Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதை நிறுத்தக்கோரி ஜனாதிபதிக்குக் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

நான் வறுமையில் இருந்தேன்.

சிறீ லங்கா அரசின் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் போய் உணவு கேட்டேன். பணம் கேட்டார்கள். இல்லை என்றேன். உணவு தர மறுத்தார்கள்.

அரசாங்கத்தின் கச்சேரி அலுவலகத்தில் சென்று பணம் கேட்டேன். “பணம் தரலாம், கூட்டிப் பெருக்கும் வேலை செய்ய வேண்டும் “ என்று நிர்ப்பந்தித்தார்கள். 

எப்படி இவர்கள் என்னை வேலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கலாம்? பணமும் உணவும் குடிமகனான எனது உரிமைகள் அல்லவா? ஆகவே, அவர்கள் நிர்ப்பந்தத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், பசிக்கிறதே, என்ன செய்யலாம் என்று நினைத்தபடி வீதியை கடந்த போது, “அப்போஸ்தலிக்க சபை” என்று போர்ட் போட்ட வீடு ஒன்றில் பலரும் கூடி நின்று மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தார்கள். “பசிக்கிறது” என்றேன். “யேசு உன்னை நேசிக்கிறார்” என்று சொல்லி உள்ளே அழைத்து சென்று நிறைய உணவு தந்தார்கள். பிள்ளைகளுக்கும், மனைவிக்கும் சோத்து பார்சல் கட்டித்தந்தார்கள். 

சுவரில் யேசுவின் படத்துக்கு பக்கத்தில், “நான் பசியோடு வந்தேன். நீ எனக்கு உணவு தந்தாயா?” என்று எழுதி இருந்தது.  “நான் நோய்வாய்ப்பட்டபின் என்னால் வேலை செய்து உழைக்க முடியவில்லை.” என்றேன். “கண்ணதாசன் என்ற சினிமா கவிஞரை பற்றி தெரியுமா?” என்று கேட்டார்கள். “அவரை தெரியாதவர் யார்?” என்றேன் நான். “நாகேஷ் என்ற நகைச்சுவை நடிகரை அறிவாயா?” என்று கேட்டார்கள். “என்ன இப்படி கேட்கிறீர்கள்…அவருடைய படங்கள் பார்த்திருக்கிறேன்” என்றேன். கண்ணதாசன் எழுதிய, “யேசு காவியம்” என்ற புத்தகத்தை காட்டினார்கள். “கண்ணதாசனையும் நாகேஷையும் நிம்மதியாக வாழ வைத்த யேசு உன்னையும் அழைத்திருக்கிறார். மீண்டும் வா, குடும்பத்துடன் வா.” என்றார்கள். 

போகவா, இல்லை நல்லூர் கந்தனிடம் மீண்டும் போகவா? யாராவது ஆலோசனை தருவீர்களா?

உங்களுக்கு கொழுப்பு அன்றி வேறில்லை. உங்களிடம் பணம் இல்லை எனில் அவர்கள் பணம் தரக் கூறிய  வேலையைச் செய்துவிட்டுப் பணத்தை வாங்கி பசியைப் போக்கியிருக்க வேண்டும். உழைக்காமல் உண்ண ஆசைகொண்ட நீங்கள் ஓசியில் உணவு தருவதாகக் கூறியதும் மதம் மாறும் வேலையைச் செய்ய ஒப்புக்கொண்டுவிட்டீர்கள். ஆக உடல் நோகாது உழைக்காது உண்ண வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கம்.

  • Replies 134
  • Views 10.4k
  • Created
  • Last Reply

மதம் கடவுள்  என்பது மனிதப் பலவீனத்தின் உற்பத்தி.   எல்லா மதங்களும் முடப்பழக்கங்களைத்  தான் அடிப்படையாகக்  கொண்டவை. அவற்றை வைத்தை மதங்களைப் பரப்பின. காலப்போக்கில் அறிவியல் வளர்ச்சி  ஏற்பட பல முன்னேறிய நாட்டு மக்களுக்கு இவை  வேலைக்காகாத மடைத்தனம் என்பது சிறிது சிறிதாக விளங்கியது. இருப்பினும் அவர்கள் சம்பிராயத்தற்காக அவற்றை பெயரளவில் மட்டும் கடைப்பிடித்து வருகின்றனர்.  ஆனால் எமது  சமுதாயத்தில் தொடரந்து இந்த மடைத்தனம் வளர க்கப்பட்டு வருகின்றது.  வடிகட்டிய மூடத்தனங்கள் சமூக வலைதளங்களூடக படு பொய்களுடன் பரப்பப்படுகின்றன.   மடைத்தனங்களை அளவுக்கு அதிகமாக நம்பும் போக்கு என்பது  எமது நாமே செய்யும் தீங்கு ஆகும். அது எந்த மதமாகினும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

1. எப்பொழுது ஒருவர் ஒரு கருத்தை மூன்று வசனங்களுக்கு மேலாக முன்வைக்கின்றாரோ, அப்போதே அது அவரால் விளங்கப்படுத்த முடியாத விடயமாகின்றது 

2. எப்பொழுது "உங்களுக்கு ... விளங்கவில்லையா?" என எழுதும்பொழுதே கருத்து .....

