Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

Vadivelu GIF by Tamil Memes - Find & Share on GIPHY

ஏனுங்க மொதலாளி சின்னவீடு பெரியவீடு எண்டும்  சொல்லலாம் இல்லீங்களா?

எல்லா விளக்கத்துக்கும், கருணாநிதி தானா?😂

34 minutes ago, ராசவன்னியன் said:

மனைவி, துணைவி மாதிரி..! :)

 

  • Replies 101
  • Views 13.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

Vadivelu GIF by Tamil Memes - Find & Share on GIPHY

ஏனுங்க மொதலாளி சின்னவீடு பெரியவீடு எண்டும்  சொல்லலாம் இல்லீங்களா?

அப்படியும் சொல்லலாம்..

டெண்ட் கொட்டாய் - பெரிய வீடு

டூரிங் டாக்கீஸ் - சின்ன வீடு

55 minutes ago, Nathamuni said:

எல்லா விளக்கத்துக்கும், கருணாநிதி தானா?😂

அவர்தான் தமிழ் வியாக்கியானங்களுக்கு முன்னோடி..!

மனைவி, துணைவி, இணைவி..கிழவி.. etc.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2020 at 23:59, ராசவன்னியன் said:

 

?width=580&version=1566315

என்ன 'ரெகார்ட் ப்ளேயர்' திடீர்ன்னு தடக்கு பட்டு நின்னு போச்சி..? :shocked:

 

ராஜவன்னியன்,

ரெக்கார்ட் டான்ஸ் என்றால் என்ன? நான் யூரிபில் பார்த்த்போது அணும் பொண்ணும் பாடலுக்கு ஆடுகின்றார்கள்
ஆனால் இவை மிகவும் ஆபாசமாக/அசிங்கமாக  இருகின்ற‌தே.இவற்றை சுற்றி மக்கள் இருந்து பார்த்து இந்த ஆபாசத்தை கைத்தட்டி ரசிக்கினறார்கள்.   உண்மையில் தமிழ் நாட்டில் இப்படியெல்லாம் நடக்கின்றதா? இது அரசினால் அங்கிகரிக்கப்பட்டதா? 

 

  • கருத்துக்கள உறவுகள்


இது ஒரு பொன்மாலை பொழுது என்று ஒரு பாடல் உண்டு. மறக்க முடியாத பாடல்
இலங்கையில் மாலை 5 மணிக்கு சிறுவனாக அந்தி சாயும் பொழுதில் கேட்பதில் என்ன் ஒரு ஆனந்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

ராஜவன்னியன்,

ரெக்கார்ட் டான்ஸ் என்றால் என்ன? நான் யூரிபில் பார்த்த்போது அணும் பொண்ணும் பாடலுக்கு ஆடுகின்றார்கள்
ஆனால் இவை மிகவும் ஆபாசமாக/அசிங்கமாக  இருகின்ற‌தே.இவற்றை சுற்றி மக்கள் இருந்து பார்த்து இந்த ஆபாசத்தை கைத்தட்டி ரசிக்கினறார்கள்.   உண்மையில் தமிழ் நாட்டில் இப்படியெல்லாம் நடக்கின்றதா? இது அரசினால் அங்கிகரிக்கப்பட்டதா?

நிச்சயம் உண்டு. கோவில் திருவிழாக்களில், பொருட்காட்சிகளில் என ரெக்கார்ட் டான்ஸ் சில இடங்களில் உண்டு.

மூடிய அறைக்குள் நடக்கும் பணக்கார காபெரேயும், திறந்த வெளியில் நடக்கும் ஏழைகளுக்கான ரெக்கார்ட் டான்ஸும் ஏறக்குறைய ஒன்றுதான்.

அரசினால் அங்கீகரிக்கப்பட்டதல்ல, ஆனால் ஊர் பெருசுகளாலும் விடலைகளாலும் ஏற்பாடு செய்யப்படுபவை.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

ஆனால் இவை மிகவும் ஆபாசமாக/அசிங்கமாக  இருகின்ற‌தே.இவற்றை சுற்றி மக்கள் இருந்து பார்த்து இந்த ஆபாசத்தை கைத்தட்டி ரசிக்கினறார்கள்.   உண்மையில் தமிழ் நாட்டில் இப்படியெல்லாம் நடக்கின்றதா? இது அரசினால் அங்கிகரிக்கப்பட்டதா? 

