Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்துச் சித்தர் யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைகள்

Featured Replies

  • தொடங்கியவர்
17 hours ago, goshan_che said:

எனது தாய்வழி பாட்டானார் யோகர் சுவாமிகள், செல்லப்பா சுவாமியை நல்லூரடியில் சந்திப்பதற்கு முன்பிருந்தே அவரின் நண்பர். பின்னாநாளிலும் இந்த பழக்கம் தொடர்ந்தது.

ஒரு முறை யாழில் தனது தாய் நிலமை மோசம் என அறிந்து எனது பாட்டனார் அவசரமாக கிளிநொச்சியில் இருந்து வந்த சமயம். காரை செம்மணியில் வைத்து மறித்த யோகர், என்னை மறுபடியும் கொண்டுபோய் கிளிநொச்சியில் விடு எனக் கேட்டாராம்.

தாயை பார்க்க வேண்டும், ஆனால் யோகரோ முன்கோபி என்ன செய்வது ? என என் பாட்டனார் குழம்ப, “ கொம்மாவை பற்றியே யோசிக்கிறாய்? அவ போய் சேந்துட்டா, என்னை கிளிநொச்சியில விட்டுட்டு ஆறுதலா போய் காரியம் செய்” என்றாராம் யோகர்!

இதே போல், ஒரு முறை ஒரு பெரிய கொழும்பு பிரமுகரும்,  யோகரும், என் பாட்டனாரும் சாப்பிட அமர்ந்தார்களாம். பிரமுகர் நீர் தெளித்து வாழை இலையை வணங்க, “ நீ சாப்பிட வந்தனியோ? வாழையிலையை குளிப்பாட்ட வந்தனியோ?” என கேட்ட யோகர் அந்த பிரமுகரை சாப்பிடவிடாமல் எழுப்பி வீட்டே அனுப்பினாராம் 😂.

என்னால் முடிந்த துணுக்குகள், பாடல்களை நானும் இணைக்கிறேன்.

கோஷன்,

சுவாமிகள் பற்றிய உங்கள் கருத்துப் பதிவுக்கு நன்றி.

இங்கு பகிர்வதற்கு உங்களிடம் ஏராளம் தகவல்கள் இருக்கும் என நினைக்கிறேன். 

ஞானிகளின் செய்கைகள் நீங்கள் இங்கு குறிப்பிட்டது போல சில சமயங்களில் விந்தையாக இருப்பதாகப் படித்திருக்கிறேன். 

மேலும் உங்கள் தகவல்களை வாசிக்க ஆவல். 😊

16 hours ago, ஜெகதா துரை said:

மல்லிகை வாசம்,  உங்கள் பகிர்தலை நானும் வரவேற்கிறேன். யோகர் சுவாமிகளின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் அவரது பணிகள் பற்றி அறியவில்லை. இப்பகிர்வின் மூலம் தெரிந்து கொள்வேன்.

ஜெகதா,

சுருக்கமான வரலாற்று தொடர்பான இணைப்பை இத்திரியின் ஆரம்பத்தில் நானும், wiki இணைப்பை ஏராளனும் பகிர்ந்துள்ளோம். தவிரவும் இங்கு பாஞ்ச் அண்ணா, கோஷன் போன்றவர்கள் பகிரும் சுவாமிகள் பற்றிய நேரடி அனுபவங்களும் நமக்கு பயனுள்ளதாக அமையும்.

நற்சிந்தனைகள் பற்றிய உங்கள் எண்ணங்களையும் இங்கு பகிரலாம். நன்றி 😊

  • Replies 75
  • Views 11k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
16 hours ago, Jude said:

மல்லிகை வாசம், நீங்கள் இணைத்த தளத்தில் எத்தனையோ சாமியார்களை பற்றி இருக்கிறது, ஆனால் சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி பற்றி இல்லையே? கத்தோலிக்க துறவிகளும், “எம்மிலும் பார்க்க சிறப்பாக செய்கிறார்கள்” என்று போற்றும் அளவுக்கு அவரின் அமைப்புகள் மக்களுக்கு உதவுகின்றன. மிகச்சிறப்பான உங்கள் முயற்சி மேலும் தொடர வேண்டும்.

ஜூட்,

இத்தளத்தை நேற்றுத் தான் முதன்முதலில் பார்த்தேன். சிவத்தமிழ்ச் செல்வி பற்றி அங்கு இணைக்காததன் காரணம் எனக்குத் தெரியவில்லை. 

கருத்துக்கும், ஊக்கத்துக்கும் நன்றி. 😊

  • தொடங்கியவர்
13 hours ago, uthayakumar said:

மன அழுக்குகளினால் மனிதன் அமைதி இழந்து படும் எரிச்சல் வேதனை துன்பம் பொறாமை இவை அனைத்து பற்றியும் தத்துவவியாளரர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போலவே மனதை கட்டி சும்மாய் இரு என்ற சூத்திரத்தை சொல்லி தந்தார் சுவாமி யோகர் சுவாமிகள்.ஆசையும் பாசமுமாக அலையும் எம் போன்றவர்களால் சும்மா இருக்கவும் முடியவில்லை மனதை கட்டவும் தெரியவில்லை .நல்ல பதிவு மல்லிகை வாசம் வாழ்த்துக்கள் .அன்பே சிவம் 

உதயன்,

உலகியல் போகங்களை முழுவதுமாகத் துறக்க முடியாத நமக்கு இவர்கள் போன்ற மகான்கள் தான் அவ்வப்போது மனத்தெளிவைத் தந்து வழித்துணையாக இருக்கிறார்கள். 

வாழ்வின் எல்லை வரையான பயணத்தில் இவர்களது தத்துவங்கள் நம்மைத் தொலையவிடாது காக்கின்றன.

கருத்துக்கும், ஊக்கத்துக்கும் நன்றி. 😊

அன்பே சிவம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, goshan_che said:

அவரா என்பது சரியாக நியாபகம் இல்லை. இவை எல்லாம் என் பாட்டனாரின் ஈசிச்சேரில் அருகே இருந்தபடி கேட்ட கதைகள். அவருக்கும் நியாபகம் மங்கத் தொடங்கிய, எனக்கும் கதை கேட்கும் சுவாரசியம் மட்டுமே இருந்த காலம் அது. ஆகவே தகவல்கள் பலதும் மங்கலாகவே நியாபகம் இருக்கிறது.

இன்னொரு சம்பவம் - பசியை அடக்கும் பொருட்டு 1 கிழமை விரதம் இருந்த பின் தானே சமைத்தாரம் யோகர். சமைக்க, சமைக்க பசி வயிற்றை கிள்ளும்தானே? யோகர் “பொறு, அமைதியாக இரு” என்பதாக வயிற்றுக்கு சொல்வாராம் - வயிறு கேட்காதவிடத்து - உணவை மண்ணில் கவிழ்துக் கொட்டி விட்டு, சரி “இனிக் கிட” என்பாராம்.

இதே போல் இன்னொரு பிரமுகர் ஒருதடவை யோகரை அணுகி, சர்வ அடக்கமாக சாமி உங்கள் வரலாற்றை எழுதவேணும் என்றாராம். சரி என்று தேதி ஒன்றை கொடுத்தாராம் யோகர். குறிந்த தேதியில் யோகர் பிரமுகரை கண்டுகொள்ளவில்லையாம். பிரமுகர் யோகரை அணுகி, “ சாமி வராலாறு” எனவும் “ வரலாறென்ன வரலாறு, வண்ணானின் கல் என எழுதிக்கொண்டு போ என துரத்தி அடித்தாராம் யோகர்”.

பாடல்கள் சில கீழே:

அருமையான பாடல்கள்.இணைப்பிற்கு நன்றி  கோசான்.

