Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரஞ்சித் said:

எவ்வளவு படித்தென்ன?....பாடசாலைக்கு அதிபராய் இருந்தென்ன அடுத்தவனின் தனிப்பட்ட  விசயத்தில் தலையிடும் கேடு கெட்ட புத்தி எம்மை விட்டுப் போகாது.

 

அவரின் படத்தை அகற்றிவிட்டேன்.

நன்றி ..உங்களை தனிப்பட நோகடிக்கும் எண்ணம் இல்லை  

1 hour ago, குமாரசாமி said:

அப்பன்! சிங்கள அரசியல்வாதிகளே விடுதலைப்புலிகளின் அழிப்புக்கு கருணா உதவிக்கரமாக இருந்தவர் என வெளிப்படையாக கூறுகின்றார்கள். இதற்கு பின்னரும்.....????????

சிங்களவன் சொல்வது எல்லாம் வேதவாக்கா?

  • Replies 225
  • Views 25.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Quote

சசிகமலன் ஒரு தீவிர கூட்டமைப்பு ஆதரவாளர் என்பது அங்கால எல்லோருக்கும் தெரியும் ...காவிறத்திற்கு வேறு ஒன்றும் இல்லாமல் இதை காவிக் கொண்டு வந்து இணைப்பதன் மூலம் எவ்வளவு பஞ்சம் என்று தெரிகிறது.
கருணா முதலில் மட்டக்களப்பில் தான் கேட்பதாக இருந்தார்...பிள்ளையானோடு இணைந்து செயற்பட அவரது அனுமதியை கேட்க அவர் மறுத்து விட்டார் ...தவிர முதலில் கேட்டு தோல்வி என்பதால் தான் இந்த தடவை அம்பாறையில் கேட்க்கிறார் 

கருணா மகிந்தவின் கட்சியில் இருக்கலாம். சசிகமலன் தீவிர கூட்டமைப்பாக இருக்கக் கூடாதா?
பஞ்சத்தில் காவவில்லை. தேவை கருதி இணைக்கப்பட்டுள்ளது.
கருணா முதலில் மட்டக்களப்பில் தோல்வி. அப்பாறையிலும் தோல்வி தான். தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்கு அவர் கறிவேப்பிலையாக பாவிக்கப்படுகிறார் என்பது வெளிப்படை.
பின் கதவால் மகிந்த ஏதாவது பதவி கொடுப்பார். அதை வைத்து சீவியத்தை நடாத்துவார் என நினைக்கிறேன்.

90 ஆயிரம் வாக்குகள் பெற்றால் இரு ஆசனங்கள் கூட்டமைப்புக்கு இரு ஆசனம் கிடைக்கும் என்பதை நீங்களோ யாருமோ பதியவில்லை. அதற்காக தான் அவரின் கருத்தை இணைத்தேன். கருத்து வறட்சி என்பது அவரின் கருத்துக்கு உங்களால் உருப்படியான கருத்தை வைக்க முடியாமல் போனது என்பது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது தனிப்பட்ட அபிப்பிராயம் என்ன என்டால் இப்படியான திரியில் கருத்து எழுதுவதை விட தாயக உறவுகளுக்கு எவளவோ செய்யலாம்.ஆனால் நிச்சயமாக பண உதவி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

கருணா மகிந்தவின் கட்சியில் இருக்கலாம். சசிகமலன் தீவிர கூட்டமைப்பாக இருக்கக் கூடாதா?
பஞ்சத்தில் காவவில்லை. தேவை கருதி இணைக்கப்பட்டுள்ளது.
கருணா முதலில் மட்டக்களப்பில் தோல்வி. அப்பாறையிலும் தோல்வி தான். தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்கு அவர் கறிவேப்பிலையாக பாவிக்கப்படுகிறார் என்பது வெளிப்படை.
பின் கதவால் மகிந்த ஏதாவது பதவி கொடுப்பார். அதை வைத்து சீவியத்தை நடாத்துவார் என நினைக்கிறேன்.

90 ஆயிரம் வாக்குகள் பெற்றால் இரு ஆசனங்கள் கூட்டமைப்புக்கு இரு ஆசனம் கிடைக்கும் என்பதை நீங்களோ யாருமோ பதியவில்லை. அதற்காக தான் அவரின் கருத்தை இணைத்தேன். கருத்து வறட்சி என்பது அவரின் கருத்துக்கு உங்களால் உருப்படியான கருத்தை வைக்க முடியாமல் போனது என்பது தான்.

சசிகமலன் எந்த கட்சியிலும் இருக்கலாம்..யாருக்கும் ஆதரவு கொடுக்கலாம் ...அதே மாதிரி லட்சம் பேர் தங்களுக்கு பிடித்த வேட்ப்பாளருக்காய் மு.பு எழுதுவார்கள் அதெல்லாம் தூக்கி போட்டு கொண்டு இருக்க யாழில் இடம் இருக்கா?
நான் இப்படி மு.பு இருந்து ஆயிரம் கருத்துக்களை கொண்டு வந்து இணைக்கட்டா?
முதலில் ஒரு மட்டுவாய் இருந்து கொண்டு இப்படியான திரிகளில் நீங்கள் கருத்து எழுதி இருக்க கூடாது ...எழுதுற கருத்து உங்கள் சொந்த கருத்தாய் இல்லாமல் யாரோ எழுதினதை தூக்கி வந்து போடுகிறீர்கள்.
கருணா எந்த கட்சியில் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது கூட உங்களுக்கு தெரியவில்லை.
நான் மேலே எழுதின பதிலையே கீழே எனக்கு பதிலாய் எழுதி இருக்கிறீர்கள்.
நான் ஏன் கூட்டமைப்புக்கு இத்தனை ஆசனம் கிடைக்கோணும் என்று எழுதோணும்.
கூட்டமைப்பு மட்டு ,அம்பாறை மக்களுக்கு இது வரை  செய்து கிழித்து விட்டார்கள்...இனி மேல் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதற்கு. 
தேவையில்லாமல் இடையில் புகுந்து எழுதுறது ...பதிலுக்கு நாங்கள் எழுதினால் வெட்டுறது அல்லது மற்றவர்களிடம் சொல்லி வெட்றது 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு காலம் ,காலமாய் அந்த மக்களை வோட்டுக்கள் பிரிந்து விடும் . முஸ்லிம்கள் வந்திடுவார்கள் என்று சொல்லி ஏமாத்தி தான் தேர்தலில் வெல்லுறவர்கள்...வென்ற பின் ஒரு மண்ணும் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

