Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத போதகரை பாதுகாத்தது யாழ்ப்பாணம் பொலிசாரே - திருமதி சார்ல்ஸ்

Featured Replies

கொரோனா தொற்றுடன் சுவிஸ் நாட்டில் இருந்து அரியாலை தேவாலயத்திற்கு வந்திருந்த மத போதகரை பாதுகாத்தது யாழ்ப்பாணம் பொலிசாரே என குற்றம் சாட்டியுள்ள வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ல்ஸ் இந்த சம்பவத்தின் பின்னணியில் பல சம்பவங்கள் உள்ளன விசாரணைகளின் பின்னர் வெளிப்படுத்தப்படுத்துவேன் என்று குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் அவர் இன்று (254.03.2020) நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் கொரோனா வைரஸ் தோற்று அபாயம் ஏற்பட்டவுடன் மத மக்களை அதிகமாக கூட்டி கூட்டங்கள் பிரார்த்தனைகள் நடத்த வேண்டாம் என அரசாங்கம் அறிவுருத்தியிருனத்து. எனினும் அந்த கட்டளையை மீறி யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் அதிகளவான மக்களை கூட்டி பிரார்த்தனை நடைபெற்றது.

இந்த மத கூட்டத்திற்கு சுவிஸ் நாட்டில் இருந்து மத போதகர் ஒருவர் வந்துள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தோற்று இருந்துள்ளது. நாட்டில் மத கூட்டத்திற்கு அரசு தடை போட்ட போதிலும் இங்கு நடைபெற்றமை மற்றும் மத போதகரை பாதுக்காத்தமை போன்றவற்றில் முக்கிய காரணியாக யாழ்ப்பாணம் பொலிசார் செயற் பட்டுள்ளனர். இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் பல சுவாரசிய தகவல்கள் வெளியாகும்.

மேலும், அரியாலை தேவாலயத்திற்கு சென்றவர்களை இனம் கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு மக்களை மாகாண சுகாதார பணிப்பாளர் கேதிஸ்வரன் கோரியுள்ளார். அப்போது தொலைபேசி ஊடாக அவருக்கு கைது எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. மேலும் இந்த விடயம் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டு இது தொடர்பிலும் விசாரணை நடைபெறுகின்றது. அனைத்தும் விசாரணைகள் முடிந்ததும் வெளிப்படுத்தப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/78557

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கெல்லாம் காரணமாக இருந்த மத போதை தலைகேறிய பயங்கரவாதி போதகர் போல் சர்குணராஜாவை தூக்கில் போடவேண்டும். எத்தனையோ அப்பாவி மக்களின் உயிரை பணயம் வைத்து தனது சுய இலாபத்திற்காக  மத மாற்றங்களை நிறைவேற்றி கொரோனா நோயையும் பரப்பிவிட்டு  வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார்.

Edited by vanangaamudi

  • தொடங்கியவர்
1 hour ago, ampanai said:

இந்த மத கூட்டத்திற்கு சுவிஸ் நாட்டில் இருந்து மத போதகர் ஒருவர் வந்துள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தோற்று இருந்துள்ளது. நாட்டில் மத கூட்டத்திற்கு அரசு தடை போட்ட போதிலும் இங்கு நடைபெற்றமை மற்றும் மத போதகரை பாதுக்காத்தமை போன்றவற்றில் முக்கிய காரணியாக யாழ்ப்பாணம் பொலிசார் செயற் பட்டுள்ளனர். இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் பல சுவாரசிய தகவல்கள் வெளியாகும்.

இது ஒரு சுவாரசியமான தகவலாக இருக்கும்?  

இருக்கலாம். காவல்துறையும் இதில் பங்காளியாக இருந்திருந்தால். 

  • கருத்துக்கள உறவுகள்

போதகருடன் தொடர்பிலிருந்த 18 பேர் பலாலிக்கு

 

 

 

image_c2fd5c6ae5.jpg-வி.நிதர்சன்

யாழ்ப்பணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான சுவிஸ் மதபோதகருடன் நேரடித் தொடர்பிலிருந்ததாக அடையாளம் காணப்பட்ட 18 பேர் பலாலியில்  அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்துக்கு இரண்டு கட்டங்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அவர் இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே இதனை கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணம் அரியாலையில் ஆராதனைக் கூட்டம் நடத்துவதற்கு சுவிஸிலிருந்து வந்த மதபோதகருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

அவருடன் ஓர் அறையில் தனித்துச் சந்தித்த தாவடி வாசிக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 18பேர் அடையாளப்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 12பேர் நேற்று முன்தினம் காலையும் எஞ்சிய 6 பேர் நேற்று முன்தினம் மாலையும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்” என்றார்.  

