Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதை நிறுத்தக்கோரி ஜனாதிபதிக்குக் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, மாங்குயில் said:

1) நனவுலகில் நடப்பதைத்தான் சொல்கிறேன் 

2)கிறிஸ்தவம் நாகரிகமற்ற மதம் என்றுதான் உலகத்தில் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள் 

1: தென் தமிழீழத்தில் எல்லைக் கிராமங்கள் என்று ஒன்ரிருப்பது உங்களுக்குத் தெரியுமா ? 😡

2) பண்பான மனிதர்கள் பிறறையும் பிறறின் நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்த துணியார். 😀

  • Replies 134
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மாங்குயில் said:

மதம் மாறும்வரை, சோற்றுப் பொட்டலம்.

எதிர்த்தால், கொடுப்பதை ஒரேயடியாக நிறுத்தி  விடுவார்கள்.

இருந்தும் மதம் மாறும் சைவர்களின்  தொகை அதிகரிப்பதன் காரணம் புரியவில்லை. இது ஒரு வியாதியாய் இருக்குமோ? அல்லது தங்கள் மதத்தில் இல்லாத ஒன்றை தேடி ஓடுகிறார்களோ? அவர்கள் தேடுவதை கொடுக்க சைவர்களிடம் வக்கில்லையோ??? செல்வச் செருக்குள்ளோர், பதவி அதிகாரமுள்ளோர், உறவு உள்ளோர் இறைவனைத் தேடார். மாறாக துன்புற்று, சமுதாயத்தில் குனிவுற்று, தளர்வுற்று, பார்வை குன்றி, பசியுற்று திரியும் மனிதரே கடவுளின் மாட்ச்சியையும் நீதியையும் அறிக்கையிடுவர். தேடுவோருக்கு  உதவுங்கள். மாறுபவர்களின் தேவைகளை சந்தியுங்கள். மாற்றுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டில் உங்கள் இயலாமையை மறைப்பதை விடுத்து, மாற்றுபவர் செய்யும் தொண்டை நீங்கள் செய்து  மதத்தையும், அந்த மக்களையும் காப்பாறுங்கள். இல்லையேல் தொண்டைத்தண்ணி வற்றும்வரை கத்திக்கொண்டிருங்கள். கடைசி ஒருவனும் மதம் மாறும்வரை எதையும் மாற்றமாட்டீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

யார் இந்த குயோ முய்யோ கூட்டத்திற்கா கூறுகிறீர்கள் 🤥 . உங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.😂

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களால் செய்பவர்களில் குற்றம் காணமுடியுமே தவிர, செயற்றிறன் அற்ற வீரர்கள் என்பது தெரியும். கழுதைக்கு உபதேசம் காதில் விழுந்தாலும், அபயக்குரலே அன்றி வேறொன்றும் அங்கில்லை.

4 hours ago, tulpen said:

ஆனால நல்ல  சிறந்த மதப்பற்றுள்ள அதே வேளைஇல் நாகரீகமற்ற பல  நபர்கள் உலகில் உள்ளார்கள் 

அந்த நாகரீகமற்ற பல நபர்களை நல்ல சிறந்த மதப்பற்றுள்ளவர்கள் என்று கூறமுடியாது. அப்படிப்பட்டவர்களை மதவெறியர்கள் என்றே கூறமுடியும்.

தமிழர் பகுதிகளில் அடாத்தாக புத்த சிலைகளை நிறுவுபவர்களையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் மிக மோசமான மதவெறியர்கள் என்றே கூறமுடியும். அவர்கள் நல்ல சிறந்த மதப்பற்றுள்ளவர்கள் அல்ல.

அதைப் போலவே, பட்டினி இருப்பவனை, வறுமையில் இருப்பவனை பணம் பொருள் காட்டி மதம் மாற்றுபவர்களையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் மிக மோசமான மதவெறியர்கள் என்றே கூறமுடியும். அவர்கள் நல்ல சிறந்த மதப்பற்றுள்ளவர்கள் அல்ல.

