Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் தான் கட்சி ஆரம்பித்தது ஆட்சியை பிடிச்சு முதலைச்சர் ஆகவெல்லாம் இல்லையாம். இப்படியான  பேச்சுகளை பேசுவதற்காகவாம் என்று தன் அரசியல் குறிக்கோலை குபீரென போட்டுடைத்தார் தமிபிகளின் முன்

 

 

  • Replies 193
  • Views 19.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவரிடமும் விடுதலைப்புலிகளிடமும் நிறையவே விருந்தோம்பல் பண்புகள் இருந்தன. இவர் மட்டுமல்ல.. பலரும் கண்டதும் சொன்னதும் தான்... எரிக் சொல்கைம் உட்பட.

இதில் நேரடி சாட்சியங்கள் இன்மையால்.. சிலர் புருடா என்கின்றனர்.. அவ்வளவே.

கேட்போரின்.. சுவாரசியத்திற்காக சீமான் சிலதை அடைமொழியாக்கிச் சொல்லி இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஹ‌லோ மிஸ்ர‌ர் பிழ‌ப்பு , நீங்க‌ள் என்னை விட‌ சிறுவ‌ன் போல‌ தெரியுது /

உந்த‌ போலிம‌ர் தொலைக் காட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு எதிரான‌ தொலைக் காட்சி , அண்ண‌ன் சீமான் முத‌ல் சொன்ன‌ ப‌ல‌த‌ வெட்டி கொத்தி அண்ண‌ன் சீமானை கேவ‌ல‌ப் ப‌டுத்த‌ தான் இந்த‌ காணொளி , யூடுப்பில் போய் முழு காணொளியையும் பாருங்கோ , மூன்று நிமிட‌ காணொளியில் நிறைய‌ பித்த‌லாட்ட‌ம் செய்து இருக்கிறாங்க‌ள் இந்த போலி மர் தொலைக் காட்சி 

( ஆமைக் க‌றி ஏக்கே என்று கேலி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு அண்ண‌ன் ம‌றுப‌டியும் சொன்ன‌ விள‌க்க‌த்தை வெட்டி ஒட்டி போட்டு இருக்கின‌ம் அம்ம‌ட்டும் தான்)

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் புருடா பேச்சுகள் இப்போது அதிகம் பேசுகிறார்!

  • கருத்துக்கள உறவுகள்

large.EF880AA4-3662-48A9-BBDC-5BD0BB90DAE2.jpeg.7a350465aad255e2859c0f304d65b0da.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
On 11/29/2019 at 1:06 AM, விளங்க நினைப்பவன் said:

சீமான் புருடா பேச்சுகள் இப்போது அதிகம் பேசுகிறார்!

அநேகமானவை மற்றவர்களால் சீமானின் வளர்ச்சியை பொறுக்காது கிட்டத்தட்ட ஜோக்கர் நிலையில் வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ் கள் அதை ஊதி பெருப்பித்து கொண்டு இந்த டிவிகள் பார்ப்பம் இந்த தாக்குதல்களில் இருந்து எப்படி எழுந்துவருகிறார் என்று .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

அநேகமானவை மற்றவர்களால் சீமானின் வளர்ச்சியை பொறுக்காது கிட்டத்தட்ட ஜோக்கர் நிலையில் வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ் கள் அதை ஊதி பெருப்பித்து கொண்டு இந்த டிவிகள் பார்ப்பம் இந்த தாக்குதல்களில் இருந்து எப்படி எழுந்துவருகிறார் என்று .

ந‌ல்ல‌ விள‌க்க‌ம் பெருமாள் அண்ணா , மாவீர‌ர் துயிலும் இல்ல‌த்தை திற‌ந்து வைச்ச‌ முன்னால் போராளியின் அப்பாவும் அண்ண‌ன் சீமான் பேசின‌தை முன்னுக்கு இருந்து கேட்டு கொண்டு தான் இருந்தார் , இன்னும் ப‌ல‌ர் , முத‌ல் க‌ரும்புலி( மில்ல‌ரின் அம்மா தொட்டு ப‌ல‌ரும் அண்ண‌ன் சீமானின் பேச்சை கேக்கின‌ம் )

