்கால சந்ததியும் இருக்கும் போல் தென்படுது . உங்களின் வருடபிறப்பு எப்ப என்று கேட்டால் முழித்துகொண்டு நிக்க வேண்டியது தான் .

பூசம் என்னும் நட்சத்திரம் முருகனுக்குரியது...அதாவது தை மாசம் பூச நட்சத்திரத்தில் முருகன் பிறந்தார் 🤔

  • தொடங்கியவர்
53 minutes ago, ரதி said:

உங்களிடம் இப்படித் தான் பதில் வரும் என்று தெரியும்..உங்களிடம் இருப்பது மத குரோதமே தவிர வேறு ஒன்றுமில்லை...தயவு செய்து யாராவது எழுதினால் அவர்களுக்கு பின்னால் வால்  பிடித்துக் கொண்டு வர வேண்டாம் 

மதக்குரோதம் என்ற வார்ததைக்கே அரத்தம் தெரியவில்லை. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 அதுக்குள்ள என்னை எழுத வேண்டாம. என்று கட்டளை வேறை.😂😂😂😂😂😂😂 தொடர்ந்து எழுதுவேன் . எழுதுவது புரியாவிட்டால் கடந்துபோயிடுங்க. எழுதுவதை தப்புதப்பா விளங்கி கரிச்சு கொட்ட வேண்டாம். 😁

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மல்லிகை வாசம் said:

"சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே
"

இது தமிழ் மந்திரம் அல்ல, சசி வர்ணம். நீங்கள் குறிப்பிட்ட ஆரியரின் சமஸ்கிருத மந்திரம். அதற்காக உங்களின் பெயரை மாற்றும்படி யாரும் கேட்க மாட்டோம். இது போல தவிர்க்க முடியாத கலப்புகள் - அவை பெயராகட்டும், மதச்சடங்குகள் ஆகட்டும் - தமிழ் கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்து விட்டன. ஐரோப்பிய கலண்டர், ஆட்சி முறை போன்றவை பின்னர் நம்மிடையே கலந்தது போல. ஆகவே, தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது தவறல்ல என்பதே என் வாதம். புரிந்ததா சசி வர்ணம்.

தமிழ் ஆரியத்துக்கும் மிக மிக மூத்தது என நன்கு புரியும். ஆனால் விவாதம் அதுவல்ல. தமிழை முன்னிலைப்படுத்த இது தான் வழி அல்ல. 

மல்லிகை ....
சசி - என் முதல் காதலி (க்ரஷ்) 3 வாரம் வெற்றிகரமாக ஓடிய காதல். 4ஆம் வாரம் அவளாகவே ஒதுங்கிவிட்டாள் (காரணம் என் தமிழில் இருந்த மலையக வாடை)

வர்ணம் - நான் ஒரு ஓவியன் , ஓவியத்தை ரசிப்பவன். வர்ணங்களை  லயிப்பவன்.
இதுவே இந்த சசி_வர்ணத்திற்காண விளக்கம். 

இந்த பெயர் உங்கள் கண்களை மற்றுமல்ல இன்னும் ஓரிருவரின் கண்ணிலும் குத்திய விடயம் தான்.
பெயரை மாற்றிக்கொள்வதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை.
என் பெயரை விட எனது எண்ணமும், செயலும் தான் எனக்கு முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

உங்களிடம் இப்படித் தான் பதில் வரும் என்று தெரியும்..உங்களிடம் இருப்பது மத குரோதமே தவிர வேறு ஒன்றுமில்லை...தயவு செய்து யாராவது எழுதினால் அவர்களுக்கு பின்னால் வால்  பிடித்துக் கொண்டு வர வேண்டாம் 

57198855-2292871684285090-62767385386460

1928 லே இந்து பண்டிகையாக இருக்கு 

அது போக இப்ப விதண்டா வாதம் வைக்கிற ஆட்களிடம் ரதி அவர்கள் முன்னோர்களை 10 சந்ததியினருக்கு முன்னர் உள்ள ஆட்களின் பெயரை கேட்டால் சொல்லாமாட்டார்கள் இப்படித்தான் இருக்கு நிலமை அப்படி சரியாக சொன்னாலும் அதை ஆரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனென்றால் அவர்களைத்தான் யாருக்கும் தெரியாதே  அது போலத்தான் இதுவும்  அவர்களும் கொண்டாடித்தான் இருப்பார்கள் 

50 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மல்லிகை வாசத்துக்கு எழுதிய என் பதில்களும் ருல்பனின் பதில்களும் குறிப்பிடுவது இது தமிழர்களின் பண்டிகை அல்ல என்பதைத்தான். அதைத்தான் நீங்களும் அவரும் ஒப்புவிக்கின்றீர்கள்.

