Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இடமில்லை? ராஜ்நாத் விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோடி அரசு ஒப்புதல்

குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இடமில்லை? ராஜ்நாத் விளக்கம்

இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

அண்டை இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்காஸ்தான் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தலுக்கு உள்ளான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்தர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய ஆறு மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை நோக்கமாக கொண்டு குடியுரிமை (திருத்த) மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறது,

இந்நிலையில் இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்த மசோதா நிறைவேறினாலும் இலங்கையில் இருந்து வந்து தமிழகத்தில் அகதிகளாக வசிக்கும் மக்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்காது.

ஆனால் அதேநேரம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்காஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தற்போதுள்ள சட்டங்களை திருத்தி இந்த மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது.

மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் இந்த மசோதா அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு முரணானது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்நிலையில் குடியுரிமைதிருத்த மசோதா குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், குடியுரிமை (திருத்த) மசோதாவின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு இந்திய குடியரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏன் குடியுரிமை திருத்த மசோதாவில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், "இலங்கையில் உள்ள தமிழர்கள் தங்கள் மதத்திற்காக மட்டுமே துன்புறுத்தப்படவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பிரச்சினை தீர்க்கப்பட்டது. மோதலுக்கும் துன்புறுத்தலுக்கும் வித்தியாசம் உள்ளது" என்றார்.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/why-tamils-in-sri-lanka-are-not-covered-under-cab-rajnath-singh-explain-370782.html

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டத்தக்க விடையம், எப்போ ஒரு காலத்தில் தமிழகத்தில் வாழும் எமது உறவுகள் தங்கள் தாய் நாடு திரும்பியே ஆகவேண்டும் எனும் கட்டாயம் தொடரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பிரச்சினை தீர்க்கப்பட்டது.

பிரச்சனையைத் தீர்க்கும்படி வேண்டிப் போராடிய அனைவரும் துன்புறுத்தப்படாது நாட்டைவிட்டு வெளியேறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள். அதனால் தமிழர் பிரச்சனையும் தீர்ந்தது, என்னே இந்தியனின் நீதி. 😎

8 hours ago, Elugnajiru said:

பாராட்டத்தக்க விடையம், எப்போ ஒரு காலத்தில் தமிழகத்தில் வாழும் எமது உறவுகள் தங்கள் தாய் நாடு திரும்பியே ஆகவேண்டும் எனும் கட்டாயம் தொடரவேண்டும்.

அதே போன்று அவுஸ், ஐரோப்பா, வட அமெரிக்கா பகுதிகளுக்கு அகதியாக சென்று குடியேறிய தமிழர்களையும் குடியுரிமையை ரத்து செய்து என்றாவது ஒரு நாள் திருப்பி அனுப்பினால் நல்லம் தானே?

இந்தியாவில் வாழும் 1 லட்சத்துக்கும் மேலான இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை தர பரிசீலிக்க வேண்டும்: ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர்

35 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும். ஒரு லட்சத்துக்கு மேல் உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை தர பரிசீலிக்க வேண்டும் என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்தோர்க்கு மட்டுமே குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவையில் நேற்று குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கேள்வி நேரத்துக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்து பேசினார். பின்னர் மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80  உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம் மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. இந்நிலையில் 35 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும் என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருக்கும் இந்து, சீக்கியர், கிறித்துவர், பார்சி, புத்தம், ஜெயின மதம் சார்ந்தோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க ஏதுவாக குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மதங்களைச் சார்ந்த மக்கள் 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என மசோதா விளக்குகிறது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=547572

 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிழலி said:

அதே போன்று அவுஸ், ஐரோப்பா, வட அமெரிக்கா பகுதிகளுக்கு அகதியாக சென்று குடியேறிய தமிழர்களையும் குடியுரிமையை ரத்து செய்து என்றாவது ஒரு நாள் திருப்பி அனுப்பினால் நல்லம் தானே?

