Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காற்றில் பறந்த தமிழர் கலாசாரம் முதலிடம் பிடித்தது….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காற்றில் பறந்த தமிழர் கலாசாரம் முதலிடம் பிடித்தது….

January 16, 2020

Mucic.jpg?resize=800%2C600

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்ட போட்டி நடத்தப்பட்டது.  ஆயிர கணக்கான மக்கள் பங்கேற்று பட்டப் போட்டிகளை பார்த்து மகிழ்ந்தனர். இந்தப் போட்டியில் வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் ஏற்றப்பட்டன. அதில் பறக்கும் இசைக்கச்சேரி பட்டம் முதலிடம் பிடித்தது.

காற்றில் பறந்து தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் முகமாக பறை, உடுக்கு,்யாழ், தவில், மிருதங்கம், கடம் போன்ற இசைக்கருவிகளை இசைத்த கலைஞர்களை கொண்டதாக இந்தப் பட்டம் இருந்தது.

IMG_9047.jpg?resize=800%2C600IMG_9062.jpg?resize=800%2C600IMG_9165.jpg?resize=800%2C600IMG_9220.jpg?resize=800%2C600IMG_9226.jpg?resize=800%2C600IMG_9232.jpg?resize=800%2C600

 

http://globaltamilnews.net/2020/136231/

  • கருத்துக்கள உறவுகள்

82179414_2629059747180241_56076822256308

 

82924084_2629060003846882_13042727462088

82110278_2629059960513553_12080701474078

 

82681831_2629059913846891_71598770885083

82497816_2629059867180229_56399608848402

 

தொடர்ந்து 5 வருடங்களாக வல்வை பட்டப்போட்டியில் முதலிடத்தை பெற்ற பட்டக்கலைஞன் #பிரஷாந்...

வல்வெட்டித்துறைக்கே உரித்தான.
வல்வை பட்ட திருவிழாவில் தொடர்ந்து பல வருடமாக முதலிடத்தை தக்கவைத்து இம்முறையும் தனது சாதனையை நிலை நாட்டிய பிரஷாந்திற்கு வாழ்த்துக்கள்...!!!

இம்முறையும் 1,2,3 இடத்தை பிரஷாந் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வல்வை மண்ணையும், வடமராட்சி மண்ணின் பெருமையையும் பறைசாற்றும் சாதனையை படைத்துள்ளார்.

வாழ்த்துவது சுலபம் ஆனால் இவ் பட்டத்தை உருவாக்கும் செலவும், நுட்பமுறையும் இங்கு முதலிடத்தை பெற்றுள்ளது என்பது தான் உண்மை.

👏👏👏 வாழ்த்துக்கள் பிரஷாந்

வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம்

அருமையான போட்டி!
பங்குபற்றிய அனைவருக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஐந்து வருடங்களாக... தயாரித்த பட்டங்கள், அனைத்துமே... மிக மிக அழகாக உள்ளது. 
பட்டக் கலைஞன் பிரஷாந்துக்கு  வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரஷாந்துக்கு  வாழ்த்துக்கள். இந்த தலைப்பை போட்டவனையும் ஏதாவது செய்ய வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..👍

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, சுவைப்பிரியன் said:

பிரஷாந்துக்கு  வாழ்த்துக்கள். இந்த தலைப்பை போட்டவனையும் ஏதாவது செய்ய வேணும்.

மனதை... உறுத்திய, தலைப்பு      சந்தேகமேயில்லை, .சுவைப்பிரியன்..... 
எம்மை.... நாமே, தாழ்த்திக் கொள்கின்றோம் என்ற, மன வருத்தம்தான் மிஞ்சியது.

ஒரு, தொழில் நடத்தும் போது.... அதற்குரிய அனுபவம் தேவை.
இல்லாவிடில்.... அதனை நடத்த முடியாது.

இலங்கைத் தமிழ் அரசியல் வாதிகளிகளில்...
எத்தனை பேர்...  உலக  அரசியலை, படித்தவர்கள்? 
மண்ணாங்கட்டியும்... தெரியாத, தலைவர்களால்....  
நமது, மானம்.... காற்றில் பறக்கின்றது.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 1/17/2020 at 5:25 AM, சுவைப்பிரியன் said:

பிரஷாந்துக்கு  வாழ்த்துக்கள். இந்த தலைப்பை போட்டவனையும் ஏதாவது செய்ய வேணும்.

செய்தியை இணைக்கும்போது தலைப்பை மாற்ற யோசித்தேன். ஆனால் களவிதி அனுமதிக்காது என்பதால் அப்படியே விட்டுவிட்டேன். 

On 1/17/2020 at 10:55 AM, சுவைப்பிரியன் said:

இந்த தலைப்பை போட்டவனையும் ஏதாவது செய்ய வேணும்.

மிகமிக மட்டமான, கேவலமான பார்வையும் ரசனையும் உடைய ஊடகவியலாளர்களால் மட்டுமே இப்படிக் கேவலமாக ஒரு தலைப்பை எழுத முடியும்.    

பல தமிழ் ஊடகங்களின் தரம் வீழ்ச்சியுற்று வருகிறது. அதில் குளோபல் தமிழ் செய்திகளும் அடக்கம்.

ஒருகாலத்தில், ஆனந்தி போன்றவர்கள்  காலத்தில், தரமாக இருந்து பிபிசி தமிழும் இப்போது மிக மோசமான ஊடகவியலாளர்கள் கைகளில் சிக்கி தரம் வீழ்ச்சியுற்று வருகிறது. இதில் தற்போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடும் ஹிந்திய அரச பயங்கரவாதிகளின் எடுபிடிகள் பணிபுரிவதைப் போலவே அதனது பல செய்திகள் இடம்பெறுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் பங்கு பற்றிய அனைவருக்கும் மற்றும்  பிரசாந்துக்கும்.....!   💐

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டியில் பங்குபற்றிய சகல போட்டியாளர்களுக்கும் முதலாமிடம் பெற்ற பிரசாந்துக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

எந்த வித இயந்திர சக்கியையும் பயன்படுத்தாமல் காற்றின் சக்தியை மட்டும் பயன்படுத்தி சாதனை படைத்த  பட்டம்.(இணைப்பு முகப்புத்தக பதிவிலிருந்து)

வாழ்த்துக்கள் பிரசாந்!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜெகதா துரை said:

எந்த வித இயந்திர சக்கியையும் பயன்படுத்தாமல் காற்றின் சக்தியை மட்டும் பயன்படுத்தி சாதனை படைத்த  பட்டம்.(இணைப்பு முகப்புத்தக பதிவிலிருந்து)

வாழ்த்துக்கள் பிரசாந்!

வாவ்.... பிரசாந்துக்கு,  எவ்வளவு பெரிய... தொழில் நுட்ப அறிவு. ❤️
காணொளி... இணைப்பிற்கு, இணைப்பிற்கு நன்றி... ஜெகதா துரை. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.