Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதை நிறுத்தக்கோரி ஜனாதிபதிக்குக் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மாங்குயில் said:

ஒரு பவுத்தன்,  கிறிஸ்தவனாகவோ, முஸ்லிமாகவோ மாறுவதற்கு விரும்பினால்,  எழுத்துமூலம் அனுமதி, இன்னும் Legal formalities இருக்கிறது.  இது சிங்கள பிரதேசங்களில்.

சோற்றுப்  பொட்டலம் போன்ற Material Benefits கொடுத்து மாட்டினால்,  நீண்ட நாள்களுக்கு கம்பி எண்ண வேண்டி வரும். 

என்ன இப்படி சோற்று பொட்டலத்தோடு நிறுத்தி விட்டீர்கள்?

நான் கண்டதன்படி வீடே கட்டி கொடுக்கிறார்கள்.

  • Replies 134
  • Views 10.6k
  • Created
  • Last Reply

கோரோனா வைரஸ் இனம் மதம் சாதி நிறம் பிரதேசம் தாண்டி எல்லாரையும் வேறுபாடின்றி பீடிக்கிறது.

இதன் மூலம் மனித இனம் மதம் சாதி நிறம் பிரதேசம் தாண்டின ஒரு இனம் என்டு கோரோனா வைரஸ் மீண்டும் புரியவைத்துள்ளது.

ஆனா இந்த உண்மை விளங்காத மதவெறியர்கள், மதவெறிச் சாத்தான்கள் இன்னமும் மற்ற ஆட்களை மதம் மாத்துற பயங்கரவாதத்துல முழுமூச்சா இருக்கீனம்.

இன்னும் சொல்லபோனா கோரோனா வைரஸ் இந்த மதவெறிச் சாத்தான்களை தான் அதிகம் பாதிச்சிருக்கு.

இனியாவது புத்திவருமா தெரியாது. 

  • தொடங்கியவர்
11 hours ago, goshan_che said:

சில அவதானங்கள்

1. எனக்கு latest trend ஐ பற்றி தெரியாது. ஒரு காலத்தில் வடக்கு-கிழக்கில் இருந்து வந்த ஆள் என்றால் ஸ்டேசனுக்கு இழுத்து போவதும் மொங்குவதும் இலங்கையில் latest trend ஆக இருந்தது. ஆகவே இலங்கையின் சனநாயகம் பற்றி நான் எழுதவில்லை. நான் எழுதியது குறைந்த பட்சம் இந்தியா அளவுக்காவது ஜனநாயகம் வாழும் நாடொன்றில் சோறு போட்டு மதம் மாற்றுவது பற்றியே. 

2. நீங்கள் trend என்கிறீர்கள். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் இலங்கையில் உண்மையிலேயே சட்டப் படி கூட, சோற்றுக்காக அல்ல, சும்மா மதம் மாற்றுவது கூட சட்ட விரோதமே. 2003 இல் வந்த உச்ச நீதி மன்றத் தீர்ப்பு கீழே.

https://www.refworld.org/pdfid/4be3e7042.pdf 

ஒரு கத்தோலிக்க அமைப்பு ஏழைகள், அகதிகள், பாடசாலை மாணவர்கள் போன்றோருக்கு உதவி செய்யவும், கத்தோலிக்க மதத்தை பரப்பவும் என தாபிக்க பட்டது. 

தீர்ப்பின் பிரகாரம்:

1. இப்படி நலிந்தோருக்கு உதவி செய்து கூடவே மத பிரச்சாரம் செய்வது இலங்கை அரசியலமைபுக்கு முரணானது.

2. உதவி இன்றி கூட தனியே மத பிரச்சாரம் மட்டும் செய்வது கூட இலங்கை அரசிலமைப்புக்கு முரணானது, காரணம் அது பெளத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை மீறுகிறது.

ஆகவே இலங்கையில் சோறு போட்டோ, போடாமலோ மதமாற்ற பிரச்சாரம் (propagate) செய்வது அரசியலமைபுக்கு விரோதமானது.

இந்த 2003 caselaw வை மீறி வேறு caselaw அல்லது பாராளுமன்ற சட்டமூலம் வந்திராததவிடத்து, மத மாற்றம் பற்றிய இலங்கையின் சட்ட நிலமை இதுதான்.

நிறையவே எழுதி உள்ளீர்கள். ஆனால், இதன் சாராம்சம் : இலங்கை ஒரு புத்த நாடு, இங்கே புத்தம் தான் எல்லாமே; சட்டம் புத்தமதம் மீது செல்லாது 

இனத்திற்கும் இது பொருந்தும், மொழிக்கும் இது பொருந்தும், காணிக்கும் இது பொருந்தும்.... 

சாத்தானை வணங்கும் சில **** இங்கு சாத்தனைப்பற்றி எழுதுகிறார்கள்। இதுதான் சாத்தான் வேதம் ஓதுவது என்பது। இவர்களுக்கு இந்நேரம் கொரோன தொற்றினாலும் தொற்றி இருக்கலாம்। உங்களுக்கு தொப்பி அளவாக இருந்தால் போட்டுக்கொள்ளலாம்।

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மாங்குயில் said:

மத பிரச்சாரம் செய்வது, இலங்கை அரசியலமைப்பிற்கு எதிரானது அல்ல.

தான் சார்ந்த மதத்தவர்களுக்கு மதப் பிரசாரம் செய்வதுகூட, மதப் பிரசாரம்தான்.

இதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை.

தான் சார்ந்த மதத்தவர்களுக்கு மதப் பிரசாரம் செய்யும்போது, பிற மதத்தவர்கள் கலந்துகொள்ளும்போதுகூட, பிரச்சனை எழாது.  

பிற மதத்தினர், புத்த மக்களாக இருந்தாலும் எந்தப் பிரச்சனையும் இல்லை.

அதை ஊதிப்பெருக்கி, புத்த பிக்குகளிடம் கொண்டு செல்லும்போதுதான், பிரச்சனை எழுகின்றது.  புத்த பிக்குகள் சொன்னால் உடனே கைது செய்வார்கள். அதன் பின், உள்ளேதான்.

