Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்!

Featured Replies

Just now, மாங்குயில் said:

நான் சொன்னது பிழை என்பதை, மேற்கோள்காட்டி விளக்குங்கள்.

நீங்கள் சொல்வது சரியாக இருந்தால், ஏற்றுக்கொள்கிறேன்.

மேலே நீங்கள் எழுதிய எல்லாவற்றிட்கும் பின்னர் வேதகாமத்திலிருந்து பதிலளிக்கிறேன். நீங்கள் பைபிள் வாசித்து தேறினவர் என்ற ரீதியில் உங்களுக்கு பதிலளிப்பேன்.

அதைத்தான் மேலே எழுதியிருந்தேன் அதை நீங்கள் கவனிக்கவில்லை.

  • Replies 232
  • Views 22.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:

இயேசு, கடவுளை மாத்திரம் வணங்கி வழிபடச் சொன்னவர்.

இயேசு, முக்கடவுளை வணங்குமாறு போதிக்கவில்லை.

இயேசுவிற்கு, திரித்துவம் (Trinity) என்றால் என்னவென்று  தெரியாது.

இயேசுவிற்கு பைபிள் என்றால்கூட, என்னவென்று தெரியாது.

இயேசுவிற்கு கிறிஸ்தவம் என்றால் கூட, என்னவென்று தெரியாது.

பைபிள் என்பது, இயேசுவின் பின்னால் எழுதப்பட்ட ஒரு கற்பனை கலந்த  புத்தகம்.

மாங்குயில்

இதெல்லாம் என்ன முன்பு ஒர் திரியில் இயேசு யூதரே இல்லையென்று கூறினீர்கள்.
உங்கள் பைபிள் ஞானத்திற்கு முன் நாங்கள் தூசி ஐயா 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, colomban said:

மாங்குயில்

இதெல்லாம் என்ன முன்பு ஒர் திரியில் இயேசு யூதரே இல்லையென்று கூறினீர்கள்.
உங்கள் பைபிள் ஞானத்திற்கு முன் நாங்கள் தூசி ஐயா 

அப்படி சொன்னேனா?  

அப்படியாயின் உண்மையாகத்தான் இருக்கும்.

இயேசு என்பவர், யூதர் அல்ல என்று சொல்வதற்கும் பைபிளுக்கும் என்ன சம்பந்தம்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

மேலே நீங்கள் எழுதிய எல்லாவற்றிட்கும் பின்னர் வேதகாமத்திலிருந்து பதிலளிக்கிறேன். நீங்கள் பைபிள் வாசித்து தேறினவர் என்ற ரீதியில் உங்களுக்கு பதிலளிப்பேன்.

அதைத்தான் மேலே எழுதியிருந்தேன் அதை நீங்கள் கவனிக்கவில்லை.

வங்காலையான்,

நீங்கள் என்னதான் விளக்கமாக எழுதினாலும், பதில் “என்ன கைய பிடிச்சு இழுத்தியா?” என்பதே.

இதுக்கு மேல் உங்க இஸ்டம்:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மாங்குயில் said:

பிக்குகள்தான் பிரித் ஓத வேண்டும் என்ற நிலைப்பாடு, சிங்கள மக்களிடம்  இல்லை. சாதாரண சிங்கள ம. க்களின் வீடுகளில்கூட,  பிரித் ஓதுகிறார்கள்.  அடுத்தது, சிங்கள பெரும்பான்மை மக்கள் எல்லாரும் பிக்குகளின் நூலைக் கட்டினால், நல்லது நடக்கும் என்று நம்புவதுமில்லை.

“சிங்கள பெரும்பான்மை மக்கள் எல்லாரும்”  என்று எழுதியிருக்கிறீர்கள். புள்ளிவிபர ஆதாரத்தை காட்டவில்லையே? “சாதாரண சிங்கள மக்களின் வீடுகளில்கூட,  பிரித் ஓதுகிறார்கள்” என்பது தானே பிக்குகளின் கடவுள் நிலைக்கு காரணம்? புத்தரின் எலும்புகளை பிக்குகள் தானே விகாரையில் இருந்து சாதாரண மக்களின் வீடுகளுக்கு கொண்டு     வர வேண்டும்? 

