Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“கப்டன் பண்டிதர்” குடும்பம் நீதிமன்ற உத்தரவில் வீட்டில் இருந்து வெளியேற்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“கப்டன் பண்டிதர்” குடும்பம் நீதிமன்ற உத்தரவில் வீட்டில் இருந்து வெளியேற்றம்!

by G. Pragas
FB_IMG_1583461532138.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான “கப்டன்” பண்டிதரின் தாயார் சின்னத்துரை மகேஸ்வரி மற்றும் சகோதரன் ஆகியோர் தாம் குடியிருந்த வீட்டிலிருந்து நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்றைய (05) தினம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புலிகளின் முன்னாள் நிதி மற்றும் ஆயுதப் பராமரிப்பு பொறுப்பாளருமான கப்டன் பண்டிதர் 1985ம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பண்டிதரின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் யாழ்ப்பாணம் – கம்பர்மலையில் வசித்து வந்த நிலையில் இவர்களில் ஒரு சகோதரன் 2006ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதன்பின்னரும் கம்பர்மலையில் வசித்து வந்த நிலையில், அவர்கள் தங்கியுள்ள வீடு தமக்கு உரியது என பிறிதொரு குடும்பம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. புலிகள் துப்பாக்கி முனையில் மிரட்டி வீட்டு பத்திரத்தை பண்டிதரின் பெயருக்கு மாற்றியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் நீண்ட காலமாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பின் பிரகாரம் குறித்த வீடு உரிமை கோரிய குடும்பத்திற்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் மற்றும் உரிமை கோரிய தரப்பினர் அந்த வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை அனைத்தையும் வெளியில் கொண்டு வந்து போட்டதுடன் குடும்பத்தையும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தை அறிந்து நேற்றிரவு பண்டிதரின் குடும்பத்தை சந்தித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட குழு “குறித்த குடும்பத்தினருக்கு சொந்தமான காணியில் தற்காலிக வீடு அமைத்து பின்னர் நிரந்தர வீடு அமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்வதாக” உறுதியளித்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு நல்லது செய்வியா?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

தமிழனுக்கு நல்லது செய்வியா?

யார் தமிழனுக்கா ?😧😧

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கான ஆரம்பக்கட்ட உதவியை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் yarlaid உம் செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

புலிகள் துப்பாக்கி முனையில் மிரட்டி வீட்டு பத்திரத்தை பண்டிதரின் பெயருக்கு மாற்றியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்தக் கூற்றுக்கு நீதிபதி எப்படி சாட்சியங்களை ஏற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை.

இந்த வழக்கு தொடர்பில்.. மேல் முறையீடு செய்ய.. முடியுமா என்று பரிசோதித்து.. இவர்களுக்கு உதவ தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழக்கறிஞ்சர்கள் உதவ வேண்டும். 

மேலும் காலம் உணர்ந்து.. தற்காலிக வதிவிட உதவிகளை செய்வோருக்கு நன்றிகள் பல. 

இப்ப எல்லாரும்.. காணி பறிக்க.. வீடு பறிக்க.. இந்தப் புலிகள் மிரட்டினர்.. சுட்டனர் கதை தான் அளக்கினம். ஒரு காலத்தில் வெளிநாடுகளில்.. அசைலம் அடிக்க பக்கம் பக்கமாக எழுதிய பொய் கதைகளை இப்ப.. ஊரில காணி பறிக்க வீடு பறிக்க பாவிக்கிறாங்கள். எம்மவர்கள் திருந்துவது மிகக் கடினம். மனச்சாட்சியே அற்று இயங்கிறார்கள். 

உண்மையில்.. போரால்.. போராட்டத்தால்.. பாதிக்கப்பட்ட மக்கள்.. நிலை இப்படித்தான் இருக்கிறது.. பலருக்கு. 