தமிழ்நாட்டில் என்ன, இலங்கையிலும் நடக்கிறது. நீங்கள் சிறுவயதில் கோவிக்களில் சின்னமேளம் பார்த்திருந்தால், இந்தக் கேள்வி தோன்றியிருக்காது. சின்னமேளக்காரி உடுப்புமாத்திற அறை யன்னலில் நீக்கல் இருக்கா, ஓட்டை இருக்கா என்றுபார்க்கப்போய் ஐயர் துரத்த.... நாங்கள் கல்லு முள்ளுக் குத்துவதையும் பொருட்படுத்தாது விழுந்தடித்து ஓடியது ஒரு காலம்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Nathamuni said:

எல்லா விளக்கத்துக்கும், கருணாநிதி தானா?😂

 

 

4 hours ago, ராசவன்னியன் said:

மனைவி, துணைவி, இணைவி..கிழவி.. etc.

 

நாதமுனி மனசுல கருணாநிதி😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

நிச்சயம் உண்டு. கோவில் திருவிழாக்களில், பொருட்காட்சிகளில் என ரெக்கார்ட் டான்ஸ் சில இடங்களில் உண்டு.

மூடிய அறைக்குள் நடக்கும் பணக்கார காபெரேயும், திறந்த வெளியில் நடக்கும் ஏழைகளுக்கான ரெக்கார்ட் டான்ஸும் ஏறக்குறைய ஒன்றுதான்.

அரசினால் அங்கீகரிக்கப்பட்டதல்ல, ஆனால் ஊர் பெருசுகளாலும் விடலைகளாலும் ஏற்பாடு செய்யப்படுபவை.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில வருவது போல...

3 minutes ago, குமாரசாமி said:

நாதமுனி மனசுல கருணாநிதி😂

தமிழ் நாட்டில இந்த தமிழ் அறிஞர்கள், வருமானம் இல்லாத நிலையில் ஒதுங்குவது அரசியல் மேடைகளில்.

துரதிஷடம் பிடித்த நிலை தான். பழைய காலத்தில் அரசர்கள் ஆதரவு கொடுத்தார்கள். இந்தக்காலத்தில் இப்படி தான்.

யாரோ ஒரு தமிழ் அறிஞர், எதிர்க்கட்சி  மேடையில். முழங்கியது.

அவரு கட்டிக்க வேட்டி இல்லாமல் ஒத்த வேட்டியோட வாழ்ந்தார். இவரு (கருணாநிதி) கழட்டிப் போட்ட வேட்டி எந்த வீட்டில என்று தெரியாமல் வாழ்ந்தார். 😂 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, Paanch said:

உடுப்புமாத்திற அறை யன்னலில் நீக்கல் இருக்கா, ஓட்டை இருக்கா என்றுபார்க்கப்போய் ஐயர் துரத்த.... நாங்கள் கல்லு முள்ளுக் குத்துவதையும் பொருட்படுத்தாது விழுந்தடித்து ஓடியது ஒரு காலம்.  

பூனைக்குட்டி மெல்ல மெல்ல வெளியிலை வருதடோய்....😂

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

பூனைக்குட்டி மெல்ல மெல்ல வெளியிலை வருதடோய்....😂

பூனைக்குட்டியைக் கட்டி வளர்பதில்லை, அது ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் ஒழிந்துதான் இருக்கிறது. வெளிவரும்போது காண்போர் முகத்தையும் மலர்ந்து குதூகலிக்கவும் வைக்கிறது. இதற்குச் சாட்சி எங்கள் சாமி குமாரசாமி. 😋

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் ஆரம்பகாலங்களில் தமிழ் வானொலிகளில் மட்டுமே தென்னிந்திய பாடல் கலைஞர்களின் குரல்களை கேட்டு ரசித்திருப்போம்.நடிகர்களை திரைப்படங்களில் பார்ப்பதோடு சரி. முதன் முதலாக தென்னிந்திய கலைஞரை  பெரும் சிரமங்கள் மத்தியிலும் இலங்கைக்கு வரவழைத்து இசைக்கச்சேரி நடத்தியவர்கள் சுட்டிபுரம் அம்மன் கோவில் பக்தர்கள் என்றால் அது மிகையாகாது.அதன் பின்னரே ஏனைய கோவில்களுக்கும் தென்னிந்திய இசைக்கலைஞர்களை வரவழைத்து இசைக்கச்சேரி நடத்தினார்கள்.

