Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்தரிக்காய் வெங்காய சம்பல்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கத்தரிக்காய் வெங்காய சம்பல்.

  • கருத்துக்கள உறவுகள்

இது யாரும் உங்கட ஆட்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விசயம் என்டால்... சாமியார்...

சம்பல் அந்தமாதிரி தான் இருக்கும்... ஆனா... கத்தரிக்காயை வெட்டேக்க, கையில இருந்த மணிக்கூட்டினைக் கடைசீல காணம்.

அது சம்பல் சட்டிக்குள்ள விழுந்திருக்குமோ எண்டு எட்டி, எட்டி பார்த்தன்.... அம்பிடேல்ல...

உங்கட கண்ணுக்கு அம்பிட்டதோ? 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இது யாரும் உங்கட ஆட்களோ?

ஆள் ஒளித்திருந்து செய்கிறபடியால் சொந்தக்காரராக இருக்கலாம்.

10 minutes ago, Nathamuni said:

உங்கட கண்ணுக்கு அம்பிட்டதோ? 😎

விசாரித்து சொல்லுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

கத்தரிக்காய் வெங்காய சம்பல்.

நன்றி பகிர்வுக்கு குமாரசாமி .

இந்த கத்தரிக்காயை நன்றாக 4-5 அடுக்கில் அலுமினிய தாளால் (Aluminium Foil) மறையும் மட்டும் சுற்றிவிட்டு, வெறும் அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். சுற்றி சுற்றி விட வேண்டும் நன்றாக அவியும் வரை.

வெந்தது அறிய அமத்தினால் அலுமினிம் தாள் உள் போக வேண்டும்

 ஆறவிட்டு, அலுமினியதாளை மெதுவாக அகற்றிவிட்டு, கத்தரிக்காய் மேல் தோலை அகற்றவேண்டும்

பின் வெங்காயம் பச்சை மிளகாய் தேசிப்புளி உப்பு கருவேப்பிலை போட்டு சம்பல் செய்தால் நல்ல சுவை & சத்தும்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

இது யாரும் உங்கட ஆட்களோ?

ரதி... கத்தரிக்காய், வெங்காய சம்பல் எப்படி செய்யுறது எண்டு பாக்கிறதை  விட்டுட்டு....
"இது யாரும் உங்கட ஆட்களோ?" என்று... விடுப்பு கேட்கிறார்.  :grin:  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, ரதி said:

இது யாரும் உங்கட ஆட்களோ?

ஓம் ஒண்டுக்கை ஒண்டுதான். 😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

நன்றி பகிர்வுக்கு குமாரசாமி .

இந்த கத்தரிக்காயை நன்றாக 4-5 அடுக்கில் அலுமினிய தாளால் (Aluminium Foil) மறையும் மட்டும் சுற்றிவிட்டு, வெறும் அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். சுற்றி சுற்றி விட வேண்டும் நன்றாக அவியும் வரை.

வெந்தது அறிய அமத்தினால் அலுமினிம் தாள் உள் போக வேண்டும்

 ஆறவிட்டு, அலுமினியதாளை மெதுவாக அகற்றிவிட்டு, கத்தரிக்காய் மேல் தோலை அகற்றவேண்டும்

பின் வெங்காயம் பச்சை மிளகாய் தேசிப்புளி உப்பு கருவேப்பிலை போட்டு சம்பல் செய்தால் நல்ல சுவை & சத்தும்

தயிரையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள்....👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Nathamuni said:

என்ன விசயம் என்டால்... சாமியார்...

சம்பல் அந்தமாதிரி தான் இருக்கும்... ஆனா... கத்தரிக்காயை வெட்டேக்க, கையில இருந்த மணிக்கூட்டினைக் கடைசீல காணம்.

அது சம்பல் சட்டிக்குள்ள விழுந்திருக்குமோ எண்டு எட்டி, எட்டி பார்த்தன்.... அம்பிடேல்ல...

