Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கோரிக்கை

Jan 26, 20200

 

வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கோரிக்கை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக கொழும்பு தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள்ள பொது இடங்கள் மற்றும் ஹோட்டல் உணவகங்களுக்குள் நுழையும்போது ஹோட்டல் ஊழியர்கள் வருபவர்களிடம் அவர்களது வாயை நன்றாக கழுவசொல்லுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பு நகரில் பெருமளவான சீனர்கள் வசிப்பதால் சீனர்களின் பாதுகாப்பிற்காக இந்த முறையைப் பின்பற்றுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார்

 

http://www.samakalam.com/செய்திகள்/வைரஸ்-அச்சுறுத்தலை-அடுத்/

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளருக்கும்  சாதகமாய்ப் போய்ச்சு 

இலங்கையர்களை மீள அழைத்துவர நடவடிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீனாவில் உள்ள இலங்கைக்கான தூதரகம் அறிவித்துள்ளது.

இதன்படி கொரோனா வைரஸால் அதிக பாதிப்புக்குள்ளான சீனா உகான் நகரில் உள்ள 32 இலங்கையர்களே மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் பீஜிங்க், ஷென்ஹூ ஆகிய நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் 40 மாணவர்களையும் மீள நாட்டுக்கு அழைத்துவருதற்கும் தேவையன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலஙகயரகள-மள-அழததவர-நடவடகக/150-244517

வருமுன் காப்போம்।

17 hours ago, கிருபன் said:

கொழும்பு நகரில் பெருமளவான சீனர்கள் வசிப்பதால் சீனர்களின் பாதுகாப்பிற்காக இந்த முறையைப் பின்பற்றுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார்

சீனர்களின. பாதுகாப்புக்காகவா அல்லது சீனாவில் இருந்து நோய் இலங்கைக்கு பரவாமல்  தடுப்பதற்காகவா? 

52 minutes ago, tulpen said:

சீனர்களின. பாதுகாப்புக்காகவா அல்லது சீனாவில் இருந்து நோய் இலங்கைக்கு பரவாமல்  தடுப்பதற்காகவா? 

பெருமளவு சீனர்கள் புதுவருட விடு முறையை கழிக்க  இலங்கைக்கு வந்துகொண்டிருக்கிறார்க l  அத்துடன்  புதுவருட விடுமுறைக்காக அங்கு போன சீனர்களும் விரைவில் திரும்புவார்கள்। எனவே இதனை கருத்தில்கொண்டு இங்குள்ள மக்களை   முக மூடி அணியும்படி கேட்கப்பட்டுள்ளது। இங்குள்ளவர்களை பாதுகாப்பதட்காக என்று கருதலாம்। இருந்தாலும் அது எவ்வளவு தூரம் பாதுகாப்பானது என்று தெரியவில்லை। 

7 நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ்.. இதுவரை 80 பேர் பலி..!

Jan 27, 2020

சீனாவின் வூஹான் நகரில் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. இரண்டாயிரத்து 700க்கும் மேற்பட்டோருக்கு இந்நோயின் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 5 பேருக்கு இந்நோய்க்கூறு பரவியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு கோரனோ வைரஸ் பரவிஇருப்பதையடுத்து பல்வேறு விமான நிலையங்களில் மருத்துவ சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன . உலகின் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் குறித்த பதற்றம் பரவி வருகிறது.

வூஹானில் உள்ள அமெரிக்கர்களை சான்பிரான்சிஸ்கோவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை சீன அரசு தொடங்கியுள்ளது. இதனால் இந்திய மாணவர்களும் நாடு திரும்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும் நோய் பரவாமல் தடுக்க சீனாவில் இருந்து வெளியிடங்களுக்கு விலங்குகள், இரைச்சி போன்றவற்றை வர்த்தகம் செய்வதற்கும் சீன அரசு தடை அறிவித்துள்ளது.

https://www.polimernews.com/dnews/98340/7-நாடுகளுக்கு-பரவிய-கொரோனாவைரஸ்..-இதுவரை-80-பேர்-பலி..!

சீனாக்காரன் செய்த முகமூடியை அணியலாமா?

