Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவினர் கடன் கேட்டால், 'இல்லை' என்று சொல்லவும் கற்றுக்கொள்ள வேண்டும்... ஏன்?

Featured Replies

கடன்

கடன் வாங்குவதும் கொடுப்பதும் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாதவை. "இன்று பொருளாதார மந்தநிலையால் பலர் வேலையிழந்து, பணத்தேவையில் தவித்து வருகிறார்கள். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், வங்கியிடமிருந்து நெருக்கடியைச் சந்திக்கிறார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்குப் பணமில்லாமல் தவிக்கும் நிலையில், மீண்டும் யாரிடம் கடன் வாங்கலாம் என்று தேடி அலைகிறார்கள்.

அவர்களில் ஒருவராக நம் நண்பரோ, உறவினரோ இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நாம் உதவி செய்ய முன்வந்தாலும், அவர்களுக்குக் கடன் கொடுப்பதற்கு முன்னர் நீங்கள் சில முக்கியமான அம்சங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்கிறார் நிதி ஆலோசகர் பா.பத்மநாபன்.

1. நிதிநிலையை மதிப்பிடுங்கள்!

பொருளாதாரம் மந்தமடைந்துவரும் இந்த நாள்களில் வேலையிழப்பு, கடன் நெருக்கடி, சம்பளம் பெறுவதில் தாமதம் போன்றவை அதிகரித்துவருகின்றன. இதனால் தனிநபர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கடன் கேட்பதும் அதிகரித்துவருகிறது.

உறவினர்கள், நண்பர்கள் கடனுதவி கேட்டால் அதை மறுப்பது கடினம். முதலில் உங்கள் செலவுகள் போக, கடன் கேட்பவர்களுக்கு எவ்வளவு தர முடியும் என்று கணக்குப்போட்டுப் பாருங்கள். அத்தியாவசியச் செலவுகளுக்குப் பணத்தை ஒதுக்கிய பிறகு மீதமுள்ள தொகை ஏதாவது இருந்தால் மட்டுமே கடன் தர வேண்டும். முக்கியமாக, கடன் கேட்கும் நண்பர்கள் அல்லது உறவினர்கள்மீது உங்களுக்கு முழு நம்பிக்கை இருந்தால் மட்டும் அவர்களுக்கு உதவுங்கள்.

கடனளிக்க உங்களுக்கு விருப்பமில்லை என்றால், 'என்னிடம் பணமில்லை' என்று சொல்வதில் தவறில்லை. உப்புச்சப்பில்லாத காரணங்களுக்காக நீங்கள் கடன் தர மாட்டீர்கள் என்பதை உணர்த்திவிட்டால், தேவையில்லாமல் உங்களிடம் கடன் கேட்டுத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

2. முதலீடுகளைத் தொட வேண்டாம்!

நீங்கள் பண உதவி செய்யத் தயாராக இருந்தாலும், எந்தப் பணத்தை எடுத்துத் தருவது என்ற குழப்பம் அவ்வப்போது ஏற்படும். நம்மிடம் இருக்கும் உபரிப் பணத்தை மட்டுமே கடனாகத் தர வேண்டும். நீங்கள் செய்திருக்கும் முதலீட்டிலிருந்து பணத்தை எடுத்துத் தராதீர்கள். உதாரணமாக, சிலர் தங்க நகையை அடகு வைத்தோ, விற்றோகூடக் கடன் தருவார்கள். அப்படிச் செய்யவே கூடாது. இன்னும் சிலர் ஓய்வுக்காலத்துக்கோ, குழந்தைகளின் எதிர்காலத்துக்கோ செய்து வைத்திருக்கும் முதலீட்டிலிருந்து பணத்தை எடுத்துத் தருவார்கள். அந்த முதலீட்டில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டால்கூட நீங்கள் நினைத்ததை அடைய முடியாது.உங்கள் சேமிப்புக் கணக்கில் பணம் இருந்தால் அதை எடுத்துத் தரலாம்.

உறவினருக்கு கொடுக்கும் கடன்... கவனிக்க 7 அம்சங்கள்!

> 'இல்லை' என்று சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!

நம் அன்புக்குரியவர்களிடம் 'இல்லை' என்று சொல்வது சற்று கடினமானதுதான். ஆனால், உதவி செய்யும் அளவுக்குப் போதிய பணம் இல்லையென்றாலோ, நமது வேலை நிலையற்றதாக இருக்கிறது என்றாலோ கடன் தருவதைத் தவிர்த்துவிடுங்கள்.

