Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பிக்க ரணவக்க கைது!

Featured Replies

முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபர் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்கவே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

champika.jpg

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் நடைபெற்ற விபத்தொன்றை அடிப்படையாககொண்டடே, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பிரகாரமே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/71337

  • தொடங்கியவர்

அடுத்தது இராஜித சேனாரத்தின?  இங்கு அரசியல் பழிவாங்கல்களும் இல்லை ஒருவரும் சிறிலங்காவின் இறைமைக்குள் தலையிடவும் கூடாது 😞

கோத்தா வந்தால் நல்ல ஆட்சி தருவார் என்று யாழ் களத்திலும்  அவருக்கு சிலர் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஆதரவு கொடுத்த போது இல்லை, அப்படி இருக்காது என்று சொன்னவர்களின் கூற்று சரியாகிக் கொண்டு வருகின்றது போல ...

  • தொடங்கியவர்

சட்ட விரோதமாகவே என்னை கைதுசெய்துள்ளனர் - சம்பிக்க

சபாநாயகருக்கும் நீதிவானுக்கும் அறிவிக்காமல் சட்ட விரோதமாக வீட்டினுள் நுழைந்தே கொழும்பு பிரிவினர் தன்னை கைதுசெய்ததாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார். 

79370225_1115805498811132_16270368026090

இன்று மாலை சட்ட மா அதிபரால் முன்னாள் அமைச்சர் சம்பிகவை கைதுசெய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கிய ஆலோசனைக்கமைய அவர் கைது செய்யப்பட்டிருந்தார். 

சம்பிக ரணவகவை கைது செய்வதற்காக பொலிஸார் அவருடைய இல்லத்திற்குள் உள்நுழைந்த நிலையில், உடனடியாகவே இந்த கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டு சம்பிக்க ரணவக அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேரடி காணொளியொன்றைப் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

நான் தேரர்களைச் சந்தித்துவிட்டு எனது இல்லத்திற்கு வந்தேன். அப்போது குற்றப்பிரிவு பொலிஸ் அதிகாரிகள் என்னுடைய இல்லத்திற்குள் நுழைந்ததுடன், என்னைக் கைது செய்வதற்கான உத்தரவு இருப்பதாகக் கூறினார்கள். பாராளுமன்றத்திற்கு அறிவித்திருக்கிறார்களா என்று அவர்களிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவில்லை. அதன் பின்னரே பிரதி சபாநாயகரிடம் பேசினார்கள். நந்தன என்பவரே இவ்வாறு பிரதி சபாநாயகரிடம் பேசினார். 

நீதவானுக்கும் இது தொடர்பில் அறிவிக்காமலேயே இந்த அதிகாரிகள் வீட்டினுள் நுழைந்தார்கள். வீட்டில் நுழைந்த பின்னரே சபாநாயகருக்கும் நீதவானுக்கும் அறிவித்தார்கள். இது சட்ட விரோத செயலாகும். 

https://www.virakesari.lk/article/71347

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நிழலி said:

கோத்தா வந்தால் நல்ல ஆட்சி தருவார் என்று யாழ் களத்திலும்  அவருக்கு சிலர் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஆதரவு கொடுத்த போது இல்லை, அப்படி இருக்காது என்று சொன்னவர்களின் கூற்று சரியாகிக் கொண்டு வருகின்றது போல ...

மறைமுக ஆதரவு  என்பது

எவரையும்  ஆதரிக்கத்தேவையில்லை என்றவர்கள்??

சயித்தும்  திறமில்லை  என்றவர்கள்???

வாக்குகளை போடத்தேவையில்லை  என்றவர்கள்???

அடங்குவார்களா ???

14 minutes ago, விசுகு said:

மறைமுக ஆதரவு  என்பது

எவரையும்  ஆதரிக்கத்தேவையில்லை என்றவர்கள்??

சயித்தும்  திறமில்லை  என்றவர்கள்???

