Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

மச்சான், நீங்கள் என்ட அண்ணனை நினைத்து கவலைப்பட வேண்டாம்...அவர் தலைவரையே சுழித்திட்டு வந்தவர் … தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்று அவருக்குத் தெரியும் 😉

ஆனாலும், மகிந்தா, கோத்தா கட்அவுட் இருக்கவேண்டிய இடங்களில் அம்மான் 35 அடி ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைல் கட்அவுட் வைப்பது, கடைசில, அதுகளுக்கு மாலை போட்டு  அஞ்சலி செலுத்துவதில் முடியலாம்.

உந்த அண்ணன், தம்பிகளுடன் பார்க்கும் போது, பிரபாகரன் கொஞ்சம் நல்ல மனிதர்.

  • Replies 777
  • Views 64k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

இந்தப் பதினைந்து இலட்சம் பேருக்கு ஒரு நாடு பிரித்துக்கொடுக்க சிங்களவரும், முஸ்லிம்களும் ஒத்துக்கொள்வார்களா என்ன? 

கோத்தா தொல்பொருள் திணைக்களத்தை இராணுவமயமாக்கி சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர்களை திட்டுதிட்டாக வாழவிடுவார். அதனால் தமிழீழம் என்பது ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்புள்ள நாடாக இருக்காது என்பதுதான் யதார்த்தம். 

ஆனால் தமிழகத்தில் சீமான் ஆட்சிக்கு வந்தால் எதுவும் நடக்கலாம். முழு இலங்கைகூட தமிழருக்குச் சொந்தமாக மாறலாம்😬

கிருப்பண்ணர்,

உங்களுடன் ஆக்கபூர்வமான விவாதத்தில் இருக்கிறேன் என்று நினைத்தால், இந்தப்பக்கம் வந்து, வேறு வகையில் சீமானை இழுத்து, தொடங்கி விட்டீர்கள். சீமான் phobia வில் இருந்து உங்களை வெளியே எடுப்பது மிக கடினமாக இருக்கும் போலை கிடக்குதே.

முதலில், இன்றய நிலையில் இந்த சிங்கள முஸ்லீம் இணைவினை எப்படி குறிப்பிடுவீர்கள்?

முஸ்லிம்களை ஒடுக்கவே கோத்தா, சிங்களவர்களால் கொண்டுவரப்பட்டார்.

முஸ்லிம்கள், தமது பாதுகாப்பு குறித்து கரிசனை கொள்ளவேண்டிய நிலையில் உள்ளனர் என்பதனை ஏற்றுக்கொள்வீர்களா?

உலகளாவிய பிரச்சனைகள் காரணமாக, எம்மைப்போல, அவர்கள் கிளம்பி அகதியாக, இலகுவாக வரமுடியாது, என்பதனையும், உலகமே சந்தேக கண்ணுடன் தான் அவர்களை பார்க்கும் என்பதனையும் ஏற்றுக்கொள்வீர்களா?

ஆகவே, இலங்கையில் முஸ்லீம் மக்கள், தமிழ்பேசும் மக்களாக, ஒன்றிணைந்தால் தான் பாதுகாப்பானது என்ற நிலைக்கு வரவேண்டியது தவிர்க்க முடியாதது. இந்த ஒன்றிணைவு நிலைக்கு, வரமுடியாமல், சிங்களத்தால் தூண்டப்பட்டு வீரவசனம் பேசிய றிசாட், ஹிஸ்புல்லா, அதாவுல்லா எல்லோரும் பல் புடுங்கி விடப்பட்டுள்ள பாம்புகள்.

மேலும், சிங்களவர்கள் நாடு பிரித்து தருவார்களா என்பது ஒரு அப்பாவித்தனமான, அபத்தமான கேள்வி.

அவர்கள் என்ன தருவது என்று அல்லவா சிந்திக்கவேண்டும். அவன் யாரு தருவதற்கு, நாம் யாரு பெறுவதற்கு?

எமது சுஜநிர்ணய உரிமை குறித்து மட்டுமே நாம் பேசவேணும். அவ்வளவு தான். வடக்கு, கிழக்கில் குடியொப்பம் ஒன்று நடத்தும் இலக்குடன் நாம் நடக்க வேண்டும். அதற்குரிய அழுத்தம், இங்கே வாழும் நம்மால் கொடுக்கப்படவேண்டும்.  

அதுக்கும், சீமானை பிடித்துக் கொண்டு தொங்குவதக்கும் என்ன தொடர்பு.

