Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாவர உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg

தாவர உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு!

மாமிச உணவுகளைக் குறைத்து, தாவர உணவுகளை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் துலானே பல்கலைக்கழக ஆய்வாளர்களினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில், ‘நாம் உண்ணும் உணவிலுள்ள கொழுப்புகளை உடலில் கலக்காமல் தடுப்பதில், நமது ஜீரணப் பாதையில் உள்ள பக்டீரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அசைவ உணவுகளை உண்பதற்குப் பதில், தாவர உணவுகளை உள்கொள்வதன் மூலம், அந்த பக்டீரியாக்களின் செயல்திறனை மேம்படுத்துகிறது.

இதன் காரணமாக, உடலில் கொழுப்பு சேர்வது குறைவதால், இருதய நோய்கள் ஏற்படும் அபாடம் குறைகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://athavannews.com/தாவர-உணவுகளை-உட்கொள்பவர்/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

தாவர உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு!

இருதய நோய் மட்டுமில்லை.....புற்றுநோய்,மூட்டுவலியள் எல்லாம் வராது கண்டியளோ!
எங்கடை மூதாதையர் எல்லாம் பூலால் உண்ணாதீர்கள் எண்டு சும்மாவே சொன்னவையள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது சுத்த பொய் ...சைவ உணவுக்காரரிடம் டயபீட்டிக், கொலஸ்ரோல் போன்ற வருத்தங்கள் இல்லையா 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

இது சுத்த பொய் ...சைவ உணவுக்காரரிடம் டயபீட்டிக், கொலஸ்ரோல் போன்ற வருத்தங்கள் இல்லையா 

சைவம் எண்டுட்டு டெய்லி வதக்கின கறியும்,எண்ணையிலை பொரிச்ச கத்தரிக்காய் குழம்பு, ரீ ரைம் எண்டால் பூந்தி லட்டு,தார்மாதிரி இருக்கிற எண்னையிலை பொரிச்ச வடை எண்டு அமுக்கினால் வருத்தங்கள் வராமல் என்ன செய்யும்? :(

  • கருத்துக்கள உறவுகள்

புலால் உண்ணாமல் கொஞ்சம் கூடுதலான காலம் உயிர் வாழ்வதைவிட புலால் உண்டு வேகமாக மேலே போகலாம். 😀

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

புலால் உண்ணாமல் கொஞ்சம் கூடுதலான காலம் உயிர் வாழ்வதைவிட புலால் உண்டு வேகமாக மேலே போகலாம். 😀

இப்படியான எண்ணம் எனக்கும் முன்பு இருந்ததுன் 
எமது ஆரோக்கியம் பற்றி நாம் சிந்திப்பது விடுவது எமது சொந்த முடிவு 

இன்னொரு மிருகத்தை கொல்லும் உரிமை எமக்கு யார் தந்தது? 
இப்போது இறைச்சிக்காக கொல்லப்படும் மாடுகள் ஆடுகள் கோழிகள் 
படும் பாட்டை பார்க்கும்போது  
என்னை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை  அருவெறுப்பாக இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

இப்படியான எண்ணம் எனக்கும் முன்பு இருந்ததுன் 
எமது ஆரோக்கியம் பற்றி நாம் சிந்திப்பது விடுவது எமது சொந்த முடிவு 

இன்னொரு மிருகத்தை கொல்லும் உரிமை எமக்கு யார் தந்தது? 

வேற யாரப்பா தந்தது? படைச்சவன் தான். மிருகங்கள் மற்ற மிருகங்களை கொல்வது படைத்தவன் நியதி தானே? அசைவம் சாப்பிடாத யானையே மனிதனை கொல்கிறது - நாங்கள் எந்த மூலைக்கு? எல்லாம் தெய்வ சித்தம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கற்பகதரு said:

வேற யாரப்பா தந்தது? படைச்சவன் தான். மிருகங்கள் மற்ற மிருகங்களை கொல்வது படைத்தவன் நியதி தானே? அசைவம் சாப்பிடாத யானையே மனிதனை கொல்கிறது - நாங்கள் எந்த மூலைக்கு? எல்லாம் தெய்வ சித்தம்.