அதைப் போலவே, ஏனைய மதத்தவர்களின் வழிபாட்டிடங்கள் மீது தாக்குதல்களை நடத்துபவர்களையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் மிக மோசமான மதவெறியர்கள் என்றே கூறமுடியும். அவர்கள் நல்ல சிறந்த மதப்பற்றுள்ளவர்கள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, போல் said:

பட்டிணியில் கிடந்து  வறுமையில் உழன்று இயலாமையில் எங்காவது யாராவது உதவிபுரியமாட்டார்களா கைதூக்கி விடமாட்டார்களா என ஏங்குபவர்கள் தம் இறுதி நம்பிக்கையாக மதம் மாறினாலாவது தமதும் தம் பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒளி கிடைக்கும் என நம்புபவர்களை (எந்த ஒரு பருக்கையும் கிள்ளி வீசாது) ஏழனம் செய்வோர் மட்டும் நல்ல சமயப் பற்றாளர்களாக்கும்.😜😜😜😜😜

ஆனால் இவர்கள் எல்லோரும் எங்கிருந்து குய்யோ முய்யோவென்று கூப்பாடு போடுகிறார்கள் ??

கிறீத்துவ நாடுகளில் இருந்து....

கிறீத்துவ நாடுகளின் welfare பணத்தில் உதவிபெற்று தங்களை நிலைனிறுத்திக்கொண்டு....

கிறீத்துவ நாடுகளில் வழங்கப்படும் தரமான கல்வியினை தம் பிள்ளைகளுக்கு கொடுத்துக்கொண்டு...

கிறீத்துவ நாடுகளில் உழைக்கும் பணத்தில் ஊரிலுள்ள தம் ரத்த உறவுகளை வாழவைத்துக்கொண்டு...

கிறீத்துவ நாடுகள் வளங்கும் சலுகையில் தத்தம் சமய கூடங்களை அமைத்து அதில் சமய வழிபாடுகளை அமைதியாகவும் ஆர்ப்பாட்டமாகவும் மேற்கொண்டபடி...

மொத்தத்தில் கிறீத்துவ நாடுகளில் நிம்மதியாகவும் அமைதியாகவும் இருந்துகொண்டு ...

அம்மக்களின் சமய நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதும் நாகரீகமற்ற காட்டுமிராண்டி மதம் என கூறுவதும் ....

இவர்களை என்ன கூறுவது ? 🤔

இவர்களுக்கு தங்கள்மீது துளியளவும்  நம்பிக்கை இல்லை.

தங்கள் மதத்தின் மீது அவ நம்பிக்கை கொண்டவர்கள்.

தாழ்வுச் சிக்கலில் (inferiority complex ?)   மாட்டி தத்தளிப்பவர்கள். 
 
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஒப்பாரி வைப்பதுபோல் யாரும் பணம், பொருள் கொடுத்து மதம் மாற்றுவார்கள் என்றோ அல்லது அதற்காக மதம் மாறுவார்கள் என்றோ நான் நம்பவில்லை. தேடி வருவோருக்கு சில கிறிஸ்தவ நிறுவனங்கள் உதவி செய்யக்கூடும். சிலர் தம் வேதனைகளிலும், தேவைகளிலும் மனமொடிந்து இந்தச் சபைகளில் நம்பிக்கையோடு பங்குபற்றி ஆறுதலடைந்து நிலைத்து நிற்கலாம். ஆனால் பணம், பொருளுக்காக மதம் மாறுபவர்கள் தேவை முடிந்ததும் தத்தம் மதத்துக்கோ அல்லது வேறு சபைகளுக்கோ மாறிக்கொண்டிருக்கிறார்கள். இது நான் என் சூழலில் கண்ட உண்மை. இவர்கள் நிலைத்து நிற்பார்கள் என்று எண்ணி யாரும் மாற்றுவதில்லை. இதெல்லாம் ஒரு பயப்பிராந்தியால் ஏற்படும் குற்றச்சாட்டு. மாற்றுபவர்களை குற்றம் காணுவதை விடுத்து மாறுவோரை தடுங்கள்.   

2 hours ago, satan said:

மாற்றுபவர்களை குற்றம் காணுவதை விடுத்து மாறுவோரை தடுங்கள்.   

