Jump to content

நிவேதாவின் சமையல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, குமாரசாமி said:

ஒரு சதத்துக்கும் உதவாத கறி.வாயிலையும் வைக்கேலாது. உதோடை சாப்பிடுற நேரம் இரண்டு பச்சை மிளகாயும்  எங்கடை சின்ன வெங்காயத்தோடையும் நாலு கவளம் சோறு திண்டுட்டு போகலாம்.பத்தியப்பட்ட மாதிரியும் இருக்கும். :grin:
இனிப்பாருங்கோ அக்காவின்ரை அடுத்தகறி அன்னாசிப்பழ கறியாய்த்தானிருக்கும்.😁

நாலையும் சாப்பிட்டுப் பார்க்கவேணும் கண்டியளோ. அடுத்த பன்னீர் செய்து போடுறன் பாருங்கோ கட்டாயம் பிடிக்கும்.😀

13 hours ago, Nathamuni said:

எனக்கென்னவோ, உந்த பண்ணீர் (கடும்பு) பிடிப்பதில்லை. 

உது வடவர் கறி தானே. நம்மூரில் இல்லை.

கடும்பு என்பது மாடு கன்று போட்ட உடன் சுரக்கும் பால். இதை பால் கட்டி என்று சொல்லலாம் நாதமுனி

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாலையும் சாப்பிட்டுப் பார்க்கவேணும் கண்டியளோ. அடுத்த பன்னீர் செய்து போடுறன் பாருங்கோ கட்டாயம் பிடிக்கும்.😀

கடும்பு என்பது மாடு கன்று போட்ட உடன் சுரக்கும் பால். இதை பால் கட்டி என்று சொல்லலாம் நாதமுனி

இது பாற்கட்டி அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவைத்தாச்சு, Like க்கு போட்டாச்சு. 

இங்கு ஊர் மாதிரி கிழங்கு கிடைக்குதில்லை லண்டனிலிருந்து பார்சல் பண்ணிவிட முடியுமா???😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, Nathamuni said:

இது பாற்கட்டி அல்ல. 

1 minute ago, உடையார் said:

சுவைத்தாச்சு, Like க்கு போட்டாச்சு. 

இங்கு ஊர் மாதிரி கிழங்கு கிடைக்குதில்லை லண்டனிலிருந்து பார்சல் பண்ணிவிட முடியுமா???😎

உள் பெட்டியில் முகவரி போடுங்கள். உடனே அனுப்பிவைக்கலாம் உடையார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பன்னீர் கறி - Paneer Curry

Image may contain: food

பன்னீர் கறிக்கு பால் விட்டு சமைப்பதை அதுவும் தே.பால் விட்டு சமைப்பதை இப்பத் தான் பார்க்கிறேன் 
கொத்தமல்லி இலை எப்பவும் கறியை இறக்கிய பின்பே அல்லது அடுப்பை அணைத்த பின்னே போட  வேண்டும் 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, Nathamuni said:

எனக்கென்னவோ, உந்த பண்ணீர் (கடும்பு) பிடிப்பதில்லை. 

உது வடவர் கறி தானே. நம்மூரில் இல்லை.

உங்களுக்கு பன்னீர்  பிடிக்காட்டில் பிடிக்கவில்லை என்று எழுதுங்கள் ...அதென்ன "வடவன்களின் சாப்பாடு"
 என்பதற்காக பிடிக்கவில்லை என்பது? அவர்களது சப்பாத்தி ,பூரி ,பரோட்டா மட்டும் பிடிக்குமோ ?
அண்மைய உங்களது கருத்துக்களை அவதானித்தலில் ஒரு திமிரும்,உங்களை விட்டால் மற்றவருக்கு ஒரு மண்ணும் தெரியாது என்ற நக்கலும் காணப்படுது...குறைத்து கொள்ளுங்கள் ...நல்லதிற்கில்லை 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, ரதி said:

அட இங்க பாரடா.... அண்ணனின் அதே திமிருடன் தங்கையார்...

