Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கும் முயற்சியில் இலங்கை: விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கும் முயற்சியில் இலங்கை: விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும்

indo-lanka.png

13 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் இறங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரங்களைக் கையாளுவதற்காக, இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை நியமிக்க இந்தியா தயாராகி வருவதாக செய்திகள் கூறுகின்றன.

1987ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட அமைதி உடன்பாட்டுக்கு அமையவே, 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

இந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் 13 ஆவது திருத்தச்சட்டத்தையும் நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கவுள்ளதாக கூறிவருகிறது.

இதையடுத்தே, இலங்கை அரசாங்கத்துடன் 13 ஆவது திருத்தச் சட்ட விவகாரங்களை கையாளுவதற்காக, இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை நியமிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஏற்கனவே, சவுத் புளொக்கில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் கலந்துரையாடல்களை ஆரம்பித்திருப்பதாக, தேசய என்ற சிங்கள இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் முன்னர் பணியாற்றிய மூத்த இராஜதந்திரி ஒருவரே, விசேட தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்படுகிறது.

http://www.ilakku.org/13-ஆவது-திருத்தச்-சட்டம்-நீ/

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்கவோ அல்லது அழவோ 😂😂

புலியும் இல்லை TNA யும் இல்லை. யாரைக் கொண்டு இலங்கையை மிரட்டலாம் ? 🤔

பரந்தன் ராஜன் 🤥

😂😂😂

(திரும்பவும் சீனன் கையால குத்து விட்டிருக்கிறான். சேத விபரம் வெளியே கசிய விடப்படவில்லை 😂😂😂)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

இந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் 13 ஆவது திருத்தச்சட்டத்தையும் நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கவுள்ளதாக கூறிவருகிறது.

இதையடுத்தே, இலங்கை அரசாங்கத்துடன் 13 ஆவது திருத்தச் சட்ட விவகாரங்களை கையாளுவதற்காக, இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை நியமிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது உண்மையாயின், கிந்திய ராஜதந்தி / உளவு துறைகள் மோடியை காறி உமிழ்ந்து துப்பியது ஆகும்.

1 hour ago, Kapithan said:

(திரும்பவும் சீனன் கையால குத்து விட்டிருக்கிறான். சேத விபரம் வெளியே கசிய விடப்படவில்லை 

இந்த சீன படை நகர்வு / புகுதல் முன் கூட்டியே கிந்தியா அறிந்தபடியால் (அமெரிக்க ராணுவ உளவு தகவல் என்றே நம்பப்படுகிறது) , தடுக்கப்பட்டதுடன் சீன படை இந்த முறை கிந்திய படையால் அமுக்கப்பட்டு உள்ளது, சீன முகாமையும் ஹிந்தியை பிடித்து உள்ளது என்பது நம்பும் படியாக உள்ளது.

 சீன இந்த அவ்வப்போதான பட நகர்வை செய்வது சிங்களத்துக்காகவே என்ற ஓர் கருதும் உலவுகிறது.

காரணம், கொழும்பு துறைமுகத்தை சிங்களம் சீனாவின் தூண்டுதலால் கிடப்பில் போட்டதை, கிந்தியா மிகவும் வன்மையான மொழியில் சிங்களத்தை எச்சரித்த போதே சீன தொடங்கியது என்பதும்,

அதை தொடர்ந்து ஹிந்தியை நிக்கோகோபார் துறைமுகப் பற்றி வெளிப்படையாக அறிவித்ததும்,

இப்பொது இந்த 13 நீக்கம் பற்றியா முயற்சிகள் சிங்களத்தால் கசிய விடப்பட்ட போது, சீன 2ம் தரம் முயன்ரத்தில் குட்டு வாங்கி இருக்கிறது.       

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

இது உண்மையாயின், கிந்திய ராஜதந்தி / உளவு துறைகள் மோடியை காறி உமிழ்ந்து துப்பியது ஆகும்.

இந்த சீன படை நகர்வு / புகுதல் முன் கூட்டியே கிந்தியா அறிந்தபடியால் (அமெரிக்க ராணுவ உளவு தகவல் என்றே நம்பப்படுகிறது) , தடுக்கப்பட்டதுடன் சீன படை இந்த முறை கிந்திய படையால் அமுக்கப்பட்டு உள்ளது, சீன முகாமையும் ஹிந்தியை பிடித்து உள்ளது என்பது நம்பும் படியாக உள்ளது.

