Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர தொட்ட நீ கெட்ட ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த இயக்குனர் மோகன்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • Replies 116
  • Views 11.8k
  • Created
  • Last Reply
41 minutes ago, nedukkalapoovan said:

இது போன்ற தெரு பொறுக்கித்தனமான பண்பாடற்ற  கருத்துக்களை உள்ளடக்கிய வீடியோக்களை ரசிக்கும் அளவுக்கு நெடுக்கஸின் ரசனை தாழ்ந்து போனது ஏன்?  

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, tulpen said:

இது போன்ற தெரு பொறுக்கித்தனமான பண்பாடற்ற  கருத்துக்களை உள்ளடக்கிய வீடியோக்களை ரசிக்கும் அளவுக்கு நெடுக்கஸின் ரசனை தாழ்ந்து போனது ஏன்?  

ஒவ்வொருவரும் அவரவர் வடிவில் தமது கருத்தைப் பதிவு செய்கிறார்கள்.

நீங்கள் எப்படி ஜோதிகா அம்மையார் ஏதோ தான் போட்ட உண்டியல் காசில் கோயில் கழுவிறது என்று உண்மையை சொல்லுறாப் போலவும்..நீங்கள் என்னடான்னா.... இராஜராஜன் திறைசேரியில் இருந்து உங்கள் கணக்கின் கீழ் அறவிடப்பட்ட வரியில் கோவில் கட்டியது போலவும்.. கருத்துச் சொல்லும் போது அவனவன் தனக்குத் தெரிந்ததை தனக்குத் தெரிந்த மொழியில் சொல்லத்தான் செய்வான்.

நீங்கள் சொல்லுறதை எழுதிறதை நாங்க படிக்கிறமில்ல. அதுபோல தான் அவங்க சொல்லுறதையும்.. எழுதிறதையும் படிக்கிறம். இதில ரசனை.. பூனை என்று எழுதுவும் இல்லை. 

9 minutes ago, nedukkalapoovan said:

அந்த பொய்யர்களின் அவதூறு வீடியோக்களை தொடர்ந்து பார்த்ததாலோ என்னமோ நீங்களும் பொய் சொல்ல பழகிவிட்டீர்கள் நெடுக்ஸ்  இத்த பதிலிலேயே இரண்டு பொய்களைக் கூறி உள்ளீர்கள். 

1. ஜோதிகா தான் போட்ட உண்டியல் பணத்தால் கோவில் கழுவுகிறது என்று கூறாமலே அவர் அப்படிக் கூறியதாக நீங்கள் அவிழ்த்துவிட்ட  பொய் 

2. எனது கணக்கில் அறவிடப்பட்ட பணம் என்று நான் கூறியதாக  நீங்கள் சொன்ன அடுத்த பொய். 

மீண்டும் எனது பதிலை வாசித்து விளங்குங்கள் நண்பரே நெடுக்ஸ் 

இப்போது விளங்குகிறது ஜோதிகா பேசியதை  உங்களால்  ஆதரிக்கப்படும் அந்த  சங்கிக் கும்பல் எப்படி எப்படி எல்லாம்  திரித்து பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது . 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு அறிவுரை சொல்லத்தான் ஆயிரம் வந்தேறிகள் வந்து நிற்கிறது கோவிலுக்கு இறைக்காதீங்கோ சரி 

இந்த எந்திரன் 2 ல எவ்வளவு இறைச்சாங்கள்  இப்படி திரைப்படங்களுக்கு இறைக்கும் போது கோவிலுக்கு மட்டும் ஏன் சொல்லணும் இவா  கோவிலை விட சினிமாக்குத்தான் தமிழ்நாட்டு தமிழன் இறைக்கான் என்பது இவாக்கு தெரியாது போல 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி ஜோதிகா & தமிழ் ஆர்வலர்களுக்கு...

Image may contain: night, sky and outdoor

ஜோதிகா அவர்களே நீங்கள் சொன்ன கருத்தில் எந்த முரண்பாடும் எனக்கு இல்லை ஆனால் உங்கள் எல்லோருக்கும் கோவில் மட்டும் கண்ணுக்கு தெரிவதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விடையங்கள் ஏராளமாக இருக்கிறது.