  • தொடங்கியவர்
16 hours ago, goshan_che said:

இன்னொரு சம்பவம் - பசியை அடக்கும் பொருட்டு 1 கிழமை விரதம் இருந்த பின் தானே சமைத்தாரம் யோகர். சமைக்க, சமைக்க பசி வயிற்றை கிள்ளும்தானே? யோகர் “பொறு, அமைதியாக இரு” என்பதாக வயிற்றுக்கு சொல்வாராம் - வயிறு கேட்காதவிடத்து - உணவை மண்ணில் கவிழ்துக் கொட்டி விட்டு, சரி “இனிக் கிட” என்பாராம்.

இதே போல் இன்னொரு பிரமுகர் ஒருதடவை யோகரை அணுகி, சர்வ அடக்கமாக சாமி உங்கள் வரலாற்றை எழுதவேணும் என்றாராம். சரி என்று தேதி ஒன்றை கொடுத்தாராம் யோகர். குறிந்த தேதியில் யோகர் பிரமுகரை கண்டுகொள்ளவில்லையாம். பிரமுகர் யோகரை அணுகி, “ சாமி வராலாறு” எனவும் “ வரலாறென்ன வரலாறு, வண்ணானின் கல் என எழுதிக்கொண்டு போ என துரத்தி அடித்தாராம் யோகர்”.

பாடல்கள் சில கீழே:

பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தான் இப்பாடல்களைக் கேட்கிறேன். அதிகாலையில் கேட்பதற்கு அருமையாக இருக்கும். 

மீள்நினைவூட்டியமைக்கு நன்றி, கோஷன். 😊

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மல்லிகை வாசம் said:

மஹாராஜா,

கேள்விக்கு நன்றி. 😊காலங்காலமாக ஆதங்கங்களை வெளிப்படுத்தி என்ன பயன் கண்டோம் எனத் தெரியவில்லை, இது போன்ற கருத்துக்களங்களில். அது மக்களைப் பிரிப்பதற்கு வழி செய்கிறது. நியாயமான ஆதங்கங்கள்/கேள்விகளை நம் குடும்பத்தினருடன், நெருங்கிய நண்பர்கள், உறவுகளுடன், சரியாக வழிகாட்டக் கூடிய ஆசான்கள், ஆன்மீக ஞானிகள் போன்றோருடன் நேருக்கு நேர் உரையாடியே தெளிவு பெற முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. 

ஆகக் குறைந்தது இது போன்ற நம்மில் பலரும் போற்றும் மகானுடைய நற்சிந்தனைகள் பற்றிய திரியிலாவது இவற்றைத் தவிர்த்தல் நலம் என எண்ணுகிறேன்.

ஊர்கூடித் தேர் இழுப்பதில் உள்ள ஆனந்தம் எதிர் எதிர் திசையில் கயிறிழுவைப் போட்டியில் பங்கேற்கும் பொழுது கிடைப்பதில்லை.

இங்கு ஏற்கனவே உறவுகள் ஆரம்பித்து விட்ட ஆரோக்கியமான உரையாடலே நாம் எல்லாம் கூடித் தேர் தான் இழுக்கப் போகிறோம் என்பதைக் கட்டியம் கூறுகின்றன.

உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை நேரமிருக்கும் போது தொடருங்கள். 😊

நன்றி மல்லிகை, 

எனது கேள்விகள் சமயத்தின் நம்பிக்கை , கோட்பாடு சார்ந்ததல்ல.  சைவ சமயத்தின் தலைமை,   அதன் செயட்பாடு,  பண்பாட்டுப் படையெடுப்பு,  போராட்டம் சார்ந்து  அதன் பங்களிப்பு போன்றவற்றுடன் தொடர்புபட்டது.  

எனது கேள்விகள் திரியின் நோக்கத்தை குழப்பக் கூடாது என்பதால் அதனை இங்கு தவிர்க்கிர்றேன்.  

தயவு செய்து ஈழத்து சித்தர்களை குறிப்பிடும் பொழுது அவர்களின் வழிபாட்டு முறைகள்,  அவர்கள் சைவ சமயத்தின் எந்தெந்த கடவுளரை வழிபட்டனர் என்பதையும் முடிந்தால் அதட்கான மூலங்களையும் இணையுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

இந்த சம்பவம் யோகர் சுவாமிகளின் குரு செல்லப்பா சுவாமியால் நிகழ்த்தப்பட்டது.
சமையல் செய்ய சீடரை பணித்துவிட்டு அது நிறைவுறும் நேரம் கவிழ்த்து கொட்டியது செல்லப்பா சுவாமிகள்.

தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. முன்பே சொன்னது போல சுமார் 30 வருடங்களுக்கு முன் மிக இளவயதில் வாய்வழி கேட்ட கதைகள்- தகவல்கள் பலவும் பிழையாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை முதல் பார்த்த பொழுது எழுத எண்ணியது, நேரமின்மையால் இப்பொது சொல்கிறேன்.

இந்த கதையை கேட்டு அறிந்தேனா அல்லது வசித்து அறிந்தேனா என்பது நினைவில்லை.

கடையில் சுவாமிகள் பற்றியது.

கடையில் சுவாமிகள் ஆங்காங்கு, அவ்வப்போது , உணவை அடியவர்களிடமும், கடைகளிலும் கேட்டு, அவர்கள் கொடுத்ததை உண்டு வந்தார்.

கடையில் சுவாமிகள் என்பதால், அது அவருக்கு கேட்ட  பொழுது உணவு கிடைத்தது.

இதைப்பார்த்து, சிலர்,  உணவு தேவைக்காக, கடையில் சாமிகளிடம்  சீடராக சேர்ந்தனர். 

சேரும் போதே,   நீங்கள் இந்த சீடரக இருபாதை விடுத்தது, வேறு வேலை   பொருத்தம் என்று அப்படிப்பட்ட சீடர்களிடம் அறிவுரை கூறினார். ஆனால், காரணத்தையோ அல்லது வலுக்கட்டாயமாகவோ அந்த சீடர்களை வற்புறத்தவில்லை.

ஓர் நண்பகல், மிகுந்த வெய்யில் நேரம், எனக்கு பசிக்கிறது என்று சீடர்களையும் சேர்த்துக்கொண்டு, உணவை பெறுவதற்காக  ஓர் கொல்லர் (இதை சாதி பெயர் பாவிக்காமல் எழுத முடியாது, ஆனால் இறந்த வரியின் பின் தவிர்க்கப்படும்) பட்டடையை வந்தடைந்தார்.

இந்த பட்டடை, காங்கேசன் துறை வீதியில் இருந்ததாக நினைவு .

பட்டடையில், அப்போது இரும்பு காய்ச்சப்பட்டு, ஊற்றுமளவிற்கு, பாணித்தன்மைக்கு வந்திருந்தது. 

  பட்டடையில் இரும்பை காய்ச்சிக்கொண்டு நின்றவரிடம்,  பசிக்கிறது, நீ சமைத்த பாணியை (அல்லது பானத்தை, பாணக்கத்தை, கூழை என்று பொருள் படத்தக்கதாகவே கடையில் சாமிகள் கேட்டார்), கொஞ்சம் ஊற்று என்று சொல்லி, உள்ளங்கையை கோணி நீட்டினார். 

காய்ச்சியவருக்கு அதிர்ச்சியும், தயக்கமும், சாமிகள் ஊற்று என்று உறுக்கமாக அறிவுறுத்த, காய்ச்சியவரும் ஊற்றினார், கடையில் சாமிகள் சிவம் என்று சொல்லிக்கொண்டே, கோணிய கையில் தங்கிய, காய்ச்சிய இரும்பு பாணியை பருகினார்.

சீடர்களை பார்த்து, ஏன் பார்க்கிறீர்கள், நீங்களின் வந்து இந்த பானத்தை வாங்கி பருகுங்கள், பசி தீரும் என்று சொல்ல, சீடர்கள் ஓட்டமெடுத்தனர். 