நல்ல ஐடியா!
போர்குற்றவாளிகளை சுதந்திரமா போர்குற்றங்களை செய்ய விட்டுட்டு பாதிக்கப்படக்கூடிய ஆக்களை தடுக்க சொல்றீக.
கொலைகாரர்களை சுதந்திரமா கொலைகளை செய்ய விட்டுட்டு பலியாபவர்களை பலியாகாம கவனமா இருக்க சொல்றீக.
சமூக விரோதிகளை சுதந்திரமா சமூக விரோத செயல்களை செய்ய விட்டுட்டு பாதிக்கப்படுபவர்கள் பாதிக்கப்படாம தடுக்க சொல்றீக.
இப்பிடி வித்தியாசமாவும் யோசிக்க பழகணும். இப்பிடி ஆக்கள் இல்லாம தான் நாட்டில இவ்வளவு பிரச்சினை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு போர்க்குற்றம், சமூக விரோதம் பற்றி வகுப்பெடுக்கவில்லை. உங்கள் பாதிப்பை மற்றவர்மேல் காட்டாதீர்கள். பணம் பொருள் கொடுத்து மதம் மாற்றுகிறார்கள் என்கிற கருத்துக்கு: மாற்றுவோர் கொடுப்பதை நீங்கள் கொடுத்து மாறுவோரை தடுங்கள் என்று கூறினேன். இதில் எங்கு போர்க்குற்றம், சமூக விரோதம் வந்தது? நோயாளிக்கு மருந்து கொடுத்து சுகமடையச் செய்வதுதானே இயற்கை. அதை விடுத்து மருந்தகத்தை குறை சொல்வாருமுண்டோ?

1 minute ago, satan said:

இங்க குறிப்பிட்ட எல்லா குற்றவாளிகளும் மற்றவர்கள் மேல வலிந்து தங்கட ஆதிக்கத்தை நிலைநிறுத்துற ஆக்கள் தான் என்று விளங்காட்டி நான் ஒன்றும் செய்ய ஏலாது. இப்பிடி பொதுவா சொல்லியும் தப்ப முடியா.

4 minutes ago, satan said:

பணம் பொருள் கொடுத்து மதம் மாற்றுகிறார்கள் என்கிற கருத்துக்கு: மாற்றுவோர் கொடுப்பதை நீங்கள் கொடுத்து மாறுவோரை தடுங்கள் என்று கூறினேன்.

மதமாற்றம் செய்யும் ஆக்கள் கைல இருக்கிற உலகம் பூரா கொள்ளையடிச்ச பணம்  போல சைவர்கள் கொள்ளையடிக்கிறதும் இல்லை பெரும் பணபலம் கொண்டவர்களும் இல்லை. இது இப்பிடி இருக்கேக்க இப்பிடி ஒரு கேவலமான சிந்தனையை உங்களிட்ட இருந்து எதிர்பார்க்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Gowin said:

நல்ல ஐடியா!
போர்குற்றவாளிகளை சுதந்திரமா போர்குற்றங்களை செய்ய விட்டுட்டு பாதிக்கப்படக்கூடிய ஆக்களை தடுக்க சொல்றீக.
கொலைகாரர்களை சுதந்திரமா கொலைகளை செய்ய விட்டுட்டு பலியாபவர்களை பலியாகாம கவனமா இருக்க சொல்றீக.
சமூக விரோதிகளை சுதந்திரமா சமூக விரோத செயல்களை செய்ய விட்டுட்டு பாதிக்கப்படுபவர்கள் பாதிக்கப்படாம தடுக்க சொல்றீக.
இப்பிடி வித்தியாசமாவும் யோசிக்க பழகணும். இப்பிடி ஆக்கள் இல்லாம தான் நாட்டில இவ்வளவு பிரச்சினை.

நான் பச்சையாகக்  கேட்கிறேன் என்று கோவிக்காதீர்கள் Gowin,

உங்கள் ஒப்பீடு சகிக்கவில்லை ☹️☹️ Gowin,

சகிக்கல...😡

2 hours ago, Gowin said:

மதமாற்றம் செய்யும் ஆக்கள் கைல இருக்கிற உலகம் பூரா கொள்ளையடிச்ச பணம்  போல சைவர்கள் கொள்ளையடிக்கிறதும் இல்லை பெரும் பணபலம் கொண்டவர்களும் இல்லை. இது இப்பிடி இருக்கேக்க இப்பிடி ஒரு கேவலமான சிந்தனையை உங்களிட்ட இருந்து எதிர்பார்க்கில்லை.