அவைக‌ள் எல்லாம் பொறுமையாய் இருக்க‌ , எங்கையோ தூர‌ தேச‌த்தில் இருந்து கொண்டு அண்ண‌ன் சீமான் மீது தேவை இல்லாம‌  க‌ல் எறிய‌ நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு தான் அதிக‌ம் வேர்க்குது /

மேல‌ நீங்க‌ள் சொன்ன‌து போல‌ தான் அண்ண‌ன் சீமானின் வ‌ள‌ர்சியை பொறுத்து கொள்ள‌ முடியாம‌ , சும்மா க‌ண்ட‌தை எல்லாம் எழுதின‌ம் ,  முன்னால் போராளிக‌ள் கூட‌ இதுவ‌ரை அண்ண‌ன் சீமான் மீது  குற்ற‌ சாட்டுக‌ள் வைச்ச‌து இல்லை , 

இவ‌ர்க‌ள் யாரை ஆத‌ரிக்கின‌ம் என்று சொல்லி போட்டு , அண்ண‌ன் சீமான் மீது விம‌ர்ச‌ன‌த்தை வைக்க‌ட்டும் ,  யாழில் பூனைப் பெய‌ரில் எழுதுவ‌து வீர‌ம் இல்லை அது மிக‌ பெரிய‌ கோழைத் த‌ன‌ம் ,

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் திருந்தேல்லை

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் அதீதமான பேச்சு, இளசுகளை முறுக்கேற்றி கவரலாம், ஆனால் பொதுமக்களை முகம் சுளிக்கும் அளவிற்கு கொண்டு செல்லாமல், ஈழ விசயத்தை பொறுப்புடன், எப்பொழுதும் மற்ற தமிழ் தேசிய தலைகளுடன் ஒருங்கிணைந்து காப்பது அனைவருக்கும் நலம்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ராசவன்னியன் said:

சீமானின் அதீதமான பேச்சு, இளசுகளை முறுக்கேற்றி கவரலாம், ஆனால் பொதுமக்களை முகம் சுளிக்கும் அளவிற்கு கொண்டு செல்லாமல், ஈழ விசயத்தை பொறுப்புடன், எப்பொழுதும் மற்ற தமிழ் தேசிய தலைகளுடன் ஒருங்கிணைந்து காப்பது அனைவருக்கும் நலம்.

மற்ற‌ ஆட்க‌ள் என்று யாரை சொல்லுறீங்க‌ள் ஜ‌யா , வைக்கோ , திருமாள‌வ‌ன் , ராம‌தாஸ் , இவ‌ங்க‌ள் தேர்த‌ல் வ‌ரும் நேர‌ம் கூட்ட‌னிக்கு மாறி மாறி போயிடுவின‌ம் , இவ‌ர்க‌ளுட‌ன் எப்ப‌டி யார் ஒன்னா ப‌ய‌ணிப்பின‌ம் , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ , ராம‌தாஸ் வைக்கோ திருமாள‌வ‌ன் , இவ‌ர்க‌ள் என்ன‌த்தை செய்தார்க‌ள் , கூட்ட‌னிக்கு பேர‌ம் பேசி அப்ப‌ ஒரு க‌தை இப்ப‌ ஒரு க‌தை என்று தானே இவ‌ர்க‌ளின் அர‌சிய‌ல் , இவ‌ர்க‌ளோடு யார் ஒன்னா ப‌ய‌ணிப்பின‌ம் 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வகையில் மதுரையில் நேற்று (நவ.,27) நடந்த கூட்டத்தில் சீமான் பேசுகையில், நாம் தமிழர் கட்சியின் போஸ்டர்களை கிழிப்பவர்கள், தம்பிகள் மீது வழக்கு போடுபவர்கள் எல்லோரும் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்குள் இறந்துவிடுங்கள். இல்லையென்றால் அவர்களை கொன்றுவிடுவேன். வழக்கு போடுபவர்களின் பெயர்ப்பட்டியலை தயார் செய்து வைத்துள்ளேன். வன்முறைக்கு எதிராக வன்முறையை கையில் எடுப்பதும் அகிம்சைதான்

