Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பையன்26 said:

இது முற்றிலும் உண்மை , சும்மா வாய் சொல் அள‌வில் தான் பெரியார் பெண்ணிய‌ விடுத‌லைக்கு போராடினார் , சாதிய‌ ‌ இல்லாம‌ செய்தார் என்று பொய் வின்ப‌த்த‌ இப்ப‌வும் திராவிட‌ க‌ட்சிக‌ள் சொல்லிட்டுத் தான் இருக்கின‌ம் , 

தேர்த‌ல் நேர‌ம் பெரியாரை ம‌ற‌ந்து எந்த‌ தொகுதிக்கு எந்த‌ சாதி வேட்பாள‌ர‌ நிறுத்தினால் கூடுத‌ல் வெற்றியை ஈட்ட‌லாம் என்று திராவிட‌ க‌ட்சிக‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும் /

எங்க‌ட‌ போராட்ட‌மும் த‌லைவ‌ரும் இருந்து இருக்க‌னும் சாதி என்ற‌ க‌தைக்கே இட‌ம் இருந்து இருக்காது ஈழ‌ ம‌ண்ணில் 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு த‌மிழீழ‌ ம‌ண்ணில் மெது மெதுவாய் சாதி த‌லை தூக்குது , என்ர‌ ஈழ‌ அனுப‌வ‌த்தில் என‌க்கு நினைவு தெரிந்த‌ நாள் முத‌ல் ஈழ‌த்தில் சாதி இருந்த‌து இல்ல 💪🤞‌ , 

எங்க‌ட‌ கோயில் திருவிழாவுக்கு யாரும் வ‌ர‌லாம் 1994 அந்த‌க் கால‌ப் ப‌குதியில்  , இப்ப‌ ஒரு சில‌ கோயிலுக்கு ஒரு சில‌ சாதிக் கார‌ர் போக‌ முடியாது 😓

என்ன‌ செய்வ‌து பிர‌பாக‌ன் என்ற‌ ஒப்ப‌ற்ற‌ த‌லைவ‌ர் பின்னால் ஒரு இன‌மே சாதி ம‌த‌ங்க‌ளை க‌ட‌ந்து ஒற்றுமையா நின்றார்க‌ள் 🙏

த‌லைவ‌ரின் ம‌றைவோடு எல்லாம் த‌லை கீழா போச்சு 😓

கொஞ்சகால இந்த வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுபோவதற்கு சாதியென்ன மதமென்ன, மதிகெட்ட மனிதர்கள் தான் இதை பின்பற்றி சந்தோஷத்தை தொலைத்து திரிகின்றார்கள் பல வருத்தங்களுடன்

  • Replies 98
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, உடையார் said:

கொஞ்சகால இந்த வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுபோவதற்கு சாதியென்ன மதமென்ன, மதிகெட்ட மனிதர்கள் தான் இதை பின்பற்றி சந்தோஷத்தை தொலைத்து திரிகின்றார்கள் பல வருத்தங்களுடன்

ச‌ரியா சொன்னீங்க‌ள் உடையார் ஜ‌யா 🙏 ,

சாதிய‌ தூக்கி பிடிப்ப‌வ‌ர்க‌ள் , வெள்ளை இன‌த்த‌வ‌னின் சாப்பாட்டு கொப்பையை க‌ழுவின‌ம் , ஏன் வெள்ளை இன‌த்த‌வ‌னின் க‌ழிவ‌றைய‌ கூட‌ சுத்த‌ம் செய்ய‌க் கூடிய‌வ‌ர்க‌ள் , 

சாதி வெறிய‌ர்க‌ள் ஊரில் என்ன‌ தொழில் செய்திச்சின‌மோ அத‌ புல‌ம்பெய‌ர் நாட்டிலும் க‌ட‌ பிடிக்க‌ வேண்டிய‌து தானே , கூழிக்கு வேலை செய்து கொண்டு , சின்ன‌ன் சிறுசுக‌ள் காத‌லிச்சா அதில் சாதிய‌ பார்ப்ப‌து , இது எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம் 

இதுக்கு மிஞ்சி சாதிய‌ தூக்கி பிடிப்ப‌வ‌ர்க‌ளை கேவ‌ல‌ப் ப‌டுத்த‌ முடியாது உடையார் ஜ‌யா 😉,

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் இதுவரை எழுதியவர்கள் அனைவரும் சாதி ஒழிப்புக்கு ஆதரவாகவே கருத்து சொல்லியிருக்கிறார்கள். எதிரணியினர் எங்கே சென்றுவிட்டார்கள்? அல்லது இல்லாத ஒன்றை பற்றி வீணாக பினாத்துகிறோமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

இந்த திரியில் இதுவரை எழுதியவர்கள் அனைவரும் சாதி ஒழிப்புக்கு ஆதரவாகவே கருத்து சொல்லியிருக்கிறார்கள். எதிரணியினர் எங்கே சென்றுவிட்டார்கள்? அல்லது இல்லாத ஒன்றை பற்றி வீணாக பினாத்துகிறோமா?

சாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்

தலையங்கத்தை உற்றுக் கவனியுங்கள். விடயம் புலப்படும் 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, vanangaamudi said:

இந்த திரியில் இதுவரை எழுதியவர்கள் அனைவரும் சாதி ஒழிப்புக்கு ஆதரவாகவே கருத்து சொல்லியிருக்கிறார்கள். எதிரணியினர் எங்கே சென்றுவிட்டார்கள்? அல்லது இல்லாத ஒன்றை பற்றி வீணாக பினாத்துகிறோமா?