4 hours ago, மாங்குயில் said:

புத்தம் சொல்வது, ஏறக்குறைய நாத்திகம்தான்.

கடவுள்கொள்கையை சொல்லும்  மதம் அல்ல, பவுத்தம்.

பிற்காலத்தில் உள்நுழைந்த புரோகித்தனம்தான், பிக்குகளின் அந்தஸ்து மக்கள் மத்தியில் உயரக் காரணம்.

யார் இல்லை என்றார்?

4 hours ago, மாங்குயில் said:

பிக்குகள்தான் பிரித் ஓத வேண்டும் என்ற நிலைப்பாடு, சிங்கள மக்களிடம்  இல்லை. சாதாரண சிங்கள மக்களின் வீடுகளில்கூட,  பிரித் ஓதுகிறார்கள்.  அடுத்தது, சிங்கள பெரும்பான்மை மக்கள் எல்லாரும் பிக்குகளின் நூலைக் கட்டினால், நல்லது நடக்கும் என்று நம்புவதுமில்லை.

பிக்குகள் பிரித் ஓதி மக்களின் கைகளில் நூலைக் கட்டுவதால், அவர்கள் ஒருபோதும் கடவுள்கள் ஆவதில்லை.

மனிதர்களைக் கும்பிடுவதாலோ, சாஷ்டாங்கம் செய்வதாலோ, கும்பிடப்படுபவர் கடவுள்களாக ஒருபோதும் ஆவதில்லை.

புத்தம் சொல்வது, ஏறக்குறைய நாத்திகம்தான்.

கடவுள்கொள்கையை சொல்லும்  மதம் அல்ல, பவுத்தம்.

பிற்காலத்தில் உள்நுழைந்த புரோகித்தனம்தான், பிக்குகளின் அந்தஸ்து மக்கள் மத்தியில் உயரக் காரணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, கற்பகதரு said:

“சிங்கள பெரும்பான்மை மக்கள் எல்லாரும்”  என்று எழுதியிருக்கிறீர்கள். புள்ளிவிபர ஆதாரத்தை காட்டவில்லையே? 

புள்ளி விபரத்தைக் காட்ட, பிரித் ஓதும் வீடுகளுக்குப் போய், சென்சஸ் எடுக்கச் சொல்கிறீர்களா?

சிங்கள புத்த மக்கள்தான் பிரித்து ஓதுகிறார்கள்.

சிங்கள பெரும்பான்மை மக்கள் எல்லாரும் என்றால், ஓதாமல் இருப்பவர்கள் இதில் அடங்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கற்பகதரு said:

“சாதாரண சிங்கள மக்களின் வீடுகளில்கூட,  பிரித் ஓதுகிறார்கள்” என்பது தானே பிக்குகளின் கடவுள் நிலைக்கு காரணம்? 

சாதாரண சிங்கள மக்கள் வீடுகளில் பிரித்து ஓதுகிறார்கள் என்றால்,  பிக்குகள்தான் ஓத வேண்டும் என்ற கடப்பாடு யாருக்கும் இல்லை என்று தெளிவாகிறது.

மக்கள் பிரித்து ஓதினால், பிக்குகள் கடவுள் நிலையை அடைவார்கள் என்றோ, அல்லது பிக்குகள் பிரித்து ஓதி, நூலைக் கட்டினால் மக்கள் அவர்களிடம் தெய்வ சக்தி இருப்பதாகவோ நினைப்பதில்லை.

பிக்குகளை கடவுளாக வழிபடுகிறார்கள் என்பது, தங்களின் சிந்தனையில் ஏற்பட்ட ஒரு புதிய கண்டுபிடிப்பு.

1 hour ago, கற்பகதரு said:

 புத்தரின் எலும்புகளை பிக்குகள் தானே விகாரையில் இருந்து சாதாரண மக்களின் வீடுகளுக்கு கொண்டு     வர வேண்டும்? 