வரும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் மட்டுமே மக்கள் வாழ முடியும் இல்லையெனில் செத்து மடிய வேண்டியதுதான். அடுத்து வரும் தேர்தலில் ஆட்சியை பிடித்தால் வீட்டுக்கு ஒரு கார் வழங்க போகிறேன். இவ்வாறு சீமான் பேசினார். 
இவரின் தொடர் சர்ச்சை பேச்சு பழகிவிட்டாலும், இவரின் தம்பிகள் விழித்து கொள்ளும் வரையில் இதுபோன்ற திமிர் பேச்சுகளை சீமான் தொடர தான் செய்வார் போலும்.

https://www.google.ch/amp/s/m.dinamalar.com/detail.php%3fid=2421701

 

  • கருத்துக்கள உறவுகள்

இளவயதில் அமிர்தலிங்கம், மாவை குறூப் இளசுகளை உசுப்பேத்தி ரத்தப்பொட்டு வச்சி அரசியல் செய்ததிற்கும், இப்போது சீமான் இளசுகளை உசுப்பேத்தி அரசியல் செய்வதற்கும் அதிக வேறுபாடில்லை என தோன்றுகிறது.

உணர்வுகளுடன் கூடிய வாழ்வாதாரப் பிரச்சினை ஈழத்தில், ஆனால் அது தமிழகத்தில் அரசியல் செய்ய தொட்டுக்கொள்ளும் ஊறுகாயாக எந்த அரசியல்வாதிகளும் பயன்படுத்த விடாமல் வலு கவனமாக இங்கிருக்கும் அனைவரையும் தீர்வு நோக்கி அரவணைத்து செல்லக்கூடிய தலைமை ஈழத்தில்தான் தேவை.

அப்படிப்பட்ட தலைமையை ஈழத்தில் தேடுவதை விடுத்து தமிழகத்தில் தேடினால் பயனிருக்காது. இங்கே ஆதரவு தளம் கிட்டும், இந்தியாவுடன் இருக்கும் வரை தீர்வு கிடைக்காது.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொல்லும் நல்ல விடயங்களைப் பற்றி கதைக்க உற்சாகப்படுத்த யாருமே முன்வருவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடையங்களை யாரும் மறுக்கவில்லை, புனைவுகளை தவிர்க்க சொல்கிறோம், இல்லையெனில் நல்லவைகளும் காலப்போக்கில் எடுபடாமல் போய்விடும்.

இங்கே திருமுருகனும் வேண்டும், சீமானும் வேண்டும், நெடுமாறனும் வேண்டும், வைகோவும் வேண்டும், ஆனால் யாரிடமும் தீர்க்கதரிசனமும், விலைபோகாத தன்மையும், வேண்டிய அரசியல் பக்குவமும், சாதுர்யமும், மக்களை கவரும் வசீகரமும் இல்லை என்பதுதான் யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/28/2019 at 8:06 PM, விளங்க நினைப்பவன் said:

சீமான் புருடா பேச்சுகள் இப்போது அதிகம் பேசுகிறார்!

அதனால் என்ன  ? 

3 hours ago, வல்வை சகாறா said:

இன்னும் திருந்தேல்லை

யாரை சுட்டுகிறீர்கள்  ? 

எதனை திருத்த வேண்டும்  ? 

திருத்த வேண்டுமானால் எவ்வாறு இருக்க வேண்டும்   ? 

 

கூறுவீர்களா  ?? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

இளவயதில் அமிர்தலிங்கம், மாவை குறூப் இளசுகளை உசுப்பேத்தி ரத்தப்பொட்டு வச்சி அரசியல் செய்ததிற்கும், இப்போது சீமான் இளசுகளை உசுப்பேத்தி அரசியல் செய்வதற்கும் அதிக வேறுபாடில்லை என தோன்றுகிறது.

உணர்வுகளுடன் கூடிய வாழ்வாதாரப் பிரச்சினை ஈழத்தில், ஆனால் அது தமிழகத்தில் அரசியல் செய்ய தொட்டுக்கொள்ளும் ஊறுகாயாக எந்த அரசியல்வாதிகளும் பயன்படுத்த விடாமல் வலு கவனமாக இங்கிருக்கும் அனைவரையும் தீர்வு நோக்கி அரவணைத்து செல்லக்கூடிய தலைமை ஈழத்தில்தான் தேவை.