நான் சொன்னது போலவே, இந்த தமிழ் மெகா அலம்பறை இணையங்களில் இருந்து வெளியே வாருங்கள். அவை உங்களை, தமிழக, இந்திய அரசியலுக்குள் வைத்து சிந்திக்க வைக்கின்றன.

தமிழகத்தில் எந்த ஒரு எழுத்தாளரின் சிந்தனையும் தெளிவானது அல்ல. காரணம் புலமையும், ஏழ்மையும் இணைந்தே இருப்பது. இதன் காரணமாக எழுத்துக்கள் வாங்கப்படுகின்றன. சுஜ சிந்தனைகள் முடக்கப்படுகின்றன. 

சுபவீ என்னும் ஆரம்பகால தமிழ் தேசிய சிந்தனையாளர், அப்படியே குப்புக்கரணம் அடித்து, மறுபக்கம் போய், திமுக பக்கம் நின்று பேச காரணம்.... எனது புரிதல் சரியானால்.... குடும்ப வறுமை.

பிரசாந்த் கிஷோர் வந்தபின்னர் பல எழுத்தாளர்கள், சமூக ஊடகவியலாளர், திமுக சார்பானவர்களாக எழுதும் வகையில் விலைக்கு வாங்கப்பட்டுள்ள அவலம் நடந்துள்ளது. 

ஒரு காலத்தில் சோ தனது அரசியல் நிலைப்பாடு வேறு, துக்ளக் பத்திரிகை நிலைப்பாடு வேறு என்று இருந்தார். இன்று அவரது பத்திரிகை குருமூர்த்தி தலைமையில் அப்படியே பிஜேபி மடியில்.

விகடன் திமுக கையில்.... இப்படிதான் பல....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

மச்சான், நீங்கள் என்ட அண்ணனை நினைத்து கவலைப்பட வேண்டாம்...அவர் தலைவரையே சுழித்திட்டு வந்தவர் … தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்று அவருக்குத் தெரியும் 😉

  பொட்டு அம்மானின் சொல்ல‌ த‌லைவ‌ர் கேட்டு இருக்க‌னும் , மாத்தையாவுக்கு என்ன‌ ந‌ட‌ந்திச்சோ அது தான் உங்க‌ட‌ அண்ண‌னுக்கும் ந‌ட‌ந்து இருக்கும் , 

உங்க‌ட‌ கொண்ண‌ர‌ த‌லைவ‌ர் அள‌வுக்கு அதிக‌மா ந‌ம்பின‌ ப‌டியால் தான் த‌ப்பிச்சார் , உங்க‌ட‌ அண்ண‌ரின் துரோக‌ம் த‌லைவ‌ருக்கு தெரிய‌ முத‌லே பொட்டு அம்மானுக்கு தெரியும் , இந்த‌ உண்மைக‌ள் 2005ம் ஆண்டே வெளி வ‌ந்திட்டு , 

உங்க‌ட‌ அண்ண‌ர் பிர‌ப‌ல‌ம் ஆக‌ கார‌ண‌ம் த‌லைவ‌ரை கிண‌ற்றுக்கில் இருந்து காப்பாற்றின‌ ப‌டியால் , போர்க்க‌ள‌ வெற்றிக்கு உண்மையான‌ சொந்த‌க் கார‌ர் ( பால்ராஜ் அண்ணா )

உங்க‌ட‌ அண்ண‌னர் போராளிக‌ளை முன்னுக்கு விட்டுட்டு   வ‌ங்க‌ருக்குள் இருந்து கொண்டு வோக்கியில் ஓவ‌ர் ஓவ‌ர் சொன்ன‌து தான்  நித‌ர்ச‌ன‌ உண்மை)

பால்ராஜ் அண்ணா எம்மை விட்டு பிரிந்தாலும் இன்றும் ப‌ல‌ ல‌ச்ச‌ம் இளைஞ‌ர்க‌ள் ம‌ன‌தில் வாழுகிறார் 🙏, ப‌ல‌ ல‌ச்ச‌ம் உற‌வுக‌ளின் ம‌ன‌ங்க‌ளில் வாழுகிறார் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

ஐயா கிருபன், சொல்லுறன் எண்டு கோவிக்கப்படாது,

என்னைப் பொறுத்தவரை, இந்தியனிண்ட உதவியோட தமிழீழம் கிடைச்சு அவனுக்கு கூஜா தூக்கி சந்தோசமா வாழுறத விட, நான் சிங்களவனுக்குக் கீழ அடிமையா இருந்து கஸ்ரப்பட்டு சாகிறத பெருமையா கருதுவன். 