உலகம்பூராகவும் கொள்ளையடித்தவன் welfare காசு உங்கழுக்கு மட்டும்தான் தரவேண்டுமா 😜😜😜

போங்கையா நீங்கழும் உங்கள் logicக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Kapithan said:

உலகம்பூராகவும் கொள்ளையடித்தவன் welfare காசு உங்கழுக்கு மட்டும்தான் தரவேண்டுமா

இவ்வளவுதான் அவர்களது விளக்கம். நாங்கள் சொல்வது ஏறாது. கொள்ளை அடிப்பது என்று எதை வைச்சு சொல்லுறார் என்று தெரியவில்லை. ஆனால் அவர்களின் பணத்தில், தயவில்  வாழுவோர் கவுரமானவர்கள். கிறிஸ்தவ நாடுகளில் அவர்களின் பெருந்தன்மையில் சுதந்திரமாய் வாழ்ந்து கொண்டு, நம் நாட்டில் சிறுபான்மையினரை நசுக்க நினைப்பது எந்த வகையில் நிஞாயம்? ஒரு அடிமை இன்னொருவரை அடிமையாக்க நினைப்பது கேவலம் என்றுகூட நினைக்க முடியாதவர்களோடு நேரம் செலவழிப்பது வீண்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Kapithan said:

கிறீத்துவ நாடுகளில் இருந்து....

கிறீத்துவ நாடுகளின் welfare பணத்தில் உதவிபெற்று தங்களை நிலைனிறுத்திக்கொண்டு....

கிறீத்துவ நாடுகளில் வழங்கப்படும் தரமான கல்வியினை தம் பிள்ளைகளுக்கு கொடுத்துக்கொண்டு...

கிறீத்துவ நாடுகளில் உழைக்கும் பணத்தில் ஊரிலுள்ள தம் ரத்த உறவுகளை வாழவைத்துக்கொண்டு...

கிறீத்துவ நாடுகள் வளங்கும் சலுகையில் தத்தம் சமய கூடங்களை அமைத்து அதில் சமய வழிபாடுகளை அமைதியாகவும் ஆர்ப்பாட்டமாகவும் மேற்கொண்டபடி...

மொத்தத்தில் கிறீத்துவ நாடுகளில் நிம்மதியாகவும் அமைதியாகவும் இருந்துகொண்டு ...

அம்மக்களின் சமய நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதும் நாகரீகமற்ற காட்டுமிராண்டி மதம் என கூறுவதும் ....

இவர்களை என்ன கூறுவது ? 🤔

நீங்கள் சொல்லும் நாடுகள்,  போலிக் கிறிஸ்தவ நம்பிக்கையிலிருந்து, Secularists ஆக எப்போதோ பரிணாமம் அடைந்து விட்டார்கள்.

நீங்கள் மட்டுந்தான், இயேசுவிற்கே சம்பந்தமில்லாத கிறிஸ்தவத்தில் தொங்கி கொண்டிருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, Kapithan said:

1: தென் தமிழீழத்தில் எல்லைக் கிராமங்கள் என்று ஒன்ரிருப்பது உங்களுக்குத் தெரியுமா ? 😡

2) பண்பான மனிதர்கள் பிறறையும் பிறறின் நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்த துணியார். 😀

உங்களை போன்ற பண்பான மனிதர்கள்தான், பிற மத மக்களை சாத்தான்கள் என்று எள்ளி நகையாடுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, மாங்குயில் said:

1) நீங்கள் சொல்லும் நாடுகள்,  போலிக் கிறிஸ்தவ நம்பிக்கையிலிருந்து, Secularists ஆக எப்போதோ பரிணாமம் அடைந்து விட்டார்கள்.

2)நீங்கள் மட்டுந்தான், இயேசுவிற்கே சம்பந்தமில்லாத கிறிஸ்தவத்தில் தொங்கி கொண்டிருக்கிறீர்கள்.

1) நீங்கள் என்ன தண்ணீர் கண்ட இடத்தி கழுவி நிழல் கண்ட இடத்தில் தூங்கும் ஆளோ ?  கொஞ்சமேனும் சிந்தனையின்றி எழுதுகிறீர்கள்.

