Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உருளைக்கிழங்கு/மாலு பணிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உருளைக்கிழங்கு/மாலு பணிஸ்

அவித்த உருளை கிழங்கை அருவள் நெருவலாக   மசிக்கவும் (மஞ்சள் உருளை கிழங்கு நல்லம்). வெங்காயம் (shallots), பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கவும்.கருவேப்பிலையை kitchen scissors ஆல் மெல்லிசா வெட்டவும். ரம்பை துண்டு ( தமிழ் கடையில் இல்லாவிட்டால் தாய்லாந்து , சீனா ,பிலிப்பைன்ஸ் கடைகளில் pandanus என்று போட்டு பிளாஸ்டிக் bag இல் freezer இல் வைத்திருப்பார்கள்.இஞ்சி உள்ளி அரைத்து வைக்கவும். தேசிக்காய் புளி , மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு. முதலில் சிங்கள தூள் செய்யவேண்டும். கொத்தமல்லி 2 மேசை கரண்டி, சின்ன சீரகம் 1 மேசை கரண்டி, பெரிய சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, ரம்பை ஒரு துண்டு, கருவேப்பில்லை, ஏலக்காய் 10, கராம்பு 5 , கறுவா ஒரு துண்டு. முதலில் கொத்தமல்லியை 5 நிமிடம் வறுக்கவும், பிறகு மிச்சம் எல்லாத்தயும் சேர்த்து நல்லா கறுக வறுத்து தூளாகவும் (கடும் மண் நிறமாக இருக்க வேண்டும்)

பாரமான தாச்சியில் தேங்காய் எண்ணை ( அல்லது விரும்பியது) விட்டு கடுகு வெடித்து, வெங்காயம், இஞ்சி உள்ளி , ரம்பை, கருவேப்பில்லை,முதலி வதக்கவும். பின்பு பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்க்கவும், பிறகு உருளை கிழங்கை போடவும். தனி மிளகாய் தூள், மிளகு தூள், சிங்கள தூள் போடவும் நன்றாக பிரட்டி விட்டு ( குறைந்த நெருப்பில்) பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கவும், ருசிக்கும் சிறிது தண்ணீரை அடிபாகத்தில் விட்டு கிளறவும். கடைசியில் தேசிக்காய் புளி  விடவும். மச்சம்  சேர்ப்பதாக இருந்தால் அதனை தனியாக மஞ்சள், உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கி சேர்க்கவும்.

500 கிராம் மா ( வெள்ளை), 1 1/2 கப் இளஞ்சூட்டு தண்ணி, (7 கிராம் dry yeast , 1 தேக்கரண்டி சீனி , 5 மேசைக்கரண்டி இளஞ்சூட்டு தண்ணீர் இவை மூன்றையும் ஒரு பாத்திரத்தில் விட்டு கலந்து 10 நிமிடம் விட்டால் நுரை வரும். வராவிட்டால் பழைய ஈஸ்ட் என்று அர்த்தம்), 1 தேக்கரண்டி உப்பு ( பார்த்து போடவும்), 1 மேசைக்கரண்டி பால் , 1 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது பட்டர் . முதலில் மா, பால் மா, உப்பு, தேங்காய் எண்ணெய் நன்றாக கலந்து , பிறகு இளஞ்சூட்டு தண்ணீரை விட்டு , ஈஸ்ட் கலவையும் விட்டு நன்றாக குழைக்கவும் ( food  processor அல்லது doug mixer மெஷின் பாவிக்கலாம்.  (Slow speed 10 minutes). கையால் குழைத்தால் நிறைய வேலை. 

இப்ப ஒரு ஈரத்துணியால் மூடி அரை மணி நேரம் வைக்கவும். பணிஸ் செய்வதற்கு இந்த முறையை பின் பற்றவும். அல்லது நீளமாகவும் மடிக்கலாம் . எல்லாவற்றயும் மடித்த பின் திரும்ப 10 நிமிடம் துணியால் மூடி வைக்கவும்  . முட்டையை நன்றாக அடித்து ஒரு brush ஆள் மேல் பக்கம் பூசவும். இப்பத்து 220 பாகையில் 20 நிமிடம் bake பண்ணவும் ( இது வேறுபடும். என்றபடியால் பாத்து செய்யவும்)

நான் செய்த மாலு பாண் முட்டை பிரஷ்ஷினால் பூசாதனால் மினுங்கவில்லை. ஆனால் ருசியாக இருந்தது

Maalupaan.jpgMaalupaan1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மாலுபணிசைப் பார்க்க வாயூறுது.
இணைப்புக்கு நன்றி.

