Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து இல்லை என்கிறார் மாவை

Featured Replies

(எம்.நியூட்டன் )

தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து இல்லை என இலங்கை தமிழர கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.


சுமந்திரனின் கருத்து தொடர்பில் மாவை வெளியிட்ட அறிககையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விடுதலைப்புலிகள் பற்றி சுமந்திரன் அளித்த பேட்டியில் சிங்கள மொழியில் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக எம்மிடம் கண்டனங்களும் விமர்சனங்களும் தெரிவிக்கப்படுவதாலும் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய தேவையும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கமும் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்தின் மீது கண்டனம் தெரிவித்துள்ளது. அது போல (புளொட்) தமிழீழ விடுதலைக் கழகமும் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

08.05.2020 அன்று ஆக இருக்க வேண்டும் சிங்கள ஊடகத்தில் விடுதலைப் புலிகள் தொடர்பில், விடுதலைப் புலிகளையும், ஆயுதப் போராட்டங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சுமந்திரன் வெளியிட்ட கருத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கள் தனிப்பட்ட கருத்தாகவும் ஏற்றுக் கொள்ளமுடியாது. 1976 மே 14 ஆம் திகதி வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி மாநாடு நடைபெற்றது.

தமிழர் இழந்த சுதந்திரத்தை மீட்க (சுதந்திரத் தமிழீழம்) வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அப்பொழுது நாம் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தவர்கள். 1971 இல் ஆட்சியைக் கைப்பற்ற ஆயுதப் புரட்சி செய்த ஜே.வி.பியினர் ஆயிரக்கணக்கில் அச்சிறைகளில் இருந்தனர்.

1977 பொதுத்தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஆணை கேட்டு பெரு வெற்றி பெற்றது தமிழர் விடுதலைக் கூட்டணி. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழின விடுதலைக்காக 1971,1972களில் உருவாகியது. 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஏற்று ஆயுதப் போராட்டத்தின் மூலம் அந்தச் சுதந்திரத்தை அடைய வேண்டுமென்று இயங்கியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் நடவடிக்கைளில் ஒருபொழுதும் பங்காளிகளாக இருந்ததில்லை. 1983 யூலைக் கலவரத்தின் பின் இந்திய நாட்டின் தலையீடும், அனுசரணையும் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள் இந்தியாவில் புதுடெல்லியில் இடம்பெற்ற வேளைகளில் பேச்சு வார்த்தைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள், ஈரோஸ் தலைவர்கள் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2001-2002 காலப்பகுதியில் நோர்வே அனுசரனையுடன் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையில் பேச்சு ஆரம்பித்தது. 2002 டிசம்பரில் விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்தனர்.

2002 பெப்ரவரியில் நோர்வே ஒஸ்லோ நகரில் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைக்கு ஒரு உடன்பாடு எட்டப்பட்டது .அந்த வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் சர்வதேசத்திற்கு முன் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் "தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்" என்று அறிவிக்கப்பட்டது.

அவ்வேளையிலிருந்து தான் சர்வதேசத்தின் முன்னிலையில் தமிழர்களின் உச்ச அரசியல் பலம் ஏற்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விடுதலைப் புலிகளும் தொடர்ச்சியான பேச்சுக்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற ஆயுதப் போரும், போர் நிறுத்தமும், சர்வதேச அரங்கில் இலங்கை அரசுடன் ஒஸ்லோவில் பேச்சுவார்த்தை நடத்த உடன்பட்ட காலத்தில் ஜனநாயகக் கோட்பாட்டில்; இயங்கி வந்த தமிழர் விடுதலைக் கூட்டணி அப்பேச்சு வார்த்தையில் பங்கு கொண்ட விடுதலைப்புலிகளை அங்கீகரித்து நின்ற காலத்திலிருந்துதான் இலங்கை இனப்பிரச்சனை சர்வதேசத்திலும் அரசியல் விடுதலைப் பரிணாமத்தைப் பெற்றது.

அந்த ஒஸ்லோ உடன்படிக்கையின் அம்சங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கைகளையே 2004முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுத் தேர்தல்களில் பெரு வெற்றி பெற்று வருகிறது.

2004 பொதுத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச்சின்னம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

2009 போர் முடிந்த பின் 2010 பொதுத் தேர்தலிலும் தேசியக் கூட்டமைப்பு பெருவெற்றி பெற்றது. 2011 ஒக்டோபர் 24முதல் 27 வரை அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அழைப்பின் பேரில் வொசிங்டனில் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அமெரிக்க இராஜாங்க அமைச்சுடன் பேச்சில் ஈடுபட்டனர்.