அப்படிப்பட்ட தலைமையை ஈழத்தில் தேடுவதை விடுத்து தமிழகத்தில் தேடினால் பயனிருக்காது. இங்கே ஆதரவு தளம் கிட்டும், இந்தியாவுடன் இருக்கும் வரை தீர்வு கிடைக்காது.

 

நீங்கள் கூறுவதுடன் உடன்படுகிறேன். ஆனால் எமக்காக குரல் கொடுக்கும் ஒருசிலரையும் நாங்கள் அவதானமாக கையாளவேண்டும்.  எங்கள் விமரிசனங்கள் அவர்களை நோகடிக்க கூடாது அல்லவா  ? 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Maharajah said:

 

யாரை சுட்டுகிறீர்கள்  ? 

நம்மைத்தான்

எதனை திருத்த வேண்டும்  ? 

அடிப்படை புரிதலே இல்லாமல் எதிர்காலத்தில் தீமையாக வலம் வர இருப்பதை இன்றைய நாளில் நன்மையென்று கருதி பொய்களை ஏற்கிறோம் கண்டு கொள்ளாமல் விடுவோம் என்பதை....

திருத்த வேண்டுமானால் எவ்வாறு இருக்க வேண்டும்   ? 

இன்று சீமானுக்கு தமிழகத்தில் பலதரப்பட்டவர்கள் மத்தியிலிருந்தும் எதிர்ப்பு தோன்றுவதற்கு நாம்தான் முழுக்காரணம் என்பதை புலம்பெயர்ந்த ஈழத்தமிழினம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். வக்கற்றவர்களாக நின்றபோது தெரிந்த வெளிச்சத்திக்கை நோக்கி  ஆரவாரப்பட்டதில் தவறில்லை. எங்கள் ஆரவாரம் விசில்களாகவும் கரகோசங்களாகவும் வானைப்பிளந்தன. அதுவே சீமானுக்கு  உற்சாகம் கொடுக்கும் ஊட்டமாக மாறியது. சிங்களத்தை நோக்கி எக்காளமிட்ட சீமானின் போக்கு தமிழகத்தில் விழிப்புணர்வைத்தூண்டுவதற்காக தமிழக அரசியல் தலைவர்களையெல்லாம் மென்று விழுங்கியது. நொந்திருந்த எங்களுக்கு அது ஒத்தடம் கொடுத்தது. நாங்களும் இன்னும் இன்னும் என்று உற்சாகப்படுத்தினோம். இப்போது அந்த வெளிச்சம் எங்களையே எரிக்கும் பெருந்தணலாக மாறி வருவதை நாம் யாரும் உணரத்தயாரில்லை. அன்றைய நாட்களில் பண்பற்ற பேச்சுகளுக்கு ஆதரவு கொடுத்த நாம் அவருக்கு எமது போராட்டத்தின் பண்புநிலையை எடுத்துரைக்க மறந்துவிட்டோம்.எல்லோரையும் அவர் எடுத்தெறிந்து பேசும்போது அவதானித்து அவர் பாதையைத் திருத்த நினைக்கவில்லை. இன்று அதி உச்ச அகங்காரமான பேச்சுக்கு சீமான் என்று சொல்லும் அளவுக்கு அவர் பேச்சு சென்று கொண்டிருக்கிறது. எங்கள் போராட்டம் அகங்காரத்திற்கு உரியதல்ல. எங்கள் வாழ்வுக்குரியது. அகங்காரத்தின்பால் எங்கள் தலைமை எங்குமே எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தியதில்லை. நான் பிரபாகரன் தம்பி என்று மூச்சுக்கு மூச்சு சொன்னபடி எங்கள் தலைமையைின் பண்புகளை வேறு எவராலும் இவ்வளவு மோசமாகக் கேவலப்படுத்த முடியாது.