நில்மினி நீங்கள் சமையல் குறிப்பை கீழுழ்ழ இணைப்பில் இணைத்தால் நல்லது.

அல்லது மட்டுறுத்தினர்கள் தாங்களாகவே நகர்த்திவிடுவார்கள்.

https://yarl.com/forum3/forum/46-நாவூற-வாயூற/

48 minutes ago, nilmini said:

முட்டையை நன்றாக அடித்து ஒரு brush ஆள் மேல் பக்கம் பூசவும். இப்பத்து 220 பாகையில் 20 நிமிடம் bake பண்ணவும் ( இது வேறுபடும். என்றபடியால் பாத்து செய்யவும்)

இறக்கிய பின் முட்டையை பூசுகிறீர்களா?அல்லது முதலே பூசுகிறீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி. இனிமேல் இணைப்பை  அதில் பதிவிடுகிறேன் . பணிஸ் நன்றாக இருந்தது. மூன்று பங்கு முட்டைக்கு ஒரு பங்கு பால் அல்லது தண்ணீர் விட்டு நன்றாக அடித்து bake பண்ணாமல் பூசவும் (egg wash ), முட்டையும் பாலும் சேர்த்தால் கரகரப்பாக,மினுமினுப்பாக பிரவுண் நிறத்தில் வரும். தண்ணி சேர்த்தால் soft ஆக வரும். 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்

மாலுபணீஸ்  பார்க்க நன்றாக இருக்கின்றது. ஆனால் ஒரு சந்தேகம். நீங்கள் அதற்கு மீன் சேர்க்க வில்லையா.....!  🐋

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நில்மினி ...மீன்  சேர்க்காமல் அது எப்படி மாலு பணிஸ் ஆகும்😊 ...உருளைக்கிழங்கு பணிஸ் என்று சொல்லுங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீன் சேர்ப்பர்களுக்கு அது மாலு பணிஸ் ரதி 

இந்தமுறை சேர்க்கவில்லை சுவி. சேர்ப்பதாக இருந்தால் டின் மீனை மசித்து சேர்த்து செய்யலாம். மிளகு தூள் , தேசிக்காய் புளி கொஞ்சம் கூட போட வேண்டும் 

4 hours ago, nilmini said:

நான் செய்த மாலு பாண் முட்டை பிரஷ்ஷினால் பூசாதனால் மினுங்கவில்லை. ஆனால் ருசியாக இருந்தது

பல ஈழத்தமிழரும், ஏன் தாய்த்தமிழக திரைப்படங்களில் கூட 'மாலு' என சிங்கள மீன் சொல்லு பதிந்து விட்டது. அதற்கு பாட்டும் ( சுறாங்கனியும் ) ஒரு முக்கிய காரணம். 

'மாலு' பாண் சுவையாக இருக்கும், இருந்தாலும் 'மாலு பணிஸ்' சொல்லும்போது தனி சுவை அதில்.     

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nilmini said:

நான் செய்த மாலு பாண் முட்டை பிரஷ்ஷினால் பூசாதனால் மினுங்கவில்லை. ஆனால் ருசியாக இருந்தது

Maalupaan.jpg

நில்மினி, இவ்வளவு மினக்கெட்டு...செய்துவிட்டு, முட்டை பிரஷ்ஷினால்.... பூச, பஞ்சிப் படலாமா?
நல்ல... பளபளப்பாக மினுங்க வேண்டிய பணிஸ்..... 
மேக்கப் போடாத... நடிகையின் முகம்   மாதிரி  இருக்கே... :grin:

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி நில்மினி'

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nilmini said:

மீன் சேர்ப்பர்களுக்கு அது மாலு பணிஸ் ரதி 

இந்தமுறை சேர்க்கவில்லை சுவி. சேர்ப்பதாக இருந்தால் டின் மீனை மசித்து சேர்த்து செய்யலாம். மிளகு தூள் , தேசிக்காய் புளி கொஞ்சம் கூட போட வேண்டும் 

Résultat de recherche d'images pour "hitting with belt gif"

பரவாயில்லை மகளே...!  இது எனக்காக செய்தது.மாமிசபட்சினிகள் யாரும் கிட்ட  வந்தால் இருக்குது.....!   😄