இறுதியில் 2012 மார்ச்சில் நடைபெறவிருந்த ஐ.நா.மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய இலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற விசாரணைக்கான பிரேரனை தயாரிக்கப்பட்டது. தமிழின விடுதலைக்கான போர் இலங்கை அரசு இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலேயே நடைபெற்றது.

2011 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் 2013 மாகாணசபைத் தேர்தல்களில் 2015 பொதுத் தேர்தல்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் போராளிகள், ஆதரவாளர்களின் ஆதரவுடனேயே வெற்றிகள் ஏற்பட்டன.

ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயுத மேந்திப் போராடிய இயக்கத்தினர், போராளிகளின் வழக்குகளில் திருவாளர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், நீலன் திருச்செல்வம் முதலான பல வழக்கறிஞர்கள் வாதாடியிருந்தனர்.

இந்திய நாட்டு விடுதலைப் போராட்ட காலத்தில் இந்தியக் காங்கிரஸ் அமைப்புக்களில் ஜவர்கலால் நேரு, சுபாஸ் சந்திர போஸ் முதலான தலைவர்களிருந்தனர். மகாத்மா காந்தி காங்கிரசில் இடம்பெறவில்லையாயினும் அவர் ஆதரவும் தலையீடுகளும் இருந்தன.

ஜாலியன் வாலாபாக்கில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து மக்களைக் கொன்ற கொன்ற பகவத்சிங்  உத்தம சிங் முதலானோர் கைதுசெய்யப்பட்டு கராச்சி நீதிமன்றத்திலே தூக்குத்தண்டனை வழங்க வேண்டுமென்ற வழக்கில் ஜவர்கலால் நேரு தோன்றி பகவத்சிங் முதலானோரை விடுதலை செய்ய வேண்டுமென வாதாடினார்.

தூக்குத் தண்டனைக்கு எதிராக மகாத்மா காந்தி இங்கிலாந்து வைசிராய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் மகாத்மா குறிப்பிட்டார். "பகவத்சிங் முதலானோரின் போராட்ட வழிமுறையை நான் ஏற்றுக் கொள்ளவில்லையென்றாலும், அவர்கள் தியாகத்தை மதிக்கிறேன். அவர்களைத் தூக்கிலிட வேண்டாம்"என்று கேட்டிருந்தார்.

இலங்கையிலும் எங்கள் வழக்கறிஞர்களும் ஜவர்கலால்; நேரு, மகாத்மா காந்தி போலவே நடந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ விடுதலை அமைப்புப் போராளிகளை போரினால் பாதிப்புற்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்களை தமிழ்த் தேசிய ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைத்துத்; தமிழ்ச் சமூகத்தின் விடுதலை இயக்கத்தில் மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கொள்கைத் திட்டத்தையே கொண்டு செயல்படுகிறது. ஆரம்பத்தில் சென்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் போராளிகள் பங்கு கொண்டிருந்தனர்.

எனவே தென்னிலங்கையில் பௌத்த சிங்கள ஒற்றையாட்சி, பெரும்பான்மைத்துவ ஆட்சிச் சித்தாந்தத்துடன் எழுச்சி பெற்று வரும் அரசியல் இராணுவச் சூழ்நிலையில் தமிழ்ப் பேசும் மக்கள், அரசியல், சமூக அமைப்புக்கள் ஒன்றுபட்டு எழுச்சி பெற வேண்டியதே இன்று வேண்டியதாகும்.
ஜனநாயக அரசியலில் அதுவும் விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்து நிற்கும் மக்களிடம் கருத்து வேற்றுமைகளில் இணக்கத்தை உருவாக்கி பிளவுகளுக்கு இடமளிக்காமல் நம்பிக்கையை ஏற்படுத்துவதே சிறப்பானதாகும்.

