Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்

maithripala-300x200.jpgஎவ்பிஐ உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, தீவிரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு இயல்பு நிலை மீளக் கொண்டு வரப்படும்.

தேர்தல்களைப் பிற்போட முடியாது. எனவே, தேர்தல்களுக்கு முன்னதாக, உறுதியான நிலையை நான் ஏற்படுத்துவேன். தீவிரவாதத்தை இல்லாமல் ஒழிப்பேன்.

தீவிரவாத அமைப்புகளின் செயற்பாட்டு நிலையில் உள்ள உறுப்பினர்களை நாம் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளோம். அவர்கள் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய இன்னும் 25 தொடக்கம் 30 வரையான செயற்பாட்டு நிலை உறுப்பினர்களே வெளியில் உள்ளனர். ஆனால் அவர்கள் தற்கொலைக் குண்டுதாரிகளா என்பது உறுதியாகவில்லை.

இந்த தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்பு தொடர்புபட்டுள்ளது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. குண்டுவெடிப்புகளுக்கு அந்த அமைப்பு உரிமை கோரியிருக்கிறது.

அமெரிக்காவின் எவ்பிஐ மற்றும் அனைத்துலக காவல்துறை உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் சிறிலங்காவின் விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர்.

இது சிறிலங்காவுக்கு மாத்திரமான பிரச்சினை அல்ல. இது ஒரு பூகோள தீவிரவாத அமைப்பு.

அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மனி, இந்தியா, அவுஸ்ரேலியா போன்ற முன்னேறிய நாடுகளால் கூட, ஐஎஸ் அமைப்பின் தீவிரவாதத்தை முற்றிலுமாக அழிக்க முடியாதுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றி முன்னரே அறிந்திருந்தால், பொருத்தமான நடவடிக்கையை எடுத்திருப்பேன். வெளிநாட்டுக்கு சென்றிருக்கமாட்டேன்.

இந்த தாக்குதல் நாட்டின் பொருளாதாரத்துக்கு பேரிடியாகும். சுற்றுலாத்துறையை பெரிதும் பாதித்துள்ளது.

பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு, சுற்றுலாத்துறை மீண்டும் தாக்குதல்களுக்கு முன்னர் இருந்தது போன்ற நிலைக்குத் திரும்ப வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/05/06/news/37823

  • Replies 76
  • Views 7.4k
  • Created
  • Last Reply

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் மற்றும் சர்வதேச நாடுகளின் வேண்டுகோளின் அடிப்படையில் சிங்கள இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டர்வர்களையும் பற்றிய விசாரணைகளுக்கு சர்வதேச உதவிகளை முற்றாக தடை செய்தது  சிங்கள அரசு. 

ஆனால், ஐ,எஸ் என்ற சர்வதேச பயங்கரவாத தாக்குதலில் சர்வதேச அனுதாபத்தை பெறவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது போல தெரிகின்றது. 

தமிழக, தமிழீழ மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் வேண்டுதல்கள் போராட்டங்களை ஏற்காத சிங்களம் இந்த விடயத்தில் சர்வேதேச உதவியை நாடியுள்ளது இவர்கள் படுகொலைகளை செய்ததை ஏற்றுக்கொண்டதாகவே அமைந்துள்ளது.  

14 hours ago, nunavilan said:

 

இந்த தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்பு தொடர்புபட்டுள்ளது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. குண்டுவெடிப்புகளுக்கு அந்த அமைப்பு உரிமை கோரியிருக்கிறது.

இது சிறிலங்காவுக்கு மாத்திரமான பிரச்சினை அல்ல. இது ஒரு பூகோள தீவிரவாத அமைப்பு.

அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மனி, இந்தியா, அவுஸ்ரேலியா போன்ற முன்னேறிய நாடுகளால் கூட, ஐஎஸ் அமைப்பின் தீவிரவாதத்தை முற்றிலுமாக அழிக்க முடியாதுள்ளது.

US டை CIA தானே முக்கியமா ISIS ஐ உருவாக்கியது, பயிற்சி வழங்கியது, ஆயுதம் வழங்கியது. (வேறுபல நாடுகளின் பங்களிப்பும் இருந்தாலும்)

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Lara said:

US டை CIA தானே முக்கியமா ISIS ஐ உருவாக்கியது, பயிற்சி வழங்கியது, ஆயுதம் வழங்கியது. (வேறுபல நாடுகளின் பங்களிப்பும் இருந்தாலும்)

மிகத்தவறான கருத்து. ஐஸிஸின் உருவாக்கத்திற்கும் அமெரிக்காவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

4 minutes ago, ரஞ்சித் said:

மிகத்தவறான கருத்து. ஐஸிஸின் உருவாக்கத்திற்கும் அமெரிக்காவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அமெரிக்கா தான் உருவாக்கியது. சவுதி, இஸ்ரேல் மற்றும் சில நாடுகளும் ISIS இற்கு ஆதரவு கொடுத்தார்கள். 