இது ஒரு இந்துப் பண்டிகையாகவே இருக்கின்றது. இந்துப் பண்டிகை ஒன்று ஒரு போதும் தமிழர் பண்டிகையாக ஆக மாட்டாது. 

நாரதரும் விஷ்ணுவும்  அறுபது வருடம் உடலுறவு கொண்டு பெற்ற அறுபது பிள்ளைகளை அறுபது வருடங்களாக கணிக்கும் இந்த முறைமை இந்து பண்டிகை ஆகவே தொடர்ந்து இருக்கட்டும்.

அதை தமிழர்களின் புத்தாண்டு என்று சொல்லி தமிழ் தேசியத்தை சிதைக்கும் செயல்பாடுகள் தொடரும் வரை எம் எதிர்ப்புகளும் இருக்கும்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

அப்போ இலங்கையில் வாழ்வது இந்துக்களா? சைவர்களா ? இலங்கையில் வாழ்ந்த சைவர்களுக்கு சைவவர்கள் பெருநாள் என்பதை எழுதாமல் இது இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இந்தியா  என்ற கோட்பாடுக்குள்ளும் எழுதி இருக்கலாம் அல்லவா 

அது நிழலி ஊர்ல மொத்த சனமும் பொங்கல் பொங்கி கொண்டாடி விட்டது நாம இன்னும் பொங்கி கொண்டு இருக்கிறம் இப்படி நல்ல நாள் பெருநாட்கள் வரட்டும் இலங்கையை பொறுத்த வரையில் கடற்கரையில் சன்க்கூட்டங்கள் சித்திரை பொங்கல் விளையாட்டுக்கள் இசைநிகழ்ச்சிகள்  என்பன நடக்கிறது மக்களும் இயந்திர வாழ்வில் சந்தோசமாக இருக்கிறார்கள்  எவன் என்ன சொன்னாலும்  ஊர் மாறப்போவதில்லை அது மட்டும் உறுதி 

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்

HINDU != TAMIL (not equal to)

ஹிந்து ஒரு போதும் தமிழாகாது.
அது போலவே ...
தமிழும் ஒரு போதும் ஹிந்துவாக மாறாமல் இருக்கக்கடவட்டும்.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

இந்துக்களின் பண்டிகையை தமிழ் பண்டிகை என்று அழைப்பது பொருத்தமில்லை என்று சொன்னால் இவ்வளவு மூர்க்கமான எதிர்ப்பா? இந்த எதிர்ப்பின் கீழே இழையோடும் மதவாதம்  தான் நெருட வைக்கிறது. பத்து தலைமுறைக்கு முன்னால் நபர்களின் அடையாளம் என்ன, பெயர்கள் என்ன என்று வேறு கவலைப் படுகிறார்கள்! ஏன் கண் முன்னால் இருக்கும் இந்த தலைமுறையின்/நபரின் அடையாளம் போதாதா? அதுவல்லவா முக்கியமானது?  

51 minutes ago, Justin said:

இந்துக்களின் பண்டிகையை தமிழ் பண்டிகை என்று அழைப்பது பொருத்தமில்லை என்று சொன்னால் இவ்வளவு மூர்க்கமான எதிர்ப்பா? இந்த எதிர்ப்பின் கீழே இழையோடும் மதவாதம்  தான் நெருட வைக்கிறது. 