உங்கட கண்ணுக்கு அம்பிட்டதோ? 😎

பொம்புளையளை மாதிரி விடுப்பு பாக்கிறதிலையே இருக்கிறியள் 😄
கையிலை என்ன போட்டிருக்கு...காதிலை என்ன போட்டிருக்கு.... இதென்ன பழக்கமெண்டு கேக்கிறன் நாதர்?:grin:
விட்டால்....மோதிரம் எத்தினை பவுண் எண்டு கேட்டாலும் கேப்பியள் போல கிடக்கு 😎

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

ஓம் ஒண்டுக்கை ஒண்டுதான். 😎

ஓம்... இனிதான் அவோ... செய்முறை பார்த்து கருத்து சொல்லுவா....

  • கருத்துக்கள உறவுகள்

ம்......நல்லாத்தான் இருக்கு.....! எனக்கு பிடிக்காத காய் கத்தரிக்காய்தான் ஆனாலும் சாப்பிடுறதுதான்.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

பொம்புளையளை மாதிரி விடுப்பு பாக்கிறதிலையே இருக்கிறியள் 😄
கையிலை என்ன போட்டிருக்கு...காதிலை என்ன போட்டிருக்கு.... இதென்ன பழக்கமெண்டு கேக்கிறன் நாதர்?:grin:
விட்டால்....மோதிரம் எத்தினை பவுண் எண்டு கேட்டாலும் கேப்பியள் போல கிடக்கு 😎

அந்த விடுப்பெல்லாம், எண்ட அக்காவிட்ட விட்டிருவன்....

இன்டைக்கு இந்த மணிக்கூடு விசயத்தை விசாரித்து பதில் அனுப்பச் சொல்லி ஓலை அனுப்பி இருந்தா.... அதுதான் பாருங்கோ...😁

காது,கழுத்து தெரியவில்லை எண்ட படியால, கேள்விக்கு இடமில்லை பாருங்கோ. மணிக்கூட்டை கவனிச்சதில, மோதிரத்தை கவனிக்கேல்ல... அரைப்பவுண் ஆவதுதேறும். கண்டியளே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கத்தரிகாய் சாம்பலைப் பற்றி கருத்து சொல்லுங்கோ என்றால் கத்தரி வெட்டிய கையைப் பற்றி கதை நடக்குது.....!   😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தயிரையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள்....👍

அப்படியா நாதமுனி, அடுத்த முறை சேர்த்து பார்ப்போம், நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தரப்பட்டுள்ள முறை தென் இலங்கை செய்முறை தான்.

இலங்கைத்தீவிலே, வடக்கு, கிழக்கிலே வினிகர் பாவிப்பது இல்லை அல்லது மிக, மிக அரிது. தென் இலங்கையில், குறிப்பாக தென் பகுதியில் பாவிப்பார்கள். கடுகினை, வினிகருடன் சேர்த்து அரைத்து பாவிப்பார்கள். 

அதே போலவே கொடுக்காய் புளி.... அவர்கள் மீன் குழம்புக்கு அதுவே பாவிப்பார்கள்.

மீன்குழம்பு வைக்கும்போது, பழப்புளி அரைவாசி, கொடுக்காய் புளி அரைவாசி என்று சேர்த்துப்பாருங்கள். நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2020 at 14:17, குமாரசாமி said:

கத்தரிக்காய் வெங்காய சம்பல்.

எனக்கு மிகவும் விருப்பமான சம்பல். . கத்திரிக்காயை (500gm) மெல்லிதாக நீட்டாக வெட்டி மஞ்சள் பூசி முறுகலாக பொரித்து எடுக்கவேணும். வெங்காயத்தயும் (200gm)  அப்படியே பொரித்து , பிறகு பச்சை மிளகாயை (150 gm) பொரித்து , மாசித்துடுகளையும் (நெத்தலியை (100gm)  கொதி தண்ணியில் கழுவி பொரித்து வைக்கவும். ஒரு சட்டியில்  தேங்காய் எண்ணெயில் ( 1 tablespoon) அரைத்த  இஞ்சி உள்ளி, அரைத்த கடுகு (2 Tablespoon), ரம்பை துண்டு , உப்பு,   மிளகு, வீணாகிரி( 4 Tablespoon) , சீனி  (1 Tablespoon) செத்தல் மிளகாய் துண்டுகள்( chili pieces 1 Tablespoon)  சேர்த்து  ஒரு நிமிடம் கொதிக்க வைத்து  பின்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து விரும்பினால்  சின்ன வெங்காயம், பச்சைமிளகாயையும் பச்சையாக கீறலாக வெட்டி போட்டு  சேர்க்கலாம். எல்லாமே கொஞ்சம் தான் சேர்க்கவேண்டும். மற்றது எல்லாவற்றயும் மெல்லிதாக வெட்ட வேணும். ஏலக்காய், கறுவா விரும்பினால் சேர்க்கலாம். பொறித்தவை எல்லாம் tissue வில் போடு ஒத்தி எடுக்கவேணும். தேங்காய் வினிகர் தான் நல்லம். spacer.pngspacer.png

