Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாணக்கியன் இராசமாணிக்கம் நாடாளுமன்ற அவையிலே மும்மொழிகளிலும் பேசுகிறார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் இராசமாணிக்கம் நாடாளுமன்ற அவையிலே மும்மொழிகளிலும் பேசுகிறார்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம்.... இப்படியான மும்மொழி உரையாற்றல்கள் இன்னும் வலு சேர்க்கும்.

இணைப்பிற்கு நன்றி தம்பி நுணாவில்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே தமிழ் தேசிய அரசியலுக்கு அடுத்த தலைமையாக இவர் வந்தால் நல்லாய் இருக்கும் என தோன்றுகிறது.

அற்புதமான காத்திரமான பேச்சு.

அரசியல் கைதிகள் விடுதலை, நியாயமான தீர்வு, ராணுவ பிரசன்ன அகற்றல் என்பவற்றையும் அவற்றிற்கான காரணத்தையும் வலியுறுத்தியது சிங்களத்தில் பேசிய பேச்சு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையும் கொஞ்சம் கேளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

உண்மையிலேயே தமிழ் தேசிய அரசியலுக்கு அடுத்த தலைமையாக இவர் வந்தால் நல்லாய் இருக்கும் என தோன்றுகிறது.

அற்புதமான காத்திரமான பேச்சு.

அரசியல் கைதிகள் விடுதலை, நியாயமான தீர்வு, ராணுவ பிரசன்ன அகற்றல் என்பவற்றையும் அவற்றிற்கான காரணத்தையும் வலியுறுத்தியது சிங்களத்தில் பேசிய பேச்சு.

தலைமைக்குப் போட்டி என்று கூறுவதற்கு ஆயத்தமானபோது உங்கள் கருத்து அச்சொட்டாக வந்து விழுந்திருக்கிறது. 👍

இராசமாணிக்கம் வளர வேண்டும். வாழ்த்துக்கள். 💐💐

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, குமாரசாமி said:

இதையும் கொஞ்சம் கேளுங்கள்.

ஆயுதம் இல்லாத அரசியல் போராட்டம் புதிய முகங்களுடன் புதிய பரிமாணங்களுடன் புதிய உத்திகளுடன் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கு புலம்பெயர் தமிழர் ஆதரவு வழங்க வேண்டும்.
கட்சி பேதங்கள் வேண்டாம்.
இன பேதங்கள் வேண்டாம்.
மத பேதங்கள் வேண்டாம்.
இயக்க பேதங்கள் வேண்டவே வேண்டாம்.
பிரதேச வேறுபாடுகள் வேண்டாம்.

உரிமைகளுக்காக போராடுவோம்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

இளையதலைமுறைக்கு வாழ்த்துகள்.  29வயதில் ... இளையோருக்கு இடம்கொடுத்து இனியேனும்  முதுமைகள் சிந்திக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

ஆயுதம் இல்லாத அரசியல் போராட்டம் புதிய முகங்களுடன் புதிய பரிமாணங்களுடன் புதிய உத்திகளுடன் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கு புலம்பெயர் தமிழர் ஆதரவு வழங்க வேண்டும்.
கட்சி பேதங்கள் வேண்டாம்.
இன பேதங்கள் வேண்டாம்.
மத பேதங்கள் வேண்டாம்.
இயக்க பேதங்கள் வேண்டவே வேண்டாம்.

உரிமைகளுக்காக போராடுவோம்.

பிரதேச வேறுபாடுகள் வேண்டாம் is missing

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Kapithan said:

பிரதேச வேறுபாடுகள் வேண்டாம் is missing

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. 👍🏽

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாடு ஒரு சட்டம் என்றால் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்க – சாணக்கியன்

R.Sanakkiyan-1.jpg?189db0&189db0

ஒரே நாடு ஒரே சட்டம் என்றால் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சபையில் வலியுறுத்தியுள்ளார்.

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின்போது இன்று (27) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“நான் நாடாளுமன்றத்தில் சிங்களத்தில் உரையாற்றுகின்றேன் என்பதற்காக என்னை விமர்சிக்கலாம். ஆனால் விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். விமர்சனங்களாலேயே நான் வளர்ச்சியடைகின்றேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கைப் பிரகடன உரையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற விடயத்தினைக் குறிப்பிட்டிருந்தார். எனவே, இந்த இடத்தில் ஒரு விடயத்தினைக் குறிப்பிட விரும்புகின்றேன். யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தார். அதேபோன்று றோயல் பார்க் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய கொலைக் குற்றவாளியும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

அப்படியாயின், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கையின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும். சிலர் எவ்வித குற்றச்சாட்டுக்களோ அல்லது விசாரணைகளோ இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இப்படியெல்லாம், தமிழ் மக்களுக்காக நான் பேசுகின்றேன் என்பதற்காக என்னை இனவாதி என எண்ணிவிட வேண்டாம். நான் ஒன்றும் இனவாதியில்லை. நான் கண்டியிலேயே கல்வி கற்றேன். எனக்கும் அதிகளவான சிங்கள நண்பர்கள் இருக்கின்றார்கள்.