Donald Trump கூட ISIS ஐ உருவாக்கியது அமெரிக்கா என கூறி அதை democrats க்கு எதிரான பிரச்சாரமாக பாவித்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, ரஞ்சித் said:

மிகத்தவறான கருத்து. ஐஸிஸின் உருவாக்கத்திற்கும் அமெரிக்காவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

உங்கள் மறுதலிப்பிற்கு தகுந்த ஆதாரங்கள் தர முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி தலிபான்களை அமெரிக்கா உருவாக்கியதோ.. அதேபோல் ஒரு தேவைக்குத்தான் ஐ எஸ்.. அல் குவைடா எல்லாத்தையும் உருவாக்கினார்கள். அவர்களின் தேவைக்குப் பயன்படுத்திட்டு கடைசியில் கொன்றழிப்பது தான் அமெரிக்காவின் கொள்கையே. கொன்றழிக்க முதலே.. தலிபான்களும்... அல் குவைடாவும்.. ஐ எஸ்ஸூம் அமெரிக்காவை எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். வேற வழியில்லாமல்.. அவர்களோடு மோதி அழிஞ்சது தான் மிச்சம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ampanai said:

ஐ,எஸ் என்ற சர்வதேச பயங்கரவாத தாக்குதலில் சர்வதேச அனுதாபத்தை பெறவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது போல தெரிகின்றது. 

உலகத்திலையே   சிங்களம் வைச்சிருக்கிற அனுதாப புள்ளி எக்கச்சக்கம். சுனாமி, உள்நாட்டு போர் ,வறுமை ,வரட்சி அது இது எண்டு ரொப்பிலை நிக்குது....

சிங்கள சிறிலங்கா இன்றல்ல அன்று தொடக்கமே சர்வதேசத்தின் மானியங்கள் நன்கொடைகளால்  சீவிக்கும் நாடு.
ஒரு பக்கம் சீனத்து வெள்ளைப்பச்சையரிசி
இன்னொருபக்கம் இந்திய மைசூர்பருப்பு...கொத்தமல்லி
அடுத்தது  அமெரிக்க மக்களின் நன்கொடையாம் எங்டை கூப்பன் மா.......பள்ளிக்கூடத்திலை குடுக்கிற விசுக்கோத்து
சுவீஸ்,சுவீடன்,நோர்வே குடுக்கிற பால்மா நன்கொடைகள்..
 ஏன் எல்லாத்தையும் பேசுவான்......மாலைதீவே மானிய விலையிலைதான் கருவாட்டை கருவாடு விலையிலை சிறிலங்காவுக்கு சப்ளை பண்ணுதாம்..😎

யாவும் கற்பனையே.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

உங்கள் மறுதலிப்பிற்கு தகுந்த ஆதாரங்கள் தர முடியுமா?

அமெரிக்காவினால் ஐ ஸிஸ் உருவாக்கப்பட்டதென்பதற்கான ஆதாரங்களை நீங்கள் முன்வைக்குமிடத்து நிச்சயமாக என்னால் அப்படியில்லை என்பதற்கான சான்றுகளை முன்வைக்க முடியும்.

Just now, ரஞ்சித் said:

அமெரிக்காவினால் ஐ ஸிஸ் உருவாக்கப்பட்டதென்பதற்கான ஆதாரங்களை நீங்கள் முன்வைக்குமிடத்து நிச்சயமாக என்னால் அப்படியில்லை என்பதற்கான சான்றுகளை முன்வைக்க முடியும்.

CIA தான் ISIS ஐ உருவாக்கியது, நிதியுதவி வழங்கியது என்று விக்கிலீக்ஸிலேயே வெளிவந்தது. 

தவிர ரஷ்ய ஜனாதிபதி புடின் கூட கூறியிருந்தார் ISIS ஐ உருவாக்கியது அமெரிக்கா என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, ரஞ்சித் said:

அமெரிக்காவினால் ஐ ஸிஸ் உருவாக்கப்பட்டதென்பதற்கான ஆதாரங்களை நீங்கள் முன்வைக்குமிடத்து நிச்சயமாக என்னால் அப்படியில்லை என்பதற்கான சான்றுகளை முன்வைக்க முடியும்.

இது ஆதாரமல்ல கேள்வி மட்டுமே?

ஐ எஸ் தாக்குதல் நடத்துமிடமெல்லாம் சில மணித்தியால இடை வெளிகளில் அமெரிக்க உளவுத்துறைகள் அங்கே நிற்பதன் மர்மம் என்ன?

