Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"அப்பாவுக்கு.... தலைமயிர் வெட்ட, ஆருக்கு விருப்பம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

உண்மையாகவே அந்த காலத்தில இலங்கையில் டபுள் டெக்கர் பஸ் இருந்ததா 

அக்கா யாழ்.கொம் தவிர வேறெதுவும் பார்ப்பதில்லையோ ? 😂😂

  • Replies 74
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 18/4/2020 at 09:18, நீர்வேலியான் said:

 இந்த கொஞ்ச முடிக்கு 10 டாலர் கொடுக்க வேண்டுமா என்று பேசிபோட்டு வெட்டத்  தொடங்கியது. 

இதே போலதான் மத்திய கிழக்கில் இருக்கும் போது  15 திர்ஹம் எடுப்பார்கள் நாங்கள் இருந்த பகுதியில் நான் அங்கு போவதில்லை நிதி பிரச்சினையால் நண்பன் எனக்கு முடி வெட்டுவான்  சில நாட்களின் பின் அவனுக்கு முடி வெட்டுவேன் ஆனால் பிலேட் மட்டும் போட்டு வழிக்க மாட்டோம் அதற்கு பழகலை எப்படியும் காது அறும் என்ற பயத்தில 😎

தமிழ் சிறியருக்கு முடி இருக்கிறது என்பதை நம்பி எத்தனை பேர் முட்டி மோதி கருத்து எழுதியிருக்கிறார்கள்  ஐயோ பாவம் 

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

அக்கா யாழ்.கொம் தவிர வேறெதுவும் பார்ப்பதில்லையோ ? 😂😂

ஏன் வேற எந்த வெப்சைட்டிலாவது யாழில் டபுள் டெக்கர் பஸ் ஓடியது என்று போட்டு இருக்குதா😠

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

ஏன் வேற எந்த வெப்சைட்டிலாவது யாழில் டபுள் டெக்கர் பஸ் ஓடியது என்று போட்டு இருக்குதா😠

யூ ரியூப்பில் அல்லது கூகிளிக்  Double decker buses in sri lanka என்று போட்டுப் பாருங்கோ.  எல்லாம் இருக்கு, பார்க்கலாம்👍

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

யூ ரியூப்பில் அல்லது கூகிளிக்  Double decker buses in sri lanka என்று போட்டுப் பாருங்கோ.  எல்லாம் இருக்கு, பார்க்கலாம்👍

நான் இங்கு இந்த திரியை பார்த்து இந்த செய்தி உண்மையா என்று கேட்டன்...உங்களுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லாட்டில் பேசாமல் இருந்திருக்கலாம்  😧

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

நான் இங்கு இந்த திரியை பார்த்து இந்த செய்தி உண்மையா என்று கேட்டன்...உங்களுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லாட்டில் பேசாமல் இருந்திருக்கலாம்  😧

அக்கோய்,

டபிள் டெக்கர் பஸ் ஓடினது, ஓடுவது உண்மை என்கின்றபடியால்தான் பார்க்கச் சொன்னேன். எனக்கு இங்கே இணைக்க முடியவில்லை. ☹️

எதுக்கெடுத்தாலும் கோவப்படுவது வழக்கமாப் போச்சு. 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

உண்மையாகவே அந்த காலத்தில இலங்கையில் டபுள் டெக்கர் பஸ் இருந்ததா 

Busvideos Sri Lanka - Sri Lanka Forum

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

ஏன் வேற எந்த வெப்சைட்டிலாவது யாழில் டபுள் டெக்கர் பஸ் ஓடியது என்று போட்டு இருக்குதா😠

நாங்கள் மாணவர்களாக இருந்த காலத்தில் டபுள்டெக்ரர் பஸ் தான்.

இதைவிட கொழும்பில் தண்டவாளத்தில் ஓடிய பஸ்சும் இருந்தது.
இதன் பெயர் ரொலிபஸ் என்று எண்ணுகிறேன்.
என்ன நம்பவே மாட்டீங்களோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

நாங்கள் மாணவர்களாக இருந்த காலத்தில் டபுள்டெக்ரர் பஸ் தான்.