  • தொடங்கியவர்
On 11/3/2019 at 5:20 PM, Jude said:

நீங்கள் தந்த இணைப்பில் சுவாமிகள் சம்பத்திரிசியார் கல்லூரியில் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்றார் என்றிருக்கிறது. இந்த கத்தோலிக்க கல்லூரியில் அந்த காலத்து ஐரிஷ் நிர்வாகம் எப்படி சைவரான சுவாமிகளை மாணவராக ஏற்றுக் கொண்டது?

ஜூட்,

சுவாமிகளின் ஆரம்ப கால வாழ்க்கை பற்றிய உங்களின் கேள்விக்குப் பின்வரும் தகவல்கள் விடை தரலாம் என நினைக்கிறேன்:

"சரித்திரப்பிரசித்தி பெற்ற மாவிட்டபுரத்திலே சைவ வேளான் குலத்தில் அம்பலவாணர் என்னும் சைவப்பெரியார் ஒருவர் வாழ்ந்தார். இவரது தர்மபத்தினி சின்னாச்சி அம்மையார். இவர்களது பூர்வ புண்ணிய விசேடத்தினாலே 29-05-1872இல் அவிட்ட நட்சத்திரத்தில் ஓர் ஆண்மகவு பிறந்தது. பெற்றோர் இக்குழந்தைக்கு யோகநாதன் என்று நாமகரணம் சூட்டினர். அம்பலவாணரின் சகோதரர் சின்னையா என்பவர் கொழும்புத்துறையைச்சேர்ந்த கத்தோலிக்க பெண் ஒருவரை திருமணம்செய்து தமதுபெயரை யோசேப்பு என்றும் மாற்றிக்கொண்டார்.

அம்பலவாணர் மஸ்கெலியா என்ற மலைப்பிரதேசத்தில் கடை ஒன்று நடத்தி வந்தார். யோகநாதனுடைய கல்வி விடயத்தை யேர்சேப்பு கவனித்து வந்தார். அதனால் யோகநாதன் மாவிட்டபுரத்தைவிட்டு கொழும்புத்துறையில் வாழவேண்டிய சூழ்நிலை உருவானது. அக்காலத்தில் சைவப்பாடசாலைகள் மிகமிகக் குறைவு. அதனால் யோகநாதனின் கல்வி கத்தோலிக்கப்பாடசாலையிலேயே ஆரம்பமானது. இளமையில் துடுக்குடையவராயும், புத்தி யுக்தி உள்ளவராயும் வாழ்ந்து வந்தார். யோகநாதனுக்கு வயது எட்டாயிருக்கும்போது தாயார் இறந்துவிட்டார்.

சிறியதந்தையார் யோகநாதனுடைய கல்வியில் மிகுந்த ஊக்கம் காட்டினார். ஆங்கிலக்கல்வி கற்கும்பொருட்டு செம்பத்திரிசியார் கல்லூரியில் இணைக்கப்பட்டார். பகலில் சிறிய தகப்பனார் வீட்டிலும், மலையில் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையிலுள்ள தந்தைவழி மாமியாராகிய முத்துப்பிள்ளை அவர்களுடைய இல்லத்துக்கும் போய்விடுவார்கள்."

மூலம்: https://www.thejaffna.com/eminence/யோகர்-சுவாமிகள்

  • தொடங்கியவர்
On 11/3/2019 at 9:55 PM, Maharajah said:

நன்றி மல்லிகை, 

எனது கேள்விகள் சமயத்தின் நம்பிக்கை , கோட்பாடு சார்ந்ததல்ல.  சைவ சமயத்தின் தலைமை,   அதன் செயட்பாடு,  பண்பாட்டுப் படையெடுப்பு,  போராட்டம் சார்ந்து  அதன் பங்களிப்பு போன்றவற்றுடன் தொடர்புபட்டது.  

எனது கேள்விகள் திரியின் நோக்கத்தை குழப்பக் கூடாது என்பதால் அதனை இங்கு தவிர்க்கிர்றேன்.  

புரிதலுக்கு நன்றி, மஹாராஜா. 😊 

நீங்கள் குறிப்பிட்ட விடயங்களைப் பற்றி உரையாடச் சுவாரசியமாக இருக்கும் தான். எனினும் எனது கூடுதல் கவனம் ஆன்மீகம் மற்றும் சமகால சைவம்/இந்து மத விடயங்களில் இருப்பதால் நீங்கள் குறிப்பிட்ட விடயங்களைப் பற்றி மிக விரிவாக ஆராய நேரம் போதுமானதாக இல்லை. தவிரவும் இவை பற்றிய உரையாடல்கள் முடிவற்றவை; பல நூற்றாண்டு/ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கால வரலாற்றை ஆராய்வதில் உள்ள சிக்கல் நீங்கள் அறிந்ததே.

இது போன்ற ஆய்வுகளில் அதீத கவனம் செலுத்தினால் எனது கவனம் சிதறிவிடுமோ என்ற ஒரு முன்னெச்சரிக்கையுடன் இவற்றைத் தவிர்க்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம். இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே. 😊

  • தொடங்கியவர்
On 11/3/2019 at 9:55 PM, Maharajah said:

தயவு செய்து ஈழத்து சித்தர்களை குறிப்பிடும் பொழுது அவர்களின் வழிபாட்டு முறைகள்,  அவர்கள் சைவ சமயத்தின் எந்தெந்த கடவுளரை வழிபட்டனர் என்பதையும் முடிந்தால் அதட்கான மூலங்களையும் இணையுங்கள். 

பலரும் அறிந்தபடி யோகர் சுவாமிகள் நல்லூர்க் கந்தன் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு பாடல்களும் பாடியுள்ளார். அவற்றில் ஒரு பாடல் கீழே:

நல்லூரான் திருவடி

நல்லூரான் திருவடியை
நான்நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனெடி - கிளியே
இரவுபகல் காணேனெடி

ஆன்மா அழியாதென்று
அன்றெனக்குச் சொன்னமொழி
நான்மறந்து போவேனோடி - கிளியே
நல்லூரான் தஞ்சமெடி

தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்
காவல் எனக்காமெடி - கிளியே
கவலையெல்லாம் போகுமெடி

எத்தொழிலைச் செய்தாலென்
ஏதவத்தைப் பட்டாலென்
கர்த்தன் திருவடிகள் - கிளியே
காவல் அறிந்திடெடி

பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்களெடி - கிளியே
ஆறுமுகன் தஞ்சமெடி

பரிதிகாயில் வாடாது
பவனம்வீசில் வீழாது
பரவைசூழில் ஆழாதெடி - கிளியே
படைகள் மோதில் மாயாதெடி

அந்தமாதி இல்லாத
ஆன்மாவே நாங்களென்று
சிந்தைதந்த செல்வனெடி - கிளியே
சீரார்நல்லூ ராசானெடி

வந்ததிலும் போனதிலும்
மனதைவை யாதேயென
விந்தையுடன் சொன்னானெடி - கிளியே
விளங்குநல்லூர் வாசனெடி

சாதனை செய்தபேர்கள்
சாகார் உலகிலெனக்
காதலுடன் சொன்னானெடி - கிளியே
கலங்காத வீரனெடி

சுவாமி யோகநாதன்
சொன்னதிருப் பாடல்பத்தும்
பூமியிற் சொன்னாலெடி - கிளியே
பொல்லாங்கு தீருமெடி

  • தொடங்கியவர்
On 11/3/2019 at 9:55 PM, Maharajah said:

தயவு செய்து ஈழத்து சித்தர்களை குறிப்பிடும் பொழுது அவர்களின் வழிபாட்டு முறைகள்,  அவர்கள் சைவ சமயத்தின் எந்தெந்த கடவுளரை வழிபட்டனர் என்பதையும் முடிந்தால் அதட்கான மூலங்களையும் இணையுங்கள்.