இதேவேளை, இந்த நாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு வீழ்ச்சி என்று சொல்லப்படுகின்றது. ஆனால், எங்களுக்கு 10 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன.

உண்மையில் இந்த நாடாளுமன்றத்துக்கு நாம் வருவதற்கான நோக்கமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அடையவேண்டும் என்பதற்காகவே. எனவே, 10 உறுப்பினர்களாகவோ ஐந்து உறுப்பினர்களாகவோ இருந்தாலும் சரி எமக்கு அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவேண்டும்.

அந்தவகையில், சிலநேரம் இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் நாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவேண்டிய அவசியமே இருக்காது. மாகாண சபையின் ஊடாக எங்களது வேலைத் திட்டங்களை செய்யக்கூடியதாக இருக்கும்.

அந்தவகையில் அரசாங்கத்துக்கு ஆணித்தரமாக ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த நாட்டுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைத் தரவேண்டும்” – என்றார்.

https://newuthayan.com/ஒரு-நாடு-ஒரு-சட்டம்-என்றா/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

சாணக்கியன் இராசமாணிக்கம் நாடாளுமன்ற அவையிலே மும்மொழிகளிலும் பேசுகிறார்!

இணைப்புக்கு நன்றி நுணா.

மிகவும் உயரத்துக்கு போவார்.

பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நல்ல விடயம்.... இப்படியான மும்மொழி உரையாற்றல்கள் இன்னும் வலு சேர்க்கும்.

யாருக்கு? இவர் இந்தக்கடைசியில் நிலைத்து இருப்பார் என்றால்.... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, satan said:

யாருக்கு? இவர் இந்தக்கடைசியில் நிலைத்து இருப்பார் என்றால்.... 

தமிழின பிரச்சனைகளுக்கு....
நம்பிக்கைதான் வாழ்க்கை..

  • கருத்துக்கள உறவுகள்

இவனுகள் குடுக்கிற குடைச்சலில் ஆளை விட்டால் காணும் என்று ஓடுவார் அல்லது சிங்களவன் விலை கொடுத்து வாங்குவான். வடக்கில் அங்கஜன், கிழக்கில் சாணக்கியன்.    இதுதானே வழமை. 

11 hours ago, Kapithan said:

தலைமைக்குப் போட்டி என்று கூறுவதற்கு ஆயத்தமானபோது உங்கள் கருத்து அச்சொட்டாக வந்து விழுந்திருக்கிறது. 👍

இராசமாணிக்கம் வளர வேண்டும். வாழ்த்துக்கள். 💐💐

12 hours ago, goshan_che said:

உண்மையிலேயே தமிழ் தேசிய அரசியலுக்கு அடுத்த தலைமையாக இவர் வந்தால் நல்லாய் இருக்கும் என தோன்றுகிறது.

அற்புதமான காத்திரமான பேச்சு.

அரசியல் கைதிகள் விடுதலை, நியாயமான தீர்வு, ராணுவ பிரசன்ன அகற்றல் என்பவற்றையும் அவற்றிற்கான காரணத்தையும் வலியுறுத்தியது சிங்களத்தில் பேசிய பேச்சு.

இந்த இளம் அரசியல்வாதியின் பேச்சு சிங்கள அரசியல்வாதிகளுக்கு நேரடியாகவே போய் சேரும் ஒரு செய்தியாக இருக்கின்றது. மூன்று மொழியிலும் பயிட்சியம் இருப்பது இவரது வருங்கால அரசியலுக்கு ஒரு உந்துதலாக இருக்கும். அத்துடன் இவர் ராசமாணிக்கம் அவர்களின் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தபடியால் அரசியலிலும் அனுபவம் உள்ளவர். இவரது பேச்சின் மூலமாக சிங்கள அரசியல்வாதிகள் திருந்துவார்கள் எண்டால் நல்லதுதான். நான் அறிந்தபடி இவரது மனைவி ஒரு சிங்கள பெண்மணியாம்(சரியாக தெரியவில்லை). அவர் கண்டியில் படித்திருந்தாலும் , மனைவியின் மூலமாகவும் நல்ல சிங்களத்தை கற்றிருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