இதைவிட கொழும்பில் தண்டவாளத்தில் ஓடிய பஸ்சும் இருந்தது.
இதன் பெயர் ரொலிபஸ் என்று எண்ணுகிறேன்.
என்ன நம்பவே மாட்டீங்களோ?

அப்ப நீங்களும் இரட்டைத்தட்டு பஸ்லை படிக்க போய் வந்திருக்கிறியள்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

அப்ப நீங்களும் இரட்டைத்தட்டு பஸ்லை படிக்க போய் வந்திருக்கிறியள்...:cool:

உங்களுக்கு கொஞ்சம் பின்னாலே வந்து கொண்டிருக்கிறோம்.

இ போ ச பஸ்சில் ரிக்கற் இல்லாமல் போகிறவர்களைப் பிடிக்கவென்று Flying Squad என்று தற்கொலைதாரிகள் மாதிரி திடுதிப்பென்று ஒழித்து நின்றுவிட்டு பாய்ந்து ஏறி கொண்டக்ரரின் புத்தகத்தை பறித்தெடுப்பார்கள்.
இவர்களைப் பற்றி யாருக்காவது தெரியுமா?

   29 minutes ago,  குமாரசாமி said: 

ஐயாவுக்கு பிடிபட்ட அனுபவம் ஏதாவது இருக்கோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அப்ப தாங்கள் கள்ள ரிக்கற்  பிடிக்கிறவரா?

हैरान Vadivel GIF - हैरान Vadivel ShockSurprise ...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நாங்கள் மாணவர்களாக இருந்த காலத்தில் டபுள்டெக்ரர் பஸ் தான்.

இதைவிட கொழும்பில் தண்டவாளத்தில் ஓடிய பஸ்சும் இருந்தது.
இதன் பெயர் ரொலிபஸ் என்று எண்ணுகிறேன்.
என்ன நம்பவே மாட்டீங்களோ?

கவனம்.

நீங்கள் கூறுவதை வைத்தே வயதைக் கண்டுபிடித்து விடுவோம் பருமட்டாக.😜

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

கவனம்.

நீங்கள் கூறுவதை வைத்தே வயதைக் கண்டுபிடித்து விடுவோம் பருமட்டாக.😜

தம்பி எனது வயதை புரோபயிலில் போட்டுள்ளேன்.
ஆனபடியால் யாரும் வலைவிரிக்க வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

தம்பி எனது வயதை புரோபயிலில் போட்டுள்ளேன்.
ஆனபடியால் யாரும் வலைவிரிக்க வேண்டியதில்லை.

தம்பி என்று அழைத்ததற்கு நன்றி அண்ணா 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2020 at 06:07, Kavi arunasalam said:

882-F5182-0-AC6-466-E-94-F6-1-FAF77-DCA7

ஆகா....  பார்த்தவுடன் சிரிப்பை வரவைத்த, அழகிய படத்தை, வரைந்த....
நண்பர் கவி அருணாசலத்துக்கு நன்றி. 🥰
படத்தில்.... அந்த மொட்டையும்Tatsch, கண்ணும்...🤪  வரைந்த விதம் மிக அழகு. :grin: 🤣

அந்தக் குதிரையின்...சிரிப்பு.... இன்னும், சிறப்பாக  இருக்கு. 💕 :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Paanch said:
மொட்டை போட்ட சிறியரின் பதிவு.... கந்தர்மடத்துச் சொந்தங்களைத் தேடுமளவிற்கு வளர்ந்துவிட்டது. சொந்தங்களை மீண்டும் கண்டு பந்தங்கள் வளர்ந்தாலும் இனிவளராது சிறியரின் மொட்டையில் மயிர்.

பாஞ்ச் அண்ணை...  எனது,  மொட்டை  மண்டையில்... இனி மயிர் வளராது என்று சொல்லாதீர்கள்.
கரடி எண்ணையும், மயில் எண்ணையும்... இப்போ தலைக்கு, தினமும் பூசிக்  கொண்டு  வாறன்.
இன்னும்... ஆறு மாதத்தில், "குடும்பி" கட்டிக் கொண்டு உங்களுக்கு காட்டுறன். சரியா...   :grin:

19 hours ago, Paanch said:
நாங்கள் செக்கண்ட்சோ படம்பார்க்கச் செல்லும்போதெல்லாம், கந்தர்மடச் சந்தியிலிருந்து சிலவீடுகள் தள்ளி ஒரு வீட்டில் இறால் பொரியல் மணம், ஆகா.... நின்று மூச்சுமுட்ட இழுத்துவிட்டுச் செல்வோம். 