 சீன இந்த அவ்வப்போதான பட நகர்வை செய்வது சிங்களத்துக்காகவே என்ற ஓர் கருதும் உலவுகிறது.

காரணம், கொழும்பு துறைமுகத்தை சிங்களம் சீனாவின் தூண்டுதலால் கிடப்பில் போட்டதை, கிந்தியா மிகவும் வன்மையான மொழியில் சிங்களத்தை எச்சரித்த போதே சீன தொடங்கியது என்பதும்,

அதை தொடர்ந்து ஹிந்தியை நிக்கோகோபார் துறைமுகப் பற்றி வெளிப்படையாக அறிவித்ததும்,

இப்பொது இந்த 13 நீக்கம் பற்றியா முயற்சிகள் சிங்களத்தால் கசிய விடப்பட்ட போது, சீன 2ம் தரம் முயன்ரத்தில் குட்டு வாங்கி இருக்கிறது.       

குத்து வாங்கவில்லை. குத்து விட்டிருக்கிறது என. . நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. படை நகர்வு / ஊடுருவல் இரவில் நடைபெற்றிருக்கிறது. இதன்போது கைகலப்பு ஏற்பட்டுள்ளது. 😜😜

சேத விபரம் வெளியிடப்படவில்லை, இந்தியாவால் 😜😜

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

குத்து வாங்கவில்லை. குத்து விட்டிருக்கிறது

சீன குத்து விட முயன்றது உண்மை. ஆனால், கிந்தியா முறியடித்துள்ளது, பொறி வைத்து என்பது நம்பும்படியாக உள்ளது. 

ஏனெனில், சீனாவே, ஹிந்தியை தமது பகுதிக்குள் வந்துவிட்டது என்பதை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டு உள்ளது.

https://www.telegraph.co.uk/news/2020/08/31/india-captures-chinese-camp-disputed-ladakh-violence-erupts/

https://www.telegraph.co.uk/news/2020/08/31/india-thwarts-chinas-military-movements-disputed-border/

"The Chinese Foreign Ministry denied its troops crossed the disputed Line of Actual Control, which separates the two superpowers, and accused the Indian Army of occupying its territory."

  • கருத்துக்கள உறவுகள்

13 இ நீக்குவது சிங்களத்தின் நீண்ட காலா திட்டமாயினும், குறிப்பாக பக்ஸாக்களுக்கு உடனடியாக இரு குறிக்கோள்கள், அவர்களின் அரசியல், பொருளாதார லாபங்கள் மற்றும் நலன்களின் அடிப்படையில்.
  
ராஜபக்சேக்கள், சிரந்தி பண்டாரநாயக்கே முறுகல் தொடங்கியது இந்த 13 ஆல். பக்சேக்கள் புனித மண் (scared land) எனும் சட்டத்தை கொண்டு வர முயன்றதில், சிரந்தி 13 ஐ காட்டி, காணி அதிகாரம் மாகாண சபைகளுக்கு பரவல் செய்யப்பட்டுள்ளதால், புனித மண் என்ற சட்டம், அது தனியார் கனிகளையும் சரசு சுவீகரிப்பதற்கு வழிசெய்யும் சட்டம் என்பதால், சிரந்தி சட்ட அதிகாரம் அளிக்க மறுத்தார்.     

சட்டத்தின் படி அது சரியாகும் என்பதை பல சர்வதேச சட்ட வல்லுனர்களும் பின்பு உறுதிப்படுத்தினர், ஆனால், பக்சேக்கள் தம் நினைத்தை செய்ய விடத சிரந்தியை impeach செய்தனர்.  
        
இப்பொது பக்சேக்கள் தொடக்கி இருக்கும் மரபுடைமையை பாதுகாப்பது எனும் பெயரில், கிழக்கில், ஏன் வடக்கிலும்  தனியார் காணிகளை சுவீகரிப்பதற்கு இருக்கும் சட்ட தடையை நீக்குவது ஆகும் இந்த 13 நீக்கம்.

இது இப்பொது சீனாவுக்கும் தேவைப்படுகிறது, ஏனெனில், வடக்கு கிழக்கில் சீனா வின் திட்டங்களுக்கும் மற்றும் கடனுக்கு அறுதியாக பாரிய நிலப்பகுகளை சொறி சிங்களம் சீனவுக்கு வழங்குவதத்திற்கு வலை சமைப்தற்கும்.   
   