சீனாக்காரன் வைரஸையும் அவிழ்த்துவிட்டு தன்ர முகமூடியையும் விக்கப்போறான் போல இருக்கு.

Infographic showing the symptoms of the coronavirus

 

Map showing international cases of the coronavirus

 

Infographic showing what you can do to reduce your risk of catching coronavirus

இலங்கை வந்த சீனப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ்

Monday, January 27, 2020 - 8:51pm

இலங்கையில் முதல் கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனை சுகாதார மேம்பாட்டுக்கு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹுபேயிலிருந்து வந்த 43 வயதான சீனப் பெண் ஒருவர் இவ்வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தேவையற்ற பயத்தை ஏற்படுத்துவதற்கான தகவல் அல்ல எனவும், விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது எனவும், சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

குறித்த பெண் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, சுகாதாரத்துறையினர் இதன் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதார பணியகம் அறிவித்துள்ளது.

மக்கள் பீதி அடைய வேண்டாம் என தெரிவித்துள்ள பணியகம், nCoV வைரஸை அடையாளம் காண்பதற்கான வசதிகளைக் கொண்ட ஆய்வகங்களில் இலங்கையும் ஒன்றாகும் என பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் IDH வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் இக்கால அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நோயாளியுடன் இருந்தவர்களை சோதனை செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பணியகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.thinakaran.lk/2020/01/27/உள்நாடு/47524/இலங்கை-வந்த-சீனப்-பெண்ணுக்கு-கொரோனா-வைரஸ்

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல உந்த காணிபிடிச்சு புத்தகோயில் கட்டுற பிக்குமாரையும், இப்பவும் வகாப்பிசம் நாம சவூதிகாரர் என்று தம்பட்டம் அடிக்கும் முசுலிம் மவுலபிகளையும் ...இந்துவில் சிலர் மட்டுமே....எயார்பொட்டுக்கு அனுப்புங்கோ ....வரசு அப்படியே அழிஞ்சிடும்...

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் சீன கப்பல்களினூடாக கொரோனா பரவ வாய்ப்பு

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள சீன கப்பல்கள் மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் இலகுவாக உள்வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன.  

அகில இலங்கை ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கம், புத்தளம் மாவட்ட மீன்பிடி உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று மாரவிலவில் செய்தியாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தன.  

இதன்போதே அவர்கள் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இது தொடர்பில் வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். இதற்கிணங்க வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு மீன் பிடிப்பதற்காக வரும் கப்பல்களை இலங்கை கடலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த கப்பல்களை இலங்கை மீனவர் துறைமுகங்களுக்குள் நிறுத்துவதற்கு அனுமதிக்க கூடாதென்றும் அவர்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.  

தற்போது விமான நிலையங்களில் அதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் மீன்பிடித் துறைமுகங்களில் அவ்வாறான சுகாதார பாதுகாப்பு செயற்றிட்டங்கள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். (ஸ)

http://www.thinakaran.lk/2020/01/27/உள்நாடு/47478/இலங்கை-கடற்பரப்பில்-மீன்பிடிக்கும்-சீன-கப்பல்களினூடாக-கொரோனா-பரவ-வாய்ப்பு

  • கருத்துக்கள உறவுகள்

Bandaranaike-International-Airport.jpg

இலங்கையில் விமான நிலையத்திற்குள் நுழைய தடை

விமான பயணிகளை தவிர்ந்த ஏனைய நபர்களுக்கு விமான நிலையத்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் இவ்வாறு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இதுவரையில் 106 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது.

இந்நிலையில், கொழும்பில் உள்ள தொற்று நோய்கள் தொடர்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பது நேற்று கண்டறியப்பட்டது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரில் ஒரு சீன பெண்ணுக்கே இந்த வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

43 வயதான குறித்த பெண் சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறான நிலையிலேயே விமான பயணிகளை தவிர்ந்த ஏனைய நபர்களுக்கு விமான நிலையத்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/விமான-பயணிகளை-தவிர்ந்த-ஏ/

On 1/27/2020 at 9:58 AM, tulpen said:

சீனர்களின. பாதுகாப்புக்காகவா அல்லது சீனாவில் இருந்து நோய் இலங்கைக்கு பரவாமல்  தடுப்பதற்காகவா? 