வீட்டுக்குள் பாம்பு வந்தால் அடித்து கொல்கிறீர்கள்.
காட்டுக்குள் மனிதன் போனால் யானை என்ன உங்களை முத்தமிட வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

இப்படியான எண்ணம் எனக்கும் முன்பு இருந்ததுன் 
எமது ஆரோக்கியம் பற்றி நாம் சிந்திப்பது விடுவது எமது சொந்த முடிவு 

இன்னொரு மிருகத்தை கொல்லும் உரிமை எமக்கு யார் தந்தது? 
இப்போது இறைச்சிக்காக கொல்லப்படும் மாடுகள் ஆடுகள் கோழிகள் 
படும் பாட்டை பார்க்கும்போது  
என்னை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை  அருவெறுப்பாக இருக்கிறது 

புலால் உணவு என்பது தனியே மனிதனின் ருசி சம்பந்தப்பட்டதல்ல. உலகின் புரதத் தேவை , இயற்கைச் சமனிலையோடு தொடர்புபட்டது. 

மனித இனத்தின் வளர்ச்சி(கூர்ப்பு)க்கு, அதாகப்பட்டது, மூளை வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒருவகையான புரதக் கூறு புலால்(விலங்கு) உணவில் மட்டுமே உள்ளதாக ஆய்வு கட்டுரை ஒன்றில் வாசித்தேன்.

இந்தியாவின் பல மானிலங்களில் மாட்டைக்  கொல்வது தடை செய்யப்பட்டபோதுக், குறைந்த விலையில் ஏழைகளுக்கான புரத உணவு கிடைக்கும் மிகவும் முக்கியமான மூலம்(source) இதுவென்று  தடைக்கெதிராக போராடியவர்களின் வாதங்களிலொன்றாக இது இருந்தது.

உலகின் புரதத் தேவையின் மிகப் பெரும் பகுதியை  நிறைவு செய்யும் உற்பத்தி, வினியோகம் இரண்டையும் ஒரு சில நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. போர்க்காலங்களில் இதனை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் ஏதுனிலைகள்கூட கண்டறியப் பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி மாதிரி கோழி மாடுகளை கொல்ல கூடாது என்று தாவர உணவுக்கு மாறுபவர்கள் எண்ணிக்கை வெளிநாடுகளில் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகிறது.

4 hours ago, Kapithan said:

இந்தியாவின் பல மானிலங்களில் மாட்டைக்  கொல்வது தடை செய்யப்பட்டபோதுக், குறைந்த விலையில் ஏழைகளுக்கான புரத உணவு கிடைக்கும் மிகவும் முக்கியமான மூலம்(source) இதுவென்று  தடைக்கெதிராக போராடியவர்களின் வாதங்களிலொன்றாக இது இருந்தது.

மாட்டு இறைச்சி விலை கூடிய இறைச்சி அல்லவா!

படத்தில் உள்ள தேங்காய் இருதய நோய்க்கு நல்லதா?

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மருதங்கேணி மாதிரி கோழி மாடுகளை கொல்ல கூடாது என்று தாவர உணவுக்கு மாறுபவர்கள் எண்ணிக்கை வெளிநாடுகளில் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகிறது.

மாட்டு இறைச்சி விலை கூடிய இறைச்சி அல்லவா!

படத்தில் உள்ள தேங்காய் இருதய நோய்க்கு நல்லதா?

அல்ல. இந்தியாவில் மாட்டிறைச்சிதான் ஒப்பீட்டளவில் விலை குறைவானது.

On ‎2‎/‎19‎/‎2020 at 11:58 PM, தமிழ் சிறி said:

மாமிச உணவுகளைக் குறைத்து, தாவர உணவுகளை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அட இது சிம்பிள் லாஜிக்.

இதயம் தாவரத்தில் இருந்தால், அதை சாப்பிடும்பொழுது இதய நோய் வரும்.