அமைச்சரவை அந்தஸ்துடன் இந்தியாவுக்கான தூதுவராக ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். அவருக்கு 13 வது திருத்தும் தொடர்பாக முழு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. அதேவேளை , இலங்கையின் விசேட தூதரக சிவசங்கர் மேனனை நியமித்தால் இலங்கையின் திடடம் சுலபமாக முடிவுக்கு வரும்.

மாகாண சபையினால் ஒரு பிரயோசனமும் இல்லை என்றும் , ஒரு பியோனைக்கூட நியமிக்க முடியாது என்றும் எமது தமிழ் அரசியல்வாதிகளே கூறும் பொழுது , அதனை அகற்றுவதினால் பெரிய பிரச்சினை ஏதும் இருக்குமென்று நினைக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Robinson cruso said:

12 ஆல் தமிழர்கட்குப் பிரயோசனம் ஏதும் இல்லை என்பது ஒரு பேச்சுக்கு ஏற்றுக்கொண்டாலும், இந்தியாவுக்கு....

😂😂😂😂

பரந்தன் இராசனையும் சச்சியரையும் நம்பவேண்டியதுதான் வேறு வழி இல்லை

😜😜

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்களத்தின் கிந்தியவை நாடி பிடித்து எது வரை போகலாம் என்ற வெள்ளோட்டம் போன்ற தோற்றமாக  இருக்கிறது.

இதை கிந்தியா ஏலவே அறிந்தும் உள்ளதால், அண்மைய விக்கியின் உரையே சிங்களத்துக்கு பதில் இருக்குமோ என்று எண்ணவும் தோன்றுகிறது.

விக்கியின் உரையின் பின்னால், விக்கியும் உணராத  vested interest எதோ ஒன்று மறைமுகமாக தொழிற்படுகிறது என்று பரவலாக நம்பப்படுவதையும் புறக்கணிக்க முடியாதுள்ளது.   
 
Edited by Kadancha
amend

On 1/9/2020 at 09:53, Kapithan said:

12 ஆல் தமிழர்கட்குப் பிரயோசனம் ஏதும் இல்லை என்பது ஒரு பேச்சுக்கு ஏற்றுக்கொண்டாலும், இந்தியாவுக்கு....

😂😂😂😂

பரந்தன் இராசனையும் சச்சியரையும் நம்பவேண்டியதுதான் வேறு வழி இல்லை

😜😜

இந்தியாவுக்குத்தான் சீனாக்காரன் இலங்கையில் ஆப்பு வச்சிடுடான்தானே. இனி அதைப்பற்றி கவலைப்பட்டு என்ன பிரயோசனம். அந்தமான் தீவில் போய் துறைமுகத்தை காட்டுவதுதான் ஒரே வழி. வெகு விரைவில் திருகோணமலை என்னை குதங்களையும் எடுக்கப்போகிறார்கள். அதாவது பகுதியளவில். இன்னும் ஒரு 20 வருடங்களுக்குள் அவர்களது குத்தகையும் முடிவுக்கு வந்து விடும். சீனாக்காரன் அப்படி இல்லை. அம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருடத்துக்கு எடுத்திருக்கிறன். இப்படி நிறைய இருக்கின்றது.

யார் அண்ணே பரந்தன் ராசன்? சச்சி எண்டது நம்மட சச்சிதானந்தமே? பாவம் மனுஷன் தேர்தலுக்கு பிறகு சிவனே எண்டு கிடக்குது. அந்த மனுஷனை ஏன் குழப்புகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

பரந்தன் இராசனைத் தெரியாதோ ? அட இவன் சுந்தரியக்காவின்ர பேரன் இராசன் ? இவனத் தெரியாதோ ? இவன்தான் இப்ப போராட்டத்துக்கு தலமைதாங்க இந்தியன்ர றோ நியமிச்சிருக்கிற தலீவர். 

😤😤(காலக் கொடுமை சரவணா.. காலக் கொடுமை 😪😤)

  • கருத்துக்கள உறவுகள்

போனமுறை இந்தியா இராணுவத்தோட உள்ளிடைக்குள்ள, அடிபட்டு திருத்தி விட, சிங்களத்துக்கு, புலி ஆவது இருந்திச்சு.

திருப்பியும் வந்தா, சிங்களம், புலிகளை நினைச்சு அழும்..

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு திரியில் இதை பற்றி நான் எழுதியது கீழே.

திடீரென்று ஏற்பட்ட மலையாள ஆகிரமிப்பால் - விடயம் திசை திரும்பிப்போய்ட்டு.