விரைவில் தமிழரசு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகள் ஒன்று கூடி மேற்கொண்டு செயல்பட வேண்டிய தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனக் கருதியுள்ளோம் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/81816

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, ampanai said:

தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து இல்லை என இலங்கை தமிழர கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இப்ப இரண்டு பேருக்குமிடையிலை பெரிய கீறல் விழப்போகுதே?:cool:

6 hours ago, குமாரசாமி said:

இப்ப இரண்டு பேருக்குமிடையிலை பெரிய கீறல் விழப்போகுதே?:cool:

இருக்காது.
இது ஒரு கபட நாடகமாக இருக்கும்.
இது தமிழரசுக்கட்சியின் கருத்து இல்லை என்று மந்த அரசியவாதி மாவை சொல்லவில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/100010415381263/videos/1086119988411837/

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தை தவிர வேறொன்றையும் நான் கூறமாட்டேன் !
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தை தான் நான் கூறவேண்டும்.:- கெளரவ சுத்துமாத்துமந்திரன்

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சொன்னவை கூட்டமைப்பின் கருத்தல்ல; அவரின் தனிப்பட்ட கருத்து; சம்பந்தன்

Sampanthan-300x169.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.ஏ.சுமந்திரன், தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரின் சொந்தக்கருத்து தனிப்பட்ட கருத்து. அதைக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கருத்தாகவோ எவரும் எடுத்துக்கொள்ளக் கூடாது எனக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கிய சர்ச்சைக்குரிய செவ்வி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில்;

“சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்களை நான் இன்னமும் முழுமையாகப் பார்க்கவில்லை. எனினும், அவரின் தனிப்பட்ட செவ்வியை – அவரின் சொந்தக் கருத்துக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கருத்தாகவோ எவரும் எடுத்துக்கொள்ளக்கூடாது.”

http://thinakkural.lk/article/41364

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தள்ளுற அரை வேக்காடையெல்லாம் அணைச்சு, எல்லா வழிகளையும் அடைச்சுப்போட்டு, பூசி மெழுகுகினம்.  வந்த காரியத்தை கச்சிதமாக முடிச்சு, அவர்தன்னை  அனுப்பிய எஜமானிடம் போய்ச் சேர்ந்து விட்டார். இவர்கள் நாடிபிடித்து பார்த்து  தொடர்வினம். இனி முரளிதரனுக்கோ, டக்கிளசுக்கோ வேலை இருக்காது சிங்களத்திடம்.  

11 hours ago, குமாரசாமி said:

இப்ப இரண்டு பேருக்குமிடையிலை பெரிய கீறல் விழப்போகுதே?:cool:

அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை। இது அவரது தனிப்படட கருத்து என்று கூறி விடடார் மாவை ஐயா। இனி விவாதித்து பிரயோசனம் இல்லை। இவர் கட்சியின் பேச்சாளராக இருந்தாலும் , தனிப்படட கருத்துக்களை கூறவும் உரிமை உண்டு। 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Vankalayan said:

அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை। இது அவரது தனிப்படட கருத்து என்று கூறி விடடார் மாவை ஐயா। இனி விவாதித்து பிரயோசனம் இல்லை। இவர் கட்சியின் பேச்சாளராக இருந்தாலும் , தனிப்படட கருத்துக்களை கூறவும் உரிமை உண்டு। 

கூத்தமைப்பு கூத்தாடிகள் எப்பதான் கட்சியோட கருத்தை சொல்லியிருக்கினம் ,
யார் எப்போ  என்ன சொன்னாலும் அது அவிங்களோட தனிப்பட்ட கருத்துத்தான் ,2015 இல் தீர்வு என்றாலும் தனிப்பட்ட கருத்து , புலிகள் பயங்கரவாதிகள் என்றாலும் தனிப்பட்ட கருத்து , புலிகளுக்கும் எமக்கும் தொடர்பில்லை என்றாலும் தனிப்பட்ட கருத்து, இந்த மொள்ளமாரித்தனத்திற்கு பதிலாக தெருவோரம் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு பிச்சை எடுக்கலாம்  

2 hours ago, உடையார் said:

சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்களை நான் இன்னமும் முழுமையாகப் பார்க்கவில்லை.

