Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை குண்டுவெடிப்பு- இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டது இலங்கை அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை குண்டுவெடிப்பு- இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டது இலங்கை அரசு

A woman grieves in the aftermath of the Easter Sunday bombings in Sri Lanka, 25 April 2019Getty Images

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டுளள்து இலங்கை அரசு. 

இறந்தவர்களின் எண்ணிக்கையை நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது இலங்கை சுகாதார அமைச்சகம். 

கணக்கீட்டு பிழை என இதற்கு காரணம் கூறுகிறது இலங்கை அரசு. 

தற்போதய நிலவரப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 253 என்கிறது இலங்கை சுகாதார அமைச்சகம். 

முன்னதாக இறந்தவர்களின் எண்ணிக்கை 359 என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றது. ஆனால் இதுவரை இந்த தாக்குதலில் அந்த குழு ஈடுபட்டதற்கான நேரடி ஆதாரங்கள் எதையும் அளிக்கவில்லை.

காவல்துறையினர் ஒன்பது தாக்குதலாளிகளில் எட்டு பேரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் வெளிநாட்டினர் யாரும் இல்லை.

''இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்'' என புதன்கிழமையன்று பாதுகாப்பு ராஜீய அமைச்சர் ருவன் விஜயவர்த்தனே தெரிவித்துள்ளார்.

''அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது,'' என்றும் அவர் கூறியுள்ளார்.

''தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பிரிட்டனில் படித்ததாகவும் பின்னர் முதுகலை படிப்பை ஆஸ்திரேலியாவில் படித்து முடித்துவிட்டு இலங்கையில் நிரந்தரமாக குடியேறியதாக அறிகிறோம்'' என்றும் ருவன் தெரிவித்துள்ளார்.

இந்தியா விடுத்திருந்த எச்சரிக்கை உள்பட, இலங்கையில் தாக்குதல்கள் நடப்பதற்கான சாத்தியங்கள் குறித்து பாதுகாப்பு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தாலும், இது குறித்து தமக்கு முன்னரே தெரிவிக்கப்படவில்லை என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இலங்கையில் எதிர்வரும் சில தினங்களுக்குள் பாதுகாப்பு பிரிவில் மாத்திரமன்றி, புலனாய்வு பிரிவிலும் மறுசீரமைப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

தனது ராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, அவர் இன்று அனுப்பி வைத்துள்ளார்.

p0779kg3.jpg
தாக்குதல்தாரியை வெளியே கூட்டி சென்று பலரின் உயிரை காத்த ரமேஷ்

https://www.bbc.com/tamil/sri-lanka-48059424

5 hours ago, கிருபன் said:

இறந்தவர்களின் எண்ணிக்கையை நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது இலங்கை சுகாதார அமைச்சகம். 

கணக்கீட்டு பிழை என இதற்கு காரணம் கூறுகிறது இலங்கை அரசு. 

தற்போதய நிலவரப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 253 என்கிறது இலங்கை சுகாதார அமைச்சகம். 

முன்னதாக இறந்தவர்களின் எண்ணிக்கை 359 என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஒருசிறிய நாடு, திறன்மிக்க நவீன தொடர்பாடல் வசதிகள், அதற்குள் இறந்தவர்கள் எண்ணிக்கையில் 100க் கணக்கில் பிழை. கேவலமாக இல்லை! எண்ணிக்கையில் +2 அல்லது -2 எனின் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இங்கு மிகவும் முக்கியமான ஒரு விடயத்தில் 42% வழு ஏற்பட்டுள்ளது.

ஒரு பொறுப்பற்ற, கையாலாகாத, மிகமிகக் கேவலமான சிங்கள-பௌத்த அரசு மற்றும் அறிவிலிகளினால் நடத்தப்படும் அரச நிர்வாகம் என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்?