 

10 hours ago, ampanai said:

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் சீன கப்பல்களினூடாக கொரோனா பரவ வாய்ப்பு

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள சீன கப்பல்கள் மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் இலகுவாக உள்வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன.  

அகில இலங்கை ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கம், புத்தளம் மாவட்ட மீன்பிடி உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று மாரவிலவில் செய்தியாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தன.  

இதன்போதே அவர்கள் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இது தொடர்பில் வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். இதற்கிணங்க வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு மீன் பிடிப்பதற்காக வரும் கப்பல்களை இலங்கை கடலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த கப்பல்களை இலங்கை மீனவர் துறைமுகங்களுக்குள் நிறுத்துவதற்கு அனுமதிக்க கூடாதென்றும் அவர்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.  

தற்போது விமான நிலையங்களில் அதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் மீன்பிடித் துறைமுகங்களில் அவ்வாறான சுகாதார பாதுகாப்பு செயற்றிட்டங்கள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். (ஸ)

http://www.thinakaran.lk/2020/01/27/உள்நாடு/47478/இலங்கை-கடற்பரப்பில்-மீன்பிடிக்கும்-சீன-கப்பல்களினூடாக-கொரோனா-பரவ-வாய்ப்பு

சீனாவிலிருந்து எகிப்துக்கு போன வணிக கப்பலில் வேலை செய்யும் இலங்கையர் ஆறு பேர் இந்த வியாதியினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்। 

இப்போது  இங்கு கடைகளில் முக மூடிக்கு பெரும் தட்டுப்பாடு।  சீனாவில் இருந்து வரும் வரைக்கும் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை।

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் இரத்த மாதிரிகளை ஹொங்கொங்கில் உள்ள ஆய்வத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்களை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு அனுப்பப்படும் இரத்த மாதிரிகளின் முடிவுகளை ஒரு நாளுக்குள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொடர்பில் ஆராய ஹொங்கொங்கில் அதிக வசதிகள் உள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், கொரோனா வைரஸ் ஆய்வக சோதனைகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் இரசாயனப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

https://www.virakesari.lk/article/74307

சீனாவிலிருந்து வரும் மாணவர்கள் தியத்தலாவை முகாமுக்கு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமில் தங்கவைக்கப்படவுள்ளனர்.

குறித்த மாணவர்களை தியதலாவை இராணுவ முகாமில் 2 வாரங்கள் வைத்து கண்காணிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சனவலரநத-வரம-மணவரகள-தயததலவ-மகமகக/175-244629

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தாக்கம் - சீன எல்லையை மூடியது மொங்கோலியா!

கொரோனா வைரஸ் தாக்கம் - சீன எல்லையை மூடியது மொங்கோலியா!

 

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து அந்நாட்டுடனான எல்லையை மொங்கோலியா மூடிவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொங்கோலியாவில் பாடசாலைகள், கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தங்கள் நாட்டில் பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து நாடுகளுமே தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வகையில் சீனாவின் அண்டை நாடான மொங்கோலியா தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் ஊடுருவிடக் கூடாது என்பதற்காக சீனாவுடான எல்லையை மூடிவிட்டது.

இதனால், சீனாவில் இருந்து வரும் வாகனங்கள் மொங்கோலியாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இது தொடா்பாக அந்நாட்டு துணை பிரதமா் உல்சிசைகான் கூறியதாவது: சீனாவில் கொரோனா வைரஸுக்கு பலியாவோா் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும், பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. எனவே, சீனாவுடனான மொங்கோலியா எல்லையை மூட முடிவு செய்துள்ளோம். எனவே, அந்த எல்லை வழியாக மொங்கோலியாவில் இருந்து சீனா செல்லவும், சீனாவில் இருந்து மொங்கோலியா வருவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இதுதவிர, மாா்ச் 2 ஆம் திகதி வரை மொங்கோலியாவில் பாடசாலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மக்கள் அதிக அளவில் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், வா்த்தக கூட்டங்கள், மாநாடு உள்ளிட்ட அனைத்துக்கும் இந்த தடை பொருந்தும் என்றாா் அவர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=125066

  • கருத்துக்கள உறவுகள்

’மக்கள் அச்சப்படத் தேவையில்லை’

 

image_497ac316e0.jpgகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சீன பெண், இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் நாட்டில் பரவாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “தொற்றுக்குள்ளானவர்களின் அருகிலிருந்தால் மாத்திரமே வைரஸ் பரவுவதற்கான சாத்தியமுள்ளது.