தலதா மாளிகையில், புத்தரின் பல், எலும்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பிரித் ஓதுவதற்கு எல்லாம், புத்தரின் எலும்புகள் தேவையில்லை.

ஆயிரக்கணக்கான விகாரைகள், இலங்கையில் இருக்கின்றன.  

எல்லா விகாரையிலும் புத்தரின் எலும்புகள் இருக்கிறதா?

 ஒவ்வொரு விகாரையில் இருந்தும் எலும்புகளைத் தூக்கிக்கொண்டு, பிக்கு கூட்டங்கள் ஒவ்வொரு வீடு வழியாக சென்று பிரித்து ஓதுகிறார்களா?

ஒன்றுமே இல்லை.

நீங்கள் எழுதிய பின்னூட்டத்தை, சிங்களத்தில் மொழி பெயர்த்து, ஒரு புத்த பிக்குவிடமே காட்டுங்கள்.

அவர் உங்கள் அறியாமையைப் பார்த்து சிரிப்பார்.
 
மதத்தை அவமதித்தால் ரூ.1.95கோடி 'பைன்': அபுதாபி நீதித்துறை

அபுதாபி: எந்த மதத்தை அவமதித்தாலும் 5 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.1.95 கோடி அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒருவர் மற்றொருவரின் மதம், இனம், சாதி, நிறம் உள்ளிட்ட வேறுபாட்டை சுட்டிக்காட்டி அவமதிக்கும் செயல் உலகம் முழுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதிலும் சமூக வலைதளங்களில் அவமதிக்கும் வகையிலான பதிவுகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில், எந்த மதத்தை அவமதித்தாலும் அவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 1 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.1.95 கோடி) அபராதமும் விதிக்கப்படும் என அபுதாபி நீதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து அபுதாபி நீதித்துறையின் சமூக பொறுப்புணர்வு நிபுணர் அல் மஸ்ரூய் கூறுகையில், சாதி, மதம், நிறம் உள்ளிட்டவற்றை வேறுபடுத்தி அவமதிப்பவர்கள் யாராக இருந்தாலும், அந்த நாட்டினராக இருந்தாலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சமமாக நடத்தப்படுவர். அவர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். மக்கள், சமூக வலைதளங்களில் எந்த மதத்தையும், நம்பிக்கையையும், கடவுளையும் அவமதிக்க அனுமதிக்கப்படுவதில்லை. மீறினால் இந்த தண்டனைக்கு உள்ளாவார்கள், என்றார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2452538

டிஸ்கி : சிங்கள நாட்டிலும் இவ்வாறான எழுதப்படாத சட்டம் உள்ளது, ஆனால் அது புத்த மதத்திற்கு மட்டுமே பயன்படும் 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இப்பொழுது இங்கே கிறீஸ்தவ பாதிரியாரின் பின்ணணியை ஆராய வேண்டிய அவசியம் ஏன் எழுகிறது ? 

இவரின் பின்ணணியை இணைப்பது  பிக்குவின் செயலை நியாயப்படுத்துவதற்காகவா ?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

இப்பொழுது இங்கே கிறீஸ்தவ பாதிரியாரின் பின்ணணியை ஆராய வேண்டிய அவசியம் ஏன் எழுகிறது ? 

இவரின் பின்ணணியை இணைப்பது  பிக்குவின் செயலை நியாயப்படுத்துவதற்காகவா ?

ஏற்கனவே எழுதின மாதிரி பிக்குவிலும் நியாயம் இருக்கு 
 
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரதி said:

ஏற்கனவே எழுதின மாதிரி பிக்குவிலும் நியாயம் இருக்கு 
 
பிக்கு  கதைக்க அவருக்கு அதிகாரம் இருக்கிறதா அல்லது சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா ? 

14 hours ago, goshan_che said:

வங்காலையான்,

நீங்கள் என்னதான் விளக்கமாக எழுதினாலும், பதில் “என்ன கைய பிடிச்சு இழுத்தியா?” என்பதே.