14 நாள்களுக்குப்பின்தான்,  Bail.

இப்போது, புத்த மக்கள் கலந்துகொள்வதாயிருந்தால், போலீஸ் அனுமதி பெற வேண்டும்.

கிறிஸ்தவ மிஷனரிகளும் அனுமதி பெற வேண்டும்.
முஸ்லீம் அமைப்புகளும் அனுமதி பெற வேண்டும். 

ஒரு பவுத்தன்,  கிறிஸ்தவனாகவோ, முஸ்லிமாகவோ மாறுவதற்கு விரும்பினால்,  எழுத்துமூலம் அனுமதி, இன்னும் Legal formalities இருக்கிறது.  இது சிங்கள பிரதேசங்களில்.

சோற்றுப்  பொட்டலம் போன்ற Material Benefits கொடுத்து மாட்டினால்,  நீண்ட நாள்களுக்கு கம்பி எண்ண வேண்டி வரும். 

இந்தியாவிலும் இதே நிலைமைதான்.  

மத மாற்றம், ஒரு பிரச்சனையென்று ஒரு வாரத்திற்கு முன்தான், மகிந்தா எங்கேயோ Meeting ஒன்றில் சொன்னதாக எனக்கு ஞாபகம்.

நான் மேலே தந்த லிங்கில் போய் வாசித்தீர்களா? போதுமான சட்ட விளக்கமும், இந்திய இலங்கை அரசியலமைப்பு இடையான வேறுபாடும் அதில் விளக்கப் பட்டுள்ளது.

இலங்கையில் அரசியலமைப்பு ஒருவர் தன் மதத்தை propagate பண்ணும் உரிமையை கொடுக்கவில்லை. ஆனால் இந்திய அரசியலமைப்பு இதை கொடுக்கிறது.

தவிர இலங்கையின் அரசியலமைப்பு பெளத்ததுக்கு கொடுக்கும் முன்னுரிமையையும் propagation கெடுப்பதால் அதற்கு அனுமதியில்லை.

ஆனால் சுபிசேச கூட்டங்கள் ஆராதனை ஜெபங்கள் போடலாம் அதில் வேற்று மதத்தினரும் கலந்து கொள்ளலாம். அதே போல் ஒருவர் தன் மதமே உயர்ந்தது என பொது வெளியில் சொல்லவும் தடை இல்லை.

நான் நினைக்கிறேன் தமிழில் நாங்கள் எல்லாவற்றையும் “மத பிரச்சாரம்” என்ற பொதுமையில் அடைப்பதால்தான் இந்த கொன்பியூசன் வருகிறது.

12 hours ago, satan said:

கத்தோலிக்கரிலும் பெருபான்மையான ஏழைகள், படிக்க வசதி இல்லாதவர்கள்,  கூலித் தொழிலாளிகள் இருக்கிறார்கள். நானறிந்த ஒரு கிராமத்தில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட அநேக குடும்பங்கள் கத்தோலிக்கத்தைச் சேர்ந்தவர்களே.

உண்மை. ஆனால் அவர்களுக்கு கிள்ளியும் புதிதாய் வருபவர்கு அள்ளியும் கொடுக்கிறார்கள் brand ambassords.

1 hour ago, ampanai said:

நிறையவே எழுதி உள்ளீர்கள். ஆனால், இதன் சாராம்சம் : இலங்கை ஒரு புத்த நாடு, இங்கே புத்தம் தான் எல்லாமே; சட்டம் புத்தமதம் மீது செல்லாது 

இனத்திற்கும் இது பொருந்தும், மொழிக்கும் இது பொருந்தும், காணிக்கும் இது பொருந்தும்.... 

இது வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யும் போதே பல தமிழர்களுக்கு விளங்கிய விடயம். ஆனால் இதுதான் யதார்தம்.

சட்டம் பெளத்தம் மீது செல்லாது என்பதல்ல.

பெளத்ததிற்கு கீழேதான் சட்டமே. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, goshan_che said:

நான் மேலே தந்த லிங்கில் போய் வாசித்தீர்களா? போதுமான சட்ட விளக்கமும், இந்திய இலங்கை அரசியலமைப்பு இடையான வேறுபாடும் அதில் விளக்கப் பட்டுள்ளது.

இலங்கையில் அரசியலமைப்பு ஒருவர் தன் மதத்தை propagate பண்ணும் உரிமையை கொடுக்கவில்லை. ஆனால் இந்திய அரசியலமைப்பு இதை கொடுக்கிறது.

தவிர இலங்கையின் அரசியலமைப்பு பெளத்ததுக்கு கொடுக்கும் முன்னுரிமையையும் propagation கெடுப்பதால் அதற்கு அனுமதியில்லை.

இலங்கையின் அரசவாக்க சட்டமைப்பு, ஒரு தனி மனிதனுக்கு தன் மதத்தின்படி  வாழ, பிறருக்கு பிரேரிக்க, போதிக்க இடம் அளிக்கிறது. 

லிங்குகளை வாசிப்பதை விட்டு விட்டு, சட்டப்  புத்தகத்தை எடுத்துக் படியுங்கள்.

 புத்த மதத்திற்கு முன்னுரிமை இருப்பதால், பிற மதங்களை சார்ந்தவர்கள் தன் மதத்தை பிறருக்கு ஏத்தி வைக்கும் உரிமையை இலங்கையின் அரசியலமைப்பு ஒருபோதும் தடுக்கவில்லை.

இன்றும், பிற மதத்தினர் தங்களது மதங்களை போதித்துக்கொண்டிருப்பதை, நடைமுறையில் காண்கிறோம்.

புத்த மதத்தினர், பிற மதங்களுக்குத் தாவுவது இப்பொழுது இலங்கையில் நடைபெறுகிறது.  அதைத் தடுப்பதற்கு,  பிற மதங்களின் போதகர்களின்மேல் ஒரு கண் வைத்திருக்கிறது இலங்கை அரசு.  

அதன் ஒரு படிதான், போலீஸ் அனுமதி. 