2) என்னை வேதக்காறன் என்று எப்போது கண்டுபிடித்தீர்கள் ? சோக்கிறட்டீஸ் 😜 தோற்றான் போங்கள். (போலி சமயப் பற்றாளர்களுக்கு: எனது வீட்டில் சைவசமயத்தைப் பின்பற்றுவோரும் கிறீத்துவத்தை பின்பற்றுவோரும் கோவிலுக்குப் போகாதோரும் உள்ளனர். நானோ இரு  சமய நம்பிக்கையாளர்களையும் மதிப்பவன். ஆனால் மூட நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமான விமர்சனமற்ற சமய நம்பிக்கைக்களை எதிர்ப்பவன். )😎😜

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2020 at 9:36 PM, கற்பகதரு said:

UoJ_logo.png

இது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சின்னம். இதில் இந்து சமயத்துக்கு மட்டுமே இடம் வழங்கப்பட்டுள்ளது.

https://en.m.wikipedia.org/wiki/University_of_Jaffna

படத்தில் உள்ள மாடு இந்து சமயம் என்பதை விட யாழ்ப்பாண வெள்ளாளர் சாதியை குறிப்பதாகவும் இருக்கலாம்.  

மாட்டு இறைச்சியை கிறிஸ்தவர்களும், முசுலீம்களும் அடித்து உண்கின்றார்கள். எனவே, இது இந்து சமயத்தை மட்டும் குறிக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, மாங்குயில் said:

உங்களை போன்ற பண்பான மனிதர்கள்தான், பிற மத மக்களை சாத்தான்கள் என்று எள்ளி நகையாடுகின்றனர்.

ஐயோ மாங்குயில் ..ச்சூ... தாங்கல...😏

சீரியஸாத்தான் கேட்கிறேன் நீங்கள் பள்ளிக்கூடப் பக்கமே ஒதுங்கினதேயுல்லையோ ?

மேலே தெளிவாகத்தானே எழுதியுள்ளேன். ஏன் விடயத்தை திசை திருப்புகிறீர்கள். முதலில் எழுதியதை வாசியுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kapithan said:

1) நீங்கள் என்ன தண்ணீர் கண்ட இடத்தி கழுவி நிழல் கண்ட இடத்தில் தூங்கும் ஆளோ ?  கொஞ்சமேனும் சிந்தனையின்றி எழுதுகிறீர்கள்.

2) என்னை வேதக்காறன் என்று எப்போது கண்டுபிடித்தீர்கள் ? சோக்கிறட்டீஸ் 😜 தோற்றான் போங்கள். (போலி சமயப் பற்றாளர்களுக்கு: எனது வீட்டில் சைவசமயத்தைப் பின்பற்றுவோரும் கிறீத்துவத்தை பின்பற்றுவோரும் கோவிலுக்குப் போகாதோரும் உள்ளனர். நானோ இரு  சமய நம்பிக்கையாளர்களையும் மதிப்பவன். ஆனால் மூட நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமான விமர்சனமற்ற சமய நம்பிக்கைக்களை எதிர்ப்பவன். )😎😜

கண்மூடித்தனமான விமர்சனமற்ற நம்பிக்கையா?

இயேசு சிந்திய இரத்தம், பாவங்களைக் கழுவியது என்று நம்புவது, கண்மூடித்தனமான நம்பிக்கையா, அல்லது விமர்சனமற்ற நம்பிக்கையா?

3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

மாட்டு இறைச்சியை கிறிஸ்தவர்களும், முசுலீம்களும் அடித்து உண்கின்றார்கள். எனவே, இது இந்து சமயத்தை மட்டும் குறிக்கவில்லை. 

மாட்டு இறைச்சி சாப்பிடக் கூடாது என்று, இந்து மதம் சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, மாங்குயில் said:

கண்மூடித்தனமான விமர்சனமற்ற நம்பிக்கையா?

இயேசு சிந்திய இரத்தம், பாவங்களைக் கழுவியது என்று நம்புவது, கண்மூடித்தனமான நம்பிக்கையா, அல்லது விமர்சனமற்ற நம்பிக்கையா?

மாட்டு இறைச்சி சாப்பிடக் கூடாது என்று, இந்து மதம் சொல்லவில்லை.

மலையை கொல்லி எலியைப் பிடிப்பது என்பது இதுதானோ 😂😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, Kapithan said:

மலையை கொல்லி எலியைப் பிடிப்பது என்பது இதுதானோ 😂😂

மலையைக் கிள்ளி, மாட்டுவதைப் போலிருக்கிறது உங்கள் நிலை.

10 hours ago, satan said:

நோயாளிக்கு மருந்து கொடுத்து சுகமடையச் செய்வதுதானே இயற்கை. அதை விடுத்து மருந்தகத்தை குறை சொல்வாருமுண்டோ?