இவர்களுக்கு குடி உரிமை வழங்கப்பட்டாலும், இவர்களை சமூகத்தில் இருந்து  பிரித்தே வைத்திருப்பதற்கு அரசு முற்ப்படும். இந்த சட்ட சிக்கல்களை தவிர்பதற்காகவே, குடி உரிமையை  அரசு நிராகரித்தது. 
அந்நிலையில், இவர்கள் முன்னேறுவது மிகவும் கடினம்.  

உயிருக்கு உத்தரவாதம் இருந்தால், இவர்களுக்கு மிகவும் வசதியான, வாய்ப்பான இடம்,  குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கே, அவரவரின் சொந்த இடங்கள். 

ஆனால், ஐரோப்பா, கனடா இல் உள்ள தமிழர்களின் நிலை இவர்களை விட எத்தனையோ மடங்கு மேலானது, நிரந்தர குடி உரிமை இல்லாவிட்டாலும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kadancha said:

 

ஆனால், ஐரோப்பா, கனடா இல் உள்ள தமிழர்களின் நிலை இவர்களை விட எத்தனையோ மடங்கு மேலானது, நிரந்தர குடி உரிமை இல்லாவிட்டாலும்.

இவர்கள் பெரும்பாலும் பொருளாதார அகதிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, colomban said:

இவர்கள் பெரும்பாலும் பொருளாதார அகதிகள்

அந்த பொருளாதார அகதிகள் இருந்தபடியால் தான் சிங்களவன் எமது நாட்டை சீரழித்த பின்னரும் ஓரளவிற்காவது சொந்தக்காலில் நிற்கின்றது.
அந்த பொருளாதார அகதிகளின் பலம் சிங்களத்திற்கு மட்டுமே தெரியும். கண்ட கண்ட சோனாங்கிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அந்த பொருளாதார அகதிகள் இருந்தபடியால் தான் சிங்களவன் எமது நாட்டை சீரழித்த பின்னரும் ஓரளவிற்காவது சொந்தக்காலில் நிற்கின்றது.
அந்த பொருளாதார அகதிகளின் பலம் சிங்களத்திற்கு மட்டுமே தெரியும். கண்ட கண்ட சோனாங்கிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. 😎

சிங்களவன் தமிழன் இரு இனங்களுமே சேர்ந்துதான் இலங்கையை சீரழித்தார்கள். தமிழனின் பலவீனம் என்ன என்பது சிங்களத்துக்கு தெரியும்

கண்ட கண்ட சோனாங்கிகளுக்கு இது தெரிய வாய்ப்பில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, colomban said:

சிங்களவன் தமிழன் இரு இனங்களுமே சேர்ந்துதான் இலங்கையை சீரழித்தார்கள். தமிழனின் பலவீனம் என்ன என்பது சிங்களத்துக்கு தெரியும்

கண்ட கண்ட சோனாங்கிகளுக்கு இது தெரிய வாய்ப்பில்லை

யார் அழித்தார்கள்? ஏன் அழித்தார்கள் ? பலவீனம் என்பது பற்றிய கதையெல்லாம் இங்கு தேவையில்லை.
எனது இனம் அந்த அழிவிலும் ஓரளவு தலை நிமிர்ந்து நிற்க காரணம் அந்த பொருளாதார அகதிகளும் ஒரு காரணம் என்பது சோனாங்கிகளுக்கு விளங்கினால் பெரிய சந்தோசம்.😎

  • கருத்துக்கள உறவுகள்

அவயள் ரத்த சொந்தம் அப்படிதான் செய்வினம்.. திரியை பற்ற வைக்காமல் அமைதி ஆகுக..👍

"இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏன் குடியுரிமை திருத்த மசோதாவில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், "இலங்கையில் உள்ள தமிழர்கள் தங்கள் மதத்திற்காக மட்டுமே துன்புறுத்தப்படவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பிரச்சினை தீர்க்கப்பட்டது. மோதலுக்கும் துன்புறுத்தலுக்கும் வித்தியாசம் உள்ளது" என்றார்."

🙄 🙄

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

யார் அழித்தார்கள்? ஏன் அழித்தார்கள் ? பலவீனம் என்பது பற்றிய கதையெல்லாம் இங்கு தேவையில்லை.
 

.