இவர்கள் அபிவிருத்தித் திட்டங்களில் செலவை போலியாக அதிகரித்து கொள்ளையடிக்கும் பழக்கத்தை இதிலும் காட்டியுள்ளார்கள். அபிவிருத்தித் திட்டங்களில், 2005 இல் 15% கொள்ளையில் ஆரம்பித்து இப்போது வடக்கு-கிழக்கு அபிவிருத்தித் திட்டங்களில் 66% வரை கொள்ளையடிப்பது உயர்மட்ட சிங்கள-பௌத்த அரச தலைவர்களின் வாடிக்கை.

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்கா கருமப்பீடம் எதையோ நினைத்து இருக்க நடப்பது வேறாக உள்ளது போல் இருக்கு அதையே  இந்த செய்தி உறுதிபடுத்துகிறது இந்த குண்டு வெடிப்பை சாட்டாக வைத்து அனைத்து முக்கிய நாடுகளின் உளவுபிரிவுகளும் சிலோனில் கால் வைத்து உள்ளனர் அவர்கள் வந்த பின் பக்கத்து நாட்டுக்காரரும் விழுந்தடிச்சு கொண்டு வந்து நிக்கினம்(நானும் ரவுடி வடிவேல் போல் ) .எங்களை அழிக்கும்போது சிங்களம் சொல்வதைத்தான் உலகம் நம்பியது இனி அப்படி நடக்காது போல் உள்ளது .  இறுதி தமிழின அழிப்பு யுத்தத்தின் போது பங்களித்த நாடுகளின் உளவுபிரிவுகள்  எல்லாம் இந்த குண்டுவெடிப்பை சாட்டாக வைத்து  தங்கள் வகிபாகத்துக்கு சொரிலன்காவில் வந்து குந்தியிட்டினம் இனி  இலங்கையில் தமிழனுக்கு கிடைக்காத நிம்மதியும் சுபீட்சமும் வேறு எந்த இனத்துக்கும்  கிடைக்க போவதில்லை என்பது தெளிவாகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

 இனி  இலங்கையில் தமிழனுக்கு கிடைக்காத நிம்மதியும் சுபீட்சமும் வேறு எந்த இனத்துக்கும்  கிடைக்க போவதில்லை என்பது தெளிவாகின்றது .

மக்கள் பாவம் தான் ஆனால் விதி யாரை விட்டிச்சு...58 ஆம் ஆண்டே இனப்பிரச்சனையை தீர்த்திருந்தால்  இவ்வளவு ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் சர்வதேச புலனாய்வு திலகங்கள் எல்லாம் உள்ள வ‌ந்திருக்குமா....மாலைதீவு மக்கள் போன்று உலகத்தின் ஓர் மூலையில் ஜாலியா அந்த மக்கள் வாழ்ந்திருப்பார்கள்....

17 hours ago, கிருபன் said:

இறந்தவர்களின் எண்ணிக்கையை நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது இலங்கை சுகாதார அமைச்சகம். 

கணக்கீட்டு பிழை என இதற்கு காரணம் கூறுகிறது இலங்கை அரசு. 

தற்போதய நிலவரப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 253 என்கிறது இலங்கை சுகாதார அமைச்சகம். 

முன்னதாக இறந்தவர்களின் எண்ணிக்கை 359 என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

சொறிலங்கா அரசு கொல்லப்பட்டவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து கூடிய பண உதவி கிடைத்தால் அதை சுருட்டலாம் என்டு கணக்கு போட்டிருப்பினம். அவங்களே நேரடியா களத்தில இறங்கினபடியா போட்ட கணக்கு எல்லாம் பிழைச்சு போட்டுது போல.