நீங்கள் சொல்றது எனக்கு விலங்குது அண்ணா.நன்றி  ...நான் அடுத்தவரின் தனிப்பட்ட விசயத்தில் மூக்கை நுழைப்பதில்லை...அது பற்றி எனக்கு அக்கறையுமில்லை .

 

 

உங்களின் இந்த கொம்மானின் புடுங்குப்பாடுகளில் நான் பொதுவாகவே கருத்து எழுத விருப்பம் இல்லை 
முன்பும் ஒரு திரியில் நீங்கள் திருப்ப திரும்ப சீண்ட பதில் எழுதினேன் ... உங்களிடம் இருந்து பதில் இல்லை 
மாறாக எதோ அலம்பி கொண்டு இருந்தீர்கள்.........

"தனிப்பட்ட விடயம்"
மக்கள் பணத்தை களவெடுத்து கொண்டுபோய் 
விலைமாதர் போன்ற பெண்களுடன் படுப்பது தனிப்பட்ட விடயமா? 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Maruthankerny said:

உங்களின் இந்த கொம்மானின் புடுங்குப்பாடுகளில் நான் பொதுவாகவே கருத்து எழுத விருப்பம் இல்லை 
முன்பும் ஒரு திரியில் நீங்கள் திருப்ப திரும்ப சீண்ட பதில் எழுதினேன் ... உங்களிடம் இருந்து பதில் இல்லை 
மாறாக எதோ அலம்பி கொண்டு இருந்தீர்கள்.........

"தனிப்பட்ட விடயம்"
மக்கள் பணத்தை களவெடுத்து கொண்டுபோய் 
விலைமாதர் போன்ற பெண்களுடன் படுப்பது தனிப்பட்ட விடயமா? 

உங்கடகருத்திற்கு  பதில் எழுதாமல் ஒடினேனா நானா ஜயோ எங்கே கொஞ்சம் காட்டுங்கள் பார்ப்போம்
உங்களுக்கு நான் ஏதோ அலம்பின மாதிரி எனக்கு இது அலப்பறையாய் படுகுது
உங்கள மாதிரி எல்லாம் தெரிந்த மேதாவிகளுக்கு பதில் சொல்ல ஏலுமே 
வாயால வடை சுடும் ஆட்களல்லவா 
 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

உங்கடகருத்திற்கு  பதில் எழுதாமல் ஒடினேனா நானா ஜயோ எங்கே கொஞ்சம் காட்டுங்கள் பார்ப்போம்
உங்களுக்கு நான் ஏதோ அலம்பின மாதிரி எனக்கு இது அலப்பறையாய் படுகுது
உங்கள மாதிரி எல்லாம் தெரிந்த மேதாவிகளுக்கு பதில் சொல்ல ஏலுமே 
வாயால வடை சுடும் ஆட்களல்லவா 
 

"தனிப்பட்ட விடயம்"
மக்கள் பணத்தை களவெடுத்து கொண்டுபோய் 
விலைமாதர் போன்ற பெண்களுடன் படுப்பது தனிப்பட்ட விடயமா? 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

"தனிப்பட்ட விடயம்"
மக்கள் பணத்தை களவெடுத்து கொண்டுபோய் 
விலைமாதர் போன்ற பெண்களுடன் படுப்பது தனிப்பட்ட விடயமா? 

அதே மக்களிடம் வாக்கு கேட்டும் வருவார்...!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்ய தீவிர தமிழ் தேசியம் கதைத்துக் கொண்டு அடுத்தவனின் படுக்கையை எட்டிப் பார்த்து பழகி போச்சு ...மாத்தேழுமே 
நீங்கள் எல்லாம் படித்தவர்கள் ...வீட்டில இருந்தால் சம்பளம் வரும் ...நான் அப்படியே 
நேரம் பொன்னானது ... குட் நைட் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

உங்களின் இந்த கொம்மானின் புடுங்குப்பாடுகளில் நான் பொதுவாகவே கருத்து எழுத விருப்பம் இல்லை 
முன்பும் ஒரு திரியில் நீங்கள் திருப்ப திரும்ப சீண்ட பதில் எழுதினேன் ... உங்களிடம் இருந்து பதில் இல்லை 
மாறாக எதோ அலம்பி கொண்டு இருந்தீர்கள்.........