ஐ எஸ் ஏன் முஸ்லீம்களை அதிகமாக கொன்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரஞ்சித் said:

அமெரிக்காவினால் ஐ ஸிஸ் உருவாக்கப்பட்டதென்பதற்கான ஆதாரங்களை நீங்கள் முன்வைக்குமிடத்து நிச்சயமாக என்னால் அப்படியில்லை என்பதற்கான சான்றுகளை முன்வைக்க முடியும்.

See the source image

See the source image

See the source image

See the source image

See the source image

 

See the source image

 

இந்த படங்கள் ஐஸ்ஸ் தீவிரவாதிகள் அமைத்த 
இஸ்லாமிய நாட்டில் எடுக்கப்படடவை 
இவை மட்டுமல்ல நீங்கள் எந்த படத்தை பார்த்தாலும் 
எல்லா படங்களிலும் ஒரு ஒற்றுமை உண்டு ..
அது என்ன எனப்து உங்களுக்கு உடனேயே தெரியும் ...
அது அவர்களுக்கு இப்படி இவை ஆயிரகணக்கில் கிடைத்தன என்ற கேள்விக்கு 
உங்களுக்கு வர கூடிய எண்ணங்களை இங்கே பதிவிட முடியுமா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

🤣        🤣         🤣

https://www.globalresearch.ca/did-john-mccain-meet-with-abu-bakral-baghdadi-the-alleged-head-of-the-islamic-state-isis-isil-daesh/5498177

3 hours ago, ரஞ்சித் said:

மிகத்தவறான கருத்து. ஐஸிஸின் உருவாக்கத்திற்கும் அமெரிக்காவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

 

2 hours ago, ரஞ்சித் said:

அமெரிக்காவினால் ஐ ஸிஸ் உருவாக்கப்பட்டதென்பதற்கான ஆதாரங்களை நீங்கள் முன்வைக்குமிடத்து நிச்சயமாக என்னால் அப்படியில்லை என்பதற்கான சான்றுகளை முன்வைக்க முடியும்.

 

இவைகள் எல்லாம் தர்க்கம் செய்ய முடியாத விசயங்கள். எம்மால் எதையும் நிருபிக்க முடியாது. இன்று நீங்கள் இல்லை என்பதை பதினைந்து வருடங்களுக்கு பிறகு அவர்களே சொல்வார்கள் நாங்கள் ஐஎஸ் சை வளர்த்தோம் பாவித்தோம் என்று. 

ஈழப்போராளி இயக்கங்களை ஒரு காலத்தில் இந்தியா வளர்த்தது பின்னர் அழித்தது. இந்தியாவும் இலங்கையும் நட்பாகவே இருக்கின்றார்கள்.எமது கதி என்ன ? மிக இறுக்கமான மதக் கோட்பாடுகளை கொண்ட சவுதியும் அமரிக்காவும் நட்பாகவே இருக்கின்றார்கள்.  

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

See the source image

See the source image

See the source image

See the source image

See the source image

 

See the source image

 

இந்த படங்கள் ஐஸ்ஸ் தீவிரவாதிகள் அமைத்த 
இஸ்லாமிய நாட்டில் எடுக்கப்படடவை 
இவை மட்டுமல்ல நீங்கள் எந்த படத்தை பார்த்தாலும் 
எல்லா படங்களிலும் ஒரு ஒற்றுமை உண்டு ..
அது என்ன எனப்து உங்களுக்கு உடனேயே தெரியும் ...
அது அவர்களுக்கு இப்படி இவை ஆயிரகணக்கில் கிடைத்தன என்ற கேள்விக்கு 
உங்களுக்கு வர கூடிய எண்ணங்களை இங்கே பதிவிட முடியுமா? 

மருதங்கேணி..... நீங்கள் இணைத்த படங்களில், 
எல்லா இடங்களிலும்,  ஐஸ்ஸ்  தீவிரவாதிகள்... "ரொயோட்டா" வாகனங்களை பயன் படுத்துகிறார்கள்.
ஆனால்...  "ரொயோட்டா" வாகனங்கள், ஜப்பான் தயாரிப்பு அல்லவா?   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மருதங்கேணி..... நீங்கள் இணைத்த படங்களில், 
எல்லா இடங்களிலும்,  ஐஸ்ஸ்  தீவிரவாதிகள்... "ரொயோட்டா" வாகனங்களை பயன் படுத்துகிறார்கள்.
ஆனால்...  "ரொயோட்டா" வாகனங்கள், ஜப்பான் தயாரிப்பு அல்லவா?   