தலைமைக்குப் போட்டி என்று கூறுவதற்கு ஆயத்தமானபோது உங்கள் கருத்து அச்சொட்டாக வந்து விழுந்திருக்கிறது. 👍

இராசமாணிக்கம் வளர வேண்டும். வாழ்த்துக்கள். 💐💐

13 minutes ago, Robinson cruso said:

இந்த இளம் அரசியல்வாதியின் பேச்சு சிங்கள அரசியல்வாதிகளுக்கு நேரடியாகவே போய் சேரும் ஒரு செய்தியாக இருக்கின்றது. மூன்று மொழியிலும் பயிட்சியம் இருப்பது இவரது வருங்கால அரசியலுக்கு ஒரு உந்துதலாக இருக்கும். அத்துடன் இவர் ராசமாணிக்கம் அவர்களின் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தபடியால் அரசியலிலும் அனுபவம் உள்ளவர். இவரது பேச்சின் மூலமாக சிங்கள அரசியல்வாதிகள் திருந்துவார்கள் எண்டால் நல்லதுதான். நான் அறிந்தபடி இவரது மனைவி ஒரு சிங்கள பெண்மணியாம்(சரியாக தெரியவில்லை). அவர் கண்டியில் படித்திருந்தாலும் , மனைவியின் மூலமாகவும் நல்ல சிங்களத்தை கற்றிருக்கலாம். 

கதிர்காமர் படித்த அதே திரிதுவ கல்லூரி. ஆகவே தானாகவே சிங்களம் தெரிந்து இருக்கலாம்.

ராஜதுரைக்கு பின் ஒரு பெரும் ஆளுமை மட்டகளப்பில் இருந்து வரவில்லை. இப்போ வடக்கில் இருக்கிற தலைமைகளும் சோப்பிளாங்கிகள். எனவே இவரின் கைக்கு தமிழ் தேசிய அரசியல் தலைமை போனால் - பிரதேசவாத பேய்க்கும் கொஞ்சம் வீபூதி அடிக்கலாம்🤣

Just now, goshan_che said:

ராஜதுரை ஐயா பேச்சிலே ஒரு வல்லவர். இருந்தாலும் நேர்மையாக செயட்படடரா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. சிங்கள அரசில் சேர்ந்து அபிவிருத்தி அரசியல் செய்தவர். இப்போதிருக்கிற தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் எல்லாம் பெயருக்கே ஒழிய ஒரு பிரயோசனமும் கிடையாது. இருந்தாலும் புதியவர்கள் பிரவேசித்திருக்கிறார்கள், அவர்களுக்கும் சிறிது காலம் கொடுத்து அவதானிக்க வேண்டும். சாணக்கியனை இப்போதைக்கு கட்சியின் பேச்சாளராக நியமித்தால் நன்றாக இருக்கும். இருந்தாலும் அவரது செயட்பாடு எப்படி இருக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் எப்படி செயட்படுவார்கள் என்று ஒரேயடியாக முடிவு எடுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Robinson cruso said:

உண்மைதான். எதையும் காலம்தான் சொல்லும். பாட்டனார் நேர்மையானவர். எனக்கு தெரிந்த உறவினரும் அப்படியே.

நம்புவோம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Robinson cruso said:

ராஜதுரை ஐயா பேச்சிலே ஒரு வல்லவர். இருந்தாலும் நேர்மையாக செயட்படடரா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. சிங்கள அரசில் சேர்ந்து அபிவிருத்தி அரசியல் செய்தவர். இப்போதிருக்கிற தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் எல்லாம் பெயருக்கே ஒழிய ஒரு பிரயோசனமும் கிடையாது. இருந்தாலும் புதியவர்கள் பிரவேசித்திருக்கிறார்கள், அவர்களுக்கும் சிறிது காலம் கொடுத்து அவதானிக்க வேண்டும். சாணக்கியனை இப்போதைக்கு கட்சியின் பேச்சாளராக நியமித்தால் நன்றாக இருக்கும். இருந்தாலும் அவரது செயட்பாடு எப்படி இருக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் எப்படி செயட்படுவார்கள் என்று ஒரேயடியாக முடிவு எடுக்க முடியாது.

எல்லாரையும் ஒண்டரைக்கண்ணோடை பார்த்தால் கள்ளராய்த்தான் தெரிவினம் 😎

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Robinson cruso said:

சாணக்கியனை இப்போதைக்கு கட்சியின் பேச்சாளராக நியமித்தால் நன்றாக இருக்கும்.

பந்து வீச்சு தவறான, எதிர்பாராத  கோணத்தில் போகிறதே? ஏற்கெனவே யார் பற்றுவது என்கிற போட்டி....இழுபறி. லிஸ்ட்டில் இல்லாத ஒருவரை இழுத்து வருகிறீர்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.