3.  

சூப்பர்.

நான் சொன்ன கருத்துக்கு உங்களிடம் பதில் இல்லை என்பதை ரத்தினச் சுருக்கமாக ஒன்றரை வசனத்தில் சொல்லி விட்டீர்கள். திருவள்ளுவரே தோற்றார் போங்கள்😂

3 hours ago, மாங்குயில் said:

எல்லா மக்களும் விரும்பியோ விரும்பாமலோ அருந்தும் Drinks, நீங்கள் குறிப்பிட்டவை.

எல்லா மக்களும், எல்லா மதத்தையும் விரும்பி ஏற்பதில்லை.

எல்லா மக்களும் அல்ல. பெரும்பாலான மக்கள்.

நீங்கள் சொன்னதில் போல்ட் செய்யப்பட்டது உண்மைதான், இதைத்தான் நான் பாகிஸ்தானின் இந்துக்களை சுட்டிகாட்டி எழுதினேன். 

ஆனால் இலங்கையில் தமிழர்கள் மத்தியில் இந்துவில் இருந்து கிறீஸ்தவத்துக்கு  கட்டாய மதமாற்றம் நடை பெறுவதில்லை. பாதிரிமார் சேல்ஸ் ரெப் ரேஞ்சுக்கு இறங்கி ஊழியம் செய்கிறார்கள் பாஸ்.

சொன்னமாதிரி உதவிகளையும் செய்யுறாங்க பாஸ். 

நம்ம பிராண்டில்? அதனால அந்த பிராண்டை நோக்கி சனம் அள்ளுப்படுகிது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மாங்குயில் said:

பல நோக்கு கூட்டுறவு சங்கம், தர்ம ஆசுப்பத்திரியோ  'தன்சலோ' அல்ல.

அங்கு பணம் கொடுத்துத்தான், உணவு வாங்க வேண்டும். 

அங்குள்ள ஊழியர்கள், அங்குள்ள உணவைத் தூக்கித் தந்தால், அவர்களின் தொழில் போய் விடும்.

கூட்டிப் பெருக்கும் வேலை செய்தால், பணம் கிடைக்கும்தானே!

அந்தப் பணத்தில் வடிவாகச் சாப்பிடலாம்.
 
 கண்ணதாசன் எழுதிய, “யேசு காவியம்” என்ற புத்தகத்தை உங்களுக்கு காட்டும்போது, "அர்த்தமுள்ள இந்து மதம்" என்ற புத்தகத்தையும் அவர்தான் எழுதினார் என்று நினைவூட்டத் தவறி விட்டீர்கள்.

ஆனால், கண்ணதாசனும், நாகேஷும் -  இயேசுவின்பின் போகவில்லை.

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கு கொழுப்பு அன்றி வேறில்லை. உங்களிடம் பணம் இல்லை எனில் அவர்கள் பணம் தரக் கூறிய  வேலையைச் செய்துவிட்டுப் பணத்தை வாங்கி பசியைப் போக்கியிருக்க வேண்டும். உழைக்காமல் உண்ண ஆசைகொண்ட நீங்கள் ஓசியில் உணவு தருவதாகக் கூறியதும் மதம் மாறும் வேலையைச் செய்ய ஒப்புக்கொண்டுவிட்டீர்கள். ஆக உடல் நோகாது உழைக்காது உண்ண வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கம்.

இப்போதுதான் நீங்கள் இருவரும் சரியான பாயிண்ட்டுக்கு வந்துளீர்கள்.

1. சோற்றுக்காக மதம் மாறுவது இழிவா?

ஆம்

2. அப்படி மாறுவது ஒருவரின் தனி உரிமையா? ஆம்

3. அதில் நாம் தலையிடலாமா? இல்லை

4. சோற்றை கொடுத்து மதம் மாற்றுவது இழிவா? ஆம்

5. வன்முறையை பிரயோகிகாமல் ஒருவரை சோற்றை காட்டி மதம் மாற்றுவது மாற்ற விழைபவரின் தனி மனித உரிமையா?