பண்டிதர் வீரமரணம் அடைந்தது 1985 ல்.அதற்கு முன் முழுக்க அரச கட்டுப்படாடில் இருந்த யாழ்குடாநாட்டில் அரசால் தேடப்படுபவராக இருந்த பண்டிதர் பெயருக்கு எப்படி பத்திரத்தை மாற்றி இருக்க முடியும்? எல்லாமே புரியாத புதிர் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, tulpen said:

பண்டிதர் வீரமரணம் அடைந்தது 1985 ல்.அதற்கு முன் முழுக்க அரச கட்டுப்படாடில் இருந்த யாழ்குடாநாட்டில் அரசால் தேடப்படுபவராக இருந்த பண்டிதர் பெயருக்கு எப்படி பத்திரத்தை மாற்றி இருக்க முடியும்? எல்லாமே புரியாத புதிர் தான். 

தவிரவும் புலிகள் இப்படியான வேலைகளில் ஈடுபட்டதாக நான் இதுவரை கேள்விபட்டதில்லை.

ஆனால் வீட்டை பூட்டி விட்டு, கொழும்பு போனவர்களின் வீட்டை இடம் பெயர்ந்து வந்த மக்களுக்கு வழங்கினார்கள்.

அதேபோல் முஸ்லீம்களின் வீடுகளையும் தீவு பகுதியில் இடம் பெயர்ந்து வந்தவர்களுக்கு வழங்கினார்கள்.

இவற்றில் பலதை முஸ்லீம்கள் சட்ட நடவடிக்கை மூலம் மீள பெற்றும் உள்ளார்கள்.

எமது ஊரில் - ஒரு ஒழுங்கையில் ஒரு பிரசித்தி பெற்ற, பின்னாநாளில் கொழும்பில் செட்டில் ஆகி விட்ட ஒரு குடும்பத்தின் பழைய வீடு இருந்தது. பாரம்பரிய ஆனால் ஓட்டை ஒடிசல் வீடு. அந்த ஒழுங்கைக்கே அங குடும்பத்தின் பெயர்தான்.

80 களில் இருந்தே அங்கே ஒரு ஏழ்மைபட்ட குடும்பம் இருந்தது. அந்த குடும்பத்தில் இருந்து ஒரு அண்ணா இயக்கம் போய் மாவீரர் ஆனார். அந்த ஒழுங்கையின் பெயரும் அவர் பெயரில் மாறியது.

2009 ற்கு பின் அந்த குடும்பம் அங்கே இருந்து எழுப்பபட்டு, கொழும்பில் இருந்து வந்தவர்கள் வீட்டை புதுபித்து, பெயரும் பழையபடி மாறிவிட்டது.

இதில் நெருடல் அதிகம் இருந்தாலும், இதில் யார் பக்கம் நியாயம் என்பதற்கான விடை எனக்கும் இன்னும் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, tulpen said:

பண்டிதர் வீரமரணம் அடைந்தது 1985 ல்.அதற்கு முன் முழுக்க அரச கட்டுப்படாடில் இருந்த யாழ்குடாநாட்டில் அரசால் தேடப்படுபவராக இருந்த பண்டிதர் பெயருக்கு எப்படி பத்திரத்தை மாற்றி இருக்க முடியும்? எல்லாமே புரியாத புதிர் தான். 

வடகிழக்கில் உள்ள நீதிபதிகளுக்கு  சம்பளம் சொறிலங்கா தானே குடுக்குது கம்பர்மலைக்கு பக்கத்திலைதான் வேலுப்பிள்ளையின் வீடு இருந்தது யாரை கேட்டு உடைத்தார்கள் 2009 போர் முடியும் வரை ஒழுகாகத்தான் இருந்தது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இந்தக் கூற்றுக்கு நீதிபதி எப்படி சாட்சியங்களை ஏற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை.

இந்த வழக்கு தொடர்பில்.. மேல் முறையீடு செய்ய.. முடியுமா என்று பரிசோதித்து.. இவர்களுக்கு உதவ தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழக்கறிஞ்சர்கள் உதவ வேண்டும்

மேலும் காலம் உணர்ந்து.. தற்காலிக வதிவிட உதவிகளை செய்வோருக்கு நன்றிகள் பல. 

இப்ப எல்லாரும்.. காணி பறிக்க.. வீடு பறிக்க.. இந்தப் புலிகள் மிரட்டினர்.. சுட்டனர் கதை தான் அளக்கினம். ஒரு காலத்தில் வெளிநாடுகளில்.. அசைலம் அடிக்க பக்கம் பக்கமாக எழுதிய பொய் கதைகளை இப்ப.. ஊரில காணி பறிக்க வீடு பறிக்க பாவிக்கிறாங்கள். எம்மவர்கள் திருந்துவது மிகக் கடினம். மனச்சாட்சியே அற்று இயங்கிறார்கள். 