இதுக்கு மேல் உங்க இஸ்டம்:

நீங்கள் சொல்லுவது சரிதான். சிலர் என்ன எழுதுகிறோம் எண்டு தெரியாமலே விதண்டாவாதத்துக்கு எழுதுவார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மாங்குயில் said:

நீங்கள் எழுதிய பின்னூட்டத்தை, சிங்களத்தில் மொழி பெயர்த்து, ஒரு புத்த பிக்குவிடமே காட்டுங்கள்.

அவர் உங்கள் அறியாமையைப் பார்த்து சிரிப்பார்.
 
என்னுடன் சில வருடங்கள் வேலை செய்த இளம் பிக்கு பௌத்தம் பற்றிய எனது அறியாமையை பார்த்து நட்புடன் அழகாக சிரித்த காலம் கடந்து பல ஆண்டுகள். ஆனால் அவருடைய அந்த நாள் நட்பும், பௌத்த குடும்பத்தில் ஒருவராக வாழும் சந்தர்பபமும் எனக்கு பௌத்தம் பற்றிய. அறிவை போதிய அளவு தந்து இருக்கின்றன.

12 hours ago, மாங்குயில் said:

பிக்குகளை கடவுளாக வழிபடுகிறார்கள் என்பது, தங்களின் சிந்தனையில் ஏற்பட்ட ஒரு புதிய கண்டுபிடிப்பு.
 
எனது கண்டுபிடிப்பல்ல. ஆங்கிலத்தில் உள்ள இந்த புத்தகத்தில் Pirith Ceremony என்ற பகுதியை படித்து பாருங்கள்.

https://www.accesstoinsight.org/lib/authors/kariyawasam/wheel402.html

12 hours ago, மாங்குயில் said:

தலதா மாளிகையில், புத்தரின் பல், எலும்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பிரித் ஓதுவதற்கு எல்லாம், புத்தரின் எலும்புகள் தேவையில்லை.

ஆயிரநக்கணக்கான விகாரைகள், இலங்கையில் இருக்கின்றன.  

எல்லா விகாரையிலும் புத்தரின் எலும்புகள் இருக்கிறதா?

 ஒவ்வொரு விகாரையில் இருந்தும் எலும்புகளைத் தூக்கிக்கொண்டு, பிக்கு கூட்டங்கள் ஒவ்வொரு வீடு வழியாக சென்று பிரித்து ஓதுகிறார்களா?

நான் ஏற்கனவே சொன்னது போல, உங்கள் மதரீதியான கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகள் இதனை விளங்கிக் கொள்வதற்கு பெரும் தடையாக இருக்கின்றன.

12 hours ago, ampanai said:

மதத்தை அவமதித்தால் ரூ.1.95கோடி 'பைன்': அபுதாபி நீதித்துறை

அபுதாபி: எந்த மதத்தை அவமதித்தாலும் 5 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.1.95 கோடி அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒருவர் மற்றொருவரின் மதம், இனம், சாதி, நிறம் உள்ளிட்ட வேறுபாட்டை சுட்டிக்காட்டி அவமதிக்கும் செயல் உலகம் முழுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதிலும் சமூக வலைதளங்களில் அவமதிக்கும் வகையிலான பதிவுகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில், எந்த மதத்தை அவமதித்தாலும் அவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 1 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.1.95 கோடி) அபராதமும் விதிக்கப்படும் என அபுதாபி நீதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து அபுதாபி நீதித்துறையின் சமூக பொறுப்புணர்வு நிபுணர் அல் மஸ்ரூய் கூறுகையில், சாதி, மதம், நிறம் உள்ளிட்டவற்றை வேறுபடுத்தி அவமதிப்பவர்கள் யாராக இருந்தாலும், அந்த நாட்டினராக இருந்தாலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சமமாக நடத்தப்படுவர். அவர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். மக்கள், சமூக வலைதளங்களில் எந்த மதத்தையும், நம்பிக்கையையும், கடவுளையும் அவமதிக்க அனுமதிக்கப்படுவதில்லை. மீறினால் இந்த தண்டனைக்கு உள்ளாவார்கள், என்றார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2452538

டிஸ்கி : சிங்கள நாட்டிலும் இவ்வாறான எழுதப்படாத சட்டம் உள்ளது, ஆனால் அது புத்த மதத்திற்கு மட்டுமே பயன்படும் 

அபுதாபியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் கிறிஸ்தவர்கள், இந்துக்கள், புத்தமதத்தினர் என்ற ரீதியில் அவர்களுக்கு அங்கு மரியாதை உண்டு. ஐக்கிய அரபு இராச்சிய நாடுகளில் இந்த மத சுதந்திரம் காணப்படுகிறது.