தற்கொலை தாக்குதல் பற்றி தகவல் கிடைத்தும் எதையும் அறியாத செயல்திறனுக்கு எழுத்து கூட்ட கூட தெரியாத முட்டாள் சனாதிபதி

அதற்கடுத்தாக அறிந்திருக்க வேண்டிய முதன்மை அமைச்சராக இருந்தும் தனக்கு ஆரும் சொல்லவில்லை என பொறுப்பை தட்டிக் கழிக்கும் பிரதமர்

ஆறு மாசமாக பாதுகாப்பு சபை கூட்டத்திற்கே அழைக்கப்படாது இருந்தும் வெட்கம் கெட்டு அமைச்சராக ஒட்டி கொண்டு இருக்கும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்

இறந்தவர்களின் எண்ணிக்கையை அண்ணளவாகவேனும் கணக்கிடத் தெரியாமல் தாறுமாறாக எண்ணிக்கையை அறிவிக்கும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள்

பெண்ணியம் தொடர்பாக இயங்கும் பெண் எழுத்தாளர் ஒருவரையே தேடப்படும் தற்கொலை கொலையாளி என போற போக்கில் படத்துடன் தகவல் கொடுக்கும் பாதுகாப்பு துறை

இப்படியான அரசு கொண்ட ஒரு தேசம் இவ்வுலகில் வேறு எங்கும் காணக் கிடைக்குமா?

2 minutes ago, நிழலி said:

காவலிகள், பேட்டை ரவுடிகள், கொலைகாரர்கள், போர்க்குற்றவாளிகள், தான் உயர் பதவிகளில். வேற என்னத்தை இவன்களிட்டை எதிர்பார்க்க முடியும். இதுகளோடை தான் சம்பந்தனும் சுமந்திரனும் ஒட்டிக்கொண்டு நிக்கினம்.

முள்ளிவாய்க்காலில் குறைத்தும், கொழும்பில் கூட்டியும் சொல்லி பழகிவிட்டார்கள். இவர்கள் அரச படையின் தாக்குதலில் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கையை கூட்டி சொல்லி சொல்லி பழகி, அதே பழக்கதோஷத்தில் சொல்லிவிடார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

தற்கொலை தாக்குதல் பற்றி தகவல் கிடைத்தும் எதையும் அறியாத செயல்திறனுக்கு எழுத்து கூட்ட கூட தெரியாத முட்டாள் சனாதிபதி

அதற்கடுத்தாக அறிந்திருக்க வேண்டிய முதன்மை அமைச்சராக இருந்தும் தனக்கு ஆரும் சொல்லவில்லை என பொறுப்பை தட்டிக் கழிக்கும் பிரதமர்

ஆறு மாசமாக பாதுகாப்பு சபை கூட்டத்திற்கே அழைக்கப்படாது இருந்தும் வெட்கம் கெட்டு அமைச்சராக ஒட்டி கொண்டு இருக்கும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்

இறந்தவர்களின் எண்ணிக்கையை அண்ணளவாகவேனும் கணக்கிடத் தெரியாமல் தாறுமாறாக எண்ணிக்கையை அறிவிக்கும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள்

பெண்ணியம் தொடர்பாக இயங்கும் பெண் எழுத்தாளர் ஒருவரையே தேடப்படும் தற்கொலை கொலையாளி என போற போக்கில் படத்துடன் தகவல் கொடுக்கும் பாதுகாப்பு துறை

இப்படியான அரசு கொண்ட ஒரு தேசம் இவ்வுலகில் வேறு எங்கும் காணக் கிடைக்குமா?