அருகிலிருந்து உரையாடுவதையோ, சன நெரிசல் மிக்க பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும். சனநெரிசல் மிக்க பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை கழுவி சுத்தமாக வைத்திருத்தல் அவசியம். 

சீன பிரஜை ஒருவரே குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். இலங்கை பிரஜை எவரும் இதனால் பாதிக்கப்படவில்லை. இதனால் கொரோனா வைரஸ் நாட்டில் அதிகளவில் பரவுவதற்கான சாத்தியமில்லை” என்று டொக்டர் அனில் ஜாசிங்ஹ சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மககள-அசசபபடத-தவயலல/150-244624

31 minutes ago, nunavilan said:

சீன பிரஜை ஒருவரே குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். இலங்கை பிரஜை எவரும் இதனால் பாதிக்கப்படவில்லை. இதனால் கொரோனா வைரஸ் நாட்டில் அதிகளவில் பரவுவதற்கான சாத்தியமில்லை” என்று டொக்டர் அனில் ஜாசிங்ஹ சுட்டிக்காட்டியுள்ளார்.

டொக்டரின் தியரி படு முட்டாள்தனமானதா இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்! குணமாக்கக்கூடிய மருந்து கண்டுபிடிப்பு

  • கொரோனா வைரஸ் நோய்த் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்கான மருந்தினை கண்டுபிடித்துள்ளதாக சித்த மருத்துவர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

சீனாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனாவிற்கு 106 பேர் தற்போது வரை பலியாகியுள்ளனர்.

அந்நாட்டை நிலைகுலையச் செய்திருக்கும் இவ்வைரஸ் தொடர்பில் மருத்துவர்கள் தங்கள் முயற்சிகள் அனைத்தையும் முடுக்கி விட்டிருக்கின்றனர். சில நகரங்களை அரசு தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.

சீனாவில் தங்கியிருக்கும் பிரஜைகள் தங்கள் சொந்த நாடுகளுக்கு விரைந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சீனாவை உலுக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு தங்களிடம் மருந்து இருப்பதாகவும் அரசு அனுமதியளித்தால் சீனா செல்லத் தயார் எனவும் சித்த மருத்துவர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் பேசிய அவர்,

 

 

https://www.ibctamil.com/world/80/135996?ref=home-imp-parsely

இலங்கையிலுள்ள சீன தூதரகம் விடுக்கும் முக்கிய செய்தி

சீனாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன பிரஜைகளுக்கு இலங்கையிலுள்ள சீன தூதரகம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.


china.jpg

இந்நிலையில் தங்களது இலங்கைச் சுற்றுலாத் திட்டத்தை இரத்துச் செய்து, சனத்தொகை அதிகமாக மற்றும் நெரிசலாக உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு தூதரகம் சீன நாட்டவர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோயை இலங்கையில் தடுக்கும் திட்டமாகவே இது அமைந்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/74362

இலங்கையில் மிருகங்களால் கொரோனா பரவ வாய்ப்பில்லை"

கொரோனா ஆட்கொல்லி வைரஸ் சீனாவில் மிருகங்களில் இருந்தே ஆரம்பத்தில் பரவியிருந்தது. அதன் பின்னர் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு அது பரவியது.

எனினும் தற்போது  இலங்கையில் மிருகங்களில் இருந்து இந்த வைரஸ் பரவுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என மத்திய மாகாண மிருக உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஆர்.எம்.கே.பீ.ராஜநாயக்க தெரிவித்துள்ளார்.

சீனாவில் இந்த வைரஸ் ஆரம்பமாக ஏற்பட்டிருப்பது வெளவ்வால் மற்றும் பாம்பினால் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/74365
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.