இதயம் இல்லாவிட்டால், இதய நோய் வராது.. ம் 🙂 

போன மாதம் என் நண்பனின் அலுவலகத்தில் வேலை செய்கின்றவர் இரவு 8:30 வரைக்கும் வேலை செய்து விட்டு மனுசிக்கு அடிச்சு இந்தா வாறன் என்று சொல்லிப் போட்டு மேசையிலேயே சரிந்தவர் தான்...ஆள் எழும்பவே இல்லை. மாரடைப்பில் இறந்து விட்டார். 40 வயது. ஒரே ஒரு ஆண் பிள்ளை இருக்கு.

இவர்

1. புலால் உண்பதில்லை - சுத்த சைவம்
2. உடல் பருமனும் இல்லை
3. மது, புகைப்பிடித்தல் அறவே இல்லை
4. எட்டாம் மாடி வரைக்கும் மாடிப்படிகளை பயன்படுத்தி ஏறி வருகின்றவர்.

இதே போன்ற இயல்புகளைக் கொண்ட கொழும்பு பம்பலப்பிட்டி இந்துவின் பழைய மாணவனான இன்னொரு நண்பர் 42 வயதில் திருவெம்பாவை பூசைக்கு போய் விட்டு வந்து கதிரையில் சாய்ந்தவர் தான்...பிறகு எழுந்திருக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2020 at 11:37 AM, குமாரசாமி said:

இருதய நோய் மட்டுமில்லை.....புற்றுநோய்,மூட்டுவலியள் எல்லாம் வராது கண்டியளோ!
எங்கடை மூதாதையர் எல்லாம் பூலால் உண்ணாதீர்கள் எண்டு சும்மாவே சொன்னவையள்.

புலால் உணவு என்று சொல்ல வேணும். பூலால் உண்ணாதீர்கள்  என்று சொன்னால்... :rolleyes:
தமிழ் நாட்டில், அதுக்கு... வேறை 😮 அர்த்தம்   குமாரசாமி அண்ணே.... :grin:

Edited by தமிழ் சிறி

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

மருதங்கேணி மாதிரி கோழி மாடுகளை கொல்ல கூடாது என்று தாவர உணவுக்கு மாறுபவர்கள் எண்ணிக்கை வெளிநாடுகளில் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகிறது.

மனிதன் வேட்டைப் பற்களையும், இறைச்சியை நன்கு அரைக்க கூடிய கொடுப்புப் பற்களையும் கொண்ட விலங்கு. ஆதி மனிதன் விவாசாயம் கற்க முன்பாக விலங்குகளை வேட்டையாடியே தன் இனத்தை பெருக்கியவன்/ள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மரக்கறி உண்ணும் மனிதன் வாழ்ந்திருக்க கூடிய சாத்தியங்கள் மிகக் குறைவு. ஆரியம் கலக்க முன் தமிழனும் அப்படித்தான் இருந்திருப்பான்.

உலகில் நீண்ட காலத்துக்கு இந்த மரக்கறி மட்டும் சாப்பிட்டு வாழும் பழக்கம் நிலைக்குமா என்பது சந்தேகம். மனிதர்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் போது, 30 வீதத்தினர் மரக்கறிக்கு மாறினால் கூட விவசாய நிலம் போதுமானதாக இருக்காது. இப்படி மரக்கறிக்கு மாறுகின்றவர்களில் அனேகர் சமூகத்தின் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் தான். மேட்டுக்குடிகளுக்கு தான் இது சாத்தியம்.

விரைவில் பூச்சிகளை உண்ணும் பழக்கம் மக்கள் இடையே அதிகரிக்கும். இப்பவே ஈசல், வெட்டுக்கிளி போன்றவற்றை சுவையான உணவுகளாக சமைக்கும் முறைகள் வந்து விட்டன. என் நைகர் நாட்டு சக ஊழியன் வெட்டுக்கிளி வறுவலை ஒரு நாள் சுவைக்க தந்தான். நன்றாக இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிழலி said:

போன மாதம் என் நண்பனின் அலுவலகத்தில் வேலை செய்கின்றவர் இரவு 8:30 வரைக்கும் வேலை செய்து விட்டு மனுசிக்கு அடிச்சு இந்தா வாறன் என்று சொல்லிப் போட்டு மேசையிலேயே சரிந்தவர் தான்...ஆள் எழும்பவே இல்லை. மாரடைப்பில் இறந்து விட்டார். 40 வயது. ஒரே ஒரு ஆண் பிள்ளை இருக்கு.