பாஞ்ச் அண்ணைக்கு... மூக்கிலை  பிழை என நினைக்கின்றேன்.
கந்தர்மடத்தில்... திரும்பின பக்கம் எல்லாம்... 
பிள்ளையார் கோயிலும், வைரவர் கோயிலும் இருக்கிற இடத்தில....
சாமம் ஒரு மணிக்கு.... இறால் பொரிக்கிற மணம் வந்ததது என்பதை நான் நம்ப மாட்டேன்.
ஆரும்... கத்தரிக்காய்  பொரித்த மணம், உங்களுக்கு இறால் பொரியல் மணமாய்  தெரிந்திருக்கு. :grin:

அல்லது.... ஆரிய குளத்தடியில், உள்ள நாக விகாரையில் உள்ள சிங்களவர்,
அந்த நேரம் இறால் பொரித்திருப்பார்கள்....  
அந்த வாசம்... காத்துக்கு, கந்தர்மடம் மட்டும் வந்திருக்கும்.   🤪   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

அது நம்ம சிறியர் வீட்ட இருந்து வந்த மணம் தான்.

தாயாரின் கைப்பக்குவம் எண்டு விளப்பம் இல்லாமல், கத்தியில தான் ஏதோ இருக்குது எண்டு ஆட்டையைப் போட்ட மீன்காரர், அதை வித்த காசுக்கு சவூதிக்கு ஏறிட்டார்...

இவர் ஒரு மாசமா கந்தர்மடம் சந்தில நிண்டு ஆளைத்தேடி இருக்கிறார்.

இப்படிதான், இந்து, சென்றல் கிரிக்கெட் நடக்கேக்க, ஜஸ்பழம் ஆசைப்பட்டு, சில்லறை இல்லாமல், ஜயாத்துறை கடையிலும் இல்லை எண்ட, சைக்கிள்ள வித்துக் கொண்டிருந்த ஆளிடம், ரியூசனுக்கு கொடுக்க வைத்திருந்த அம்பது ரூபா மிச்சகாசு தர ஏலுமோ எண்ட, அந்தாளும் ஓ... எண்டு... சொக்ஸ் ஜசை தந்து போட்டு... குடி தம்பி... தாறன்... எண்டு..... நான் மச் பிலாதில நிண்டு போட்டு திரும்பி பார்த்தால் ஆள் எஸ்கேப்...

ரியூசன் காசை குடுத்தன், ஆனா வாத்தியார் சர்யில்ல, வேற ரியூசன் போறன் எண்டு வீட்டில் பொய் சொல்லி..... ஜஸ்கிறீம் காரரை தேடிக் கண்டு பிடிக்க... அவரும் தான்  அங்கால போட்டு, திரும்பி வந்து பார்த்தால் என்னைக் காணவில்லை.... ஆனாலும் இப்ப காசு இல்லை...

அன்று முதல் ஏண்டா இவனோட சகவாசம் வைத்தேன் எண்டு நிணைக்கிற அளவுக்கு நண்பர்களுக்கும் ஜஸ்பழம்  கணக்கில போடண்ண எண்டு வாங்கி, வாங்கி, தம்பி... நூறு ருபாவுக்கு மேல வாங்கி போட்டியள்....கணக்கு சரி... எண்ட

ஆ....நல்ல கத.... கணக்கு பிழை... இப்பதான், இருபது தாண்டி இருக்குது...எண்டு....மூடியை திறந்து எடுத்து அடித்து..... பிறகு.... தூரத்தில் என்னையும் நண்பர்களையும் பார்த்தாலே.... துளைஞ்சுது இண்டைக்கு யாவாரம் எண்டு தலை தெறிக்க சைக்கிள திருப்பிக் கொண்டோடுறதும், திரத்திப்பிடித்து ஜஸ்பழம் சாப்பிட்டதும் ஒரு காலம்.

அவற்ற பிழை.... ஆட்டையைப் போட்டது....