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இங்கே தரப்பட்டுள்ள முறை தென் இலங்கை செய்முறை தான்.

இலங்கைத்தீவிலே, வடக்கு, கிழக்கிலே வினிகர் பாவிப்பது இல்லை அல்லது மிக, மிக அரிது. தென் இலங்கையில், குறிப்பாக தென் பகுதியில் பாவிப்பார்கள். கடுகினை, வினிகருடன் சேர்த்து அரைத்து பாவிப்பார்கள். 

அதே போலவே கொடுக்காய் புளி.... அவர்கள் மீன் குழம்புக்கு அதுவே பாவிப்பார்கள்.

மீன்குழம்பு வைக்கும்போது, பழப்புளி அரைவாசி, கொடுக்காய் புளி அரைவாசி என்று சேர்த்துப்பாருங்கள். நன்றாக இருக்கும்.

கொரக்காய் ( கொடும்புளி , Malabar Tamarind , Garcinia Cambogia) நன்றாக கொதித்தனியில் ஊறவைத்து கழுவி, பழப்புளி அரைக்கரவாசி சேர்த்து கொதிச்சு ஆறவைச்சு  பிரிட்ஜ் இல் வைத்து பாவிக்கலாம். மீன், இறைச்சி, பிஞ்சு பிலாக்காய்  சமைக்க நல்லா இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஓம் ஒண்டுக்கை ஒண்டுதான். 😎

🤣 குமாரசாமி அண்ணாவின் பகிடிகளை வாசிக்கவெண்டே சிலவேளை யாழ் வருவதுண்டு 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

அப்படியா நாதமுனி, அடுத்த முறை சேர்த்து பார்ப்போம், நன்றி

மற்றது, ப்போயில சுத்திக் கட்டி வையாதீங்க... தண்ணீ வெளில போக ஏலாம, அவியும்... சுட்ட மாதிரி வராது. கத்தரிக்காய் பால்கறி மாதிரி தானே இருக்கும்.

அப்படியே.... அவன் ரேயில போட்டா, நல்லா சுடுபட்டு, வாடி வரும்.... தண்ணியும் இராது.  இடையில அவணை திறந்து, மத்தப்பக்கம் திரும்பி போடுங்க..

தணலுக்க போட்ட பனங்கிழங்கு மாதிரி வரவேண்டும்.

ஆற முன்னர், இரண்டாக் கீறி... உள்ளானை வழிச்சு எடுத்து..... நீஙகள் சொன்ன பொருட்களுடன் தயிரும் சேருங்க. அந்தமாதிரி இருக்கும்.

இந்த செய்முறைக்கு பெயரே, சுட்ட கத்தரிக்காய் சம்பல்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

மற்றது, ப்போயில சுத்திக் கட்டி வையாதீங்க... தண்ணீ வெளில போக ஏலாம, அவியும்... சுட்ட மாதிரி வராது. கத்தரிக்காய் பால்கறி மாதிரி தானே இருக்கும்.

அப்படியே.... அவன் ரேயில போட்டா, நல்லா சுடுபட்டு, வாடி வரும்.... தண்ணியும் இராது.  இடையில அவணை திறந்து, மத்தப்பக்கம் திரும்பி போடுங்க..

தணலுக்க போட்ட பனங்கிழங்கு மாதிரி வரவேண்டும்.