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/போதகருடன்-தொடர்பிலிருந்த-18-பேர்-பலாலிக்கு/71-247407

1 hour ago, ampanai said:

இந்த மத கூட்டத்திற்கு சுவிஸ் நாட்டில் இருந்து மத போதகர் ஒருவர் வந்துள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தோற்று இருந்துள்ளது. நாட்டில் மத கூட்டத்திற்கு அரசு தடை போட்ட போதிலும் இங்கு நடைபெற்றமை மற்றும் மத போதகரை பாதுக்காத்தமை போன்றவற்றில் முக்கிய காரணியாக யாழ்ப்பாணம் பொலிசார் செயற் பட்டுள்ளனர்.

சொறிலங்காட போலீஸ் சம்திங் வாங்கி கொரோனா பாஸ்டருக்கு பாதுகாப்பு குடுத்திருப்பீனும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பதான் பாதிரியார் பற்றிய திரியை அடிச்சு நூர்த்து வைச்சிருக்கினம்.....
நமக்கென்ன காசா பணமா இருக்கிற எண்ணையை  நாமளும் ஊத்திவிடுவம்.

தொடரட்டும்...

4 minutes ago, குமாரசாமி said:

இப்பதான் பாதிரியார் பற்றிய திரியை அடிச்சு நூர்த்து வைச்சிருக்கினம்.....
நமக்கென்ன காசா பணமா இருக்கிற எண்ணையை  நாமளும் ஊத்திவிடுவம்.

தொடரட்டும்...

கொரோனா ஓயும் வரை இதுவும் ஓயாது அண்ணை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Rajesh said:

கொரோனா ஓயும் வரை இதுவும் ஓயாது அண்ணை!

சுவீஸ் பாதிரியார் போய்வந்த இடமெல்லாம் இழுத்து மூடியாச்சாமே மெய்யே?

 

சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!

In இலங்கை     March 24, 2020 10:33 am GMT     0 Comments     1293     by : Litharsan

யாழ்ப்பணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான சுவிஸ் மதபோதகருடன் நேரடித் தொடர்பிலிருந்ததாக அடையாளம் காணப்பட்ட 18 பேர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

பலாலியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு இரண்டு கட்டங்களாக இவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பான மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “யாழ்ப்பாணம், அரியாலையில் ஆராதனைக் கூட்டம் நடத்துவதற்கு சுவிஸிலிருந்து வந்த மதபோதகருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவருடன் ஓர் அறையில் தனித்துச் சந்தித்த தாவடி வாசிக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 18பேர் அடையாளப்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 12பேர் நேற்று முன்தினம் காலையும் எஞ்சிய 6 பேர் நேற்று முன்தினம் மாலையும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/சுவிஸ்-போதகருடன்-நெருங்க/

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அந்த பாதிரியின்  கூட்டத்துக்கு  போன அவ்வளவு பேரையும் யாழில் இருக்கும் மக்கள் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது இனி வரும் காலத்தில் இது ஒரு படிப்பினையாக இருக்கணும் மற்றவர்களுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

உந்த 18 பேரையும், புத்தரிண்ட மதத்துக்கு மாத்தினால் உதவியாய் இருக்கும்.

13 minutes ago, Rajesh said:

அவருடன் ஓர் அறையில் தனித்துச் சந்தித்த தாவடி வாசிக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 18பேர் அடையாளப்படுத்தப்பட்டனர்.

தனித்து சந்தித்தது, ஆம்பிளையோ, பொம்பிளையோ எண்டு சொன்னால், நாங்களும் ஒரு முடிவுக்கு வரலாம் தானே.. 🤥

Edited by Nathamuni

20 minutes ago, Nathamuni said:

தனித்து சந்தித்தது, ஆம்பிளையோ, பொம்பிளையோ எண்டு சொன்னால், நாங்களும் ஒரு முடிவுக்கு வரலாம் தானே..

இது பழைய செய்தியா போச்சு!

அது ஒரு ஆம்பிளை தான். அவர் கட்டிட வேலை செய்ற ஒப்பந்தகாரர். அந்த மனுஷனுக்கு தெரியுமே பணக்கார பாஸ்டருக்கு கொரானா வேற இருக்கு என்டு. அவர் தொழில்ரீதியா கொஞ்ச நேரம் கதைச்சிருக்கார்.
இதுல வேற விசேஷமா ஒன்டும் இல்லை.

