Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொருட்களைத் தேடுகிறேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

D646-E39-B-C172-4-E9-F-ADED-BD5459-B12-D
வீட்டுக்குத் தேவையான
அத்தியாவசியப் பொருட்களை  பல் பொருள் அங்காடிக்கு வாரத்தில் ஒருநாள் சென்று  வாங்கிக் கொள்வேன். எனது இந்தக் கொள்வனவு  வளமையாக சனிக்கிழமைகளில் இடம் பெறும்.

இன்றும் அப்படித்தான். பல்பொருள் அங்காடிக்குச் சென்றால் வாகனத் தரிப்பிடம் நிறைந்திருந்தது. தரிப்பிடம் கிடைத்து அதில் எனது வாகனத்தை நிறுத்துவதற்கே 20 நிமிடங்கள் போயிற்று.

பல்பொருள் அங்காடிக்குள் மனிதர்கள் நிறைந்திருந்தார்கள். பொருட்கள் குறைந்திருந்தன. மா,சீனி என்பவை அடுக்கி வைக்கப் பட்டிருந்த தட்டுக்கள் நிர்வாணமாக இருந்தன. கை கழுவும் சவர்க்காரங்கள் இருந்த இடம் தெரியாமல்  காணாமல் கரைந்து போயிருந்தன.

பல்பொருள் அங்காடியில் எனக்குத் தெரிந்த ஒருவர் வேலை செய்கிறார். அவர் நிறையக் களைத்துப் போயிருந்தார். அவரது முகத்தைப் பார்த்ததும்ஆசாமிக்கு கொரோனா வந்திருக்குமோ?” என்றொரு அச்சம் எனக்கு வந்தது. கைகளை பாதுகாப்பாக  பொக்கெற்றுக்குள் மறைத்துக் கொண்டேன்.

அவரிடம் கேட்டேன்,” என்ன எல்லாம் வெறுமையாக இருக்கு?”

“அண்ணை, இப்ப ஐஞ்சு நிமிசத்துக்கு முதல்தான் இரண்டு பலற்றை (palette) மாவும் சீனியும் அடுக்கினனாங்கள். சனங்கள் விழுந்தடிச்சு உடனேயே அள்ளிட்டுதுகள். மாவையும் சீனியையும் விடுங்கோ  சாப்பாட்டுச் சாமான்கள். ரொயிலற் ரிசுவையும்  ஆளாளுக்கு ஐஞ்சு பத்து பக்கெற் எண்டு அள்ளுதுகள். இப்ப இருப்பு  முடிஞ்சுது. இனி திங்கள் கிழமைதான். எதுக்கு ரொயிலற் ரிசுவை இப்பிடி வாங்கிறாங்களோ தெரியாது. ரொயிலற் ரிசு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு தரும் எண்டு எங்கையாவது இன்டர்நெட்டிலை போட்டிருக்கிறாங்களோ?”

“இஞ்சை மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் இதுதான் நிலமை. Australia விலை ரொயிலற் ரிசு வாங்கிறதிலை பிரச்சினை வந்து பொலீஸ் வந்து எலெக்ரிக் சொக் குடுத்துத்தான் நிலமையை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தவை எண்டு செய்தி வந்திருக்குது

“இந்த மாதம் செய்ய வேண்டிய முழு வேலைகளையும் இந்த ஒரு கிழமையிலை செய்திட்டன். இப்பிடியே போனால் எனக்கு கொரோனா வந்திட்டுது என்று சொல்லத்தான் இருக்கு

அவரிடம் இருந்து விடைபெற்று ஒப்புக்கு சில பொருட்களை வாங்கிக் கொண்டேன். இன்ன இன்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்ற துண்டுச் சீட்டு கையில் இருந்தது. காசு கொஞ்சமாக செலவானதில் உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி இருந்தது என்னவோ உண்மை

ஏன் எழுதினதெல்லாம் வாங்கவில்லை என்று வீட்டிலே கேள்வி வந்தால்,  பதில் “கொரோனா”

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்குச் சட்டம் இருந்த காலம் தான் ஞாபகம் வருகுது;