அன்றைய தினம் சுட்டிபுரம் அம்மன் கோவில் பகுதிக்கு மக்கள் சமுத்திரம் போல் திரண்டு வந்திருந்தனர்.கார்,பஸ் என வீதி இருமருங்கிலும் நிறைந்து காணப்பட்டது. துவிச்சக்கரவண்டிகளும் ஏராளம் ஏராளம்.   அது போல் களவுகளும் ஏராளம் ஏராளம்.

சுட்டிபுரம் அம்மன் கோவில் இசைக்கச்சேரிக்கு வந்தது வேறு யாருமல்ல பக்தி பெருமான் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் தான். அவர் வந்தவுடன் சுட்டிபுரம் அம்மனை தரிசித்து விட்டு மேடையில் கணீரென்ற குரலில் முதல் பாடிய பாடல் இதுதான். அந்த பாடலை இன்று கேட்டாலும் அந்த பக்திமாலைப் பொழுதுதான் ஞாபகத்திற்கு வரும்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் நான் முதன் முதலாக பார்த்த கிந்திப்படம். அதுவும் கள்ள விடியோ தியேட்டரில்....

மட்டக்களப்பு கல்லடிக்கு அருகாமையில் ஒரு இடத்தில் இரவு ஒன்பது மணிக்கு கிந்திப்படம் போடுவதாக அறிந்தோம். நானும் மூன்று நண்பர்களும் இரண்டு சைக்கிளில் படம் பார்க்கப் போவதாக முடிவு செய்திருந்தோம். போவதற்கு முன் ஹாஜியார் கடையில் கொத்துரொட்டி சாப்பிடலாம் என ஒரு நண்பன் ஐடியா சொன்னான். ஆனால் எம்மிடம் இருக்கும் காசை கூட்டி கணக்கு பார்த்தால் காசு போதாமல் இருந்தது. எனக்கு தெரிந்த ஒராளிடம் இருபது ரூபாய் தண்டிக்கொண்டு (இன்னும் திருப்பிக்கொடுக்கவில்லை) வாய்க்கு ருசியாய் கொத்துரொட்டி சாப்பிட்டு விட்டு மிச்சக்காசுக்கு இரண்டு பிரிஸ்டல் வாங்கி ஆளுக்கு50/50 யாய் இழுத்துக்கொண்டு கல்லடி நோக்கி சைக்கிளில் கடுகதி வேகத்தில் போனோம். கல்லடி போனதும் படம் போடும் வீடு தெரியவில்லை.நேரமோ இரவு எட்டரைக்கு மேலாகி விட்டது. ஒழுங்கையால் செல்பவர்களை கேட்கவும் பயமாக இருந்தது.ஏனெண்டால் கள்ள வீடியோ எல்லோ??? ஏதோ நல்ல காலத்துக்கு எங்களை மாதிரி இரண்டு பேர் வர அவர்களுடன் சேர்ந்த்து படம் போடும் வீட்டை கண்டு பிடித்து படமும் பார்த்து விட்டோம்.