குறைந்த சாதியினர் எனப்படுபவர்கள் ஏன் வெள்ளாள குடும்பத்தில் சம்பந்தம் வைக்க விரும்புகின்றார்கள்?
குறைந்த சாதியினர் என நினைப்பவர்கள் ஏன் தங்களுக்கு குறைந்த சாதிக்குள் இரண்டற கலக்க விரும்புவதில்லை? 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

குறைந்த சாதியினர் எனப்படுபவர்கள் ஏன் வெள்ளாள குடும்பத்தில் சம்பந்தம் வைக்க விரும்புகின்றார்கள்?
குறைந்த சாதியினர் என நினைப்பவர்கள் ஏன் தங்களுக்கு குறைந்த சாதிக்குள் இரண்டற கலக்க விரும்புவதில்லை? 😎

என்ன அண்ணை, இந்த சின்ன சங்கதி கூட புரியவில்லையா? எல்லாருக்கும் “மேலே” வர ஆசை தானே? 

******
******

சில கொசுறு செய்திகள்:

  1. யாழ் பல்கலைக்கழகத்தில் முன்னர் இருந்த விரிவுரையாளர் கனகராஜா (இப்போது கனடிய பல்கலைக்கழகம் ஒன்றில் பெயர் கண்ட நினைவு) யாழ்ப்பாணத்து சாதிகள் பற்றி விரிவான ஆய்வு செய்தார். அதன்படி எல்லா சாதிகளிலும் அவர்களுக்கு கீழாக தாழ்த்தப்பட்ட சாதி ஒன்று உண்டு. அதியுயர் சாதி என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட தங்களுக்குள் உயர்வான சாதி, கீழான சாதி என்று உபசாதி பிரிவுகளை கொண்டுள்ளார்கள். 
  2. புலம்பெயர்ந்து பணபலமுள்ள நாட்டுக்கு போனால், அவர்கள் வேகமாக “மேலே வந்து” வெள்ளாளரிலும் உயர்வான சாதியாகி விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், புலம்பெயர்ந்த நாடுகளில் வெள்ளாளர் செய்யும் தொழில்கள் உள்ளூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்ட்ட தொழில்கள். 
  3. தமிழ்நாட்டில் வெள்ளாளர் தாழ்த்தப்பட்ட சாதி.
  4. ஈழத்  தமிழ் கலாச்சாரத்தின் பெரும்தூண்கள், ஆறுமுகநாவலர் போன்றவர்கள் - தமிழ்கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக சாதியத்தையும், சாதி ஏற்றதாழ்வுகளையும் கருதி பிரச்சாரம் செய்தார்கள். அதை இன்றும் சமுதாயத்தின் பல தூண்கள் நம்புகிறார்கள் - ஆனால் போர்க்கால பாதிப்பால் பெருமளவில் பகிரங்கமாக பேசுவதில்லை.
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

கொஞ்சகால இந்த வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுபோவதற்கு சாதியென்ன மதமென்ன, மதிகெட்ட மனிதர்கள் தான் இதை பின்பற்றி சந்தோஷத்தை தொலைத்து திரிகின்றார்கள் பல வருத்தங்களுடன்.....

அதன்  தாக்கத்தை உணராமல்

அல்லது  இதுவரை அனுபவப்படாததால் 

இப்படி  எழுதுகிறீர்கள்  என்று  தெரிகிறது?

உண்மையில் மாற்றுத்திருமணம்  என்று புறப்பட்ட

அல்:லது தலையை  கொடுத்த  பலரும் சொல்லும்  வார்த்தை

கொஞ்சகால இந்த வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுபோவதற்கு 

தேவையற்று இதற்குள் போய் முட்டி இழுபட்டபடி

 சந்தோஷத்தை தொலைத்து திரிகிறோம் பல வருத்தங்களுடன்.....😡

தாயகத்தில் இவ்:வாறு போராளிகளை  திருமணம்  செய்து விதவையான  பெண்களும்  இவ்வாறு தான்  ஒதுக்கப்பட்டுக்கொண்டிருப்பதை  கேள்விப்படுகிறோம்😡😡😡

2 hours ago, vanangaamudi said:

இந்த திரியில் இதுவரை எழுதியவர்கள் அனைவரும் சாதி ஒழிப்புக்கு ஆதரவாகவே கருத்து சொல்லியிருக்கிறார்கள். எதிரணியினர் எங்கே சென்றுவிட்டார்கள்? அல்லது இல்லாத ஒன்றை பற்றி வீணாக பினாத்துகிறோமா?

-  சாதியத்துக்கு ஆதரவாக பெரும்பான்மையான தமிழர்கள் பொதுவெளியில் கருத்தை முன்வைப்பதில்லை காரணம் அவ்வாறு செய்தால் அவரை நாகரீகமானவராகவோ நல்ல பண்புள்ளவராகவோ அறிவார்ந்தவராகவோ பொது வெளி ஏற்றுக்கொள்ளாது. ஏற்றதாழ்வை ஆதரிப்பவராகவோ மனிதாபிமானம் இல்லாதவராக  கருதப்படும் நிலை இருக்கின்றது. இனிவரும் காலங்களில் இந்த நிலை மேலும் வளரும். சாதியத்துக்கு ஆதராவக ஒருவர் பொதுவெளியில் கருத்தை முன்வைத்தால் அவரை கேவலமாகத்தான் பார்ப்பார்கள்.

- புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் தனித்தனி தீவுகளாக இருப்பதற்கு இந்த சாதீயம் ஒரு பெரிய காரணமாக இருக்கின்றது. 