நல்லூர்க் கந்தன் மீது ஈடுபாடு கொண்டவராயினும் சுவாமிகளின் நற்சிந்தனைகளைப் படித்த போது அவர் மதங்களையும் கடந்தவர் என்று எனக்குப் புலப்பட்டது.

உதாரணமாகச் சுவாமிகள் அருளிய பின்வரும் நற்சிந்தனைகளைப் பார்ப்போம்:

"எல்லாச் சமயங்களும் உண்மையைக் கூறுகின்றன. நீ இங்கிருந்து பெறலாம். அங்கிருந்து பெறலாம். அவையெல்லாம் ஒன்றே"

(சுவாமிகளுக்கு சைவர்கள் மட்டுமல்ல கிறிஸ்தவ, முஸ்லிம், பௌத்த மதங்களிலும் பக்தர்கள் இருந்தனர்.)

"மனிதனுக்கு ஒழுங்கு தான் பெரிது. நாஸ்திகரில் அநேகர் ஒழுங்காக இருக்கிறார்கள்."

என்னைப் பொறுத்தவரை யோகர் போன்ற சித்தர்கள் ஆன்மீக ஏணியின் உச்சியை எட்டிய பின்னர் மதம் என்ற பாதை தேவையாக இருக்கவில்லை. அதற்காக மதங்களை வெறுத்தார் என்பது அர்த்தமல்ல. உயரிய ஆன்ம ஞானத்தை அடைந்த இவர்கள் விருப்பு வெறுப்புக்களைக் கடந்தவர்கள். மதம் மீதான பற்று இவர்களுக்கு இல்லை; வெறுப்பும் இல்லை. அனைத்தையும் சமமாகப் பார்க்கும் பக்குவ நிலையில் இருந்தார்கள்.

இவ்வாறு இன்னும் நிறைய எழுதலாம். மீதியை இனிவரும் காலங்களில் தொடர்கிறேன். 😊

Edited by மல்லிகை வாசம்

  • தொடங்கியவர்
6 hours ago, Kadancha said:

கடையில் சுவாமிகள் பற்றியது.

  பட்டடையில் இரும்பை காய்ச்சிக்கொண்டு நின்றவரிடம்,  பசிக்கிறது, நீ சமைத்த பாணியை (அல்லது பானத்தை, பாணக்கத்தை, கூழை என்று பொருள் படத்தக்கதாகவே கடையில் சாமிகள் கேட்டார்), கொஞ்சம் ஊற்று என்று சொல்லி, உள்ளங்கையை கோணி நீட்டினார். 

காய்ச்சியவருக்கு அதிர்ச்சியும், தயக்கமும், சாமிகள் ஊற்று என்று உறுக்கமாக அறிவுறுத்த, காய்ச்சியவரும் ஊற்றினார், கடையில் சாமிகள் சிவம் என்று சொல்லிக்கொண்டே, கோணிய கையில் தங்கிய, காய்ச்சிய இரும்பு பாணியை பருகினார்.

சீடர்களை பார்த்து, ஏன் பார்க்கிறீர்கள், நீங்களின் வந்து இந்த பானத்தை வாங்கி பருகுங்கள், பசி தீரும் என்று சொல்ல, சீடர்கள் ஓட்டமெடுத்தனர். 

கடஞ்சா,

சித்தர்களின் இது போன்ற அற்புதங்கள் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதிகம் பேசமாட்டாதவர்களான இவர்கள் போன்ற ஞானிகளின் செயல்கள் விநோதமானவை; இங்கு நீங்கள் குறிப்பிட்டது போல பிறருக்குப் பாடம் புகட்டுபவையும் கூட! 😊

ஈழத்து சித்தர் பரம்பரையில் முன்னையவராக நாம் அறிந்த கடையிற் சுவாமிகள் யாரிடமிருந்து இவ்வாறான சித்திகளைப் பெற்றார், இவரது குரு யார் என்ற விபரங்கள் யாருக்காவது தெரிந்தால் தயவுசெய்து எங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள முடியுமா?

பகிர்வுக்கு நன்றி கடஞ்சா. 😊

  • தொடங்கியவர்

யோகர் சுவாமிகள் நற்சிந்தனை:

"எல்லோரும் எனது ஆசான்களாகும். நான் எல்லோரிடமிருந்தும் கற்கிறேன். நான் ஒவ்வொருவரிடமிருந்தும் எனக்குத் தேவையானதை எடுத்து மேலும் செல்கிறேன். மற்றவர்களும் அவ்வாறே; நீ இதனை அனுபவத்தில் அறிய வேண்டும். அப்போது உண்மையை அறிவாய்."

இந்த நற்சிந்தனை தொடர்பான எனது புரிதல்:

இந்த நற்சிந்தனை ஓரளவுக்கு எல்லோராலும் புரிந்து கொள்ளக்கூடியது. "எல்லோரும் எனக்கு ஆசான்களாகும்" என்பது பற்றிய எனது புரிதல் 'நம் வாழ்வில் நாளாந்தம் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் - சிறியவர் முதல் பெரியோர் வரை, அவர்கள் வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும், நமக்கு ஏதோ ஒரு வகையில் கற்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களது பேச்சு, செயல்கள் அவர்கள் அறியாமலே நமக்கு ஏதோ ஒரு பாடம் புகட்டும். எனவே எவரையும் தாழ்வாக எண்ணக்கூடாது என்றும் கொள்ளலாம். 

இங்கு "உண்மை" என்பது நமக்கு மேலான ஒரு சக்தியை - இறைவனை அறிவதைப் பற்றியதாக இருக்க வேண்டும். எல்லோரிடமிருந்தும் பெற்ற அறிவுகளின் தொகுப்பால் பெற்ற உயரிய ஞானம் என்பதாகவும் இருக்கலாம்.

கள உறவுகளே, இந்த நற்சிந்தனை பற்றி உங்களுடைய புரிதலையும் இங்கு பதியலாம். 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' எனும் வள்ளுவன் வாக்கிற்கு அமைய உங்கள் விளக்கமும் இந்த நற்சிந்தனையின் தெளிவான பொருளை அறிய எங்கள் எல்லோருக்கும் உதவும். "எல்லோரும் எமக்கு ஆசான்களே!" 😊

நற்சிந்தனையில் தொடங்கி  கொதித்து உருகி பாணி நிலையில் உள்ள இரும்பை கடையியல் சாமியார் உள்ளங்கையில் ஏந்தி பருகினார் என்ற மூடத்த‍னத்தை கூறும் வரைக்கும் நிலைமை உள்ளது. சாதாரணமாக இரும்பு உருக தொடங்கும் வெப்பநிலை 1538  சென்றிகிரேட்.  அது உருகி பாணியாக வேண்டுமென்றால் 2862 சென்றிகிறேட் வெப்பநிலையை அடைய வேண்டும். அந்த வெப்பநிலையில் உள்ள இரும்பு பாணியை கடையியற் சாமியார் உண்மையில் பருகி இருப்பாரேயானால் அந்த நிமிடமே துடிதுடித்து அந்த இடத்திலேயே மண்டையை போட்டிருப்பார்.  இது சாதாரணமாக அடிப்படை அறிவு உள்ள எல்லோருக்குமே தெரிந்த விடயம். 

நான் ஏற்கனவே கூறியது போல் ஆன்மீகம் என்ற அழகான வார்த்தையை முகமூடியாக போட்டுகொண்டு  மக்களுக்கு வடிகட்டிய முட்டாள்தனத்தை விதைப்பது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.  நானும் சிறு வயதில் இப்படிப்பட்ட  புலுடாக்களை நம்பியும் உள்ளேன். இது தான் அற்புதங்கள் என்று கூறி மக்களை ஏமாற்றுவதற்கு சாமியார்களுக்கு உறுதுணையாக உள்ளது. 