இதுதான் தேவை ஆரய்ந்து பார்க்க வேண்டும்

 

சோனங்ககிகள்  ஒருகாழும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்

3 hours ago, Kadancha said:

இவர்களுக்கு குடி உரிமை வழங்கப்பட்டாலும், இவர்களை சமூகத்தில் இருந்து  பிரித்தே வைத்திருப்பதற்கு அரசு முற்ப்படும். இந்த சட்ட சிக்கல்களை தவிர்பதற்காகவே, குடி உரிமையை  அரசு நிராகரித்தது. 
அந்நிலையில், இவர்கள் முன்னேறுவது மிகவும் கடினம்.  

உயிருக்கு உத்தரவாதம் இருந்தால், இவர்களுக்கு மிகவும் வசதியான, வாய்ப்பான இடம்,  குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கே, அவரவரின் சொந்த இடங்கள். 

ஆனால், ஐரோப்பா, கனடா இல் உள்ள தமிழர்களின் நிலை இவர்களை விட எத்தனையோ மடங்கு மேலானது, நிரந்தர குடி உரிமை இல்லாவிட்டாலும்.

மேலைத்தேய நாடுகளில் எம்மவர்களை விரும்பி அவர்கள் வாழ விடுவதும் குடியுரிமை தருவதும் நீண்ட கால நோக்கில் அவர்களுக்கே இலாபம். எம்மவர்களில் பலரும் மதவாதிகள் இல்லை +. எம்மவர்கள் பொதுவாக கடின உழைப்பாளிகள் ++ நீண்ட கால அடிப்படையில் அந்தந்த நாட்டு பண்பாடுகளுடன் இணைந்து கலந்து பயணிப்பார்கள் +++

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, colomban said:

.

இதுதான் தேவை ஆரய்ந்து பார்க்க வேண்டும்

 

சோனங்ககிகள்  ஒருகாழும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்

இது சம்பந்தமாக பல திரிகளில் ஆராயப்பட்டு விட்டது.
இது பொருளாதார அகதி சம்பந்தப்பட்டது.
சோனாங்கி விளங்கிக்கொள்ளட்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2019 at 8:39 PM, நிழலி said:

அதே போன்று அவுஸ், ஐரோப்பா, வட அமெரிக்கா பகுதிகளுக்கு அகதியாக சென்று குடியேறிய தமிழர்களையும் குடியுரிமையை ரத்து செய்து என்றாவது ஒரு நாள் திருப்பி அனுப்பினால் நல்லம் தானே?

நல்வரவாகுக இடத்தையாவது காப்பாற்றிக்கொள்ளலாம் கன இடங்களில் குடியேற தமிழ் மக்கள் இல்லை 

இப்ப என் பிரச்சனை என்னவென்றால்.... சோனாங்கி என்ற சொல்லின் அர்த்தம் தெரியாதது தான். இது வசவுச் சொல்லா, இல்லை வேடிக்கை சொல்லா, இல்லை சும்மாச்சும் நண்பர்களுக்கிடையே நடக்கும் செல்லச் சண்டைகளில் சொல்லப்படும் சொல்லா?

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நிழலி said:

இப்ப என் பிரச்சனை என்னவென்றால்.... சோனாங்கி என்ற சொல்லின் அர்த்தம் தெரியாதது தான். இது வசவுச் சொல்லா, இல்லை வேடிக்கை சொல்லா, இல்லை சும்மாச்சும் நண்பர்களுக்கிடையே நடக்கும் செல்லச் சண்டைகளில் சொல்லப்படும் சொல்லா?

நிழலி அவர்களே! சோனாங்கி என்பது ஒரு பெண்ணையும் குறிக்கும் சொல்லாகும். பெண் என்றால் பேயும் இரங்குமல்லவா. இங்கு சாமியாரும், கொழும்பானும் அந்தச் சொல்லைப் பாவித்து சற்று அதிகமாகவே இரங்கிவிட்டார்கள். 👇 😂🤣

"இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வரும் குயராத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர யடேயா கடந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி ரிவா சோனாங்கியை திருமணம் செய்து கொண்டார்."