"தனிப்பட்ட விடயம்"
மக்கள் பணத்தை களவெடுத்து கொண்டுபோய் 
விலைமாதர் போன்ற பெண்களுடன் படுப்பது தனிப்பட்ட விடயமா

எம் போராட்ட‌த்தில் இருந்த‌ போது ச‌மாதான‌ கால‌த்தில் ( த‌லைவ‌ரின் அம்மா அப்பாவின் காலில் விழுந்து ஆசிர்வாத‌ம் பெறுவாராம் , அதே த‌லைவ‌ரின் அப்பா அம்மா இற‌ந்த‌ போது எட்டியும் பார்க்காத‌ ஈன‌ பிற‌வி இவ‌ன் )

எம் போராட்ட‌த்தில் த‌லைவ‌ர் பொட்டு அம்மான் , ம‌ற்றும் ப‌ல‌ த‌ள‌ப‌திக‌ள் அவ‌ர்க‌ளின் ம‌னைவிக‌ளை த‌விற‌ வேறு பெண்க‌ளை தொட்ட‌து இல்லை ,

எம் போராட்ட‌ விதிமுறைக‌ள்

ம‌து அருந்த‌க் கூடாது
புகை பிடிக்க‌ கூடாது

கும்மான் போராட்ட‌த்தில் இருந்த‌ கால‌த்தில் ஒழுங்காய் இருந்து இருப்பானோ என்று நினைக்கும் போது ப‌ல‌ ச‌ந்தேக‌ங்க‌ள் வ‌ருது /


கும்மான் என்ற‌ கோமாளியை ப‌ற்றி ர‌திய‌க்கா யாழில் எழுதி த‌னுக்கு இருக்கும் ம‌ரியாதைய‌ தானே தாழ்த்தி கொள்ளுகிறா  , 

எவ‌ள‌வு அசிங்க‌ங்க‌ள் க‌ருணாவை ப‌ற்றி ப‌ல‌ர் எழுதியும் க‌ருணாவை காரி துப்பியும் , ர‌திய‌க்கா போன்ற‌ ஒரு சில‌ர் அண்ண‌ன் என்று எழுதும் போது பார்க்கிற‌வை நினைப்பின‌ம் சாடிக்கு ஏற்ற‌ மூடி போல‌ ,

இசைக்க‌லைஞ‌ன் அண்ணா போன்ற‌ ஒழுக்க‌மான‌வ‌ர்க‌ளை ம‌ச்சான் என்று அழைத்து விட்டு அதே வாயால் , ஒரு கோமாளிய‌ போய் அண்ண‌ன் என்று சொல்லுவ‌து வேடிக்கையாய் இருக்கு ,

க‌ருணா எம் போராட்ட‌த்தில் ஒரு ஆணியும் புடுங்க‌ல‌ , த‌லைவ‌ர் க‌ருணாவை த‌லைக்கு மேல‌ தூக்கி வைத்து அழ‌கு பார்த்த‌து தான் த‌லைவ‌ர் செய்த‌ மிக‌ப் பெரிய‌ த‌வ‌று ,

பொட்டு அம்மானின் சொல்லை  த‌லைவ‌ர் கேட்டு இருந்தா 2004 க‌ருணாவுக்கு ச‌ங்கு ஊதி இருக்க‌லாம் , அவ‌ன் துரோக‌த்தின் உச்சிக்கு போன‌ பிற‌க்கு த‌லைவ‌ர் வ‌ன்னிக்கு வ‌ர‌ சொல்லி அழைக்கிறார் ,  

க‌வுசெல்லிய‌ன் அண்ணா இன்னும் ப‌ல‌ருட‌ன் தான் இவ‌ன் த‌ப்பிக்க‌ பார்த்த‌வ‌ன் , க‌வுசெல்லிய‌ன் அண்ணா எம் போராட்ட‌த்த‌ நேசித்த‌ ப‌டியால் க‌ருணாவுக்கு ஆமாம் போட்டு விட்டு வ‌ன்னியில் வ‌ந்து சொன்ன‌வ‌ர் க‌ருணா இப்ப‌டி ச‌தி செய‌லில் இற‌ங்கி விட்டான் ஏதாவ‌து சீக்கிர‌ம் செய்து ஆக‌னும் என்று , 

க‌ட‌சியில் சொர்ன‌ம் அண்ணா ர‌மேஸ் அண்ணா ர‌ம‌ண‌ன் அண்ணா க‌ருணாவை ம‌ட‌க்கி பிடிக்கும் ந‌ட‌வ‌டிக்கையில் இற‌ங்கின‌வை , க‌ம‌வெறிய‌ன் த‌ப்பிச்சிட்டான் ,


2004ம் ஆண்டுக்கு பிற‌க்கு க‌ருணாவின் வாழ்க்கை ஆபாச‌ பெண்க‌ளுட‌ன் ,

தூ தூ தூ , 

இவ‌ன் எம் போராட்ட‌ ர‌க‌சிய‌ங்க‌ள எல்லாம் சிங்க‌ள‌வ‌னுக்கு சொல்லிக் கொடுத்த‌ ப‌டியால் தான் சிங்க‌ள‌மும் இந்திய‌மும் எம்ம‌வ‌ர்க‌ளை ஈசியா அழிக்க‌ முடிந்த‌து , 

பாம்பை க‌ண்டால் ப‌டையே ந‌டுங்கும் ,

( க‌ரும்புலிக‌ளைக் க‌ண்டால் இந்திய‌ன் சிங்க‌ள‌ம் இர‌ண்டுமே ந‌டுங்கும் )

எம்ம‌வ‌ர்க‌ளுக்கு வ‌ந்த‌ அனைத்து ஆயுத‌ க‌ப்ப‌லும் வ‌ன்னிக்கு வ‌ந்து இருக்க‌னும் , சிங்க‌ள‌வ‌னுக்கு இன்னும் பேர் இழ‌ப்பை குடுத்து இருக்க‌லாம் )