படம் முடிய இரவு  ஒரு மணியாகிவிட்டது.அந்த மெல்லிய குளிருக்கு தம் அடிக்கோணும் போல இருந்தாலும் கடைகள் எல்லாம் பூட்டு.....சைக்கிளை மிதித்த வண்ணம்  பார்த்த படத்தின் காட்சிகளை அசை போட்டுக்கொண்டு கல்லடி பாலத்துக்கு கிட்ட வந்த எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி!!!!!!
டேய் மச்சான் ஆமி ட்ரக் நிக்குதடா..... எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்பொச்சுது.கொஞ்ச தூரத்திலையே சைக்கிளாலை இறங்கி  சைக்கிளை  உருட்டிக்கொண்டே அமைதியாக போனோம்.எங்கை போட்டு வாறியள் எண்டு கேட்டால் என்ன பதிலை சொல்லுறதெண்டு எனக்கு யோசினை.
அதோடை கல்லடி பாலம் எண்டால் எனக்கு எப்பவும் கொஞ்ச நடுக்கம் இருக்கும்.ஆமி ட்ரக்குக்கு கிட்ட வந்தவுடனை இரண்டு ஆமி கிட்ட வந்தாங்கள்.அவங்கள் கிட்ட வந்தவுடனையே எங்களோடை வந்த ஒண்டு எல்லாத்தையும் சிங்களத்திலை உளறிக்கொட்டீட்டுது.பிறகென்ன அடுத்த நாள் காலமை 10 மணிக்குத்தான் வீடு வந்து சேர்ந்தம்.

அந்த தர்ம அடியை இப்ப நினைச்சாலும் இந்தப் பாட்டுத்தான் கண்ணுக்கை நிற்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலை குறிப்பாக யாழ் கோட்டை சண்டை காலத்தில் அசிட் விட்ட கார் பற்றரியில் (மின்சாரத்துக்கு முழு தடை சொறீலங்கா அரசால் போடப்பட்டிருந்ததோடு.. சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம் மீது விமானங்கள் மூலம் குண்டு வீசி அதனை இயக்க முடியாமலும் ஆக்கியது. தனது சொந்த அரச திணைக்களம் மீதே அது தமிழர்கள் பகுதியில் இருக்கிறது என்பதற்காக குண்டு வீசியது இன்று சில தமிழர்கள் புகழ்ந்து தள்ளும் சிங்கள அரசு அன்று.

Sony Radio Twin Cassette Player CFS-W404L Boombox Retro ...  

இப்படி ஒரு பிளேயரில் போட்டு கேட்டுக் கொண்டிருந்த போது திடீர் என்று வானில் பெரும் இரைச்சலோடு தாழப் பதிந்து வந்து எங்கள் வீட்டுக்கு அருகில் இரண்டு குண்டுகள் வீசியது சியாமா செட்டி விமானங்கள். SF260 Libya (cropped).jpg

அதில் ஒன்று வெறும் வளவென்றிலும்.. இன்னொன்று ஒரு வீட்டின் பின்புறமும் வீழ்ந்து வெடித்தன. 

இப்போதும்.. இந்தப் பாடலைக் கேட்கும்... போது அந்த விமான இரைச்சலும்.. அது தொடர்ந்து தந்த வெடிப்பும் அதிர்வுகளும்.. மனதோடு இயங்கக் காணலாம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

சிறு வயதில் சில நிகழ்வுகள் நம் மூளையில் பதிந்துவிட்டால் மரணிக்கும் வரை அந்த உணர்வுகள் மாளாது.

நான் ஆரம்ப பள்ளியில் படிக்கும்பொழுது சில ஆசிரியர், ஆசிரியைகளைக் கண்டால் ரொம்ப பயமும் மரியாதையும் தோன்றும்.

நான் பிறந்து வளர்ந்த கிராமம் சிறியது.

ஆரம்ப பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் குறிப்பிட்ட டீச்சர் வசித்து வந்த வீட்டை கடந்துதான் செல்ல வேண்டும். அந்த டீச்சரின் கண்டிப்பும், கற்பித்தலும் இன்றுவரை என் மனதில் பசுமையாக உள்ளது. அவரை கண்டால் பயமுண்டு. அவர் சொல்லிக்கொடுத்த விதம் ஆழமாக பதிந்ததால்தான் பின்னாளில் பொறியாளராக முடிந்தது.

இப்பொழுதும் முதிய வயதில் நான் பிறந்த கிராமத்துக்கு செல்லும்போது அவர் வசித்த வீட்டை கடக்கும்பொழுது என்னையுமறியாமல் கால்கள் தயங்கும். மனசும் கொஞ்சம் பதற்றத்தில் சலனப்படும்.