- புலம்பெயர் நாடுகளின் எதிர்காலத் தலமுறை இதிலிருந்து பெரும்பாலும் விடுபடும். பெற்றோர்களால் சொல்லிக் கொடுக்கப்பட்டு விடுபட முடியாமல் போகின்றவர்களுக்கு சாதிய உணர்வு ஒருவகை உளவியல் மனநோயாக மட்டுமே இருக்கும்.  இலங்கை இந்தியாவில் இருக்கும் சாதிய இறுக்கம் உளவியல் நோய்தான் ஆனாலும் பாரம்பரியம் தலமுறை பழக்கவழக்கம் என்ற போர்வையில்  அதை இயல்பாக எடுததுக் கொளகின்றனர். என்னுமொருவனை தாழ்த்தி வேதனைப்படுத்துவதை இயல்பாக செய்கின்றனர். புலம்பெயர் நாடுகளின் எதிர்காலத் தலமுறைக்கு இந்த இயல்பு ஒரு நோயாக அணுகப்பட்டு அவர்கள் மருத்துத்தை நாடவேண்டியது தவிர்க்க முடியாதது. 

-உதராணமாக தமிழர்களில் சாதியத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கும் ஒருவர் வடஇந்தியாவில்  வறுமைப்பட்ட தலித்துக்களை நிர்வாணமாக்கி உயர்சாதிகள் கூட்டமாக வேடிக்கை பார்க்கும் வீடியோக்களை பார்கும் போது , அந்த நிகழ்வை ஏற்பதில்லை. மனிதாபிமானமற்ற செயலாகவும் கொடுமையாகவும் என்னும் பலவாகவும் தான் உணர்கின்றார்கள். அதே நேரம் திருமணங்கள், கோயில் திருவிழாக்களில் தேர் இழுப்பது, சுடுகாட்டில் எரிப்பது போன்ற இடங்களில் சாதியம் மேலேழும்புகின்றது.  சாதிய வக்கிரங்களின் அளவு வேறுபடுகின்றது. அதேபோல் சாதியத்தில் இருந்து வெளியேறிய பலரிடமும்.. சாதியம் காணாமல் போயிருக்கலாம் ஆனால் வக்கிர குணங்கள், அளவுக்கு அதிகாமாக கோபப்படுதல் , விதண்டாவாதம் செய்வது பிடிவாதம் போன்ற தன்மைகள் இருக்கும். காலங்கள் செல்ல செல்ல இந்த தன்மைகள் குறையும். 

  • கருத்துக்கள உறவுகள்

மேல கிருபன்  எழுதியிருப்பதை  பார்க்க

அவர்  எமது  சமூகத்திலிருந்து எவ்வளவு தூரத்தில்  தள்ளி  நின்று வருகிறார்  என்பது  புரிகிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அதன்  தாக்கத்தை உணராமல்

அல்லது  இதுவரை அனுபவப்படாததால் 

இப்படி  எழுதுகிறீர்கள்  என்று  தெரிகிறது?

உண்மையில் மாற்றுத்திருமணம்  என்று புறப்பட்ட

அல்:லது தலையை  கொடுத்த  பலரும் சொல்லும்  வார்த்தை

கொஞ்சகால இந்த வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுபோவதற்கு 

தேவையற்று இதற்குள் போய் முட்டி இழுபட்டபடி

 சந்தோஷத்தை தொலைத்து திரிகிறோம் பல வருத்தங்களுடன்.....😡

தாயகத்தில் இவ்:வாறு போராளிகளை  திருமணம்  செய்து விதவையான  பெண்களும்  இவ்வாறு தான்  ஒதுக்கப்பட்டுக்கொண்டிருப்பதை  கேள்விப்படுகிறோம்😡😡😡

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு ந‌ட‌ந்த‌துக‌ளை யோசிச்சா ந‌ம‌க்கு தான் த‌ல‌ வெடிக்கும் விசுகு அண்ணா‌ ,

எல்லாள‌ன் தாக்குத‌ல‌ த‌லைமை ஏற்ற‌ இள‌ங்கோ த‌லைவ‌ருக்கு எழுதின‌ க‌டித‌த்தில் எம‌து நாட்டில் சாதியே இருக்க‌க் கூடாது என்று , இள‌ங்கோ த‌லைவ‌ருக்கு க‌டித‌ம் எழுத‌ முத‌லே த‌மிழீழ‌ ம‌ண்ணில் சாதி மெது மெதுவாய் ம‌ண்ணோடு ம‌ண்ணாய் போய் விட்ட‌து ,

இப்ப‌ த‌மிழீழ‌ ம‌ண்ணில் சாதி வெறிய‌ தூண்டி விடுவ‌து ஒட்டுக்குழுக்க‌ள் , த‌மிழ‌னை ‌‌ ஒன்று ப‌ட‌ விட‌க் கூடாது என்று சிங்க‌ள‌ம் ஒட்டுக்குழுக்க‌ள‌ வைத்து காய் ந‌க‌ர்த்துகிறார்க‌ள் ,

2009ம் ஆண்டுக்கு முத‌ல் போராளிக‌ளின் நெத்தி வெடிய‌ ப‌ல‌ர் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்  , செய்வினை சூனிய‌ம் செய்ப‌வ‌ர்க‌ளை கூட‌ யாழ்ப்பாண‌த்தில் தேடி தேடி சுட்ட‌வ‌ர்க‌ள் ,