100% - இந்தியனுக்கு அடிமையாக இருப்பதைவிட சிங்களவன் பரவாயில்லை

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

100% - இந்தியனுக்கு அடிமையாக இருப்பதைவிட சிங்களவன் பரவாயில்லை

என்னுடைய அனுபவம்தான் எல்லோருக்கும் போல 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, உடையார் said:

100% - இந்தியனுக்கு அடிமையாக இருப்பதைவிட சிங்களவன் பரவாயில்லை

7 minutes ago, Kapithan said:

என்னுடைய அனுபவம்தான் எல்லோருக்கும் போல 😂😂

இந்தியாவில் அனைத்துக்குமே பணம் கொடுத்தே பெறவேண்டும்.

ஒரு சிறிய நாடு. கல்வி, உயர்கல்வி, மருத்துவம் இலவசமானது.... 

இந்த  நாட்டின் உள்ளே நுழைய சீபா ஒப்பந்தமூலம் இந்திய நிறுவனங்கள் பெரும் முயறசி செய்கின்றன.  இலங்கை தவிர்க்கின்றது. எமக்குள் பல பிரச்சனைகள் இருந்தாலும், இந்தியர்களை தூரத்தில் வைப்பதே முழுத்தீவுக்கும் நல்லது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

இந்தியாவால் அனைத்துக்குமே பணம் கொடுத்தே பெறவேண்டும்.

ஒரு சிறிய நாடு. கல்வி, உயர்கல்வி, மருத்துவம் இலவசமானது.... 

இந்த  நாட்டின் உள்ளே நுழைய சீபா ஒப்பந்தமூலம் இந்திய நிறுவனங்கள் பெரும் முயறசி செய்கின்றன.  இலங்கை தவிர்க்கின்றது. எமக்குள் பல பிரச்சனைகள் இருந்தாலும், இந்தியர்களை தூரத்தில் வைப்பதே நல்லது.
 
இந்தியா எங்களுக்கு எந்தவித நன்மையும் செய்யாது என்பது எவ்வளவு உண்மையோ அதைவிட  உண்மை இந்தியா நிச்சயம் தீமை செய்யயாமல் இராது என்பது. 😡

I Say No To India 💯

  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2020 at 07:35, ரதி said:

மருதர் இதை எழுதும் போது உங்களுக்கே சிரிப்பு வரலையா

இனத்தை காட்டிக்கொடுத்த ஒரு கோமாளியை பற்றி எழுதும்போது 
எப்படி சிரிப்பு வராமல் இருக்கும்.......... ********* ---------அடக்கவே முடியாத சிரிப்பும் வந்தது 
என்ன செய்ய கால கொடுமை என்று விட்டு கடந்து போகிறேன் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

என்னுடைய அனுபவம்தான் எல்லோருக்கும் போல 😂😂

நிச்சயமாக எல்லோருக்கும் இல்லை.எட்டப்பர் கூட்டம் இந்த திரியிலும் இருக்கின்றார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

மச்சான், நீங்கள் என்ட அண்ணனை நினைத்து கவலைப்பட வேண்டாம்...அவர் தலைவரையே சுழித்திட்டு வந்தவர் … தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்று அவருக்குத் தெரியும் 😉

இந்த எழுத்தின் ஆழம் புரியாமல் எழுதிவிட்டீர்கள் போலப் படுகிறது.😧

மன்னித்துவிடலாம் 🤥

32 minutes ago, குமாரசாமி said:

நிச்சயமாக எல்லோருக்கும் இல்லை.எட்டப்பர் கூட்டம் இந்த திரியிலும் இருக்கின்றார்கள். 😂

உடும்புடன் தொடர்புபட்ட திரிதானே உண்மை தெரிந்தாலும் பிடித்ததை விடாயினம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

இந்தியாவில் அனைத்துக்குமே பணம் கொடுத்தே பெறவேண்டும்.

ஒரு சிறிய நாடு. கல்வி, உயர்கல்வி, மருத்துவம் இலவசமானது.... 

இந்த  நாட்டின் உள்ளே நுழைய சீபா ஒப்பந்தமூலம் இந்திய நிறுவனங்கள் பெரும் முயறசி செய்கின்றன.  இலங்கை தவிர்க்கின்றது. எமக்குள் பல பிரச்சனைகள் இருந்தாலும், இந்தியர்களை தூரத்தில் வைப்பதே முழுத்தீவுக்கும் நல்லது.