உயிருடன் இருப்பவரை இறந்துவிட்டார் என நீதிமன்றில அறிவிக்கும் பொலிஸ் 

இலங்கை அரசுக்கு தெரிந்தும் ஏன் தடுக்கவில்லை என்பதை உலகமே பல்வேறுவிதமாக கேள்விகேட்கின்றது. இந்தக் கேள்விக்கான பதிலை தமிழர் தரப்புத் தான் முன்வைக்க முனையவேணும் ஆனால் சிங்கள பேரினவாதம் குழப்பியடிப்பதுக்கு ஏற்றாற்போல் நாம் தலையாட்டுகின்றோம். இப்பயங்கரவாதம் சிங்கள பேரினவாதமும் இஸ்லாமிய தீவிரவாதமும் இணைந்து நடத்தியது. இலங்கை ராணுவத்துடன் இணைந்து முஸ்லீம் ஊர்காவல்படை கிழக்கில் நடத்திய தமினப்படுகொலைகள் தமிழர்கள் நன்கு அறிவார்கள், இலங்கைப் புலனாய்வுத்துறையில் இவர்களின் பங்கு என்ன மகிந்த கோத்தவின் ஆதரவில் இவர்கள் இயங்கியதை அவர்களே சொல்கின்றார்கள். நவாலித் தேவாலயத்தில் சிங்கள பேரினவாதம் கொன்று குவித்ததும் தமிழர்களுக்கு தெரியும். இருந்தும் நாம்  இதை இஸ்லாமிய தீவிரவாதமாகவும் பேரினவாதம் தடுக்கத் தவறிவிட்டதாகவுமே அணுகுகின்றோம்.  தாக்குதலுக்கான காரணத்தை பொறுத்தவரை  தற்கொலைதாரிகள் படத்துடன் மைத்திரி கோத்தா பாதுகாப்புத்துறை அதிகாரிகள் படமும் இணைக்கப்பட்டு கடந்த காலத்தில் சிங்களம் செய்த பயங்கரவாத படுகொலைகளும் முன்வைக்கப்படுவது தான் சரியான அணுகுமுறை. இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளுக்கும் சரி தேவாலயத்தில் கோயில் தேர் திருவிழக்களில் ஒன்று கூடும் சனத்துக்கும் சரி சிங்கள அரசு இவ்வாறான பயங்கரங்களில் இருந்து தம்மை பாதுகாக்கும் என்ற பொய்யான நம்பிக்கையை கொடுக்க முயலக் கூடாது. ஆனால் இவ்வாறன எந்த அணுகுமுறையும் காணொளிகளும் கருத்துப் படங்களும் தமிழ் ஊடகங்களில் இல்லை. சர்வதே ஊடகங்களே இலங்கை அரசின் மீது சந்தேகம் எழுப்புகின்றது. எம்மிடம் வரலாறும சாட்சிகளும் இருக்கின்றது ஆனால் முன்வைப்பதில்லை. ஒரு பயங்கரத்தை இந்திய இலங்கை புலனாய்வுத்துறைகளால் தமக்கு சாதகமான திசையில் அரங்கேற்றி அந்த திசையில் தமக்கு வேண்டிய படி அரசியல் ரீதியாக பயணிக்க முடிகின்றது. இதை வெளிப்படுத்தக் கூட எம்மிடம் திறன் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

தற்கொலை தாக்குதல் பற்றி தகவல் கிடைத்தும் எதையும் அறியாத செயல்திறனுக்கு எழுத்து கூட்ட கூட தெரியாத முட்டாள் சனாதிபதி

அதற்கடுத்தாக அறிந்திருக்க வேண்டிய முதன்மை அமைச்சராக இருந்தும் தனக்கு ஆரும் சொல்லவில்லை என பொறுப்பை தட்டிக் கழிக்கும் பிரதமர்

ஆறு மாசமாக பாதுகாப்பு சபை கூட்டத்திற்கே அழைக்கப்படாது இருந்தும் வெட்கம் கெட்டு அமைச்சராக ஒட்டி கொண்டு இருக்கும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்

இறந்தவர்களின் எண்ணிக்கையை அண்ணளவாகவேனும் கணக்கிடத் தெரியாமல் தாறுமாறாக எண்ணிக்கையை அறிவிக்கும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள்

பெண்ணியம் தொடர்பாக இயங்கும் பெண் எழுத்தாளர் ஒருவரையே தேடப்படும் தற்கொலை கொலையாளி என போற போக்கில் படத்துடன் தகவல் கொடுக்கும் பாதுகாப்பு துறை

இப்படியான அரசு கொண்ட ஒரு தேசம் இவ்வுலகில் வேறு எங்கும் காணக் கிடைக்குமா?

இலங்கையின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சு மைத்திரியிடம் இல்லையா?????