இந்தியா, சீனா என தலையை போட்டு குழப்பாமல், ஒரு நாடு இரு தேசம், சர்வஜன வாக்கெடுப்பு எல்லாவற்றையும் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, உலக தமிழினமே ஓரணியில் வந்து 13ஐ ஆவது தக்க வைக்க வேண்டிய நேரம் இது.

இந்தியாவை என்னை விட வெறுப்பவர்கள் இந்த உலகில் இருக்க முடியாது -ஆனா இலங்கையில் இருந்து இந்தியாவின் பூரண அகற்றல் = இலங்கை பூரணமாக சிங்கள மயமாதல்.

இதை விளங்கினால் எதிரிக்கு எதிரி நண்பன் என்பதும் விளங்கும்.

———————

எனது பார்வை

1. இலங்கை இந்தியாவை முற்றாக பகைத்து சீனாவிடம் போனாலும் உடனடியாக இந்தியா படைகளை அனுப்பி வடக்கு-கிழக்கில் ஒரு தமிழர் நாட்டை நிறுவுமா என்பது சந்தேகத்துக்கு இடமானது. ஏன்? மாலைதீவு கிட்டதட்ட இந்தியாவின் கையை நழுவி போயும், இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் இருந்தும் இந்தியா களத்தில் நேரடியாக இறங்கவில்லை. மாறாக முயன்று ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தியது. ஆகவே இப்படி ஒரு வழியை முயற்சித்து அதுவும் முடியாமல் போனால் பின்னர் இறங்கலாம். ஆனால் அப்படி இறங்குவதும் சுலபமல்ல. 1987 உடன்படிக்கை இந்தியாவை உள்ளே வர வழி செய்தாலும் -நாட்டை பிரிப்போம் என்பது இந்தியா இலங்கை மீது வைத்துள்ள பிரம்மாஸ்திரம். இதை ஒரு தடவைதான் பாவிக்க முடியும். அதன் பின் இலங்கை நுரைச்சோலையில் ஒரு சீன முகாம் அமைய, ரேடார் பூட்ட இடம் கொடுத்தாலும் - படை எடுப்பை தவிர வேறு வழியில் இலங்கையை கட்டுப்படுத்த முடியாது. படை எடுத்தால் - சீன உதவியுடன் நிச்சயம் சிங்கள கெரில்லா படைகள் இந்தியாவுக்கு இன்னொரு வியட்நாமை கொடுக்கும். வெளி உதவி இல்லாதபோதே புலிகளை இந்தியாவால் வெல்ல முடியவில்லை. சீன உதவியுடன் சிறிலங்கா படைகளின் ஆழ் ஊடுருவும் படைகளால் வழி நடத்தபடும் கெரில்லா தாக்குதல்கள் இந்திய ராணுவ பலத்தின் 4/10 பங்கை இலங்கையில் கட்டிப்போடும். அப்புறம் எல்லையில் பாகிஸ்தான், சீனா, மட்டும் அல்ல நேபாளமும், பங்களதேசும், பூட்டானும் கூட வாலாட்டப்பாக்கும்.

2. தமிழர்கள் சீனாவுடன் சேர்வோம் என இந்தியாவை மிரட்டலாமா? தமிழர்களை சீனா ஒரு தனி தரப்பாகவே கருதுவதில்லை. இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையானது ஒரு தனி உறவு. அடிகடி யூஎஸ்-யூகே சொல்வார்களே special relationship -அப்படி. இந்தியாவின் அழுத்தம் இலங்கைக்கு இருந்தாலும், அதை இலங்கையுடன் சேர்ந்து வெட்டி ஆடி இலங்கையை தம்முடன் வைத்திருப்பதே சீனாவின் கொள்கை. எனவே சீனாவுடன் நாம் சேர்ந்து இலங்கையை வெட்டி ஆட, சீனாவும் தயாரில்லை. இலங்கையும் விடாது, இந்தியாவும் விடாது. சீனாவுக்கு இலங்கையை பகைத்து எம்மை தக்க வைக்க ஒரு நிர்பந்தமும் இல்லை.

3. நாதம்ஸ் சொன்ன மாதிரி - இந்தியாவை புறம்தள்ளி - இலங்கையுடன் சேர்ந்து நாம் சீனாவிடம் போகலாமா? போகலாம் ஆனா இது குடத்தோடு கோவித்து கொண்டு எதையோ கழுவாமல் போவதை போன்ற செயல். நாம் சகல உரிமை, சலுகை, இன அடையாளங்களையும் இழந்து, மாகாண சபையையும் இழந்து, மொழி உரிமையை இழந்து, பேரினவாததின் கீழ் சதா-அடிமைகளா (eternal slaves) வாழ சம்மதம் என்றால் - இதை செய்யலாம்.