கடன் கேட்பவரின் தேவை முக்கியமானதாகவோ, அவசரத்துக்குத் தேவைப்படுவதாகவோ இருந்தால் மட்டும் கடன் கொடுங்கள். அவர் கார் வாங்கவோ, கிரெடிட் கார்டு பாக்கியைக் கட்டுதற்கோ கடன் வழங்காதீர்கள். மேலும், கடன் வாங்கியவர் அதே தேவைக்காக மீண்டும் கடன் கேட்டாலும் தர வேண்டாம். நிதியைச் சரியாகத் திட்டமிடாததால்தான் அவர் மீண்டும் கடன் பெறுகிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கடனளிக்க உங்களுக்கு விருப்பமில்லை என்றால், 'என்னிடம் பணமில்லை' என்று சொல்வதில் தவறில்லை. உப்புச்சப்பில்லாத காரணங்களுக்காக நீங்கள் கடன் தர மாட்டீர்கள் என்பதை உணர்த்திவிட்டால், தேவையில்லாமல் உங்களிடம் கடன் கேட்டுத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

> திருப்பிக் கேட்க வெட்கப்பட வேண்டாம்!

உறவினர்களிடம் கடன் கொடுத்தால், அதைத் திருப்பிக் கேட்கப் பெரும்பாலானோர் கூச்சப்படுவது வழக்கம். அவர்களிடம் வழங்கிய கடனை எப்படித் திருப்பிக் கேட்பது என்று தெரியாமல் தவிப்போம்.

என்னதான் நெருங்கிய உறவினராக, நன்கு பழகிய நண்பராக இருந்தாலும், 'எப்போது பணத்தைத் திருப்பித் தருவீர்கள்?' என்று கேட்டு, உறுதிமொழியைப் பெற்றுக்கொண்டு கொடுங்கள். அவர் சொல்லும் காலத்துக்குள் பணத்தைத் தரவில்லையென்றால் உங்கள் நிதி நிலையையும், உங்கள் நிதித் திட்டத்தையும் சொல்லி பணத்தைத் திருப்பித் தரும்படி கோபப்படாமல், ஆனால் உறுதியாகக் கேளுங்கள்.

சில நேரங்களில் சிறு தொகையைக் கடனாக வழங்கினால் அதை நாம் மறந்துவிடுவோம். கடன் பெற்றவரும் அது சிறு தொகை என்பதால் மறந்துவிடுவார். எனவே, தொகை சிறிதோ பெரிதோ நீங்கள் தந்த கடனை எழுதி வைத்துக் கொள்வதோ, போனில் ரிமைண்டர் செட் செய்து வைத்துக்கொள்வதோ அவசியம்.

> கடன் வாங்கி, கடன் கொடுக்காதீர்கள்!

உங்கள் நண்பரோ, உறவினரோ அவசரமாகக் கடன் கேட்டு வந்து நின்றால், இன்னொருவரிடம் கடன் வாங்கி அதை அவர்களுக்குக் கொடுக்காதீர்கள். கடன் செலுத்தக் கடன் வாங்குவது எப்படிப் பிரச்னையை உருவாக்குமோ, அதேபோலத்தான் கடன் கொடுக்கக் கடன் வாங்குவதும்.

நம் அன்புக்குரியவர்கள் நிதிப் பிரச்னையில் சிக்கித் தவிப்பதைப் பார்க்க சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால், உங்களுக்குச் சிக்கல் இல்லாமல் அவர்களுக்கு உதவ முடியுமா என்று யோசிப்பதுதான் புத்திசாலித்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

கடன் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொண்டதில் நல்லானுபவம் எனக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

யார் உங்களை ஏமாற்றுவார்கள் ? நீங்கள் யாருக்குக் கடன் கொடுப்பீர்களோ அவர்கள்தான் உங்களை ஏமாற்றுவர். 

யாருக்கு கடன் கொடுப்பீர்கள் ? உறவினர், நண்பர்கள். ஆகவே இவர்களால்தான் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்.

ஏனென்றால் முன்பின் தெரியாதோருக்கு கடன் கொடுக்க மாட்டீர்களல்லவா ?

Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கடன் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொண்டதில் நல்லானுபவம் எனக்கு.

என்னையும் உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

என்னையும் உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

நான் இதில் அதிகம் எழுதாததுக்குக் காரணம் கடன் குடுத்தது பற்றியே எழுத நிறைய இருக்கு எனக்கு. அதுக்கு ஒரு தனித்த திரிதான் திறக்கவேணும்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

இன்று (31.01.2020)... நான், வேலை செய்யும் இடத்தில்... 
கடன் கேட்ட ஒருவரின் கதையை கேளுங்கள்.