இன்னொரு மதத்தவரின் நம்பிக்கையை தெளிவாக விளக்கியும் மீண்டும் மீண்டும் புண்படுத்தினால் எதிர்க்கமாட்டார்களா? இது மதவாதம் அல்ல. ஒருவரது நம்பிக்கையை புண்படுத்தும் போது இயற்கையாக ஏற்படும் கோபம். நீங்கள் வாழும் நாட்டில் இப்படி மத நம்பிக்கையைப் புண்படுத்தும் சூழல் தானா காணப்படுகிறது. நீங்களும் அதை ஆதரிக்கிறீர்களா?

நான் எல்லா மதங்களையும் மதிப்பவன். ஆனால் இவர்கள் தான் குறை காண்கிறார்கள். 

59 minutes ago, Justin said:

பத்து தலைமுறைக்கு முன்னால் நபர்களின் அடையாளம் என்ன, பெயர்கள் என்ன என்று வேறு கவலைப் படுகிறார்கள்! ஏன் கண் முன்னால் இருக்கும் இந்த தலைமுறையின்/நபரின் அடையாளம் போதாதா? அதுவல்லவா முக்கியமானது?

இதையே தான் நானும் கேட்கிறேன் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர் செய்த அட்டூழியங்களை எதிர்த்து (சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியர் மதம் திணிக்கப்பட்டதை அடக்கி வாசித்தும்) நமது பண்டிகையில் இவர்கள் குறை காண்கிறார்களே? அவர்களிடமும்் இதே கேள்வியை கேளுங்கள்.

காலங்காலமாக நாம் கொண்டாடப் பட்டு இன்று எமது பெற்றோர் மற்றும் பிற பெரியோர் நமக்குச் சொல்லித்தந்த பண்டிகைகளை இவர்கள்கே்ள்வி கேட்பது அவசியமா?

3000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததைச் சுட்டிக்காட்டி பேசினால் அது தவறில்லை என்று நீங்கள் கருதினால் வெறும் 10 தலைமுறைகள் பின்னோக்கி சென்று பார்ப்பதும் தவறல்ல. கருத்தாடலுக்கு நடுநிலைமை அழகு என நினைக்கிறேன் ஜஸ்ரின்.

3 hours ago, Sasi_varnam said:

வர்ணம் - நான் ஒரு ஓவியன் , ஓவியத்தை ரசிப்பவன். வர்ணங்களை  லயிப்பவன்.

முதலில் உங்கள் காதலுக்கு நடந்த வேதனைக்கு என் மன வருத்தங்கள். மிகவும் கொடுமையான வலியாக இருந்திருக்கும். 

3 hours ago, Sasi_varnam said:

வர்ணம் - நான் ஒரு ஓவியன்

வர்ணம் என்ற சொல்லும் சமஸ்கிருத வார்த்தை தான்.

3 hours ago, Sasi_varnam said:

பெயர் உங்கள் கண்களை மற்றுமல்ல இன்னும் ஓரிருவரின் கண்ணிலும் குத்திய விடயம் தான்.
பெயரை மாற்றிக்கொள்வதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை.
என் பெயரை விட எனது எண்ணமும், செயலும் தான் எனக்கு முக்கியம்.

மத நம்பிக்கையை புண்படுத்தியும், எங்களுக்கு தமிழனினம் என்று பெருமை இல்லை என்ற அர்த்தத்திலும் எங்களை நோக்கி விரல்கள் நீளும் போது இவ்வாறான பெயர்கள் கண்ணில் குத்தும் தான். பெயரை மாற்றும்படி சொல்வது எனது வாதமல்ல. மத நம்பிக்கையை புண்படுத்தாதீர்கள் என்பதே எமது வேண்டுகோள். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மல்லிகை வாசம் said:

இதையே தான் நானும் கேட்கிறேன் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர் செய்த அட்டூழியங்களை எதிர்த்து (சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியர் மதம் திணிக்கப்பட்டதை அடக்கி வாசித்தும்) நமது பண்டிகையில் இவர்கள் குறை காண்கிறார்களே? அவர்களிடமும்் இதே கேள்வியை கேளுங்கள்.

காலங்காலமாக நாம் கொண்டாடப் பட்டு இன்று எமது பெற்றோர் மற்றும் பிற பெரியோர் நமக்குச் சொல்லித்தந்த பண்டிகைகளை இவர்கள்கே்ள்வி கேட்பது அவசியமா?