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தொல்லை காட்சிகளில்  நடந்த அனைத்து இரைச்சல்களிலும் பார்க்க ராமசுப்பு பங்கேற்றதுதான் அருமை..👌

டிஸ்கி :

என்னதான் மீம், இணைய வெளியில் கலாய்த்தாலும் மனிதர் திருந்துவதாக தெரியல..👍

  • கருத்துக்கள உறவுகள்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: இலங்கை தமிழர்களை மோதி அரசு ஒதுக்குகிறதா?

அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழி செய்யும் இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை இரவு நிறைவேறியது.

இந்திய அரசமைப்புச் சட்டம் தனது குடிமக்களிடையே மதப் பாகுபாடு காட்டுவதில்லை. அப்படி இருக்கும்போது மத அடிப்படையில் சிலருக்கு குடியுரிமை கிடைக்கவோ, மறுக்கவோ வகை செய்யும் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களவையில் தங்கள் எதிர்ப்பை கடுமையாகப் பதிவு செய்துள்ளன.

மத அடிப்படையில் குடியுரிமையில் முன்னுரிமையோ, பாகுபாடோ காட்டப்படுவது குறித்த விவாதம் ஒருபுறம் இருந்தாலும், அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி இடம் பெயர்ந்தவர்கள் என்ற பட்டியலில், இலங்கையின் சிங்கள - பௌத்த பேரின வாதத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறி அகதிகளாக இந்தியாவில் இருக்கும், இந்துக்களாக அடையாளம் காணப்படும் இலங்கைத் தமிழர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி பலராலும் முன்வைக்கப்படுகிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டது மத ரீதியிலான பாதிப்புதானா? என்றும் இந்த மசோதா குறித்து எப்படிப் பார்க்கிறார் என்றும் இலங்கை சிவசேனா அமைப்பின் தலைவரான மறவன்புலவு க.சச்சிதானந்தனிடம் கேட்டது பிபிசி தமிழ்.

தெற்கில் இருக்கும் இந்துக்களைப் பற்றி கவலை இல்லையோ?

"வட இந்தியாவில் இருப்பவர்களுக்கு தெற்கிலே இருக்கும் இந்துக்களைப் பற்றி கவலை இல்லையோ என்று ஒரு ஆதங்கம் இருக்கிறது" என்று தொடங்கினார் அவர்.

கனடாவின் ஒன்டாரியோவில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் நடத்தும் சமயத்திருவிழா.படத்தின் காப்புரிமை Getty Images Image caption கனடாவின் ஒன்டாரியோவில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் நடத்தும் சமயத்திருவிழா.

"1958ம் ஆண்டு கொழும்பு அருகில் உள்ள பாணந்துறை முருகன் கோயிலில் இந்து பிராமண குருக்கள் ஒருவரை உயிரோடு கோயிலுக்குள் வைத்து சிங்கள பௌத்தர்கள் கொளுத்திய நேரத்தில்தான் முதல் கலவரமே வெடித்தது. அந்தக் கோயிலின் அறங்காவலர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு சித்தப்பா முறை.

அந்த சம்பவமே தமது மனதில் அடித்தள மாற்றத்தை கொண்டுவந்தது என்று பிரபாகரன் கூறியிருக்கிறார்" என்று தெரிவித்தார் சச்சிதானந்தன்.

"1983 கலவரத்தில் திருகோணமலை கோட்டை வாயிலில் இருந்த ஒரு கோயிலின் பிள்ளையார் சிலையைப் பெயர்த்துச் சென்று அரசுப் படையினர் கடலில் போட்டனர். அந்த இடத்தில் சிங்களத்தில் 'கண தெய்யோ நாண்ட கியா' என்று எழுதி வைத்தார்கள். இதற்கு 'கணபதிக் கடவுள் கடலில் குளிக்கப் போய்விட்டார்' என்று பொருள்" என்று மேலும் அவர் தெரிவித்தார்.