உண்மையில்.. போரால்.. போராட்டத்தால்.. பாதிக்கப்பட்ட மக்கள்.. நிலை இப்படித்தான் இருக்கிறது.. பலருக்கு. 

மேன்முறையீடு விடயத்தில் பொருள் நேர விரையம் செய்யாமல் அவர்களது சொந்தக் காணியில் நிரந்தர வீட்டினை அமைத்து கொடுப்பதே சிறந்தது

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, MEERA said:

மேன்முறையீடு விடயத்தில் பொருள் நேர விரையம் செய்யாமல் அவர்களது சொந்தக் காணியில் நிரந்தர வீட்டினை அமைத்து கொடுப்பதே சிறந்தது

நீங்கள் சொல்வதில் நியாயம் இருந்தாலும்.. ஒரு வேளை பண பலத்தையும் செல்வாக்கையும் கொண்டு நீதியை தமக்குச் சார்ப்பாக்கி அநீதியை இந்த அப்பாவிகள் மீது திணிப்பதை இலகுவாக ஏற்றுக் கொள்வதும்.. தவறு தானே. இப்படியான சதிகள் எனியும் இலகுவாக தொடர இடமளிக்கக் கூடாததும் கூட. 

  • கருத்துக்கள உறவுகள்

பண்டிதரின் குடும்பம்  சிகை அலங்கரிப்பாளர் சமூகத்தை சார்ந்தவர்கள்.

வறுமயிலேயே இருந்த அந்த குடும்பம் தாயக விடுதலை போராட்டத்துக்காக உதவிய தியாக  உணர்வில் பெரும் கோடீஸ்வரர்கள்.

அவர்கள் குடும்பத்தில் பல உறவுகள் புலிகளுடன் தொடர்புடையவர்கள்.

வீரமரணம் அடைந்தவர்கள்.

பண்டிதர் என்பவரின் பெயரில் காணியை மாற்றினார்கள் என்பது எந்த விததிலும் பொருத்தப்பாடில்லாத செய்தி.

அவர்கள் குடும்ப உறவுகள் ஒருவரின் பெயரில் புலிகள் வேண்டுமென்றால் மாற்றியிருக்கலாம்.

போராட்டம் இருக்கும் வரைதான் மண்ணின் மீட்பு எனும் ஆக்ரோஷம் இருக்கும்,

போராடி தோற்றுவிட்டால் காலம் காலமாக யாழ்பாணத்தில் காணி மீட்பு போராட்டம் மீண்டும் உருவெடுக்கும்.

மண்ணுக்கும் காணிக்கும் வித்தியாசம் யாழ்ப்பணத்திலேயே மட்டும் இருக்கும் ஒரு உலக அதிசயம்.

பண்டிதரின் குடும்பம்மீது வழக்கு தொடர்ந்தவர்கள்  பக்கம் தவறு என்று 100% குற்றம் சுமத்திவிட முடியாது,

புறாக்கள் தானியங்களை கொத்தி தின்பதுபோல் ஒவ்வொரு சதமாக சேர்த்து சொத்து வாங்கிய தாயக தமிழர்களின் சொத்து ஒரே நிமிஷத்தில் பறிபோனால் அதன் வலி அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும்.

வழக்கு தொடர்ந்ததின் மூலம்  அவர்களின் சொத்து மீள கிடைத்ததையிட்டு மகிழ்ச்சிதான்.

பண்டிதர் போன்ற பாவபட்ட போராளிகள் குடும்பத்தின் சார்பாய்  தோள் கொடுக்க  எவரும் இல்லாம போய்விட்டதால், தமிழர்களின் சொத்து என்று ஒரு காலம் கருதப்பட்ட முன்னாள் போராளிகள் ,ஆதரவாளர்கள், அவர்கள் குடும்ப நிலமை என்பதெல்லாம் ஒருகாலமும் நல்லதையே காணமுடியாமல் அகால மரணமடையும் என்ற சோகத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, valavan said:

மிகவும் ஆழமான  உணர்சியை தவிர்த்து விட்டு உண்மையை தரிசிக்கும் பார்வை. 