இவர்

1. புலால் உண்பதில்லை - சுத்த சைவம்
2. உடல் பருமனும் இல்லை
3. மது, புகைப்பிடித்தல் அறவே இல்லை
4. எட்டாம் மாடி வரைக்கும் மாடிப்படிகளை பயன்படுத்தி ஏறி வருகின்றவர்.

இதே போன்ற இயல்புகளைக் கொண்ட கொழும்பு பம்பலப்பிட்டி இந்துவின் பழைய மாணவனான இன்னொரு நண்பர் 42 வயதில் திருவெம்பாவை பூசைக்கு போய் விட்டு வந்து கதிரையில் சாய்ந்தவர் தான்...பிறகு எழுந்திருக்கவில்லை.

நிழலி,  உண்மையில்...  இதற்கெல்லாம்  மன அழுத்தமே  காரணம்.
சிறுவர் கல்வி கற்க ஆரம்பிப்பதிலேயே... அவர்களுக்கு மன அழுத்தம் ஆரம்பித்து,
வேலைக்கு சென்ற பின்பும்.... அவர்களின் மன அழுத்தம் தொடர்வதால்,
அது இதயத்தை பாதித்து, இறப்பில் முடிகின்றது.

சென்ற தலைமுறையில்... வாழ்ந்த, எமது பெற்றோருக்கு,
இப்படியான மன அழுத்தம் இருந்ததில்லை, என்றே கூறுவேன்.

ஏனென்றால்... அவர்களுக்கு நவீன தொடர்பு வசதிகள் இருக்கவில்லை.
உலகில் எல்லோருக்கும்.. இது தான், மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்தது. 

இப்போது... கணனி, கைத்தொலை பேசி வந்தவுடன்...
இன்றைய தலை முறை...  எட்டு மணித்தியால வேலை முடிந்த பின்பும்...
விடுமுறை நாட்களிலும்... அந்த நவீன சாதனங்கள் மூலம்...
வேலையில்.. ஒரு கண்ணை வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்படி இருக்கும் போது... மனிதனுக்கு மனம், ஆறுதலைடையும் சக்தியே... 
இல்லாமல் போய் விடுவது.. பெரிய பரிதாபம். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

சைவம் எண்டுட்டு டெய்லி வதக்கின கறியும்,எண்ணையிலை பொரிச்ச கத்தரிக்காய் குழம்பு, ரீ ரைம் எண்டால் பூந்தி லட்டு,தார்மாதிரி இருக்கிற எண்னையிலை பொரிச்ச வடை எண்டு அமுக்கினால் வருத்தங்கள் வராமல் என்ன செய்யும்? :(

மனசாட்சியை தொட்டு சொல்லுங்கோ அண்ணா 365 நாளும் மரக்கறி வதக்காமல்,பொரிக்காமல் நீங்கள் சாப்பிடுவீங்களோ?...அறுசுவை கொண்டது தான் எனது உணவு 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/21/2020 at 7:07 PM, நிழலி said:

மனிதர்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் போது, 30 வீதத்தினர் மரக்கறிக்கு மாறினால் கூட விவசாய நிலம் போதுமானதாக இருக்காது.

இதே மாதிரி விலங்கு உணவை கைவிட முடியாதவர்கள் இயற்கை சூழலில் வளர்க்கப்படுகிறது கோழி மாடுகளை மட்டும் உண்டும் படி வேண்டுகோள் வைக்கிறார்கள். அதுகூட மனித தேவையை நிறைவடைய செய்ய முடியுமா என்ற சந்தேகம் வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.