Jump to content

ஆடி அமாவாசை விரதத்திற்கான சுவையான பாகற்காய் கறி தயாரிக்கும் முறை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஆடி அமாவாசை விரதத்திற்கான சுவையான பாகற்காய் கறி தயாரிக்கும் முறை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று,  ஆடி அமாவாசை. 
தந்தையை இழந்தவர்கள்... அவர்களை நினைத்து விரதம் பிடிக்கும் நாள்.
இணைப்பிற்கு... நன்றி உடையார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

இன்று,  ஆடி அமாவாசை. 
தந்தையை இழந்தவர்கள்... அவர்களை நினைத்து விரதம் பிடிக்கும் நாள்.
இணைப்பிற்கு... நன்றி உடையார்.

ஆடி அமவாசை என்றால் கீரிமலைக்கும் சென்று வழிபாடு நடத்துவார்கள். 
கறி செய்முறைக்கு நன்றி உடையார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்த நாளில் இருந்து விரதம் பிடிக்கிறன்....... ஆடிஅமாவாசையும் இல்லையென்றால் எப்பவோ ஐயாவை அடியோடு மறந்திருப்பேன்.......! நன்றி உடையார்......!   🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், கடந்த பத்துவருசமா பிடிக்கிறேன்.

Posted

நன்றி உடையார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, நந்தன் said:

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், கடந்த பத்துவருசமா பிடிக்கிறேன்.

சார்! உங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.😎

மாட்டோடை கோபம் கன்றோடை கோபம் இல்லை எண்ட மாதிரி. 
நீங்களேல்லாம் பேய்க்காயளப்பா :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, குமாரசாமி said:

சார்! உங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.😎

மாட்டோடை கோபம் கன்றோடை கோபம் இல்லை எண்ட மாதிரி. 
நீங்களேல்லாம் பேய்க்காயளப்பா :grin:

அம்மாவையே தெரியாத ஒருத்தனை வளர்த்து ஆளாக்கிய அப்பா மீதான அன்பின் அடையாளம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, நந்தன் said:

அம்மாவையே தெரியாத ஒருத்தனை வளர்த்து ஆளாக்கிய அப்பா மீதான அன்பின் அடையாளம்

அந்த அப்பாவை வாழ்நாளில் ஒரு நிமிட கூட மறக்க முடியாது. அம்மா அப்பா என்ற இரண்டு உறவுகளின் பாசத்தையும் சேர்த்து தந்திருப்பார் உங்களுக்கு. 

நன்றி தமிழ்சிறி, குமாரசாமி, சுவி and பகலவன் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆடி அமாவாசைக்கு என்று தனியான பாகற்காய்க் கறி இருக்கா என்ன ?????🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நக்கல்????? 

ஓம் இருக்கு. ஆடி அமாவாசைக்கெண்டு சில பொரியல்களும் படையல்களும் இருக்கு. 😎

இந்த ஆடிஅமாவாசை நாளை உங்களைப்போன்ற மேலைத்தேயவர்களுக்கு சுருக்கமாக சொல்வதானால் சைவசமயத்தில் இறந்த தந்தையர்களை நினைவு கூரும் தினம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நந்தன் said:

அம்மாவையே தெரியாத ஒருத்தனை வளர்த்து ஆளாக்கிய அப்பா மீதான அன்பின் அடையாளம்

மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆடி அமாவாசைக்கு என்று தனியான பாகற்காய்க் கறி இருக்கா என்ன ?????

இருக்கும் என்றே நினைக்கிறன்.

ஆடி அமாவாசை, சித்திரை பௌர்ணமி, மாளையம் மற்றும்   மகா மாளையம் கொடுக்கும் பொது, அந்த சமையலில் எனது அம்மா, வாய், மூக்கை துணியால் கட்டியே சமைப்பார்.

இங்கு இணைக்கப்பட்டு இருக்கும் சமையல் முறை, ருசி ஐ வைத்து காட்டப்படுகிறது.

