Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இளைஞர்களை மிரட்டி கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவருக்கும் விளக்கமறியல்

Featured Replies

யாழ்ப்பாணம் மாநகரில் வீதியால் செல்லும் இளைஞர்களை மிரட்டி அலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவரையும் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் நாவலர் வீதி – கைலாசபிள்ளையார் கோவிலடி, கந்தர்மடம் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமை ஆகிய இடங்களில் வீதியால் பயணித்த இளைஞர்களை வழிமறித்த மூவர், அவர்களிடம் அலைபேசிகளை பறித்துள்ளனர்.

வீதியால் பயணிக்கும் இளைஞர்களை வழிமறிக்கும் கும்பல், அலைபேசியைக் காட்டு என்று மிரட்டுவார்கள். அவர்களில் ஒருவர் எனது தங்கையை ஏன் படம் எடுத்தாய் என்று மிரட்டி அலைபேசியில் உள்ள படங்களை பார்ப்பது போன்று பாசாங்கு காட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மாநகரில் அண்மைக்காலமாக அதிகரித்திருந்த நிலையில் முறைப்பாட்டாளர்களின் தகவலின் அடிப்படையில் அவர்களில் 3 பேரின் அலைபேசிகள் ஒருவரிடமிருந்து கைப்பற்றி  வழிப்பறிக் கும்பல் விற்பனை செய்துள்ளது.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அரியாலையைச் சேர்ந்த இருவரும் இராசாவின்தோட்டம் வீதியைச் சேர்ந்த ஒருவரும் என மூவரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்புப் பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் முற்படுத்தப்படுத்தப்பட்டனர். அவர்களில் அலைபேசிகளை வாங்கி வைத்திருந்தவருக்கு மன்றினால் பிணை வழங்கப்பட்டது.

ஏனைய மூவரை அடையாள அணிவகுப்புக்கு உள்படுத்த பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர். எனினும் அடையாள அணிவகுப்பின்றி தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாக சந்தேக நபர்கள் மூவரும் மன்றுரைத்தனர்.

அதனால் சந்தேக நபர்கள் மூவருக்கும் எதிராக குற்றப்பத்திரத்தை நாளை செவ்வாய்க்கிழமை மன்றில் சமர்ப்பிக்க பொலிஸாருக்கும் அறிவுறுத்தல் வழங்கிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், அதுவரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

http://athavannews.com/யாழில்-இளைஞர்களை-மிரட்டி/

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கைபேசிகளை திருடும் கும்பலுக்கு மறியல்!

mobile-robbery_710x400xt.jpg?189db0&189db0

யாழ்ப்பாணம் மாநகரில் வீதியால் செல்லும் இளைஞர்களை மிரட்டி அலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவரை நாளை (30) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் நாவலர் வீதி – கைலாசபிள்ளையார் கோவிலடி, கந்தர்மடம் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமை ஆகிய இடங்களில் வீதியால் பயணித்த இளைஞர்களை வழிமறித்த மூவர், அவர்களிடம் அலைபேசிகளை பறித்துள்ளனர்.

வீதியால் பயணிக்கும் இளைஞர்களை வழிமறிக்கும் கும்பல், அலைபேசியைக் காட்டு என்று மிரட்டுவார்கள். அவர்களில் ஒருவர் எனது தங்கையை ஏன் படம் எடுத்தாய் என்று மிரட்டி அலைபேசியில் உள்ள படங்களை பார்ப்பது போன்று பாசாங்கு காட்டிவிட்டு அவற்றுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மாநகரில் அண்மைக்காலமாக அதிகரித்திருந்த நிலையில் முறைப்பாட்டாளர்களின் தகவலின் அடிப்படையில் 3 பேரின் அலைபேசிகள் நபர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. அவற்றை வழிப்பறிக் கும்பல் குறித்த நபருக்கு விற்பனை செய்துள்ளது.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அரியாலையைச் சேர்ந்த இருவரும் இராசாவின்தோட்டம் வீதியைச் சேர்ந்த ஒருவரும் என மூவரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்புப் பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் முற்படுத்தப்படுத்தப்பட்டனர். அவர்களில் அலைபேசிகளை வாங்கி வைத்திருந்தவருக்கு மன்றினால் பிணை வழங்கப்பட்டது.

ஏனைய மூவரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர். எனினும் அடையாள அணிவகுப்பின்றி தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாக சந்தேக நபர்கள் மூவரும் மன்றுரைத்தனர்.

அதனால் சந்தேக நபர்கள் மூவருக்கும் எதிராக குற்றப்பத்திரத்தை நாளை செவ்வாய்க்கிழமை மன்றில் சமர்ப்பிக்க பொலிஸாருக்கும் அறிவுறுத்தல் வழங்கிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், அதுவரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

https://newuthayan.com/யாழில்-கைபேசிகளை-திருடும/

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Rajesh said:

யாழ்ப்பாணம் நாவலர் வீதி – கைலாசபிள்ளையார் கோவிலடி, கந்தர்மடம் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமை ஆகிய இடங்களில் வீதியால் பயணித்த இளைஞர்களை வழிமறித்த மூவர், அவர்களிடம் அலைபேசிகளை பறித்துள்ளனர்.