Image result for bmw SUV assembly plant

உங்களுக்கும் இவை இங்கிருந்துதான் வருகின்றது 
மெர்ஸெடெஸ்  பிஎம் SUV  கள் இங்குதான் அமெரிக்காவில்தான் அசெம்பிளி செய்கிறார்கள் 
காரணம் அதிகளவிலான விற்பனை இங்குதான் 

டொயோட்டா பிக்கப் இங்குதான் அசெம்பிளி செய்கிறார்கள் 
ஐஸ்ஸ் இடம் இருந்தது எல்லாம் புத்தம் புதிய டொயோட்டா பிக்கப் கள் 
இங்கு இருந்து இராணுவ தளபாடங்களுடன் ஈராக் சென்று பின்பு அவர்கள் கைகளுக்கு 
யாருக்கும் தெரியாமல் கிடைத்து இருக்கிறது. 

இஸ்லாமிய ஸ்டேட் என்ற பகுதியின் முழு வருமானமும் எண்ணை விற்ப்பனையால் 
வந்தது தங்கம் என்றாலும் பாக்கில் வைத்து கொண்டு போகலாம் அவ்வளவு 
எண்ணையும் எப்படி போனது? யார் வாங்கினார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

நான் எனக்குத் தெரிந்ததை எழுதுவதால் மட்டும் எதுவுமே மாறிவிடப்போவதில்லை. நீங்கள் உண்மையென்று நம்புபவற்றை நான் மறுக்கவில்லை. அது உங்களின் கருத்தும், விளக்கமும். இது தொடர்பாக எனக்கு வேறுவிதமான விளக்கங்கள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது எனது நோக்கமல்ல. 

உண்மையாகவே உங்களுக்கு இதுபற்றி அறியவேண்டுமென்றால் எழுதுகிறேன். உங்களுடன் வாதாடும் நோக்கம் எதுவுமில்லை.

நான் எழுதுவதாலோ, எழுதாமல் விடுவதாலோ எந்தத் துரும்பும் அசைக்கப்படப் போவதில்லை. நடக்கும் எவையும் எம்மாலோ எமது எண்ணங்களாலோ மாறப்போவது கிடையாது.

34 minutes ago, ரஞ்சித் said:

நான் எனக்குத் தெரிந்ததை எழுதுவதால் மட்டும் எதுவுமே மாறிவிடப்போவதில்லை. நீங்கள் உண்மையென்று நம்புபவற்றை நான் மறுக்கவில்லை. அது உங்களின் கருத்தும், விளக்கமும். இது தொடர்பாக எனக்கு வேறுவிதமான விளக்கங்கள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது எனது நோக்கமல்ல. 

உண்மையாகவே உங்களுக்கு இதுபற்றி அறியவேண்டுமென்றால் எழுதுகிறேன். உங்களுடன் வாதாடும் நோக்கம் எதுவுமில்லை.

நான் எழுதுவதாலோ, எழுதாமல் விடுவதாலோ எந்தத் துரும்பும் அசைக்கப்படப் போவதில்லை. நடக்கும் எவையும் எம்மாலோ எமது எண்ணங்களாலோ மாறப்போவது கிடையாது.

எழுத நினைப்பதை எழுதுங்கள்.

NWO பற்றி எழுதுவதானால் அதற்கும் CIA இற்குமுள்ள தொடர்பை மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்த்தானில் சோவியத் துருப்புக்கள் நஜிபுள்ளா அரசுக்கு ஆதரவாகக் களமிறங்கியபோது, அமெரிக்காவின் சி. ஐ. ஏ, கம்மியூனிசுகளை எதிர்க்கிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு 1979 இல் முஜஹிதீன்கள் எனப்படும் ஆப்கானிஸ்த்தானின் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்தது. 

எமது ஆயுதப் போராட்ட இயக்கங்களைப்போலவே, ஆப்கானிஸ்த்தானிலும் பல இயக்கங்கள் சோவியத் ஆக்கிரமிப்பிற்கெதிராக போரிட்டன. இக்குழுக்களுக்கு அமெரிக்கா பணம், ஆயுதம், பயிற்சி, சர்வதேசப் பிரச்சாரம் என்று பெருமளவில் உதவிசெய்தது. அவ்வப்போது அமெரிக்க ராணுவ நிபுணர்கள் கூட முஜாஹிதீன்களுடன் சேர்ந்து சோவியத் ராணுவத்திற்கெதிராகப் போரிட்டிருக்கிறார்கள். சோவியத்தை எதிர்த்து நடந்த போரில் பங்களிக்கவென, அரபு நாடுகளில் இருந்துகூட முஸ்லீம் அடிப்படைவாதிகள் ஆப்கானிஸ்த்தானுக்குள் நுழைந்திருந்தார்கள். அவ்வாறு நுழைந்தவர்களில் ஒருவர்தான் ஒசாமா பின்லாடன். மற்றைய குழுக்களுக்கான பயிற்சி, ஆயுத, பண உதவிபோன்றே ஒசாமாவின் குழுவுக்கும் அமெரிக்க உதவிகள் கிடைக்கப்பெற்றன.  ஒசாமா அப்போது அல்கொயிடா எனும் அமைப்பை ஆரம்பிக்கவுமில்லை, அமெரிக்காவிற்கெதிரான தாக்குதல்களைத் தொடங்கவுமில்லை, ஆனால் முஸ்லீம்களின் உண்மையான போர் அமெரிக்காவுடந்தான் நடக்கும் என்று அன்றே ஒசாமா சொன்னதாகப் பதிவுகள் இருக்கின்றன. 