தமிழ் நாட்டில் அறநிலையத்துறைக்கு கீழ் சுமார் 45,000 கோவில்கள் இருக்கின்றன அவற்றிற்கு சொந்தமாக
சுமார் 5லட்சம் ஏக்கர் நிலம் இருக்கிறது
22,000க்கும் அதிகமான கட்டிடங்கள் இருக்கிறது
54 கல்வி நிறுவனங்கள் (கல்லூரி, பாடசாலை) உள்ளன.
36 கருணை இல்லங்கள் இருக்கின்றது
6 சித்த வைத்தியசாலை இருக்கின்றது
2 ஆங்கில மருத்துவமுறை மருத்துவமனையும் இருக்கின்றது.

ஆலயங்களினூடாக சுமார் 1,000 கோடிக்கும் அதிகமான வருவாய் தமிழ்நாட்டிற்கு கிடைக்கின்றது. அப் பணத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு பல திட்டங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

ஏழை எளியோருக்கான 4கிராம் தங்கம் உட்பட நடாத்தப்படும் திருமண திட்டம் ஆண்டுக்கு சுமார் 1,000க்கும் அதிகமாக திருமணம் செய்துவைக்கப்படுகிறது

754கோவில்களில் அன்னதானம் செய்யப்படுகிறது அதாவது ஆண்டுக்கு சுமார் 30கோடியில் அன்னதானம் மட்டும் தினமும் வழங்கப்படுகிறது

ஆன்மீகம் மற்றும் ஒழுங்கம் சார்ந்த (தமிழ் இலக்கியங்களில் காணப்படும் ) வகுப்புக்கள் சுமார் 28,000 மாணவர்களுக்கு 517 கோவில்களால் நடாத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் நடாத்தப்படும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் ஆலயத்தினால் பெறப்படும் நிதியில் இருந்தே செயல்படுத்தப்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டில் காணப்படும் ஆலயங்களின் செலவுகள், கிராமங்களில் காணப்படும் வசதியற்ற கோவில்களின் பராமரிப்பு உட்பட மேட்கூறப்பட்ட நலத்திட்டங்களின் செலவுகள் அனைத்தும் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களினூடாக பெறப்படும் வருமானங்களின் ஊடாகவே செய்யப்பட்டுவருகிறது.

கோவில்கள் என்பது எங்களுடைய அடையலாம், தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் மணிமகுடம். எங்களை பொறுத்தவை தஞ்சை கோவிலுக்கு செய்வதை விட வேறெதுவும் பெரிதில்லை. இவ்வாறு கூறுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது அதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தியாவிலையே அதிகமான சுற்றுலா பயணிகள் வருகைதருவது தமிழ்நாடு தான். ஆண்டுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடு அடங்கலாக சுமார் 39கோடி மக்கள் தமிழ்நாட்டிற்கு சுற்றிப்பார்க்க வருகிறார்கள். இவர்களில் 90விகிதத்திற்கும் அதிகமான மக்கள் ஆலயங்களை தரிசிக்கவும் அதன் அழகை கண்டுகொள்ளவுமே வருகிறார்கள்.
"தமிழ்நாட்டில் மிகவும் போற்றத்தக்க வகையில் கோவில்களும் கட்டிட களையும் அமைந்துள்ளது" என்ற வாசகம் தான்
தமிழ்நாடு மற்றும் இந்திய சுற்றுலாத்துறை வாரியங்கள் முதன்மைப்படுத்தி விளம்பரம் செய்கின்றது. எமது வருவாயில் ஆலயங்களின் பங்கே இரண்டாவது இடத்தில் இருக்கின்றது அவற்றை அழகாக வைத்துக்கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று அரசியலை ஆராய்ந்து சமூக செயல்பாடுகளை உற்றுநோக்குபவர்கள் கண்டிப்பாக அறிவார்கள்.

மருத்துவமனைகளுக்கு செலவழிக்க வேண்டும் என்று உங்களுடன் சேர்ந்து நாங்களும் கோரிக்கை வைக்கின்றோம். மக்களோ அல்லது அரசோ கோவிலுக்கு செலவு செய்கிறது என்பதை விட தேவையில்லாமல் சினிமா துறைக்கு கொடுக்கும் வரி சலுகையை நிறுத்தினாலும், சினிமா துறையில் புரளும் கருப்புப்பணத்தை வெளிகொண்டுவந்தாலும், அவ்வளவு ஏன் உங்கள் துறை சார்ந்த அனைவரும் வருமான கணக்குகளில் நேர்மையாக இருந்தாலே மருத்துவமனைகள் எல்லாம் நீங்கள் சென்று மருத்துவம் பார்க்கும் அளவிற்கு மேம்பட்டுவிடும்.