ஆனால், பிதிர் காரியங்களுக்காக சமைக்கும் போது (வேறு மரக்கறிகளுடன்) கலப்பு, மற்றும் ருசி நோக்கி அல்லது நினைத்து சமைப்பது  தவிர்த்து,  பிதிர் கடன் என்று மனதை ஒருமைப் படுத்தி சமைக்க வேண்டும்  என்று அம்மா சொல்லி அறிந்துளேன். முக்கியமாக பிதிர் கடன் கழிக்க  பாவிக்கும் மரக்கறிகளின் சமையல்.

மற்றும் விறகு அடுப்பிலேயே முழுமையான சமையலும், 

உப்பு போடமல் சமைத்து, படைத்த பின், காகத்துக்கு வைத்தே, உப்பிட்டு மீண்டும் அடுப்பேற்றி முடித்த பின், படைத்ததில் இருந்தே சாப்பிட தொடங்குவது.  

அப்படி உப்பிடாமல் படைத்ததை எல்லோரும் ஓர் சிறு பகுதியையாவது உண்மை வேண்டும் என்ற கண்டிப்பும் இருந்தது. 

1 hour ago, குமாரசாமி said:

ஓம் இருக்கு. ஆடி அமாவாசைக்கெண்டு சில பொரியல்களும் படையல்களும் இருக்கு.

சுண்டங்காய்  பிதிர் காரியங்களுக்கான மரக்கறி அல்லவா?
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kadancha said:

சுண்டங்காய்  பிதிர் காரியங்களுக்கான மரக்கறி அல்லவா?
 
ஒம். உண்மைதான். நான் பாகற்காய் கறி,ஆடி அமாவாசை எண்டவுடனை பிதிருக்கு படையல் வைக்கிறது பற்றி எழுதுவம் எண்டு யோசிச்சன். பிறகு ஒரு குறூப் வந்து சட்டி பானையை தூக்கி எறியிற அளவுக்கு எழுதும். ஏன் சோலி எண்டு போட்டு விட்டுட்டன். 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, நந்தன் said:

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், கடந்த பத்துவருசமா பிடிக்கிறேன்.

எனக்கும் கடவுள் நம்பிக்கையில்லை. ஆனால்  நானும் பத்து வருடமாக ஆடி அமாவாசைக்கு  விரதம் பிடிக்கின்றேன்.  ஆபிரிக்காவில் இடையில் “ரூட்” அடிபட்டு இருக்கும்போது அப்பா “பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுமுறி நமக்கு என்று வாழவேண்டும்” என்று கடிதம் போட்டிருந்தார்.  எவரையும் ஏமாற்றாமல், எவரிடமும் ஏமாறாமல் வாழவேண்டும் என்று சொல்லித்தந்தவர்.

அவருக்குப் பிடித்த பாகற்காய் கறி எனக்கும் பிடிக்கும். இலண்டனில் கொரோனாவோடு பாகற்காய் நெருப்புவிலை விற்கின்றது என்று நேற்று கடைக்குப்போனபோது புரிந்தது. 

Posted

அப்பாவுக்காக செய்யும் கடமையாக நினைத்து பல ஆண்டுகளாக பிடிக்கிறேன்.

இடையில் சில வருடங்கள் தவிர்க்கமுடியாத காரணங்களால் விட்டுப்போனாலும் தொடர்ந்து பிடிக்க முயற்சி செய்கிறேன்.

எனது அப்பாவுக்கும் பாவற்காய் நிறைய பிடிக்கும். அவருக்காக அம்மா சமைச்சாலும் எனக்கு சிறுவயதில் பாகற்காய் பிடிக்காது. சாப்பாட்டை கூட தூக்கி எறிந்து இருக்கிறேன். 

அப்படி எறிந்தபோது அம்மா விட்ட சாபமோ என்னமோ பின்னைய நாட்களில் சாப்பாடே இல்லாமல் கழிந்த நாட்கள் பல. 

இப்போ பாகற்காய் பிடித்த உணவுகளில் ஒன்றாகிவிட்டது அப்பாவைபோல. (ஆனாலும் என் மகனுக்கு இப்போ பாகற்காய் பிடிக்காது என்னைபோல)

அப்பாவை பற்றி எங்கும் பதியவில்லை என்றாலும் எனது நாயகனும், பின் தொடர் மாதிரியும் அவர் தான். அவராக வாழ முயற்சி செய்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, குமாரசாமி said:

நக்கல்????? 