அவர் இன்னமும் வாழ்கிறாரா..?  என தெரியாது. இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த டீச்சரம்மாவின் ஞாபகமே வரும்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஈழத்தமிழரின்  1977 க்கு பின்னரான அரசியல் வாழ்க்கையில் முக்கிய புள்ளிகளான இந்த மூவரை தவிர வேறு எவரும் இப்போது உயிரோடு இல்லை.77ம் ஆண்டு தேர்தல் காலங்களில் இவர்களது வீர வசனங்களும் பல திரைப்பட பாடல்களும் வெற்றிக்கனிக்கு முக்கிய இடம் வகித்தது. ஒவ்வொரு தேர்தல் பிரச்சார மேடைகளிலும் குறிப்பிட்ட சினிமா பாடல்கள் ஒலிக்காமல் இருக்காது.

anantha-sankari 

mavai-senathirajah.jpg

TNA warns to restore of Arms Struggle for Tamil Eelam


எனக்கு இப்போதும் இந்த மூவரின் செய்திகள் எங்கேயாவது தென்பட்டால் இந்தப் பாடல்கள் காதுக்குள் கரடுமுரடாய் ஒலிக்கும்.

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்ரா பௌர்ணமி என்றால் கூடுதலான எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.
ஊரில் சித்திரை பௌர்ணமி தினத்தன்று சினிமா தியேட்டர்களில் விசேடமாக சிவாஜிகணேசன் நடித்த சித்ரா பௌர்ணமி திரைப்படம் போடுவார்கள். அதை எத்தனை தடவை பார்த்தாலும்   திருப்பியும் அதே தினத்தில் அதே திரைப்படத்தை பார்ப்பதில் பலருக்கு அலாதி பிரியம். நானும் பல தடவைகள் பார்த்திருக்கின்றேன்.
இன்று சித்திரை பூரணை. இன்றைய நாளில் அந்த ஞாபகங்களும்......

 

  • கருத்துக்கள உறவுகள்

aayiram.png

விடலை பருவத்தில், எனக்கு வயதில் மூத்த மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது வீதியிலும், பள்ளி மைதானத்திலும் சக மாணவிகளை சீண்டி வழிவதை பார்த்திருக்கிறேன்.  அரசல் புரசலாக புரிந்தாலும், 'ஏன் இப்படி..?' என மனதில் அப்பொழுது தெளிவிருக்காது.

விவரம் புரியாத வயது... ஹார்மோன்களின் வேலையால் மனம் தடுமாறும்பொழுது பள்ளியில் ஆண்டுவிழா நிகழ்ச்சி வந்தது.

அதில் இந்த பாடலுக்கு மேடையேறி நடித்தவர்கள் மொக்கையாக நடித்தாலும், இந்த பாடலின் வரிகள் என் மனதில், அந்த பால்ய வயதில் ஆழமாக பதிந்து ஒருவழியில் நெறிப்படுத்தியது என்றால் மிகையாகாது.

அன்று என்னுடன் பள்ளியில் படித்தவர்கள், இன்று தாத்தாவும், பாட்டிகளாவும் எங்கோ வாழ்வர்..ஆனால் இந்த பாடலைக் கேட்கும்போது மனம் இன்னும் அந்த விடலை பருவ நிகழ்வுகளால் சில நேரம் அலைக்கழிக்கப்படும்.. புன்முறுவலும் தோன்றும்.

இன்றளவும் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று..

 

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

               Picture1.jpg

'பையன் அரசாங்க வேலையில் கை நிறைய சம்பாதிக்கிறான், நிலையான உத்தியோகம்..' இன்னபிற காரணங்களினால் வரன்கள் வர.., வீட்டில் பெற்றோரிடமிருந்து அழுத்தங்கள்..

"இல்லை ஐயா,  நான் பொறியியலில் மேற்படிப்பு படிக்கப் போகிறேன், திருமணம் இப்போது வேண்டாம்..!" என தள்ளிப்போட..

மறுபடியும்  "கல்யாணத்துக்கு அப்புறம் நீ மேற்கொண்டு படிச்சிக்கோ,எங்களுக்கு வயசாகிப் போச்சுப்பா.." பெற்றோரிடமிருந்து நச்சரிப்புகள்..!

(திருமணமான 10 வருடங்களுக்கு பின்னர்தான் பட்ட மேற்படிப்பை படித்து முடித்தேன்.)