இருந்தாலும் சில முஸ்லீம் நாடுகளில் பிரமதத்தவர் தமது மத அனுஷ்டானங்களை கடைபிடிக்க முடியாது. அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் வெளியரங்குகளில்  வணங்க முடியாது.

ஆனாலும் நிறைய ரகசிய வழிபாடுகள் குறிப்பாக கிறிஸ்தவ வழிபாடுகளை இந்த நாடுகளில் காணலாம்.

இலங்கையிலும் சில பகுதிகளை அரபு நாடுகள்போல மாற்ற சிலர் முயட்சித்தார்கள். அப்போதுதான் அல்லா அங்கு வருவாராம். இந்த அரசு வந்தவுடன் எல்லாமே தவிடுபொடியாகிவிட்ட்து. அல்லாஹ்வும் போய் விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

பிக்கு  கதைக்க அவருக்கு அதிகாரம் இருக்கிறதா அல்லது சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா ? 

அண்மையில் பொன்னாலையில் மத மாற்ற கும்பலை விரட்டி அடித்தது யார்?... சரி பிழையை யாரும் தட்டிக் கேட்கலாம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, கற்பகதரு said:

என்னுடன் சில வருடங்கள் வேலை செய்த இளம் பிக்கு பௌத்தம் பற்றிய எனது அறியாமையை பார்த்து நட்புடன் அழகாக சிரித்த காலம் கடந்து பல ஆண்டுகள். ஆனால் அவருடைய அந்த நாள் நட்பும், பௌத்த குடும்பத்தில் ஒருவராக வாழும் சந்தர்பபமும் எனக்கு பௌத்தம் பற்றிய. அறிவை போதிய அளவு தந்து இருக்கின்றன.

எனது கண்டுபிடிப்பல்ல. ஆங்கிலத்தில் உள்ள இந்த புத்தகத்தில் Pirith Ceremony என்ற பகுதியை படித்து பாருங்கள்.

https://www.accesstoinsight.org/lib/authors/kariyawasam/wheel402.html

நான் ஏற்கனவே சொன்னது போல, உங்கள் மதரீதியான கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகள் இதனை விளங்கிக் கொள்வதற்கு பெரும் தடையாக இருக்கின்றன.

இன்னொரு மதத்தை அறிவதற்கு, விளங்கி கொள்வதற்கு  தான் சார்ந்த மதமோ, கலாசாரமோ தடையாக இருக்காது.

தான் சார்ந்த மதத்தை, கலாசாரத்தை விட்டால்தான், பிற மதங்களை  புரிந்து அறிந்து கொள்ளலாம் என்ற நியதியும் இல்லை.

புத்த மதம், ஏறக்குறைய நாத்திகத்தைப் போதிக்கும் மதம். 

இதை நீங்கள் கூட, யாரும் இதை மறுக்கவில்லை என்று சொன்னீர்கள்.

ஆக, புத்த மதம் நாத்திகம் என்று அறிந்திருந்தும், அதில் கூறப்படாத ஒரு கொள்கையான, பிக்குகளை மக்கள் கடவுளாக வணங்குகிறார்கள் என்ற உங்கள் செய்தி புனையப்பட்டது என்று புரிந்து கொள்ளலாமே!