4. தனிநாடு இந்தியா பெற்றே தராது, சீனா எம்மை தனிதரப்பாக ஏற்கவே மாட்டாது, இலங்கையுடன் நிபந்தனையின்றி இன்றி வாழ்வது தற்கொலைக்கு ஒப்பானது அப்போ எதுதான் வழி?

5. 13. இதைதான் முன்பு பலர் சொன்னார்கள். அர்ஜூன் போன்றவர்கள் இதே யாழில் எழுதினார்கள். இலங்கையில், ஆயுத பலத்தால் நம்மால் ஒரு நாட்டை நிறுவ முடியாவிடின் ( முடியாது என்பது இப்போ நிறுவப்பட்டு விட்டது) நாம் பெறகூடிய ஆகக் கூடிய தீர்வு 13. அதை பெற்று, பின் இலங்கை ஒரு மனித விழுமியம் மிக்க நாடாக முன்னேறும் போது நாம் சமஸ்டி நோக்கி நகர முடியும்.

ஆனால் இந்த 13 ஐ தக்கவைக்கவே, இப்போ சிங்கி அடிக்க வேண்டி இருக்கிறது. காணி, பொலீஸ் அதிகாரம் இல்லாமலே.

6. இப்போ செய்ய வேண்டியது என்ன? புலம்பெயர், தமிழக (திராவிட கட்சி+சீமான்), இலங்கை கட்சிகள் (3 தமிழ் தேசிய கட்சிகள்) - ஒரே குரலில் 13ஐ முழுமையாக அமல் படுத்த கோரி இந்தியாவை சகல முறைகளிலும் அழுத்த வேண்டும். இது மட்டுமே தமிழர் இப்போதைக்கு செய்ய கூடியது - தொடர்ந்து இலங்கையின் நகர்வுகளை வைத்து காய் நகர்தவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இவை நான் வாய் வழியாக கேள்விப்படுபவை. இவை நான் வாய் வழியாக கேள்விப்படுபவை. வேறு திரியிலும் குறிப்பு உள்ளது. 

1) சிங்களம் பின்காதாவால் வேலை பார்திருக்கிறது.

2) அண்மையில், Pinto (கோத்தாவின் ஆலோசகர்) இன்  Pathfinder (அரசு சாரா ??) நிறுவனமும், விவேகானந்த சிந்தனை தேக்க அமைப்பும் (தாபகர் அஜித் டோவல், மோடியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்), இருபக்கத்திலும் உள்ள இனவாதிகளையும் சேர்த்து தெற்காசிய  பிராந்திய பூகோள அரசியல் எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலாய் நடத்தியதில் இந்த விடயம் (13) மறைக்குகமாக   கதைக்கப்பட்டது விடயம் அறிந்தோருக்கு தெரியும்.

3) அது சிங்களத்தின் எண்ணவோட்டத்தையயும் நாடி பிடித்து அறியும்  நிகழ்வு என்று சிங்களம் யோசிக்காமல் தானாகவே முன்வந்து சொல்லி இருக்கிறது.

4) விக்கியின் வாயிலாக பதில்  வந்து இருக்கிறது என்றே பரவாலாக  நம்பப்படுகிறது. அதற்காக விக்கி ஆடுபவர் அல்ல. விக்கி தான் சொன்னதை முன்பும் சொல்லி உள்ளார். நேரமும், இடமும் பொருந்தி வந்துள்ளது விக்கிக்கும், சொல்லப்பட வேண்டிய தேவை உள்ளவர்களுக்கும்.   

5) ஒன்று, விக்கி அவர்களின் உரைக்கும், கருத்துக்கும் பதில் சொல்ல வேண்டியவர்கள் மௌனமாக உள்ளனர், பக்ஸக்கள் மற்றும் அதன் குழாம், யானையும் அதன் குழாமும், மிக முக்கியமாக சந்திரிகா மற்றும் மங்கள அணி, முஸ்லிம்களின் முக்கிய தலைமைகள்.

6) விக்கி அவர்களின் உரைக்கு, விளிம்பில் உள்ள வால்கள், தெரு நாய்கள் கூட்டத்தில்  வெடியை போட்டால் கூச்சலிட்டு, அல்லோலகல்லப்பட்டு,  ஓடிச்சென்று விளிம்பில் நின்று,  அங்கலாய்த்து, செய்வதறியாமலும், செய்வதின் விளைவு தெரியாமலும் குரைப்பது போல  துள்ளிக் குதிக்கின்றன.