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி,
நேற்று நான் செய்தது. இது இடைக்கிடை partyகளுக்கு  செய்வது, உருளைக்கிழங்கு நிறைய இருந்ததாலும் நிறைய டின் பிஷ் இருந்ததாலும், பழுதாக முதல் ஏதாவது செய்து விடுவோம் என்று மாலு பாண் செய்தேன். பாண் mix கிட்டத்தட்ட நீங்கள் செய்வது மாதிரிதான் நானும் செய்வது, அளவுகளுக்கு  கீழ்கண்ட தளத்தில் இருக்கும் முறை எப்பொழுதுமே பிழைப்பதில்லை. இவர்கள் பால் சிறிது கூட விடுகிறார்கள், முட்டையும் போடுகிறார்கள்.

கறிக்கு நான் கடுகு, பெரும்சீரகம், கறிவேப்பிலையுடன், வெங்காயம், லீக்ஸ் போட்டு வதக்கி, டின் பிஷ் போட்டு மஞ்சளுடன் வதக்கி பிறகு அவித்த மசித்த உருளைக்கிழங்கு போடுவேன், உறைப்புக்கு எமது தூளும், மிளகும் சேர்த்து குறைந்த சூட்டில் கிளறுவேன். நன்றாக இருப்பதாக இங்கு சொல்லுவார்கள். 

spacer.png

spacer.png

https://www.dailyfoodrecipes.com/fish-bun-maalu-paan-malu-pan/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மீன் போட்டுச் செய்வதுதான் மாலு பணிஸ் நில்மினி. இது உருளைக்கிழங்கு பணிஸ். சிங்களத்தில் மீனுக்கு  மாலு என்று பொருள். அதனால்த்தான் மாலு பண் என்று கூறுவது என்று நினைக்கிறேன். யாராவது தெரிந்தவர்கள் கூறுங்கள் .

உண்மை  மாலு  என்றால் மீன் , எல்லோரும் நன்றாக  செய்து  இருப்பதாக  தெரிகிறது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2020 at 23:15, தமிழ் சிறி said:

நில்மினி, இவ்வளவு மினக்கெட்டு...செய்துவிட்டு, முட்டை பிரஷ்ஷினால்.... பூச, பஞ்சிப் படலாமா?
நல்ல... பளபளப்பாக மினுங்க வேண்டிய பணிஸ்..... 
மேக்கப் போடாத... நடிகையின் முகம்   மாதிரி  இருக்கே... :grin:

சிறி உமக்கு ஏன் இப்படி ஒரு பகிடி? Bake பண்ணமுதல் Egg wash உம் , பண்ணியபிறகு butter wash உம் கொடுக்கவில்லை என்று போட்டனான் தானே ? 😂

On 18/4/2020 at 22:34, நீர்வேலியான் said:

நில்மினி,
நேற்று நான் செய்தது. இது இடைக்கிடை partyகளுக்கு  செய்வது, உருளைக்கிழங்கு நிறைய இருந்ததாலும் நிறைய டின் பிஷ் இருந்ததாலும், பழுதாக முதல் ஏதாவது செய்து விடுவோம் என்று மாலு பாண் செய்தேன். பாண் mix கிட்டத்தட்ட நீங்கள் செய்வது மாதிரிதான் நானும் செய்வது, அளவுகளுக்கு  கீழ்கண்ட தளத்தில் இருக்கும் முறை எப்பொழுதுமே பிழைப்பதில்லை. இவர்கள் பால் சிறிது கூட விடுகிறார்கள், முட்டையும் போடுகிறார்கள்.

கறிக்கு நான் கடுகு, பெரும்சீரகம், கறிவேப்பிலையுடன், வெங்காயம், லீக்ஸ் போட்டு வதக்கி, டின் பிஷ் போட்டு மஞ்சளுடன் வதக்கி பிறகு அவித்த மசித்த உருளைக்கிழங்கு போடுவேன், உறைப்புக்கு எமது தூளும், மிளகும் சேர்த்து குறைந்த சூட்டில் கிளறுவேன். நன்றாக இருப்பதாக இங்கு சொல்லுவார்கள். 

spacer.png

spacer.png

https://www.dailyfoodrecipes.com/fish-bun-maalu-paan-malu-pan/

பதில் போட பிந்தியமைக்கு மன்னிக்கவும். எனக்கு அறிவுப்பு வரவில்லை. நீங்கள் செய்துள்ள மாலுபணிஸ் மிகவும் professional ஆக இருக்குது. நல்ல Shape உம் கலரும் கறி செய்முறையும் வித்யசமாக இருக்கு. அடுத்தமுறை செய்யும் போது நீங்கள் பதிவிட்ட லிங்கில் இருந்து எடுத்து செய்யலாம் என்று இருக்கிறேன். செய்துவிட்டு மீண்டும் பதிவிடுகிறேன். 