நில்மினி, நாதமுனி, ஈழப்பிரியன்,  நெடுக்காலை போவான், சுவி.... எல்லாரும் 🏃🏽‍♀️ஓடியாங்கோ... 🏃🏽

நம்ம இடத்திலை, 🤭களவு நடக்குதாம்.... 😃

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி, நாதமுனி, ஈழப்பிரியன்,  நெடுக்காலை போவான், சுவி.... எல்லாரும் 🏃🏽‍♀️ஓடியாங்கோ... 🏃🏽

நம்ம இடத்திலை, 🤭களவு நடக்குதாம்.... 😃

என்னது சிறியின் தொலைபேசியை பறித்துப் போட்டாங்களா?
சரி சரி விசாரயைக் கமிசன் வைப்பம்.
அதுக்காக ஆக்களை சேர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது கொரோனா காலத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னது சிறி யாற்றையோ  தங்கச்சியை படம் எடுத்திட்டாரோ? 🤣 போனகிழமை மட்டும் ஜெர்மனியலதான் இருந்ததாக கேள்வி. இது எப்ப நடந்தது? எப்ப போனார்? எப்ப படம் எடுத்தார்? படம் எடுக்கத்தான் போனாரோ? யாராவது தெரிந்தால் விளக்கமாக சொல்லுங்கோ. 
இப்ப சிறி நினைக்கப்போறார் இதென்ன வம்பாபோட்டுது  என்று.  ஊர் சனத்தை உதவிக்கு கூப்பிட்டால் ஈழப்பிரியன் அண்ணா , நில்மினி எல்லாம் தன்னை போட்டு வாட்டுதுகள் என்று. எங்க  சிறி இப்ப? 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nilmini said:

இப்ப தான் ஐபோன் ஒன்றை பிள்ளைகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். கொண்டு போய் சுதி காட்டிப் போட்டாரோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

என்னது சிறியின் தொலைபேசியை பறித்துப் போட்டாங்களா?

≣ alte Nokia 8310 Vintage selten Telefon Handy | eBay

சிறித்தம்பியிட்டை கள்ளர் பறிச்ச ரெலிபோன் இதுதான். புது ரெலிபோனை வீட்டிலை மட்டும் தான் பாவிக்கிறவராம்.:grin:
சிறித்தம்பியா கொக்கா..:cool:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

≣ alte Nokia 8310 Vintage selten Telefon Handy | eBay

சிறித்தம்பியிட்டை கள்ளர் பறிச்ச ரெலிபோன் இதுதான். புது ரெலிபோனை வீட்டிலை மட்டும் தான் பாவிக்கிறவராம்.:grin:
சிறித்தம்பியா கொக்கா..:cool:

இதைத்தான் இப்ப எழுத வந்தனான் நீங்கள் முந்தி விட்டீர்கள் .....அவங்கள் பறித்து கொண்டுபோன போனை போறவழியில்தான் பார்த்திருக்கினம்.இது தேறாது என்று திருப்பிக் குடுக்க வந்தபோதுதான் போலீசில் மாட்டுப் பட்டுப் போனாங்கள்......!  😂

Miss You Crying GIF - MissYou Crying Sobbing GIFs

  • கருத்துக்கள உறவுகள்

அவரும் ஊரைக் கூட்டி, ஒப்பாரி வைச்சு  புதுப் போன்   வாங்கப்  போட்ட திட்டத்தை. எல்லாருமாய்ச் சேந்து இப்பிடி போட்டுடைச்சுப் போட்டிடீங்களே? இனி எப்பிடி சிறியர் முகத்தைக் காட்டிறது? புது போன் வாங்கிறது? 

  • கருத்துக்கள உறவுகள்
On 30/6/2020 at 11:41, தமிழ் சிறி said:

நில்மினி, நாதமுனி, ஈழப்பிரியன்,  நெடுக்காலை போவான், சுவி.... எல்லாரும் 🏃🏽‍♀️ஓடியாங்கோ... 🏃🏽

நம்ம இடத்திலை, 🤭களவு நடக்குதாம்.... 😃

அதெப்பிடியாப்பா நடக்குது? நாம தான் தொழிலை விட்டு திருந்தி ஓடி வந்தாப்பிறகு?

புதுசா இரண்டு பேர் கிளம்பி இருப்பாங்களோ. அடோய் அப்செண்டிங்களா... எதை பண்ணினாலும் பிளான் பண்ணி பண்ணனும். இப்படியா மாட்டுறது...

அட சா... பாரு நம்ம தலை, தமிழ்சிறி அப்செட் ஆகிட்டாரு. :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருடைய பதில்களையும் பார்த்து....  பயங்கர சிரிப்பாக இருந்தது.
நேற்று இவற்றை வாசித்து, சிரித்ததிலேயே.... நேற்றைய நாள், இனிமையாக கழிந்தது.

டிஸ்கி:  "பொல்லைக்  குடுத்து... அடி வாங்கின மாதிரி", ஒரு பீலிங்கு.  :grin: 🤣

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இளைஞர்கள் ஏன் இப்படி பயந்த பூச்சியானார்கள்..??! புத்தகப்பூச்சி நிலையில் இருந்து பயந்த பூச்சின்னு.. கூர்ப்பில் பின்னடைவதும் ஏனோ..??! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.