நட்சத்திர ஹோட்டல்களில்கூட, முஸ்லீம் கிறிஸ்தவப் பிரச்சாரம் நடக்கிறது, கொழும்பில். 

புத்த மக்களும் வந்து கலந்து கொள்கிறார்கள்.

இலங்கை அரசியலமைப்பு தடையென்றால், இதையும் தடை செய்யும். 

ஆக, நீங்கள் சொல்வதுபோல் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Rajesh said:

கோரோனா வைரஸ் இனம் மதம் சாதி நிறம் பிரதேசம் தாண்டி எல்லாரையும் வேறுபாடின்றி பீடிக்கிறது.

இதன் மூலம் மனித இனம் மதம் சாதி நிறம் பிரதேசம் தாண்டின ஒரு இனம் என்டு கோரோனா வைரஸ் மீண்டும் புரியவைத்துள்ளது.

ஆனா இந்த உண்மை விளங்காத மதவெறியர்கள், மதவெறிச் சாத்தான்கள் இன்னமும் மற்ற ஆட்களை மதம் மாத்துற பயங்கரவாதத்துல முழுமூச்சா இருக்கீனம்.

இன்னும் சொல்லபோனா கோரோனா வைரஸ் இந்த மதவெறிச் சாத்தான்களை தான் அதிகம் பாதிச்சிருக்கு.

இனியாவது புத்திவருமா தெரியாது. 

அப்படியா,  சொல்லவேயில்ல ..😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

ஆனால் சுபிசேச கூட்டங்கள் ஆராதனை ஜெபங்கள் போடலாம் அதில் வேற்று மதத்தினரும் கலந்து கொள்ளலாம தடை இல்லை.

கிறிஸ்தவர்கள், சுசேஷ கூட்டங்கள், ஆராதனைகளை சொல்லித்தான், பிற மதத்தினரை அழைப்பார்கள்.

முஸ்லிம்கள், பிற மதத்தினருக்கு விஷேடமாக வகுப்புக்களை நடத்துகிறார்கள்.

இலங்கை   அரசியலமைப்பு,  ஒருவர் தன் மதத்தை propagate பண்ணும் உரிமையை கொடுக்கவில்லை என்றால், மேற்குறிப்பிட்ட பிரசாரங்களையும் தடுத்திருக்க வேண்டும்.

ஆனால், அப்படி இல்லை.

அதே போல் ஒருவர் தன் மதமே உயர்ந்தது என பொது வெளியில் சொல்லவும் தடை இல்லை என்றால், இலங்கை அரசியலமைப்பு அதற்கும் இடம் கொடுத்திருக்கிறது என்றுதானே பொருள்.

மேலும், ஒருவர் தன் மதமே உயர்ந்தது என்று சொல்லலாம்.

ஆனால்,  தன் மதம், புத்த மதத்தைவிட உயர்ந்தது என்று compare பண்ணும்போது ஏற்படும் விபரீதங்களை இலங்கையில் எதிர்நோக்க வேண்டி வரும்.

வெளிநாடு ஒன்றில் இருந்து வந்த ஒரு புத்த பெண், பவுத்த மதத்தையும் இன்னொரு மதத்தையும் compare பண்ணி எழுதி புத்தகமாக பிரிண்ட் செய்யும்போது, போலீசில் பிடிபட்டு ஒரு மாத காலம் உள்ளே இருந்தார் -  இது மகிந்தாவின் காலத்தில்.

ஆக, புத்த மதத்தை இழுக்காமல், தன் மதத்தை பிரசாரம் செய்ய இலங்கையில் எல்லாருக்கும் உரிமை இருக்கிறது.  அரசியலமைப்பில் தடை இல்லை.

Edited by மாங்குயில்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:

இலங்கையின் அரசவாக்க சட்டமைப்பு, ஒரு தனி மனிதனுக்கு தன் மதத்தின்படி  வாழ, பிறருக்கு பிரேரிக்க, போதிக்க இடம் அளிக்கிறது. 

லிங்குகளை வாசிப்பதை விட்டு விட்டு, சட்டப்  புத்தகத்தை எடுத்துக் படியுங்கள்.

 புத்த மதத்திற்கு முன்னுரிமை இருப்பதால், பிற மதங்களை சார்ந்தவர்கள் தன் மதத்தை பிறருக்கு ஏத்தி வைக்கும் உரிமையை இலங்கையின் அரசியலமைப்பு ஒருபோதும் தடுக்கவில்லை.

இன்றும், பிற மதத்தினர் தங்களது மதங்களை போதித்துக்கொண்டிருப்பதை, நடைமுறையில் காண்கிறோம்.

புத்த மதத்தினர், பிற மதங்களுக்குத் தாவுவது இப்பொழுது இலங்கையில் நடைபெறுகிறது.  அதைத் தடுப்பதற்கு,  பிற மதங்களின் போதகர்களின்மேல் ஒரு கண் வைத்திருக்கிறது இலங்கை அரசு.  

அதன் ஒரு படிதான், போலீஸ் அனுமதி. 

நட்சத்திர ஹோட்டல்களில்கூட, முஸ்லீம் கிறிஸ்தவப் பிரச்சாரம் நடக்கிறது, கொழும்பில். 

புத்த மக்களும் வந்து கலந்து கொள்கிறார்கள்.

இலங்கை அரசியலமைப்பு தடையென்றால், இதையும் தடை செய்யும். 

ஆக, நீங்கள் சொல்வதுபோல் இல்லை.

மாங்குயில்,

நான் தந்தது ஏதோ லிங் அல்ல. இலங்கையின் சுப்ரீம் கோர்ட்டின் caselaw.  caselaw என்பதன் அர்த்தம் வழக்குச்-சட்டம்.

சட்டம் ஒன்றில் சட்டமூலத்தில் (acts of parliament), இருக்கும் அல்லது Caselaw வில் இருக்கும். இலங்கை அரசியலமைப்பை வியாக்கியானம் செய்ய, இலங்கை உச்சநீதி மன்றிற்கு மட்டுமே அதிகாரமுண்டு. சட்ட புத்தகம் இதை கொப்பி அடிக்குமே ஒழிய வேறில்லை.