சோவியத்துக்கு எதிரான போரென்பதால், யாருக்குக் கொடுக்கிறோம் என்று நின்று நிதானித்துப் பார்க்கும் அவசியம் கூட அன்று அமெரிக்காவிற்கு இருந்திருக்காது. ஆனால், 1989 இல் கொர்பச்சேவ் தனது துருப்புக்களை வாபஸ் வாங்கியபோது, அமெரிக்காவும் போட்டதைப் போட்டுவிட்டு, ஆப்கானிஸ்தானிலிருந்து மூட்டைகட்டி வெளியேறியது. 

சோவியத் ராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து, நஜிபுள்ளா அரசை சில மாதகாலங்களிலேயே தோற்கடித்து முஜஹிதீன்கள் நாட்டைக் கைப்பற்றினார்கள். தலைநகர் காபூலும் அதனுடன் இணைந்த சில பகுதிகளும் அஹமட் ஷா மசூத் தலைமையிலான வடக்கு முன்னணியினால் ஆளப்பட ஏனைய பகுதிகளை குல்புடீன் ஹெக்மட்யார் மற்றும் ஜெனரல் அப்துல் ரஷீத் தோஸ்த்தம் தலைமியிலான படைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தன. சகோதரச் சண்டைகளால் ஆப்கானிஸ்த்தான் அழிந்க்கப்பட்டு குட்டிச்சுவராகிக்கொண்டிருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்த்திரமான ஆப்கானிஸ்த்தான் தனக்கு எப்போதுமே சவாலாக இருக்கும் என்று கருதிய அண்டை நாடான பாக்கிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தானைத் கொடர்ந்தும் கொதிநிலையில் வைத்திருக்க இயக்க மோதல்களை ஊக்குவித்தது. மேற்கு நாடுகளின் செல்லபிள்ளையான வடக்கு முன்னணி அஹமட் ஷா மசூத்திற்கெதிராக குல்புடீன் ஹெக்மட்யார் போன்ற எதிர்ப்புக் குழுக்களை களமிறக்கி காபூலைக் கைப்பற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியடையவே, ஆப்கானிஸ்த்தானிலிருந்து லட்சக்கணக்கில் அகதிகளாக வெளியேறி பாக்கிஸ்த்தானில் தஞ்சமடைந்திருந்த அகதிகளில் தேர்ந்தெடுத்து ராணுவப் பயிற்சியும், ஆயுதங்களும் கொடுத்து ஆப்கானிஸ்த்தானுக்குள் அனுப்பிவிடலாம் என்று அப்போதிருந்த பாக்கிஸ்த்தான் ராணுவத் தளபதி பெர்வேஷ் முஷாராப்பும் உளவுப்பிரிவான ஐ. எஸ் ஐ யும் முடிவெடுத்து உருவாக்கியதே தலிபான் எனப்படும் அடிப்படைவாத இஸ்லாமிய ராணுவ அமைப்பு. 

தலிபான்கள் பாக்கிஸ்த்தானினால் முற்று முழுதாக உருவாக்கப்பட்டவர்களேயன்றி அமெரிக்காவினால் அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

பெருமளவு ஆள்ப்பலத்தோடும், பாக்கிஸ்த்தானின் ஆயுத பலத்தோடும் உள்நுழைந்த தலிபான்களை தமக்குள் போரிட்டு பலவீனப்பட்டிருந்த முஜஹிதீன்களால் எதிர்கொள்ள முடியவில்லை. அதன் விளைவு, சில மாத காலங்களிலேயே வடக்கு முன்னணி வசமிருந்த சில பகுதிகளைத் தவிர, சுமார் 90% ஆன ஆப்கானிஸ்த்தானை தனது கட்டுப்பாட்டிற்குள் தலிபான் கொண்டுவந்தது. 

ஆப்கானிஸ்த்தானில் தலிபான்கள்  தமது இருப்பை பலப்படுத்திக்கொண்டிருந்தவேளையில்த்தான், அல்கொயிடா அமைப்புப் பற்றிய செய்திகள் முதலில் வெளிவரத்தொடங்கின. யெமெனில் நடந்த அமெரிக்கக் கடற்படைக் கப்பல் மீதான தற்கொலைத் தாக்குதல், தன்சானியா, கென்யா ஆகிய நாடுகளில் அமெரிக்க தூதுவரலாயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்தே அல்கொயிடா எனும் அமைப்பொன்று பலமாக இயங்குவதையும், அது அமெரிக்க நலன்களுக்கெதிரானதென்பதையும் அமெரிக்கா புரிந்துகொண்டது. 