ம்ம்.. திருமணம் நிச்சயமானது.. நிச்சய தாம்பூலத்திற்கும் திருமண நாளுக்கும் இடையே 3 மாதங்கள் இடைவெளி..

யப்பப்பா, என்ன இனிமையான காத்திருப்பு நாட்கள் அவை..? வார்த்தைகளில் வடிக்க இயலாது அந்த உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும்..! emotlove2.gif

அப்பொழுது இனம்புரியாத ஏக்கத்துடன் காத்திருக்கும்போது ஆறுதல் கொடுத்த சில பாடல்களில் இது முக்கியமானது..! 

கண்கள் செய்த பாவம் உன்னை

கண்டும் காணாதேங்குதே.. கண்டும் காணாதேங்குதே..

பாய் விரித்துக் கப்பல் செல்ல

பாவி நெஞ்சம் துடிக்குதே.. பாவி நெஞ்சம் துடிக்குதே..

 

Edited by ராசவன்னியன்
Video link change

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2020 at 16:28, குமாரசாமி said:

ஈழத்தமிழரின்  1977 க்கு பின்னரான அரசியல் வாழ்க்கையில் முக்கிய புள்ளிகளான இந்த மூவரை தவிர வேறு எவரும் இப்போது உயிரோடு இல்லை.77ம் ஆண்டு தேர்தல் காலங்களில் இவர்களது வீர வசனங்களும் பல திரைப்பட பாடல்களும் வெற்றிக்கனிக்கு முக்கிய இடம் வகித்தது. ஒவ்வொரு தேர்தல் பிரச்சார மேடைகளிலும் குறிப்பிட்ட சினிமா பாடல்கள் ஒலிக்காமல் இருக்காது.

1977 தேர்தல் தமிழீழ வாக்கெடுப்பாக நடக்க நானோ சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து அதற்கு எதிரான பிரச்சாரங்களையும் கருத்தரங்குகளையும்  வைக்க வாலாக பின்னால் அலைந்தேன்.அந்த நேரங்களிலேயே சிலசில இடங்களில் கூட்டம் வைப்பதற்கு மறைமுகமான எதிர்ப்புகள் இருக்கும்.
அப்படியான இடங்களுக்கு ஒவ்வொரு இடங்களிலிருந்தும் சிறியசிறிய தற்காப்பு ஆயுதங்களுடன் போவோம்.
எல்லாம் ஒரு வயதுக் கோளாறு.

On 7/5/2020 at 22:44, ராசவன்னியன் said:

விடலை பருவத்தில், எனக்கு வயதில் மூத்த மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது வீதியிலும், பள்ளி மைதானத்திலும் சக மாணவிகளை சீண்டி வழிவதை பார்த்திருக்கிறேன்.  அரசல் புரசலாக புரிந்தாலும், 'ஏன் இப்படி..?' என மனதில் அப்பொழுது தெளிவிருக்காது.

ஏன் சார் மாணவிகள் மாணவர்களை சீண்டியதைக் காணவில்லையோ?

45 minutes ago, ராசவன்னியன் said:

ம்ம்.. திருமணம் நிச்சயமானது.. நிச்சய தாம்பூலத்திற்கும் திருமண நாளுக்கும் இடையே 3 மாதங்கள் இடைவெளி..

நல்லகாலம் வன்னியர் எமது நாட்டில் இப்படி எதுவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் சார் மாணவிகள் மாணவர்களை சீண்டியதைக் காணவில்லையோ..?

இல்லை, அப்போதைய வயதில் நான் கண்டதில்லை, ஈழப்பிரியன்.

நகரங்களில் அப்படி இருந்திருக்கலாம், ஆனால் கிராமங்களில் கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் அதிகமாகவே இருந்த காலம் அது.

 

4 hours ago, ஈழப்பிரியன் said:

..நல்லகாலம் வன்னியர் எமது நாட்டில் இப்படி எதுவுமில்லை.