த‌மிழீழ‌ ம‌ண்ணில் த‌லைவ‌ர்  போராளிக‌ள் த‌மிழீழ‌  நாடு வேண்டி சாதிய‌ ஒழித்து ந‌ல்ல‌ த‌மிழ் ச‌முதாய‌த்த‌ உருவாக்க‌ க‌டின‌மாக‌ போராடினார்க‌ள் /

ஆனால் புல‌ம்பெய‌ர் நாட்டில் எம் போராட்ட‌த்த‌ சாட்டி செட்டில் ஆகிட்டு சாதிய‌ தூக்கி பிடிப்ப‌து ‌ த‌மிழீழ‌ நாடு வேண்டி போராடிய‌ அனைத்து மாவீர‌ர்க‌ளுக்கும் த‌லைவ‌ருக்கும் செய்யும் ப‌ச்சை துரோக‌மாய் உண‌ருகிறேன் ,

என்ர‌ வ‌ய‌து பெடிய‌ங்க‌ள் இங்கை சாதிய‌ ப‌ற்றியே க‌தைக்கிறேல‌ , அது எங்க‌ட‌ தொழிலும் இல்ல , ஆனால் ஒரு சில‌ முதிய‌வ‌ர்க‌ள் சாதிய‌ வைச்சு ந‌க்க‌ல் நையாண்டி செய்ய‌க் கூடிய‌வ‌ர்க‌ள் , அப்ப‌டியான‌வ‌ர்க‌ளை விட்டு த‌ள்ளி இருப்ப‌து ந‌ல்ல‌ம் 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு ந‌ட‌ந்த‌துக‌ளை யோசிச்சா ந‌ம‌க்கு தான் த‌ல‌ வெடிக்கும் விசுகு அண்ண‌ ,

எல்லாள‌ன் தாக்குத‌ல‌ த‌லைமை ஏற்ற‌ இள‌ங்கோ த‌லைவ‌ருக்கு எழுதின‌ க‌டித‌த்தில் எம‌து நாட்டில் சாதியே இருக்க‌க் கூடாது என்று , இள‌ங்கோ த‌லைவ‌ருக்கு க‌டித‌ம் எழுத‌ முத‌லே த‌மிழீழ‌ ம‌ண்ணில் சாதி மெது மெதுவாய் ம‌ண்ணோடு போய் விட்ட‌து ,

இப்ப‌ த‌மிழீழ‌ ம‌ண்ணில் சாதி வெறிய‌ தூண்டி விடுவ‌து ஒட்டுக்குழுக்க‌ள் , த‌மிழ‌ன‌ ஒன்று ப‌ட‌ விட‌க் கூடாது என்று சிங்க‌ள‌ம் ஒட்டுக்குழுக்க‌ள‌ வைத்து காய் ந‌க‌ர்த்துகிறார்க‌ள் ,

2009ம் ஆண்டுக்கு முத‌ல் போராளிக‌ளின் நெத்தி வெடிய‌ ப‌ல‌ர் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம் ப‌ல‌ர் , செய்வினை சூனிய‌ம் செய்ப‌வ‌ர்க‌ளை கூட‌ யாழ்ப்பாண‌த்தில் தேடி தேடி சுட்ட‌வ‌ர்க‌ள் ,

த‌மிழீழ‌ ம‌ண்ணில் த‌லைவ‌ர்  போராளிக‌ள் நாடு வேண்டி சாதிய‌ ஒழித்து ந‌ல்ல‌ த‌மிழ் ச‌முதாய‌த்த‌ உருவாக்க‌ க‌டின‌மாக‌ போராடினார்க‌ள் /

ஆனால் புல‌ம்பெய‌ர் நாட்டில் எம் போராட்ட‌த்த‌ சாட்டி செட்டில் ஆகிட்டு சாதிய‌ தூக்கி பிடிப்ப‌து த‌மிழிழ‌ நாடு வேண்டி போராடிய‌ அனைத்து மாவீர‌ர்க‌ளுக்கும் த‌லைவ‌ருக்கும் செய்யும் ப‌ச்சை துரோக‌மாய் உண‌ருகிறேன் ,

என்ர‌ வ‌ய‌து பெடிய‌ங்க‌ள் இங்கை சாதிய‌ ப‌ற்றியே க‌தைக்கிறேல‌ , அது எங்க‌ட‌ தொழிலும் இல்ல , ஆனால் ஒரு சில‌ முதிய‌வ‌ர்க‌ள் சாதிய‌ வைச்சு ந‌க்க‌ல் நையாண்டி செய்ய‌க் கூடிய‌வ‌ர்க‌ள் , அப்ப‌டியான‌வ‌ர்க‌ளை விட்டு த‌ள்ளி இருப்ப‌து ந‌ல்ல‌ம் 

எமது கனவு தேசம்  வேறு  சகோ

ஆனால்  இன்று எல்லாமே  மீண்டும் முதலில்  இருந்தபடி????????😡😡😡😡😡

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

மேல கிருபன்  எழுதியிருப்பதை  பார்க்க

அவர்  எமது  சமூகத்திலிருந்து எவ்வளவு தூரத்தில்  தள்ளி  நின்று வருகிறார்  என்பது  புரிகிறது

உண்மைதான்.... லண்டனில் சாதீயம் பேசுபவர்களை நான் கண்டதில்லை என்கிறார்.... நானும் இங்கு தான் இருக்கிறேன்... பேசாதவர்களை காட்டுங்கள் என்று தான் கேட்க தோன்றுகிறது.

ஒரு உறவினர், பொம்பிளை தேவை என்று வந்த விளம்பரத்தில் இருந்த இலக்கத்துக்கு தொடர்பு கொண்டார்.

