Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனிமொழி இலங்கை பயணம்: தமிழக மீனவர்கள் மீதான கடற்படை தாக்குதல் குறித்த கேள்வியும், அமைச்சகத்தின் பதிலும்

Featured Replies

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தற்போது தாக்குதல் நடத்துவதில்லை. ஆனால், அசாம்பாவிதங்கள் தொடர்கின்றன என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவிக்கின்றார்.

சந்திப்பு

இலங்கைக்குத் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலர், இலங்கை அமைச்சர்கள் சிலரை இன்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே இதனைக் குறிப்பிட்டிருந்தனர்.

கொழும்பிலுள்ள விவசாய அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கை சார்பில் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் , இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்தனர்.

இலங்கை கடற்படை

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்தியுள்ள போதிலும், சில சந்தர்ப்பங்களில் சில அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறுவதாகத் தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்" எனவும் கூறியிருந்தார்.

இலங்கையில் கனிமொழி: "தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் இல்லை, அசம்பாவிதங்கள் தொடர்கின்றன"

கனிமொழியினால் முன்வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டை இலங்கை அதிகாரிகள் மறுத்திருந்ததுடன், அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது எனவும் உறுதியளித்தனர்.

இந்திய மீனவர்களோ அல்லது இலங்கை மீனவர்களோ திட்டமிட்டு கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என இரண்டு தரப்பினரும் கூறியிருந்தனர்.

இந்த சந்திப்பு நிறைவு பெற்றதன் பின்னர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

எனினும், இலங்கை சார்பில் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் அமீர் அலி பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிட்டார்.

மீனவர் பிரச்சனை

இரண்டு நாட்டு அதிகாரிகளும் ஒன்றிணைந்து, கலந்துரையாடல்களை நடத்தி, எதிர்காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றை செய்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அமீர் அலி குறிப்பிட்டார்.

மீனவப் பிரச்சினை தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள தமிழக அரசாங்கத்துடன் முன்னர் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், மாநில ரீதியில் அதனைச் செய்வதில் காணப்பட்ட பிரச்சினை காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையில் உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இரண்டு நாட்டு மீனவர்களும் தாக்கப்படுவதாகக் கூறப்படும் சம்பவத்திற்குத் தீர்வாக, பொறிமுறையொன்று அத்தியாவசியம் என சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்படவுள்ள மாநாட்டில் அதற்கான தீர்வு எட்டப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49677772

  • கருத்துக்கள உறவுகள்

memees.php?w=650&img=dmFkaXZlbHUvdmFkaXZ

ம்ம் .. பரிசு பெட்டிகள் தயாராக இருக்கிறதல்லோ .? 😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
2 hours ago, ampanai said:

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்தியுள்ள போதிலும், சில சந்தர்ப்பங்களில் சில அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறுவதாகத் தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்" எனவும் கூறியிருந்தார்.

ஆம், நிச்சயம் பரிசுப்பொருட்கள் கிடைத்திருக்கும் 😞 

ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்தமை என்பதே பல உண்மைகளை கூறிவிட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ampanai said:

இலங்கைக்குத் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலர், இலங்கை அமைச்சர்கள் சிலரை இன்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே இதனைக் குறிப்பிட்டிருந்தனர்.

தனிப்பட்ட விசயமாய் போய் அரச அலுவல் எல்லாம் பாக்கலாமோ? :rolleyes:

  • தொடங்கியவர்

பிரதமரை சந்தித்த கனிமொழி உள்ளிட்ட இந்திய அரசியல் முக்கியஸ்தர்கள்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தி.மு.க துணைத்தலைவர் கனிமொழி உட்பட இந்தியாவின் சில முக்கிய அரசில் தலைவர்கள் பிரதமரை இன்று காலை அலரி மாளிகையில்  சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

8BB54D25-1FBF-4BE4-ADA9-9304894652E2.jpe

இதன்போது இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் ,  இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கே.கனிமொழி, இந்திய பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர்கள், முன்னாள் கேரள இராஜாங்க அமைச்சர் அப்துல் மஜீத், இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர், முன்னாள் பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் தமிழ் நாடு வக்பு சபை உறுப்பினர்ருமான பாத்திமா முஸஃப்பர், முன்னாள் இந்திய சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் , உட்பட பல்வேறு முக்கியஸ்த்தர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