வாக்குகளை போடத்தேவையில்லை  என்றவர்கள்???

அடங்குவார்களா ???

ஓம் கண்டிப்பாக

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நிழலி said:

ஓம் கண்டிப்பாக

இது  தவறில்லையா  சகோ

எனக்கு  ஒன்றை  பிடிக்கவில்லை  என்பதற்காக

இன்னொன்றை பிடிக்கிறது என்பது  அர்த்தமாகுமா??

 

  • தொடங்கியவர்
45 minutes ago, ampanai said:

79370225_1115805498811132_16270368026090

 

இவ்வளவு புத்த மத உருவங்களையும் ஒரு துறவியும் அருகாமையில் இருக்கும்பொழுதே கைது செய்யப்பட்டுள்ளார். இது பௌத்த மதத்தை அவமதிக்கும் செயலாகும்.

அஸ்கிரிய பீடமும் மல்வத்தை பீடமும் இனியும் மகிந்த சகோதரர்களின் வன்முறைக்கு துணை போகக்கூடாது 😂 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

இவ்வளவு புத்த மத உருவங்களையும் ஒரு துறவியும் அருகாமையில் இருக்கும்பொழுதே கைது செய்யப்பட்டுள்ளார். இது பௌத்த மதத்தை அவமதிக்கும் செயலாகும்.

அஸ்கிரிய பீடமும் மல்வத்தை பீடமும் இனியும் மகிந்த சகோதரர்களின் வன்முறைக்கு துணை போகக்கூடாது 😂 

அதே...😂

  • தொடங்கியவர்

ஒரு சில இலத்திரனியல் மற்றும் கணணி தொழில்நுட்பங்கள் தெரிந்தவர்களை மற்றும் சில ' Artificial Intelligence ' இனையும் வைத்து பூட்டினின் தலைமையில் உருசியா பல நாட்டில் குழப்பங்களை உருவாக்கி தனக்கு சாதகமான அரசியல் நிலவரத்தை உருவாக்கி வருகிறார்.

எமக்கு, இன்றைய இலங்கை அரசியல் அவ்வாறான சந்தர்ப்பங்களை தந்து நிற்கின்றது.

12 minutes ago, விசுகு said:

இது  தவறில்லையா  சகோ

எனக்கு  ஒன்றை  பிடிக்கவில்லை  என்பதற்காக

இன்னொன்றை பிடிக்கிறது என்பது  அர்த்தமாகுமா??

 

இதில் என்ன பிடிக்குது பிடிக்காது என்று இருக்கு? கோத்தாவை வெல்ல வைப்பதற்கான எல்லா தெரிவுகளும் அவருக்கான மறை முக ஆதரவு தான். கள நிலவரம் அப்படித் தான் அன்று இருந்தது.

தமிழ் பேசும் மக்கள் சஜித்துக்கு பெரும்பான்மையாக வாக்களித்ததே கோத்தா வந்தால் என்ன நடக்கும் என எதிர்பார்த்தால் தான். அதனால் தான் அவர்கள் மிச்சம் இருக்கும் நீங்கள் சொன்ன தெரிவுகளை நிராகரித்தார்கள். ஏனெனில் அந்த தெரிவுகள் கோத்தாவை வெல்ல வைக்கும் தெரிவுகள் என துல்லியமாக அவர்கள் கணித்தமையால். இந்தப் விடயத்தில் தாயக மக்களின் தெரிவும், அதற்கான காரணமும் என் எண்ணமும் ஒரே விதமாகவே இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

இதில் என்ன பிடிக்குது பிடிக்காது என்று இருக்கு? கோத்தாவை வெல்ல வைப்பதற்கான எல்லா தெரிவுகளும் அவருக்கான மறை முக ஆதரவு தான். கள நிலவரம் அப்படித் தான் அன்று இருந்தது.