எடுத்தவுடன், ஆணின் தந்தை பேசியிருக்கிறார்... ஓம் நான் தான் விளம்பரம் போட்டேன். ஊரில் இந்த பகுதி.... இன்ன... குலம்... கோத்திரம்... மேல்கொண்டு பேசுவதாக இருந்தால் பேசலாம். இல்லையெனில் ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

அந்த தந்தையிடம்.... நான் கேட்காமலே இந்த விபரங்களை தரும் காரணம் என்ன என்று கேட்டபோது.... அனுபவம் என்று சொல்லி... இதனை சொல்லாமல் இருந்தால், நீங்கள் உங்கள் நேரம், பணம் விரயம் செய்து... பின்னர் வந்து... நாம் விசாரித்து பார்த்தோம்.... உங்கள் விபரம் அறிந்தோம்..... ஏன் மறைத்தீர்கள் என்று சொல்லி... மனதுக்கு கஸ்ட்மான... கடும் வார்த்தைகளை சொல்வார்கள். ஆகவே முன்னமே சொல்லி ஆரம்பித்தால்... பிரச்சனை இல்லை என்றாராம்.

இதுதான் நிலை.

லண்டனில் ஒரு பத்திரிகை... டூட்டிங் பக்கத்தில் இருந்து வந்தது... இன்னும் வருகிறதோ தெரியவில்லை. வடமராட்சிகாரர் தான் எடிட்டர்.

லண்டனில் சிலவருடங்களுக்கு முன்னர் ஊரில் ஒரு புகழ் மிக்க ஆசிரியர் இறந்து விட்டார். தமிழ் புத்தங்கள் எழுதியவர். அவரது பிள்ளைகளுடன் இங்கு இருந்தவர்.

அவர் குறித்து இந்த பத்திரிகையில், அந்த ஆசிரியர் எழுதும் போது.... அவர்...... '****' சமுகத்தில் இருந்து வந்து கஷ்ட்டப்பட்டு படித்து முன்னேறி, அவரது பிள்ளைகளையும் படிப்பித்து, லண்டன் வரவைத்து....

அவர் பற்றி மட்டும் சொல்லமால், வேண்டுமென்றே அவரது சாதியினை குறித்து சொல்லி.... பலருக்கு தெரியாமல் இருந்த விபரத்தினை சொல்லிவைத்தார் அவர்.

ஆசிரியரின் பெருமைகளை எழுதுவது போலவே, தேவை இல்லாத ஒரு விசயத்தினையும் சொல்லி வைத்தார்... கண்டங்களுக்கு ஆளானார்.

இந்த தேவையில்லாத வேலையினால், அந்த ஆசிரியர் குடும்பம் மிகுந்த கவலை அடைந்து இருந்தது. சில நண்பர்களை இழந்தது.

இதெல்லாம் கிருபனுக்கு தெரியாதோ?

எழுத்து, புத்தக, உலகில் இருந்து, கொஞ்சம் நிஜ உலகுக்கும் வரணும்...😎

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

மேல கிருபன்  எழுதியிருப்பதை  பார்க்க

அவர்  எமது  சமூகத்திலிருந்து எவ்வளவு தூரத்தில்  தள்ளி  நின்று வருகிறார்  என்பது  புரிகிறது

விசுகு ஐயா,

நீங்கள் குறிப்பது பிற்போக்கான சாதியைத் தூக்கிப் பிடிக்கும் சமூகம் என்றால், ஆம் நான் இப்படியானவர்களிடம் இருந்து தள்ளியே இருக்கின்றேன்.

இந்தத் திரியில் முதலில் சொன்னமாதிரி நான் பழகும் இலண்டனில் வாழ்பவர்கள் (எல்லாம் தமிழர்கள்தான்) சாதி சொல்லிக் கதைப்பதேயில்லை.  சாதகப் பொருத்தம் பார்ப்பவர்கள், கலியாணத் தரகர்களுடன் நான் பேசியதேயில்லை என்பதால் இந்தப் பிற்போக்கானவர்களுடன் பழக்கம் இல்லை.

80களின் ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த எனது உறவினர்கள் பிரான்சில் இருக்கின்றனர். அவர்களின் ஒருவரின் மகள் 3 வருடங்களுக்கு முன்னர் பெற்றோருக்குத் தெரியாமல் சாதி மாறிக் கலியாணம் செய்துவிட்டார். தாயார் தனது மகளின் முகத்தில் முழிக்கமாட்டேன், தனது பிள்ளையில்லை என்று என்றெல்லாம் பல கூப்பாடு போட்டார். அவர் கூப்பாடு போட்டபோதே “மகள் பிள்ளையுடன் நீங்கள் வர நீங்கள் கொஞ்சிக் குலாவத்தான் போகின்றீர்கள்” என்று சொல்லியிருந்தேன். அவர் சிலகாலம் மகளை வீட்டுக்கு அண்டாமல் இருந்தார். 80 களில் வந்ததால் சொந்தக்காரர்கள் கேவலமாக நினைப்பார்களே என்பதுதான் அவரின் கூப்பாட்டுக்குக் காரானம். ஆனால் ஒருத்தரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவுமில்லை. அவரின் மகளை ஒதுக்கவுமில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் வந்தபோது மகள் பழையபடி வீட்டுக்கு வந்துபோயிருந்தா. போனவருடம் அவர்கள் இலண்டன் வந்தபோது மருமகனின் காரிலேயே வந்தார்கள். மருமகனைப் பற்றியும், அவரது சமையல் திறமையைப் பற்றியும் புளுகினார். நான் அவரின் மருமகனுடன் நமது  வழமையான “கொண்டாட்டங்களுக்கு” போய்விட்டேன்! போனவாரம் குழந்தை பிறந்து முகநூலில் தூக்கிக் கொஞ்சிக்கொண்டு நிற்கும் படங்கள் வந்தது!