ஓம் இருக்கு. ஆடி அமாவாசைக்கெண்டு சில பொரியல்களும் படையல்களும் இருக்கு. 😎

இந்த ஆடிஅமாவாசை நாளை உங்களைப்போன்ற மேலைத்தேயவர்களுக்கு சுருக்கமாக சொல்வதானால் சைவசமயத்தில் இறந்த தந்தையர்களை நினைவு கூரும் தினம்.

அது எங்களுக்கும் தெரியும்.  அதுக்காக அன்றைய தினம் இப்பிடித்தான் சமைக்க வேண்டும் என்பது ஒத்துக்கொள்ள முடியாதது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

எனக்கும் கடவுள் நம்பிக்கையில்லை. ஆனால்  நானும் பத்து வருடமாக ஆடி அமாவாசைக்கு  விரதம் பிடிக்கின்றேன்.  ஆபிரிக்காவில் இடையில் “ரூட்” அடிபட்டு இருக்கும்போது அப்பா “பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுமுறி நமக்கு என்று வாழவேண்டும்” என்று கடிதம் போட்டிருந்தார்.  எவரையும் ஏமாற்றாமல், எவரிடமும் ஏமாறாமல் வாழவேண்டும் என்று சொல்லித்தந்தவர்.

அவருக்குப் பிடித்த பாகற்காய் கறி எனக்கும் பிடிக்கும். இலண்டனில் கொரோனாவோடு பாகற்காய் நெருப்புவிலை விற்கின்றது என்று நேற்று கடைக்குப்போனபோது புரிந்தது. 

உரிச்ச திராவிடன் திருக்குவளை முத்துவேலர் மகன் குடும்பம் மாதிரி ஒரு நாடகம்.
கருணாநிதி நாத்திகன்.ஆனால் மனைவி மருமக்கள் அர்ச்சனைத்தட்டு/பொங்கல் பிரசாத மயம்.
அது போல்.....
தங்களுக்கு கடவுள் நம்பிக்கை அறவே இல்லை. ஆனால் ஆடி அமாவாசை விரதம்?!?!?!?!?!
ஏன் வேறொரு நாட்களில் தந்தையரை நினைத்து பாகற்காயும் சோறும் சாப்பிட்டு பத்தியம் மன்னிக்கவும் விரதம் இருக்கக்கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

ஒம். உண்மைதான். நான் பாகற்காய் கறி,ஆடி அமாவாசை எண்டவுடனை பிதிருக்கு படையல் வைக்கிறது பற்றி எழுதுவம் எண்டு யோசிச்சன். பிறகு ஒரு குறூப் வந்து சட்டி பானையை தூக்கி எறியிற அளவுக்கு எழுதும். ஏன் சோலி எண்டு போட்டு விட்டுட்டன். 😎

ஒரு குரூப் தானே அண்ணை. மற்ற குறுப்புக்காக எழுதுங்கோ. அறிய ஆவல் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, குமாரசாமி said:

தங்களுக்கு கடவுள் நம்பிக்கை அறவே இல்லை. ஆனால் ஆடி அமாவாசை விரதம்?!?!?!?!?!
ஏன் வேறொரு நாட்களில் தந்தையரை நினைத்து பாகற்காயும் சோறும் சாப்பிட்டு பத்தியம் மன்னிக்கவும் விரதம் இருக்கக்கூடாது?

பெற்றோர்களுக்கு நீர்க்கடன் செலுத்துவதற்கும் கடவுளை நம்புவதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஐயரைக் கூப்பிட்டு திவசம் செய்வதோ, கோயிலுக்குப்போய் தானம் கொடுக்கும் வழக்கமோ இல்லை.

பெற்றவர்களுக்காக நீராகாரம் அருந்தாமல் இருப்பதை வேடம் போடுவதாக நீங்கள் கருதினால் அப்படியே இருக்கட்டும்.😎

வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும்தான் இப்படி விரதம் இருப்பது. அவை எதுவென்று உங்களுக்கும் தெரிந்திருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, உடையார் said:

ஆடி அமாவாசை விரதத்திற்கான சுவையான பாகற்காய் கறி தயாரிக்கும் முறை

வித்தியாசமான செய்முறை. ஒருக்கா செய்து பார்க்க வேணும்.  