நற்சிந்தனை என்பது  ஒரு  ஆன்மீக வாதி மக்களுக்கு தனது அனுபவ பாடங்களில் இருந்து மக்களுக்கு கொடுக்கும் அறிவுரை.  இதற்கு எந்த புனிதமோ அற்புதமே இல்லை. எந்த சாமியராக இருந்தாலும் 230 வோல்டேஜ் மின்சார கம்பியை தொட்டால் அந்த நிமிடமே அவரது கதி அதோகதி அவ்வளவு தான். இது தான் ஜதார்த்தம். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

சாதாரணமாக இரும்பு உருக தொடங்கும் வெப்பநிலை 1538  சென்றிகிரேட்.  அது உருகி பாணியாக வேண்டுமென்றால் 2862 சென்றிகிறேட் வெப்பநிலையை அடைய வேண்டும். அந்த வெப்பநிலையில் உள்ள இரும்பு பாணியை கடையியற் சாமியார் உண்மையில் பருகி இருப்பாரேயானால் அந்த நிமிடமே துடிதுடித்து அந்த இடத்திலேயே மண்டையை போட்டிருப்பார். 

விஞ்ஞானம், நான் அறிந்தது.

கேள்விப்பட்டதையே எழுதினேன்.

ஆனாலும், இயேசு உயிர்த்திருக்கிறார் என்பதை விஞ்ஞானம் என்ன சொல்கிறதோ தெரியவில்லை.

விஞ்ஞானத்தை  பாவித்து, விஞ்ஞானிகளின் அறிவு கண்களுக்கு புலப்படக்கூடியதையே அறிய முடியும்.

விஞ்ஞானம் கூட கற்றது கைம்மண்ணளவு என்பதற்கு விதிவிலக்கல்ல, இதுவரை அடைந்த பூரண விஞ்ஞான வளர்ச்சியை கருத்தில் எடுத்தாலும்.

விஞ்ஞானத்தில் உச்ச வளர்ச்சி அடைந்த நாடுகள் சமூகங்கள் கூட, அப்படி அடையாததவர்களில் இருந்து, அந்த வளர்ச்சிக்கு வேண்டிய நேரத்திலும் வளத்தாலும் மட்டுமே கடந்து நிற்கின்றன. 

மாறாக, விஞ்ஞானத்தை பாவிக்கக்கூடியவர்களின்  வளங்களும், நேரமும், தற்போது விஞ்ஞான வளர்ச்சி  அடையாதவர்களிடம் இருக்குமாயின், வளர்ச்சி அடைந்தவர்களின் அறிவு மட்டத்திலேயே  அப்படி வளர்ச்சி அடையாதவர்களின் விஞ்ஞான மதிக்கும், கண்களுக்கும் விஞ்ஞானம் புலப்படக்கூடியதாக இருக்கும். அறிவு மட்டம் ஒரு போதுமே வேறுபடாது.

Edited by Kadancha
add info

  • தொடங்கியவர்
1 hour ago, tulpen said:

நற்சிந்தனையில் தொடங்கி  கொதித்து உருகி பாணி நிலையில் உள்ள இரும்பை கடையியல் சாமியார் உள்ளங்கையில் ஏந்தி பருகினார் என்ற மூடத்த‍னத்தை கூறும் வரைக்கும் நிலைமை உள்ளது. சாதாரணமாக இரும்பு உருக தொடங்கும் வெப்பநிலை 1538  சென்றிகிரேட்.  அது உருகி பாணியாக வேண்டுமென்றால் 2862 சென்றிகிறேட் வெப்பநிலையை அடைய வேண்டும். அந்த வெப்பநிலையில் உள்ள இரும்பு பாணியை கடையியற் சாமியார் உண்மையில் பருகி இருப்பாரேயானால் அந்த நிமிடமே துடிதுடித்து அந்த இடத்திலேயே மண்டையை போட்டிருப்பார்.  இது சாதாரணமாக அடிப்படை அறிவு உள்ள எல்லோருக்குமே தெரிந்த விடயம். 

நான் ஏற்கனவே கூறியது போல் ஆன்மீகம் என்ற அழகான வார்த்தையை முகமூடியாக போட்டுகொண்டு  மக்களுக்கு வடிகட்டிய முட்டாள்தனத்தை விதைப்பது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.  நானும் சிறு வயதில் இப்படிப்பட்ட  புலுடாக்களை நம்பியும் உள்ளேன். இது தான் அற்புதங்கள் என்று கூறி மக்களை ஏமாற்றுவதற்கு சாமியார்களுக்கு உறுதுணையாக உள்ளது. 

நற்சிந்தனை என்பது  ஒரு  ஆன்மீக வாதி மக்களுக்கு தனது அனுபவ பாடங்களில் இருந்து மக்களுக்கு கொடுக்கும் அறிவுரை.  இதற்கு எந்த புனிதமோ அற்புதமே இல்லை. எந்த சாமியராக இருந்தாலும் 230 வோல்டேஜ் மின்சார கம்பியை தொட்டால் அந்த நிமிடமே அவரது கதி அதோகதி அவ்வளவு தான். இது தான் ஜதார்த்தம். 

நற்சிந்தனை பற்றிய திரியில் எதிர்மறை எண்ணங்களைத் தூண்டி விவாத களமாக்கும் கருத்துக்களைத் தவிர்க்கவும்.

நன்றி

  • தொடங்கியவர்

யோகர் சுவாமிகள் நற்சிந்தனை: 

"பூகம்பம் கெடுதி செய்தால் யாம் திருப்பிக் கெடுதி செய்கிறோமா? பேசாமல் இருப்போம். அதேபோல் அவரவர் வேலையைப் பார்த்துக் கொள்ள வேண்டும்; எல்லாங் கடவுளே."

Edited by மல்லிகை வாசம்

  • தொடங்கியவர்

யோகர் சுவாமிகள் நற்சிந்தனைகள்:

***"மலையேறுவதற்கு உதவும் ஊன்றுகோலைப் போலவே ஒழுக்கத்தை ஆன்ம வளர்ச்சிக்கு அனுசரிக்க வேண்டும்."

***"தன்னைத் திருத்தாது யாத்திரைக்குப் போவதனால் ஆவதென்ன?"

***"உங்களுக்கு ஒரு குறைவுமில்லை. உங்களை இன்னார் என்று அறியாதது தான் குறை."

16 hours ago, மல்லிகை வாசம் said:

நற்சிந்தனை பற்றிய திரியில் எதிர்மறை எண்ணங்களைத் தூண்டி விவாத களமாக்கும் கருத்துக்களைத் தவிர்க்கவும்.

நன்றி

நற்சிந்தனை பற்றிய திரியில் யதார்தமான ஆன்மீக அறிவுரைகளை மட்டும் இணைக்கவும். உண்மைக்கு புறம்பான எதிர்மறையான இட்டுக்கட்டப்பட்ட கேட்பவர்களை மடையனாக்க கூடிய கதைகள் வரும்போது அங்கு விவாதம் தவிர்கக முடியாதது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நற்சிந்தனை பற்றிய திரியில் யதார்தமான ஆன்மீக அறிவுரைகளை மட்டும் இணைக்கவும். உண்மைக்கு புறம்பான எதிர்மறையான இட்டுக்கட்டப்பட்ட கேட்பவர்களை மடையனாக்க கூடிய கதைகள் வரும்போது அங்கு விவாதம் தவிர்கக முடியாதது. 

மேலே நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்து மூட பிரச்சாரத்துக்கு வழி சேமித்து தாருங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது பல கருத்துக்களை தூக்கும்போது நிர்வாகம் அதையும் சேர்த்து தூக்கிவிட்டது.