7) ஆனால் , 13க்கு குழந்தையும் பதில்  சொல்கிறது. பக்சக்களின் வடக்கு முகவரும் பதில் சொல்கிறார்.

இன்னுமொன்று, இதை நான் 2-3 நாட்களுக்கு முன் அறிந்த பொது, விக்கி அவர்கள் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று வெளிப்படையாக சொல்லுவார் என்ற எதிவு கூறலும் இருந்தது. அதை விக்கியும் பேட்டியில் கூறி உள்ளார்.  ஆனால் இவை எல்லாம் விக்கியின் உறுதிப்பாடான நிலைப்பாடு என்பது வெளிப்படையானது. 
 
Edited by Kadancha
add info

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

இன்னொரு திரியில் இதை பற்றி நான் எழுதியது கீழே.

திடீரென்று ஏற்பட்ட மலையாள ஆகிரமிப்பால் - விடயம் திசை திரும்பிப்போய்ட்டு.

இந்தியா, சீனா என தலையை போட்டு குழப்பாமல், ஒரு நாடு இரு தேசம், சர்வஜன வாக்கெடுப்பு எல்லாவற்றையும் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, உலக தமிழினமே ஓரணியில் வந்து 13ஐ ஆவது தக்க வைக்க வேண்டிய நேரம் இது.

இந்தியாவை என்னை விட வெறுப்பவர்கள் இந்த உலகில் இருக்க முடியாது -ஆனா இலங்கையில் இருந்து இந்தியாவின் பூரண அகற்றல் = இலங்கை பூரணமாக சிங்கள மயமாதல்.

இதை விளங்கினால் எதிரிக்கு எதிரி நண்பன் என்பதும் விளங்கும்.

———————

எனது பார்வை

1. இலங்கை இந்தியாவை முற்றாக பகைத்து சீனாவிடம் போனாலும் உடனடியாக இந்தியா படைகளை அனுப்பி வடக்கு-கிழக்கில் ஒரு தமிழர் நாட்டை நிறுவுமா என்பது சந்தேகத்துக்கு இடமானது. ஏன்? மாலைதீவு கிட்டதட்ட இந்தியாவின் கையை நழுவி போயும், இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் இருந்தும் இந்தியா களத்தில் நேரடியாக இறங்கவில்லை. மாறாக முயன்று ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தியது. ஆகவே இப்படி ஒரு வழியை முயற்சித்து அதுவும் முடியாமல் போனால் பின்னர் இறங்கலாம். ஆனால் அப்படி இறங்குவதும் சுலபமல்ல. 1987 உடன்படிக்கை இந்தியாவை உள்ளே வர வழி செய்தாலும் -நாட்டை பிரிப்போம் என்பது இந்தியா இலங்கை மீது வைத்துள்ள பிரம்மாஸ்திரம். இதை ஒரு தடவைதான் பாவிக்க முடியும். அதன் பின் இலங்கை நுரைச்சோலையில் ஒரு சீன முகாம் அமைய, ரேடார் பூட்ட இடம் கொடுத்தாலும் - படை எடுப்பை தவிர வேறு வழியில் இலங்கையை கட்டுப்படுத்த முடியாது. படை எடுத்தால் - சீன உதவியுடன் நிச்சயம் சிங்கள கெரில்லா படைகள் இந்தியாவுக்கு இன்னொரு வியட்நாமை கொடுக்கும். வெளி உதவி இல்லாதபோதே புலிகளை இந்தியாவால் வெல்ல முடியவில்லை. சீன உதவியுடன் சிறிலங்கா படைகளின் ஆழ் ஊடுருவும் படைகளால் வழி நடத்தபடும் கெரில்லா தாக்குதல்கள் இந்திய ராணுவ பலத்தின் 4/10 பங்கை இலங்கையில் கட்டிப்போடும். அப்புறம் எல்லையில் பாகிஸ்தான், சீனா, மட்டும் அல்ல நேபாளமும், பங்களதேசும், பூட்டானும் கூட வாலாட்டப்பாக்கும்.