இந்துக்கள் நோயாளிகளா?

மருந்தகம் நோயாளிகளுக்கு மட்டுந்தான் மருந்து கொடுக்கிறது.

சுகதேகிகளுக்கல்ல.

5 hours ago, மாங்குயில் said:

உங்களை போன்ற பண்பான மனிதர்கள்தான், பிற மத மக்களை சாத்தான்கள் என்று எள்ளி நகையாடுகின்றனர்.

மதம் மாத்துற ஆட்கள் தான் சாத்தான்கள். அவங்களை பண்புள்ள மனிதர் என்டு சொல்லேலாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2020 at 6:36 PM, கற்பகதரு said:

UoJ_logo.png

இது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சின்னம். இதில் இந்து சமயத்துக்கு மட்டுமே இடம் வழங்கப்பட்டுள்ளது.

https://en.m.wikipedia.org/wiki/University_of_Jaffna

5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

படத்தில் உள்ள மாடு இந்து சமயம் என்பதை விட யாழ்ப்பாண வெள்ளாளர் சாதியை குறிப்பதாகவும் இருக்கலாம்.  

மாட்டு இறைச்சியை கிறிஸ்தவர்களும், முசுலீம்களும் அடித்து உண்கின்றார்கள். எனவே, இது இந்து சமயத்தை மட்டும் குறிக்கவில்லை. 

On 3/11/2020 at 8:51 AM, ampanai said:

இது சிறிலங்கா அரசின் தேசிய சின்னம் அதில், புத்த மதத்திற்கு மட்டுமே முன்னுரிமை தரப்பட்டுள்ளது.

Emblem of Sri Lanka.svg1. The crest is the Dharmachakra, symbolizing the country's foremost place for Buddhism and just rule.

நீங்கள் சொல்வதில் உண்மையும் இருக்கலாம். அதே போல, தமிழரும் பௌத்தர்களாக இருந்தவர்கள், தமிழ் அரசர்களின் கொடியில் சிங்கம் இருந்தது, ஆகவே தமிழர்களும் பௌத்தத்துக்கு முதலிடம் வழங்கி சிங்க இலச்சினையை தமதாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த முன்மாதிரியை பின்பற்றி, நீங்கள் சொல்வது போல, மாடு தின்னும் முசிலிம்களும் கிறீஸ்தவர்களும் நந்திதேவரை தாம் தின்ன இந்துக்கள் வழங்கும் மாடு என்று ஏற்றுக் கொண்டு கோவில் பசுக்களையும் நந்தி தேவர் முன்னலேயே வெட்டி பாகம் போடலாம். ஆகா, இலங்கையில் உள்ள மதப்பிரச்சினை, இனப்பிரச்சினை எல்லாவற்றையும் எவ்வளவு வேகமாக யாழ். பல்கலைக்கழக சின்னத்துடன் நீங்கள் தீர்த்துவிட்டீர்கள் பாருங்கள். அடுத்த சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு உங்களை நாங்கள் பிரேரிக்க போகிறோம், சம்மதமா? எம் மதமும் சம்மதமா?😃

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இயந்திரம் கொண்டு தேர் இழுப்பர்கள். சக மனிதனை சாதி பாகு பாட்டில் பிரிப்பது ஒதுக்குவது/ஒடுக்குவது எல்லாம் நடக்கும். அந்த மனிதன் தனக்கு பிடித்த ஒரு மதத்தில் போய் இணைந்து இறைவனை வழிபட்டால் குய்யோ முறையோ என கத்தி மதம் மாற்றுகின்றான் என உழையிடுவது. சீ என்ன உலகம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:

மலையைக் கிள்ளி, மாட்டுவதைப் போலிருக்கிறது உங்கள் நிலை.

மலையைக் கிள்ளி அல்ல கொல்லி. உங்களுக்கு அதன் அர்த்தம் புரிய்வில்லை போலும் ☹️

  • தொடங்கியவர்
54 minutes ago, கற்பகதரு said:

அடுத்த சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு உங்களை நாங்கள் பிரேரிக்க போகிறோம், சம்மதமா? எம் மதமும் சம்மதமா?😃

அவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருக்கவேண்டும்  🙂 ? 

பரிசு கொடுப்பவரை சொன்னேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.