"யாழ் கருத்து களம்"
இதுக்கு என்ன வரைவிலக்கணம் என்றே எனக்கு புரியவில்லை.
மற்றவர்களை நேரடியாக பாதிக்கும் அல்லது அவதூறு கூறும் பாணியிலான  சொற்பிரயோகங்களை 
இப்போது எல்லா சோசியல் மீடியாவும் தணிக்கை செய்கிறது. யாழ் களமும் அதை செய்வது நன்று.
ஆனால் கருத்துக்கள் பதிவத்துக்கே தடையை போடுவது என்பது மூடத்தனமான திரிகளை வளர்க்கும் பிரச்சாரத்துக்கு நாம் துணைபோகிறோம் என்ற நிலையையே நிர்வாகத்தின்பால் உண்டுபண்ணுகிறது.

இங்கு யோகர் சுவாமியின் யோகாவால் சித்தி பெற்று முத்தி அடைந்த பலர் 
கிறிஸ்தவத்தையும் ஜேசுவையும் பற்றி முடிந்தளவுக்கு சேறடித்தவர்கள்தான் .... அந்த ஈரம் காயுமுன்பு
அதே  கையால்தான் இங்கு சுவாயின் ஞானத்தை தெளிக்கிறார்கள்.
அது பற்றி நிர்வாகத்தின் நிலைப்பாடு கேள்விக்குறியானதுதான்.

ஞானிகள் ... சித்தர்கள் ..... பக்தியிலே முத்தி கண்ட சுவாமிகள் எல்லோரும் கடவுளை தமுக்குள்ளே கண்டவர்கள்  அவர்கள் எந்த மூடங்களுக்கும் எப்போதும் துணைபோனது கிடையாது. யோகர் சுவாமிகளும் அப்படியான  ஒரு நிலையைத்தான் இறுதிக்காலத்தில் எட்டி இருக்கிறார். இவர்கள் எந்த கடவுளையும் குறிப்பது கிடையாது  மனிதர்களை பிரிப்பது கிடையாது ... அவர்களை பொறுத்தவரை கிறிஸதவர்கள்  முஸ்லிம்கள்  (இந்துக்கள் என்று பெயர் கொண்டு கடவுள் யார் கொள்கை குறிக்கோள் என்று தெரியாத கூட்டத்தினர்)   என்று யாரையும் பிரிப்பதில்லை. இப்படியானவர்கள் எமது மண்ணிலும் வாழ்ந்திருப்பது எமக்கும் பெருமைதான்  அவர்களை பற்றி நாம் அறிந்தவைகளை பகிர்வது மிகவும் நன்று. 

அவர்கள் சொல்லவந்த எதையும் காதில் போடாது அவர்களது பாடலை கேட்பதால் ....
பாடல்களின் வரிகளை கூட உள்வாங்காது திரும்ப திரும்ப கேட்பதால் தாமும் ஒரு 
புனித நிலையில் இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு சமூகம் ..... எவ்வாறு சாதி பிரிவினைகளுக்கு 
உடன்பட்டு மறைமுகமாக ஏற்ற தாழ்வுகளை ஏற்றுக்கொண்டு இன்னொரு சக மனிதனை துன்புறுத்த துணிந்தததோ .... கிட்டதட்ட அதே மனநிலையில்தான்.................  
நாம் யோகர் சுவாமி மற்ற இன்னபிற மூட சுவாமிகளையும் பற்றி பகிர்ந்து பக்தியிலே மூழ்க போகிறோம்.
கருத்துகளத்தில் கருத்து பதிய வருபவர்கள் மீது ஒரு கண் வையுங்கள் என்று நிர்வாகத்தை  நோக்கி எழுத்தில் எழுத தோன்றுகிறது. 

எனக்கு இந்த திரி போகும் போக்கை பார்க்கும்போது தற்போதைய அமெரிக்க அரசியலும் 
ட்ரம்மின் குளறுபடியும் ஒரே பாதையில் போவது கண்டு முதலில் சிரிப்பாக இருந்தது. 
சாட்ச்சிகளை சாட்ச்சி சொல்ல விடாமல் தடுத்துக்கொண்டு ....  அதுபற்றிய விவாதத்தை கூட நடக்காமல் குடியரசு கட்சி ஊடக பார்த்துக்கொண்டு ....... தான் ஒரு சுத்தவாளி என்று சொல்லிக்கொள்வதுபோலதான் இதுவும். 

பிரபாகரன் 
மண்ணுக்காக உயிர்நீத்த மாவீரர்கள் 
ஜேசு கிறிஸ்த்து 
முன்னைநாள் இன்னைநாள் அரசியல்வாதிகள் 
அரசர்கள்  மன்னர்கள் 

யாருக்கும் இல்லாத ஒரு வரையறையை யாழ்ப்பாணத்தில் பிறந்த சுவாமிகளுக்கு தாருங்கள் என்பதும் 
அதை கொடுக்க நிர்வாகம் தலைப்படுவதும். இவர்கள் எல்லோருமே சாதி வெறியில் ஊறியவர்கள் என்பதையும்  அதை இன்னொரு வடிவில் சீர்ஆட்ட இந்தநிலைக்கு வந்திருப்பதுபோலவுமே இருக்கிறது.

இந்த லட்ஷணத்தில்தான் ..........
யோகர் சுவாமிகள் என்ற மகான் வாழவேண்டும் என்ற நிலை வரும் என்று தெரிந்திருந்தால் 
யோகர் சுவாமிகள் தற்கொலை செய்து செத்திருப்பார். 

21 hours ago, Kadancha said:

விஞ்ஞானம், நான் அறிந்தது.

கேள்விப்பட்டதையே எழுதினேன்.

ஆனாலும், இயேசு உயிர்த்திருக்கிறார் என்பதை விஞ்ஞானம் என்ன சொல்கிறதோ தெரியவில்லை.

விஞ்ஞானத்தை  பாவித்து, விஞ்ஞானிகளின் அறிவு கண்களுக்கு புலப்படக்கூடியதையே அறிய முடியும்.

விஞ்ஞானம் கூட கற்றது கைம்மண்ணளவு என்பதற்கு விதிவிலக்கல்ல, இதுவரை அடைந்த பூரண விஞ்ஞான வளர்ச்சியை கருத்தில் எடுத்தாலும்.

விஞ்ஞானத்தில் உச்ச வளர்ச்சி அடைந்த நாடுகள் சமூகங்கள் கூட, அப்படி அடையாததவர்களில் இருந்து, அந்த வளர்ச்சிக்கு வேண்டிய நேரத்திலும் வளத்தாலும் மட்டுமே கடந்து நிற்கின்றன. 

மாறாக, விஞ்ஞானத்தை பாவிக்கக்கூடியவர்களின்  வளங்களும், நேரமும், தற்போது விஞ்ஞான வளர்ச்சி  அடையாதவர்களிடம் இருக்குமாயின், வளர்ச்சி அடைந்தவர்களின் அறிவு மட்டத்திலேயே  அப்படி வளர்ச்சி அடையாதவர்களின் விஞ்ஞான மதிக்கும், கண்களுக்கும் விஞ்ஞானம் புலப்படக்கூடியதாக இருக்கும். அறிவு மட்டம் ஒரு போதுமே வேறுபடாது.

கடஞ்சா 

நான் விஞ்ஞானத்தைப்பற்றி இங்கு கூற வரவில்லை. நான் கூறியது இந்த உலகில்  வாழும் மக்களின் பொதுஅறிவு ( common sense) எனப்படும்  அடிப்படை அறிவைப்பற்றியது. ஆன்மீக  நற்சிந்தனைகள் அதை எவர் கூறினாலும்  அது  பூமியில் வாழும் மனிதர்களின் அறிவு வளர்சியை நோக்கியதாக இருக்க வேண்டும். மனிதர்களின் பொது அறிவு ஏற்றுக்கொள்ளாத விடயங்களை நற்சிந்தனை என்ற பெயரில் கூறுவது மக்களின் ஆன்மீக அறிவை வளப்பதற்கு பதிலாக  எதிமறையான விளைவுகளை கொடுக்கும். 