மிகவும் கசப்பான நிலை என்பதை தவிர சொல்ல வேறேதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

பண்டிதரின் குடும்பம்மீது வழக்கு தொடர்ந்தவர்கள்  பக்கம் தவறு என்று 100% குற்றம் சுமத்திவிட முடியாது,

புறாக்கள் தானியங்களை கொத்தி தின்பதுபோல் ஒவ்வொரு சதமாக சேர்த்து சொத்து வாங்கிய தாயக தமிழர்களின் சொத்து ஒரே நிமிஷத்தில் பறிபோனால் அதன் வலி அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும்.

வழக்கு தொடர்ந்ததின் மூலம்  அவர்களின் சொத்து மீள கிடைத்ததையிட்டு மகிழ்ச்சிதான்.

இதே மாதிரி... மறுவழமாகவும் சிந்தித்துப் பாருங்கள். பண்டிதரின் ஏழைக் குடும்பமே.. இந்தச் சொத்தை சிறுகச் சிறுக சேமித்து வாங்கிய பின்..

விற்றவர்கள்.. இப்போ.. புலிகள் வெருட்டி எழுதினவை என்று சொல்லி..

மீண்டும் அதைக் கைப்பற்ற எண்ணி நாடகம் ஆடி.. அதில் வென்றிருந்தால்

அப்பவும் மகிழ்வீர்களோ..?!

ஏனெனில்.. இதே மாதிரி ஒரு வழக்கு எங்கள் ஊரிலும் போகிறது..

ஒரு பகுதி தமக்கு கஸ்டமான நேரத்தில் சொந்தக் காணியை.. அறுதி வைத்து காசை எடுத்து விட்டு.. குறித்த காலத்துள்.. காணியை மீளவில்லை.  அந்தக் காணி சட்டப்படி கடன் கொடுநருக்கு சொத்தானது. ஆனால்.. போரின் பின்.. நிலைமை தலைகீழாகி விட்டது. கடன் வாங்கியவர்களின் பிள்ளைகள் அரச தொழிலில் முக்கிய இடத்துக்கு வந்துவிட்டனர். அரசியல் செல்வாக்கும் வேறு.

இப்போ.. தாம் காணியை விற்கவே இல்லை என்று வழக்குப் போட்டிருக்கிறார். இப்போ அந்தக் காணிக்குள் இருபகுதியும் போக நீதிமன்றம் தடைபோட்டுள்ளது. வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

இப்படி கன காணி வழக்குகள்.. எம்மண்ணில்..

இந்தளவுக்கு மண்ணாசை கொண்ட எம் மக்கள்.. ஏக்கர் கணக்கில் சிங்கள இராணுவம்.. ஈபிடிபி ஒட்டுக்குழு உள்ளடங்க பிற ஒட்டுக்குழுக்கள்..  பிடித்து வைச்சிருக்க அமைதியாக இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது. ஏனெனில்.. அங்கு வாலாட்டினால்.. தமக்கு ஆபத்து. புலிகளின் பெயரை தப்பான நோக்கக்களுக்கு.. பாவித்தால்.. தமக்கு ஆதாயம்.. கேட்டுக் கேள்விக்கும் யாருமில்லை..  என்ற கேடுகெட்ட மனநிலையும் இப்போ ஊரில் ஒரு பகுதி மக்களிடம்.. வளர்க்கப்பட்டிருக்கிறது.  இந்த யதார்த்தப் புறநிலைகளை ஏன் ஒரு வட்டம் ஆக்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்.

மாறாக புலிகளை அவதூறு செய்து எதை செய்தாலு சொன்னாலும்... அது யதார்த்தமாக இருக்குமோ.. என்று வழிமொழிய மட்டும் முண்டி அடிக்கிறார்கள். ஆனால்.. உண்மையில்.. அவை யதார்த்தமாக இல்லை.. என்பது கண்கூடு. பல சுத்துமாத்தல்கள்.. புலிகளின் பெயரைச் சொல்லி.. நடக்கிறது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

தவிரவும் புலிகள் இப்படியான வேலைகளில் ஈடுபட்டதாக நான் இதுவரை கேள்விபட்டதில்லை.

