Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழிலிருந்து இன்று முதல், விமான சேவைகள் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

இஞ்சை வெளிநாட்டிலை இருக்கிறவையள் பெரிய திறமே?
பாக்கியளின்ரை கடையிலையும் பஞ்சாபியளின்ரை கடையிலையும் தானே அளவெடுத்து போட்டுப்பாக்கினம்.

அதுசரி உத ஏன் நீங்கள் பாத்தனியள்?

1 hour ago, ரதி said:

இல்லை அண்ணா, நான் சொல்ல வந்தது ஊர்ல முந்தி இளம் பெண்கள்  முழங்கால் அளவிற்கு சட்டை, பாவாடை ,சட்டை [கட்டையாகவோ ,நீட்டாகவோ] போடுவார்கள்...இப்ப எல்லோரும் லெக்கின்ஸ் போட்டு இந்திய பெண்கள் போடும் நீட்டு குருத்தா மாதிரி போடுகிறார்கள்...அந்த காலத்திலேயும் முழங்காலோடு உடுப்பு போட்டாலும் கவனமாய் சைக்கிள் ஓடியவர்கள் எங்கள் பெண்கள்.

இன்னும் கொஞ்ச நாள் போனால் பாவாடை தாவணி போட்டு பூ வைத்துக் கொண்டு திரிவினம்.


முஸ்லீம் பெண்கள் பர்தாவுக்கு மாறி விட்டார்கள் என்று பேசும் நாம் இதை கண்டு கொள்ளவில்லை .
நாம் தெரிந்தோ,தெரியாமலோ அவர்களது கலாச்சாரத்திற்கு போய்க் கொண்டு இருக்கிறோம்.

முந்தி இருந்த முழங்கால் பாவாடை, மற்றும் சட்டை அணியும் பழக்கம் யாரோட? எப்ப வந்தது? வெள்ளைகாரரோடதானே? அதுக்கு முதல்? சங்கிலியன், குளக்கோட்டன்ர மனிசிமார் frock, skirt and blouse சே போட்டவை? 

காலத்தோடு மாறுவதே கலாச்சாரம், பண்பாடு எல்லாமே. காலத்தோடு மாறாவிடின் அது வரலாறு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, goshan_che said:

அதுசரி உத ஏன் நீங்கள் பாத்தனியள்?

அவையள் சாறி எடுக்கப்போறதெண்டால் பின்னாலை போய் காத்து நிண்டு  காய்ஞ்சு கருவாடாய்  திரும்பி வாற கலாச்சாரத்திலை பிறந்திட்டன்....என்ன செய்ய? :(

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:

அதுசரி உத ஏன் நீங்கள் பாத்தனியள்?

முந்தி இருந்த முழங்கால் பாவாடை, மற்றும் சட்டை அணியும் பழக்கம் யாரோட? எப்ப வந்தது? வெள்ளைகாரரோடதானே? அதுக்கு முதல்? சங்கிலியன், குளக்கோட்டன்ர மனிசிமார் frock, skirt and blouse சே போட்டவை? 

காலத்தோடு மாறுவதே கலாச்சாரம், பண்பாடு எல்லாமே. காலத்தோடு மாறாவிடின் அது வரலாறு.

முஸ்லீம் பெண்கள் பர்தா போட்டால் மட்டும் ஏன் குத்தி முறிகிறார்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வேட்டியத்தானே சொல்லுறியள் சாமியோவ்

தம்பி இஞ்சை பாரும்.....வேட்டி வேறை நாலு முழம் வேறை :cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

முஸ்லீம் பெண்கள் பர்தா போட்டால் மட்டும் ஏன் குத்தி முறிகிறார்கள் 

குத்தி முறிபவர்கு உள்ள விளக்க குறைபாடு. 