ஆக, பொறுப்பும் பொருளாதார வசதியும் இருந்தால் சாதி என்பது பலருக்கு பெரிய  விடயமில்லை. தாயகத்தில் அந்த நிலைவரும்போது நிலமை மாறும். அத்துடன் பழம்பெருமை பேசும் பிற்போக்கானவர்களில் பலரும் பரலோகம் போயிருப்பார்கள்.  இப்படித்தான் சாதி காலப்போக்கில் ஒரு விடயமாக இல்லாமல் போகும்.

ஆனால் தாயக அரசியல்வாதிகள் சாதியத்தையும், சமூகப் பிரிவினைகளையும் கண்டும் காணாமல் இருப்பதும், மறைமுகமாக வளர்ப்பதும் நீடிக்குமானால் விரைவில் ஒழியாது. 

புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்கள் நாகரீகமானவர்கள் அல்லது நாகரீகமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளவர்கள் என்பதால்  இங்கு அது பேசப்படும் ஒரு விடயமாக இருக்காது.

21 minutes ago, Nathamuni said:

இதெல்லாம் கிருபனுக்கு தெரியாதோ?

நீங்கள் பழகுபவர்களுக்கும் நான் பழகுபவர்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கின்றது😀

3 minutes ago, கிருபன் said:

இந்தத் திரியில் முதலில் சொன்னமாதிரி நான் பழகும் இலண்டனில் வாழ்பவர்கள் (எல்லாம் தமிழர்கள்தான்) சாதி சொல்லிக் கதைப்பதேயில்லை.  சாதகப் பொருத்தம் பார்ப்பவர்கள், கலியாணத் தரகர்களுடன் நான் பேசியதேயில்லை என்பதால் இந்தப் பிற்போக்கானவர்களுடன் பழக்கம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இங்கே  எமது சமூகம்  பற்றித்தான்  பேசுகின்றோம்

நீங்கள்  பழகும்

அல்:லது குழுமம்  சார்ந்து  அல்ல

உங்களது  குழுமம்  மிக மிக  குறுகியது

அதை உதாரணமாகவோ

எடுத்துக்காட்டாகவோ எடுத்துக்கொள்ளமுடியாதையா

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

நீங்கள் பழகுபவர்களுக்கும் நான் பழகுபவர்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கின்றது😀

பூனை கண்ணை மூடினால் உலகம் இருட்டு என்ற கதை போலல்லவா இருக்கிறது உங்கள் கருத்து.

நான் பத்திரிகையில் வந்த செய்தி குறித்தும் சொன்னேன். நான் வாசிக்கவில்லை என்றால்.... அது பதிலாகாதே...

அது மட்டுமல்ல.... அடுத்த தலைமுறைக்கும் போதுமான சாதிய அறிவு ஊட்டப்பட்டுள்ளது என்பதும் உண்மை.
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

குறைந்த சாதியினர் எனப்படுபவர்கள் ஏன் வெள்ளாள குடும்பத்தில் சம்பந்தம் வைக்க விரும்புகின்றார்கள்?
குறைந்த சாதியினர் என நினைப்பவர்கள் ஏன் தங்களுக்கு குறைந்த சாதிக்குள் இரண்டற கலக்க விரும்புவதில்லை? 😎

1) சாதிபகுப்பு என்கின்ற விடயமே பிழையான கற்பிதம்

2) உயர்சாதி களில் திருமணம் செய்ய வேண்டுமென்று ஒருவரும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் சாதிப் பகுப்பில் குறிப்பிட்ட சாதிக் குடும்பத்திற்குட்பட்டவர்கள் அந்தச் சாதிப் பகுப்பிற்குள் உயர் நிலையில் உள்ளவர்களுக்குள் திருமணம் செய்ய விரும்புகின்றனர். அவ்வாறு செய்தால் அந்த சாதிக் குடும்பத்தில் தாங்கள் உயர் நிலைக்கு வரலாம் என எதிர்பார்க்கின்றனர். உண்மையில் உது ஒரு மனோ வியாதிதான் என்னைப் பொறுத்தவரை. 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

நாங்கள் இங்கே  எமது சமூகம்  பற்றித்தான்  பேசுகின்றோம்

நீங்கள்  பழகும்

அல்:லது குழுமம்  சார்ந்து  அல்ல

உங்களது  குழுமம்  மிக மிக  குறுகியது

அதை உதாரணமாகவோ

எடுத்துக்காட்டாகவோ எடுத்துக்கொள்ளமுடியாதையா

நான் பழகும் சமூகம் மிகவும் குறுகியது என்று நீங்கள் கருதுவதற்கு ஒன்றும் சொல்லமுடியாது. ஆனால் பிற்போக்கான சிந்தனையுள்ளவர்களை நான் தவிர்த்தே வருகின்றேன். அப்படியான நிலை எனக்கு இலண்டனில் ஏற்படவில்லை. அதற்காக நாலுபேருடன் பழகுகின்றேன் என்று நினைக்கவேண்டாம். 