ஆம்

6. அதில் நாம் தலையிடலாமா? இல்லை

7. அப்போ எம் மதத்தில் இருந்து அன்னகாவடிகள் அடுத்த மதத்துக்கு போகாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்.

ஒன்றில் போனால் போடா என இருக்க வேண்டும். அல்லது நாமும் சோறு போட்டு மதம் வளர்க வேண்டும்.

பிகு: இழிவானது எல்லாம் சட்ட விரோதமானது அல்ல.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, goshan_che said:

சூப்பர்.

நான் சொன்ன கருத்துக்கு உங்களிடம் பதில் இல்லை என்பதை ரத்தினச் சுருக்கமாக ஒன்றரை வசனத்தில் சொல்லி விட்டீர்கள். திருவள்ளுவரே தோற்றார் போங்கள்😂

எல்லா மக்களும் அல்ல. பெரும்பாலான மக்கள்.

நீங்கள் சொன்னதில் போல்ட் செய்யப்பட்டது உண்மைதான், இதைத்தான் நான் பாகிஸ்தானின் இந்துக்களை சுட்டிகாட்டி எழுதினேன். 

ஆனால் இலங்கையில் தமிழர்கள் மத்தியில் இந்துவில் இருந்து கிறீஸ்தவத்துக்கு  கட்டாய மதமாற்றம் நடை பெறுவதில்லை. 

நீங்கள் சொன்ன கருத்திற்கு நான் பதிலளிக்கவில்லை.

நான் பதிலளித்தது, உங்களின் ஒரு வசனத்திற்குத்தான். 

எல்லா மக்களும்  எல்லா மதத்தையும் ஏற்பதில்லை.

நீங்கள் குறிப்பிட்ட பானங்கள், எல்லா மக்களாலும் பருகப்படுபவை, மத வேறுபாடின்றி.

ஒவ்வொருவரின் நம்பிக்கைகள் வித்தியாசமானவை.

கட்டாய மதமாற்றம், உலகத்தில் ஓரிடத்திலும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மாங்குயில் said:

நீங்கள் சொன்ன கருத்திற்கு நான் பதிலளிக்கவில்லை.

நான் பதிலளித்தது, உங்களின் ஒரு வசனத்திற்குத்தான். 

எல்லா மக்களும்  எல்லா மதத்தையும் ஏற்பதில்லை.

நீங்கள் குறிப்பிட்ட பானங்கள், எல்லா மக்களாலும் பருகப்படுபவை, மத வேறுபாடின்றி.

ஒவ்வொருவரின் நம்பிக்கைகள் வித்தியாசமானவை.

கட்டாய மதமாற்றம், உலகத்தில் ஓரிடத்திலும் இல்லை.

மாங்குயில்,

ஒரு தப்பு நடந்து போச்சு.....

அது அம்பனைக்கு எழுதியது. உங்கள் கருத்துக்கு கீழே இருப்பது மட்டுமே உங்களுக்கு.

யாழ் பதில்களை மேர்ஜ் பண்ணுவதால் வந்த மயக்கம்.

ஆனால் மேலே போல்ட் செய்யப்பட்ட உங்கள் கருத்தில் உடன்பாடில்லை. கட்டாய மத மாற்றம் உலகில் பல இடங்களில் நடக்கிறது. ஏன் இலங்கையில் கிழக்கின் எல்லை கிராமங்களில் முஸ்லீம்கள் இதை செய்வதாக செய்தி வருமே?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மாங்குயில் said:

கண்ணதாசன் எழுதிய, “யேசு காவியம்” என்ற புத்தகத்தை உங்களுக்கு காட்டும்போது, "அர்த்தமுள்ள இந்து மதம்" என்ற புத்தகத்தையும் அவர்தான் எழுதினார் என்று நினைவூட்டத் தவறி விட்டீர்கள்.

அப்போ கண்ணதாசன் டபிள் கேம் விளையாடி இருக்கிறார்.

27 minutes ago, மாங்குயில் said:

கட்டாய மதமாற்றம், உலகத்தில் ஓரிடத்திலும் இல்லை.

பாக்கிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளில் கட்டாய மதமாற்றம் நடைபெறுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

பிகு: இழிவானது எல்லாம் சட்ட விரோதமானது அல்ல.

திருடுவது, விபச்சாரம் செய்வது, கொலை செய்வது, கொள்ளை அடிப்பது,  போன்றவை இழிவானது மட்டுமல்ல, சட்ட விரோதமானது கூட.

1 hour ago, goshan_che said:

5. வன்முறையை பிரயோகிகாமல் ஒருவரை சோற்றை காட்டி மதம் மாற்றுவது மாற்ற விழைபவரின் தனி மனித உரிமையா?