எங்கள் விடுதலை என்பது இன்னும் நீண்ட பயணத்திற்குரியது. பட்டென்றும் சட்டென்றும் முடிக்க முடியாத விடயம். எங்கள் விடுதலை தொடர்பான நீண்ட நோக்கற்ற பேச்சுக்களும், எல்லோரையும் எதிரியாக்கும் குண இயல்பும் எங்கள் விடுதலைக்கு உரந்தரவல்லன அல்ல. குண இயல்பும் அகங்காரப் பேச்சும் சீமானிடமிருந்து மாற வேண்டும். குதர்க்கமாக கிடைப்பவரை எல்லாம் அவமானப்படுத்தும் செயல்களை சீமான் கைவிடவேண்டும். அதுவே சீமானுக்கான அரசியல் எதிர்காலத்தை உருவாக்கக் கூடியது. உண்மையிலேயே சீமானில் அக்கறை உள்ளவர்களாக நாங்கள் யாரேனும் இருந்திருந்தால் எப்போதோ சீமானுக்கு இவ்விடயம் புரியவைக்கப்பட்டிருக்கும். நாம்தான் மௌனிகள் ஆயிற்றே… எங்கே சீமானுக்கு எதிரான கருத்தைச் சொன்னால் அதனால் சீமானின் செல்வாக்கு பாதிக்கப்பட்டுவிடும் என்று விட்டுவிட்டோம் இப்போது செல்லரிக்கிறது.

கூறுவீர்களா  ?? 

இது சிரிப்புப் பகுதி ஆளை விடுங்கைய்யா.....

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வல்வை சகாறா said:

இது சிரிப்புப் பகுதி ஆளை விடுங்கைய்யா.....

உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.  ஆனால் எதனையும் தெளிவாக,  பண்பாக கூறும்போது மிகப் பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வர் என்பது என் நம்பிக்கை. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் மீதான விமர்சனத்தை முன் வைத்தபோது கிணத்துத்தவளையாக கருதப்பட்டேன் கடந்த மாவீரர் நாள்வரை எனது ப்ரோபைலில் கிணத்துத்தவளை என்பது எனக்கு பொன்னாடையைக் காட்டிலும் பெறுமதி வாய்ந்ததெனக் குறிப்பிட்டிருந்தேன். கடந்த மாவீரர் நாளிலேயே அதனை அகற்றி

"முற்றுப்புள்ளி என்ற பின்னும் முழுமை கொண்ட பேரெண்ணம் இற்றுப்போன திரை கிழித்து இனி எழுந்து நடமாடும் உற்றடக்க முடியாது உருவம் கண்ணில் தெரியாது" என்று மாற்றினேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

ச‌ரி அவ‌ர் க‌ண‌ற்று த‌வ‌ளையோ அதுக்கு மேலையோ இருக்க‌ட்டும் , அந்த‌ கிண‌ற்று த‌வ‌ளையை 2008ம் ஆண்டு வ‌ன்னிக்கு அழைத்து விருந்து குடுத்த‌து எம் த‌லைவ‌ர் ?
உயிருக்கு ப‌ய‌ந்து க‌ன‌டாவுக்கு ஓடி வ‌ந்து த‌ஞ்ச‌ம் புகுந்து விட்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ளை குறை சொல்லுவ‌து  எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம் , 

அண்ண‌ன் சூசை கூட‌ புல‌ம்பெய‌ர் நாட்டு த‌மிழீழ‌ எலிக‌ளிட‌ம் சொல்ல‌ விரும்பாத‌ விடைய‌ங்க‌ளை சீமானிட‌ம் சொல்ல‌ சொன்னார் ,

வ‌ன்னியில் 2008ம் ஆண்டு அண்ண‌ன் சீமான் யாருட‌ன் எல்லாம் இருந்தார் அங்கு என்ன‌த்துக்காக‌ அண்ணன் சீமான் வ‌ன்னிக்கு அழைக்க‌ ப‌ட்டார் என்ப‌தும் முன்னால் போராளிக‌ள் ப‌ல‌ருக்கும் தெரியும் , 2009ம் ஆண்டு அம்ம‌ட்டு பேரும் இருக்க‌ ( த‌மிழின‌த் துரோகி க‌ருணாநிதி ஏன் அண்ண‌ன் சீமானை ம‌ட்டும் ப‌ல‌ த‌ட‌வை சிறைப்ப‌டித்தினார் )