நான் மேலே தந்திருப்பது இலங்கையின் இது சம்பந்தமான சட்ட நிலை என்ன என்பதை இலங்கை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திய caselaw. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் சகதிக்குள் தத்தளிப்பதுபோல 
மற்றவரும் அதுக்குள் கிடந்து நாறவேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். 

மனிதனின்  அறிவு வளர்ச்சியை யாராலும் நிறுத்த முடியாது 
அறிவுள்ள மனிதர்கள் ஓரிடத்தில் இருக்க வேண்டும் என்றால் 
அந்த இடம் மனிதர்கள் வாழுவத்துக்கு உகந்ததாக இருக்கவேண்டும் 

இல்லையேல் வாழ்வத்துக்கு உகந்த இடம் நோக்கி மனிதர்கள் நகுருவதை 
யாராலும் தடுக்க முடியாது. 

மனிதனின் ஆறாம் அறிவு  ஏன்? எதுக்கு? எப்படி?
என்று கேட்டுக்கொண்டே இருக்கும் 
ஆறாம் அறிவை அடகு வைத்ததவர்கள் ... 
சாக்கடைக்குள் கிடந்து நாறுவதை தவிர வேறு வழி  இல்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

மாங்குயில்,

நான் தந்தது ஏதோ லிங் அல்ல. இலங்கையின் சுப்ரீம் கோர்ட்டின் caselaw.  caselaw என்பதன் அர்த்தம் வழக்குச்-சட்டம்.

சட்டம் ஒன்றில் சட்டமூலத்தில் (acts of parliament), இருக்கும் அல்லது Caselaw வில் இருக்கும். இலங்கை அரசியலமைப்பை வியாக்கியானம் செய்ய, இலங்கை உச்சநீதி மன்றிற்கு மட்டுமே அதிகாரமுண்டு. சட்ட புத்தகம் இதை கொப்பி அடிக்குமே ஒழிய வேறில்லை.

நான் மேலே தந்திருப்பது இலங்கையின் இது சம்பந்தமான சட்ட நிலை என்ன என்பதை இலங்கை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திய caselaw. 

Case Law என்பது,  Judicial decisions.

இலங்கை அரசியலமைப்பில், ஒருவரது மதத்தைப் பரப்புவதற்கு பூரண உரிமை இருக்கிறது. 

இலங்கையில் உள்ள நடைமுறையில் உள்ளதை ஏற்கனவே சொன்னேன். 

இலங்கை அரசியலமைப்பில், ஒருவரது மதத்தைப் பரப்புவதற்கு பூரண உரிமை இலங்கை அரசிலமைப்பில் மறுக்கப்பட்டிருந்தால், இப்போது இலங்கையில் காணப்படும் மதப் பிரச்சாரங்கள் நடைமுறையில் அறவே இருக்காது.

Case Law,  அரசியலமைப்பில் பெரிதாக தாக்கம் செலுத்தாது.

Case Law விற்கும்,  exceptions இருக்கிறது. 

அதற்குத்தான், சட்டப் புத்தகத்தைப் படிக்கச் சொன்னேன்.

Edited by மாங்குயில்

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, மாங்குயில் said:

கிறிஸ்தவர்கள், சுசேஷ கூட்டங்கள், ஆராதனைகளை சொல்லித்தான், பிற மதத்தினரை அழைப்பார்கள்.

முஸ்லிம்கள், பிற மதத்தினருக்கு விஷேடமாக வகுப்புக்களை நடத்துகிறார்கள்.

இலங்கை   அரசியலமைப்பு,  ஒருவர் தன் மதத்தை propagate பண்ணும் உரிமையை கொடுக்கவில்லை என்றால், மேற்குறிப்பிட்ட பிரசாரங்களையும் தடுத்திருக்க வேண்டும்.

ஆனால், அப்படி இல்லை.

அதே போல் ஒருவர் தன் மதமே உயர்ந்தது என பொது வெளியில் சொல்லவும் தடை இல்லை என்றால், இலங்கை அரசியலமைப்பு அதற்கும் இடம் கொடுத்திருக்கிறது என்றுதானே பொருள்.

மேலும், ஒருவர் தன் மதமே உயர்ந்தது என்று சொல்லலாம்.

ஆனால்,  தன் மதம், புத்த மதத்தைவிட உயர்ந்தது என்று compare பண்ணும்போது ஏற்படும் விபரீதங்களை இலங்கையில் எதிர்நோக்க வேண்டி வரும்.

வெளிநாடு ஒன்றில் இருந்து வந்த ஒரு புத்த பெண், பவுத்த மதத்தையும் இன்னொரு மதத்தையும் compare பண்ணி எழுதி புத்தகமாக பிரிண்ட் செய்யும்போது, போலீசில் பிடிபட்டு ஒரு மாத காலம் உள்ளே இருந்தார் -  இது மகிந்தாவின் காலத்தில்.

ஆக, புத்த மதத்தை இழுக்காமல், தன் மதத்தை பிரசாரம் செய்ய இலங்கையில் எல்லாருக்கும் உரிமை இருக்கிறது.  அரசியலமைப்பில் தடை இல்லை.

நடைமுறையில் propagate பண்னுவதை யாரும் சட்டை செய்யாமல் இருக்கலாம் -ஆனால் சட்டம் அதை தடை செய்கிறது என்பதுதான் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

நடைமுறையில் propagate பண்னுவதை யாரும் சட்டை செய்யாமல் இருக்கலாம் -ஆனால் சட்டம் அதை தடை செய்கிறது என்பதுதான் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு.

இலங்கையின் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு தடை செய்யவில்லை.

அப்படி தடைசெய்திருந்தால், அரசு போலீசிற்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கும். 

அவர்களும், அந்தத் தடையை உறுதி செய்வார்கள்.

ஆனால், நடைமுறையில் அப்படியான தடை இல்லை.

மேலும், வெளிநாடுகளில் இருந்துகூட மதபோதகர் வந்து, பிரச்சாரம் செய்கிறார்கள்.