நாதமுனி..... அந்த மீன்காரர், அந்தக்  கத்தியை  வித்து,  
சவூதிக்கு...  பிளேன் ரிக்கற்,  வாங்கிற அளவுக்கு... பெறுமதியான கத்தி அது. :grin:

நீங்கள்.... ஜயாத்துரை  கடையில் கீரை வடை வாங்கி சாப்பிட்டு இருக்கிறீர்களா.
பென்னாம்  பெரிய  அந்தக் கீரை வடை... அப்ப 25  சதம். நல்ல சுவையாக இருக்கும். ❤️
சுவியர், ஈழப்பிரியன் ஆகியோர்   அதனை  சாப்பிட்டதாக ....  முன்பு கூறியிருந்தார்கள்.   :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

நாங்கள் மாணவர்களாக இருந்த காலத்தில் டபுள்டெக்ரர் பஸ் தான்.

இதைவிட கொழும்பில் தண்டவாளத்தில் ஓடிய பஸ்சும் இருந்தது.
இதன் பெயர் ரொலிபஸ் என்று எண்ணுகிறேன்.
என்ன நம்பவே மாட்டீங்களோ?

கொழும்பில் முன்பு டிராம் ஓடியது.வீதியில் சிறிய தண்டவாளம் எல்லாம் பதித்து இருந்தது. அது எனக்குத் தெரியாது ....பின் டபுள் டெக்கர் வந்த காலத்தில் பச்சை நிற  டபுள் டெக்கர் மேலே கரண்ட் கம்பியில் ஓடியது தெரியும்.....இந்த பஸ்கள் அதிகமானவை இங்கிலாந்தில் இருந்து றீகண்டிஷன் செய்து அனுப்பப் பட்டவை......!

ஹங்கேரியில் இருந்து என்று நினைக்கிறன் கொஞ்ச பஸ்கள் இறக்கி இருந்தார்கள். அது தரிப்பிடத்தில் பதிந்து பின் எழும்பி ஓடும். அந்த பஸ் பருத்தித்துறை டிப்போவில் அதிகம் இருந்தது. பின் அதற்கு உதிரிபாகங்கள் தட்டுப்பாடு காரணமாய் நிறுத்தி விட்டார்கள்.....இப்ப இங்கு ஓடும் பஸ்களின் மாதிரிகளில் அப்பவே அங்கு ஓடி இருக்கிறது.....அப்பொழுது நான் அங்கு வேலை செய்கிறன்......!   😇

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

கொழும்பில் முன்பு டிராம் ஓடியது.வீதியில் சிறிய தண்டவாளம் எல்லாம் பதித்து இருந்தது. அது எனக்குத் தெரியாது ....

நான் அந்த தண்டவாளத்தில் ஓடிய டிராமில் ஏறியிருக்கிறேன். அந்தக்காலத்தில் கொழும்புக்குப் போய்வந்தாலே லண்டன்போய்ப் பட்டம்பெற்று வந்ததுபோல் ஊரில் ஒரு மதிப்பு. எங்கள் வீட்டுக்கு முன்வீட்டில் இருந்த வடிவான அக்கா, கொழும்புபோய் வந்தபின், பலாலி வீதியில் வாகனங்களைக் கைகாட்டி மறித்துக் கடந்ததை பலர் வேடிக்கைபார்த்துக் கேலிசெய்ததும் ஞாபகம் வருகிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

கொழும்பில் முன்பு டிராம் ஓடியது.வீதியில் சிறிய தண்டவாளம் எல்லாம் பதித்து இருந்தது. அது எனக்குத் தெரியாது ....பின் டபுள் டெக்கர் வந்த காலத்தில் பச்சை நிற  டபுள் டெக்கர் மேலே கரண்ட் கம்பியில் ஓடியது தெரியும்.....இந்த பஸ்கள் அதிகமானவை இங்கிலாந்தில் இருந்து றீகண்டிஷன் செய்து அனுப்பப் பட்டவை......!