அந்த ஒப்பந்தக்காரர் ஒரு சைவர். தாவடில இருக்கிற ஒரு கோவில் நிர்வாகசபை உறுப்பினராகவும் இருக்கிறாராம். அவர் ஒப்பந்த வேலை தொடர்பாகவும் கோவில் காரியங்கள் தொடர்பாகவும் பலரோட பழக வேண்டி இருந்ததால, அவரோட வீட்டுக்காரர் பலரோட பழக வேண்டி இருந்ததால, இப்ப பலர் கண்காணிப்புல இருக்கீனம்.

அவரோட பிள்ளைகள் கொக்குவில் இந்துக்கல்லூரில படிகீனமாம். ஆனா ஸ்கூலுக்கு டியூசனுக்கு முதலே விடுமுறை விட்டபடியா ஒரு பிரச்சினையும் இல்லையாம்.

நான் கேள்விப்பட்ட படி அந்த தாவடி சந்தில இருந்து சுதுமலை ரோட்ல கிட்டத்தட்ட 1 km தூரத்துக்கு தனிமைப்படுத்தப் பட்டிருக்காம். அதுக்கு அங்கால, வைரவர் கோவிலடி பக்கம் உள்ள ஆட்களுக்கு எந்த தடையும் இல்லையாம்.

On 3/24/2020 at 6:13 PM, ampanai said:

நாட்டில் மத கூட்டத்திற்கு அரசு தடை போட்ட போதிலும் இங்கு நடைபெற்றமை மற்றும் மத போதகரை பாதுக்காத்தமை போன்றவற்றில் முக்கிய காரணியாக யாழ்ப்பாணம் பொலிசார் செயற் பட்டுள்ளனர்.

ஆளுநர் முறையிட்டும் இதுவரை முதலைக்கண்ணீர் வடிக்கும் போர்குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட சொறிலங்கா போலீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததா தெரியல. இப்ப உள்ள சட்டத்தின்படி அவங்களுக்கு 3 வருஷம் சிறை.

மதபோதகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை மறைக்க பொலிஸாருக்கு இலஞ்சம்! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தகவல்!!

"சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதகர் சிவராஜ்போல் சற்குணராஜாவுக்கு கொரோனா தொற்று இருப்பதை மறைக்க பொலிஸாருக்குப் பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதனை விட அவர்கள் அதனைப் போலி மருத்துவச் சான்றிதழுடன் நிரூபிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டனர்."

- இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையினரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரனை, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி மிரட்டிய சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண மருத்துவ அதிகாரிகள் சங்கம் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு அமைவாக, இது தொடர்பான விசாரணைகள் பதில் பொலிஸ்மா அதிபரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறனதொரு நிலையில் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை அழைத்து மன்னிப்புக் கோரினார்.

சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதகருக்கு கொரோனா தொற்று இல்லை என்று இரண்டு தடவைகள் ஊடக அறிக்கை வழங்கியதும் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரிதான். பிலதெனியா தேவாலயத்தால், மதபோதகருக்கு கொரோனா தொற்று உள்ளதை மறைக்க அவர்களுக்குப் பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. மேலும் அவர்கள் அதைப் போலி மருத்துவ சான்றிதழுடன் நிரூபிக்க முயற்சித்தார்கள்.

மதபோதகருக்கு கொரோனா தொற்று உள்ளது என்பதை, சுவிஸில் உள்ள இலங்கைக்கான தூதரகம் மூலம் வடக்கு மாகாண ஆளுநர் நிரூபித்தார்.

எனவே தேவாலய நிர்வாகத்தினர், ஆராதனையை ஒழுங்குபடுத்திய மதபோதகர் ஆகியோருடன் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியும் தண்டிக்கப்பட வேண்டும்" - என்றுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/139851?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2020 at 10:40 AM, குமாரசாமி said:

இப்பதான் பாதிரியார் பற்றிய திரியை அடிச்சு நூர்த்து வைச்சிருக்கினம்.....
நமக்கென்ன காசா பணமா இருக்கிற எண்ணையை  நாமளும் ஊத்திவிடுவம்.

தொடரட்டும்...

போதருக்கு கோறோனா வைரஸ்  கட்டட கொந்தராத்து எடுப்பவரிடமிருந்துதான் பரவியதாக  தற்போது யாழ்க் குடநாட்டில் கதை என்று புதிதாக உலாவருகிறது. கட்டட ஒப்பந்தக்காரர் கொழும்பில் இருப்பவராம். அங்கு பல வெளிநாட்டினருடன் கட்டடம் சம்பந்தமான தொடர்பிலிருந்தாராம். 😜

(நான்மட்டும் என்ன காசா பணமா கொடுக்கப்போறன், சாமியாருக்கு உதவியா ...கொஞ்சம்  நெருப்ப ஊதிவிடுவம் 😎)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.