வடவர்களின் பண்ணீருக்கும், உங்களுக்கும் என்ன பாசம் என்று சொல்லக்கூடாதா அக்கோய்?

‘’வடவன்களின் சாப்பாடு" என்பதற்காக பிடிக்கவில்லை என்று எங்கே சொன்னேன்?

முக்கியமாக, நான் வடவர் கறி என்று தான் சொன்னேன், நீங்கள் ஏன் வடவன் என்று திணிக்கிறீர்கள்?

உங்களுக்கு விளப்பம் காணாது எண்டால், அடுத்தவர் சொன்னால், திமிராக்கா? உதென்ன கதை இது?

முதலில்,  பரோட்டா யாருடையது எண்டு சொல்லுங்கோ. பிறகு மிச்சத்தினை கதைப்போம்.

நீங்களும் தான், உந்த கொம்மான் பத்தி, உங்களது கருத்துக்களை அவதானித்தலில்,  உங்களை விட்டால் மற்றவருக்கு ஒரு மண்ணும் தெரியாது என்ற நக்கலும் காணப்படுது...குறைத்து கொள்ளுங்கள் ...நல்லதிற்கில்லை... 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Nathamuni said:

நான் முதல் இதை பார்க்கும் போது இரண்டு ,மூன்று வரியில் பதில் இருந்தது ...இப்ப பெரிய பந்தியே இருக்கு ...சுட்டுட்டுதுதோ😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, ரதி said:

நான் முதல் இதை பார்க்கும் போது இரண்டு ,மூன்று வரியில் பதில் இருந்தது ...இப்ப பெரிய பந்தியே இருக்கு ...சுட்டுட்டுதுதோ😂

உதில்லை என்ன சுடுறதுக்கு இருக்குதக்கோய். இல்லாத ஒன்றை சொல்லி, இழுக்கும் போதே, அக்காவின்.... விளையாட்டு எண்டு தெரிஞ்சு போச்சுதே.

நீங்கள் வேற வாயும், வயிறுமாய் இருக்கிறியள் எண்டு சொல்லுறியள்... பின்ன, தம்பி இதுக்கெல்லாம் கோவிக்கிறதா?
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ரதி said:

பன்னீர் கறிக்கு பால் விட்டு சமைப்பதை அதுவும் தே.பால் விட்டு சமைப்பதை இப்பத் தான் பார்க்கிறேன் 
கொத்தமல்லி இலை எப்பவும் கறியை இறக்கிய பின்பே அல்லது அடுப்பை அணைத்த பின்னே போட  வேண்டும் 
 
மற்றவர்கள் செய்வதுபோலதான் செய்யவேண்டும் என்று இல்லைத்தானே ரதி. செய்து பார்த்து நன்றாக இருந்தால் அது புது செய்முறை அவ்வளவு தான்.

Posted

பன்னீர்  கறியை விட  சில்லி பன்னீர், பன்னீர் பட்டர் மசாலா இரண்டும் சுவையாக இருக்கும். அதை செய்து இணைத்துவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமே அடுப்பை கொஞ்சம் நிப்பாட்டிப்போட்டு அங்கால போய் ஒருக்காய் விலக்கு பிடித்து விடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஜெகதா துரை said:

பன்னீர்  கறியை விட  சில்லி பன்னீர், பன்னீர் பட்டர் மசாலா இரண்டும் சுவையாக இருக்கும். அதை செய்து இணைத்துவிடுங்கள்.

நானும் அதைத்தான் நினைத்தேன்.

😀

24 minutes ago, சுவைப்பிரியன் said:

சுமே அடுப்பை கொஞ்சம் நிப்பாட்டிப்போட்டு அங்கால போய் ஒருக்காய் விலக்கு பிடித்து விடுங்கோ.