முதலில் சொன்ன மாதிரி ஐரோப்பாவில் வசிப்பவர்கள் சாதியைச் சொல்லி கதைத்ததை நேரில் கண்டிருக்கின்றேன். பிரான்சிலும் இன்னும் குறையவில்லை என்று நீங்கள் சொல்லுவதில் இருந்து விளங்கிக்கொள்கின்றேன். ஆனால் நீங்கள் கூட லாசப்பலில்  முன்மாதிரியாக நின்று இதெல்லாம் முன்னேறிய சமூகத்தின் பண்புகள் இல்லை என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாப் பழகுபவர்களின் கருத்தை மாற்றலாம். சமூகத்தோடு இருக்கவேண்டும் என்பதற்காக பிற்போக்கான விடயங்களை ஆமோதிக்கவேண்டும் என்று அவசியமில்லை.

1 minute ago, Nathamuni said:

பூனை கண்ணை மூடினால் உலகம் இருட்டு என்ற கதை போலல்லவா இருக்கிறது உங்கள் கருத்து.

நான் பத்திரிகையில் வந்த செய்தி குறித்தும் சொன்னேன். நான் வாசிக்கவில்லை என்றால்.... அது பதிலாகாதே...

நான் ஓசிப்பேப்பர் எல்லாம் படிப்பதில்லை நாதமுனி. மா அரிக்க அல்லது ஷு கிளீன் பண்ணும்போது கறுப்பு மை floor இல் படாமல் இருக்கமட்டும்தான் இந்தப் பேப்பர்களைப் பாவிப்பது.😂

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, பையன்26 said:

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு ந‌ட‌ந்த‌துக‌ளை யோசிச்சா ந‌ம‌க்கு தான் த‌ல‌ வெடிக்கும் விசுகு அண்ணா‌ ,

எல்லாள‌ன் தாக்குத‌ல‌ த‌லைமை ஏற்ற‌ இள‌ங்கோ த‌லைவ‌ருக்கு எழுதின‌ க‌டித‌த்தில் எம‌து நாட்டில் சாதியே இருக்க‌க் கூடாது என்று , இள‌ங்கோ த‌லைவ‌ருக்கு க‌டித‌ம் எழுத‌ முத‌லே த‌மிழீழ‌ ம‌ண்ணில் சாதி மெது மெதுவாய் ம‌ண்ணோடு ம‌ண்ணாய் போய் விட்ட‌து ,

இப்ப‌ த‌மிழீழ‌ ம‌ண்ணில் சாதி வெறிய‌ தூண்டி விடுவ‌து ஒட்டுக்குழுக்க‌ள் , த‌மிழ‌னை ‌‌ ஒன்று ப‌ட‌ விட‌க் கூடாது என்று சிங்க‌ள‌ம் ஒட்டுக்குழுக்க‌ள‌ வைத்து காய் ந‌க‌ர்த்துகிறார்க‌ள் ,

2009ம் ஆண்டுக்கு முத‌ல் போராளிக‌ளின் நெத்தி வெடிய‌ ப‌ல‌ர் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்  , செய்வினை சூனிய‌ம் செய்ப‌வ‌ர்க‌ளை கூட‌ யாழ்ப்பாண‌த்தில் தேடி தேடி சுட்ட‌வ‌ர்க‌ள் ,

த‌மிழீழ‌ ம‌ண்ணில் த‌லைவ‌ர்  போராளிக‌ள் த‌மிழீழ‌  நாடு வேண்டி சாதிய‌ ஒழித்து ந‌ல்ல‌ த‌மிழ் ச‌முதாய‌த்த‌ உருவாக்க‌ க‌டின‌மாக‌ போராடினார்க‌ள் /

ஆனால் புல‌ம்பெய‌ர் நாட்டில் எம் போராட்ட‌த்த‌ சாட்டி செட்டில் ஆகிட்டு சாதிய‌ தூக்கி பிடிப்ப‌து த‌மிழிழ‌ நாடு வேண்டி போராடிய‌ அனைத்து மாவீர‌ர்க‌ளுக்கும் த‌லைவ‌ருக்கும் செய்யும் ப‌ச்சை துரோக‌மாய் உண‌ருகிறேன் ,

என்ர‌ வ‌ய‌து பெடிய‌ங்க‌ள் இங்கை சாதிய‌ ப‌ற்றியே க‌தைக்கிறேல‌ , அது எங்க‌ட‌ தொழிலும் இல்ல , ஆனால் ஒரு சில‌ முதிய‌வ‌ர்க‌ள் சாதிய‌ வைச்சு ந‌க்க‌ல் நையாண்டி செய்ய‌க் கூடிய‌வ‌ர்க‌ள் , அப்ப‌டியான‌வ‌ர்க‌ளை விட்டு த‌ள்ளி இருப்ப‌து ந‌ல்ல‌ம் 

இதையிட்டு அதிகம் கவலைப்பட ஏதுமில்லை பையா. புலம்பெயர் நாடுகளில் வளரும் பிள்ளைகளுக்கு சாதி என்னவென்றே தெரியாது. நாங்கள் இன்னும் கொஞ்சக் காலத்தில போய்ச் சேர்ந்தவுடன் எங்களுடன் சாதியும் போய்ச் சேர்ந்துவிடும். அவர்கள் மகிழ்ச்சியாக உணர்வார்கள். 👍

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

நான் பழகும் சமூகம் மிகவும் குறுகியது என்று நீங்கள் கருதுவதற்கு ஒன்றும் சொல்லமுடியாது. ஆனால் பிற்போக்கான சிந்தனையுள்ளவர்களை நான் தவிர்த்தே வருகின்றேன். அப்படியான நிலை எனக்கு இலண்டனில் ஏற்படவில்லை. அதற்காக நாலுபேருடன் பழகுகின்றேன் என்று நினைக்கவேண்டாம். 