த‌டை செய்யப் ப‌ட்ட‌ குண்டுக‌ள் தேவைப் ப‌ட்டு இருக்கு எம்ம‌வ‌ர்க‌ளை அழிக்க‌ , அதே த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌ ஆயுத‌ம் எம்ம‌வ‌ர் கையில் இருந்து இருக்க‌னும் , வ‌ன்னியில் சின்ன‌ அங்குல‌த்த‌ கூட‌ பிடித்து இருக்க‌ மாட்டார்க‌ள் சொறில‌ங்கா ப‌டையும் குண்டியா ப‌டையும் 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:
Quote

சசிகமலன் எந்த கட்சியிலும் இருக்கலாம்..யாருக்கும் ஆதரவு கொடுக்கலாம் ...அதே மாதிரி லட்சம் பேர் தங்களுக்கு பிடித்த வேட்ப்பாளருக்காய் மு.பு எழுதுவார்கள் அதெல்லாம் தூக்கி போட்டு கொண்டு இருக்க யாழில் இடம் இருக்கா?
நான் இப்படி மு.பு இருந்து ஆயிரம் கருத்துக்களை கொண்டு வந்து இணைக்கட்டா?
முதலில் ஒரு மட்டுவாய் இருந்து கொண்டு இப்படியான திரிகளில் நீங்கள் கருத்து எழுதி இருக்க கூடாது ...எழுதுற கருத்து உங்கள் சொந்த கருத்தாய் இல்லாமல் யாரோ எழுதினதை தூக்கி வந்து போடுகிறீர்கள்.

என்னுடையை கருத்து தான் அவர் எழுதியதும் என்பதால் அவரின் கருத்தை இணைத்தேன்.

 

Quote

கருணா எந்த கட்சியில் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது கூட உங்களுக்கு தெரியவில்லை.

இவ்வளவு நாளும்  மகிந்தவிடம்  பெட்டிப்பாம்பாக இருந்தார். இப்போ மகிந்த சொல்லி ஒரு கட்சியை தொடங்கி உள்ளார் தமிழ் மக்களின்  வாக்குகளை பிரிக்க.


 

Quote

நான் மேலே எழுதின பதிலையே கீழே எனக்கு பதிலாய் எழுதி இருக்கிறீர்கள்.
நான் ஏன் கூட்டமைப்புக்கு இத்தனை ஆசனம் கிடைக்கோணும் என்று எழுதோணும்.
கூட்டமைப்பு மட்டு ,அம்பாறை மக்களுக்கு இது வரை  செய்து கிழித்து விட்டார்கள்...இனி மேல் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதற்கு. 

ஒருவரும் கிழிக்க போவதில்லை கருணா ஈறாக. முதலில் கருணா வென்றால் தான் மிச்சம்.😂

 

1 hour ago, ரதி said:
Quote

தேவையில்லாமல் இடையில் புகுந்து எழுதுறது ...பதிலுக்கு நாங்கள் எழுதினால் வெட்டுறது அல்லது மற்றவர்களிடம் சொல்லி வெட்றது 

தேவையில்லாமல் இடையில் புகவில்லை. தேவையான படியால் தான் இடையில் புகுந்தேன். நீங்கள் களவிதிக்கு மாறாக எழுதினால் கருத்து வெட்டப்படும். மற்றவர்களுக்கு சொல்லி நான் கருத்துக்களை வெட்ட நீங்கள் ஒன்றும் ஆட்களை பிடித்து தின்னும் ஆளில்லை தானே.😛 ஆகவே யாரிடமும் சொல்லி வெட்ட வேண்டிய அவசியம் இல்லை.

தேவையில்லாமல் இடையில் புகவில்லை. தேவையான படியால் தான் இடையில் புகுந்தேன். நீங்கள் களவிதிக்கு மாறாக எழுதினால் கருத்து வெட்டப்படும். மற்றவர்களுக்கு சொல்லி நான் கருத்துக்களை வெட்ட நீங்கள் ஒன்றும் ஆட்களை பிடித்து தின்னும் ஆளில்லை தானே. ஆகவே யாரிடமும் சொல்லி வெட்ட வேண்டிய அவசியம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

என்ன செய்ய தீவிர தமிழ் தேசியம் கதைத்துக் கொண்டு அடுத்தவனின் படுக்கையை எட்டிப் பார்த்து பழகி போச்சு ...மாத்தேழுமே 
நீங்கள் எல்லாம் படித்தவர்கள் ...வீட்டில இருந்தால் சம்பளம் வரும் ...நான் அப்படியே 
நேரம் பொன்னானது ... குட் நைட் 

"தனிப்பட்ட விடயம்"
மக்கள் பணத்தை களவெடுத்து கொண்டுபோய் 
விலைமாதர் போன்ற பெண்களுடன் படுப்பது தனிப்பட்ட விடயமா? 

  • கருத்துக்கள உறவுகள்

கருணா விவகாரம் | எப்படிச் சுழற்றப் போகிறார்கள் ராஜபக்சக்கள்?

 
 

‘கொறோணாவை விட நான் மோசம்’ என்று கருணா தெரிவித்திருந்த விடயம் தொடர்பாக ராஜபக்ச தரப்பு அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக கருணா தெரிவித்திருந்த கருத்து நேற்று தென்னிலங்கை ஊடகங்களில் பிரதான செய்தியாகப் பிரசுரமாகியிருந்தது. ஆனால் அது பாதுகாப்பு படைகள் மற்றும் தீவிர சிங்கள இனவாத சக்திகளின் மத்தியில் கருணா மற்றும் விடுதலைப் புலிகள் மீதான காயத்தை மீண்டும் கிளறிவிடுவதாக அமைந்துவிட்டதோ என ராஜபக்ச தரப்பு அங்கலாய்க்கிறது எனத் தெரிகிறது.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் கருணாவின் பங்கு எத்தகையது என்பது விவாதத்துக்குரிய விடயமாக இருந்தாலும் போரின் பின்னான அரசியல் காய்நகர்த்தலின் மூலம் தமிழ் மக்கள் மீதான ஜனநாயகப் போரை வென்றதில் கருணாவுக்கு கணிசமான பங்குண்டு.