அவர்களுக்கு, இலங்கையில் நுழைவதற்கான விசா கூட, வழங்கப்படுகிறது.

அவர்கள் tourist விசாவில் வந்து, பிரச்சாரம் செய்வதில்லை.

ஆக, அவர்களுக்கு விசா வழங்குவதுகூட, இலங்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று சொல்கிறீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மாங்குயில் said:

Case Law என்பது,  Judicial decisions.

இலங்கை அரசியலமைப்பில், ஒருவரது மதத்தைப் பரப்புவதற்கு பூரண உரிமை இருக்கிறது. 

இலங்கையில் உள்ள நடைமுறையில் உள்ளதை ஏற்கனவே சொன்னேன். 

இலங்கை அரசியலமைப்பில், ஒருவரது மதத்தைப் பரப்புவதற்கு பூரண உரிமை இலங்கை அரசிலமைப்பில் மறுக்கப்பட்டிருந்தால், இப்போது இலங்கையில் காணப்படும் மதப் பிரச்சாரங்கள் நடைமுறையில் அறவே இருக்காது.

Case Law,  அரசியலமைப்பில் பெரிதாக தாக்கம் செலுத்தாது.

Case Law விற்கும்,  exceptions இருக்கிறது. 

அதற்குத்தான், சட்டப் புத்தகத்தைப் படிக்கச் சொன்னேன்.

உங்களுக்கும் சட்டத்துக்குமான தொடர்பு பற்றி எனக்குத் தெரியாது.

ஆனால் நான் இள, முதுமானி வரைக்கும் சட்டம் படித்திருப்பதால் அதை பற்றி கொஞ்சம் அறிவை வளர்த்துக் வைத்துள்ளேன்😂.

Supreme Court’s  Caselaw தான் அரசியலமைபுக்கு வியாக்கியானம் கொடுக்கும். இங்கே நான் குறிபிட்ட வழக்கில் கூட அரசியலமைப்பு என்ன சொல்கிறது என்பதை சுப்ரீம் கோட் விளக்கி கொடுத்த தீர்ப்பே caselaw ஆகியுள்ளது.
 
பிகு: நமக்கிடையான ஏனைய விவாதங்கள் போல் இதுவும் தலைப்பை விட்டு போவதால். 

நன்றி வணக்கம்.

3 minutes ago, மாங்குயில் said:

இலங்கையின் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு தடை செய்யவில்லை.

அப்படி தடைசெய்திருந்தால், அரசு போலீசிற்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கும். 

அவர்களும், அந்தத் தடையை உறுதி செய்வார்கள்.

ஆனால், நடைமுறையில் அப்படியான தடை இல்லை.

மேலும், வெளிநாடுகளில் இருந்துகூட மதபோதகர் வந்து, பிரச்சாரம் செய்கிறார்கள்.

அவர்களுக்கு, இலங்கையில் நுழைவதற்கான விசா கூட, வழங்கப்படுகிறது.

அவர்கள் tourist விசாவில் வந்து, பிரச்சாரம் செய்வதில்லை.

ஆக, அவர்களுக்கு விசா வழங்குவதுகூட, இலங்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று சொல்கிறீர்களா? 

சுப்ரீம் கோர்ட் சொன்னதுதான் சட்டம்.

நடைமுறையில் அதை செயல்படுத்தவில்லை என்பதற்க்கா, காத்தான் குடி ஓ ஐ சி நடக்கும் முறைதான் சட்டம் என்றாகாதே?

மத போதகருக்கு தம் மத நடவைக்கையில் ஈடுபடத்தான் வீசா கொடுக்கப்படுகிறது. Propagate பண்ண அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

large.320A2490-865B-4383-847A-18393E8BCDD8.jpeg.b955d17b60a585b4d6b1bc20a0df2d14.jpeg

நான் முன்பே சொன்னது போல.

பணம், உணவு இதர சலுகைகளை கொடுத்து மதம் மாற்றுவது தவறு என்ற 1ம் தீர்ப்பு

மற்றும் பெளத்தம் தவிர் ஏனைய மதங்களை propagate பண்ணுவது சட்ட விரோதம் என்ற ரெண்டாம் தீர்ப்பும். (மேலேயும் கீழேயும்).

large.BE532DAE-1BB8-425C-A0BC-B20057D3EC7D.jpeg.b83098024b4e0ec5d0c63b543a009d37.jpeg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, goshan_che said:

மத போதகருக்கு தம் மத நடவைக்கையில் ஈடுபடத்தான் வீசா கொடுக்கப்படுகிறது. Propagate பண்ண அல்ல.

Propagate பண்ணுவது, மத நடவடிக்கையில் ஓர் அங்கம்தான். 

அதற்கு, இலங்கையின்  உச்ச நீதிமன்றமோ, அரசியலமைப்போ தடையில்லை.

போலீசும் ஒன்றும் செய்யாது. 

வேண்டுமானால், ஒரு சில பிக்கு கூட்டங்கள் தான்தோன்றித்தனமாக செயல்பாட்டாலேயொழிய.

  • கருத்துக்கள உறவுகள்

இது இலங்கையின் அரசியலமைப்பு.

http://www.parliament.lk/files/pdf/constitution.pdf

பிகு: நாதமுனி சொன்னது போல, இந்த திரியில் நான் criminal waste of time செய்துவிட்டேன். 

ஆக கடைசியாக ஒரு தரம். 

நன்றி. வணக்கம்😂

1 minute ago, மாங்குயில் said:

Propagate பண்ணுவது, மத நடவடிக்கையில் ஓர் அங்கம்தான். 

அதற்கு, இலங்கையின்  உச்ச நீதிமன்றமோ, அரசியலமைப்போ தடையில்லை.

போலீசும் ஒன்றும் செய்யாது. 

வேண்டுமானால், ஒரு சில பிக்கு கூட்டங்கள் தான்தோன்றித்தனமாக செயல்பாட்டாலேயொழிய.