ஆனால் வீட்டை பூட்டி விட்டு, கொழும்பு போனவர்களின் வீட்டை இடம் பெயர்ந்து வந்த மக்களுக்கு வழங்கினார்கள்.

அதேபோல் முஸ்லீம்களின் வீடுகளையும் தீவு பகுதியில் இடம் பெயர்ந்து வந்தவர்களுக்கு வழங்கினார்கள்.

இவற்றில் பலதை முஸ்லீம்கள் சட்ட நடவடிக்கை மூலம் மீள பெற்றும் உள்ளார்கள்.

எமது ஊரில் - ஒரு ஒழுங்கையில் ஒரு பிரசித்தி பெற்ற, பின்னாநாளில் கொழும்பில் செட்டில் ஆகி விட்ட ஒரு குடும்பத்தின் பழைய வீடு இருந்தது. பாரம்பரிய ஆனால் ஓட்டை ஒடிசல் வீடு. அந்த ஒழுங்கைக்கே அங குடும்பத்தின் பெயர்தான்.

80 களில் இருந்தே அங்கே ஒரு ஏழ்மைபட்ட குடும்பம் இருந்தது. அந்த குடும்பத்தில் இருந்து ஒரு அண்ணா இயக்கம் போய் மாவீரர் ஆனார். அந்த ஒழுங்கையின் பெயரும் அவர் பெயரில் மாறியது.

2009 ற்கு பின் அந்த குடும்பம் அங்கே இருந்து எழுப்பபட்டு, கொழும்பில் இருந்து வந்தவர்கள் வீட்டை புதுபித்து, பெயரும் பழையபடி மாறிவிட்டது.

இதில் நெருடல் அதிகம் இருந்தாலும், இதில் யார் பக்கம் நியாயம் என்பதற்கான விடை எனக்கும் இன்னும் புரியவில்லை.

வீடு இல்லாதவர்களுக்கு பூட்டி இருக்கும் வீட்டை எடுத்து கொடுப்பதும் சரி.

வீட்டுக்காரர் வரும் போது இருந்தவர்களை எழுப்பி வந்தவர்களை இருத்துறதும் சரி.

இதில் இரண்டு முறையும் சரியானதே.

ஆனாலும்
இன்றுவரை முகாம்களில் வாழுபவர்கள் எல்லோருக்கும் சொந்தமாக சிறிய கொட்டிலில் வாழ்ந்தவர்கள்.அரசு அவர்களின் வீடுகளை ஆக்கிரமித்து அவர்களை முகாம்களில் முடக்கி வைத்திருப்பது மிகவும் வேதனையாக உள்ளது.

இதற்காக எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்காக குரல் கொடுத்து போராடாதது இன்னும் வேதனையாக உள்ளது.

19 hours ago, nunavilan said:

இந்நிலையில் சம்பவத்தை அறிந்து நேற்றிரவு பண்டிதரின் குடும்பத்தை சந்தித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட குழு “குறித்த குடும்பத்தினருக்கு சொந்தமான காணியில் தற்காலிக வீடு அமைத்து பின்னர் நிரந்தர வீடு அமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்வதாக” உறுதியளித்தனர்.