‘ஆனையிறவுச் சமரில் நாங்கள் 2000 முதல் 3000 இராணுவத்தினரைக் கொன்றோம்’ என்று கூறும் அவரது குரலில் வந்திருக்கும் இச் செய்தி 2020 பாராளுமன்றத் தேர்தலில் எப்படியான விளைவை ஏற்படுத்தப் போகிறது என்பது ராஜபக்ச தரப்புக்கு தலையிடியைத் தரும் விடயமாக மாறியுள்ளது.



காரைதீவு உள்ளூராட்சிச் சபையின் தலைவர் “கருணா அம்மான் கொறோணாவைவிட மோசமானவர்” எனத் தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் முகமாகக் கருணாவின் பேச்சு அமைந்திருந்தது.

ஏற்கெனவே ‘600 பொலிஸ்காரர்களைக் கொன்ற’ விடயம் தொடர்பாக, கருணாவைக் கைதுசெய்யவேண்டுமென்ற குரல்கள் தென்னிலங்கையில் பல தடவைகள் ஒலித்திருந்தன. விமல் வீரவன்ச போன்ற சிறீலங்கா பொதுஜன பெரெமுன கட்சியைச் சேர்ந்த சிலர் கருணாவுக்குப் பக்கத்தில் ஆசனத்தில் அமர மறுப்பவர்கள் என்ற செய்திகளும் முன்னர் கசிந்திருந்தன. இந்த நிலையில், கருணாவைத் தொடர்ந்து ‘பாவிக்க முடியும்’ என்ற நம்பிக்கையில் ராஜபக்ச தரப்பு இந்த அதிருப்தியாளரைச் சமாளித்துக்கொண்டு வந்திருந்தது.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் கருணாவுக்குத் தேசியப்பட்டியலின் மூலம் நியமனம் கொடுத்து, உதவியமைச்சர் பதவிகளை வழங்கியதன் மூலம், அவரது பாவனைக்கு ராஜபக்ச தரப்பு பிரதியுபகாரம் செய்துவந்தது. இந்த தடவையும் ராஜபக்ச தரப்புத் தனக்கு நியமனப்பட்டியலில் இடம் தருவதாகக் கேட்டிருந்தும் தான் மக்களின் ஆணையோடுதான் பாராளுமன்றம் வருவேன் எனக்கூறி அக்கோரிக்கையை மறுத்துவிட்டதாக கருணா தெரிவித்திருந்தார். இதில் பகுதி உண்மை இருந்தாலும், இதுகூட ராஜபக்ச தரப்பின் காய்நகர்த்தலின் பிரகாரம் நடைபெறும் ஒரு விடயமாகவே பார்க்கப்பட வேண்டும்.

ராஜபக்சக்களின் காய்நகர்த்தல்

கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன், இந்தத் தடவை தனது சொந்த அரசியல் கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியில் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் குதித்திருக்கிறார். கருணாவின் சொந்த ஊரான கிரான், கல்குடா மாவட்டத்தில் அடங்குகிறது. ஆனாலும் அவர் ஏன் அம்பாறை மாவட்டத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்பது ஆச்சரியமான விடயமல்ல.

அம்பாறை மாவட்டத் தமிழ் வாக்காளர்கள் இதை ராஜபக்சக்களின் இன்னுமொரு காய்நகர்த்தலாகத்தான் பார்க்கிறார்கள்.

 

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் வாக்குகள் 95,000. இதில் 90,000 வாக்குகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெறுமாயின் அதற்கு இரண்டு ஆசனங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புண்டு. இதனால் சிங்களப் பிரதிநிதி ஒரு ஆசனத்தை இழக்கும் வாய்ப்பு ஏற்படலாம். மாறாக,15,000 வாக்குகளைக் கருணாவால் பிரித்தெடுக்க முடியுமானால், கூட்டமைப்பின் ஒரு ஆசனம் சிங்களவர் ஒருவருக்குப் போய்விடும். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தான் கருணா களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார். இதற்கான உபகாரம் எப்படியாவது கிடைக்குமென்பது கருணாவுக்கு நன்றாகவே தெரியும். எனவே, மேலுள்ள ஒலித்துண்டில் கருணா சொல்வது போல, “ராஜபக்சவின் கோரிக்கையை நான் மறுத்துவிட்டேன், மக்களின் ஆணையுடன் பாராளுமன்றம் வருவேன்” என்பதெல்லாம் சுத்த ஹம்பக்.

ஆனால் அத்தோடு நிறுத்தாமல் ‘கருணா கொறோணாவை விடக் கொடியவன்’ என்ற வீரப் பிரதாபம் கொஞ்சம் அதிகப்படி. இது சிங்கள இனவாதிகளினதும், இராணுவத்தினதும் ரணங்களை மீண்டும் கிளறும் விடயம். ராஜபக்சக்களின் வாக்கு வங்கியை இது சிறிதளவிலேனும் பாதிக்க வேண்டுமானால் சஜித் பிரேமதாசவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ, கருணா கொடுத்திருக்கும் இப் பொல்லைத் தென்னிலங்கயில் கொண்டோட வேண்டும். ஆனால் அவர்களுக்கு அந்தத் திராணியில்லை. ஜனாதிபதி தேர்தலின் போது “நான் என் உயிரைக் கொடுத்தாவது சவேந்திர சில்வாவைக் காப்பாற்றுவேன்’ என்று சொன்ன சஜித் பிரேமதாசாவுக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வாக்குகள் கிடைத்திருந்தும், ராஜபக்சக்கள் கருணாவுக்குக் கொடுக்கும் பிரதியுபகாரமளவுக்குக் கூட , வார்த்தையளவிலேனும் அவரால் எதையும் கொடுக்க முடியுமென்பது சந்தேகமே.