1 hour ago, Thamarai.k said:

உண்மை  மாலு  என்றால் மீன் , எல்லோரும் நன்றாக  செய்து  இருப்பதாக  தெரிகிறது 

உங்கள் பதிவுகள்,  அசத்தலான மாலு பணிசுகளை  இப்பதான் பாக்கிறேன் . பதில் போட அல்லது  மார்க்ஸ் போட ( ஏனெனில் நான் தான் செஃப் )  பிந்தியத்துக்கு மன்னிக்கவும் :). எனோ தெரியவில்லை எனக்கு அறிவிப்பு மணியில் இது வரவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மீன் போட்டுச் செய்வதுதான் மாலு பணிஸ் நில்மினி. இது உருளைக்கிழங்கு பணிஸ். சிங்களத்தில் மீனுக்கு  மாலு என்று பொருள். அதனால்த்தான் மாலு பண் என்று கூறுவது என்று நினைக்கிறேன். யாராவது தெரிந்தவர்கள் கூறுங்கள் .

ஓம் சுமேரியர் மாலு என்றால் மீன் தான். நான் சிறு வயதில் சிங்கள வகுப்பில் படித்ததாலும் , நிறைய சிங்கள நண்பிகள் இருப்பதாலும், எமது அப்பாவுக்கு சிங்கள சாப்பாடு மிகவும் பிடித்ததாலும்  நாங்கள் வீட்டில் ரெண்டு முறையிலயும் சமைப்பம் . சிங்கள சமையலுக்கு அவர்களது கருகின தூள், பச்சை தூள், கறுவா, ரம்பை, கொரக்கா  புளி , தேங்காய்  பால், தேங்காய் எண்ணெய் தான் பாவிப்போம். 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நில்மினி பகிர்வுகு, இன்னும் ஈஸ்ட் தட்டுப்பாடு இங்கு, ஆறுதலாக சொய்து பார்ப்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/3/2020 at 04:24, suvy said:

Résultat de recherche d'images pour "hitting with belt gif"

பரவாயில்லை மகளே...!  இது எனக்காக செய்தது.மாமிசபட்சினிகள் யாரும் கிட்ட  வந்தால் இருக்குது.....!   😄

நிச்சயமாக இந்த உருளை கிழங்கு பணிஸ்  உங்களுக்குத்தான். யாரும் கிட்டவந்தால் ரெண்டு போடுறதுக்கு எதுக்கும் பொல்லு ரெடியாக இருக்கட்டும் 

2 minutes ago, உடையார் said:

நன்றி நில்மினி பகிர்வுகு, இன்னும் ஈஸ்ட் தட்டுப்பாடு இங்கு, ஆறுதலாக சொய்து பார்ப்போம்

ஒன்லைனில் தேடி பார்த்தீர்களா? செய்வது அவ்வளவு கஸ்டமில்லை. வெற்றிகரமாக செய்துவிட்டு பதிவேற்றுங்கள் நாங்களும் பார்க்கலாம். மார்க்சும் தரலாம்.😁

On 9/3/2020 at 03:51, சுவைப்பிரியன் said:

பதிவுக்கு நன்றி நில்மினி'

சுவைப்பிரியன், எங்கே உங்கள் கைவண்ணத்தை இன்னும் காணவில்லை? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

சிறி உமக்கு ஏன் இப்படி ஒரு பகிடி? Bake பண்ணமுதல் Egg wash உம் , பண்ணியபிறகு butter wash உம் கொடுக்கவில்லை என்று போட்டனான் தானே ? 😂

நில்மினி.... அப்படி, லைற்ராக  சீண்டி  விட்டால்தான்,  
தலைப்பு... கலகலப்பாக இருக்கும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி.... அப்படி, லைற்ராக  சீண்டி  விட்டால்தான்,  
தலைப்பு... கலகலப்பாக இருக்கும். :)

தலைப்பு அதனால் தான் கல கலப்பா போய்க்கொண்டிருக்கு 🙂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.