ஆக, அல்கொயிடா அமைப்பென்பது அமெரிக்காவிற்கெதிராக ஒசாமாவினால் உருவாக்கப்பட்டதேயன்றி, அமெரிக்காவினால் அல்ல. இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒரே விடயம், ஒசாமா ஆப்கானிஸ்த்தானில் சோவியத் துருப்புக்களுக்கெதிராகப் போராடியபோது அமெரிக்காவின் உதவிகளைப் பெற்றுக்கொண்டார் என்பதுடன், அமெரிக்காவிற்கும் அவருக்குமிடையிலான தொடர்பு முற்றுப்பெற்றுவிடுகிறது. 

இதன் தொடர்ச்சியாக, ஒசாமாவின் அல்கொயிடா அமெரிக்காவின் ரெட்டைக் கோபுரங்களைத் தாக்கியபோது, அமெரிக்கா அல்கொயிடாவைத் தேடி வேட்டையாடத் தொடங்கியது. தனக்கு மிகவும் பரீச்சயமானதும், எதிரிகளால் உட்புக முடியாத இயற்கை அரண்களான மலைத்தொடர்களையும் கொண்ட ஆப்கானிஸ்த்தானின் வானாந்தரங்களுக்குள் ஒசாமா தலிபான்களின் துணையுடன் அடைக்கலமாக, அமெரிக்கா ஒசாமாவைத் தேடிக்கொண்டு ஆப்கானிஸ்த்தானுக்குள் மீண்டும் நுழைந்தது.

இதேவேளை, ஒசாமாவிற்கு ஈராக்கின் சதாம் உதவிவருகிறார் என்றும், பெரும் நாசகார ஆயுதங்களைத் தயாரித்து வருகிறார் என்று பொய்க்கதைகளைப் புரட்டிக்கொண்டு, ஐ. நா வின் எச்சரிக்கையையும் மீறித் தனது இரண்டாவது போர்க்களத்தை ஈராக்கில் அமெரிக்கப்படை திறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தலைமையிலான படைகளின் மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத ஈராக்கின் ராணுவ சிதறியோட, சில காலங்க்களிலேயே ஈராக்கைத் தனது பூரண கட்டுப்பாட்டிற்குள் அமெரிக்கா கொண்டுவந்தது. சுன்னி இனமான சதாமின் ஆதரவாளர்களும், ராணுவ அதிகாரிகளும் ஓரங்கட்டஒப்பட்டு, சியா இனத்தவர்களை முன்னிறுத்தி பொம்மை அரசொன்றை ஈராக்கில் நிறுவினார்கள். 

சதாமின் பாத் கட்சி உறுப்பினர்கள், உளவுத்துறை அதிகாரிகள், பல்லாயிரம் ராணுவ வீரர்கள் என்று சுன்னி இன மக்கள் ஓரங்கட்டப்பட அமெரிக்காவுக்கும், சியாவுக்குமெதிரான பகையுணர்வு இந்த சுன்னி ராணுவ அதிகாரிகளிடையே எழத் தொடங்கியது. 

இதே காலப்பகுதியில் ஈராக் பக்தாத் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய சமயத்தில் தேர்ச்சிபெற்று விளங்கிய அபு பக்கர் அல் பக்டாடி எனப்படும் சுன்னியின சமய விற்பன்னர் ஒருவரும் அமெரிக்க ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு இன்னும் பல்லாயிரக்கணக்கான சதாம் ஆதரவு சுன்னியின ராணுவ வீரர்களுடன் சிறைகளில் அடைக்கப்பட்டார். சில வருடங்களில், தந்து நன்னடத்தை மூலம் அமெரிக்க அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்ற பக்டாடி சிறையில் ராணுவக் கைதிகளுக்கு இஸ்லாமிய சமய வகுப்புகளை எடுக்க அனுமதிக்கப்பட்டார். ஆனால், அமெரிக்க அதிகாரிகள் அச்மந்தப் போக்கினால் இவரைக் கவனியாது விட்டுவிட, இஸ்லாமிய அடைப்படைவாதத்தை இவர் சிறைக்குள் பரப்பத் தொடங்கினார். இதுவரை காலமும் தமக்குள் எரிந்துகொண்டிருந்த அமெரிக்க எதிர்ப்பு - சியா எதிப்புணர்வை சதாமின் முன்னாள் ராணுவ அதிகாரிகளும், உளவுப்பிரிவும் பக்டாடி மூலம் வெளிக்கொணரத் தொடங்கின. 