நிச்சயமாக இலங்கை சட்டத்தில் பெளத்தம் தவிர் ஏனைய மதங்களை propagate பண்ணுவது, அரசியலமைப்பின் 9 ம் சரத்துக்கு முரணானது என்பது சுப்ரீம் கோர்டு சொல்லியது. இதற்கு போதுமான ஆதரம் தரப்பட்டுள்ளது.

நடைமுறையும் இதுக்கு மாறு பட்டு இருக்கலாம். 

இல்லை சுப்ரீம் கோர்ட்டெல்லாம் சும்மா, நாம் யாழில் வந்து எழுதுவதுதான் இலங்கை சட்டம் என்றாலும் ஓகேதான். 

காசா, பணமா 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, goshan_che said:

large.320A2490-865B-4383-847A-18393E8BCDD8.jpeg.b955d17b60a585b4d6b1bc20a0df2d14.jpeg

நான் முன்பே சொன்னது போல.

பணம், உணவு இதர சலுகைகளை கொடுத்து மதம் மாற்றுவது தவறு என்ற 1ம் தீர்ப்பு

மற்றும் பெளத்தம் தவிர் ஏனைய மதங்களை propagate பண்ணுவது சட்ட விரோதம் என்ற ரெண்டாம் தீர்ப்பும். (மேலேயும் கீழேயும்).

பணம், உணவு இதர சலுகைகளை கொடுத்து மதம் மாற்றுவது தவறு தானே!

இது யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

7 minutes ago, goshan_che said:

நிச்சயமாக இலங்கை சட்டத்தில் பெளத்தம் தவிர் ஏனைய மதங்களை propagate பண்ணுவது, அரசியலமைப்பின் 9 ம் சரத்துக்கு முரணானது என்பது சுப்ரீம் கோர்டு சொல்லியது. இதற்கு போதுமான ஆதரம் தரப்பட்டுள்ளது.

நடைமுறையும் இதுக்கு மாறு பட்டு இருக்கலாம். 

அரசியலமைப்பு 9 ஆம் சரத்து என்ன சொல்கிறது?

அது எப்போது வெளியாகியது?

அதற்கான Amendments இல்லையா?

Exceptions இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Brother Goshan, 

Articles 10 and 14(1)(e) state: "Every person is entitled to freedom of thought, conscience and religion, including the freedom to have or to adopt a religion or belief of his choice." and "Every citizen is entitled to the freedom, either by himself or in association with others, and either in public or in private, to manifest his religion or belief in worship, observance, practice or teaching.".

மேற்படி சட்டத்தில், ஒரு மதத்தைப் போதிக்க இருக்கும் உரிமை பற்றிச் சொல்கிறது.

தடை இல்லை.

ஆனால் நீங்களோ, பெளத்தம் தவிர் ஏனைய மதங்களை propagate பண்ணுவது, அரசியலமைப்பின் 9 ம் சரத்துக்கு முரணானது என்று சொல்கிறீர்கள்.

நீங்கள் சொல்லும் விதத்தில், 9 ஆம் சரத்து அப்படி சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, மாங்குயில் said:

1. நீங்கள் போல்ட் செய்துள்ள பந்தி தனியாகவோ கூட்டகவோ மத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமையை மட்டுமே வழங்குகிறது. இதில் propagate அல்லது அதற்கு நிகரான சொல் பாவிக்கப் படவில்லை.

இதை இந்திய அரசியலமைப்போடு contrast பண்ணி பாருங்கள்.

Article 25(1) of the Constitution says “all persons,” not just Indian citizens, are equally entitled to the freedom of conscience and the right to profess, practise and propagate religion freely.

இலங்கையில் அவரவர் தனியாகவோ கூட்டாகவோ தத்தம் மத நடவடிக்கையில் ஈடுபட அனுமதி உண்டு. அந்த நடவடிக்கையில் வேற்று மதத்தவர் கலந்து கொள்ளவும் முடியும். அதன் பின் சுய விருப்பில் அவர்கள் மதம் மாறவும் முடியும் ( இந்த loophole ஐயே மதம் மாற்றுபவர்கள்ப்பாவிக்கிறார்கள்- நீங்கள் சொன்ன நடைமுறை வழக்கம்). 

ஆனால் propagate பண்ண முடியாது. 

2. உங்களின் அடுத்த கேள்வி சரத்து 10- ற்கும்- சரத்து 9 ற்குமான தொடர்பு பற்றியது. 9 பெளத்த சாசனத்தின் மேலாண்மையை நிறுவுகிறது. 10 அவரவர் மத சுதந்திரத்தை உறுதி செய்கிறது. நீங்கள் கேட்ட கேள்விக்கான விளக்கம் நான் மேலே தந்த caselaw வில் உள்ளது. 

குறித்த பந்தியை கீழே இணக்கிறேன். இதில் தெளிவாக ஏன் propagation (with or without material inducement) சரத்து 9 க்கு முரணானது என சொல்லப் பட்டிருக்கிறது.

large.491AF94F-67D7-43DB-BA1E-87AD6195BB99.jpeg.55a499d2836ab95974a3fe79873d6e23.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கற்பகதரு said:

ம்.... எப்படி, எப்படி? எப்படி என்னை நீங்கள் அப்படி வேலை செய்ய சொல்லி நிர்ப்பந்திக்கலாம்? சோத்து பொட்டலமாகட்டும், பணமாகட்டும், விரும்பினால் தாருங்கள், விருப்பம் இல்லாவிட்டால் விடுங்கள். அதை  விட்டுவிட்டு, என்னை வேலை செய்ய சொல்லி நிர்ப்பந்திக்க எப்படி உங்களுக்கு உரிமை வந்தது?  ஓ... பார்க்க பஞ்சப் பரதேசியாக தெரிவதால் அடிமையாக்க பார்க்கிறீர்களா? நான் உங்கள் அடிமை இல்லை. இனியும் “கீழ் சாதி” என்று சொல்லி இந்த அடிமை வாழ்க்கை வாழ வைக்கலாம் என்று நினைக்காதீர்கள். கார்ள் மார்க்ஸில் தொடங்கி, பெரியார் வழி வந்து, ஷே குவராவில் இறங்கி, அண்ணன் சீமானில் ஏறி இருக்கும் எங்கள் வறுமையை பயன்படுத்தி பணத்தையும் சோற்று பொட்டலத்தையும் காட்டி அடிமையாக்க நினைக்காதீர்கள். இனி அது நடக்காது.