"மசோதா இந்துக்களை புண்படுத்துகிறது"

2019ல் ராவணன் தாய்க்கு இறுதிக் கிரியை செய்த இடம் என்று நம்பப்படும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா நீரூற்றுக்கு அருகில் உள்ள பிள்ளையார் கோயிலை சீரமைக்க முயற்சி நடந்தபோது புத்த பிக்குகள் தடுத்தார்கள் என்றும், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மறவன்புலவு க.சச்சிதானந்தன்படத்தின் காப்புரிமை மறவன்புலவு க.சச்சிதானந்தன்/Facebook Image caption மறவன்புலவு க.சச்சிதானந்தன்

விடுதலைக்குப் பிந்திய சுமார் 70 ஆண்டுகாலத்தில் இலங்கையில் இந்துக்கள் மீது கொடுமை நடப்பதால்தான் 12 லட்சம் இந்துக்கள் உலகம் முழுவதும் 40 நாடுகளில் குடிபெயர்ந்து வாழ்கிறார்கள். அப்படிச் சென்ற நாடுகளில் இந்தியா தவிர பிற நாடுகளில் எல்லாம் இலங்கை இந்துக்களுக்கு குடியுரிமை கொடுத்திருக்கிறார்கள். கனடாவிலே நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

நார்வேயிலே ஒரு தமிழர் மாநகர முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். குடிமகனாகி அந்தந்த நாட்டின் ஆட்சிப் பீடத்திலே கூட இருப்பதற்கான வாய்ப்பை அந்தந்த நாடுகள் கொடுத்திருக்கின்றன. 1983க்குப் பிறகு தமிழ்நாட்டில் ஏறத்தாழ இரண்டரை லட்சம் இந்துக்கள் குடியுரிமை அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் அகதி முகாம்களில் வாழ்கிறார்கள்.

இவர்களையெல்லாம் புத்த சமயத்தவரால் துன்புறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட இந்துக்களாக நினைக்காத ஒரு சட்டத்தை இந்திய அரசு கொண்டுவருவது இலங்கை இந்துக்களை புண்படுத்துவதாக உள்ளது" என்கிறார் சச்சிதானந்தன்.

"பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இந்துக்கள் துன்புறுகிறார்கள். அவர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்கிறார்கள். அவர்களில் 2014க்கு முன்பு இந்தியாவுக்கு குடிபெயர்ந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்ற சட்டத்தை இலங்கை இந்துக்களுக்கும் வழங்கும் வகையில் மாற்றவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு அங்கே இயல்புநிலை திரும்பிவிடவில்லையா என்று கேட்டபோது, அதை மறுக்கிறார் சச்சிதானந்தன்.

"2019ல் கன்னியாவில், முல்லைத் தீவில், செம்மலையில் பிள்ளையார் கோயிலின் வழிபாட்டு உரிமையை புத்த பிக்குகள் கூடியிருந்து மறுக்கும் சூழ்நிலையில் சமாதானம் நிலவுகிறது என்று இந்தியாவில் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

செம்மலையில் இந்துக்கள் பொங்கல் விழா கொண்டாடினார்கள். நந்தி கொடி கட்டினார்கள். இவற்றை புத்த பிக்குகள் பிடுங்கி எறிந்தார்கள்.

இந்தியாவில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா குறித்து கருத்துத் தெரிவிக்கக்கூட அவகாசம் இல்லை.

உலக இந்துக்களுக்காக இருக்கிற விஸ்வ ஹிந்து பரிஷத்தோ, மற்ற அமைப்புகளோ தமிழ்நாட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களோ இதை எடுத்துச் சொல்லவேண்டும் என்று அழுத கண்ணீரோடு எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிடுகிறார் சச்சிதானந்தன்.

குடியுரிமை கேட்கிற இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கவேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை.

"இலங்கை தமிழர்களுக்கு பொருந்தாது"

சந்திரஹாசன்படத்தின் காப்புரிமை OfERR Image caption சந்திரஹாசன்

அதே நேரம், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் நிறுவனர் எஸ்.சி.சந்திரஹாசன் வேறுவிதமான நிலைப்பாடு கொண்டிருக்கிறார்.

"இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல உதவ வேண்டும்" என்கிறார் அவர்.