தமது காலடியினுள்ளேயே தமக்கெதிரான சூழ்ச்சி நடைபெறுவதைப் பார்க்கத் தவறிய அமெரிக்க அதிகாரிகள், சில காலத்தின் பின்னர் பக்டாடி உற்பட ஆயிரக்கணக்கான சுன்னி போர்க் கைதிகளை விடுவித்தனர். 

இவ்வாறு விடுவிக்கப்பட்ட சதாமின் முன்னாள் ராணுவ அதிகாரிகள், பக்டாடி தலைமியிலான ஐ. சிஸ் எனும் மிகத்தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பை நிறுவினர்

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக்கில் பொம்மை அரசிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, சில நூறு ராணுவ ஆலோசகர்களை மட்டுமே விட்டு விட்டு, மீதி ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை பராக் ஒபாமா தனது தேர்தல் வாக்குறுதிகளுக்கமைய விலக்கிக் கொண்டார்.

அமெரிக்க ராணுவத்தின் போர்த்தளபாடங்கள், துப்பாக்கிகள், தாங்கிகள், ஹம்வி எனப்படும் பல்தரை தாக்குதல் வண்டிகள் என்று பெருமளவு ஆயுத தளபடாடங்களைப் பெற்றுக்கொண்ட ஈராக்கிய ராணுவம் அமெரிக்கா வெளியேறிய நகரங்களில் பொறுப்பெடுக்கத் தொடங்கியது.

அமெரிக்க அதிகாரிகளின் பயிற்சி கிடைக்கப்பெற்றாலும் கூட, நேர்த்தியான தாக்குதல் பயிற்சியையோ அல்லது போர் அனுபவத்தையோ புதிய ஈராக்கிய ராணுவம் கொண்டிருக்கவில்லை.  ஆகவே, பக்த்தாதியின் ஐ. ஸிஸ்கள் சண்டையைத் தொடங்கியபோது, ஈராக்கிய ராணுவம் ஆயுதங்களைப் போட்டுவிட்டு தப்பியோடியது. எதிர்த்துப் போரிட்ட ஈராக்கிய ராணுவ வீரர்களை ஐ. ஸிஸ்கள் சரணடைந்த பின் கொன்றுகுவித்த கொடூரம் வெளிவந்தபோது, மீதமிருந்த ஈராக்கிய ராணுவ சண்டை எதுவுமின்றி ஆயுதங்களுடன் ஒன்றில் சரணடைந்தது அல்லது விட்டு விட்டுத் தப்பியோடியது. இதன் விளைவு, அமெரிக்காவினால் பல பில்லியன் டாலர்கள் செலவில் ஈராக்கிய பொம்மை அரசிற்கும், அதன் ராணுவத்திற்கும் வழங்கப்பட்ட நவீன போராயுதங்கள் எதிர்ப்பின்றியே ஐ. ஸிஸ் அமைப்பின் கைகளுக்கு மாறின. 

ஆக, அமெரிக்கா ஐஸிஸ்களுக்கு ஆயுதங்களை வழங்கியது, அவர்களை உருவாக்கியதென்பது  இதோடு அடிபட்டுப் போய்விடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸிஸ் அமைப்பின் அட்டூழியங்கள் வெளித்தெரியவரவே அமெரிக்கா மீண்டும் ஈராக்கிற்குள்ளும் சிரியாவிற்குள்ளும் இவர்களை எதிர்த்துப் போரிட சிரியா விடுதலை ராணுவம் எனும் ஆயுத அமைப்பிற்கு தனது உதவிகளை வழங்கியது.  இந்த சிறிய ராணுவக் குழு ஐஸிஸ் மற்றும் அல்கொயிதாவுடன் தொடர்புள்ள அல் நுஸ்ரா அமைப்பிற்கெதிராகவும் சிரியாவினுள் போரிட்டுக்கொண்டிருந்தது. மிகவும் பழமையான ஆயுதங்களைக் கொண்டு போரிட்ட இந்த ராணுவ அமைப்பினால் ஐஸிஸ்களின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாமல் போகவே அமெரிக்கா வேறு வழியில்லாமல் தனது சிறப்புப் படைகளையும், அதிநவீன விமானப்படையையும் அனுப்பி வைத்தது. 

அமெரிக்க ராணுவவத்தின் வழிநடத்தல், விமானப் பாதுகாப்பு, புதிய ஆயுதங்களைப் பெற்றுக்கொண்ட சிரிய விடுதலை ராணுவம் சிறிது சிறிதாக தன்னைப் பலப்படுத்தி தான் இழந்த பகுதிகளை மீட்டெடுக்கத் தொடங்கியது. இதன் ஒரு படிதான் கொபேனி எனப்படும் துருக்கி எல்லையில் அமைந்திருக்கும் குர்திஷ் நகர்மீதான ஐஸிஸின் முற்றுகையும், விடுவிப்பும் அமைகிறது.