💯

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

இந்த எழுத்தின் ஆழம் புரியாமல் எழுதிவிட்டீர்கள் போலப் படுகிறது.😧

மன்னித்துவிடலாம் 🤥

நான் இதை  எழுதுவதற்கு மன்னிக்கவும் ...உங்கட சாவு உங்களிடமா இருக்கு?...அவருக்கு துவக்கால் தான் சாவென்றால் அதை மாற்ற முடியாது ...ஆனால் மகிந்தா சகோதரர்களை புகைக்கும் அளவிற்கு அவர் முட்டாளில்லை . 
 
17 hours ago, Maruthankerny said:

இனத்தை காட்டிக்கொடுத்த ஒரு கோமாளியை பற்றி எழுதும்போது 
எப்படி சிரிப்பு வராமல் இருக்கும்.......... ********* ---------அடக்கவே முடியாத சிரிப்பும் வந்தது 
என்ன செய்ய கால கொடுமை என்று விட்டு கடந்து போகிறேன் 

உங்களிட்ட சரக்கே  இல்லை என்று தெரியும் அதற்காக இப்படியா 🙃

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

உங்களிட்ட சரக்கே  இல்லை என்று தெரியும் அதற்காக இப்படியா 🙃

நீங்கள் இறக்கி விடும் சரக்குக்கே பாரம் தாழாமல் யாழ் கள சேர்வேர் தள்ளாடும்போது 
இதுக்குள்ளே நாங்கள் வேற எதுக்கு வீண் பாரமாக .....? 

(இனியாவது ஏதாவது தலைப்புக்கோ அல்லது முதல் எழுதிய கருத்துக்கோ 
சம்மந்தப்பட்டு எழுதுங்கள் ஞாபகத்தில் வந்தால்)

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

நீங்கள் இறக்கி விடும் சரக்குக்கே பாரம் தாழாமல் யாழ் கள சேர்வேர் தள்ளாடும்போது 
இதுக்குள்ளே நாங்கள் வேற எதுக்கு வீண் பாரமாக .....? 

(இனியாவது ஏதாவது தலைப்புக்கோ அல்லது முதல் எழுதிய கருத்துக்கோ 
சம்மந்தப்பட்டு எழுதுங்கள் ஞாபகத்தில் வந்தால்)

இதை முதலில் நீங்கள் கடைப்பிடியுங்கோ 🙂
 
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரதி said:

இதை முதலில் நீங்கள் கடைப்பிடியுங்கோ 🙂
 
அதுக்கு கர கரக்கும் கரப்பான் பூச்சிகள் 
கொஞ்சம் இடம்தரும் என்று எண்ணுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரதி said:

நான் இதை  எழுதுவதற்கு மன்னிக்கவும் ...உங்கட சாவு உங்களிடமா இருக்கு?...அவருக்கு துவக்கால் தான் சாவென்றால் அதை மாற்ற முடியாது ...ஆனால் மகிந்தா சகோதரர்களை புகைக்கும் அளவிற்கு அவர் முட்டாளில்லை . 
 
உங்கள் சகோதரரின் மரணம் தொடர்பாக மட்டுமல்ல வேறு எவரினது மரணத்தையும் என்றைக்குமே நான் கற்பனை கூட செய்ததில்லை. ஆதலால் அந்த அளவுக்கு நீங்கள் யோசிக்க வேண்டியதில்லை. 👍

உங்கள் சகோதரர் மட்டுமல்ல அவரது நிலையில் இருக்கும் எவருமே சிங்களத்தைப் பகைப்பது பற்றி கனவில்தானும் கற்பனை செய்ய முடியாது.  அப்படி நினைத்தால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 😀

ஆகவே அவர்போன்ற நிலையில் உள்ளவர்களுக் தெரிவு என்பதே இல்லை. சிங்களத்தின் இரக்கத்தை எதிர்பார்க்க வேண்டியதுதான் உண்மையான நிலை. 😀

இங்கே புத்திசாலி , முட்டாள் என்கின்ற வேறுபாடெல்லாம் வெறும் கற்பனையே. 😀

பிச்சை எடுப்பதில் புத்திசாலிப் பிச்சைக்காறன் முட்டாள் பிச்சைக்காறன் என்றெல்லாம் இல்லை. தட்டில் போடுவதை எடுக்க வேண்டியதுதான். 🙂

On 7/6/2020 at 10:16, Kapithan said:

ஐயா கிருபன், சொல்லுறன் எண்டு கோவிக்கப்படாது,

என்னைப் பொறுத்தவரை, இந்தியனிண்ட உதவியோட தமிழீழம் கிடைச்சு அவனுக்கு கூஜா தூக்கி சந்தோசமா வாழுறத விட, நான் சிங்களவனுக்குக் கீழ அடிமையா இருந்து கஸ்ரப்பட்டு சாகிறத பெருமையா கருதுவன். 