3000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததைச் சுட்டிக்காட்டி பேசினால் அது தவறில்லை என்று நீங்கள் கருதினால் வெறும் 10 தலைமுறைகள் பின்னோக்கி சென்று பார்ப்பதும் தவறல்ல. கருத்தாடலுக்கு நடுநிலைமை அழகு என நினைக்கிறேன் ஜஸ்ரின்.

முதலில் உங்கள் காதலுக்கு நடந்த வேதனைக்கு என் மன வருத்தங்கள். மிகவும் கொடுமையான வலியாக இருந்திருக்கும். 

ம்ம்ம் அப்படி ஒரு வலியும் இருக்கவில்லை , 
அடுத்த கிழமையே "மைதிலிக்கு" பின்னால சயிக்கிள் உலக்க தொடங்கிட்டேன். 😎

பெயரைவிட எண்ணமும் செயலும் தான் முக்கியம் என்றால். உங்கள் எண்ணங்கள், செயல்களைத் தூய்மையாக வைத்திருங்கள். அப்படி வைத்திருந்தால் பிறர் மத நம்பிக்கையை மட்டுமல்ல எந்த நம்பிக்கையையும் புண்படுத்துவதற்கு உங்கள் மனம் சொல்லாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மல்லிகை வாசம் said:

பெயரைவிட எண்ணமும் செயலும் தான் முக்கியம் என்றால். உங்கள் எண்ணங்கள், செயல்களைத் தூய்மையாக வைத்திருங்கள். அப்படி வைத்திருந்தால் பிறர் மத நம்பிக்கையை மட்டுமல்ல எந்த நம்பிக்கையையும் புண்படுத்துவதற்கு உங்கள் மனம் சொல்லாது.

உங்கள் அதிகப்பிரசங்கித்தனத்துக்கும், அரைவேற்காட்டு கருத்துக்கும் இடையில் முட்டி மோத விரும்பவில்லை.
நன்றி வணக்கம். 💩

9 minutes ago, Sasi_varnam said:

உங்கள் அதிகப்பிரசங்கித்தனத்துக்கும், அரைவேற்காட்டு கருத்துக்கும் இடையில் முட்டி மோத விரும்பவில்லை.
நன்றி வணக்கம். 💩

எனது கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லாமல் இப்படி எழுதினால் அது உங்கள் இஷ்டம். எனது கருத்தில், நம்பிக்கையில் தெளிவாக இருக்கிறேன். மீண்டும் நான் எழுதியவற்றை எல்லாம் வாசித்தால் புரியும். ஒருசில கேள்விகளுக்கான பதில்களை மட்டுமே வாசித்து விட்டு உங்கள் கருத்தை நடுநிலைமை இல்லாமல் எழுதுவது தான் அரைவேக்காட்டுத்னமானது. நன்றி 😊

8 minutes ago, மல்லிகை வாசம் said:

எனது கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லாமல் இப்படி எழுதினால் அது உங்கள் இஷ்டம். எனது கருத்தில், நம்பிக்கையில் தெளிவாக இருக்கிறேன். மீண்டும் நான் எழுதியவற்றை எல்லாம் வாசித்தால் புரியும். ஒருசில கேள்விகளுக்கான பதில்களை மட்டுமே வாசித்து விட்டு உங்கள் கருத்தை நடுநிலைமை இல்லாமல் எழுதுவது தான் அரைவேக்காட்டுத்னமானது. நன்றி 😊

உங்கள் நம்பிக்கையில் உங்களுக்கு தெளிவு இல்லை. அதனால் தான் நாம் எழுதாத விடயங்களை எழுதியதாக எழுதுகின்றீர்கள்

எந்த இடத்திலும் பண்டிகையை கொண்டாடுவது தவறு என நானும் குறிப்பிடவில்லை, ஆனால் அப்படி குறிப்பிட்டதாக குறிப்பிட்டீர்கள். அப்படி நான் எழுதியதற்கு சான்றை கேட்டால் அதற்கு பதில் இல்லை

சித்திரை புத்தாண்டு தமிழ் புத்தாண்டு அல்ல, ஒரு இந்துப் புத்தாண்டு என்று பலமுறை எழுதியும், நீங்களே அதை இந்துப் பண்டிகை என்றுவிட்டு (ஆனால் இலங்கை அரசும் ஆதிக்க சக்திகளும் அதை தமிழ் புத்தாண்டும் தான் என சாதிக்க முனைந்து அதில் வெற்றியும் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது )என பின் நாம் அப்படி எழுதியது மத நம்பிக்கைகளை காயப்படுத்துகின்றது என்கின்றீர்கள்.