இந்த நிலையில், இப்போது இருக்கக்கூடிய உண்மையான, துணிச்சலான ‘எதிர்க்கட்சி’ மங்கள சமரவீர ஒருவர்தான். ஆனால் அவரது வாக்காளர்கள் இப்போதுதான் பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கருணாவின் இந்தப் பேச்சு, அம்பாறை மாவட்டத்திலுள்ள சிங்கள வாக்காளர்களை அதிகம் பாதிக்கப்போவதில்லை. எதிர்க்கட்சிகள் முயன்றால் சிங்கள மக்களைக் குழப்பும் விடயமாக இத மாற்றி ராஜபக்சக்களின் வாக்கு வங்கியின் மூலமோ, நீதிமன்றங்களின் மூலமோ, கொஞ்சமேனும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். தமிழ்த் தலைமைகள் இதை முற்றாக நிராகரிப்பது எப்போதுமே நன்மை பயக்கும். ராஜபக்ச தரப்பு இதை மேலும் தமிழர் மேலான துவேசமாக மாற்றிப் புதிய மொந்தையில் பழைய கள்ளைத் தென்னிலங்கையில் விற்று மூன்றிலிரண்டு இலட்சியத்தைத் துரிதப்படுத்தலாம்.

https://marumoli.com/கருணா-விவகாரம்-எப்படிச்/?fbclid=IwAR1JYIh14etFOk9ZY2JYYkCAwq8u0DVLwkX5c7wWbKVSLp79LtuhPEcgRu0

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை கைது செய்ய நடவடிக்கை எடுத்தால், அவர்களே துணிவுள்ள தலைவர்கள் – பிக்குகள் முன்னணி

இராணுவத்தினரை கொலைச் செய்ததாக கூறியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா எனும் வி.முரளிதரனின் கருத்து தொடர்பில் அவதானம் செலுத்தி அவரை கைது செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவும் நடவடிக்கை எடுப்பார்களாயின் அவர்களே நாட்டின் துணிவுள்ள தலைவர்கள் என்பதை ஏற்கொள்வோம் என்று ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும்,

‘புலிகள் அமைப்பின் முக்கியஸ்தராக செயற்பட்ட காலத்தில் ஒரே இரவில் 2000 – 3000 வரையான இராணுவத்தினரை கொலைச் செய்ததாக கருணா தெரிவித்துள்ளார். இது பெரும் சமூக குற்றச் செயலாகும். இந்த கருத்தானது தேசப்பற்றுள்ள மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யுத்தகாலத்திலே உயிரிழந்த இராணுவத்தினரில் எமது இரத்த உறவுகளும் உள்ளடங்குகின்றனர்.

இராணுவத்தினரின் உயிரிழப்புக்கு காரணமான கருணாவுக்கு மக்களிடம் அறவிடப்படும் வரி பணத்திலிருந்து வாழ்க்கை நடத்துவதற்கான சந்தர்ப்பதத்தையும் , அரசாங்கத்தினால் கிடைக்கப்பெறும் அனைத்து வரப்பிரசாரங்களையும் ராஜபக்ஷாக்கள் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் காலத்திலே சிங்கள பௌத்த மக்களுக்காகவும், இராணுவத்தினருக்காகவும் குரல் எழுப்பிய பிக்குகள் தற்போது எங்குள்ளார்கள்? ஜனாதிபதி தேர்தல் காலத்திலே சிங்கள பௌத்த மக்களையும், இராணுவத்தினரையும் ஏமாற்றி அவர்களை காட்டிக் கொடுத்து சில தேரர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்பட்டதை அவதானித்திருந்தோம். இந்நிலையில் கருணாவின் கருத்து தொடர்பில் மக்கள் மத்தியில் வந்து மதபோதனைகளை வழங்கும் தேர்ரகள் அவர்களின் கருத்தை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும்.’ – என்றார்.

 

https://newuthayan.com/கருணாவை-கைது-செய்ய-நடவடி/

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை கைது செய்யுங்கள் – அஜித்

பயங்கரவாத அமைப்பின் ஒருபகுதியாக இருந்து இராணுவ வீரர்களை கொன்றதாக மரண தண்டனைக்குரிய குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ள கருணாவை கைது செய்து வழக்குத் தொடருங்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

அவருக்கு அரசால் சட்டபூர்வமாக மன்னிப்பளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/கருணாவை-கைது-செய்யுங்கள்/

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

மினக்கெட்டு.. 40 அடியில்,  வைத்த கட் அவுட்டும்... வீணாய் போச்சு

அதுதான் எரிஞ்ச்சு போச்சே. அபசகுனம்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணா மீது சிஐடி விசாரணைக்கு உத்தரவு!

புலிகளுடன் இருந்து இராணுவத்தினரை கொலை செய்ததாக கருணா வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை செய்ய சிஐடிக்கு பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவு.

 

https://newuthayan.com/கருணா-மீது-சிஐடி-விசாரணை/

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேண்டும் என்று அப்படி கூறவில்லை” தென்னிலங்கையின் கொதி நிலைக்கு காரணமான கருணா வெளியிட்ட புது செய்தி

அண்மையில் என்னால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக கதைப்பதற்கு சஜித் பிரேமதாசாவுக்கோ அல்லது அனுரகுமார திசாநாயக்கவுக்கோ எந்த விதமான அருகதையும் கிடையாது.