உங்கள் ஒப்புவமை நீங்கள் பணிபுரியும் துறை சார்ந்து இருந்திருக்கலாம் ஆனால் இந்து அறநிலைத்துறையை பற்றியும், தமிழர்களின் காலை கலாச்சார பாரம்பரியம் பற்றியும் கொஞ்சம் கூட தெரிந்துகொள்ளாமல் அதனுடன் ஒப்பிட்டு பேசுவது மிகவும் தவறானதேயாகும்.

இதையெல்லாம் பேசுவதற்காக நீங்கள்ஏறிய மேடையும் அந்த நிகழ்விற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் கூட 2 மருத்துவமனைகளை உருவாக்கியிருக்கலாம் என்று எங்களாலும் கூற முடியும். அவ்வளவு என் இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகமாக பணத்தை விரயமாக்குவது சினிமாவிற்கு தான். அவ்வாறான சினிமா நமக்கு எதற்கு என்று கேட்கலாம். இதெல்லாம் தாண்டி அதற்க்கு பின்னால் இருக்கும் வணிகம், வேலைவாய்ப்பு கண்முன் தெரிகிறது.

வாழ வைக்கும் தமிழகம்தான் உங்களை வாழ வைக்கிறது என்பதை மறக்க வேண்டாம் சகோதரி....

இனியேனும் தமிழர் "கலை, கலாச்சார" விடயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள்.

நன்றி முகநூல் பதிவர் கூல் தமிழ்ஸ்

Edited by nedukkalapoovan

"தமிழர்களுக்கு அறிவுரை சொல்லத்தான் ஆயிரம் வந்தேறிகள் வந்து நிற்கிறது"

தமிழன் சொல்லுறதை எந்த தமிழன் கேட்க்கிறான். யாரும் வந்தேறிகள் சொல்லுறதைதான்  தலையில்வைத்து கொண்டாடுகிறார்கள் அது எந்த துறையை சேர்ந்தவர்கள் என்றாலும் . 

தமிழ்நாட்டில் ஊரடங்கால்   அன்றாடம் காச்சி மக்கள் படும் துயரங்களை  மறைப்பதற்க்காக 1 1/2 மாதங்களுக்கு முன்பு பேசியதை தோண்டியெடுத்து வெளியிட்டு உள்ளார்கள். முதலில் மதுவந்த்தியின் பேச்சு இப்போது ஜோதிகாவின் பேச்சு.
 ஒவ்வொருமுறையும் ஏதாவது பெரிய பிரச்சனைகள் வரும்போதும் அவற்றை  மறைப்பதற்காகவும் / மழுங்கடிப்பதற்க்காகவும் இவ்வாறான உணர்வுகள் (சாதி, சமைய, இன,தனிமனிதன் }சம்பந்தமான சிறு controversy உருவாக்கப்படும்  ஆண்டாண்டுகாலமாக  அரசாங்கள் செய்யும் வேலை இது.

இங்கே இணைக்கப்பட்டுள்ள youtpe களில், யோதிகாவுக்கு எதிராகவோ அல்லது சார்பாகவோ பேசுபவர்கள் எல்லாம், ஒன்றும் சமயத்தின்மீதோ அல்லது இனத்தின்மீதோ உள்ள பற்றால் பேசவில்லை, மாறாக   எவாறு தங்கள் youtupe சேனலை பிரபல்யம் ஆக்கி அதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பதே அவர்களின்  நோக்கம்.

இது விளங்காமலோ அல்லது விளங்கிக்கொண்டபின்நாளோ எமது முடிவுகளில் இருந்து மாறமுடியாமல் குத்திமுறியிறம்.

தயவுசெய்து நெடுக்காலைபோற அண்ணையும் , குமாரசாமி அய்யாவும் யோதிகா பேசிய வீடியோவை பொதுமனித பார்வையில் மீண்டும் ஒருக்கா பார்க்கவும்.

அடுத்த controversy ரெடி - தமிழ்நாட்டில் பரப்பப்படும் "கம்யூன்"எனும் கன்றாவி வாழ்கைமுறை
 
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

சகோதரி ஜோதிகா & தமிழ் ஆர்வலர்களுக்கு...

Image may contain: night, sky and outdoor

ஜோதிகா அவர்களே நீங்கள் சொன்ன கருத்தில் எந்த முரண்பாடும் எனக்கு இல்லை ஆனால் உங்கள் எல்லோருக்கும் கோவில் மட்டும் கண்ணுக்கு தெரிவதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விடையங்கள் ஏராளமாக இருக்கிறது.