ஆம்

இப்படிப்பட்ட தனி மனித உரிமை, இலங்கையில் செல்லுபடியாகாது. 

ஒருவர் சோறு தந்து, மதம் மாறச் சொன்னார் என்று வழக்குத் தொடர்ந்தால்,  சோறு கொடுத்தவர் 14  நாள்களுக்கு விளக்க மறியலில் இருக்க வேண்டும்.

This is latest trend in Sri Lanka.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அப்போ கண்ணதாசன் டபிள் கேம் விளையாடி இருக்கிறார்.

பாக்கிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளில் கட்டாய மதமாற்றம் நடைபெறுகின்றது.

கண்ணதாசனைக் குறை சொல்ல வேண்டாம். 

அவரைப் பற்றிய பல விமரிசனங்கள் இருந்தாலும், அவர் ஒரு நல்ல கவிஞர்.

எந்த மதக் கவிஞராக இருந்தாலும், பிற மதங்களை நல்ல கண்ணோட்டத்துடன் காவியமாக வடிப்பது அவர்களின் போக்கு. 

இயேசு காவியம், அவரால் செதுக்கப்பட்ட ஒரு நல்ல நூல்.

ஆனால், பைபிளுக்கு முரணான சில கருத்துக்களையும் அவர் எழுதி இருக்கிறார்.

கிறிஸ்தவ பாதிரிமார், அந்த பிழைகளை முன்மொழிவதில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

7. அப்போ எம் மதத்தில் இருந்து அன்னகாவடிகள் அடுத்த மதத்துக்கு போகாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்.

இந்து மத ஆகமங்களை படிப்பதுதான்.. 

வேறென்ன செய்ய முடியும்?

அப்படிப் படிப்பதால், வேறு மதங்களுக்குத் தாவுவதை தடுக்க முடியாது. 

விரும்பாதவன் தாவத்தான் செய்வான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மாங்குயில் said:

பாதிரிமாரின் குணத்தை படம் பிடித்துக் காட்டுகிறீர்கள்.

வறுமையில் இருக்கும் மக்களுக்கு, கிறிஸ்தவ மதம் மாற்றும் கோஷ்டிகளோ, அல்லது வேறு எந்த NGO  க்களோ பெரிதாக ஒன்றும் செய்வதில்லை.

அவர்களைப் பாதுகாப்பதும் தொடர்ந்த உதவிகளை செய்வதும், ஸ்ரீலங்கா அரசு மட்டுந்தான்.

10 hours ago, Dash said:

எனக்கு ஒன்று புரியவில்லை ...அது ஏன் கிறிஸ்த்தவர்களுக்கு எதிராக எழுதும் கருத்துக்கள் எல்லாம் புது IDஇல் இருந்து வருகின்றன....?????

தனது சொந்த மக்களை அடைத்து வைத்து,  வெளியார் தொடர்பின்றி, தொண்டு நிறுவனங்களை வெளியேற்றி, உணவு, போக்குவரத்தை தடைசெய்து, கொன்று குவித்த அரசுடன் உண்டு, குடித்து, பிடில் வாசித்துக்கொண்டிருந்தவர்களுக்கு நடந்த உண்மை தெரியாது. உங்களது இந்தச் செய்தி கூறுவது: நீங்கள் ஒரு சிங்கள அரசின் முகவர். தமிழ்ப் பிரதேசங்களில் விகாரைகளும், சிங்கள குடியேற்றங்களும் நடக்கும்போது ஸ்ரீலங்கா அரசை காப்பாற்ற இப்படியான மோதலை உருவாக்குபவர். இதையே சர்வதேசத்திலும் சொல்லுவதற்கு ஆயத்தம் செய்கிறீர்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, மாங்குயில் said:

திருடுவது, விபச்சாரம் செய்வது, கொலை செய்வது, கொள்ளை அடிப்பது,  போன்றவை இழிவானது மட்டுமல்ல, சட்ட விரோதமானது கூட.

இப்படிப்பட்ட தனி மனித உரிமை, இலங்கையில் செல்லுபடியாகாது. 

ஒருவர் சோறு தந்து, மதம் மாறச் சொன்னார் என்று வழக்குத் தொடர்ந்தால்,  சோறு கொடுத்தவர் 14  நாள்களுக்கு விளக்க மறியலில் இருக்க வேண்டும்.

This is latest trend in Sri Lanka.