நிலபுலம் உள்ள நீங்கள் எல்லாம் எங்களை வருத்தி வேலை வாங்கிக்கொண்டு சும்மா இருந்து சாப்பிடலாம், நாங்கள் பரம்பரை பரம்பரையாக உங்களுக்கு கழுவித்துடைக்க வேண்டும், அப்படியா? இனி அது நடக்காது. 

நான் இன்றுடன் குடும்பத்தையும் கூட்டிக் கொண்டு அப்போஸ்தலிக்க சபைக்கு போய் உங்களை போல சும்மா இருந்து சாப்பிட போகிறேன்.

முருகனுக்கு அல்லேலூயா! 😃

ஆவிக்கு அரோகரா🦇

கற்பகதருவுக்கு அல்லேலூயா 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

1. நீங்கள் போல்ட் செய்துள்ள பந்தி தனியாகவோ கூட்டகவோ மத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமையை மட்டுமே வழங்குகிறது. இதில் propagate அல்லது அதற்கு நிகரான சொல் பாவிக்கப் படவில்லை.

 "Every citizen is entitled to the freedom, either by himself or in association with others, and either in public or in private, to manifest his religion or belief in worship, observance, practice or teaching."

இங்கே Teaching என்ற சொல் எழுத்தில் இருக்கிறது.

Propagate என்ற சொல்லும்,  Teaching என்ற சொல்லும், ஏறக்குறைய ஒரே அர்த்தத்தை கொண்ட சொல்தான்.

ஆக, இலங்கை அரசியலமைப்பு, பிற மத பிரசாரத்திற்கு விரோதமாக இல்லை.

நான்கூட, கிறிஸ்தவ சபைகளில் போய் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இதில் எல்லா மதத்தவர்களும் கலந்து கொள்வார்கள்.

அதேபோல, முஸ்லீம் அமைப்புக்கள் சிங்கள மொழிமூலம் நடத்தும் கருத்தரங்குகள் போன்றவற்றில் அநேகமான பவுத்த சிங்களவர்களும் கலந்து கொள்கிறார்கள். 

இலங்கை அரசியலமைப்பில், பிற மதப் பிரசாரம் இடமில்லை என்றிருந்தால், இப்படியான கூட்டங்கள் நடக்க வாய்ப்பில்லை.

 இலங்கை சட்டத்தில் பெளத்தம் தவிர் ஏனைய மதங்களை propagate பண்ணுவது, அரசியலமைப்பின் 9 ம் சரத்துக்கு முரணானது என்று எங்கும் சொல்லவில்லை.

Edited by மாங்குயில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

குறித்த பந்தியை கீழே இணக்கிறேன். இதில் தெளிவாக ஏன் propagation (with or without material inducement) சரத்து 9 க்கு முரணானது என சொல்லப் பட்டிருக்கிறது.

large.491AF94F-67D7-43DB-BA1E-87AD6195BB99.jpeg.55a499d2836ab95974a3fe79873d6e23.jpeg

propagation (with or without material inducement)  -  இது தவறானது என்று சிறுபிள்ளைக்கும் தெரியும்தானே!

 நீங்கள் சொல்லும்  
இலங்கை சட்டத்தில் பெளத்தம் தவிர் ஏனைய மதங்களை propagate பண்ணுவது, அரசியலமைப்பின் 9 ம் சரத்துக்கு முரணானது என்று எங்கும் சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

இலங்கையில் அவரவர் தனியாகவோ கூட்டாகவோ தத்தம் மத நடவடிக்கையில் ஈடுபட அனுமதி உண்டு. அந்த நடவடிக்கையில் வேற்று மதத்தவர் கலந்து கொள்ளவும் முடியும். அதன் பின் சுய விருப்பில் அவர்கள் மதம் மாறவும் முடியும் ( இந்த loophole ஐயே மதம் மாற்றுபவர்கள்ப்பாவிக்கிறார்கள்- நீங்கள் சொன்ன நடைமுறை வழக்கம்). 

ஆனால் propagate பண்ண முடியாது. 

இலங்கையில் அவரவர் தனியாகவோ கூட்டாகவோ தத்தம் மத நடவடிக்கையில் ஈடுபட அனுமதி உண்டு.

அதேபோல், தனது மதத்தை பிற மதத்தினருக்கு சொல்லவும் போதிக்கவும் இலங்கையில் தடை இல்லை.

தன் மதத்திற்கு வரும்படி வற்புறுத்த முடியாது.  Materials Benefits கொடுத்து, தனது மதத்திற்கு வரும்படி சொல்லவும் சட்டத்தில் இடமில்லை.

புத்த மதம் தவிர்ந்த ஏனைய மதங்களை பிரசாரம் செய்ய இலங்கை அரசியலமைப்பு இடம் கொடுக்காவிட்டால், ஏன் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு மதத்திற்கும் முதுமாணிப் பட்டம் வரை கற்க, கற்கை நெறிகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தனியார் ஒலிபரப்பு நிலையங்கள்  போன்றவை, தத்தமது மதப் பிரசாரத்திற்காக நேரம் ஒதுக்கிக் கொடுக்கிறது. 

தொலைக்காட்சி சேனல்களும், பிற மதங்களுக்கான பிரசார மேடைகளாக மாறிவிட்டன.

இலங்கை அரசியலமைப்பு, பிற மதங்களின் பிரசாரத்திற்கு ஒரு வகையில் உதவி செய்கின்றது.  தடை செய்யவில்லை.

இலங்கையில் எல்லா மாணவர்களும், தனது மதம் மட்டுமல்லாமல், ஏனைய மதங்களையும் படிக்க வேண்டும் என்று சொல்கிறது. அதாவது, பிற மதங்களைப்பற்றி Basic Knowledge ஆவது தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறது அரசு. 