  • கருத்துக்கள உறவுகள்

உணவுப் பொருட்களை  முற்கூட்டியே.... வாங்குவதை ஏற்றுக் கொண்டாலும்,
ரொய்லற்  பேப்பரை... தொகையாக ஏன் வாங்குகின்றார்கள் என்று புரியவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

பின் வண்டிலில் இருப்பவர்  பேப்பர் மட்டும்தான் எடுத்து கொண்டு போகிறார்.வேறு சாமான்கள் வாங்கியதாய் தெரியவில்லை......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

அவரிடம் இருந்து விடைபெற்று ஒப்புக்கு சில பொருட்களை வாங்கிக் கொண்டேன். இன்ன இன்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்ற துண்டுச் சீட்டு கையில் இருந்தது. காசு கொஞ்சமாக செலவானதில் உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி இருந்தது என்னவோ உண்மை

இந்த நிலை எங்கும் தான்.நான் கூடுதலாக கொஸ்கோவில்த் தான் தேவைக்கேற்ப வாங்குவது.
அங்கு போனால் கார் நிற்பாட்ட இடமில்லை.சரி என்று ஒரு மாதிரி நிற்பாட்டிவிட்டு போனால் வண்டில் இல்லை.உள்ளே போனால் சாமானுகள் மிகக் குறைவே.
எனக்கு ஒரு பயம் வந்துவிட்டது.மகளுக்கு கோல் பண்ணி நிலைமையை சொன்னேன்.அப்பா வாங்கிறவங்கள் வாங்கட்டும் நீங்கள் வாங்கப் போன சாமான்களை மாத்திரம் வாங்கிக் கொண்டு வாங்கோ என்றாள்.
சரி என்று வீடு வந்து மகளும் கணவரும் வேலையால் வந்த பின் நிலைமை இப்படி இருக்கு.குழந்தையுடன் இருக்கிறனீங்கள் கட்டாயம் ஏதாவது வாங்கி வைத்திருக்க வேண்டும்.
சாப்பாடு இல்லை எனும்போது தான் கூட பசி எடுக்கும்.நீங்கள் வேணுமென்றால் பட்டினி கிடவுங்கோ என்னால முடியாதப்பா என்று ஒரு எச்சரிக்கைத் தொனியில் சொல்லியிருக்கு.
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குதென்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

உணவுப் பொருட்களை  முற்கூட்டியே.... வாங்குவதை ஏற்றுக் கொண்டாலும்,
ரொய்லற்  பேப்பரை... தொகையாக ஏன் வாங்குகின்றார்கள் என்று புரியவில்லை.  

இஞ்சை பாருங்கோ நாயடி பேயடி நடக்குது...

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, nunavilan said:

பெரிய ரெக்னிக்கோடை மிசின் இருந்தாலும்....
கையாலை கழுவுற மாதிரி வராது.😎

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

பெரிய ரெக்னிக்கோடை மிசின் இருந்தாலும்....
கையாலை கழுவுற மாதிரி வராது.😎

கையால் எப்படி கழுவுவது.... என்று தெரியாதவர்கள், 
இந்தக் காணொளியை பார்த்து...  பயன் அடையவும்.

ஆப்பிரிக்காவில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் என்பதால்...
இந்த முறையில்... ஆசன வாயிலை சுத்தம் செய்யவும். :grin:

கடவுளுக்கு நன்றி நான் அமெரிக்காவில் பிறந்தேன், வலிமைமிக்க அமெரிக்காவில் பொருட்களுக்கு பஞ்சமில்லை
வேறு எந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் மலிவானவை!
On ‎3‎/‎7‎/‎2020 at 6:37 AM, Kavi arunasalam said:

வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை  பல் பொருள் அங்காடிக்கு வாரத்தில் ஒருநாள் சென்று  வாங்கிக் கொள்வேன். எனது இந்தக் கொள்வனவு  வளமையாக சனிக்கிழமைகளில் இடம் பெறும்.

ஒரு கடையில் சென்று பல அங்காடி பொருட்களை வேண்டுவதை விட. பல கடைகள் ஏறி ஒரு பொருளை வாங்குவதும் தனி சுகம் 🙂 

செயலிகள்  கூட அதற்கு உதவும் !