மற்றும் செனபோபியா எனும் வேற்று இனங்கள், மத, இன அடையாளங்கள் மீதான வெறுப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அந்த பிளேனைப்பறிறி ஒருத்தரும் கதைக்கல்ல.இந்த உடுப்பு பிரச்சனையால் நொந்தது காகானேதே.😮

On 11/14/2019 at 8:27 PM, nedukkalapoovan said:

இதில் ஈடுபடும்.  ATR 72- 600, ATR 42-320.. எல்லாமே 30 வருடம் பழமையானவை. பல விபத்துக்களை சந்தித்தவை.

https://en.wikipedia.org/wiki/ATR_42

https://en.wikipedia.org/wiki/ATR_72

https://en.wikipedia.org/wiki/Alliance_Air_(India)

மிக தவறு; இந்த விமானங்கள் சந்தைக்கு அறிமுகபடுத்தி தான் 30 வருடம்,ஆனால் Alliance Air பாவிக்கும் விமானங்கள் பெரும்பாலானவை 2014ம் ஆண்டுக்கு பின்னர் கொள்வனவு செய்யபட்டவை.அதே போல் இந்த ATR ரக விமானம் உலகம் முழுவதும் பரவலாக பாவிக்கப்படுபவை; என்றபடியால் அடுத்த முறை நீங்கள் ஊர் போகும் போது அப்படியே மாவிட்டபுர கந்தனை தரிசிச்சுப் போட்டு அப்படியே பலாலி போய் சென்னைக்கு போய் வட பழனி முருகனை வணங்கி விட்டு அப்படியே fourum mallஇல்ல போய் shopping/movie இரண்டையும் முடித்து விட்டு அப்படியே அடுத்த பிளைட்டை பிடித்து வீடு வந்து புட்டும் உருளை கிழங்கும் dinner ஒரு பிடி பிடிக்கலாம் கண்டியலோ ...!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/15/2019 at 12:25 AM, tulpen said:

தரமான விலை மலிவான பொருட்களை தேடி வாங்கிவதே நுகர்வோரின்  வழமை. தரமான சேவையை வழங்காத தமிழ் வர்த்தகர்களில்  தான் தவறு உள்ளது. 

அருமையான.... கருத்து, ருல்பன்.
தமிழ் வியாபாரிகளுக்கு.... சோம்பேறித்தனம்  அதிகம்.
கவி அருணாசலத்தின்... கதை ஒன்றில்,  இதனைப் பற்றி....
விலா வாரியாக... எழுதி இருப்பார்.

கடைக்குள்.. போகும் போது, முதலாளி... தொலைபேசியில், 
யாருடனோ சத்தம் போட்டு,  கதைத்துக் கொண்டு இருப்பார்.

தேங்காய்.. நல்லது தானே... என்று, நாங்கள் கேட்டால்,
அவனவனுக்கு... மனிசியும், தேங்காயும் .. இறைவன் கொடுத்த வரம், 
என்று  சொல்லி,  சிரிப்பாராம்.

நீங்கள், வசிக்கும்..... சுவிஸ்  நாட்டில்...
தமிழ் கடையிலும், இப்பிடியா... இருக்கு?
அதை... கொஞ்சம் எழுதுங்களேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பு - ரிசி..

11 hours ago, தமிழ் சிறி said:

அருமையான.... கருத்து, ருல்பன்.
தமிழ் வியாபாரிகளுக்கு.... சோம்பேறித்தனம்  அதிகம்.
கவி அருணாசலத்தின்... கதை ஒன்றில்,  இதனைப் பற்றி....
விலா வாரியாக... எழுதி இருப்பார்.

கடைக்குள்.. போகும் போது, முதலாளி... தொலைபேசியில், 
யாருடனோ சத்தம் போட்டு,  கதைத்துக் கொண்டு இருப்பார்.

தேங்காய்.. நல்லது தானே... என்று, நாங்கள் கேட்டால்,
அவனவனுக்கு... மனிசியும், தேங்காயும் .. இறைவன் கொடுத்த வரம், 
என்று  சொல்லி,  சிரிப்பாராம்.