தமிழ் நாட்டில் அறநிலையத்துறைக்கு கீழ் சுமார் 45,000 கோவில்கள் இருக்கின்றன அவற்றிற்கு சொந்தமாக
சுமார் 5லட்சம் ஏக்கர் நிலம் இருக்கிறது
22,000க்கும் அதிகமான கட்டிடங்கள் இருக்கிறது
54 கல்வி நிறுவனங்கள் (கல்லூரி, பாடசாலை) உள்ளன.
36 கருணை இல்லங்கள் இருக்கின்றது
6 சித்த வைத்தியசாலை இருக்கின்றது
2 ஆங்கில மருத்துவமுறை மருத்துவமனையும் இருக்கின்றது.

ஆலயங்களினூடாக சுமார் 1,000 கோடிக்கும் அதிகமான வருவாய் தமிழ்நாட்டிற்கு கிடைக்கின்றது. அப் பணத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு பல திட்டங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

ஏழை எளியோருக்கான 4கிராம் தங்கம் உட்பட நடாத்தப்படும் திருமண திட்டம் ஆண்டுக்கு சுமார் 1,000க்கும் அதிகமாக திருமணம் செய்துவைக்கப்படுகிறது

754கோவில்களில் அன்னதானம் செய்யப்படுகிறது அதாவது ஆண்டுக்கு சுமார் 30கோடியில் அன்னதானம் மட்டும் தினமும் வழங்கப்படுகிறது

ஆன்மீகம் மற்றும் ஒழுங்கம் சார்ந்த (தமிழ் இலக்கியங்களில் காணப்படும் ) வகுப்புக்கள் சுமார் 28,000 மாணவர்களுக்கு 517 கோவில்களால் நடாத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் நடாத்தப்படும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் ஆலயத்தினால் பெறப்படும் நிதியில் இருந்தே செயல்படுத்தப்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டில் காணப்படும் ஆலயங்களின் செலவுகள், கிராமங்களில் காணப்படும் வசதியற்ற கோவில்களின் பராமரிப்பு உட்பட மேட்கூறப்பட்ட நலத்திட்டங்களின் செலவுகள் அனைத்தும் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களினூடாக பெறப்படும் வருமானங்களின் ஊடாகவே செய்யப்பட்டுவருகிறது.

கோவில்கள் என்பது எங்களுடைய அடையலாம், தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் மணிமகுடம். எங்களை பொறுத்தவை தஞ்சை கோவிலுக்கு செய்வதை விட வேறெதுவும் பெரிதில்லை. இவ்வாறு கூறுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது அதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தியாவிலையே அதிகமான சுற்றுலா பயணிகள் வருகைதருவது தமிழ்நாடு தான். ஆண்டுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடு அடங்கலாக சுமார் 39கோடி மக்கள் தமிழ்நாட்டிற்கு சுற்றிப்பார்க்க வருகிறார்கள். இவர்களில் 90விகிதத்திற்கும் அதிகமான மக்கள் ஆலயங்களை தரிசிக்கவும் அதன் அழகை கண்டுகொள்ளவுமே வருகிறார்கள்.
"தமிழ்நாட்டில் மிகவும் போற்றத்தக்க வகையில் கோவில்களும் கட்டிட களையும் அமைந்துள்ளது" என்ற வாசகம் தான்
தமிழ்நாடு மற்றும் இந்திய சுற்றுலாத்துறை வாரியங்கள் முதன்மைப்படுத்தி விளம்பரம் செய்கின்றது. எமது வருவாயில் ஆலயங்களின் பங்கே இரண்டாவது இடத்தில் இருக்கின்றது அவற்றை அழகாக வைத்துக்கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று அரசியலை ஆராய்ந்து சமூக செயல்பாடுகளை உற்றுநோக்குபவர்கள் கண்டிப்பாக அறிவார்கள்.

மருத்துவமனைகளுக்கு செலவழிக்க வேண்டும் என்று உங்களுடன் சேர்ந்து நாங்களும் கோரிக்கை வைக்கின்றோம். மக்களோ அல்லது அரசோ கோவிலுக்கு செலவு செய்கிறது என்பதை விட தேவையில்லாமல் சினிமா துறைக்கு கொடுக்கும் வரி சலுகையை நிறுத்தினாலும், சினிமா துறையில் புரளும் கருப்புப்பணத்தை வெளிகொண்டுவந்தாலும், அவ்வளவு ஏன் உங்கள் துறை சார்ந்த அனைவரும் வருமான கணக்குகளில் நேர்மையாக இருந்தாலே மருத்துவமனைகள் எல்லாம் நீங்கள் சென்று மருத்துவம் பார்க்கும் அளவிற்கு மேம்பட்டுவிடும்.