ஆற முன்னர், இரண்டாக் கீறி... உள்ளானை வழிச்சு எடுத்து..... நீஙகள் சொன்ன பொருட்களுடன் தயிரும் சேருங்க. அந்தமாதிரி இருக்கும்.

இந்த செய்முறைக்கு பெயரே, சுட்ட கத்தரிக்காய் சம்பல்.

கத்தரிக்காய்க்கு மேலால எண்ணை பூசித்தானே Bake பண்ணுகிறது? அல்லது எண்ணையை spray பண்ணலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

நான் அதயெல்லா கொண்டு வந்து இணைக்க..... நாலுநாள் விட்டுப்போட்டு.... இருந்தாப்போல மூக்கு வேத்து... வந்து தூக்கிட்டினம்.... 

அவையள், அங்கயே போய் பார்த்து.... அட... அம்மணி... வாயைத்திறந்த.... அந்த மாதிரி செந்தமிழ் வருது எண்டு.... தளத்துக்கு மரியாதையை இல்லை எண்டு தூக்கிடினம்...

அதாலை... நாம... அங்காலப்பக்கமா போய் கதைப்பம்... அதுசரி... அவோவுக்கு மறுத்தான் கொடுக்கிற, மேலே இருந்து வெளிச்சம் தருரவர் பேர்ல இன்னோரு அக்கா... கொடுக்கிறா... கிளியல்... பார்த்தியாலே.

எனக்கெண்டா.... உந்த youtube சேனல் காசு பார்க்க பண்ற செட்டப் போல தான் தெரியுது.

வேலிக்கால் எட்டி நின்று என்ன இருவரும் குசுகுசுக்கின்றீர்கள் 🙉

7 hours ago, Nathamuni said:

மற்றது, ப்போயில சுத்திக் கட்டி வையாதீங்க... தண்ணீ வெளில போக ஏலாம, அவியும்... சுட்ட மாதிரி வராது. கத்தரிக்காய் பால்கறி மாதிரி தானே இருக்கும்.

அப்படியே.... அவன் ரேயில போட்டா, நல்லா சுடுபட்டு, வாடி வரும்.... தண்ணியும் இராது.  இடையில அவணை திறந்து, மத்தப்பக்கம் திரும்பி போடுங்க..

தணலுக்க போட்ட பனங்கிழங்கு மாதிரி வரவேண்டும்.

ஆற முன்னர், இரண்டாக் கீறி... உள்ளானை வழிச்சு எடுத்து..... நீஙகள் சொன்ன பொருட்களுடன் தயிரும் சேருங்க. அந்தமாதிரி இருக்கும்.

இந்த செய்முறைக்கு பெயரே, சுட்ட கத்தரிக்காய் சம்பல்.

நல்லது அவனில் போட்டு பார்ப்பம் அடுத்தமுறை 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 23/7/2020 at 00:45, Nathamuni said:

மற்றது, ப்போயில சுத்திக் கட்டி வையாதீங்க... தண்ணீ வெளில போக ஏலாம, அவியும்... சுட்ட மாதிரி வராது. கத்தரிக்காய் பால்கறி மாதிரி தானே இருக்கும்.

அப்படியே.... அவன் ரேயில போட்டா, நல்லா சுடுபட்டு, வாடி வரும்.... தண்ணியும் இராது.  இடையில அவணை திறந்து, மத்தப்பக்கம் திரும்பி போடுங்க..

தணலுக்க போட்ட பனங்கிழங்கு மாதிரி வரவேண்டும்.

ஆற முன்னர், இரண்டாக் கீறி... உள்ளானை வழிச்சு எடுத்து..... நீஙகள் சொன்ன பொருட்களுடன் தயிரும் சேருங்க. அந்தமாதிரி இருக்கும்.

இந்த செய்முறைக்கு பெயரே, சுட்ட கத்தரிக்காய் சம்பல்.

இன்று செய்தோம் அவனில் வைத்து, இலகுவாக இருந்திச்சு, நல்ல சுவை, நன்றி நாதம்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நல்லா இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

சுலபமான முறையில்....... பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது ...... இதனை இன்று எமது வீட்டில் செய்ய இருக்கின்றோம். பகிர்வுக்கு நன்றி குமாரசாமி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.