ஏனெனில் சஜித் பிரேமதாசவின் தந்தையார் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளையும் ஒரு கோடிக்கும் அதிகமான தோட்டாக்களையும் விடுதலைப் புலிகளுக்கு வழங்கி விடுதலைப்புலிகளை ஊக்குவித்தவர்.

அதேபோன்று அநுரகுமார திசாநாயக்க மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) இயக்கத்தினர் சுமார் 80,000 சிங்கள மக்களை கொன்று குவித்தவர்கள்.

இவர்கள் இருவருக்கும் நான் தெரிவித்த கருத்து தொடர்பாக பேசுவதற்கு எந்த விதத்திலும் அருகதை கிடையாது என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவராக இருந்த கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அண்மையில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் கொடிய கொரோனாவை விடவும் கருணா கொடியவன் என்று விமர்சித்து இருந்தமைக்கு பதிலளிக்கையிலேயே கருணா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

'கொரோனா இலங்கையில் இதுவரை பதினொரு (11) பேரைக் கொன்றது. ஆனால் நான் அதனை விடவும் கொடியவன். ஒரே இரவில் ஆனையிறவு யுத்தத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களைக் கொன்றவன் இன்னும் எத்தனையோ போராட்டங்களில் பல உயிர்களை காவு கொண்டவன் நான் என்று கூறியிருந்தார்' அதற்கு தற்போது தென்பகுதியில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கையிலேயே கருணா அம்மான் இவ்வாறு கூறியுள்ளார்.

உண்மையில் நான் வேண்டும் என்று அந்தக் கருத்தைக் கூறவில்லை. எனது தேர்தல் கூட்டத்தில் உரையாற்றுகையில் ஒரு நல்ல நோக்கத்திற்காக மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக நான் தெரிவித்த கருத்து அது.

உண்மையில் யுத்தத்தில் இரு தரப்புமே இழப்புகளை சந்தித்தது. பாதுகாப்பு படையினரும் இறந்தனர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் இறந்தனர்.

அதில் ஒளித்து மறைக்க ஒன்றுமில்லை. அவ்வாறான கொடிய யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தது தொடர்பாகவே நான் கருத்தினைக் கூற முற்பட்டேன். என்னை ஹீரோவாக காட்ட முற்படவில்லை. நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானம் நிலைக்க வேண்டும்.

கொடிய யுத்தம் இடம்பெற்றால் அழிவுகளும் இடம்பெற்றது.இதனால் இருதரப்பும் பல இழப்புக்களை சந்திக்கும் என்பதை சுட்டிக்காட்டியதாகவே எனது உரை இருந்தது.

ஆனால் அவ்வுரையை திரிபுபடுத்துகிறார்கள். அத்தகைய கொடிய போராட்டத்திலிருந்து ஜனநாயக வழிக்குத் திரும்பி என்னை இன்று விமர்சிக்க முற்படுகிறார்கள். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நான் ஜனநாயக வழிக்குத் திரும்பி அரசியல் கட்சியை ஆரம்பித்து பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவன்.

அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்போது தென்னிலங்கையில் தாங்கள் சிங்கள வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக என்னை விமர்சித்து, தமது தேவையை நிறைவேற்ற சிலர் முனைகின்றார்கள். அவர்களைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்படப் போவதில்லை. ஏனெனில் உண்மை என்னவென்று, கருணா யார் என்பது, எப்படிப்பட்டவன் என தெரிய வேண்டியவர்களுக்கு நன்கு தெரியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் என்னை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இந்த நாட்டை ஆளுகின்ற ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு கருணா யார் என்பது நன்கு தெரியும்.

அதனால் வெறுமனே வாக்குகளை பெறுவதற்காக சிலர் சில்லறைத்தனமான அறிக்கைகளை விட்டு வருவது வேடிக்கையாக இருக்கிறது.

மீண்டும் சொல்கிறேன், இதைபற்றி நான் ஒருபோதும் அலட்டிக்கொள்ள போவதில்லை என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/145607?ref=home-imp-flag

 

Why is My Dog Shaking?

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ இல்லையென்றாலும் தேர்தல் முடிய இருக்கு வில்லங்கம். ஆனால், அழுவதற்கு.......? 

  • கருத்துக்கள உறவுகள்
  • கருணாவின் கருத்துக்கு மொட்டு கண்டனம்

     

     

     

    விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள கருத்தினை கடுமையாக கண்டிப்பதாக  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

    கொழும்பில் இன்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்  இதனைக் கூறியுள்ளார்.

    விநாயகமூர்த்தி முரளிதரன் இம்முறை தமது அணியில் போட்டியிடவில்லை என்றும் அவர் வேறு ஒரு கட்சியில் போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தமது கட்சியின் வேட்பாளர் அல்லாத ஒருவரின் கருத்துக்கு தமது கட்சி பொறுப்பேற்க முடியாது என்று கூறிய அவர், எவ்வாறாயினும், கருணா வெளியிட்டுள்ள கருத்தை கண்டிப்பதாக கூறியுள்ளார்.

    http://www.tamilmirror.lk/செய்திகள்/கரணவன-கரததகக-மடட-கணடனம/175-252234

  • கருத்துக்கள உறவுகள்

போரின் வெற்றிக் கருவி கருணாவின் விலகலே; அவர் மன்னிக்கப்பட்டவரே – எஸ்பி

1581320598-sb-2.jpg?189db0&189db0

 

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அரசை ஆதரிப்பதற்காக தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகிய போது கருணா எனும் வி.முரளிதரனுக்கு சட்டபூர்வமாக மன்னிப்பளிக்கப்பட்டது. அது அரச சாட்சியாக மாறுவதை போன்றதாகும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரும் முன்னாள் எம்பியுமான எஸ்பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும்,

‘புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் தலைவராக கருணா இருந்தார். அவர் இராணுவத்துக்கு கைகொடுக்க வலுவான படையுடன் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறினார். கருணாவில் விலகலே போரை வெற்றி கொள்வதற்கான கருவியாக இருந்தது.’ – என்றார்.