406723E3-856E-47B2-82DB-6C39F3694659.jpe

இந்நிலையில் குறித்த சந்திப்பின் போது இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

7FD8E103-196B-48A6-B905-975DF3AF6BD3.jpe8E14FDBB-A568-4F77-9FBA-B5AB1B47EBBA.jpe34B9685A-59C6-45AE-A994-1BF809E852B1.jpeD556B27C-EA05-4953-AE6B-6C6B5DA4B543.jpe53C94240-30D5-4738-B777-BF57190EAC20.jpe0413D520-1F86-4ABC-A0E0-075312964072.jpe

https://www.virakesari.lk/article/64730

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திமுக பணத்துக்காக எதையும் செய்யும்

Bild

Bild

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

இதன்போது இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் ,  இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கே.கனிமொழி, இந்திய பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர்கள், முன்னாள் கேரள இராஜாங்க அமைச்சர் அப்துல் மஜீத், இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர், முன்னாள் பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் தமிழ் நாடு வக்பு சபை உறுப்பினர்ருமான பாத்திமா முஸஃப்பர், முன்னாள் இந்திய சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் , உட்பட பல்வேறு முக்கியஸ்த்தர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்திய  தரப்பிலும் இலங்கை தரப்பிலும் ஏறக்குறைய கலந்துகொண்ட அனைவருமே முஸ்லீம்கள்.

பேசபோனது மீனவர் பிரச்சனையாக இருக்காது  ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இலங்கை முஸ்லீம்கள்மீது கடுமையாக நடந்துகொள்ளவேண்டாம் என்று கோரிக்கை விடுப்பதற்காக இருக்கலாம்.

இந்திய மீனவர்கள் பிரச்சனையை ஊறுகாய்போல தொட்டுக்கொண்டது தமிழர்களுக்காக கவலைப்படுகிறோம் என்று காட்டிக்கொள்ளும்  கனிமொழி  அவ அப்பாவிடம் கற்றுக்கொண்ட  அரசியல் சாணக்கியம்.

அதனால்தான் ஊடகங்களிடம் வாயே கொடுக்கவில்லை திறந்தால் தமிழக அரசியலிலும்,,அரசியல்வாதிகளிடமும் மாட்டிக்கொள்வோம் என்பதற்காக.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

தனிப்பட்ட விசயமாய் போய் அரச அலுவல் எல்லாம் பாக்கலாமோ? :rolleyes:

1 hour ago, valavan said:

இந்திய  தரப்பிலும் இலங்கை தரப்பிலும் ஏறக்குறைய கலந்துகொண்ட அனைவருமே முஸ்லீம்கள்.

பேசபோனது மீனவர் பிரச்சனையாக இருக்காது  ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இலங்கை முஸ்லீம்கள்மீது கடுமையாக நடந்துகொள்ளவேண்டாம் என்று கோரிக்கை விடுப்பதற்காக இருக்கலாம்.

இந்திய மீனவர்கள் பிரச்சனையை ஊறுகாய்போல தொட்டுக்கொண்டது தமிழர்களுக்காக கவலைப்படுகிறோம் என்று காட்டிக்கொள்ளும்  கனிமொழி  அவ அப்பாவிடம் கற்றுக்கொண்ட  அரசியல் சாணக்கியம்.

அதனால்தான் ஊடகங்களிடம் வாயே கொடுக்கவில்லை திறந்தால் தமிழக அரசியலிலும்,,அரசியல்வாதிகளிடமும் மாட்டிக்கொள்வோம் என்பதற்காக.

à®à®²à®à¯à®à¯à®¯à®¿à®²à¯ à®à®©à®¿à®®à¯à®´à®¿: "தமிழ஠மà¯à®©à®µà®°à¯à®à®³à¯ à®®à¯à®¤à¯ தாà®à¯à®à¯à®¤à®²à¯ à®à®²à¯à®²à¯, à®à®à®®à¯à®ªà®¾à®µà®¿à®¤à®à¯à®à®³à¯ தà¯à®à®°à¯à®à®¿à®©à¯à®±à®©"

கனிமொழி..  தனது சகோதரன், ஸ்ராலினால்... 
தமிழக அரசியலில். ஓரம் கட்டி வைக்கப் பட்ட நிலையில்,
தனது அரசியல் இருப்பிடத்தை, தக்க வைப்பதற்கும்.... 
தமிழக முஸ்லீம்  வாக்காளர்களை கவர்வதற்காகவும்,
இலங்கையில்... உள்ள, முஸ்லீம்  அமைச்சர்களையும்... பிரதமர் ரணிலையும்....சந்தித்த  பின்னணியில்....