பிறகு நான் கல்லெறி வாங்கவோ ????😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வறுத்த அரிசி நூடில்ஸ் - Stir fried Rice Noodle

Image may contain: food

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோழி இறைச்சிச் சுருள் - Chicken Wrap

Image may contain: food

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வருகைக்கும் பச்சைக்கும் நன்றி ரதி,சுவி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீன் குழம்பு - Fish Curry

Image may contain: food

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீனுக்கு முருங்கைகாய் போடுறதா..🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, யாயினி said:

மீனுக்கு முருங்கைகாய் போடுறதா..🤔

போட்டுச் செய்து பாருங்கள். அத்தனை சுவை.😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, யாயினி said:

மீனுக்கு முருங்கைகாய் போடுறதா..🤔

அக்கா சொன்னால் கேக்க வேணும்.:grin:
முருங்கைக்காய்க்கு மீன் போடுறது நானும் கேள்விப்படேல்லை தான்.சாப்பிடவுமில்லை.என்ன செய்யிறது எங்கடை விதியை நொந்து போட்டு இருக்க வேண்டியதுதான்...:(

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, குமாரசாமி said:

அக்கா சொன்னால் கேக்க வேணும்.:grin:
முருங்கைக்காய்க்கு மீன் போடுறது நானும் கேள்விப்படேல்லை தான்.சாப்பிடவுமில்லை.என்ன செய்யிறது எங்கடை விதியை நொந்து போட்டு இருக்க வேண்டியதுதான்...:(

நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சாப்பிடேல்லை. நல்லாயிருக்கும் என்று சாப்பிட்ட ஆக்கள் சொல்லியிருக்கினம்.. இப்ப ஒருக்கா செய்யத்தான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, Nathamuni said:

நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சாப்பிடேல்லை. நல்லாயிருக்கும் என்று சாப்பிட்ட ஆக்கள் சொல்லியிருக்கினம்.. இப்ப ஒருக்கா செய்யத்தான் இருக்கு.

இப்ப நான் எப்பிடி யோசிக்கிறன் எண்டால் முருக்கங்காய் சாப்பிடுறது ஒரு மினைக்கெட்ட வேலை அதோடை மீன் முள்ளையும் பிரிச்செடுத்து ......முள்ளு வேறை அப்பப்ப குத்த... எரிச்சல் வராது??????
ஐ திங் மாசிக்கருவாடு ஒகே.😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, குமாரசாமி said:

இப்ப நான் எப்பிடி யோசிக்கிறன் எண்டால் முருக்கங்காய் சாப்பிடுறது ஒரு மினைக்கெட்ட வேலை அதோடை மீன் முள்ளையும் பிரிச்செடுத்து ......முள்ளு வேறை அப்பப்ப குத்த... எரிச்சல் வராது??????
ஐ திங் மாசிக்கருவாடு ஒகே.😎

விசயம் என்னெண்டா, புது பாத்திரங்கள், அந்தமாதிரி லைட்டிங், பொறுமையான விளக்கம் எண்டு.... முன்னேற்றம் தெரியுது.

எத்தனை தரம். தொண்டை கிளிய, ச...ச.. கை நோக எழுதி இருப்போம்.... நம்ப ஈழப்பிரியன், உதென்ன டச்சு காலத்தைய பாத்திரமே எண்டு வேற கேட்டுப் போட்டார், தாங்க ஏலாம.

இனிப் பாருங்க.... பழைய வீடியோக்களை, கிளறிப் பாத்து, ஓ மை கோட்... இப்படியும், செய்யிறதே.... இதுக்கு தான்... திரும்ப, திரும்ப சொல்லியிருக்கினம்..... நேரம் கிடைக்கும் போது, திரும்பவும் செய்து போடவேணும் எண்டு நிணைக்கப்போறா.