நீங்கள், வசிக்கும்..... சுவிஸ்  நாட்டில்...
தமிழ் கடையிலும், இப்பிடியா... இருக்கு?
அதை... கொஞ்சம் எழுதுங்களேன். :)

தமிழ் சிறி  தலைப்பை மீறி   எழுதுகிறேனோ தெரியவில்லை. ஆனால் யாழ் சர்வதேச விமான சேவைக்கும் தமிழரின் வர்த்தகத்திற்கும் தொடர்பிருப்பதால் தமிழ் வர்தகர்களை பற்றிய எனது அனுபவங்களில் மிகச்  சிலதை மட்டும் சுருக்கமாக  கூறுகிறேன். 

பொதுவாக fresh product விற்பனை செய்யும் கடைகள் எல்லாம் கிழமை நாட்களில் காலை 8.00 மணிக்கே திறந்து சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள். கடைக்குள் சென்றால் பொருட் கள் வாடிக்கையாளரை கவரும் விதத்தில் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தமிழ் கடையில் மரக்கறி வாங்க காலையில் சென்றால் கடை முதலாளி 8.30  மணிக்கு பிறகே நித்திரை மயக்கத்தில் (ராத்திரி  அடித்தது சரியாக முறியாத நிலையில்) தலையைக்கூட சரியாக வாரிவிடாமல் வந்து  கடையைத் திறப்பார். அண்ணை எத்தனை மனிக்கு கடை திறக்கினீங்கள் என்று கேட்டால் அனேகமா எட்டரை ஒன்பதுக்கு வந்துடுவன் என்பாரே தவிர கடை திறக்கும் sharp time சொல்ல மாட்டார். கடைக்குள் இருக்கும் பொருட்கள அவரே தடக்கி விழும் அளவுக்கு   அலங்கோலமாக வைக்கப்பட்டிருக்கும். 

ஒருமுறை கடையில் காலாவதியான திகதியுடன் கடை Regal ல் வைக்கப்பட்ட பொருளை எடுத்து கடை முதலாளியிடம் காட்டியபோது  அதை பெரிய விடயமாக எடுக்காமல் இந்த சாமான் கொண்டுவாறவங்கள் இப்படித்தான் என்று delivery ஆடகளை திட்டி விட்டு அப்பொருளை திரும்பவும்அதே Regal ல் வைத்துவிட்டு சாதாரணமாக தனது வேலையைப் பார்ததார். 

வேறொரு முறை பொருட்களை எடுத்துக்கொண்டு kassa க்கு போனால் கடையில் வேலை செய்பவர் இறைச்சி வெட்டிய கையோடு kasse ல் பில் அடித்தார். வெட்டிய இறைச்சி சிதலங்கள் அவரின் விரல்களில. ஒட்டி இருக்க அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் customer Service செய்தார். தந்த மிச்ச காசில் ஒட்டி இருந்த இறைச்சியை தான. என்ன செய்ய. அதை வைத்து சமையலும்  செய்ய முடியாது. 

இது வெறும் Trailer மட்டும் தான் இதைப்போல் பல வர்ததக உலகின் ஆச்சரியங்களை இங்கு தமிழ்க்கடைகளுக்கு சென்றால் காண முடியும் . 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
On 11/15/2019 at 10:02 AM, குமாரசாமி said:

அவையள் சாறி எடுக்கப்போறதெண்டால் பின்னாலை போய் காத்து நிண்டு  காய்ஞ்சு கருவாடாய்  திரும்பி வாற கலாச்சாரத்திலை பிறந்திட்டன்....என்ன செய்ய? :(

உலகம் பூராகவும் இதுதான் நிலைமை போல... 😃

On 11/15/2019 at 4:02 PM, குமாரசாமி said:

அவையள் சாறி எடுக்கப்போறதெண்டால் பின்னாலை போய் காத்து நிண்டு  காய்ஞ்சு கருவாடாய்  திரும்பி வாற கலாச்சாரத்திலை பிறந்திட்டன்....என்ன செய்ய? :(

 

5 minutes ago, Maharajah said:

உலகம் பூராகவும் இதுதான் நிலைமை போல... 😃

வேற என்ன செய்யுறது. பசிக்குமே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.