அப்போ வழக்குப் போடவேண்டியதுதானே. பிறகேன் குய்யோ முய்யோவென்று கத்துகிறீர்கள் ?😀

அதுசரி ஒருபிடி சோறே போடாத உங்களைப் போன்ற ஆட்களெல்லாம் வழக்கு மட்டும் போடவா போகிறீர்கள்.😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, satan said:

தனது சொந்த மக்களை அடைத்து வைத்து,  வெளியார் தொடர்பின்றி, தொண்டு நிறுவனங்களை வெளியேற்றி, உணவு, போக்குவரத்தை தடைசெய்து, கொன்று குவித்த அரசுடன் உண்டு, குடித்து, பிடில் வாசித்துக்கொண்டிருந்தவர்களுக்கு நடந்த உண்மை தெரியாது. உங்களது இந்தச் செய்தி கூறுவது: நீங்கள் ஒரு சிங்கள அரசின் முகவர். தமிழ்ப் பிரதேசங்களில் விகாரைகளும், சிங்கள குடியேற்றங்களும் நடக்கும்போது ஸ்ரீலங்கா அரசை காப்பாற்ற இப்படியான மோதலை உருவாக்குபவர். இதையே சர்வதேசத்திலும் சொல்லுவதற்கு ஆயத்தம் செய்கிறீர்கள்.  

பிரதர், நீங்கள் சொல்வது உண்மை. 

அரசு, அன்றும் அநியாயம் செய்தது.  இன்றும் செய்கிறது. 

அரசு நல்லதையும் செய்தது. செய்கிறது.  

நல்லதை எழுதினேன். 

நான் அரச முகவர் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, மாங்குயில் said:

இந்து மத ஆகமங்களை படிப்பதுதான்.. 

வேறென்ன செய்ய முடியும்?

அப்படிப் படிப்பதால், வேறு மதங்களுக்குத் தாவுவதை தடுக்க முடியாது. 

விரும்பாதவன் தாவத்தான் செய்வான்.

ஐயோ இதைத்தானே திரும்பத் திரும்ப சொன்னேன். 😂 உங்கள் சமயத்தவர் சமயம் மாறுவது உங்களால்  ஏற்க முடியவில்லை என்றால் மாறுவதற்கான காரணிகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்யுங்களேன். அதை விடுத்து மாறுபவனையும் இழிவுபடுத்தி மாற்றுபவனையும் இழிவுபடுத்துவது எந்தவகையில் சரியானது ?

பட்டிணிகிடப்பவன் பட்டிணியால் இறந்தால் உங்களுக்கு திருப்தி அப்படித்தானே உங்கள் கருத்து போகிறது 😡

  • தொடங்கியவர்
2 hours ago, goshan_che said:

சூப்பர்.

நான் சொன்ன கருத்துக்கு உங்களிடம் பதில் இல்லை என்பதை ரத்தினச் சுருக்கமாக ஒன்றரை வசனத்தில் சொல்லி விட்டீர்கள். திருவள்ளுவரே தோற்றார் போங்கள்😂

உண்மையில் உங்கள் கருத்து விளங்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கு கொழுப்பு அன்றி வேறில்லை. உங்களிடம் பணம் இல்லை எனில் அவர்கள் பணம் தரக் கூறிய  வேலையைச் செய்துவிட்டுப் பணத்தை வாங்கி பசியைப் போக்கியிருக்க வேண்டும்.

ம்.... எப்படி, எப்படி? எப்படி என்னை நீங்கள் அப்படி வேலை செய்ய சொல்லி நிர்ப்பந்திக்கலாம்? சோத்து பொட்டலமாகட்டும், பணமாகட்டும், விரும்பினால் தாருங்கள், விருப்பம் இல்லாவிட்டால் விடுங்கள். அதை  விட்டுவிட்டு, என்னை வேலை செய்ய சொல்லி நிர்ப்பந்திக்க எப்படி உங்களுக்கு உரிமை வந்தது?  ஓ... பார்க்க பஞ்சப் பரதேசியாக தெரிவதால் அடிமையாக்க பார்க்கிறீர்களா? நான் உங்கள் அடிமை இல்லை. இனியும் “கீழ் சாதி” என்று சொல்லி இந்த அடிமை வாழ்க்கை வாழ வைக்கலாம் என்று நினைக்காதீர்கள். கார்ள் மார்க்ஸில் தொடங்கி, பெரியார் வழி வந்து, ஷே குவராவில் இறங்கி, அண்ணன் சீமானில் ஏறி இருக்கும் எங்கள் வறுமையை பயன்படுத்தி பணத்தையும் சோற்று பொட்டலத்தையும் காட்டி அடிமையாக்க நினைக்காதீர்கள். இனி அது நடக்காது.