தங்கள் இடத்துக்கே திரும்பச் சென்று நாட்டை கட்டியெழுப்பும் கடமை அகதிகளுக்கு இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

உள்நாட்டுப் போரில் இலங்கையில் இருந்து வெளியேற நேர்ந்தவர்களில் சிறிய அளவு பௌத்தர்களும், கிறித்துவர்களும் இருந்தார்கள் என்றும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை மத வேறுபாடு அல்ல என்றும் அவர் தெரிவிக்கிறார்.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் இந்துக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கும் தங்கள் பிரச்சனைக்கும் வேறுபாடு உண்டு என்கிறார் அவர். இதனால், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நோக்கம் இலங்கை தமிழர்களுக்குப் பொருந்தாது என்றும் கூறுகிறார். தங்களைப் பாதிக்காத விஷயம் என்பதால் இந்திய சட்டம் குறித்து பதில் சொல்ல விரும்பவில்லை என்கிறார் அவர்.

"மத ரீதியாக முஸ்லிம்கள், இன ரீதியாக தமிழர்கள் விலக்கப்படுகிறார்கள்"

இதனிடையே, இந்த மசோதா தாக்கல் ஆவதற்கு முன்பே "கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படுமா? அவ்வாறெனில் விவரங்களைத் தெரிவிக்கவும். வழங்கப்படாதெனில் காரணங்களைக் கூறவும்" என்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் எழுத்து மூலமாக அளித்த பதிலில்

"இந்திய குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்த சட்டத்தின் பிரிவு 5 இன் படி பதிவு செய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்திய குடியுரிமை பெற முடியும். அந்த சட்டத்தின் பிரிவு 6 இன் படி இயல்புரிமை ( naturalisation ) அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும். சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்திய குடியுரிமையைப் பெற முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

து.ரவிக்குமார்படத்தின் காப்புரிமை D.Ravikumar Image caption து.ரவிக்குமார்

இந்த பதில் மூலம், இலங்கை தமிழ் அகதிகளை அகதிகளாககூட அங்கீகரிக்காமல் அவர்களை சட்டவிரோத குடியேறிகள் என்றே அமைச்சர் மறைமுகமாக குறிப்பிடுவதாக கூறும் ரவிக்குமார், அகதிகளுக்கான இரண்டு ஐ.நா. ஒப்பந்தங்களிலும் இந்தியா கையெழுத்திடவில்லை என்கிறார்.

"அண்டை நாடுகளில் இருந்து மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை தருவது என்றால், மியான்மரும் அண்டை நாடுதான், இலங்கையும் அண்டை நாடுதான். இலங்கையில் இந்தியாவின் கொள்கை காரணமாகவே தமிழர்கள் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர். மியான்மரில் இருந்து மதரீதியிலான துன்புறுத்தலுக்கு இலக்கான ரோஹிஞ்சா அகதிகள் இருக்கிறார்கள். பாகிஸ்தானில்கூட துன்புறுத்தலுக்கு இலக்கான அகமதியா முஸ்லிம்கள் இருக்கிறார்கள். எனவே மதரீதியாக முஸ்லிம்களையும், இன ரீதியாக தமிழர்களையும் விலக்கி வைக்கும் வகையிலேயே இந்த குடியுரிமை மசோதா அமைந்திருக்கிறது" என்கிறார் ரவிக்குமார்.

"மலையகத் தமிழ் அகதிகளின் பிரச்சனை கவனிக்கப்படவில்லை"

அகதிகள் உரிமைகளுக்காக வாதிடுகிறவரும், அகதிகள் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நூல்கள் எழுதியவருமான டாக்டர் வி.சூரியநாராயணனிடம் இதுபற்றிக் கேட்டபோது,

"இலங்கை அகதிகள் என்று சொல்லும்போது அவர்களில் இரண்டு வகையினர் உள்ளனர். ஒன்று இலங்கையை தாயகமாக கொண்ட தமிழர்கள். மற்றொரு வகையினர் இலங்கையில் வாழ்ந்து வந்த இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மலையகத் தமிழர்கள்.

 1983 கலவரத்தின்போதும், அதற்குப் பிறகும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மலையகத் தமிழர்கள் 29,500 பேர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் அகதிகளில் இருந்து இவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பதற்கு இந்தியா என்னென்ன அளவுகோல்களை வைக்கிறதோ அவை அனைத்தும் இவர்களுக்கும் பொருந்தும். ஆனால், இவர்களை குடியுரிமைக்கு உரியவர்களாக இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை" என்று கூறினார்.