தமிழ் பேசும் மக்கள் சஜித்துக்கு பெரும்பான்மையாக வாக்களித்ததே கோத்தா வந்தால் என்ன நடக்கும் என எதிர்பார்த்தால் தான். அதனால் தான் அவர்கள் மிச்சம் இருக்கும் நீங்கள் சொன்ன தெரிவுகளை நிராகரித்தார்கள். ஏனெனில் அந்த தெரிவுகள் கோத்தாவை வெல்ல வைக்கும் தெரிவுகள் என துல்லியமாக அவர்கள் கணித்தமையால். இந்தப் விடயத்தில் தாயக மக்களின் தெரிவும், அதற்கான காரணமும் என் எண்ணமும் ஒரே விதமாகவே இருக்கின்றன.

இப்படித்தான் மகிந்தவா?  சரத்  பொன்சேகாவா??  என்று  வந்தபோது

சரத் பொன்சேகாவை கை  நீட்டியவர்கள் இப்பொழுதும் நையாண்டி  செய்யப்படுகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

முப்படைகளின் தலைமையகம் கட்டுவதில், மகிந்த, கோத்தா, பசில் ஆகியோர், அந்த நிலத்தின் உண்மையான விலையை குறைத்து மதிப்பிட்டு, BOOK PRICE ஆக எழுதி, மிகுதியை தமக்கு கட்டுமான கம்பெனி ஊடக எடுத்து, அந்த பணத்தில் தங்காலையில், 750 மில்லியன் பெறுமதி உள்ள luxury resort ஐ வாங்கியதாக, சம்பிக்கவே முதலில் வெளியில் கொண்டு வந்தது.

இதுவே இந்த கைதுக்கான உண்மையான கரணம் என்று ஊகிக்க  முடிகிறது.   

  • தொடங்கியவர்
4 minutes ago, Kadancha said:

முப்படைகளின் தலைமையகம் கட்டுவதில், மகிந்த, கோத்தா, பசில் ஆகியோர், அந்த நிலத்தின் உண்மையான விலையை குறைத்து மதிப்பிட்டு, BOOK PRICE ஆக எழுதி, மிகுதியை தமக்கு கட்டுமான கம்பெனி ஊடக எடுத்து, அந்த பணத்தில் தங்காலையில், 750 மில்லியன் பெறுமதி உள்ள luxury resort ஐ வாங்கியதாக, சம்பிக்கவே முதலில் வெளியில் கொண்டு வந்தது.

இதுவே இந்த கைதுக்கான உண்மையான கரணம் என்று ஊகிக்க  முடிகிறது.   

கடாபியும் சதாமும் நினைவுக்கு வந்து செல்கிறார்கள்.

 

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெமட்டகொடயில் உள்ள கொழும்பு குற்றப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளதோடு அவருக்கு ஆதரவாக பல சட்டத்தரணிகள் அங்கு திரண்டுள்ளனர். இதேவேளை தெமட்டகொட கொழும்பு குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு முன்பாக ராஜபக்சவின் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

https://lankaenews.com/news/232/ta

  • தொடங்கியவர்

 கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி ஆனதன் பின்னர் நாட்டில் காட்டுச் சட்டம் செயற்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் சாரதியான எம். திலும் துசித குமார என்பவருக்கு பதிலாக அவரது தாய், மனைவி மற்றும் பால் குடிக்கும் கை குழந்தை ஆகியோர் கடத்தப்பட்டுள்ளனர்.

