Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிவேதாவின் சமையல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

அவர் கதைக்க முதலே சிவாஸ்றீகல் என்பாரே?

என்ன இது..... நாங்கள் இரண்டு போத்திலை வாங்கி ஒண்டை நிழலியருக்கு குடுத்துட்டு பில்லை ரோயல் ஃபைமிலி  நிவேதாவுக்கு அனுப்பி விட்டால் போச்சு. 😁

  • Replies 753
  • Views 89k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

என்ன இது..... நாங்கள் இரண்டு போத்திலை வாங்கி ஒண்டை நிழலியருக்கு குடுத்துட்டு பில்லை ரோயல் ஃபைமிலி  நிவேதாவுக்கு அனுப்பி விட்டால் போச்சு. 😁

கொஞ்சம் பொறுங்கோ யுரியூப் உழைப்பு வரட்டும் அப்புறமா பாருங்கோவன் விளையாட்டை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அழிஞ்சது எண்டால் கள்ளன் நிழலியை கேட்டுப்பாருங்கோ. அவர்தான் தூக்கிக்கொண்டு போய் ஒளிக்கிறது.மறைக்கிறது,வெட்டுறது நிமித்துறது   துலைஞ்சதை கிண்டி எடுக்கிறது எண்டு எல்லாத்திலையும் ஆளுக்கு சேவீஸ். 😎

இப்ப புதுசா ஒரு விசயம் கவனிச்சியளே?

முந்தி, பெயர்களை போட்டு, நான் தான் வெட்டினேன், இப்ப என்ன சொல்கிறாய் எண்ட மாதிரி நிப்பினம்.... இப்ப யாழ் நிர்வாகம் எண்ட பொது பெயரிலே மட்டுறுத்தல் நடக்குது.

பின்ன, பிடிச்சு பாருங்கோவன்....  :grin:

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அழிஞ்சது எண்டால் கள்ளன் நிழலியை கேட்டுப்பாருங்கோ. அவர்தான் தூக்கிக்கொண்டு போய் ஒளிக்கிறது.மறைக்கிறது,வெட்டுறது நிமித்துறது   துலைஞ்சதை கிண்டி எடுக்கிறது எண்டு எல்லாத்திலையும் ஆளுக்கு சேவீஸ். 😎

என் போனில் அழிச்சிட்டன் எண்டு சொன்னனான்.😀

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் போனில் அழிச்சிட்டன் எண்டு சொன்னனான்.😀

உங்கட போனிலை அழிச்சது பத்தி தானே கதைக்கிறோம்.... ஹாக்கர்ஸ் பூந்து வேலையை காட்டுறது தெரியாதே? 🤦‍♀️😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கம்புமாப் பிட்டும் வெந்தையக்  குழம்பும்

Image may contain: foodImage may contain: food

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, Nathamuni said:

இப்ப புதுசா ஒரு விசயம் கவனிச்சியளே?

முந்தி, பெயர்களை போட்டு, நான் தான் வெட்டினேன், இப்ப என்ன சொல்கிறாய் எண்ட மாதிரி நிப்பினம்.... இப்ப யாழ் நிர்வாகம் எண்ட பொது பெயரிலே மட்டுறுத்தல் நடக்குது.

பின்ன, பிடிச்சு பாருங்கோவன்....  :grin:

 வர வர மாஃபியா கூட்டம் மாதிரியே யாழ்கள நிர்வாகம் வந்திட்டுது.😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

உங்கட போனிலை அழிச்சது பத்தி தானே கதைக்கிறோம்.... ஹாக்கர்ஸ் பூந்து வேலையை காட்டுறது தெரியாதே? 🤦‍♀️😜

நான் தான் deta வை நிப்பாட்டி வச்சிட்டன். இன்றுதான் கண்டுபிடிச்சன்.  😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கம்புமாப் பிட்டும் வெந்தையக்  குழம்பும்

Image may contain: foodImage may contain: food

மேடம்! கம்பு மா என்னத்துக்கு நல்லது? 

மற்றது உது வெந்தய குழம்போ இல்லாட்டி முட்டை குழம்போ? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

மேடம்! கம்பு மா என்னத்துக்கு நல்லது? 

மற்றது உது வெந்தய குழம்போ இல்லாட்டி முட்டை குழம்போ? :cool:

"வெந்த முட்டையிட்ட  வெந்தயக் குழம்பு"  .........!   😁

  • கருத்துக்கள உறவுகள்

ம் பார்க்க நல்லாத்தான் இருக்கு.
இதை முட்டையை எடுத்துப் போட்டு ஒரு படம்
முட்டையோடு ஒரு படம் போட்டுவிட்டால் இரண்டு கறியாகத் தெரியும்.
முட்டைக் குழம்பா வெந்தயக் குழம்பா என்ற பிரச்சனையும் வராது.