எந்த மதத்தையும் , அதன் கொள்கை, கோட்பாடுகளை விளக்கும் அதன் வேத கிரந்தங்களில் இருந்துதான், மேற்கோள் காட்டிச் சொல்லவேண்டுமேயொழிய, அந்த அறிஞர் சொன்னார், இந்த அறிஞர் சொன்னார், இந்த புத்தகத்தில் இப்படி இருக்கிறது, இந்த லிங்கைப் பாருங்கள், கூகளைத் தட்டிப் பாருங்கள், புத்த பிக்குகளுடன் எனக்கு தொடர்பு இருக்கிறது  என்று சொன்னால், அது எடுபடாது. 

Edited by மாங்குயில்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

அண்மையில் பொன்னாலையில் மத மாற்ற கும்பலை விரட்டி அடித்தது யார்?... சரி பிழையை யாரும் தட்டிக் கேட்கலாம் 

உங்கள் பதில் உண்மையில் ஆச்சரியமளிக்கிறது. அபிவிருத்தி குறைந்த, எழுத்தறிவு குறைந்த , சட்டமும் ஒழுங்கும் குறைந்த ஒரு நாட்டிலிருந்துகொண்டு ஒருவர் இவ்வாறான பதிலை அல்லது கருத்தை கூறூவாரானால் , அவர் வாழும் சூழலை புரிந்கொண்டு அவரது கருத்துக்களுக்கு தொடர்ச்சியாக விளக்கமளிக்கலாம், வாதிடலாம்.

ஆனால் அபிவிருத்தியடைந்த, சட்டமும் ஒழுங்கும் சீராக நடைமுறைப்படுத்தும் மேற்குலகில் பல பத்தாண்டுகள் வாழும் ஒருவர், யார்வேண்டுமானாலும் சரி பிழையை தட்டிக் கேட்கலாம் என்று கூறுவது ஆச்சரியமளிப்பதுடன் சற்று கவலையையும் ஏற்படுத்துகிறது. 
 
இங்கே இரண்டு விடயங்களை அனுமானிக்க முடிகிறது.

சட்டத்தையும் அதனை நடைமுறைப் படுத்துவதில் காவல் துறையினரின் பங்கு தொடர்பில் உங்களுக்கு போதிய விளக்கமில்லை என்பது ஒன்று. அல்லது சட்டமும் ஒழுங்கும் தொடர்பில் உங்களுக்கு அக்கறை இல்லை என்பது இரண்டாவது.

மதங்கள் உண்மையில் உலகில்   ஒரு சிறந்த hobby ஆக உள்ளது.  பெரும்பாலான சாதாரண மக்கள் அந்த hoppy ஐ உண்மை என் சீரியசாக எடுத்து தமக்குள் முட்டி மோதிக்கொள்கின்றார்கள். மதங்கள் விளையாட்டாக கூறும் விடயங்களை உண்மை என் நம்பி வாழ்வின் சந்தோசங்களை தொலைக்கின்றர்கள். ஒருவருக்கு ஒரு Hobby போர் அடிக்கும் போது அவர் அதை விடுத்து அடுத்த பொழுதுபோக்கான மதங்களை நாடுவதில் தவறு இல்லை. ஆனால் அதை ஒரு free time hobby ஆக மட்டும் எடுக்க வேண்டும். நான் கோவில்களுக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டால்  ஒரு திரைப்படத்தை பார்பது போல் பூசைகளை பார்த்துவிட்டு சினிமா இசையை ரசிப்பது  போல் பக்திப்பாடல்களை நன்கு ரசித்து கேட்டுவிட்டு  (வீட்டில் கூட) கோவில்களில்   பிரசாதம் வரும் நேரத்திற்காக காத்திருப்பேன். சேர்சிற்கு பொதுவாக நான்  செல்வதில்லை  ஏனென்றால்  அங்கு பிரசாதம் வழங்கப்படுவதில்லை. மசூதிக்கு செல்வதில்லை ஏனென்றால் அந்த Hobby எனக்கு அறவே பிடிப்பதில்லை.  