எதையுமே முழுமையாக தெரிந்து கொள்ளாம அறிக்கைகள் விடும், அரசியல் செய்யும் அரைவேக்காட்டு அரசியல்வாதி என்பதை சொதப்பல் சம்பந்தன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

16 minutes ago, அக்னியஷ்த்ரா said:

கூத்தமைப்பு கூத்தாடிகள் எப்பதான் கட்சியோட கருத்தை சொல்லியிருக்கினம் ,
யார் எப்போ  என்ன சொன்னாலும் அது அவிங்களோட தனிப்பட்ட கருத்துத்தான் ,2015 இல் தீர்வு என்றாலும் தனிப்பட்ட கருத்து , புலிகள் பயங்கரவாதிகள் என்றாலும் தனிப்பட்ட கருத்து , புலிகளுக்கும் எமக்கும் தொடர்பில்லை என்றாலும் தனிப்பட்ட கருத்து, இந்த மொள்ளமாரித்தனத்திற்கு பதிலாக தெருவோரம் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு பிச்சை எடுக்கலாம்  

தப்பித்துக்கொள்ள இலகுவான வழி

  • தொடங்கியவர்

"கூட்டமைப்பின் நோக்கத்தை சுமந்திரன் சீர்குலைத்துள்ளார்": செல்வம் அடைக்கலநாதன்

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

கூத்தமைப்பு கூத்தாடிகள் எப்பதான் கட்சியோட கருத்தை சொல்லியிருக்கினம் ,
யார் எப்போ  என்ன சொன்னாலும் அது அவிங்களோட தனிப்பட்ட கருத்துத்தான் ,2015 இல் தீர்வு என்றாலும் தனிப்பட்ட கருத்து , புலிகள் பயங்கரவாதிகள் என்றாலும் தனிப்பட்ட கருத்து , புலிகளுக்கும் எமக்கும் தொடர்பில்லை என்றாலும் தனிப்பட்ட கருத்து, இந்த மொள்ளமாரித்தனத்திற்கு பதிலாக தெருவோரம் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு பிச்சை எடுக்கலாம்  

பழைய 10 சத காசும் இல்லை துணியில் போட

  • தொடங்கியவர்

சுமந்திரன் - கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே முரண்பாடு ! சமரசத்திற்கு மாவை முயற்சி

(ஆர்.யசி)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் குறித்து முன்வைத்த கருத்துகள் தொடர்பில் கூட்டமைப்பு உறுப்பினர்கள்  இடையில் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் கூட்டமைப்பை சமரசப்படுத்தும் முயற்சியில் இறங்கவுள்ளார் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.

தழிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர்களின் செயற்பாடுகள் குறித்தும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் விமர்சனக் கருத்துகளை முன்வைத்துள்ள நிலையில் அக்கருத்து குறித்து கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இடையிலேயே மாற்றுக் கருத்துக்கள் எழுந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்துகொண்டு தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி கருத்துக்களை முன்வைப்பதாக சுமந்திரன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அக் கட்சியில் இருந்து அவரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எழுத்துமூல அறிக்கையொன்றையும் முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் தான் முன்வைத்த கருத்து தனது சொந்தக் கருத்து, எனது நிலைப்பாட்டை கூறுவதற்கு நான் தயங்க வேண்டிய அவசியம் இல்லை, ஆயுத போராட்டம் என்ற கொள்கை எனக்கு பிடிக்காது என்றே கூறினேன், மாறாக விடுதலைப்புலிகளின் போராட்டம் தவறு என்றோ, பிரபாகரன் தவறான கொள்கையை கொண்டவர் என்றோ நான் ஒருபோதும் கூறவில்லை.

எனது கருத்து குறித்து நான் எந்தவித மாற்று நிலைப்பாட்டையும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. விடுதலைப்புலிகள் செய்த தியாகத்தை நான் மதிக்கிறேன். அதற்கான அதனை அரசியல் ஆயுதமாக கையில் எடுக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை என சுமத்திரன் தான் முன்வைத்த கருத்து குறித்து விளக்கமொன்றை வழங்கியிருந்தார்.

எனினும் சுமந்திரனின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரின் சொந்தக் கருத்தாகும்.
 

அதைக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கருத்தாகவோ எவரும் எடுத்துக்கொள்ளக்கூடாது என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் காரணமாக இதுவரை அரசியல் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்க முடியாதுள்ளது, எனவே நிலைமைகள் வழமைக்கு வந்தவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகல உறுப்பினர்களையும் வரவழைத்து கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் குறித்தும்,தேர்தல் காலம் என்ற காரணத்தினால் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கும் அடுத்த கட்ட வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

சுமத்திரன் நிதானமாக கருத்துக்களை முன்வைக்க வேண்டும், அதேபோல் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதனை மக்களிடம் திரிபுபடுத்தாது கொண்டு செல்ல வேண்டும். எவ்வாறு இருப்பினும் கட்சி என்ற வகையில் சகல தரப்புடனும் இது குறித்து பேசி ஒரு நிலைப்பாட்டை எட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

https://www.virakesari.lk/article/81898

  • தொடங்கியவர்

"ஆயுதப்போராட்டம் ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம்"