3 hours ago, ampanai said:

ஒரு கடையில் சென்று பல அங்காடி பொருட்களை வேண்டுவதை விட. பல கடைகள் ஏறி ஒரு பொருளை வாங்குவதும் தனி சுகம் 🙂 

செயலிகள்  கூட அதற்கு உதவும் !

உங்களுக்கு ஒரு காதலி/காதலன் இருக்கும் பொழுது அது சுகமாகவும்.... திருமணமான பின்னர் சில சமயங்களில் ஒரு சுமையாகவும் கூட இருக்கும் 🙂 🙂 

காதலும் கடந்து போகும்... கலியாணமும் கடந்து போகும் 🤣

ஆனால், கடைகள் இருக்கவே இருக்கும் !!!

3 hours ago, Sean said:

கடவுளுக்கு நன்றி நான் அமெரிக்காவில் பிறந்தேன், வலிமைமிக்க அமெரிக்காவில் பொருட்களுக்கு பஞ்சமில்லை

வேறு எந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் மலிவானவை!

முதலில் வணக்கம். அமெரிக்காவில் பிறந்து தாய் மொழியில் எழுதுகிறீர்களே, உங்களுக்கும் உங்களை வளர்த்த பெற்றோர்களுக்கும் நன்றிகள். எங்களுக்கும் பெருமையாக உள்ளது. உங்களுடன் தமிழில் உரையாடுவது / குதர்க்கப்படுவது என்பது 🙂 

அடுத்து, உங்கள் நாட்டில், அமெரிக்காவில் பொருட்கள்  மலிவு தான். ஆனால், ஒரு சிக்கல்.

எல்லாவற்றிலும் பெரிய அளவில் விற்று விடுவார்கள். அதில் பாதியை எறியவேண்டி அல்லவா வந்துவிடும் ?

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்றைக்கு சுப்ப மார்க்கெட் போனேன் ...பாஸ்தா,நூடில்ஸ் ,அரிசி ,ரின்னின் அடைத்து வரும் சாமான்கள்  அதை விட  டொயிலட் பேப்பர் செக்சன் எல்லாம் வெறி சோடிக் கிடக்குது ....ஏன் இப்படி பொருட்களை வாங்குகிறீர்கள் என கேட்க இத்தாலியில் வந்து ஒரு பிரதேசத்தையே தனியே அடைத்து வைத்திருக்கிறார்கள் ...அதே மாதிரி இங்கு வந்தால் என்று முன்னெச்சரிக்கையாய் வாங்குகிறார்கள்களாம்....இதுக்கே இப்படி என்றால் மூன்றாம் உலக மகா யுத்தம் வந்தால்????

வியாபாரிகளுக்கு நல்ல வியாபாரம் 😙

ஏன் டொயிலட் பேப்பருக்கு அடிபடுறாங்களோ தெரியவில்லை ...பேப்பர் முடிந்தால் கழுவலாம் தானே 🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Sean said:

கடவுளுக்கு நன்றி நான் அமெரிக்காவில் பிறந்தேன், வலிமைமிக்க அமெரிக்காவில் பொருட்களுக்கு பஞ்சமில்லை

வேறு எந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் மலிவானவை!

 வலிமை மிக்க அமெரிக்காவிலை கொலை கொள்ளையளும் புளுத்த மலிவுதானே...😎

நான் கூகிள் மொழிபெயர்ப்பையும், ஆங்கிலத்திலிருந்து தமிழையும், நேர்மாறாகவும் பயன்படுத்துகிறேன்

நான் மற்ற போட்களையும் பயன்படுத்துகிறேன்.

வலிமை மிக்க அமெரிக்காவிலை கொலை கொள்ளையளும் புளுத்த மலிவுதானே... Yes, True,

American population is 350 million, about 35 million dirt poor (White and Black). Capitalism thrive here, 88 Million foreign born Americans thriving in this country, 78% hotels are owned by Indian Americans, 63% Doctors are Indian Americans, IT and Engineering are about 70% Indian Americans, 91% low wages jobs are done by Latino Americans, 93% sports players are African Americans, 82% prison population is African Americans, Elite 14% industrialist are Asian Americans (Japanese, Chinese, Korean, Taiwanese, etc..) No other nation on this earth has such a diverse population with 260 million middle class people with $ US 110,000 per year income.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Sean said:

கடவுளுக்கு நன்றி நான் அமெரிக்காவில் பிறந்தேன், வலிமைமிக்க அமெரிக்காவில் பொருட்களுக்கு பஞ்சமில்லை

தம்பி நானும் அமெரிக்கா தான்.