எப் பொருள் யார் யார்  வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

மேலே நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்து மூட பிரச்சாரத்துக்கு வழி சேமித்து தாருங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது பல கருத்துக்களை தூக்கும்போது நிர்வாகம் அதையும் சேர்த்து தூக்கிவிட்டது.

"யாழ் கருத்து களம்"
இதுக்கு என்ன வரைவிலக்கணம் என்றே எனக்கு புரியவில்லை.
மற்றவர்களை நேரடியாக பாதிக்கும் அல்லது அவதூறு கூறும் பாணியிலான  சொற்பிரயோகங்களை 
இப்போது எல்லா சோசியல் மீடியாவும் தணிக்கை செய்கிறது. யாழ் களமும் அதை செய்வது நன்று.
ஆனால் கருத்துக்கள் பதிவத்துக்கே தடையை போடுவது என்பது மூடத்தனமான திரிகளை வளர்க்கும் பிரச்சாரத்துக்கு நாம் துணைபோகிறோம் என்ற நிலையையே நிர்வாகத்தின்பால் உண்டுபண்ணுகிறது.

இங்கு யோகர் சுவாமியின் யோகாவால் சித்தி பெற்று முத்தி அடைந்த பலர் 
கிறிஸ்தவத்தையும் ஜேசுவையும் பற்றி முடிந்தளவுக்கு சேறடித்தவர்கள்தான் .... அந்த ஈரம் காயுமுன்பு
அதே  கையால்தான் இங்கு சுவாயின் ஞானத்தை தெளிக்கிறார்கள்.
அது பற்றி நிர்வாகத்தின் நிலைப்பாடு கேள்விக்குறியானதுதான்.

ஞானிகள் ... சித்தர்கள் ..... பக்தியிலே முத்தி கண்ட சுவாமிகள் எல்லோரும் கடவுளை தமுக்குள்ளே கண்டவர்கள்  அவர்கள் எந்த மூடங்களுக்கும் எப்போதும் துணைபோனது கிடையாது. யோகர் சுவாமிகளும் அப்படியான  ஒரு நிலையைத்தான் இறுதிக்காலத்தில் எட்டி இருக்கிறார். இவர்கள் எந்த கடவுளையும் குறிப்பது கிடையாது  மனிதர்களை பிரிப்பது கிடையாது ... அவர்களை பொறுத்தவரை கிறிஸதவர்கள்  முஸ்லிம்கள்  (இந்துக்கள் என்று பெயர் கொண்டு கடவுள் யார் கொள்கை குறிக்கோள் என்று தெரியாத கூட்டத்தினர்)   என்று யாரையும் பிரிப்பதில்லை. இப்படியானவர்கள் எமது மண்ணிலும் வாழ்ந்திருப்பது எமக்கும் பெருமைதான்  அவர்களை பற்றி நாம் அறிந்தவைகளை பகிர்வது மிகவும் நன்று. 

அவர்கள் சொல்லவந்த எதையும் காதில் போடாது அவர்களது பாடலை கேட்பதால் ....
பாடல்களின் வரிகளை கூட உள்வாங்காது திரும்ப திரும்ப கேட்பதால் தாமும் ஒரு 
புனித நிலையில் இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு சமூகம் ..... எவ்வாறு சாதி பிரிவினைகளுக்கு 
உடன்பட்டு மறைமுகமாக ஏற்ற தாழ்வுகளை ஏற்றுக்கொண்டு இன்னொரு சக மனிதனை துன்புறுத்த துணிந்தததோ .... கிட்டதட்ட அதே மனநிலையில்தான்.................  
நாம் யோகர் சுவாமி மற்ற இன்னபிற மூட சுவாமிகளையும் பற்றி பகிர்ந்து பக்தியிலே மூழ்க போகிறோம்.
கருத்துகளத்தில் கருத்து பதிய வருபவர்கள் மீது ஒரு கண் வையுங்கள் என்று நிர்வாகத்தை  நோக்கி எழுத்தில் எழுத தோன்றுகிறது. 

எனக்கு இந்த திரி போகும் போக்கை பார்க்கும்போது தற்போதைய அமெரிக்க அரசியலும் 
ட்ரம்மின் குளறுபடியும் ஒரே பாதையில் போவது கண்டு முதலில் சிரிப்பாக இருந்தது. 
சாட்ச்சிகளை சாட்ச்சி சொல்ல விடாமல் தடுத்துக்கொண்டு ....  அதுபற்றிய விவாதத்தை கூட நடக்காமல் குடியரசு கட்சி ஊடக பார்த்துக்கொண்டு ....... தான் ஒரு சுத்தவாளி என்று சொல்லிக்கொள்வதுபோலதான் இதுவும். 

பிரபாகரன் 
மண்ணுக்காக உயிர்நீத்த மாவீரர்கள் 
ஜேசு கிறிஸ்த்து 
முன்னைநாள் இன்னைநாள் அரசியல்வாதிகள் 
அரசர்கள்  மன்னர்கள் 

யாருக்கும் இல்லாத ஒரு வரையறையை யாழ்ப்பாணத்தில் பிறந்த சுவாமிகளுக்கு தாருங்கள் என்பதும் 
அதை கொடுக்க நிர்வாகம் தலைப்படுவதும். இவர்கள் எல்லோருமே சாதி வெறியில் ஊறியவர்கள் என்பதையும்  அதை இன்னொரு வடிவில் சீர்ஆட்ட இந்தநிலைக்கு வந்திருப்பதுபோலவுமே இருக்கிறது.

இந்த லட்ஷணத்தில்தான் ..........
யோகர் சுவாமிகள் என்ற மகான் வாழவேண்டும் என்ற நிலை வரும் என்று தெரிந்திருந்தால் 
யோகர் சுவாமிகள் தற்கொலை செய்து செத்திருப்பார். 

மருது,

1. இங்கே சாதி எங்கே வருகிறது என்று புரியவில்லை. எனது யோகர் பற்றிய துணுக்கில், அவர் சொன்னதை அப்படியே சொல்ல வேண்டும் என்பதற்காய் அடைப்புக் குறியை பாவித்து ஒரு சாதிய விளிப்பை எழுதினேன். அதை அப்படி எழுதாமல் அந்த சொற்றொடரை எழுத முடியாதது என்பதால்.

இதையா நீங்கள் சுட்டுகிறீர்கள்?

தவிரவும் விபுலாநந்தர், சித்தானைக்குட்டி போல யாழிற்கப்பால் இருந்து வந்தவர்கள் பற்றியும் திரி துவங்கலாம், துவங்க வேண்டும் என்பதே என் அவா. (கடையிற் சாமி இந்தியர். கன்னடர்?).

2. நான் ஒரு அக்னோஸ்டிக் என்பது தெரிந்ததே - ஆகவே எனக்கு யோகரின் ஆன்மீகத்தில், மத மாச்சரியத்தில் ஈடுபாடு இல்லை. ஆனால் அன்னம் நீரை விலக்குவதை போல, ஆன்மிக்கத்தை விலக்கி விட்டு யோகரின் நிலையாமை தத்துவங்கள், இலகு தமிழ், குழப்படி கதைகளை ரசிப்பதில் எனக்கு ஒரு நெருடலும் இல்லை.

3.சாக்ரடீஸ்- பிளேட்டோ-அரிஸ்டாடில்- அலக்சாண்டர் போல எமது ஞானமரபினர் கடையிற்-செல்லப்பா-யோகர். எப்படி அவர்கள் சொன்னது எல்லாம் உண்மை என்றாகாதோ, அப்படித்தான் இவர்கள் சொன்னதும். தமது காலத்துக்கு ஏற்ப, தமது அறிவுக்கு ஏற்ப, தம்மை சூழ உள்ள உலகை விளங்க அவர்கள் எடுத்த முயற்சி நம் எல்லோரதும் கூட்டுப் பாரம்பரியம் - அதில் பலதை இப்போது நான் ஏற்காவிடிலும் கூட, அதை வரலாறாக பேண வேண்டியது எம் கடமை.