இலங்கை அரசியலமைப்பில், பிற மதங்களுக்கான பிரசாரம் தடையென்றிருந்தால்,  அரசே நின்று மேற்படி நடவடிக்கைகளை நிறுத்தி இருக்கும்.

பவுத்த மேலாண்மை இலங்கையில் வேரூன்றி இருப்பதற்காக, பிற மத பிரசாரங்கள் தடை செய்யப்பட்டவையாக  இல்லை.

புத்த பிக்குகளுக்கு கூட, நான் போதித்திருக்கிறேன். அவர்களின் போதனைகளைக்கூட நான் கேட்டிருக்கிறேன்.

இவை அன்றாடம் நாம் இலங்கையில் ஒவ்வொரு மதத்தவருக்கிடையில் காணும் சமயம் சார்ந்த பரிமாற்றங்கள், பிரசாரங்கள்.

பிற மதத்தினருக்கு போதிக்க, இலங்கை அரசியலமைப்பில் எந்த தடையுமில்லை.

Edited by மாங்குயில்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:

propagation (with or without material inducement)  -  இது தவறானது என்று சிறுபிள்ளைக்கும் தெரியும்தானே!

 நீங்கள் சொல்லும்  
இலங்கை சட்டத்தில் பெளத்தம் தவிர் ஏனைய மதங்களை propagate பண்ணுவது, அரசியலமைப்பின் 9 ம் சரத்துக்கு முரணானது என்று எங்கும் சொல்லவில்லை.

கடைசி பந்தியின் முடிவில் எழுதி இருக்கு பாருங்கோ. Similarly when there is no fundamental right to propagate,  if efforts are taken to convert another person to one’s own religion such conduct could hinder the very existence of Buddda Sasana. What is guaranteed under the constitution is the manifestation, observance and practice of one’s own religion and the propagation and spreading Christianity as postulated in terms of clause 3 would not be permissible as it would impair the very existence of Buddhism or Buddha Sassana
 
இதன் தமிழாக்கம்

மதபோதனை செய்வது ஒரு அடிப்படை உரிமை என ஏற்கப்படாத பட்சத்தில், ஒருவர் தன் மதத்தை இன்னொருவருக்கு போதிக்க முயற்சி எடுத்தால், அப்படியான முயற்சி பெளத்த சாசனத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்க கூடும். 

அரசியலமைப்பு ஒருவரின் மதத்தை நிறுவி, கடைபிடித்து, பின்பற்ற மட்டுமே உத்தரவாதம் தருகிறதே அன்றி, 3ம் குறிப்பில் குறிபிட்ட வகையில் கிறீஸ்தவத்தை பிரச்சாரிப்பதோ, பரப்புவதோ அரசியலமைபுக்கு அமைவானது அல்ல என்பது மட்டுமின்றி இன் நடவடிக்கைகள் பெளத்தம், பெளத்த சாசனத்தின் இருப்பையே குலைக்கும்.

பிகு: 1. தீர்ப்பின் முன் பகுதியில் சரத்து 10 ஐ ஆராய்ந்து propagate பண்ணுவது ஒரு அடிப்படை உரிமை அல்ல என ஏலவே நீதிமன்று தீர்மானித்திருந்தது. Teaching என்ற சொல் கற்பித்தல் propagate என்றால் பிரச்சாரம் செய்தல். இரெண்டுக்கும் வித்தியாசம் உண்டு என்பது என் கருத்து. எது எப்படியாயினும், இந்த விளக்கத்தை கோட்டு ஏற்கவில்லை. பந்தியின் ஆரம்பத்திலேயே As referred to earlier the constitution does not recognize a fundeental right to propagate a religion என குறிபிட்டே இந்த பந்தி ஆரம்பிக்கிறது. இதன் தமிழாக்கம் ஏலவே கண்டது போல, ஒரு மதத்தை propagate பண்ணுவதை அரசிலமைப்பு ஒரு அடிப்படை உரிமையாக ஏற்கவில்லை. இதுதான் கோர்ட்டின் முதலாவது முடிவு. 

2. இங்கே clause 3 என குறிப்பிடப்படுவது அந்த கத்தோலிக்க அமைப்பின் ஆவணத்தின் 3ம் பிரிவை.

1 hour ago, மாங்குயில் said:

இலங்கையில் அவரவர் தனியாகவோ கூட்டாகவோ தத்தம் மத நடவடிக்கையில் ஈடுபட அனுமதி உண்டு.

அதேபோல், தனது மதத்தை பிற மதத்தினருக்கு சொல்லவும் போதிக்கவும் இலங்கையில் தடை இல்லை.

தன் மதத்திற்கு வரும்படி வற்புறுத்த முடியாது.  Materials Benefits கொடுத்து, தனது மதத்திற்கு வரும்படி சொல்லவும் சட்டத்தில் இடமில்லை.

புத்த பிக்குகளுக்கு கூட, நான் போதித்திருக்கிறேன். அவர்களின் போதனைகளைக்கூட நான் கேட்டிருக்கிறேன்.

இவை அன்றாடம் நாம் இலங்கையில் ஒவ்வொரு மதத்தவருக்கிடையில் காணும் சமயம் சார்ந்த பரிமாற்றங்கள், பிரசாரங்கள்.

பிற மதத்தினருக்கு போதிக்க, இலங்கை அரசியலமைப்பில் எந்த தடையுமில்லை.

இதை முன்பே சொல்லி விட்டேன். இலங்கை போன்ற நாடுகளில் சட்டமூலங்களில் இருப்பதற்கும் நடைமுறைக்கும் பாரிய இடைவெளி உண்டு.

வெள்ளைவானில் கடத்தி கொண்டு போய் விசாரணை இன்றி கதையை முடிப்பது இலங்கையில் ஒரு காலம் பரவலாக நடந்தது. அப்படி நடக்கும் போது, சட்டப்படி அப்படி செய்வது பாரிய குற்றம். ஆனாலும் நடந்தது.

ஆகவே நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதை வைத்து அதுதான் சட்டம் என சொல்ல முடியாது.

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.