மதங்கள் என்ற Hobby Center நடத்தினால் மிகச்  சிறந்த வருமானத்தை உழைக்க முடியும்.  இந்த நிலையத்தை நிறுவனப்படுத்தி ஒரு Enterprise ஆகவும் நடத்தலாம். தனி வியாபராமாயும்  நடத்தலாம். வாடிக்கையாளரின் நம்பிக்கையை  பலப்படுத்த அவர்களிடையே மூடப்பழக்கங்களை உருவாக்க அல்லது  இருப்பதை வலுப்படுத்த சிறந்த விளம்பர உத்திகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சாதாரண வியாபார நிறுவனங்கள் போலன்றி ஒரு ஒரு Hobby Center தனது வருமானத்தை பெருக்க பரப்பும் மூடத்தனங்கள் மற்றய நிறுவனங்களின் வருமானத்தை பெருக்கவும் உதவி புரியும்.

ஆனால் இந்த பொழுபோக்கை தாண்டி ஒவ்வொருவரும் தத்தமது வாழ்ககையை சிறப்புற வாழ தாம் சுயமாக உழைக்க வேண்டும்.உழைப்பே உங்களை உயர்த்தும். நீங்கள் செலுத்த வேண்டிய ஒரு சிறிய தொகை பில்லைக்கூட இந்த Hobby Center களில் வாழ்வதாக கூறப்படும்  சிவனோ, கர்ததரோ , அல்லாவோ செலுத்தப்போவதில்லை. நீங்கள் சுயமாக உழைத்தால் தான் அந்த பணத்தைக்கொண்டு  நீங்களும் மகிழ்சியாக வாழ்ந்து உங்களது  கடவுளையும் உங்களால் காப்பாற்ற முடியும். கடவுளைக் காப்பாற்ற மனிதர்களால் மட்டும் தான் முடியும். ஏனெனில் விலங்குகள் கடவுளைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. மனிதன் கைவிட்டுவிட்டால் கடவுள் அனாதையாகி விடுவார்.  ஆகவே நீங்கள் நம்பும் கடவுளை காப்பாற்றுவதற்கு வேண்டிய பணத்தை உழைப்பதற்காகவேனும்  உங்கள் தன்னனம்பிக்கையை வளர்தது  உழைப்பை நம்புங்கள். உங்கள் தொழில் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2020 at 3:50 AM, Kapithan said:

மல்வது பீடம் அஸ்கிரிய பீடம் இரண்டினது அரசியல் வகிபாகம் தொடர்பாக யாராவது ஆழமாக விளக்க முடியுமா ?

இவை இரண்டினதும் அனுசரணையின்றி அரசியலில் நன்மை நடக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன். கோட்டாபய இவற்றினை புறம் தள்ள முயன்றால் (ஒரு நப்பாசைதான்) SWRD Bandaranayake வுக்கு நடந்ததுதான் இவருக்கும்.

உங்கள் அனுமானம் சரியே.

இந்த பீ(டை)டங்களின் அரசியல் வகிபாகம் குறித்து எனக்கு சில எடுகோள்கள் இருக்கிறது. விளக்கமாக எழுதும் அளவுக்கு, விளக்கம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

உங்கள் அனுமானம் சரியே.

இந்த பீ(டை)டங்களின் அரசியல் வகிபாகம் குறித்து எனக்கு சில எடுகோள்கள் இருக்கிறது. விளக்கமாக எழுதும் அளவுக்கு, விளக்கம் இல்லை.

தெரிந்ததை அல்லது உங்கள் அனுமானத்தை பகிர்வதில் பிழை இல்லையே. ஏனென்றால் நானும் சில அவதானிப்புக்களை கொண்டுள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

அண்மையில் பொன்னாலையில் மத மாற்ற கும்பலை விரட்டி அடித்தது யார்?... சரி பிழையை யாரும் தட்டிக் கேட்கலாம் 

1. இலங்கையில் மதம் மாற்றும் போதனை செய்வது குற்றமா? ஆம், இல்லை.

2. ஆம் எனில் - குற்றம் இழைத்தவரை போலீசில் ஆதாரத்தோடு பிடித்து கொடுத்து, மீண்டும் இது நிகழா வண்ணம் செய்திருக்க வேண்டும் இந்த பிக்கு/பொன்னாலை இந்து சிங்கங்கள்.