கருணாநிதி குடும்பம், இலங்கையில்.... பல முதலீடுகளை (பினாமி) செய்துள்ளதாக,
முன்பு... பல செய்திகள் வந்தது.  இப்போ... கருணாநிதி இல்லாத நிலையில்... சொத்துப் பங்கீடு  வரும் போது,
அதனை நிவர்த்தி செய்ய... அவர் சந்தித்த ஆட்கள் தான், தகுந்தவர்கள்.

அதை... விட்டிட்டு, சம்பந்தன், சுமந்திரன், மாவை கோஸ்ட்டிகளை...
சந்தித்ததாலும்... ஒரு, பிரயோசனமும் இருக்காது... என்று,
கனிமொழி... நன்கே  அறிந்து வைத்துள்ளது, மிக்க மகிழ்ச்சி.    

இனி அவர் ... இந்தியாவுக்கு, திரும்பி போய்....
அரசியல் செய்யும் போது....  மோடி அரசு, இவர் முன்பு செய்த  திருகு தாளங்களை...
தூசி தட்டி, திகார் ஜெயிலுக்கு அனுப்ப... சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

திமுக பணத்துக்காக எதையும் செய்யும்

Bild

Bild

இதில இருக்கிற சாப்பாடுகள் என்னவாக இருக்கும்.😉

Edited by சுவைப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

இதில இருக்கிற சாப்பாடுகள் என்னவாக இருக்கும்.😉

Bild

கொத்து ரொட்டியும், சமோசாவாகவும் இருக்கலாம்.  🤑
ஏனென்றால்... அது, இரண்டும்தான்....  😎
இலங்கை  -  இந்திய,  நட்புறவு  🤩 பாலம் அமைக்க... வலிமையானது.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Bild

34B9685A-59C6-45AE-A994-1BF809E852B1.jpe

406723E3-856E-47B2-82DB-6C39F3694659.jpe

என்ன பார்வை....😍   உந்தன் பார்வை .... 💓
கனிமொழியின்.. உடல் மொழியில்,  அப்பவும், இப்பவும்.. எந்த மாற்றமும்  இல்லை. 😎

தமிழக மீனவருக்காக, தனிப்பட்ட  பயணத்தை  கதைக்கப்  போன ஆள் மாதிரி தெரியவில்லை.
ஒருவரின்... உடல் மொழியே... அவர் எப்படிப் பட்டவர், என்பதை காட்டிக் கொடுத்து விடும்.

ஒருவரின்... கண்களை வைத்தே, அவரின் குணாதியங்களை அறிய முடியும்.
இவரின் பார்வை... தமிழக மீனவர் பிரச்சினைக்கு, போன மாதிரி தெரியவில்லை.

கருணாநிதி குடும்பங்கள்... சரியான,  பணப் பேராசை பிடித்தவர்கள்.
அவர்களை...  நம்பிக் கொண்டு இருப்பவர்கள், தான்... பாவம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஊழ‌ல் செய்து சிறைக்கு சென்று பிற‌க்கு வெளியில் வ‌ந்து இந்த‌ ஊட‌க‌ங்க‌ள் முன்னால் எப்ப‌டி தான் த‌ல‌ காட்ட‌ முடியுதோ , வெக்க‌ம் கெ.......ள் 

  • கருத்துக்கள உறவுகள்

கன்னி(?0 மொ ழிக்கு...2009 ம் ஆண்டு போரின் பின்(/) கிடைத்த காசு 250 மில்லியன் டொலரில் அஙு கு ஒரு தேயிலைத்தோட்டம் வான்ங்கிவிட்டவ...அதனைப் பார்க்கப் போகையில் 4 முசுலிம்களையும் கூட்டிப்போஇ நம்ம ஆட்கள் இவர்கள்தான்...வோடு வேணுமின்னா காசு கொடு என்றிருப்ப...இல்லையெனில் ஒரு நாட்டின் சனாதிபதியும் ...பிரதமரும் ..இந்திய ஆளும் கட்ட்சியில்லாத ஒரு சாதாரண ராஜ்யசபா எம்மியுடன் இருந்து பிரியாணி சாப்பிட்டு சீலை போர்த்து காட்டிபிடி வைத்தியம் செய்வார்களா..... ...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ஊழ‌ல் செய்து சிறைக்கு சென்று பிற‌க்கு வெளியில் வ‌ந்து இந்த‌ ஊட‌க‌ங்க‌ள் முன்னால் எப்ப‌டி தான் த‌ல‌ காட்ட‌ முடியுதோ , வெக்க‌ம் கெ.......ள் 