2. தமிழர்கள் சீனாவுடன் சேர்வோம் என இந்தியாவை மிரட்டலாமா? தமிழர்களை சீனா ஒரு தனி தரப்பாகவே கருதுவதில்லை. இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையானது ஒரு தனி உறவு. அடிகடி யூஎஸ்-யூகே சொல்வார்களே special relationship -அப்படி. இந்தியாவின் அழுத்தம் இலங்கைக்கு இருந்தாலும், அதை இலங்கையுடன் சேர்ந்து வெட்டி ஆடி இலங்கையை தம்முடன் வைத்திருப்பதே சீனாவின் கொள்கை. எனவே சீனாவுடன் நாம் சேர்ந்து இலங்கையை வெட்டி ஆட, சீனாவும் தயாரில்லை. இலங்கையும் விடாது, இந்தியாவும் விடாது. சீனாவுக்கு இலங்கையை பகைத்து எம்மை தக்க வைக்க ஒரு நிர்பந்தமும் இல்லை.

3. நாதம்ஸ் சொன்ன மாதிரி - இந்தியாவை புறம்தள்ளி - இலங்கையுடன் சேர்ந்து நாம் சீனாவிடம் போகலாமா? போகலாம் ஆனா இது குடத்தோடு கோவித்து கொண்டு எதையோ கழுவாமல் போவதை போன்ற செயல். நாம் சகல உரிமை, சலுகை, இன அடையாளங்களையும் இழந்து, மாகாண சபையையும் இழந்து, மொழி உரிமையை இழந்து, பேரினவாததின் கீழ் சதா-அடிமைகளா (eternal slaves) வாழ சம்மதம் என்றால் - இதை செய்யலாம்.

4. தனிநாடு இந்தியா பெற்றே தராது, சீனா எம்மை தனிதரப்பாக ஏற்கவே மாட்டாது, இலங்கையுடன் நிபந்தனையின்றி இன்றி வாழ்வது தற்கொலைக்கு ஒப்பானது அப்போ எதுதான் வழி?

5. 13. இதைதான் முன்பு பலர் சொன்னார்கள். அர்ஜூன் போன்றவர்கள் இதே யாழில் எழுதினார்கள். இலங்கையில், ஆயுத பலத்தால் நம்மால் ஒரு நாட்டை நிறுவ முடியாவிடின் ( முடியாது என்பது இப்போ நிறுவப்பட்டு விட்டது) நாம் பெறகூடிய ஆகக் கூடிய தீர்வு 13. அதை பெற்று, பின் இலங்கை ஒரு மனித விழுமியம் மிக்க நாடாக முன்னேறும் போது நாம் சமஸ்டி நோக்கி நகர முடியும்.

ஆனால் இந்த 13 ஐ தக்கவைக்கவே, இப்போ சிங்கி அடிக்க வேண்டி இருக்கிறது. காணி, பொலீஸ் அதிகாரம் இல்லாமலே.

6. இப்போ செய்ய வேண்டியது என்ன? புலம்பெயர், தமிழக (திராவிட கட்சி+சீமான்), இலங்கை கட்சிகள் (3 தமிழ் தேசிய கட்சிகள்) - ஒரே குரலில் 13ஐ முழுமையாக அமல் படுத்த கோரி இந்தியாவை சகல முறைகளிலும் அழுத்த வேண்டும். இது மட்டுமே தமிழர் இப்போதைக்கு செய்ய கூடியது - தொடர்ந்து இலங்கையின் நகர்வுகளை வைத்து காய் நகர்தவேண்டும்

எனது, இரண்டு பென்ஸ்....

சுயநிர்ணய உரிமை தேர்தல் கோரிக்கை....

காரணம சிம்பிள்.

கோசன், கைமாத்தா இருபது பவுண்ஸ் வாங்கிப் போட்டு மறந்து போனார்.

நானும், தருவார், தருவார் எண்டால், ஆள் அசருற மாதிரி தெரியல்ல.... சின்னக்காசு தான் எண்டோ, சின்னப்பயல் எண்டு நிணைத்திருக்கலாம்....

காசு வரோணும் எண்டா, நாலுபேரோட அவர் நிக்கேக்க.... கோசண்ண.....மறந்திட்டியல் போலை கிடக்கு.... அந்த நூறு பவுண்ஸ் காசை வரக்காட்டுவியளே....

என்னது, நூறா? அது இருபது... இந்தா பிடி இருபதை.... நாளைக்கு இருநூறு எண்டுவாய்.... மறதி பிடிச்சனி...

கொண்டோடு... உன்ற சகவாசமே வேணாம்...

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

ஓம் உது கோஷன் போல மானமுள்ள ஆக்களுக்கு வேர்க் அவுட் ஆகும்.