உங்கள் ஒப்புவமை நீங்கள் பணிபுரியும் துறை சார்ந்து இருந்திருக்கலாம் ஆனால் இந்து அறநிலைத்துறையை பற்றியும், தமிழர்களின் காலை கலாச்சார பாரம்பரியம் பற்றியும் கொஞ்சம் கூட தெரிந்துகொள்ளாமல் அதனுடன் ஒப்பிட்டு பேசுவது மிகவும் தவறானதேயாகும்.

இதையெல்லாம் பேசுவதற்காக நீங்கள்ஏறிய மேடையும் அந்த நிகழ்விற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் கூட 2 மருத்துவமனைகளை உருவாக்கியிருக்கலாம் என்று எங்களாலும் கூற முடியும். அவ்வளவு என் இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகமாக பணத்தை விரயமாக்குவது சினிமாவிற்கு தான். அவ்வாறான சினிமா நமக்கு எதற்கு என்று கேட்கலாம். இதெல்லாம் தாண்டி அதற்க்கு பின்னால் இருக்கும் வணிகம், வேலைவாய்ப்பு கண்முன் தெரிகிறது.

வாழ வைக்கும் தமிழகம்தான் உங்களை வாழ வைக்கிறது என்பதை மறக்க வேண்டாம் சகோதரி....

இனியேனும் தமிழர் "கலை, கலாச்சார" விடயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள்.

நன்றி முகநூல் பதிவர் கூல் தமிழ்ஸ்

கோவில் என்று சொன்னாலே எல்லாரும் டெஞ்சனாகிறீங்களே அது ஏன். 🤥

கோவில் என்ன தீண்டத் தகாத சொல்லா 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2020 at 13:19, கிருபன் said:

தமிழக இளைஞர்கள் 2017இல் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வென்ற பின்னர்

ஒரு சிலர் விளையாடும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக ஒரு போராட்டமே நடத்தி வெல்லும் தமிழக இளைஞர்களுக்கு அவசிய தேவையான அடிப்படை வசதி கொண்ட மருத்துவமனைகள் பள்ளிகூடத்திற்காக அரசிடம் போராடி பெற விரும்பம் இல்லை.ஜோதிகாவை தாக்குவதில் காட்டும் ஆர்வத்தை அங்கே காட்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஒரு சிலர் விளையாடும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக ஒரு போராட்டமே நடத்தி வெல்லும் தமிழக இளைஞர்களுக்கு

தமிழர்களின்  பாரம்பரிய விளையாட்டை நிறுத்த கோருவதற்க்கு எதிராக ஒரு இனம் போராடியது.

ஜோதிகாவை தாக்குபவர்கள் சக்கிகள் என பேர் கூறி அழைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, kalyani said:

தமிழர்களின்  பாரம்பரிய விளையாட்டை

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு என்று சொல்வது கூட சரியானதா தெரியவில்லை ஏனெனில் அங்கே கூட 38 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாடபட்டது. இலங்கையிலும் தமிழர்கள் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய மாவட்டங்களில் விளையாடவில்லை என்பதற்காக அது தமிழர்களின் விளையாட்டு இல்லை என்றாகி   விடுமா?

EWqsIQ1U4AE8Da0?format=jpg&name=small

  • கருத்துக்கள உறவுகள்

ஜோதிகாவின் கருத்தில் உறுதியாகவே இருக்கிறோம்: சூர்யா

ஜோதிகாவின் கருத்தில் உறுதியாகவே இருக்கிறோம் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு தனியார் விருது வழங்கும் விழாவில் ஜோதிகா பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். அதில், கோயில்களைக் குறித்துப் பேசிய விஷயம் சர்ச்சையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து இணையத்தில் பலரும் ஜோதிகாவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

ளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"'மரம்‌ சும்மா இருந்தாலும்‌ காற்று விடுவதாக இல்லை' என்கிற கருத்து 'சமூக ஊடக' விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும்‌. ஒரு விருது வழங்கும்‌ விழாவில்‌ எப்போதோ ஜோதிகா பேசியது, இப்போது ஊடகங்களில்‌ செய்தியாகவும்‌, சமூக ஊடகங்களில்‌ விவாதமாகவும்‌ மாறி இருக்கிறது.