இலங்கைத் தமிழ் அகதிகள்.படத்தின் காப்புரிமை Getty Images Image caption கீழ்புத்துப்பட்டு அகதிமுகாமில் இலங்கை தமிழ் அகதிக் குடும்பம் ஒன்று.

குடியுரிமை திருத்த மசோதா மீதான விவாதத்தில் இலங்கை தமிழ் அகதிகள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு இந்த வேறுபாட்டை குறிப்பிடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுபற்றி மேலும் கூறிய அவர் "இந்தியாவில் நீண்டகாலம் வசித்துவரும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் அகதிகளைப் பொருத்தவரை அவர்கள் விரும்பினால் தங்கள் இலங்கை குடியுரிமையை திருப்பிக்கொடுத்துவிட்டு இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இயல்பாக்கம் பெற்றவர்கள் என்ற முறையில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆனால், இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை தரமுடியாது என்று இந்திய அரசு 1983-ம் ஆண்டு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற்றால்தான் அவர்கள் குடியுரிமை பெறுவதற்கு வழி பிறக்கும்" என்றார் அவர்.

இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து வந்த அகதிகளை குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவில் இணைக்காததற்கு காரணம் அங்கே இருப்பவை தியோகிரசி எனப்படும் மத ஆட்சிமுறை அல்ல என்பதுதான் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

இது பற்றிக் குறிப்பிட்ட சூரியநாராயணன் "கராறாகப் பார்த்தால் இலங்கையில் இருப்பது மத ஆட்சிமுறை அல்லதான். ஆனால், பௌத்தத்தை வளர்ப்பதும், பாதுகாப்பதும் அரசின் கடமை என்று அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் சொல்வதால் அதனை மதச்சார்பற்ற அரசு என்று பலரும் ஒப்புக்கொள்வதில்லை.

புத்த மதகுருமார்கள் அங்கே உத்வேகத்தோடு அரசியலில் பங்கேற்கிறார்கள் எனவே, இலங்கை மத ஆட்சிமுறை இல்லை என்று வாதிடுவதை முழுமையாக ஏற்கமுடியாது" என்று கூறினார் சூரியநாராயணன்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு சொந்த நாடு திரும்புவதே இலக்கு என்று சந்திரஹாசன் கூறுவது பற்றி கருத்து கேட்டபோது, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய தமிழர்களை இப்படி மீண்டும் இலங்கையில் குடியேறும்படி அழைக்கமுடியுமா என்று கேட்ட சூரியநாராயணன், இலங்கைக்கு திரும்பிச் சென்ற பல தமிழ் அகதிகள் மீண்டும் அங்கிருந்து வெளியேறியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

"பாதி அகதிகள் நாடு திரும்ப விரும்பவில்லை" 

திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் அகதி முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இது பற்றி பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவிக்கும்போது முகாம்களில் வசிக்கும் அகதிகளில் பாதிபேர் இலங்கை திரும்பிச் செல்ல விரும்புவதாகவும், மீதி பேர் இந்தியாவிலேயே குடியுரிமை பெற்று வாழ விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

10 வயதாக இருக்கும்போது 30 ஆண்டுகள் முன்பு குடும்பத்தோடு இந்தியா வந்த தாம் இந்தியப் பெண்ணை திருமணம் செய்துகொண்டு இங்கே வாழ்வதாக கூறிய அவர், இனி திரும்பிச் சென்று அங்கே உழைத்து, பழைய நிலைமைக்கு வருவதென்றால் ஒரு தலைமுறைக்கு மேலாகும் என்றார். தம்மைப் போலவே பல அகதிகளும் நினைப்பதாகவும் அவர் கூறினார்.

2011ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பிய தமிழ் அகதிகள் சிலர்.படத்தின் காப்புரிமை Getty Images Image caption 2011ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பிய தமிழ் அகதிகள் சிலர்.