3. இல்லை எனில் - என்னை மதம் மாற்றாதீர்கள் - உங்கள் போதனையை எனக்கு பிடிக்கவில்லை என கூறி அவர்களை விரட்டலாம். தொடரும் போது, religious harassment பண்ணுவதாக பொலிசில் முறையிடலாம்.

4. மாறாக பேசிக் கொண்டிருக்கும் மனிதருக்கு அறைவதில்/ கும்பலாக சென்று அச்சுறுத்துவதில் எந்த நியாமும் இல்லை.

லண்டனில் உங்களை ஒரு யேசு ஜீவிக்கிறார் கோஸ்டி கதவை தட்டி, இறந்த பின் நாமரிவரும் எங்கே போவோம்? என கேட்டால் “சப்” என்று அறைவீர்களா? நீங்கள் விரும்பினாலும் சட்டத்துக்கு பயந்து செய்யமாட்டீர்கள்.

இதுதான் சட்டத்தின் ஆளுமை உள்ள ஜனநாயகத்தின் பண்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மாங்குயில் said:

ஆக, புத்த மதம் நாத்திகம் என்று அறிந்திருந்தும், அதில் கூறப்படாத ஒரு கொள்கையான, பிக்குகளை மக்கள் கடவுளாக வணங்குகிறார்கள் என்ற உங்கள் செய்தி புனையப்பட்டது என்று புரிந்து கொள்ளலாமே!

சிங்கள பௌத்தர்கள் எல்லாம் நாத்திகர்கள் என்கிறீர்கள், இல்லையா?
 
2 hours ago, goshan_che said:

1. இலங்கையில் மதம் மாற்றும் போதனை செய்வது குற்றமா? ஆம், இல்லை.

2. ஆம் எனில் - குற்றம் இழைத்தவரை போலீசில் ஆதாரத்தோடு பிடித்து கொடுத்து, மீண்டும் இது நிகழா வண்ணம் செய்திருக்க வேண்டும் இந்த பிக்கு/பொன்னாலை இந்து சிங்கங்கள்.

3. இல்லை எனில் - என்னை மதம் மாற்றாதீர்கள் - உங்கள் போதனையை எனக்கு பிடிக்கவில்லை என கூறி அவர்களை விரட்டலாம். தொடரும் போது, religious harassment பண்ணுவதாக பொலிசில் முறையிடலாம்.

4. மாறாக பேசிக் கொண்டிருக்கும் மனிதருக்கு அறைவதில்/ கும்பலாக சென்று அச்சுறுத்துவதில் எந்த நியாமும் இல்லை.

லண்டனில் உங்களை ஒரு யேசு ஜீவிக்கிறார் கோஸ்டி கதவை தட்டி, இறந்த பின் நாமரிவரும் எங்கே போவோம்? என கேட்டால் “சப்” என்று அறைவீர்களா? நீங்கள் விரும்பினாலும் சட்டத்துக்கு பயந்து செய்யமாட்டீர்கள்.

இதுதான் சட்டத்தின் ஆளுமை உள்ள ஜனநாயகத்தின் பண்பு. 

உங்களது இந்த தெளிவும் புரிதலும் இலங்கையில் வாழும் தமிழ், சிங்கள மக்களில் இரு பகுதியினரிலும்   குறைந்தது 35% - 40% மக்களிடம் இருந்திருத்தால் போதும்  இலங்கைத்தீவு இரண்டு சுதந்திர நட்பு  நாடுகளாகவோ அல்லது இரு தன்னாட்சி பிராந்தியங்களை உடைய ஒரு  நாடாகவோ  இருப்பதோடு மட்டுமல்ல தென்கிழக்கு ஆசியாவில் பொருளாதார மேம்பாடு அடைந்த நாடாகவும்   இருந்திருக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கற்பகதரு said:

சிங்கள பௌத்தர்கள் எல்லாம் நாத்திகர்கள் என்கிறீர்கள், இல்லையா?
 
பவுத்த கொள்கை, நாத்திகம் என்பது பெரும்பாலான சிங்களவருக்குத் தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.