15ஆம் திகதி நள்ளிரவு 12.45 மணி அளவில் காலி இமதுவ பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்ற அஜித் மெத்தானந்த என்ற போலீஸ் அதிகாரி குறித்த நபர்களை 64 - 8736 என்ற வாகனத்தில் கடத்திக் கொண்டு முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் பத்தரமுல்ல ஜயந்திபுற வீட்டிற்கு அருகாமையில் வாகனத்தை நிறுத்திவிட்டு சாரதி வரும்வரை தடுத்து வைத்துள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரும் பிரபல சட்டத்தரணியுமான சிரால் லக்திலக பகிரங்கப்படுத்தியதன் பின்னர் அன்றைய தினம் மாலை கடத்தப்பட்ட மூவரும் மீண்டும் அவர்களது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை வேட்டையாட முயற்சிக்கும் இந்த வாகன விபத்து நடைபெற்றதன் பின்னர் அது தொடர்பான விசாரணை இடம்பெற்று சாரதிக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டு வழக்கு முடிவுக்கு வந்தது. ஒரே குற்றத்திற்கு இரண்டு தடவைகள் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. இன்று வரையில் எந்தவிதக் குற்றம் மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பில் சம்பிக்க ரணவக்க அல்லது அவரது சாரதிக்கு போலீசாரிடம் இருந்து எவ்வித அறிவிப்பும் வரவில்லை. எனினும் நீதிமன்றம் இந்த இருவருக்கும் வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளது.

https://lankaenews.com/news/230/ta

  • கருத்துக்கள உறவுகள்

கைதான சம்பிக்கவை சிசிடியில் சந்தித்த சஜித் குழு

cropped-IMG_20191218_215001.jpg

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (18) இரவு கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சற்றுமுன் அங்கு சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச, எஸ்.எம்.மரிக்கார் மற்றும் அரசியல் ஆர்வலர் சிறிலால் லக்திலக ஆகியோர் சம்பிக்கவை சந்தித்தனர்.

  • IMG_20191218_215518-768x1024.jpg
  • IMG_20191218_215001-768x1024.jpg

 

 

மகிந்தவுடன் இணைந்து தமிழினப் படுகொலைகளை திட்டமிட்டு நடாத்திய சம்பிகாவின் கைதுக்கு முதலைக்கண்ணீர் விட சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  • தொடங்கியவர்

சம்பிக்க ரணவக்கவுக்கு நாளை வரை விளக்கமறியல்!

thumb_large_champika1.jpg

 

கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் பாராளமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்கவை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டார். 

2016 ஆம் ஆண்டில் வெலிக்கடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றின் போது உண்மைகளை, சாட்சிகளை மறைத்தமைதொடர்பில் அவர் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். 

இந்த வாகன விபத்து தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த போதிலும் இது தொடர்பில் மீள விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வா கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வாவுக்கு அறிக்கை மூலம் அறிவித்திருந்தார். 

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் சம்பிகவினதும் அவரது சாரதியினதும் வெளிநாட்டு பயணங்களை தடை செய்த நீதிமன்றம் அவர்களது கடவுச் சீட்டுக்களை முடக்கியது. 

பின்னர் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியின் கீழ் பொலிஸ் பரிசோதகர் பெர்னாண்டோ பொலிஸ் பரிசோதகர் மெக்கனந்த உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை நடத்தினர். 

இதன் போது வாகன விபத்தை அடுத்து வெலிக்கடை பொலிஸார் செய்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட சில தொலைபேசி இலக்கங்கள் உட்பட 20 தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்தி தீவிர விசாரணைகள் இடம்பெற்றன. 

அதில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு சட்ட மா அதிபரின் ஆலோசனையைக் கோரியது. 

அதன் படி இன்று மாலை தமது ஆலோசனையை வழங்கிய சட்ட மா அதிபர்  முன்னாள் அமைச்சர் சம்பிக்கவை சந்தேநபராக பெயரிட்டு உடனடியாக அவரை கைதுசெய்துமன்றில் ஆஜர்படுத்துமாறு மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு ஆலோசனை வழங்கினார். 

இதனையடுத்து இன்று மாலை வேளையில் முன்னாள் அமைச்சர் சம்பிகவின் வீட்டுக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வா தலைமையிலான குழு சம்பிகவை கைது செய்தது. 

