Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் கோட்டாபய பதவியேற்றவுடன் தமிழர் பகுதிகளில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளார்களா?

Featured Replies

இலங்கையில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வரும் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழகத்தை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது இலங்கையில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற நிலையில், அவரது சகோதரர்களும் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டது தமிழர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி

 

 

கோட்டாபய ராஜபக்ஷ கைச்சாத்திட்ட வர்த்தமானி என்ன?

அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆயுதம் ஏந்திய முப்படை உறுப்பினர்களை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது சரத்திற்கு அமைய இந்த உத்தரவு ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட 25 மாவட்டங்களிலும் ஆயுதம் ஏந்திய முப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் அமல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

 

 

திடீரென இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானதா?

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து ஒரு வார காலத்திற்குள் இவ்வாறான வர்த்தமானி வெளியாகியுள்ள நிலையில், பிரச்சினைகள் எதுவும் இல்லாத நிலையில் இத்தகைய வர்த்தமானி எதற்கு என்ற கேள்வி இலங்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிய பின்னர், தமிழ் பேசும் மக்கள் மத்தியிலேயே அதிகளவில் இந்த கேள்வி எழுந்திருந்தது.

இது தொடர்பாக தெளிவுகளை பெற்றுக் கொள்வதற்காக பிபிசி தமிழ், இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவை தொடர்புக் கொண்டு வினவியது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக, மக்கள் எந்த விதத்திலும் அச்சம் கொள்ள தேவையில்லை என அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 260க்கும் அதிகமானோர் உயிரிழந்ததோடு, 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இதை அடுத்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏப்ரல் மாதம் 22ம் தேதி அவசர காலச் சட்டத்தை 9 ஆண்டுகளுக்கு பின்னர் அமல்படுத்தினார்.

இந்த அவசர காலச்சட்டம் ஜனாதிபதியினால் ஒவ்வொரு மாதமும் 22ஆம் தேதி நீடிக்கப்பட்டு வந்தது.

இதன்படி, குறித்த அவசர காலச்சட்டம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நான்கு மாதங்களுக்கு தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வந்தது.

அதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது சரத்தின்படி, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் போலீஸாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்க இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தும் வகையில் அப்போதைய ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது.

இராணுவ சோதனை சாவடிகள் தேவையேற்படும் பகுதிகளில் மட்டும் அதனை அவ்வாறே முன்னெடுத்து செல்லவும் அந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தலும் மாதந்தோறும் நீடிக்கப்பட வேண்டும் என்ற நிலையிலேயே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

புதிய ஜனாதிபதி ஒருவர் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டமையே, சமூகத்தில் சர்ச்சை தோன்ற காரணம் என இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தல், ஒவ்வொரு மாதமும் 22ஆம் தேதி ஜனாதிபதியினால் நீடிக்கப்பட வேண்டும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50532258

  • தொடங்கியவர்

அனைத்து மாவட்டங்களிலும் முப்படைகளின் பிரசன்னம் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை - பாதுகாப்பு செயலாளர் 

656X60-X150.gif
 

(எம்.மனோசித்ரா)

நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அனைத்து பிரஜைகளுக்கும் இன, மத பேதமற்ற கௌரவத்துடன் வாழ்வதற்கான சூழலை உறுதிப்படுத்துவதற்காகவே முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குனரத்ன, இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டு ஜனநாயகம் கேள்விக்குட்படுத்தப்பட மாட்டாது என்றும் உறுதியளித்தார்.

kamal.jpg

பொதுமக்களின் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், நாட்டில் அமைதியைப் பேணுவதற்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி தொடர்பில் வெளியிடப்படும் விமர்சனங்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே கமல் குனரத்ன இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாட்டில் சாதாரணமாக சட்டத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் ஏற்படும் போது பொலிஸாருக்கு அவை தொடர்பில் அறிவிக்கப்படும். நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாத்து நாட்டு மக்களுக்கு ஒழுக்கமானதும் அமைதியானதுமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறிருக்க ஏதேனுமொரு பிரதேசத்தில் பிரச்சினைகள் ஏற்படும் போது பொலிஸாரால் அதனைக்கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது, பொலிஸில் விஷேட பயிற்சி பெற்ற விஷேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். 

எனினும் கட்டுப்படுத்த முடியாத வகையில் பாரிய சம்பவங்கள் ஏதேனும் ஏற்பட்டால் , அவ்வாறான சந்தர்ப்பங்களில் மாத்திரமே பாதுகாப்பு படையினர் நேரடியாக பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். எனவே இது தொடர்பில் கலவரமடையத் தேவையில்லை.

இதன் மூலம் இராணுவ ஆட்சியை கொண்டு செல்லும் எதிர்பார்ப்பும் இல்லை. 

நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்கும் , அனைத்து பிரஜைகளுக்கும் இன, மத பேதமற்ற கௌரவத்துடன் வாழக் கூட சூழலை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம். 

இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் நாம் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றோம். 

இந்நிலையில் யாரேனும்,  நாட்டில் இராணுவ ஆட்சியை உருவாக்க முயற்சித்து ஜனநாயகத்தை கேள்விக்குட்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகக் நம்பினால், அவ்வாறு எந்த சந்தர்ப்பத்திலும் நடைபெறாது என்று பாதுகாப்பு செயலாளர் என்ற ரீதியில் நான் உறுதியளிக்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/69597

  • கருத்துக்கள உறவுகள்

75543703_463780144330050_133318545243321

தெற்கில் கோத்தா இப்படி மக்களை ஆச்சரியப்படுத்துகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி உண்மை தான், அண்ணளவாக 10 இராணுவ வீரர்கள் வீதியில் செல்லும் வாகனங்களை மறித்து சோதனை செய்வதை இன்று அவதானித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

75543703_463780144330050_133318545243321

தெற்கில் கோத்தா இப்படி மக்களை ஆச்சரியப்படுத்துகிறார்.

கண்ணதாசன், "விளக்கு மட்டுமா சிவப்பு?" என்ற பெயரில் எழுதிய உண்மைக்கதைக்கு தான் எழுதிய முகவுரையில் இந்தியாவுக்கு நல்லவனான ஒரு சர்வாதிகாரி தேவை என்று எழுதியிருந்தார். இலங்கைக்கும் அப்படி ஒருவர்தான் தேவைப்பட்டது. ரணசிங்க பிரேமதாச அப்படி ஒருவராக தான் இருந்தார். ஆனால் அவரது காலம் குறுக்கப்பட்டு விட்டது.

கோத்தபாயவின் ஜனாதிபதியான பின்னான செயற்பாடுகள் மிகவும் போற்ற தக்கவையாக இருக்கின்றன. இதனை தனி ஒருவராக எதிர்வு கூறிய கள உறுப்பினர் ரதிக்கு நிறைவான பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஏராளன் said:

இந்த செய்தி உண்மை தான், அண்ணளவாக 10 இராணுவ வீரர்கள் வீதியில் செல்லும் வாகனங்களை மறித்து சோதனை செய்வதை இன்று அவதானித்தேன்.

தகவலுக்கு நன்றி எராளன் தமிழர் பகுதியில் மாத்திரம் தான் இப்படியா ?

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

தகவலுக்கு நன்றி எராளன் தமிழர் பகுதியில் மாத்திரம் தான் இப்படியா ?

 

உடுவில் பகுதியில்கண்டேன், நாட்டின் ஏனைய பிரதேச தகவல்கள் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா வல்லவரோ நல்லவரோ நான் அறிய மேற்குலகு நாடுகள்  இந்த நிமிடம் வரை அவர் வெற்றி பெற்றதுக்கு ஒரு வாழ்த்து செய்தியோ அல்லது வழக்கமான சம்பிரதாய நாடுகளுக்கு இடையே பரிமாறப்படும் வரவேற்ப்பு செய்திகள் கூட பரிமாறப்படவில்லை .காரணம் சொல்ல தேவையில்லை விளங்குபவர்களுக்கு விளங்கும் என்று நான் நினைத்தது என் முட்டாள்தனம் .

 

2 hours ago, பெருமாள் said:

கோத்தா வல்லவரோ நல்லவரோ நான் அறிய மேற்குலகு நாடுகள்  இந்த நிமிடம் வரை அவர் வெற்றி பெற்றதுக்கு ஒரு வாழ்த்து செய்தியோ அல்லது வழக்கமான சம்பிரதாய நாடுகளுக்கு இடையே பரிமாறப்படும் வரவேற்ப்பு செய்திகள் கூட பரிமாறப்படவில்லை .காரணம் சொல்ல தேவையில்லை விளங்குபவர்களுக்கு விளங்கும் என்று நான் நினைத்தது என் முட்டாள்தனம் .

மேற்குலக நாடுகள் ஏற்கனவே தெரிவித்திருந்தன. உங்கள் கண்ணில் படவில்லை என நினைக்கிறேன்.

EJttL4pXUAAX8PT?format=jpg&name=large

EJttM_xWsAAUsqw?format=png&name=small

EJttNhKXkAAUy9g?format=jpg&name=medium

ஐரோப்பிய ஒன்றியம்.

Statement by the Spokesperson following the 2019 Presidential Elections in Sri Lanka

18/11/2019

Presidential elections in Sri Lanka took place on Saturday 16 November. The election campaign and process have unfolded in an overall peaceful environment, despite reports of a few violent incidents. This confirms the stability of the democratic institutions and attachment of the Sri Lankan people to their fundamental rights and freedoms after the brutal Easter Sunday terrorist attacks. 