முதலில் சொன்ன மாதிரி ஐரோப்பாவில் வசிப்பவர்கள் சாதியைச் சொல்லி கதைத்ததை நேரில் கண்டிருக்கின்றேன். பிரான்சிலும் இன்னும் குறையவில்லை என்று நீங்கள் சொல்லுவதில் இருந்து விளங்கிக்கொள்கின்றேன். ஆனால் நீங்கள் கூட லாசப்பலில்  முன்மாதிரியாக நின்று இதெல்லாம் முன்னேறிய சமூகத்தின் பண்புகள் இல்லை என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாப் பழகுபவர்களின் கருத்தை மாற்றலாம். சமூகத்தோடு இருக்கவேண்டும் என்பதற்காக பிற்போக்கான விடயங்களை ஆமோதிக்கவேண்டும் என்று அவசியமில்லை.

நான் ஓசிப்பேப்பர் எல்லாம் படிப்பதில்லை நாதமுனி. மா அரிக்க அல்லது ஷு கிளீன் பண்ணும்போது கறுப்பு மை floor இல் படாமல் இருக்கமட்டும்தான் இந்தப் பேப்பர்களைப் பாவிப்பது.😂

இதைத்தான் சப்பைக்கட்டு கட்டுவது எண்டுறது.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

அடுத்த தலைமுறைக்கும் போதுமான சாதிய அறிவு ஊட்டப்பட்டுள்ளது என்பதும் உண்மை.

எப்படி என்று விளக்கமுடியுமா? 

பல இளையோர், பதின்வயதினரை எனக்கு நன்றாகவே தெரியும். அவர்களிடம் இந்த அறிவை நான் கண்டதேயில்லை. நான் பழகும் சமூகத்தில் உள்ளவர்கள் எல்லாம் “elites”/“posh”  என்றும் சொல்லமுடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

எப்படி என்று விளக்கமுடியுமா? 

பல இளையோர், பதின்வயதினரை எனக்கு நன்றாகவே தெரியும். அவர்களிடம் இந்த அறிவை நான் கண்டதேயில்லை. நான் பழகும் சமூகத்தில் உள்ளவர்கள் எல்லாம் “elites”/“posh”  என்றும் சொல்லமுடியாது!

நீங்கள் நடுநிலைமையில் இருந்தால், நான் சொல்வதை விளங்கிக் கொள்வீர்கள்.

ஆனால்...நீங்கள் ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு... மறுபக்கம் தெரியவே தெரியாது என்று சொன்னால்.... நான் சொல்வதுக்கு எதுவுமே இல்லை என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

அவர்களுக்கு திருமணம் நடக்கும் வரை அல்லது திருமணம் பேச்சு வரும் வரை பொறுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நீங்கள் நடுநிலைமையில் இருந்தால், நான் சொல்வதை விளங்கிக் கொள்வீர்கள்.

ஆனால்...நீங்கள் ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு... மறுபக்கம் தெரியவே தெரியாது என்று சொன்னால்.... நான் சொல்வதுக்கு எதுவுமே இல்லை என்று நினைக்கிறேன்.

உங்களால் விளக்கமுடியவில்லை நாதமுனி. சும்மா ஒரு வசனம் விட்டால் போதாது.

அடுத்த தலைமுறைக்கு எப்படி சாதி அறிவு ஊட்டப்படுகின்றது என்று சொன்னால் எங்களுக்கும் புரியும்தானே. 

சமய அறிவை ஊட்ட எவ்வளவோ கஷ்டப்படவேண்டி உள்ளது எனும்போது எப்படி இளம் சமுதாயத்திற்கு சாதி அறிவு ஊட்டப்படுகின்றது?

5 minutes ago, விசுகு said:

அவர்களுக்கு திருமணம் நடக்கும் வரை அல்லது திருமணம் பேச்சு வரும் வரை பொறுங்கள். 

பெரும்பாலானோர் தாங்களாகவே துணையைத் தேடிக்கொள்வார்கள் அல்லது புதிய AI technology உள்ள apps மூலம் சரியானவர்களைக் கண்டுகொள்வார்கள். அப்படித்தான் எதிர்காலம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

உங்களால் விளக்கமுடியவில்லை நாதமுனி. சும்மா ஒரு வசனம் விட்டால் போதாது.

அடுத்த தலைமுறைக்கு எப்படி சாதி அறிவு ஊட்டப்படுகின்றது என்று சொன்னால் எங்களுக்கும் புரியும்தானே. 

சமய அறிவை ஊட்ட எவ்வளவோ கஷ்டப்படவேண்டி உள்ளது எனும்போது எப்படி இளம் சமுதாயத்திற்கு சாதி அறிவு ஊட்டப்படுகின்றது?

நீங்கள் வேறு உலகத்தில் இருக்கிறீர்கள்.

இங்கே விபரங்களை தருவது நாகரீகமாகாது என்பதால் அதனை தவிர்க்கிறேன். ஆனால்... நான் சொன்னது பொய் அல்ல.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பெரும்பாலானோர் தாங்களாகவே துணையைத் தேடிக்கொள்வார்கள் அல்லது புதிய AI technology உள்ள apps மூலம் சரியானவர்களைக் கண்டுகொள்வார்கள். அப்படித்தான் எதிர்காலம் உள்ளது.

இருக்கலாம் ஆனால் பெற்றோரின் விருப்புவெறுப்புக்களும் அவர்களின் கௌரவங்களும் அதில் முக்கிய இடம் வகிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.