4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உழைக்காமல் உண்ண ஆசைகொண்ட நீங்கள் ஓசியில் உணவு தருவதாகக் கூறியதும் மதம் மாறும் வேலையைச் செய்ய ஒப்புக்கொண்டுவிட்டீர்கள். ஆக உடல் நோகாது உழைக்காது உண்ண வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கம்.

நிலபுலம் உள்ள நீங்கள் எல்லாம் எங்களை வருத்தி வேலை வாங்கிக்கொண்டு சும்மா இருந்து சாப்பிடலாம், நாங்கள் பரம்பரை பரம்பரையாக உங்களுக்கு கழுவித்துடைக்க வேண்டும், அப்படியா? இனி அது நடக்காது. 

நான் இன்றுடன் குடும்பத்தையும் கூட்டிக் கொண்டு அப்போஸ்தலிக்க சபைக்கு போய் உங்களை போல சும்மா இருந்து சாப்பிட போகிறேன்.

முருகனுக்கு அல்லேலூயா! 😃

ஆவிக்கு அரோகரா🦇

Edited by கற்பகதரு

  • தொடங்கியவர்
4 hours ago, tulpen said:

மதம் கடவுள்  என்பது மனிதப் பலவீனத்தின் உற்பத்தி.   எல்லா மதங்களும் முடப்பழக்கங்களைத்  தான் அடிப்படையாகக்  கொண்டவை. அவற்றை வைத்தை மதங்களைப் பரப்பின. காலப்போக்கில் அறிவியல் வளர்ச்சி  ஏற்பட பல முன்னேறிய நாட்டு மக்களுக்கு இவை  வேலைக்காகாத மடைத்தனம் என்பது சிறிது சிறிதாக விளங்கியது. இருப்பினும் அவர்கள் சம்பிராயத்தற்காக அவற்றை பெயரளவில் மட்டும் கடைப்பிடித்து வருகின்றனர்.  ஆனால் எமது  சமுதாயத்தில் தொடரந்து இந்த மடைத்தனம் வளர க்கப்பட்டு வருகின்றது.  வடிகட்டிய மூடத்தனங்கள் சமூக வலைதளங்களூடக படு பொய்களுடன் பரப்பப்படுகின்றன.   மடைத்தனங்களை அளவுக்கு அதிகமாக நம்பும் போக்கு என்பது  எமது நாமே செய்யும் தீங்கு ஆகும். அது எந்த மதமாகினும். 

1. "மதம் கடவுள்  என்பது மனிதப் பலவீனத்தின் உற்பத்தி.   எல்லா மதங்களும் முடப்பழக்கங்களைத்  தான் அடிப்படையாகக்  கொண்டவை. அவற்றை வைத்தை மதங்களைப் பரப்பின." " அவற்றை வைத்தை மதங்களைப் பரப்பின. காலப்போக்கில் அறிவியல் வளர்ச்சி  ஏற்பட பல முன்னேறிய நாட்டு மக்களுக்கு இவை  வேலைக்காகாத மடைத்தனம் என்பது சிறிது சிறிதாக விளங்கியது."

2. "ஆனால் எமது  சமுதாயத்தில் தொடரந்து இந்த மடைத்தனம் வளர க்கப்பட்டு வருகின்றது.  வடிகட்டிய மூடத்தனங்கள் சமூக வலைதளங்களூடக படு பொய்களுடன் பரப்பப்படுகின்றன.   மடைத்தனங்களை அளவுக்கு அதிகமாக நம்பும் போக்கு என்பது  எமது நாமே செய்யும் தீங்கு ஆகும். அது எந்த மதமாகினும். "

"காலப்போக்கில் அறிவியல் வளர்ச்சி ஏற்பட" .. என நீங்கள் மேலே கூறப்பட்டது தானே பதில்? பெரும்பாலான எமது மக்கள் இன்றும் இன்றும் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்வது ஒரு முக்கிய காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, மாங்குயில் said:

பிரதர், நீங்கள் சொல்வது உண்மை.

நடந்த உண்மையை சொல்வதற்கு, பிரதர்தான் வரவேண்டும் என்றில்லை. தெரிந்தவர், அனுபவித்தவர்  யாரும் சொல்லலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, satan said:

நடந்த உண்மையை சொல்வதற்கு, பிரதர்தான் வரவேண்டும் என்றில்லை. தெரிந்தவர், அனுபவித்தவர்  யாரும் சொல்லலாம். 

பிரதர், நீங்கள் சொன்ன உண்மைகள் சில துளிகள்தான்.