இவ்வாறு கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைத்து வரப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் கொழும்பு தலைமை நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டபேதே அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/71354

  • தொடங்கியவர்

ஜாதிக ஹெல உறுமயவும் கடந்த காலமும் ....

6331f8c01c5b08a4fa05fe27dd4a76d2_L.jpg

Eating milk rice with President Mahinda Rajapakse  

image_04b31f3529.jpg

23 September 2019 08:15 amThey have also assured that Gotabaya Rajapaksa's administration will not let him suffer any hardships he had faced during the Mahinda Rajapaksa regime.

  • தொடங்கியவர்
3 hours ago, ampanai said:

அடுத்தது இராஜித சேனாரத்தின?

CID informs court: White van suspects acted on Rajitha’s instructions

The Criminal Investigation Department (CID) yesterday informed Colombo Chief Magistrate’s Court that the two persons, who were arrested by the CID over making controversial statements regarding ‘white vans’ during a press conference, have confessed to the CID that they had done so due to a request by former Health Minister Rajitha Senaratne.

The CID also informed court that the suspects had also confessed that they had made false statements during the press conference regarding gold and foreign currency of LTTE leader Veluppillai Prabhakaran following a request by Rajitha Senaratne.

http://www.dailymirror.lk/breaking_news/CID-informs-court-White-van-suspects-acted-on-Rajithas-instructions/108-179822

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ampanai said:

முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதெல்லாம் ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் அரசியல் விளையாட்டுக்கள். நாங்கள் எங்கடை வாய் உளையயாமல் பாத்துக்கொள்ளுறது நல்லம். 😎

8 hours ago, Rajesh said:

மகிந்தவுடன் இணைந்து தமிழினப் படுகொலைகளை திட்டமிட்டு நடாத்திய சம்பிகாவின் கைதுக்கு முதலைக்கண்ணீர் விட சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அது முதலைக்கண்ணீர் இல்லை, சந்தர்ப்பவாதக் கண்ணீர்! 

தமிழர்களின் கடைகளில் பொருட்கள் வாங்க கூடாது எனும் பிரச்சாரத்தில் இருந்து ஆழ ஊடுருவும் அணி வரைக்கும் செல்வாக்கு செலுத்திய சிங்கள வீர விதான அமைப்பின் தலைவராக இருந்தவர் சம்பிக்க. கால ஓட்டத்தில் தன் கடும் போக்கில் இருந்து உண்மையாகவோ அல்லது போலியாகவோ மாறி தமிழ் மக்களுடன் அதிகார பரவலாக்கம் செய்தால் தான் இலங்கையில் நிரந்தர அமைதி வரும் என்றும் சொன்னவர்.
 

கோத்தாவுக்கு நிகரான சிங்கள பெளத்த மக்களின் தலைவராக வரும் தகுதி அனைத்தும் இவருக்கும் இருப்பதால் தான் ஏற்கனவே நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குக்காக கைதாகி இருக்கின்றார். இதனால் தான் கோத்தா ஆதரவு பெளத்த பிக்குகள் கூட இக் கைதுக்கு கடும் எதிர்ப்பை காட்டத் தொடங்கியுள்ளனர்.

 

கோத்தா சிலந்தி வலையில் தானாகவே மாட்டிக்கொள்ளும் விசர் ஜந்துவா என விரைவில் காலம் காட்டும்

  • தொடங்கியவர்

இந்த ஒளிப்பதிவு சிங்களத்தில் உள்ளது. ஆனால் இதில் சம்பிக்க தான் குற்றமற்றவன் என புத்த தலைவர்களிடம் முறையிடுகிறார். ஒரு  முன்னால் அமைச்சரே நீதி முறையில் நம்பிக்கை இல்லாமல் புத்த தலைவர்களிடம் மண்டியிடும்பொழுது தமிழர்கள் நிலைமை ? 

 

தான் கைதாவது தெரிந்தே தெரிந்தே இருந்திருக்கின்றது  🙂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.