பண்டிதரின் குடும்பத்தினருக்கு உதவி செய்யும் சகலருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாடுகளுக்கு போகும்போது புலிகளிடம் தங்கள் காணிகளை ஒப்படைத்து  பாதுகாப்பாக இருக்கும் என்று  சென்றவர்கள், போராட்டம் முடிவுற்றதும் இராணுவத்தினருடன் வந்து தங்கள் சிறிய வருமானத்தில் வீடுகளை திருத்தி இருந்தவர்களுக்கு ஒரு நட்ட ஈடும் இல்லாமல், புலிகள் தங்களை பயமுறுத்தி காணியை பறித்ததாக இராணுவத்தை உசுப்பேற்றி, குடியிருந்தவர்கள் தங்களுக்கு ஓர் இடத்தை தேடி செல்வதற்கு கூட அவகாசம் கொடாமல் துரத்திய சம்பவங்களும் உண்டு. அவர்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாக  சென்றபோது அவர்களை அனுதாபத்தோடு ஏற்று வசதிகள் செய்து கொடுத்திருக்கின்றன அந்த நாடுகள். வீடு மாறுவதற்கு குறிப்பிட்ட அவகாசம் கொடுக்கிறார்கள். இத்தனையையும் அனுபவித்துக்கொண்டு.  வெளிநாட்டிலில் உள்ளவர்கள் தங்கள் காணிகளை வறியவர்களுக்கு இனாமாகவோ, குறைந்த விலையிலோ வழங்கிய சம்பவங்களும் உண்டு. தங்கள் வீடுகளை பராமரிக்கிறார்கள் என்பதற்காக எல்லா வசதிகளும் செய்து கொடுத்து பின் வசதி அனுபவித்தவர்களால் ஏமாற்றப்பட்டு கோட்டுக்கு அலைந்தவர்களும் உண்டு. இதில் நிஞாயங்கள் யார் சொல்ல முடியும்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனி விதம்.    
      
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

மன்னிக்க வேண்டும் சாத்தான்,

புலிகளிடம் ஒருவரும் விரும்பியோ அல்லது பாதுகாப்பாக இருக்குமோ என்று ஒப்படைக்கவில்லை, பாஸ் எடுப்பதற்காகவே ஒப்படைத்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

காணி உரிமையாளருக்கு (உண்மையான உரிமையாளராக இருந்தால்) கிடைத்தது மகிழ்ச்சி.

மக்களே புலிகள், புலிகளே மக்கள் என்று கூறப்பட்டது. இங்கு புலி முகமூடியை அணிந்து பலர் செய்த, செய்கின்ற அநியாயங்கள் நாங்கள் அறிந்ததே.

குறிப்பாக மாவீரர் குடும்பம் எனும் tokenஐ காட்டி சிலர் செய்த, செய்கின்ற அராஜகம் அதிகம்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு சீரழிந்து போனமைக்கு அமைப்பை பாவித்து குளிர் காய்ந்தவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. 

தமது சுய லாபங்களுக்காளாக, தமது சுய பெருமைக்காக, தமது தனிப்பட்ட கணக்கு, வழக்குகளை தீர்த்து கொள்வதற்காக புலி முகமூடியை  அணிந்தவர்கள், அணிந்து உள்ளவர்கள் பலர். 

யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் அடாவடித்தனமாக அடுத்தவன் வீடு, காணியை பறிமுதல் செய்வது வழமையாக இருந்தது. இதை முன்னின்று செய்தவர்கள் புலி முகமூடியை அணிந்த கிருமிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

அப்படின்னா.. சிறீதர் தியேட்டரை முற்றுகையிட்டு வைத்திருக்கும் உங்கள் தலைவர் டக்கி மாமாவிடம் இருந்து அதனை மீட்க ஏன் இன்னும் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை.

சிறீதர் தியேட்டர் மட்டுமல்ல.. வேலணையில் பல வீடுகளை ஈபிடிபி காடைகள் ஆக்கிரமித்துள்ளனவே.

இன்றும் வவுனியாவில் பல வீடுகளை ஒட்டுக்குழுக்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளன. 

பல ஏக்கர் தமிழ் மக்களின் காணிகளை கட்டிடங்களை.. சிங்கள இராணுவம் முப்படை ஆக்கிரமித்துள்ளதே இவற்றை மீட்க போடப்பட்ட வழக்குகளுக்கு என்னானது..?!

எல்லாம் புலிகளைச் சாட்டி.. நீங்களும் நியாயம் என்ற போர்வையில் அநியாயங்களை மறைக்க முற்பட வேண்டாம்.

விடுதலைப்புலிகளிடம் மனமுவந்து.. சொந்த வீடுகளை கையளித்து விட்டுச் சென்ற மக்களும் பலர் உலர். 

மேலும்.. இந்த வழக்கில்.. நிறைய சோடிப்புக்கள் இருப்பதற்கான வாய்ப்பே அதிகம். அந்த நியாயங்களையு பற்றிப் பேச வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.