எல்லா உண்மைகளையும் சொல்லி,  நான் காலத்தை விரயமாக்க விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:

திருடுவது, விபச்சாரம் செய்வது, கொலை செய்வது, கொள்ளை அடிப்பது,  போன்றவை இழிவானது மட்டுமல்ல, சட்ட விரோதமானது கூட.

இப்படிப்பட்ட தனி மனித உரிமை, இலங்கையில் செல்லுபடியாகாது. 

ஒருவர் சோறு தந்து, மதம் மாறச் சொன்னார் என்று வழக்குத் தொடர்ந்தால்,  சோறு கொடுத்தவர் 14  நாள்களுக்கு விளக்க மறியலில் இருக்க வேண்டும்.

This is latest trend in Sri Lanka.

சில அவதானங்கள்

1. எனக்கு latest trend ஐ பற்றி தெரியாது. ஒரு காலத்தில் வடக்கு-கிழக்கில் இருந்து வந்த ஆள் என்றால் ஸ்டேசனுக்கு இழுத்து போவதும் மொங்குவதும் இலங்கையில் latest trend ஆக இருந்தது. ஆகவே இலங்கையின் சனநாயகம் பற்றி நான் எழுதவில்லை. நான் எழுதியது குறைந்த பட்சம் இந்தியா அளவுக்காவது ஜனநாயகம் வாழும் நாடொன்றில் சோறு போட்டு மதம் மாற்றுவது பற்றியே. 

2. நீங்கள் trend என்கிறீர்கள். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் இலங்கையில் உண்மையிலேயே சட்டப் படி கூட, சோற்றுக்காக அல்ல, சும்மா மதம் மாற்றுவது கூட சட்ட விரோதமே. 2003 இல் வந்த உச்ச நீதி மன்றத் தீர்ப்பு கீழே.

https://www.refworld.org/pdfid/4be3e7042.pdf 

ஒரு கத்தோலிக்க அமைப்பு ஏழைகள், அகதிகள், பாடசாலை மாணவர்கள் போன்றோருக்கு உதவி செய்யவும், கத்தோலிக்க மதத்தை பரப்பவும் என தாபிக்க பட்டது. 

தீர்ப்பின் பிரகாரம்:

1. இப்படி நலிந்தோருக்கு உதவி செய்து கூடவே மத பிரச்சாரம் செய்வது இலங்கை அரசியலமைபுக்கு முரணானது.

2. உதவி இன்றி கூட தனியே மத பிரச்சாரம் மட்டும் செய்வது கூட இலங்கை அரசிலமைப்புக்கு முரணானது, காரணம் அது பெளத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை மீறுகிறது.

ஆகவே இலங்கையில் சோறு போட்டோ, போடாமலோ மதமாற்ற பிரச்சாரம் (propagate) செய்வது அரசியலமைபுக்கு விரோதமானது.

இந்த 2003 caselaw வை மீறி வேறு caselaw அல்லது பாராளுமன்ற சட்டமூலம் வந்திராததவிடத்து, மத மாற்றம் பற்றிய இலங்கையின் சட்ட நிலமை இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

3. ஆகவே இலங்கையில் மதமாற்ற பிராசாரம் சட்ட விரோதம் என்பது தெளிவாகிறது. ஆனால் இது கத்தோலிக்க brand ambassadors ஐ அதிகம் பாதித்ததா? இல்லை. அவர்கள் வெளிபடையாக எழுத்தில் சொல்லாமல் - தமது பிராண்ட்டில் சேர்ந்தால் சோறு, நல்ல படிப்பு, குறைந்த பட்ச மரியாதை கிடைக்கிறது என செயலில் காட்டுகிறார்கள். எனவே அங்கே கூட்டம் அலை மோதுகிறது.

இந்துவாய், இருந்து மிதிபட்ட சுப்பன் கத்தோலிகனாகி, நல்ல வாழ்க்கை வாழ்வதை கண்ட இந்துவாய் இருக்கும் குப்பன், தானும் கத்தோலிக்கனாய் மாறுவோமா என சிந்திக்கிறான். ஈற்றில் மாறவும் செய்கிறான்.

சட்டப்படி எதுவும் செய்ய முடியாது. கேட்டால் பாதிரியார் அவன் எமது மதத்தின் பால் ஈர்க்கப்பட்டு தானே வந்தான் என்பார். கேஸ் குளோஸ்.

ஆகவேதான் சொல்கிறேன். 

மதம் மாறுபவனையோ, மாற்றுபவனையோ நொந்து ஒரு பலனுமில்லை.

ஒன்றில் உங்கள் மதத்தையும் அப்படி ஒரு கவர்சிகரமான பிராண்டாக மாற்றுங்கள்.