எனக்கொரு சந்தேகம். 
திரு. சீமான் தமிழ்நாட்டின் ஆட்சிக்கு வந்தால் எவாறு,இந்திய நடுவண் அரசின் அனுசரணை இன்றி ஈழமக்களின் அபிலாசைகளுக்கு உதவமுடியும்?

யாருக்கும் பதில் தெரிந்தால் சொல்லவும்.(தனிமனித தாக்குதல் வேண்டாம்)

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kaalee said:

எனக்கொரு சந்தேகம். 
திரு. சீமான் தமிழ்நாட்டின் ஆட்சிக்கு வந்தால் எவாறு,இந்திய நடுவண் அரசின் அனுசரணை இன்றி ஈழமக்களின் அபிலாசைகளுக்கு உதவமுடியும்?

யாருக்கும் பதில் தெரிந்தால் சொல்லவும்.(தனிமனித தாக்குதல் வேண்டாம்)

சீமான் எப்ப சொன்னார் தமிழ்நாட்டை பிடித்தவுடன் அடுத்ததாக தமிழீழம் தான் என்று.

இப்ப உள்ள கட்சிகள் இரண்டுமே அளவுக்கதிமாக ஊழல் செய்து மாட்டுப்பட்டிருக்கும் கட்சிகள்.மத்திய அரசு சொல்வதை செய்யும் கட்சிகள்.

     சும்மாவா சொன்னார்கள் 
       நக்குண்டான் நாவிழந்தான் என்று.
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kaalee said:

எனக்கொரு சந்தேகம். 
திரு. சீமான் தமிழ்நாட்டின் ஆட்சிக்கு வந்தால் எவாறு,இந்திய நடுவண் அரசின் அனுசரணை இன்றி ஈழமக்களின் அபிலாசைகளுக்கு உதவமுடியும்?

யாருக்கும் பதில் தெரிந்தால் சொல்லவும்.(தனிமனித தாக்குதல் வேண்டாம்)

நீண்டு போன இந்த திரியின் ஆரம்பத்தில் கேட்ட, பதில் அளிக்கப்படட கேள்விகளை மீண்டும் கேட்பதன் நோக்கம், இந்த திரியினை அணைய விடாமல் பார்ப்பதோ, காளி?  🤔

59 minutes ago, Nathamuni said:

நீண்டு போன இந்த திரியின் ஆரம்பத்தில் கேட்ட, பதில் அளிக்கப்படட கேள்விகளை மீண்டும் கேட்பதன் நோக்கம், இந்த திரியினை அணைய விடாமல் பார்ப்பதோ, காளி?  🤔

மன்னிக்கவேணும் நாதமுனி அண்ணை, இந்த திரியை நீடவேண்டும் என்று நினைக்கவில்லை.
எத்திணையாவது பக்கத்தில் இக்கேள்விக்கு பதில் இருக்கென்று சொன்னால் நான் போய் பார்க்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kaalee said:

எனக்கொரு சந்தேகம். 
திரு. சீமான் தமிழ்நாட்டின் ஆட்சிக்கு வந்தால் எவாறு,இந்திய நடுவண் அரசின் அனுசரணை இன்றி ஈழமக்களின் அபிலாசைகளுக்கு உதவமுடியும்?

யாருக்கும் பதில் தெரிந்தால் சொல்லவும்.(தனிமனித தாக்குதல் வேண்டாம்)

மன்னிக்கவும் காளி,

நான் தமிழ்நாட்டாரை இந்தியன் என்கின்ற வரையறைக்குள் சேர்பதில்லை. 👍

உங்கள் கேள்வி இந்தியாவின் மீது கொஞ்சமாவது நம்பிக்கையிருப்பதாக காட்டுகிறது 😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

💪

21 hours ago, Kapithan said:

உங்கள் கேள்வி இந்தியாவின் மீது கொஞ்சமாவது நம்பிக்கையிருப்பதாக காட்டுகிறது 😂😂😂😂

ஏழேழு யென்மத்துக்கும் கிடையாது .

ஈழத்தமிழன் என்றவகையிலும் தனிப்படமுறையிலும் நிறைய அனுபவம் உள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kaalee said:

ஏழேழு யென்மத்துக்கும் கிடையாது .

ஈழத்தமிழன் என்றவகையிலும் தனிப்படமுறையிலும் நிறைய அனுபவம் உள்ளது 

நன்றி. ண்

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு. 👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.