 

  • கருத்துக்கள உறவுகள்

தனிபட்ட கருத்து ..குறித்து தமிழில் கூகுள் ஆண்டவரிடம் வேண்டிய போது .. முதலிடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் , இரண்டாமிடத்தில் அதிமுகவின் ஜெயகுமாரும் , மூன்றாம் இடத்தில் குஷ்பூவும் நான்காம் இடத்தில் திமுக - கொங்குரஸ் கூட்டணி அலப்பறைகளும் உள்ளது..👍

டிஸ்கி: 

செய்தி தொடர்பாளரா வாற கருத்துக்கும் தனிப்பட்ட கருத்துக்கும் என்னண்ணே வித்தியாசம்..?

roflphotos-dot-com-photo-comments-201708 ☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்

இதே கேள்வியோட இனிமேல் படலைய வந்து ஆட்டாதைங்கோ.

மொத்தக் கேள்விக்கும் ஒத்த விடை.
பஞ்சாயத்து முடிஞ்சு.🤘கிளம்பு

22 hours ago, ampanai said:

"கூட்டமைப்பின் நோக்கத்தை சுமந்திரன் சீர்குலைத்துள்ளார்": செல்வம் அடைக்கலநாதன்

 

உங்களுடைய நோக்கம் என்ன। அடிக்கிறதை அடித்துக்கொண்டு , கதிரையை சூடாக்குவதுதானே? வேறு எதாவது உருப்படியாக செய்திருக்கிறீர்களா? இங்குள்ள பிரச்சினையே இதுதான் । பாராளுமன்றம் என்று சொல்லும்போது அது ஒரு சடடத்தை உருவாக்கும் சடடவாக்க சபை। இப்போது அங்கு கள்ளனும், கொலைக்காரனும், கொள்ளை காரனும் உள்ள கூடாரமாக மாற்றிவிடடார்கள்। இவர்களில் எதனை பேருக்கு நாட்டின் சட்ட்ங்கள் தெரியுமோ தெரியவில்லை। 

’சுமந்திரன் கூறுவது இது முதல் தடவை அல்லவே’

Editorial   / 2020 மே 13 , மு.ப. 05:10 - 0     - 11

 

தமிமீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துகளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படுத்துவது, இது முதல் தடவை அல்லவென்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையில், “2010ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்ற எம்.ஏ.சுமந்திரன், அந்த காலகட்டத்திலேயே ஓர் ஆங்கில ஊடகமொன்றுக்கு, 'வேலைவெட்டியில்லாத இளைஞர்கள் தான் ஆயுதபோராட்டத்தை ஆரம்பித்தார்கள்' என்றும் 'இராணுவத்தினரைவிட அதிகளவு பொதுமக்களை, புலிகள் தான் கொன்றார்கள்' என்றும் கூறி அன்றைய அரசாங்கத்துக்கு எதிராக எத்தனை விசாரணைகள் வந்தாலும் அதற்கு முகங்கொடுத்து சாட்சியாகத் தான் நிற்பதாகச் சொல்லாமல் சொல்லியிருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் சுமந்திரனின் கூற்று அரசாங்கத்துக்குச் சார்பாகவும் அரசியல் கைதிகளுக்கு எதிராகவும் இருந்தது என்பதைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அன்று தெரியாதா? இதனை நான் ஒருவன் தான் அன்று கண்டித்தேன் ஏனையவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காலத்துக்கு காலம் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக கூட்டமைப்பு அரங்கேற்றிய நாடகங்களே இவை. தேர்தல் காலமானதால், இவ்வாறான நாடகங்கள் இனி அடிக்கடி அரங்கேறும். இனியும் தமிழ் மக்கள் ஏமாறாமல் இருந்தால் சரி” என்று, ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சமநதரன-கறவத-இத-மதல-தடவ-அலலவ/175-250188

இந்த அடிபாடுகளுக்குள் சங்கரியாரோட தொல்லை வேற। மனுஷன் இன்னும் உயிரோட இருக்குதா , இல்ல அவரை வைச்சி யாரவது விளையாடுறார்களோ?சுமந்திரன் மாதிரி யாராவது பேசினால்தான் ஐயா வெளியே வருவார்। இல்லாட்டில் பெட்டி பாம்புதான்।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.