11 hours ago, நந்தன் said:

அம்மாவையே தெரியாத ஒருத்தனை வளர்த்து ஆளாக்கிய அப்பா மீதான அன்பின் அடையாளம்

அப்பாவே அப்பாவும், அம்மாவுமாய் 🙏

12 hours ago, suvy said:

பிறந்த நாளில் இருந்து விரதம் பிடிக்கிறன்....... ஆடிஅமாவாசையும் இல்லையென்றால் எப்பவோ ஐயாவை அடியோடு மறந்திருப்பேன்.......! நன்றி உடையார்......!   🙏

🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

4 minutes ago, கிருபன் said:

பெற்றோர்களுக்கு நீர்க்கடன் செலுத்துவதற்கும் கடவுளை நம்புவதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஐயரைக் கூப்பிட்டு திவசம் செய்வதோ, கோயிலுக்குப்போய் தானம் கொடுக்கும் வழக்கமோ இல்லை.

பெற்றவர்களுக்காக நீராகாரம் அருந்தாமல் இருப்பதை வேடம் போடுவதாக நீங்கள் கருதினால் அப்படியே இருக்கட்டும்.😎

வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும்தான் இப்படி விரதம் இருப்பது. அவை எதுவென்று உங்களுக்கும் தெரிந்திருக்கும்!

கிருபன்! நான் என்றும் எங்குமே ஐயர்/பார்ப்பனர்களை தூக்கி பிடித்ததில்லை. அவர்களது கொள்கை/கொள்ளைகளை வரவேற்றதுமில்லை. நான் ஒரு சைவன் என்று பல இடங்களில் கூறியும் என்னை பார்பனியத்தோடு தொடர்புபடுத்துகின்றீர்கள்.

நான் உங்களுக்கு இன்றைய விசேட நாளில் அந்த கருத்தை எழுதும் போது மிக மன வருத்தமாக இருந்தது.பிறர் மனம் நோகக்கூடாது என்பது என்னை பெற்றெடுத்தவர்களின் போதனை.
மனம் நோகடித்ததிற்கு மன்னிக்கவும்.:(

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kadancha said:

இருக்கும் என்றே நினைக்கிறன்.

ஆடி அமாவாசை, சித்திரை பௌர்ணமி, மாளையம் மற்றும்   மகா மாளையம் கொடுக்கும் பொது, அந்த சமையலில் எனது அம்மா, வாய், மூக்கை துணியால் கட்டியே சமைப்பார்.

இங்கு இணைக்கப்பட்டு இருக்கும் சமையல் முறை, ருசி ஐ வைத்து காட்டப்படுகிறது.

ஆனால், பிதிர் காரியங்களுக்காக சமைக்கும் போது (வேறு மரக்கறிகளுடன்) கலப்பு, மற்றும் ருசி நோக்கி அல்லது நினைத்து சமைப்பது  தவிர்த்து,  பிதிர் கடன் என்று மனதை ஒருமைப் படுத்தி சமைக்க வேண்டும்  என்று அம்மா சொல்லி அறிந்துளேன். முக்கியமாக பிதிர் கடன் கழிக்க  பாவிக்கும் மரக்கறிகளின் சமையல்.

மற்றும் விறகு அடுப்பிலேயே முழுமையான சமையலும், 

உப்பு போடமல் சமைத்து, படைத்த பின், காகத்துக்கு வைத்தே, உப்பிட்டு மீண்டும் அடுப்பேற்றி முடித்த பின், படைத்ததில் இருந்தே சாப்பிட தொடங்குவது.  

அப்படி உப்பிடாமல் படைத்ததை எல்லோரும் ஓர் சிறு பகுதியையாவது உண்மை வேண்டும் என்ற கண்டிப்பும் இருந்தது. 

சுண்டங்காய்  பிதிர் காரியங்களுக்கான மரக்கறி அல்லவா?
 
நல்ல தகவல். இணைப்புக்கு நன்றி 

3 hours ago, பகலவன் said:

அப்பாவுக்காக செய்யும் கடமையாக நினைத்து பல ஆண்டுகளாக பிடிக்கிறேன்.