இடையில் வந்த ஆரியர்களால் புகுத்தப்பட்ட ஒரு பண்டிகை என அதற்காக அவர்கள கூறிய கதையை குறிப்பிட்டு எழுதிய பின்னரும் 1500 களில் வந்த ஐரோப்பியர்களால் கொண்டு வரப்பட்ட ஏனைய பண்டிகைகள கொண்டாடுவது போன்று இதையும் கொண்டாடுவதாக திருப்பி திருப்பி எழுதுகின்றீர்கள்... நீங்கள் குறிப்பிட்ட பண்டிகைகள் போன்று தான் சித்திரை புத்தாண்டு, அது தமிழ் புத்தாண்டு இல்லை என கூறுவதை வசதியாக கவனிக்காத மறுக்கின்றீர்கள்.

நாம் சித்திரை புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என ஏற்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள். நாம் சொல்லாத விடயங்களை சொல்லியதாக திருப்பி திருப்பி எழுதுவதன் மூலம் ஆரியர்களால் புகுத்தப்பட்ட இந்து பண்டிகை ஒன்றை தமிழ் புத்தாண்டாக, மதம் சார்ந்த ஒன்றை இனம் சார்ந்த ஒன்றாக நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து கருத்து எழுதுகின்றீர்கள்... இது தான் உங்கள் நோக்கம்.

மன்னிக்கவும், அப்படி ஏற்றுக் கொள்ள முடியாது

நன்றி வணக்கம்.

26 minutes ago, நிழலி said:

உங்கள் நம்பிக்கையில் உங்களுக்கு தெளிவு இல்லை. அதனால் தான் நாம் எழுதாத விடயங்களை எழுதியதாக எழுதுகின்றீர்கள்

தமிழ்ப் புத்தாாாண்டு என்று நாம் கொண்டாடுவதற்்கான விளக்கத்தை ஏற்கனவே நா தந்துவிட்டேன். 

ஐரோப்பியர், மத்திய கிழக்கினர் இன்னும் பிற அந்நியர் தமது மதத்தை ஈழத்தில் திணிக்கும் முனனர் அங்கு வாழ்ந்த நம் முன்னோர்கள் - தமிழர்கள் கொண்டாடிய புத்தாண்டு என்றபடியால் தமிழ்ப் புத்தாண்டு என்று பரவலாக அழைக்கப்படுகிறது என்று சொன்னேன். அக்காலத்தில் இந்துக்கள் , தமிழர் எல்லாம் ஒருவரே. இதனால் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வது தவறல்ல. 

இன்று ஆங்கிலப் புத்தாண்டிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கு சித்திரைப் புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என அழைக்கின்றனர். ஆனால் இது மதம் சார்ந்த பண்டிகையே. 

ஐரோப்பியரின் மதங்களை இங்கு குறிப்பிட வேண்டிய காரணம் மீண்டும் மீண்டும் நீங்கள் ஆரியத் திணிப்பைக் காரணம் காட்டி எழுதியதால் தான்.

துண்டு துண்டாக கருத்துக்களைப் பார்க்காமல், முழுக்கருத்துக்களையும் வாசித்தால் நான் சொன்னது புரிந்திருக்கும். 

On 4/14/2019 at 10:30 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கோயில்களில் மருத்து நீர் வாங்குவது தொடங்கி எல்லாம் அவர்களின் முறைதான். ஆதித் தமிழர்கள்  இயற்கையை வணங்கினார்கள் என்பதுதானே வரலாறு. நான் கோயில்களுக்குச் செல்வதுமில்லை. இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவதுமில்லை.