பல பேர் உடல் சிதறி இருந்திருப்பார்கள்...அவர்களது கை,கால்களை வைத்து கணக்கெடுக்கும் போது பிழை விட்டு இருக்க கூடும்...இதற்கு முன்னர் இப்படி கொத்து,கொத்தாய் தமிழர்கள் கொல்ல பட்டாலும் கணக்கெடுக்க வேண்டிய தேவை சிங்களத்திற்கு இருக்கவில்லை....இது முதல் தடவை என்ற படியால் கஷ்டபட்டு இருக்க கூடும்.

இலங்கை உளவுத் துறை,போலீஸ் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் மகிந்தவின் ஆட்களாய் இருக்க கூடும்... சம்பவம் இவ்வளவு பாரதூரமாய் இருக்கும் என எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள்...இந்த குண்டு வெடிப்பை சாட்டாய் வைத்து மைத்திரிரியையும்,ராணியையும் ஆட்டம் காண வைக்கலாம் என்று யோசித்து இருப்பார்கள்...அதனால் தகவலை அப்படியே அமுக்கி இருப்பார்கள்...ரணிலுக்கோ அல்லது மைத்திரிக்கோ இந்த விசயம் முதலில் தெரிந்திருந்தால் தங்கட பதவியை தக்க வைப்பதற்காவாவது நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.

இலங்கை பூரா போதைப் பொருள் பாவனை கொடி கட்டி பறக்குது...சிங்கப்பூயூரில் பிடிபட்ட தலைவன் ஒரு முஸ்லீம்...மைத்திரி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை கொடுத்தே தீருவன் என்று நிக்கிறார்...பல நாடுகள் மரண தண்டனை வேண்டாம் என்று சொல்கின்றன...இந்த குண்டு வெடிப்பு நிகழும் போது மைத்திரி சிங்கப்பூரில் நின்றார்...கூட்டிக் கழித்து பாருங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

சொறிலங்கா கருமப்பீடம் எதையோ நினைத்து இருக்க நடப்பது வேறாக உள்ளது போல் இருக்கு அதையே  இந்த செய்தி உறுதிபடுத்துகிறது இந்த குண்டு வெடிப்பை சாட்டாக வைத்து அனைத்து முக்கிய நாடுகளின் உளவுபிரிவுகளும் சிலோனில் கால் வைத்து உள்ளனர் அவர்கள் வந்த பின் பக்கத்து நாட்டுக்காரரும் விழுந்தடிச்சு கொண்டு வந்து நிக்கினம்(நானும் ரவுடி வடிவேல் போல் ) .எங்களை அழிக்கும்போது சிங்களம் சொல்வதைத்தான் உலகம் நம்பியது இனி அப்படி நடக்காது போல் உள்ளது .  இறுதி தமிழின அழிப்பு யுத்தத்தின் போது பங்களித்த நாடுகளின் உளவுபிரிவுகள்  எல்லாம் இந்த குண்டுவெடிப்பை சாட்டாக வைத்து  தங்கள் வகிபாகத்துக்கு சொரிலன்காவில் வந்து குந்தியிட்டினம் இனி  இலங்கையில் தமிழனுக்கு கிடைக்காத நிம்மதியும் சுபீட்சமும் வேறு எந்த இனத்துக்கும்  கிடைக்க போவதில்லை என்பது தெளிவாகின்றது .

roflphotos-dot-com-photo-comments-20190330154625.jpg

தமிழீழத்துக்கும், ஸ்ரீலங்காவிக்கும் நடந்த...  உள் வீட்டு பிரச்சினையை தீர்க்க,
11 நாடுகளை... வெளிப்படையாகவும், மறைமுகமாக உதவி செய்த,  24 அரபு நாடுகளையும்,
சிவப்புக் கம்பளம் விரித்து,  உள்ளே... அனுமதித்து விட்டு,
சொறிலங்கா.... "குய்யோ... முறையோ...."  என்று கதறி பிரயோசனமில்லை.  

நீதி:  "நீ... எதை,  விதைக்கிறாயோ... அதை, அறுவடை செய்யும், காலம் இது" 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.