இடையில் சில வருடங்கள் தவிர்க்கமுடியாத காரணங்களால் விட்டுப்போனாலும் தொடர்ந்து பிடிக்க முயற்சி செய்கிறேன்.

எனது அப்பாவுக்கும் பாவற்காய் நிறைய பிடிக்கும். அவருக்காக அம்மா சமைச்சாலும் எனக்கு சிறுவயதில் பாகற்காய் பிடிக்காது. சாப்பாட்டை கூட தூக்கி எறிந்து இருக்கிறேன். 

அப்படி எறிந்தபோது அம்மா விட்ட சாபமோ என்னமோ பின்னைய நாட்களில் சாப்பாடே இல்லாமல் கழிந்த நாட்கள் பல. 

இப்போ பாகற்காய் பிடித்த உணவுகளில் ஒன்றாகிவிட்டது அப்பாவைபோல. (ஆனாலும் என் மகனுக்கு இப்போ பாகற்காய் பிடிக்காது என்னைபோல)

அப்பாவை பற்றி எங்கும் பதியவில்லை என்றாலும் எனது நாயகனும், பின் தொடர் மாதிரியும் அவர் தான். அவராக வாழ முயற்சி செய்கிறேன்.

அம்மா அந்த நேரம் மட்டும் தான் கோவப்ப பட்டிருப்பா . அம்மாவும் அப்பாவும் உங்களுடன் கூடவே எப்பவும்  இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அது எங்களுக்கும் தெரியும்.  அதுக்காக அன்றைய தினம் இப்பிடித்தான் சமைக்க வேண்டும் என்பது ஒத்துக்கொள்ள முடியாதது.

உங்களுக்கு எல்லாம் தெரியும் எண்டது இந்த உலகத்துக்கே தெரிஞ்ச விசயம் தானே......😄
அது இருக்கட்டும்....

சைவ வீடுகளிலை சாதாரண நாள் சமையல்களை விட விரத/ விசேச நாட்களிலை பாத்திரங்கள் தொடக்கம் சமையல், சாப்பிடும் பாத்திரம்(வாழையிலை,தாமரை இலை) எண்டு எல்லாம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.அயலவர் உறவினர் கூடி உண்பர்.இல்லையேல் சமைத்ததை கொடுத்து பரிமாறுவர்.சமைக்கும் போது கூட உப்பு/புளி பார்க்க மாட்டார்கள்.ஆனால் அன்றைய தின சமையல்கள் வித்தியாசமான சுவையாக இருக்கும்.

உங்களுக்கு தெரியுமா? சைவ வீடுகளில்  படையல் என்று வரும் போது மச்சம் மாமிசம் எல்லாம் இருக்கும். எதற்கும் சைவ சமயத்தை விளங்கிக்கொள்ளுங்கள். அப்புறம் உங்களுக்கு மதமும் பிடிக்காது. மதப்பிரச்சனையும் வரவே வராது.

குமாரசாமி புலம் பெயர்ந்தாலும் புலன் பெயரவில்லை.😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

கிருபன்! நான் என்றும் எங்குமே ஐயர்/பார்ப்பனர்களை தூக்கி பிடித்ததில்லை. அவர்களது கொள்கை/கொள்ளைகளை வரவேற்றதுமில்லை. நான் ஒரு சைவன் என்று பல இடங்களில் கூறியும் என்னை பார்பனியத்தோடு தொடர்புபடுத்துகின்றீர்கள்.

நான் உங்களுக்கு இன்றைய விசேட நாளில் அந்த கருத்தை எழுதும் போது மிக மன வருத்தமாக இருந்தது.பிறர் மனம் நோகக்கூடாது என்பது என்னை பெற்றெடுத்தவர்களின் போதனை.
மனம் நோகடித்ததிற்கு மன்னிக்கவும்.:(

கு.சா. ஐயா, எனக்கு எந்த மனவருத்தமும் கிடையாது. 

மேலும் பார்ப்பனியம் என்ற மக்களைப் பிளவுபடுத்தும் கருத்தியலுக்கும் சைவ மதப் பக்திக்கும் உள்ள வித்தியாசம் எனக்கும் புரியும்.  அதனால் பார்ப்பனியத்தோடு உங்களைத் தொடர்புபடுத்தி எழுதி இருக்கமாட்டேன் என்றே நினைக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.