எனது வேலையிடத்துக்கு... தினமும், 
பல வேறு ஐரோப்பிய  நாடுகளை சேர்ந்தவர்கள் வருவார்கள்.
அதில்... தொடர்ந்து, வருபவர்களையும், புதிதாக வருபவர்களையும்...
அவர்களின்... முக, நடை, பாவனைகளில்... உடனே கண்டு பிடித்து விடுவேன்.   

இன்று(31.01.2020)... புதிதாக ஒரு  "றுமேனிய" நாட்டவர் வந்து,
தனக்கு, காசு... மிகவும் கஸ்ரமாக உள்ளது. 
100 € கடனாக... தரும் படியும், அதனை... அடுத்த வருடம் (2021)
திரும்பத் தருவேன் என்று,  கேட்ட  போது.... 

அந்த,  ரூமேனியா நாட்டு ... உத்தமனின்,  நம்பிக்கையை..  மனதில் வியந்தேன். :)

அதற்கு... நான் கொடுத்த பதில் என்னவாக இருக்கும்...
என்பதை, உங்கள் ஊகத்திற்கே... விட்டு விடுகின்றேன்.  ✍️

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

எனக்குத் தலை வெடித்துவிடும்போல் உள்ளது. யாராவது உதவி செய்யுங்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

எனக்குத் தலை வெடித்துவிடும்போல் உள்ளது. யாராவது உதவி செய்யுங்கள் 🙏

கபிதனுக்கே.... தலை, வெடிக்குது என்றால்,
நிலைமை... படு மோசம் என்று அர்த்தம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

அதற்கு... நான் கொடுத்த பதில் என்னவாக இருக்கும்...
என்பதை, உங்கள் ஊகத்திற்கே... விட்டு விடுகின்றேன்.  ✍️

களிசானைப் பின்பக்கமாக இறக்கிக் காட்டி கருந்துளைக்குள் (black hole 🕳) தேடி எடுக்கச் சொல்லியிருப்பீர்கள்😂🤣🤣

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் நல்ல அனுபவம் இருக்கிறது இதில்......,

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2020 at 5:27 AM, தமிழ் சிறி said:

கபிதனுக்கே.... தலை, வெடிக்குது என்றால்,
நிலைமை... படு மோசம் என்று அர்த்தம். :grin:

அடேய் மாங்கா எனக்கு இந்தவருடம் பென்சன்டா என்று சொல்லி இருக்கலாம் என பட்சி சொல்லுது 😃

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎31‎/‎2020 at 11:12 PM, தமிழ் சிறி said:

Ähnliches Foto

இன்று (31.01.2020)... நான், வேலை செய்யும் இடத்தில்... 
கடன் கேட்ட ஒருவரின் கதையை கேளுங்கள்.

எனது வேலையிடத்துக்கு... தினமும், 
பல வேறு ஐரோப்பிய  நாடுகளை சேர்ந்தவர்கள் வருவார்கள்.
அதில்... தொடர்ந்து, வருபவர்களையும், புதிதாக வருபவர்களையும்...
அவர்களின்... முக, நடை, பாவனைகளில்... உடனே கண்டு பிடித்து விடுவேன்.   

இன்று(31.01.2020)... புதிதாக ஒரு  "றுமேனிய" நாட்டவர் வந்து,
தனக்கு, காசு... மிகவும் கஸ்ரமாக உள்ளது. 
100 € கடனாக... தரும் படியும், அதனை... அடுத்த வருடம் (2021)
திரும்பத் தருவேன் என்று,  கேட்ட  போது.... 

அந்த,  ரூமேனியா நாட்டு ... உத்தமனின்,  நம்பிக்கையை..  மனதில் வியந்தேன். :)

அதற்கு... நான் கொடுத்த பதில் என்னவாக இருக்கும்...
என்பதை, உங்கள் ஊகத்திற்கே... விட்டு விடுகின்றேன்.  ✍️

பெப் 30ம் திகதி  வா தாறன் என்று இருப்பியள் 😀
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடன் குடுக்கிறவனை விட கடன் வாங்கினவன் தான் தைரியசாலி. 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கடன் குடுக்கிறவனை விட கடன் வாங்கினவன் தான் தைரியசாலி. 😎

100% சரியான கூற்று. 