 

https://newuthayan.com/போரின்-வெற்றிக்-கருவி-கர/

Is It Okay To Give My Dog A Bone? Which Bones Are Safe For Dogs ...

 

மாவீரர்களின் தியாக போராட்டத்தை இந்த எலும்புக்குதானே காட்டி கொடுத்தேன் - எஐமானே தயவுசெய்து கடிக்கவிடுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2020 at 10:38, ரதி said:

நான் எங்கே எப்ப அடுத்தவனின் படுக்கை விசயத்தில் தலையிட்டேன் 

மேலே தமிழில் தான் எழுதியிருக்கேன் ...உங்களுக்கு தேவை என்றால் தேடிப் பாருங்கள் ...எல்லாத்தையும் கிளிப்பிள்ளைக்கு தீத்திற மாதிரி வாய்க்குள் கொண்டு வந்து திணிக்க முடியாது 

 

உண்மையில் தெரியாமல்தான் கேட்கின்றேன்

அடிக்கடி படுக்கை  விடயம் படுக்கை  விடயம்  என நீங்கள்  எழுதுவதனால் 

உங்களுக்கு எனது கேள்வி புரியும் என  நினைக்கின்றேன்.

ஒரு தலைவனின்

அல்லது  ஒரு தளபதியின்

அல்லது ஒரு வழிகாட்டியின்

அல்லது  ஒரு விடிவெள்ளியின் 

படுக்கை  விவகாரம் எப்படி இருக்கணும்??

எப்படி இருக்கக்கூடாது?????

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் காலம் தெளிவாகவே சிங்களம் தமிழர் பலத்தை(?) சிதைக்க எத்தனிக்கிறது  ஒரு வீர வரலாறு காணாமல் ஆக்கப்பட்டு நிகழ்காலத்தில் அங்கலாய்த்துக் கிடப்பதிலேயே கழிகிறது.  கலங்கரைகள்  தெரியாத இடத்தில் கரை ஏறும்  சாத்தியம்  இல்லை உறுதியான வழி காட்டிகளை உருவாக்க  கூடிய நிலையிலோ அல்லது உருவாகக் கூடிய நிலையிலோ நாம் இருக்கிறோமா என்பது கேள்விக் குறி  இங்குநாம்  விவாதிக்கும் பாணி எனக்கு கருணாாவைப்  பற்றி அதிகம் தெரியும்.  துரோகி , ஒழுக்கம் கெட்டவன்  மக்கள் பணத்தை  கொள்ளை  அடித்தவன் என்ற கருத்துகளுக்கு அப்பால் நகர முடியாத சுழிக்குள் சிக்கி இன்னும் மீளமுடியாத பலவீனத்தை  வெளிப்படுத்துவதைத்  தவிர நம்மால் வேறெதனையும்   செய்ய முடியாது. புதிய வரலாற்றை கட்டி எழுப்ப  எந்த கல்லை எவர் சுமக்கலாம்? மன்னிக்கவும் எந்த கல்லை நான் சுமக்கிறேன்  என்று  வழிகாட்டக் கூடாதா?

 

 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வல்வை சகாறா said:

தேர்தல் காலம் தெளிவாகவே சிங்களம் தமிழர் பலத்தை(?) சிதைக்க எத்தனிக்கிறது  ஒரு வீர வரலாறு காணாமல் ஆக்கப்பட்டு நிகழ்காலத்தில் அங்கலாய்த்துக் கிடப்பதிலேயே கழிகிறது.  கலங்கரைகள்  தெரியாத இடத்தில் கரை ஏறும்  சாத்தியம்  இல்லை உறுதியான வழி காட்டிகளை உருவாக்க  கூடிய நிலையிலோ அல்லது உருவாகக் கூடிய நிலையிலோ நாம் இருக்கிறோமா என்பது கேள்விக் குறி  இங்குநாம்  விவாதிக்கும் பாணி எனக்கு கருணாாவைப்  பற்றி அதிகம் தெரியும்.  துரோகி , ஒழுக்கம் கெட்டவன்  மக்கள் பணத்தை  கொள்ளை  அடித்தவன் என்ற கருத்துகளுக்கு அப்பால் நகர முடியாத சுழிக்குள் சிக்கி இன்னும் மீளமுடியாத பலவீனத்தை  வெளிப்படுத்துவதைத்  தவிர நம்மால் வேறெதனையும்   செய்ய முடியாது. புதிய வரலாற்றை கட்டி எழுப்ப  எந்த கல்லை எவர் சுமக்கலாம்? மன்னிக்கவும் எந்த கல்லை நான் சுமக்கிறேன்  என்று  வழிகாட்டக் கூடாதா?

 

இதே கேள்வியை பலமுறை  நானும்  கேட்டுவிட்டேன்  சகோதரி

பதில் உங்களிடமிருந்தும்  இல்லை

அவ்வாறு  வந்தாலும் அதுவும் மற்றவர்களை வழிகாட்டுங்கள்  என்பதாகத்தானே இருக்கிறது?????

இந்த  திரிக்குள்ளும்  உங்களுக்கிருக்கும் ஆர்வத்தையும் விரக்தியையும் பார்க்கும் போது

இது  சம்பந்தமான உங்களின் வழி காட்டுதலினூடான வேறு ஒரு திரியை எதிர்பார்க்கின்றேன்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.