Edited by goshan_che

4 hours ago, Maruthankerny said:

மேலே நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்து மூட பிரச்சாரத்துக்கு வழி சேமித்து தாருங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது பல கருத்துக்களை தூக்கும்போது நிர்வாகம் அதையும் சேர்த்து தூக்கிவிட்டது.

"யாழ் கருத்து களம்"
இதுக்கு என்ன வரைவிலக்கணம் என்றே எனக்கு புரியவில்லை.
மற்றவர்களை நேரடியாக பாதிக்கும் அல்லது அவதூறு கூறும் பாணியிலான  சொற்பிரயோகங்களை 
இப்போது எல்லா சோசியல் மீடியாவும் தணிக்கை செய்கிறது. யாழ் களமும் அதை செய்வது நன்று.
ஆனால் கருத்துக்கள் பதிவத்துக்கே தடையை போடுவது என்பது மூடத்தனமான திரிகளை வளர்க்கும் பிரச்சாரத்துக்கு நாம் துணைபோகிறோம் என்ற நிலையையே நிர்வாகத்தின்பால் உண்டுபண்ணுகிறது.

மருது, குற்றம் குறை கூற முற்படும் முன்  திரியை மீண்டும் ஒழுங்காக வாசிக்கவும். திரியில் இடப்படும் / இடப்பட்ட கருத்துகளுக்கு விதிகளுக்கு இணங்க எழுதப்பட்ட எந்த பதில் கருத்தும் / விமர்சனமும் நீக்கப்படவில்லை. அத்துடன் ஒரு திரியை திறந்த பின் அதற்கான எதிர் விமர்சனங்கள் எதுவும் வைக்கப்படல் தவிர்க்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை யாழ் இணையம் ஏற்பதும் இல்லை.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மருது,

1. இங்கே சாதி எங்கே வருகிறது என்று புரியவில்லை. எனது யோகர் பற்றிய துணுக்கில், அவர் சொன்னதை அப்படியே சொல்ல வேண்டும் என்பதற்காய் அடைப்புக் குறியை பாவித்து ஒரு சாதிய விளிப்பை எழுதினேன். அதை அப்படி எழுதாமல் அந்த சொற்றொடரை எழுத முடியாதது என்பதால்.

இதையா நீங்கள் சுட்டுகிறீர்கள்?

தவிரவும் விபுலாநந்தர், சித்தானைக்குட்டி போல யாழிற்கப்பால் இருந்து வந்தவர்கள் பற்றியும் திரி துவங்கலாம், துவங்க வேண்டும் என்பதே என் அவா. (கடையிற் சாமி இந்தியர். கன்னடர்?).

2. நான் ஒரு அக்னோஸ்டிக் என்பது தெரிந்ததே - ஆகவே எனக்கு யோகரின் ஆன்மீகத்தில், மத மாச்சரியத்தில் ஈடுபாடு இல்லை. ஆனால் அன்னம் நீரை விலக்குவதை போல, ஆன்மிக்கத்தை விலக்கி விட்டு யோகரின் நிலையாமை தத்துவங்கள், இலகு தமிழ், குழப்படி கதைகளை ரசிப்பதில் எனக்கு ஒரு நெருடலும் இல்லை.

3.சாக்ரடீஸ்- பிளேட்டோ-அரிஸ்டாடில்- அலக்சாண்டர் போல எமது ஞானமரபினர் கடையிற்-செல்லப்பா-யோகர். எப்படி அவர்கள் சொன்னது எல்லாம் உண்மை என்றாகாதோ, அப்படித்தான் இவர்கள் சொன்னதும். தமது காலத்துக்கு ஏற்ப, தமது அறிவுக்கு ஏற்ப, தம்மை சூழ உள்ள உலகை விளங்க அவர்கள் எடுத்த முயற்சி நம் எல்லோரதும் கூட்டுப் பாரம்பரியம் - அதில் பலதை இப்போது நான் ஏற்காவிடிலும் கூட, அதை வரலாறாக பேண வேண்டியது எம் கடமை.

உங்களுடைய கருத்துக்களையோ அல்லது மற்றவர்களின் கருத்துளையோ வைத்து சாதிய 
மேலாதிக்க எண்ணம் இருக்கிறது என்று நான் எண்ணவில்லை.
திரிக்குள் விமர்சனம் வேண்டாம் ..... அல்லது வேறு திரிகளில் சிலர் வந்து திரியை பூட்டுங்கள் 
என்ற மேலாதிக்க சிந்தனை எங்கிருந்து வருகிறது? என்பதை வைத்தே நான் அப்படி எழுதினேன் 
இப்படியான திரிகள் எமக்கு நிற்சயம் தேவை .... இவரை பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன் 
ஆனால் இந்த பாடல்கள் எல்லாம் இந்த திரியின்மூலமே நான் அறிந்து இருக்கிறேன் ... எனக்கு கூட ஒரு koodiya  தகவல் அறிய உதவி இருக்கிறது. 
யோகர் சுவாமி வேறு யாரும் அவரைப்போல கடவுளை தேடி பின்பு தமக்குள்ளே கடவுளை கண்ட எந்த 
சுவாமிகளும் மதங்களை முன்னிறுத்துவதில்லை ...... ஆனால் திரி எப்போதோ அழிந்துபோன சைவசமயம் 
இருப்பதுபோல மாஜாஜாலாம் காட்டவே தொடருகிறது. 
யோகர் சுவாமி மீது யாருக்கும் விமர்சனம் இருந்தால் கருத்து களத்தில் மற்றவர்கள் எழுதத்தான் செய்வார்கள் 
எப்படி யோகர் சுவாமி மட்டும் விமர்சனம் இல்லாமல் போகலாம்?
யோகர் சுவாமியின்  கடைசி கால பகுதியை சிலர் ஏற்றுக்கொள்ளலாம் ... அதே நேரம் ஆரம்ப கால நிலையில் சிலருக்கு முரண்பாடு இருக்கலாம்.
புத்தன் மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு போனது சரியா? என்ற கேள்வியும் ...
புத்தர் முதன் முதலில் திரும்பவும் வீடு வந்த போது மனைவி கேட்ட .... இந்த ஞானத்தை இங்கிருந்து பெற்றிருக்க முடியாதா? என்ற கேள்விகளும் இப்போதும் இருக்கும் கேள்விகள்தான் .. ஒவ்வருவரும் அவரவர் நிலைப்பாட்டை வைத்து ஒரு பதிலில் சாய்ந்துகொள்ளலலாமே தவிர .. மற்றவர்களும் அதில் சாய்ந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
யோகர் சுவாமியின் வாழ்க்கை சமூகத்துக்கு உதவுமா? என்ற கருத்தாடலை ஏன் இங்கு செய்ய முடியாது?
யோகர் சுவாமி சாய்ந்திருந்த மதம் சரியானதா? யோகர் சுவாமிபோல நாமும் போய் நல்லூரில் இருக்க முடியுமா? என்ற கேள்விகளும் பதில்களும் .... ஒரு ஆதிக்க சிந்தனையின் வடிவில்தான் இங்கு திரிக்கு சம்மந்தம் இல்லாதவை  என்ற மாயையால் போர்த்தப்படுகிறது. இந்த ஆதிக்க எண்ணத்துக்கு முன்னைநாள்  சாதிய ஆதிக்க சிந்தனை காரணமாக இருக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
எங்களுடையது எல்லாம் புனிதம்  நாம் தான் தலைசிறந்த சுத்தவாளிகள் உயர்ந்தவர்கள் போன்ற எண்ணத்தை  கொடுப்பது அதுதான்.

திரியை திசை திரும்புகிறோம் என்று மீண்டும் ஒரு குற்றசாட்டு இங்கு வராலாம் ...
நாம் வேறு ஒரு திரியில் இது பற்றி பேசுவோம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.