2 hours ago, குமாரசாமி said:

மேடம்! கம்பு மா என்னத்துக்கு நல்லது? 

மற்றது உது வெந்தய குழம்போ இல்லாட்டி முட்டை குழம்போ? :cool:

தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.

100 கிராம் கம்பில்,

  • 42 கிராம் கால்சியம் சத்து உள்ளது.
  • 11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.
  • பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது.
  • ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது.
  • நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.

வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.

என்று விக்கி பீடியா சொல்லுது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கம்புமாப் பிட்டும் வெந்தையக்  குழம்பும்

Image may contain: foodImage may contain: food

இது வறுத்த மாவா?...எந்த தானியம்[வரகு ,கம்பு]?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

மேடம்! கம்பு மா என்னத்துக்கு நல்லது? 

மற்றது உது வெந்தய குழம்போ இல்லாட்டி முட்டை குழம்போ? :cool:

ஆ..ஆ தாத்தா .. 😄நான் கேட்க வந்ததை கேட்டுட்டார்.😀

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

ம் பார்க்க நல்லாத்தான் இருக்கு.
இதை முட்டையை எடுத்துப் போட்டு ஒரு படம்
முட்டையோடு ஒரு படம் போட்டுவிட்டால் இரண்டு கறியாகத் தெரியும்.
முட்டைக் குழம்பா வெந்தயக் குழம்பா என்ற பிரச்சனையும் வராது.

தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.

100 கிராம் கம்பில்,

  • 42 கிராம் கால்சியம் சத்து உள்ளது.
  • 11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.
  • பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது.
  • ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது.
  • நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.

வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.

என்று விக்கி பீடியா சொல்லுது.

இஞ்ச பாருங்கோ....

வேற திரியில கேணையன் எண்டால் என்ன எண்டு விளப்பம் கேட்டு அலம்பறை நடக்குது.

இது இலங்கையில பாவனையில் இருக்கிற சொல்லே அல்ல. தமிழகத்து பாவனை சொல் எண்டு யாரும் சொல்லாமலே வெட்டி, விளையாடுகினம்.

அதேபோல கம்பு என்ற சொல்லும் தமிழகத்து சொல்லுதான். 

இலங்கையில, சிங்கள, தமிழ் மக்கள் குரக்கன் என்று சொல்வார்கள். ஆகவே இது குரக்கன் மா என்று நினைக்கிறேன். 

அக்கா வந்து விளங்கப்படுத்துவா.

  • கருத்துக்கள உறவுகள்

http://swathys-inspiredkitchen.blogspot.com/2019/05/health-benefits-of-millet.html?m=1.இதுக்கு ஏன் அக்காவைக் கூப்பிடுறீங்கள்..இந்தாப் பாருங்க இதா கம்பு. 

pearl-millet-500x500.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

மேடம்! கம்பு மா என்னத்துக்கு நல்லது? 

மற்றது உது வெந்தய குழம்போ இல்லாட்டி முட்டை குழம்போ? :cool:

உது முட்டை போட்ட வெந்தையக் குழம்பு  😀

கம்பு

கம்பு பல அத்தியாவசிய சத்துகள் நிறைந்தது.இதை தினந்தோறும் காலையில் கூழ் அல்லது களியாக சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்புகள் தங்குவதை தடுத்து, தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை தந்து, உடல் பலத்தை பெருக்குகிறது.

  • நீரிழிவு நோயாளிகள் அரிசிக்கு மாற்றாக தினமும் கம்பு கூழ், களி, தோசை போன்றவற்றை செய்து சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மேலும் கம்பு இழந்த உடல்சக்திகளை மீண்டும் தர வல்ல ஆற்றல் படைத்தது.
  • சிறுதானியமான கம்பில் உடலுக்கு தேவையான பல சத்துகளும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த கம்பை தொடர்ந்து உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு திறன் அதிகரித்து, உடலை பல நோய்களின் தாக்கத்திலிருந்து காக்கிறது.

  • கம்பு நார்சத்து அதிகம் கொண்டதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் புண்கள் கொண்டவர்கள் தொடர்ந்து உண்டு வருவதால் வயிறு சம்பந்தமான அத்தனை குறைபாடுகளையும் இது நீக்கும்.
  • உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கம்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை உண்பதால் பசியை சரியான நேரத்தில் மட்டுமே எடுக்கச் செய்து, இவர்களின் உடல் எடையை குறைத்து விடும்.
  • கம்பு உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
  • கம்பு அதிகம் உட்கொண்டால், அவர்களின் ரத்தத்தில் இருக்கும் செல்களின் பிராண வாயு உபயோகிப்பை அதிகப்படுத்துவதால், அவர்களின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, தோல் பளப்பளபையும் இளமை தோற்றத்தையும் தருகிறது. மேலும் முதுமை அடைவதை தாமதப் படுத்துகிறது.

  • புதியதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் தினமும் கம்பு கூழ் அல்லது களி போன்றவற்றை உண்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
  • பருவமடைந்த பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சமயங்களில் அதிக ரத்த போக்கும், அடிவயிற்று வலியும் ஏற்படுகின்றன. இப்படியான நேரங்களில் இளம் சூடாக கம்பு கூழ் அல்லது கம்பு சூப் அருந்த மேற்கண்ட பிரச்சனைகள் தீரும்.
  • கம்பு ரத்தத்தில் இறுக்கத்தன்மையை தளர்த்தி பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை தடுத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

  • கம்பு ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.
  • முடி நன்கு தழைத்து வளர காரணமாகும் கெராட்டீன் எனும் புரதம் கம்பில் அதிகம் நிறைந்துள்ளது. இதை உணவாக அதிகம் உண்பவர்களுக்கு முடி கொட்டுவது குறையும்.
  • சிலருக்கு சுற்றுப்புற சூழலாலும், உடலில் ஏற்படும் மாற்றங்களினாலும் உடல் அதிகம் வெப்பமடைந்து, அதனால் சில பாதிப்புகளை சந்திக்கின்றனர். இவர்கள் தினமும் காலை வேளைகளில் கம்பு கூழை பருகி வந்தால் உடல் அதிகம் உஷ்ணமடைவது குறையும்.

  • கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
  •  உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
  • கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக்  கொடுக்கும்.
  • உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக  வாழலாம்.

https://www.unavemarunthutamil.com/கம்பின்-மருத்துவ-குணங்கள/

10 hours ago, suvy said:

"வெந்த முட்டையிட்ட  வெந்தயக் குழம்பு"  .........!   😁

உங்களுக்குத் தெரியுது 😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இது வறுத்த மாவா?...எந்த தானியம்[வரகு ,கம்பு]?

இது விபி & சன்ஸ்சில் விக்கிது ரதி. வறுக்கத் தேவை இல்லை. அப்படியே போட்டு வைக்கலாம். பெரிய விலை யும் இல்லை. எம்மவர் கடைகளில் இதை மாவாக  நான் காணவில்லை. நான் மாறி வரகு என்று கூறிவிட்டேன். வரகு என்பது குரக்கன். இது கம்பு மா. பார்க்க ஒரு சாம்பலும் பழுப்பும் கலந்ததுபோல் இருக்கும்.

No photo description available.

2 hours ago, யாயினி said:

ஆ..ஆ தாத்தா .. 😄நான் கேட்க வந்ததை கேட்டுட்டார்.😀

வீடியோவை வடிவாக கேட்கவேணும். முட்டைபோட்ட வெந்தையக் குழம்பு என்று சொல்லியிருக்கிறன்.  😃

8 hours ago, ஈழப்பிரியன் said:

ம் பார்க்க நல்லாத்தான் இருக்கு.
இதை முட்டையை எடுத்துப் போட்டு ஒரு படம்
முட்டையோடு ஒரு படம் போட்டுவிட்டால் இரண்டு கறியாகத் தெரியும்.
முட்டைக் குழம்பா வெந்தயக் குழம்பா என்ற பிரச்சனையும் வராது.

தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.

100 கிராம் கம்பில்,

  • 42 கிராம் கால்சியம் சத்து உள்ளது.
  • 11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.
  • பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது.
  • ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது.
  • நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.

வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.

என்று விக்கி பீடியா சொல்லுது.

நன்றி அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இஞ்ச பாருங்கோ....

வேற திரியில கேணையன் எண்டால் என்ன எண்டு விளப்பம் கேட்டு அலம்பறை நடக்குது.

இது இலங்கையில பாவனையில் இருக்கிற சொல்லே அல்ல. தமிழகத்து பாவனை சொல் எண்டு யாரும் சொல்லாமலே வெட்டி, விளையாடுகினம்.

அதேபோல கம்பு என்ற சொல்லும் தமிழகத்து சொல்லுதான். 

இலங்கையில, சிங்கள, தமிழ் மக்கள் குரக்கன் என்று சொல்வார்கள். ஆகவே இது குரக்கன் மா என்று நினைக்கிறேன். 

அக்கா வந்து விளங்கப்படுத்துவா.