மனைவியின் குடும்பத்தில், தாமோ தமது குடும்பத்தில் மனைவியோ இடம் பெற்று ரேஷன் கார்டு பெறும் சூழ்நிலைகூட இல்லை என்று குறிப்பிட்ட அவர், அகதிகளுக்கு அரசு கொடுக்கும் சலுகைகள், உதவிகள்கூட வேண்டாம், இந்தியக் குடியுரிமை கிடைத்தால் போதும் என்றும் குறிப்பிட்டார். இந்திய குடியுரிமை கிடைத்தால், பாஸ்போர்ட் பெற்று இலங்கை சென்று உறவினர்களைப் பார்த்துவிட்டு வரமட்டுமே விரும்புவதாகவும் அவர் கூறினார்.

ஏன் அவரைப் போன்ற பலர் இலங்கை செல்ல விரும்பவில்லை என்று கேட்டபோது, இப்போது மீண்டும் இலங்கையில் ஆட்சிக்குவந்துள்ள அரசின்கீழ் ஜனநாயக உரிமையோடு வாழ முடியாது என்று குறிப்பிட்ட அவர், தாங்கள் விட்டு வந்த காணிகள் பலவற்றில் சிங்கள குடியேற்றம் நடந்துள்ளதாகவும், எனவே திரும்பிச் சென்றாலும் சிலருக்கு மட்டுமே அவர்களின் இடம் கிடைக்கும் என்றும் கூறினார்.

அத்துடன் வேலை இல்லாத திண்டாட்டம், விலைவாசி ஆகியவை இலங்கையில் அதிகம் என்று கூறிய அவர் தற்போது இந்தியாவில் வெங்காயம் விலை ரூ.100 எனில், இலங்கையில் அது ரூ.400 ஆக இருக்கும். என்றும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு திரும்பிச் சென்ற தமது சகோதரி அதுபற்றி வருந்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-50718976

  • கருத்துக்கள உறவுகள்

79144570_3135744336487753_59549839971288

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலுள்ள இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது-இந்திய மத்திய அரசு

30 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுமா? என விழுப்புரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு பதிலளித்த இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் இந்தியாவிலுள்ள இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.

1955ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்திற்கமைய குடியுரிமை விதிகள் 2009 இன்படி இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அந்த சட்டப்பிரிவின் 5 மற்றும் 6 ஆம் விதிகளின் படி, அயல்நாட்டவர் குடியுரிமைப் பெற முடியும் என தெரிவித்துள்ளார்.அத்துடன் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதிகளின் கீழ், இந்திய குடியுரிமையைப் பெற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்படமாட்டாது எனவும் அவர் இதன்போது திட்டவட்டமாக கூறியுள்ளார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/இந்தியாவிலுள்ள-இலங்கையர/

வேகமாக வளர்ந்து வரும் முஸ்லீம் மக்களின் வீதத்தை வட இந்தியாவில் குறைக்க, இந்துத்துவா சார்ந்த பா.ஜ.க.  இந்த முடிவை எடுத்துள்ளது என பார்க்கலாம். இதன் மூலம் வரும் தேர்தலிகளில் தனது வாக்கு வங்கியை தக்க வைக்க உதவும். 

தென் இந்தியாவில், தமிழர்கள் உட்பட, இதே அணுகுறையை எடுக்கவில்லை. தமிழக அரசியல் களத்திலும், இது ஒரு முதல்வரை முடிவு செய்யும் விடயமும் இல்லை. எனவே,  பா.ஜ.க. ஈழ தமிழர்கள் சார்ந்து பார்க்கவும் இல்லை. 

மேற்குலகம் சார்ந்த நாடுகளில் ஈழ அகதிகள் புகலிடம் கேட்டபொழுது, பலரிடமும் ஏன் நீங்கள் உங்கள் அண்டைய நாடான இந்தியாவில் புகலிடம் கேட்கவில்லை என்று வினவப்பட்டதும் உண்டு.  

  • கருத்துக்கள உறவுகள்

79289475_3142846359110884_29627712064632

தொண்டை கிழிய கத்தி போட்டு ..4,5 லொ பாயின்ட் , 1981 ரூ 2009 வரை கதை அளந்து போட்டு தண்ணியை குடித்து விட்டு கிளம்புவினம்..👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.