ஹங்கேரியில் இருந்து என்று நினைக்கிறன் கொஞ்ச பஸ்கள் இறக்கி இருந்தார்கள். அது தரிப்பிடத்தில் பதிந்து பின் எழும்பி ஓடும். அந்த பஸ் பருத்தித்துறை டிப்போவில் அதிகம் இருந்தது. பின் அதற்கு உதிரிபாகங்கள் தட்டுப்பாடு காரணமாய் நிறுத்தி விட்டார்கள்.....இப்ப இங்கு ஓடும் பஸ்களின் மாதிரிகளில் அப்பவே அங்கு ஓடி இருக்கிறது.....அப்பொழுது நான் அங்கு வேலை செய்கிறன்......!   😇

COLOMBO TRAMWAYS - DOWN MEMORY LANE | History of Ceylon

கொழும்பில்.... "ட்ராம்"  தண்டவாளங்களை, நானும் பார்த்திருக்கின்றேன். 
ஏறியது இல்லை. இது, அதுவாக இருக்கலாம்... என நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

நான் அந்த தண்டவாளத்தில் ஓடிய டிராமில் ஏறியிருக்கிறேன். அந்தக்காலத்தில் கொழும்புக்குப் போய்வந்தாலே லண்டன்போய்ப் பட்டம்பெற்று வந்ததுபோல் ஊரில் ஒரு மதிப்பு. எங்கள் வீட்டுக்கு முன்வீட்டில் இருந்த வடிவான அக்கா, கொழும்புபோய் வந்தபின், பலாலி வீதியில் வாகனங்களைக் கைகாட்டி மறித்துக் கடந்ததை பலர் வேடிக்கைபார்த்துக் கேலிசெய்ததும் ஞாபகம் வருகிறது. 

Electric_tramway_in_Colombo_%2C_Sri_Lanka.jpg

Pettah Street scene Colombo c1950s Sri Lanka | Street scenes, Sri ...

COLOMBO TRAMWAYS - DOWN MEMORY LANE | History of Ceylon

பாஞ்ச்  அண்ணை ... 
அன்றைய... கொழும்பு, மாட்டு வண்டிலுடன்... இருப்பதையும்,
இன்று... நம்ப முடியாத அளவுக்கு,  முன்னேற்றம்  அடைந்து  இருப்பதை பார்க்க, 
அதிசயமாக உள்ளது.

Edited by தமிழ் சிறி

39 minutes ago, தமிழ் சிறி said:

COLOMBO TRAMWAYS - DOWN MEMORY LANE | History of Ceylon

கொழும்பில்.... "ட்ராம்"  தண்டவாளங்களை, நானும் பார்த்திருக்கின்றேன். 
ஏறியது இல்லை. இது, அதுவாக இருக்கலாம்... என நினைக்கின்றேன்.

சிறிலங்காவில இதுவெல்லாம் இருந்திருக்கு என்று இப்ப தான் கேள்விப்படுறன்...அதுவும் அந்த காலத்திலேயே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழினி said:

சிறிலங்காவில இதுவெல்லாம் இருந்திருக்கு என்று இப்ப தான் கேள்விப்படுறன்...அதுவும் அந்த காலத்திலேயே!

ஹ்ம்ம்... என்ன செய்வது, தமிழினி.
சிங்கப்பூர் மாதிரி, இருக்க வேண்டிய நாடு,
புத்த சமய பிக்குகளும், சிங்கள  இனவாதிகளும்.... 
அந்த நாட்டை... சின்னா, பின்னமாக்கி  விட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2020 at 19:11, ரதி said:

உண்மையாகவே அந்த காலத்தில இலங்கையில் டபுள் டெக்கர் பஸ் இருந்ததா 

நானே பலமுறை ஏறி இருக்கிறேன். யாழப்பாணத்தில் பல பஸ்கள் ஓடியது? அந்தக்கால அண்ணைரைட் நாடகத்திலே அண்ணை மேலே போற பஸ் எங்கே போகுது? கீழே போற பஸ் எங்கே போகுது என்ற பகிடியெல்லாம் இருக்கு.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொரோனா முடக்கத்தின் பிரதிபலன் இன்று  இரண்டாம் தடவையாக முடியிறக்கத்தில்  ஈடுபட்டேன்.பாரியாரின் சிறு சிறு டிங்கர் வேலையின் உதவியுடன் சிறப்பாக நிறைவு பெற்றது.

டிப்ஸ் உட்பட 25 யூரோ நிகர இலாபம்.😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.