க‌ன‌டாவில் வ‌சிக்கும் உங்க‌ளால் குறைந்த‌து எம் இன‌ அழிப்பை ப‌ற்றி க‌னேடிய‌ ம‌க்க‌ளுக்கு எடுத்து சொல்லி இருப்பிங்க‌ளா  துண்ட‌ அறிக்கை அடித்து ம‌க்க‌ளை கூட்டி ,   200 பேரை கூட‌ கூட்டி ஒரு ஆர்பாட்ட‌ம் செய்ய‌ முடியாத‌ கூட்ட‌ம் எல்லாம் , அண்ண‌ன் சீமானை விம‌ர்சிக்க‌லாமா , 

வாயால் வ‌டை சுட்டு அடுத்த‌வையை கேலி ப‌ண்ணின‌து போதும் , இனி உங்க‌ளால் துனிவோடு எம் போராட்ட‌த்துக்கு எதை எல்லாம் முன்னெடுக்க‌ முடியுமோ அதை முன்னெடுங்கோ , அப்போது உங்க‌ளை ஒரு த‌ரும் குறை சொல்ல‌ மாட்டின‌ம் / 

காசி ஆன‌ந்த‌ன் த‌மிழ் நாட்டில் இருந்து 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு என்ன‌த்தை புடுங்கினார் , அவ‌ர்க‌ள் ம‌த்தியில் அண்ண‌  சீமான் எவ‌ள‌வோ திற‌ம் 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maharajah said:
On 11/29/2019 at 2:06 AM, விளங்க நினைப்பவன் said:

சீமான் புருடா பேச்சுகள் இப்போது அதிகம் பேசுகிறார்!

அதனால் என்ன  ? 

சீமானது புருடா பேச்சுகளை இரசித்து அவர் இவ்வளவு கெட்ட பெயர் வாங்க உங்களை போன்றோர் காரணம்.

2 hours ago, ராசவன்னியன் said:

நல்ல விடையங்களை யாரும் மறுக்கவில்லை, புனைவுகளை தவிர்க்க சொல்கிறோம், இல்லையெனில் நல்லவைகளும் காலப்போக்கில் எடுபடாமல் போய்விடும்.

 

👍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

இங்கே திருமுருகனும் வேண்டும், சீமானும் வேண்டும், நெடுமாறனும் வேண்டும், வைகோவும் வேண்டும், ஆனால் யாரிடமும் தீர்க்கதரிசனமும், விலைபோகாத தன்மையும், வேண்டிய அரசியல் பக்குவமும், சாதுர்யமும், மக்களை கவரும் வசீகரமும் இல்லை என்பதுதான் யதார்த்தம்.

அப்ப சீமானின் கூட்டங்களில் வருபவர்கள் குவாட்டருக்கும் புரியானிக்குமா வருகிறார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

சீமானது புருடா பேச்சுகளை இரசித்து அவர் இவ்வளவு கெட்ட பெயர் வாங்க உங்களை போன்றோர் காரணம்.

👍

நீங்கள் இன்னும் கொஞ்சம் நயமாக பேசலாமே  ? ஏன் இவ்வளவு கோபம் ? 

1 hour ago, பெருமாள் said:

அப்ப சீமானின் கூட்டங்களில் வருபவர்கள் குவாட்டருக்கும் புரியானிக்குமா வருகிறார்கள் ?

எங்கள் கருத்திடும் பாங்கு,  எங்களிடம் பரிவோடிருக்கும் சிலரையும் இல்லாதொழித்துவிடும் என்பதை நாங்கள் மறக்க கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

அப்ப சீமானின் கூட்டங்களில் வருபவர்கள் குவாட்டருக்கும் புரியானிக்குமா வருகிறார்கள் ?

எங்காவது அப்படி சொல்லி இருக்கிறேனா..?

ஒவ்வொருவருக்கும் சில விருப்பு, வெறுப்புகள் இருக்கின்றன, சிலருக்கு சீமானின் உணர்ச்சிகரமான பேச்சுகள் பிடித்திருக்கிறது, ஆனால் அவைகள் பெரும்பான்மையோரை கவர்ந்திழுத்து ஈழத்திற்கு உதவும் சக்தியாக மாறுமா? என்பதுதான் கேள்வி. மாறினால் அனைவருக்கும் சந்தோசம்

சில முதிர்ச்சியற்ற பேச்சுகள் இருக்கும் ஆதரவு தளத்தையும் குறைத்துவிடக் கூடாது என்ற ஆதங்கம் தானப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.