அல்லது போறவன் போ என்று விட்டு விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இது கத்தோலிக்க brand ambassadors ஐ அதிகம் பாதித்ததா? இல்லை. அவர்கள் வெளிபடையாக எழுத்தில் சொல்லாமல் - தமது பிராண்ட்டில் சேர்ந்தால் சோறு, நல்ல படிப்பு, குறைந்த பட்ச மரியாதை கிடைக்கிறது என செயலில் காட்டுகிறார்கள். எனவே அங்கே கூட்டம் அலை மோதுகிறது.

கத்தோலிக்கரிலும் பெருபான்மையான ஏழைகள், படிக்க வசதி இல்லாதவர்கள்,  கூலித் தொழிலாளிகள் இருக்கிறார்கள். நானறிந்த ஒரு கிராமத்தில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட அநேக குடும்பங்கள் கத்தோலிக்கத்தைச் சேர்ந்தவர்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

2. உதவி இன்றி கூட தனியே மத பிரச்சாரம் மட்டும் செய்வது கூட இலங்கை அரசிலமைப்புக்கு முரணானது, காரணம் அது பெளத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை மீறுகிறது.

மத பிரச்சாரம் செய்வது, இலங்கை அரசியலமைப்பிற்கு எதிரானது அல்ல.

தான் சார்ந்த மதத்தவர்களுக்கு மதப் பிரசாரம் செய்வதுகூட, மதப் பிரசாரம்தான்.

இதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை.

தான் சார்ந்த மதத்தவர்களுக்கு மதப் பிரசாரம் செய்யும்போது, பிற மதத்தவர்கள் கலந்துகொள்ளும்போதுகூட, பிரச்சனை எழாது.  

பிற மதத்தினர், புத்த மக்களாக இருந்தாலும் எந்தப் பிரச்சனையும் இல்லை.

அதை ஊதிப்பெருக்கி, புத்த பிக்குகளிடம் கொண்டு செல்லும்போதுதான், பிரச்சனை எழுகின்றது.  புத்த பிக்குகள் சொன்னால் உடனே கைது செய்வார்கள். அதன் பின், உள்ளேதான்.

14 நாள்களுக்குப்பின்தான்,  Bail.

இப்போது, புத்த மக்கள் கலந்துகொள்வதாயிருந்தால், போலீஸ் அனுமதி பெற வேண்டும்.

கிறிஸ்தவ மிஷனரிகளும் அனுமதி பெற வேண்டும்.
முஸ்லீம் அமைப்புகளும் அனுமதி பெற வேண்டும். 

ஒரு பவுத்தன்,  கிறிஸ்தவனாகவோ, முஸ்லிமாகவோ மாறுவதற்கு விரும்பினால்,  எழுத்துமூலம் அனுமதி, இன்னும் Legal formalities இருக்கிறது.  இது சிங்கள பிரதேசங்களில்.

சோற்றுப்  பொட்டலம் போன்ற Material Benefits கொடுத்து மாட்டினால்,  நீண்ட நாள்களுக்கு கம்பி எண்ண வேண்டி வரும். 

இந்தியாவிலும் இதே நிலைமைதான்.  

மத மாற்றம், ஒரு பிரச்சனையென்று ஒரு வாரத்திற்கு முன்தான், மகிந்தா எங்கேயோ Meeting ஒன்றில் சொன்னதாக எனக்கு ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

கத்தோலிக்கரிலும் பெருபான்மையான ஏழைகள், படிக்க வசதி இல்லாதவர்கள்,  கூலித் தொழிலாளிகள் இருக்கிறார்கள். நானறிந்த ஒரு கிராமத்தில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட அநேக குடும்பங்கள் கத்தோலிக்கத்தைச் சேர்ந்தவர்களே.

இதோ நல்ல சந்தர்ப்பம்,  ஓடி வாருங்கள், இவர்களை எல்லாம்இந்துக்களாக மாற்றிவிடுவோம்.

எங்கே இந்த கிராமம் என்று சொல்வீர்களா? 

38 minutes ago, கற்பகதரு said:

இதோ நல்ல சந்தர்ப்பம்,  ஓடி வாருங்கள், இவர்களை எல்லாம்இந்துக்களாக மாற்றிவிடுவோம்.

எங்கே இந்த கிராமம் என்று சொல்வீர்களா? 

ஒன்று இவர்கள் முஸ்லிம்களாக மாறுவார்கள் அல்லது பவுத்தர்களாக மாறுவார்கள் ஒழிய நிச்சயமாக இந்துவாக மாற மாடடார்கள்। அப்படி மாறினால் சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த நிலைமைதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.