As a sign of trust, and reflecting our close cooperation on good governance and democracy, Sri Lanka welcomed the European Union's Election Observation Mission. This is the 6th Sri Lankan election observed by the EU. Preliminary findings indicate that the fundamental freedoms and rights of the citizens of the country have largely been respected. The EU's Election Observation Mission recognised that elections were administered efficiently by Sri Lanka's Election Commission

The EU looks forward to continue working with Sri Lanka on the wide range of issues covered by our partnership, from trade to cooperation in the area of foreign policy and security. We remain fully supportive of the broader reform agenda in Sri Lanka. We congratulate President Rajapaksa and look forward to working with him to uphold Sri Lanka’s commitments to implement international conventions on fundamental rights and to continue efforts aimed at improving governance, human rights and reconciliation. It is crucial that Sri Lanka continues to move forward, bringing the whole country together.

https://eeas.europa.eu/headquarters/headquarters-homepage/70576/statement-spokesperson-following-2019-presidential-elections-sri-lanka_en

On ‎11‎/‎24‎/‎2019 at 8:44 AM, nunavilan said:

75543703_463780144330050_133318545243321

தெற்கில் கோத்தா இப்படி மக்களை ஆச்சரியப்படுத்துகிறார்.

ஆரம்ப நாட்களில் மைத்திரியும் சாதாரண நபர் போன்றே தன் செயற்பாடுகளை மேற்கொண்டு இருந்தார். விமானப் பயணங்களில் சாதாரண வகுப்பில் பயணிப்பது, விஐபி வாசலினூடாக வெளியேறாது சாதாரண பயணிகளுக்கான வழிகளினூடாக வெளியேறுவது, உத்தியோகப்பற்ற வெளி நாட்டு பயணங்களின் போது தனித்தோ அல்லது மனைவியுடன் மாத்திரம் பயணிப்பது என்று.... பார்ப்பம் இவர் பாராளுமன்றத் தேர்தலின் பின் எப்படி நடந்து கொள்கின்றார் என

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

ஆரம்ப நாட்களில் மைத்திரியும் சாதாரண நபர் போன்றே தன் செயற்பாடுகளை மேற்கொண்டு இருந்தார். விமானப் பயணங்களில் சாதாரண வகுப்பில் பயணிப்பது, விஐபி வாசலினூடாக வெளியேறாது சாதாரண பயணிகளுக்கான வழிகளினூடாக வெளியேறுவது, உத்தியோகப்பற்ற வெளி நாட்டு பயணங்களின் போது தனித்தோ அல்லது மனைவியுடன் மாத்திரம் பயணிப்பது என்று.... பார்ப்பம் இவர் பாராளுமன்றத் தேர்தலின் பின் எப்படி நடந்து கொள்கின்றார் என

அந்த நடிப்பை பார்த்து நான் இங்கு கூட எழுதினேன் 
இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதனா என்று....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Lara said:

மேற்குலக நாடுகள் ஏற்கனவே தெரிவித்திருந்தன. உங்கள் கண்ணில் படவில்லை என நினைக்கிறேன்.

EU ஐ தவிர, அரசு மட்டத்தில் தெரிவித்தவர்கள், சீனா, maldives, கிந்தியா(பக்சவுக்கு உண்மையில் உணடா  ??), ஈரான்.

US, pompeo தெரிவித்தது ஆகவும், அது வெளியிடப்படாமல், UNHRC நினைவுபடுதலை மட்டும் வெளியிட்டதாகவும், ஓர் செய்தி அடிபடுகிறது.

ஆனாலும், US embassy கோத்தவை வாழ்த்தவில்லை. தம் வேலை ஆகுவதற்கு தூபம். 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎25‎/‎2019 at 2:11 PM, நிழலி said:

ஆரம்ப நாட்களில் மைத்திரியும் சாதாரண நபர் போன்றே தன் செயற்பாடுகளை மேற்கொண்டு இருந்தார். விமானப் பயணங்களில் சாதாரண வகுப்பில் பயணிப்பது, விஐபி வாசலினூடாக வெளியேறாது சாதாரண பயணிகளுக்கான வழிகளினூடாக வெளியேறுவது, உத்தியோகப்பற்ற வெளி நாட்டு பயணங்களின் போது தனித்தோ அல்லது மனைவியுடன் மாத்திரம் பயணிப்பது என்று.... பார்ப்பம் இவர் பாராளுமன்றத் தேர்தலின் பின் எப்படி நடந்து கொள்கின்றார் என

மைத்திரி சில லூசுத்தனமான வேலைகள் செய்தாலும் பதவியிலிருந்து விலகும் வரை சொன்ன மாதிரியே ஆட்சி செய்தார்...கோத்தாவும் அப்படித் தான் இருப்பார் என்று எதிர் பார்க்கிறேன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.