ஐஸிஸிற்கெதிரான பல சிரிய ராணுவக் குழுக்கள் அமெரிக்கா, பிரான்ஸ் , இங்கிலாந்து போன்ற நாடுகளின் உதவிகளைப் பெற்றுவந்தன. இவற்றுள் சில குழுக்களின் இயல்பான அமெரிக்க எதிர்ப்புணர்வும், ஐஸிஸின் ஆரம்பகால முன்னேற்றமும், இக்குழுக்களில் பலர் தமது ஆயுதங்களுடன் ஐஸிஸின் பக்கம் தாவுவதற்கு ஏதுவாகியிருந்தன.

ஆகா, ஐஸிஸிற்கு அமெரிக்கா ஆயுதங்களைக் கொடுத்து ஊக்குவித்தது எனும் பேச்சு, இவ்வாறு கட்சிமாறியவர்களின் மூலமே பரப்பட்டதேயன்றி, அமெரிக்கா எக்காலத்திலும் ஐஸிஸ்களுக்கு எந்தவித ராணுவ உதவிகளையும் வழங்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸிஸ்களுக்கெதிரான போரில், மேற்குலகிற்குச் சார்பானவர்கள் என்று காட்டிக்கொண்டு அதே சமயத்தில் ஐஸிஸ்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய ஒரு முக்கியமான நாடுதான் துருக்கி. சுன்னியினத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட துருக்கி, தொடர்ச்சியாக ஐஸிஸ்களுக்கு உதவி வந்தது. சிரியாவினுள்ளும், ஈராக்கினுள்ளும் ஐஸிஸ் கொள்ளையிட்ட பெருமளவு சுத்திகரிக்கப்படாத மசகு எண்ணையை துருக்கியே கொள்வனவு செய்தது. சிரிய - துருக்கி எல்லையில் நூற்றுக்கணக்கில் வரிசையாக துருக்கிய எண்ணெய்த் தாங்கர்கள் நின்றதை அமெரிக்க விமானிகள் பலமுறை படமெடுத்திருக்கிறார்கள். 

அதுமட்டுமல்லாமல், தாம் ஐஸிஸ்களிடம் வாங்கும் எண்ணெய்க்குப் பதிலாக ஆயுதங்கள், வாகனங்கள் வழங்கல்ப் பாதைகள் என்று பெருமளவு உதவிகளை துருக்கிய அரசு செய்துவந்தது. ஐஸிஸ்கள் போர்களில் சவாரி செய்த நவீன டொயோட்டா ஹைலக்ஸ்கள் துருக்கியூடாகவே அவர்களுக்குக் கிடைத்தன. 

கொபேனி எனும் குர்திஸ் நகர் மீதான ஐஸிஸ்களின் முற்றுகையில், தாக்குதல்களுக்குப் பயன்ந்து தமது எல்லை நோக்கி ஓடிவந்த குர்திஸ் அகதிகளை எல்லையில் தடுத்து வைத்தது மட்டுமல்லாமல், முற்றுகைக்குள் அகப்பட்ட மக்களுக்கு எந்தவித உதவிகளையும் செய்ய மறுத்த துருக்கி, ஆக்கிரமிப்பாளர்களான ஐஸிஸ்களுக்குத் தொடர்ச்சியான வழங்கற்பாதையினை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், சண்டையில் காயப்பட்ட பயங்கரவாதிகளை எல்லையூடாக துருக்கியினுள் கொண்டுவந்து சிகிச்சையளித்தது.

துருக்கியின் அட்டக்காசத்தைப் பொறுத்துக்கொள்ளமுடியாத அமெரிக்கா, இறுதியில் தனது அசுர விமானப்படைகொண்டு, துருக்கியின் கண்முன்னாலேயே அதனது செல்லப்பிள்ளையான ஐஸிஸ்கள் மீது குண்டுமாரி பொழிந்து முற்றுகையை உடைத்தெறிந்தது. 

இதுதான் நடந்தது.

அமெரிக்கா அல்கொயிதாவுக்கோ, தலிபானுக்கோ அல்லது ஐஸிஸிற்கோ எப்போதுமே ராணுவ உதவிகளைக் கொடுக்கவுமில்லை, அவர்களை உருவாக்கி அழகு பார்க்கவுமில்லை.

ஆனால், இவர்களின் உருவாக்கத்திற்கு அமெரிக்கா விட்ட தவறுகளே காரணமாக அமைந்தது என்பதையும் நான் மறுக்கவில்லை. அமெரிக்காவின் தொடர்ச்சியான இஸ்ரேல் ஆதரவுப் போக்கும், கம்மியூனிசத்தெற்கெதிரான அதனது நிலைப்பாடுமே இன்று உலகெங்கும் அவர்களுக்கெதிரான அலையினை ஏற்படுத்தியிருக்கிறதென்பதையும் மறுப்பதற்கில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.