அதுச் சரி நீங்கள் தைரியசாலியா அல்லது  அசகாய சூரரா ?😉

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, Kapithan said:

100% சரியான கூற்று. 

அதுச் சரி நீங்கள் தைரியசாலியா அல்லது  அசகாய சூரரா ?😉

அய்க்...உப்பிடி றால் போட்டு சுறா புடிக்கிற ஆக்களை எத்தினை பேரை பாத்திருப்பன்?😀

அதுவும் என்னட்டை? 😎

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2020 at 12:53 AM, Kapithan said:

எனக்குத் தலை வெடித்துவிடும்போல் உள்ளது. யாராவது உதவி செய்யுங்கள் 🙏

On 2/1/2020 at 5:33 PM, கிருபன் said:

களிசானைப் பின்பக்கமாக இறக்கிக் காட்டி கருந்துளைக்குள் (black hole 🕳) தேடி எடுக்கச் சொல்லியிருப்பீர்கள்😂🤣🤣

On 2/2/2020 at 6:28 PM, தனிக்காட்டு ராஜா said:

அடேய் மாங்கா எனக்கு இந்தவருடம் பென்சன்டா என்று சொல்லி இருக்கலாம் என பட்சி சொல்லுது 😃

8 hours ago, ரதி said:

பெப் 30ம் திகதி  வா தாறன் என்று இருப்பியள் 😀
 
Bildergebnis für 1000 euro schein"

என்னிடம் 1000 € தாள்  காசாக தான்.... இருக்குது,
அடுத்த முறை வரும் போது.. மாத்தி தாறன் என்று சொன்னவுடன்...
மேலும், கீழும் பார்த்து விட்டு... ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார். :grin:

பிற்குறிப்பு: 1000 € காசு புழக்கத்தில் இல்லை என்பது...  குறிப்பிடத்தக்கது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் நிறையபேர் பொய் சொல்லி காசு வாங்கி இருக்கிறார்கள் 
அவர்கள் சொல்வது பொய் என்று தெரிந்தும் நான் கொடுத்து இருக்கிறேன் 
அவர்களுக்கு சரியாக பொய் சொல்ல தெரியவில்லை என்றுதான் கவலைபட்டு இருக்கிறேன்.

என்னிடம் இருந்து போகும் எதுவும் திரும்பி வரவேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை 
என்னால் முடிந்ததை கொடுத்துக்கொண்டே இருக்கிறேன் ....
எனது நிலமையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டுதான் இருக்கிறது 
எதிர்காலம் பற்றி அதிகமாக நான் கவலை கொள்ளவது கிடையாது ... இப்போது சிலகாலமாக 
அறுவடை அதிகமாக இருக்குமே என்பதால் ஒரு பகுதியை முதலீடு செய்து வருகிறேன் 

எனது தனிப்பட்ட எண்ணம் அனுபவம் 
கொடுத்து யாரும் ஏழையாக மாட்டார்கள் என்பதுதான் 
கொடுக்க கொடுக்க உங்கள் வருமானம் எதோ ஒருவகையில் கூடிக்கொண்டுதான் இருக்கும். 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதில் கருத்தெழுதிய எத்தனை பேரிடம் கடனட்டை உள்ளது..?? வீட்டுக்கடன் உள்ளது.. யுனியில் படிக்கும் உங்கள் பிள்ளை மீது கடன் உள்ளது.. ??

சொந்த உறவினர்களுக்கு கடன்கொடுத்து உதவுவதை தவிர்ப்பது பற்றி கதைக்கின்ற போது... வெறும் வாக்குறுதிகளை நம்பி உங்களுக்கு கடன் தரும் நிறுவனங்கள் கதை எழுத ஆரம்பித்தால்...??!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nedukkalapoovan said:

இதில் கருத்தெழுதிய எத்தனை பேரிடம் கடனட்டை உள்ளது..?? வீட்டுக்கடன் உள்ளது.. யுனியில் படிக்கும் உங்கள் பிள்ளை மீது கடன் உள்ளது.. ??

சொந்த உறவினர்களுக்கு கடன்கொடுத்து உதவுவதை தவிர்ப்பது பற்றி கதைக்கின்ற போது... வெறும் வாக்குறுதிகளை நம்பி உங்களுக்கு கடன் தரும் நிறுவனங்கள் கதை எழுத ஆரம்பித்தால்...??!

roflphotos-dot-com-photo-comments-20191231172736.jpg

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nedukkalapoovan said:

இதில் கருத்தெழுதிய எத்தனை பேரிடம் கடனட்டை உள்ளது..?? வீட்டுக்கடன் உள்ளது.. யுனியில் படிக்கும் உங்கள் பிள்ளை மீது கடன் உள்ளது.. ??