நிழலி,

மேலே சுமே அக்கா தான்  கொண்டாடுவதிலே என்று கருத்திட்டார். இங்கு தான் நான் ஏன் கொண்டாடுகிறேன் என்ற விளக்கத்தை பல்வேறு விதமாக கூறிப் புரியவைக்க வேண்டி இருந்தது. 

பின்னர் தொடர்ந்த கேள்விகள் நீண்ட காலமாகப் பேணப்பட்ட நம்பிக்கையை புண்படுத்துவதாக இருக்கும்போது - கொண்டாட்டத்தைக் கேள்வி கேட்கும் போது 'வரலாற்்றைை முழுமையாக நோக்கி வரலாற்றுத் தவறுகள் எந்த மதங்கள் இனங்களிலும் உண்டு, இப்போது அவற்றை கிளறினால் முடிவில்லாமல் கேள்விகள் மட்டுமே தொடரும், ஆகவே வீண் கேள்விகளைத் தவிர்த்து கொண்டாடுவோம்' என்று சொன்னேன்.

1 hour ago, நிழலி said:

ஆரியர்களால் புகுத்தப்பட்ட இந்து பண்டிகை ஒன்றை தமிழ் புத்தாண்டாக, மதம் சார்ந்த ஒன்றை இனம் சார்ந்த ஒன்றாக நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து கருத்து எழுதுகின்றீர்கள்... இது தான் உங்கள் நோக்கம்

எனக்கு ஒரு உள்நோக்கமும் இல்லை. நாங்கள் பாரம்பரியமாகக் கொண்டாடி வந்ததைக்  கேள்வி கேட்டீர்கள். அதற்கான பதில் தரப்பட்டுவிட்டது.

நேற்று நான் கேட்ட கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை. 

தவிர, தமிழ்ப்புத்தாண்டு என கொண்டாடுவதை உங்களுக்கு இனிமேல் விளக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கான கடப்பாடு இல்லை. 

ஏற்றுக்கொள்வதும், இல்லாததும் உங்கள் இஷ்டம். நாங்கள் எங்கள் நம்பிக்கையை மாற்றிக்கொள்ள மாட்டோம். அதற்கான அவசியம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இந்துக்களின் பண்டிகையை தமிழ் பண்டிகை என்று அழைப்பது பொருத்தமில்லை என்று சொன்னால் இவ்வளவு மூர்க்கமான எதிர்ப்பா? இந்த எதிர்ப்பின் கீழே இழையோடும் மதவாதம்  தான் நெருட வைக்கிறது. பத்து தலைமுறைக்கு முன்னால் நபர்களின் அடையாளம் என்ன, பெயர்கள் என்ன என்று வேறு கவலைப் படுகிறார்கள்! ஏன் கண் முன்னால் இருக்கும் இந்த தலைமுறையின்/நபரின் அடையாளம் போதாதா? அதுவல்லவா முக்கியமானது?  

அடையாளம் என்பது எது ??? கொஞ்சம் விளக்கமாகக் கூற முடியுமா ????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருசா வருசம் தைவருசம் சித்திரைவருசம் தீபாவளி  வாறமாதிரி யாழ்களத்திலையும் திருப்பித்திருப்பி அரைச்சமாவையே அரைச்சுக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

என்னைப்பொறுத்தவரைக்கும் நான் எல்லா பண்டிகை திருநாட்களையெல்லாம் கொண்டாடுவேன். அதற்காக கோவிலுக்கு போக மாட்டேன்.எனெண்டால் எனக்கு தேவையான சாமிகளை நான் வீட்டிலையே வைச்சிருக்கிறன்.எனக்கு தெரிஞ்ச பாசையிலை கும்புடுறன் வேண்டுறன்.அவ்வளவுதான்.
கோவிலுக்கு போனால் ஐயரை ஒரு தொழிலாளியாக பார்ப்பேன்.அவ்வளவுதான்.மற்றும் படி கோவில் என்பது தியானம் மற்றும் ஆத்ம திருப்தி தரும் இடம். அதை நான் களங்கம் செய்ய மாட்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.