'கோயில்களைப்‌ போலவே பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்‌ உயர்வாகக் கருத வேண்டும்‌' என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, 'சிலர்‌' குற்றமாகப் பார்க்கிறார்கள்‌. இதே கருத்தை விவேகானந்தர்‌ போன்ற ஆன்மிகப்‌ பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள்‌. 'மக்களுக்கு உதவினால்‌, அது கடவுளுக்குச்‌ செலுத்தும்‌ காணிக்கை' என்பது 'திருமூலர்‌' காலத்துச் சிந்தனை. நல்லோர்‌ சிந்தனைகளைப்‌ படிக்காத, காது கொடுத்துக் கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்‌ இறைவன்‌ உறையும்‌ இடமாகக் கருத வேண்டும்‌ என்ற கருத்தை, எல்லா மதத்தைச்‌ சேர்ந்தவர்களும்‌ வரவேற்கவே செய்கின்றனர்‌. 'கரோனா தொற்று' காரணமாக இயல்பு வாழ்க்கை‌ பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும்‌, எங்களுக்குக் கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும்‌, மகிழ்ச்சியையும்‌ அளித்தது.

அறிஞர்கள்‌, ஆன்மிகப்‌ பெரியவர்களின்‌ எண்ணங்களைப்‌ பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக்‌ கருத்தில்‌ நாங்கள்‌ உறுதியாகவே இருக்கிறோம்‌. “மதங்களைக்‌ கடந்து மனிதமே முக்‌கியம்‌' என்பதையே எங்கள்‌ பிள்ளைகளுக்கும்‌ சொல்லித்தர விரும்புகிறோம்‌. தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாகச் சிலர்‌ அவதூறு பரப்பும்‌ போதெல்லாம்‌, நல்லோர்கள்‌, நண்பர்கள்‌, ரசிகர்கள்‌ எங்களுக்குத் துணை நிற்கிறார்கள்‌.

முகமறியாத எத்தனையோ பேர்‌ எங்கள்‌ சார்பாக பதில்‌ அளிக்கிறார்கள்‌. ஊடகங்கள்‌ சரியான விதத்தில்‌ இச்சர்ச்சையைக்‌ கையாண்டன. 'நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும்‌' என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச்‌ செய்கிறார்கள்‌. எங்களுக்கு உறுதுணையாக நிற்கும்‌ அனைவருக்கும்‌ எங்களின்‌ நெஞ்சார்ந்த நன்றிகள்‌".

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Aalavanthan said:

EWqsIQ1U4AE8Da0?format=jpg&name=small

திருப்பதி கோயிலுக்கு செலுத்த இருந்த 40 ஆயிரம் ரூபாவை மாணவர்களின் குடும்பத்திற்கு வழங்கிய ஆசிரியரை பாராட்ட வார்த்தை இல்லை. அவசியமான மாற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இசைக்கலைஞன் said:

ஜோதிகாவின் சமுதாய பொறுப்பு கொண்ட கருத்து  பகுதியில் சின்ன தேசம் கியுபா வெறும் கரும்பை வைத்து உலகின் தலைசிறந்த நாடாக மாறிவிட்டதாம்  இன்று அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்புகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறதாம் என்கின்ற இவரின் புழுகு மூட்டையும்

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஜோதிகாவின் சமுதாய பொறுப்பு கொண்ட கருத்து  பகுதியில் சின்ன தேசம் கியுபா வெறும் கரும்பை வைத்து உலகின் தலைசிறந்த நாடாக மாறிவிட்டதாம்  இன்று அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்புகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறதாம் என்கின்ற இவரின் புழுகு மூட்டையும்

மருத்துவத்திலும் அவசரகால நிலமைகளைக் கையாள்வதில் கியூபா தலைசிறந்து விளங்குகிறது என்பது உண்மையே. 

நெடுக்ஸ் அண்ணைக்கு குமாரசாமி அய்யாவுக்கும் சமர்ப்பணம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kaalee said:

நெடுக்ஸ் அண்ணைக்கு குமாரசாமி அய்யாவுக்கும் சமர்ப்பணம் 

நல்ல விடியோ.இருவரும் ஏற்று கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.