இப்ப பாருங்கோவன், அவவுக்கும் சந்தோசம்... நமக்கும் நிம்மதி. ஏனென்டா, உலகம் முழுவதும், பார்க்கிற ஆக்கள், உது இலண்டணில இருந்து தான் போடப்படுது எண்டு இனி நம்புவினம் எல்லே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Nathamuni said:

விசயம் என்னெண்டா, புது பாத்திரங்கள், அந்தமாதிரி லைட்டிங், பொறுமையான விளக்கம் எண்டு.... முன்னேற்றம் தெரியுது..

அக்கா தன்ரை மெசொபொத்தேமியா சுமேரியர் எண்ட பெயருக்கு ஏற்ற மாதிரி சட்டிபானையும் அறப்பழசாய் இருக்க வேணும் எண்டு நினைச்சாவோ தெரியாது...😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, குமாரசாமி said:

அக்கா சொன்னால் கேக்க வேணும்.:grin:
முருங்கைக்காய்க்கு மீன் போடுறது நானும் கேள்விப்படேல்லை தான்.சாப்பிடவுமில்லை.என்ன செய்யிறது எங்கடை விதியை நொந்து போட்டு இருக்க வேண்டியதுதான்...:(

ஒரேமாதிரி சாப்பிடாமல் அதை இதை போட்டுச் சமைச்சுச் சாப்பிட்டுப் பார்க்கவேணும். அதைவிட்டுப்போட்டு ......... மெயின் செப்ஆ இருந்து என்ன பிரயோசனம். 😀

18 hours ago, Nathamuni said:

நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சாப்பிடேல்லை. நல்லாயிருக்கும் என்று சாப்பிட்ட ஆக்கள் சொல்லியிருக்கினம்.. இப்ப ஒருக்கா செய்யத்தான் இருக்கு.

செய்து சாப்பிட்டுவிட்டு உவருக்குச் சொல்லுங்கோ.வித்தியாசமான சுவை.

17 hours ago, குமாரசாமி said:

இப்ப நான் எப்பிடி யோசிக்கிறன் எண்டால் முருக்கங்காய் சாப்பிடுறது ஒரு மினைக்கெட்ட வேலை அதோடை மீன் முள்ளையும் பிரிச்செடுத்து ......முள்ளு வேறை அப்பப்ப குத்த... எரிச்சல் வராது??????
ஐ திங் மாசிக்கருவாடு ஒகே.😎

முருங்கைக்காய்க் கறிக்கு மாசிபோடலாம். ஆனால் மீனுக்கு மாசி போடக்கூடாது.😃

10 hours ago, Nathamuni said:

விசயம் என்னெண்டா, புது பாத்திரங்கள், அந்தமாதிரி லைட்டிங், பொறுமையான விளக்கம் எண்டு.... முன்னேற்றம் தெரியுது.

எத்தனை தரம். தொண்டை கிளிய, ச...ச.. கை நோக எழுதி இருப்போம்.... நம்ப ஈழப்பிரியன், உதென்ன டச்சு காலத்தைய பாத்திரமே எண்டு வேற கேட்டுப் போட்டார், தாங்க ஏலாம.

இனிப் பாருங்க.... பழைய வீடியோக்களை, கிளறிப் பாத்து, ஓ மை கோட்... இப்படியும், செய்யிறதே.... இதுக்கு தான்... திரும்ப, திரும்ப சொல்லியிருக்கினம்..... நேரம் கிடைக்கும் போது, திரும்பவும் செய்து போடவேணும் எண்டு நிணைக்கப்போறா.

இப்ப பாருங்கோவன், அவவுக்கும் சந்தோசம்... நமக்கும் நிம்மதி. ஏனென்டா, உலகம் முழுவதும், பார்க்கிற ஆக்கள், உது இலண்டணில இருந்து தான் போடப்படுது எண்டு இனி நம்புவினம் எல்லே.

ஏற்கனவே நேற்று பார்த்தாச்சு. பழசுகளை திருப்பச்  செய்யப்போறன். நன்றி. 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.