சொந்த உறவினர்களுக்கு கடன்கொடுத்து உதவுவதை தவிர்ப்பது பற்றி கதைக்கின்ற போது... வெறும் வாக்குறுதிகளை நம்பி உங்களுக்கு கடன் தரும் நிறுவனங்கள் கதை எழுத ஆரம்பித்தால்...??!

சொல்ல விரும்புவதை தெளிவாக கூறலாமே ?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

சொல்ல விரும்புவதை தெளிவாக கூறலாமே ?

தலைப்பே சொல்கிறது.

கடன் வாங்கிறவன் உறவினன். கடன் கொடுக்கிறவன் அவன் உறவு. கடனை திருப்பி தராவிட்டாலும்.. கொண்டு போனது உறவினன் தானே.. என்று சிந்திந்துப் பாருங்கள்.. இது சிம்பிளாத் தெரியும். 

கடன் கொடுக்கக் கூடிய தகுதி இருக்கிற படியால் தானே கொடுக்கிறீர்கள்.. இதுவே கடன் வாங்குபவனின் பார்வை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

தலைப்பே சொல்கிறது.

கடன் வாங்கிறவன் உறவினன். கடன் கொடுக்கிறவன் அவன் உறவு. கடனை திருப்பி தராவிட்டாலும்.. கொண்டு போனது உறவினன் தானே.. என்று சிந்திந்துப் பாருங்கள்.. இது சிம்பிளாத் தெரியும். 

கடன் கொடுக்கக் கூடிய தகுதி இருக்கிற படியால் தானே கொடுக்கிறீர்கள்.. இதுவே கடன் வாங்குபவனின் பார்வை. 

கடன் கொடுப்பது அல்ல விடயம்.

கடனாளியால் ஏமற்றப்பட்டுவிட்டோம் என்கின்ற உணர்வும் அதனால் உணரப்ப்டும் வேதனையும் அதன்பின்னர் ஏற்படும் கோபமும் தான் உரையாடலின் சாரம் என நினைக்கிறேன். 

பணம் உள்ளவர்களில் எத்தனைபேர் உதவுகிறார்கள். அவர்களுக்கு உழைப்பின் மகிமை தெரிந்ததனால் பணத்தை மிகவும் கவனமாகக் கையாளுகிறார்கள்.

ஆனால் சேமிப்பற்றவர்கள், மனிதரின் தேவையுணர்ந்து நம்பிக்கையடிப்படையில் உதவும்போதும் அதன் பின் ஏமாற்றப்படும்போது ஏற்படும் உணர்வும் சொல்லி மாளாது. 

இவர்களுக்காகத்தான் " பாத்திரம்(தகுதி) அறிந்து பிச்சை(உதவு/தானம்)யிடு" என்றும்

"ஆற்றில் போட்டாலும் அளந்து போடு" என   நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்.

Edited by Kapithan
எழுத்துப் பிழை

  • தொடங்கியவர்
On ‎1‎/‎31‎/‎2020 at 3:40 PM, ampanai said:

> 'இல்லை' என்று சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!

நம் அன்புக்குரியவர்களிடம் 'இல்லை' என்று சொல்வது சற்று கடினமானதுதான். ஆனால், உதவி செய்யும் அளவுக்குப் போதிய பணம் இல்லையென்றாலோ, நமது வேலை நிலையற்றதாக இருக்கிறது என்றாலோ கடன் தருவதைத் தவிர்த்துவிடுங்கள்.

ஆம், இல்லை என்று மனத்தை நோகாக்காமால் செல்வது ஒரு கலை. அதில் பலரும் தோல்வி அடைந்த நிலையில் இருப்பார்கள். அதாவது, 'இல்லை' என்று சொல்ல தைரியமும் இல்லை அதை அழகாக சொல்லும் அணுகுமுறையும் பலருக்கும் தெரியாது.  

  • தொடங்கியவர்
Here's how you can effectively say no:
  1. Say it. Don't beat around the bush or offer weak excuses or hem and haw. ...
  2. Be assertive and courteous. ...
  3. Understand peoples' tactics. ...
  4. Set boundaries. ...
  5. Put the question back on the person asking. ...
  6. Be firm. ...
  7. Be selfish.

Image result for how to say no

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.