ஏன் ஈழத்தில் எழுத்து எழுதுதல் முடிந்த மறுநாளே திருமணம் வைத்துவிடுவார்களா..? 😉

திருமணம் நிச்சயமாகி காத்திருந்த 3 மாதங்களில், நானும் ஆர்வ மிகுதியில், வருங்கால மனைவிக்கு போன் போட்டும், ரயிலேறி நேரில் சென்று பார்க்க முயற்சித்தும் ஒன்றும் கைகூடவில்லை. இன்றும் புன்முறுவலுடன் இரைமீட்கும் இனிமையான நினைவுகள் அவை..

நட்சத்திர பொருத்தங்களின்படி கிடைத்த முகூர்த்த நாளால் காத்திருப்பு மூன்று மாதங்களாயிற்று.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:
7 hours ago, ஈழப்பிரியன் said:

நல்லகாலம் வன்னியர் எமது நாட்டில் இப்படி எதுவுமில்லை.

ஏன் ஈழத்தில் எழுத்து எழுதுதல் முடிந்த மறுநாளே திருமணம் வைத்துவிடுவார்களா..? 😉

திருமணம் நிச்சயமாகி காத்திருந்த 3 மாதங்களில், நானும் ஆர்வ மிகுதியில், வருங்கால மனைவிக்கு போன் போட்டும், ரயிலேறி நேரில் சென்று பார்க்க முயற்சித்தும் ஒன்றும் கைகூடவில்லை. இன்றும் புன்முறுவலுடன் இரைமீட்கும் இனிமையான நினைவுகள் அவை..

நட்சத்திர பொருத்தங்களின்படி கிடைத்த முகூர்த்த நாளால் காத்திருப்பு மூன்று மாதங்களாயிற்று.

மன்னிக்கவும் வன்னியர்.
நான் சாந்தி மூகூர்த்தத்தைக் குறிப்பிட்டேன்.

2 hours ago, ராசவன்னியன் said:

நகரங்களில் அப்படி இருந்திருக்கலாம், ஆனால் கிராமங்களில் கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் அதிகமாகவே இருந்த காலம்

நகரக் காதலை விட கிராமக் காதல் மர்மப்படம் மாதிரி இருக்கும்.

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில நேரங்களில் சில கனவுகள்.😍  ரெலிபோன் பில்லும் எக்கச்சக்கம்....:cool:

 

 

Edited by குமாரசாமி

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை நினைக்க....அதெல்லாம் ஒரு கனாக்காலம்......

60 Years of Kamalism: 10 signature Kamal Haasan films that deserved more  love from the audience at t- Cinema express

சிறு வயதுக்காலம் ஜில்லென்ற காலம்.....☃️

 

  • 2 months later...
On 2/4/2020 at 11:48, குமாரசாமி said:

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?

அருமையான திரி அண்ணை. இன்று தான் நான் கவனித்தேன். 

இந்தப் பாடலைக் கேட்டவுடன் எனக்கு 80களின் நிறைவுப்பகுதிகளிலும், 90களிலும் நம்மூரில் நிகழ்ந்த திருமணக் கொண்டாட்டங்கள் நினைவுக்கு வருகின்றன. அன்றிருந்த அளவு குதூகலம் இன்றைய கொண்டாட்டங்களில் இருக்கிறதா என்பது ஐயமே.

பாடல்வரிகள் தாமாகவே அந்த இனிய உணர்வுகளைப் பேசுவதால் விரிவாக எழுதவேண்டிய அவசியமில்லை. 

கோவில்கள் நிறைந்த நான் பிறந்த ஊரில் அதிகாலை கோவில் மணி ஓசையே நமக்கு அலாரம் போலாகும். அதிகாலை 4, 4:30, 5:00, 5:30 என மணியோசை ஒன்றுக்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து ஒலிக்கும். அப்போது கிடைக்கும் தெய்வீக உணர்வுநிலை மீண்டும் ஊருக்குச் சென்று அனுபவித்தால் தான் கிடைக்குமோ என்னவோ!

இந்தப் பாடல் வரிகளும், மணியோசை போன்ற கணீர் குரலை உடைய சீர்காழி கோவிந்தராஜனின் குரலும், இசையும் என்னை என்னூரின் அதிகாலை வேளைக்குக் கொண்டு செல்கின்றன. கூடவே வருவன கள்ளம்கபடமற்ற சிறுவயது நினைவுகளும், அப்பருவத்தின் கவலைகளறியா மனநிலையும் தான்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.