120px-Pearl_millet_after_combine_harvest  கம்பு                               120px-Kodo_Millet_in_Chhattisgarh.jpgகுரக்கன், வரகு 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது விபி & சன்ஸ்சில் விக்கிது ரதி. வறுக்கத் தேவை இல்லை. அப்படியே போட்டு வைக்கலாம். பெரிய விலை யும் இல்லை. எம்மவர் கடைகளில் இதை மாவாக  நான் காணவில்லை. நான் மாறி வரகு என்று கூறிவிட்டேன். வரகு என்பது குரக்கன். இது கம்பு மா. பார்க்க ஒரு சாம்பலும் பழுப்பும் கலந்ததுபோல் இருக்கும்.

No photo description available.

வீடியோவை வடிவாக கேட்கவேணும். முட்டைபோட்ட வெந்தையக் குழம்பு என்று சொல்லியிருக்கிறன்.  😃

நன்றி அண்ணா

முதலில் நீங்கள்  சமையல் செய்யும் போது பாதி ஆங்கிலம் பாதி தமிழில் பேசுவதை குறைத்து ஒரு மொழியில் சொல்லுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, யாயினி said:

முதலில் நீங்கள்  சமையல் செய்யும் போது பாதி ஆங்கிலம் பாதி தமிழில் பேசுவதை குறைத்து ஒரு மொழியில் சொல்லுங்கள்.

நானும் அதை ஒவ்வொரு தடவையும் எண்ணுவது. இனி கவனத்தில் எடுக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உது முட்டை போட்ட வெந்தையக் குழம்பு

உங்களின் உணவு பார்வைக்கு ருசியாக இருக்கிறது. நாவுக்கும் ருசியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

ஆனால், அவித்த முட்டையில் எந்த விதமான குழம்பு என்ற idea வே தனிப்பட்ட முறையில் பிடிக்காதது.

ஏனெனில், முட்டை அதனுடைய உண்மையான ருசி, மணம் மற்றும் மிருதுவாக கடிபடும் தன்மை இழந்து விடும்.

ஆனால். எஞ்சிய மற்றும் மிஞ்சிய மீன் குழம்பை சூடாக்கி, முட்டையை அதற்குள் அமிழ்ந்தும் மேலே குழம்பின் மேற்பரப்பில் தெரிந்தும் தெரியாத அளவு மீன் குழம்பில் முட்டை மிருதுவாக poach செய்து முட்டையையும், மற்றும் வெண்கரு கலந்து அவிந்த தடித்த மீன் குழம்பின் சுவை சொல்லி மாளாது.   

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கம்புமாப் பிட்டும் வெந்தையக்  குழம்பும்

காம்புமாப் பிட்டு இதுவரை சாப்பிட்டதில்லை அடுத்தமுறை கடைக்கு போனல் வாங்கி செய்து பார்க்கனும், நன்றி பகிர்வுக்கு - 

புட்டும் வெங்காய குழம்பும் நல்ல கொம்பினேஷன்.

புட்டும் முட்டை பொரியலும் அம்மா பள்ளி கூடம் கொண்டு போக தருவா, மதிய இடைவேளை எப்பாட வருமென்று காத்துக்கொண்டிருப்பேன், ஊர் முட்டை பொரியலின் சுவை இங்கில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

நீங்கள் உங்கு கோழி வளர்ப்பதில்லையா ????

7 hours ago, Kadancha said:

உங்களின் உணவு பார்வைக்கு ருசியாக இருக்கிறது. நாவுக்கும் ருசியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

ஆனால், அவித்த முட்டையில் எந்த விதமான குழம்பு என்ற idea வே தனிப்பட்ட முறையில் பிடிக்காதது.

ஏனெனில், முட்டை அதனுடைய உண்மையான ருசி, மணம் மற்றும் மிருதுவாக கடிபடும் தன்மை இழந்து விடும்.

ஆனால். எஞ்சிய மற்றும் மிஞ்சிய மீன் குழம்பை சூடாக்கி, முட்டையை அதற்குள் அமிழ்ந்தும் மேலே குழம்பின் மேற்பரப்பில் தெரிந்தும் தெரியாத அளவு மீன் குழம்பில் முட்டை மிருதுவாக poach செய்து முட்டையையும், மற்றும் வெண்கரு கலந்து அவிந்த தடித்த மீன் குழம்பின் சுவை சொல்லி மாளாது.   

சரி அதையும் ஒருக்காச் செய்து சாப்பிட்டுப் பாப்பம் 😀

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் உங்கு கோழி வளர்ப்பதில்லையா ????

எனக்கு வளர்க்க ஆசை, மனைவிதான் விடுகின்றா இல்லை 😪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

எனக்கு வளர்க்க ஆசை, மனைவிதான் விடுகின்றா இல்லை 😪

மனைவியிடம் இதமா பதமாக கேட்டுப் பார்த்தியளா ????😃😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.