சூடு, சொரணை அற்ற... ஜென்மங்கள் தான்...
திராவிட தமிழக அரசியல் வாதிகள்.

அவர்களுக்கு... கொடி, பிடிக்கும் கூட்டங்களை, நினைக்க கவலையாக உள்ளது.
ஆனால், இந்த நிலைமை... நீண்ட நாள், நீடிக்காது.

உலகம்... முழுக்க,  சேர்த்து வைத்த, காசை.... இவர்கள்....
தானமாக, கொடுக்கும்...  நேரம் வரலாம்.

இல்லை என்றால்.... திகார் ஜெயில் போக... 
மறியல்,  உடுப்பு... அணிய வேண்டி வரும்.   🐽

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

Bild

34B9685A-59C6-45AE-A994-1BF809E852B1.jpe

406723E3-856E-47B2-82DB-6C39F3694659.jpe

என்ன பார்வை....😍   உந்தன் பார்வை .... 💓
கனிமொழியின்.. உடல் மொழியில்,  அப்பவும், இப்பவும்.. எந்த மாற்றமும்  இல்லை. 😎

தமிழக மீனவருக்காக, தனிப்பட்ட  பயணத்தை  கதைக்கப்  போன ஆள் மாதிரி தெரியவில்லை.
ஒருவரின்... உடல் மொழியே... அவர் எப்படிப் பட்டவர், என்பதை காட்டிக் கொடுத்து விடும்.

ஒருவரின்... கண்களை வைத்தே, அவரின் குணாதியங்களை அறிய முடியும்.
இவரின் பார்வை... தமிழக மீனவர் பிரச்சினைக்கு, போன மாதிரி தெரியவில்லை.

கருணாநிதி குடும்பங்கள்... சரியான,  பணப் பேராசை பிடித்தவர்கள்.
அவர்களை...  நம்பிக் கொண்டு இருப்பவர்கள், தான்... பாவம்.

அப்பிடியே வழியுதண்ணை...அன்பு...பாவம் ராசா திகார் நினைவோடை..காலத்தை கழிக்க வேண்டியதுதான்...சிங்கன் சும்மாவிட்டிரான்.. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, alvayan said:

அப்பிடியே வழியுதண்ணை...அன்பு...பாவம் ராசா திகார் நினைவோடை..காலத்தை கழிக்க வேண்டியதுதான்...சிங்கன் சும்மாவிட்டிரான்.. 

இதுகளும்... அதுக்கு, பழக்கப் படுத்திய ஆட்கள் தானே....  😎

  • தொடங்கியவர்

இவ்வாறு தான் இந்திய ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகி உள்ளது 

'தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவை நேரில் சந்தித்து கனிமொழி எம்பி கோரிக்கை விடுத்தார். திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையிலான குழுவினர், இலங்கைப் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவை நேற்று சந்தித்து பேசினர். அப்போது கனிமொழி எம்பி, ' தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களைத் தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாட்டு மீனவர் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்.

இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் போது அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. எனவே, அவர்களை விடுவிக்கும்போது படகுகளையும் சேர்த்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். படகுகள் விடுவிக்கப்படாததால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆகவே, இது தொடர்பான சட்டத்தைத் தளர்த்தி, படகுகளையும் விடுவிக்க்க வேண்டும். அதே நேரம், இருநாட்டு மீனவப் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்த வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். முன்னதாக கனிமொழி எம்பி, இது தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் திலிப் வெதாராச்சியை சந்தித்து பேசினார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525831

கூட்டு சரியில்லை. தமிழர்களை விற்று பிளைப்பு நடத்தும் கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

இந்த படகுகள் கட்சிக்காறரின்ர என்று எங்கோ வாசித்த நினைவு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.