கன இடங்களுக்கு போக வேண்டாம் ஒருக்கா கொஸ்கோ வரை போட்டு வாங்கோ.

வழமையான கொஸ்கோ வா?எப்படி நிலைமை என்று பார்த்து பின்னர் எழுதுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sean said:

American population is 350 million, about 35 million dirt poor (White and Black). Capitalism thrive here, 88 Million foreign born Americans thriving in this country, 78% hotels are owned by Indian Americans, 63% Doctors are Indian Americans, IT and Engineering are about 70% Indian Americans, 91% low wages jobs are done by Latino Americans, 93% sports players are African Americans, 82% prison population is African Americans, Elite 14% industrialist are Asian Americans (Japanese, Chinese, Korean, Taiwanese, etc..) No other nation on this earth has such a diverse population with 260 million middle class people with $ US 110,000 per year income.

இது எங்கிருந்து எடுக்கப்பட்டது ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

நான் இன்றைக்கு சுப்ப மார்க்கெட் போனேன் ...பாஸ்தா,நூடில்ஸ் ,அரிசி ,ரின்னின் அடைத்து வரும் சாமான்கள்  அதை விட  டொயிலட் பேப்பர் செக்சன் எல்லாம் வெறி சோடிக் கிடக்குது ....ஏன் இப்படி பொருட்களை வாங்குகிறீர்கள் என கேட்க இத்தாலியில் வந்து ஒரு பிரதேசத்தையே தனியே அடைத்து வைத்திருக்கிறார்கள் ...அதே மாதிரி இங்கு வந்தால் என்று முன்னெச்சரிக்கையாய் வாங்குகிறார்கள்களாம்....இதுக்கே இப்படி என்றால் மூன்றாம் உலக மகா யுத்தம் வந்தால்????

வியாபாரிகளுக்கு நல்ல வியாபாரம் 😙

ஏன் டொயிலட் பேப்பருக்கு அடிபடுறாங்களோ தெரியவில்லை ...பேப்பர் முடிந்தால் கழுவலாம் தானே 🤔

சனம்  ஒன்லைன் ஒன்று இருப்பதையே மறந்து கொள்ளுப்படுது அதே costco ஒன்லைனில் உள்ளது நேற்று மட்டும் மாற்றி உள்ளார்கள் டொய்லெட்  பேப்பர் ஆளுக்கு இரண்டு பண்டில்  என்று .மூன்றாவது உலகப்போர் வந்தால் ஓடவேண்டிய  தேவை இருக்காது முதலில் உயிர்  இருந்தால்தானே ?

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேயாவிற்கு....  "ரொய்லற் பேப்பர்" சீனாவில் இருந்து மட்டும்தானாம் இறக்குமதியாகின்றது.
சீன  இறக்குமதி தடைப்பட்டால்... என்ன செய்வது என்றுதான்....
சனம் அடிபட்டு.... ரொய்லற் பேப்பரை வாங்கியுள்ளார்கள்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

அவுஸ்திரேயாவிற்கு....  "ரொய்லற் பேப்பர்" சீனாவில் இருந்து மட்டும்தானாம் இறக்குமதியாகின்றது.
சீன  இறக்குமதி தடைப்பட்டால்... என்ன செய்வது என்றுதான்....
சனம் அடிபட்டு.... ரொய்லற் பேப்பரை வாங்கியுள்ளார்கள்.  

உண்மைதான் சிறித்தம்பி!  இஞ்சை ஜேர்மனியிலை கன சாமான்கள் தட்டுப்பாடாய் வந்துட்டுது. அது நிவர்த்தியாக இன்னும் 3,4 மாதங்கள் ஆகுமாம். இப்ப தெரியுதெல்லோ எல்லாம் எங்கையிருந்து வருதெண்டு??????? :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.