நீங்கள் டீல் பண்ணுறது சிங்கள பேரினவாதத்தோட - நீங்கள் 100 என்ன 100K கடன் எண்டு சொன்னாலும், தன் நண்பர்களிடம் - இவன் ஒரு லூசன் எல்லாரிடமும் இப்படித்தான் கேட்பான் என சொல்லிவிட்டு தன்ர சோலியப்பாக்கும் ஆள் 😂

நமது ஆயுதம் என்ன என்பதை நமது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

1987 ஆம் ஆண்டின் ஒப்பந்த்தத்தினை அப்படியே அமுல்ப்படுத்தவென்று இந்தியாவினால் இப்போது கோரமுடியுமா? அதற்கான தேவை அதற்கு இருக்கிறதா? போலீஸும் காணி அதிகாரமும் இல்லாத இந்த இணைந்த மாகாணங்களின் அமைப்பை சிங்களம் தருமென்று நினைக்கிறீர்களா? இப்போது இருப்பதுகூட 13 ஆம் திருத்த சட்டம் தானே? இது இருந்தும் என்ன பெரிதாக தமிழருக்குக் கிடைத்திருக்கிறதென்று நினைக்கிறீர்கள்?

இதே 13 ஆம் சட்டத் திருத்தம், போலீஸ், காணி அதிகாரத்தோடு, இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களாக தருமாறு இந்தியா வற்புருத்த வேண்டும். அதுவே எமக்கு இப்போதைக்கு உகந்த தீர்வாக அமையும் என்பது எனது எண்ணம். இப்போதைக்கு இந்தியாவினாலன்றி வேறு வழியில் தீர்வு வரப்போவதில்லை. அந்த நிலைக்கு எம்மைத் தள்ளிக்கொண்டுபோய் விட்டதும் இந்தியாதான். காங்கிரஸ் தோற்றுப்போய், ப ஜ க வந்திருக்கிறது, சிலவேளை காட்சிகள் மாறலாம்.  பார்க்கலாம். 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்ததில்  இருந்து வார்ந்து புரிந்தவற்றை மற்றும் அறிந்தவற்றை  சொல்கிறேன். 

சரத் வீரசேகரா கோத்தாவின் உறவினர்.

சரத் வீரசேகர சொல்வது, கோத்தாவின் சிந்தனையை பிரதிபலிப்பது. 

தயவு செய்து  விளங்கவும், இது என்னிடம் சொன்னவர் அறிந்து, அவர்களால் வேறு இடத்தில் இருந்தும்  கேள்விப்பட்டு, பலசந்தர்பங்களில் உணர்ந்து, அவர் தாமாகவே அடைந்த முடிவு.    

ஏனெனில், அறிந்ததில்  இருந்து வார்ந்து புரிந்தவற்றை மற்றும் அறிந்தவற்றை சொல்ல வர, வேறு திரியில், ஏதோ modi க்கு பக்கத்தில் நின்று நான் குறிப்பெடுத்து  13 அமுலாகும் என்று சொல்லியதாக விளக்கம் கொடுக்கின்றனர். இத்தனைக்கும், நான் சொல்லியது, கிந்தியா காலவரையறை வெளிப்படையாக அறிவிக்க இல்லை என்றால், அது கருத்தில் எடுக்கப்பட முடியாது என்று. 

முன்பு சொன்னது போலவே,  20, 13 ஐ தற்கலிகமாக முடக்கி  வைக்கும், புதிய யாப்பு கொண்டுவரும் நிலை வரும் வரைக்கும், அது சாத்தியம் என்றால். 

ஏனெனில், 20, 1978 ஐ விட தன்னிகரற்ற அறுதி அதிபர் ஆட்சி அரசை உருவாக்கும் என்பது சட்ட வல்லுனர் சொல்வது. 20 வந்தால் பிரதமர் வெறும் கெளரவ பதவி ஆகி விடும்.

மற்றது, 13ஐ பற்றி கிந்தியாவில் இரு முகாம்கள் (பிரிவுகள்) உருவாகி இருக்கிறது. புரிந்தவரையில், ஒன்று ராஜதந்திரா மட்டத்தில், மற்றது பிஜேபி கட்சி மட்டத்தில். 

மற்றது, 13ஐ பற்றி கிந்தியாவில் இரு முகாம்கள் (பிரிவுகள்) உருவாகி இருக்கிறது. புரிந்தவரையில், ஒன்று ராஜதந்திரா மட்டத்தில், மற்றது பிஜேபி கட்சி மட்டத்தில். 

கிந்தியவை பொறுத்தவரை, நிலை 1987 ஐ ஒத்தது. கதாநாயகளே வேறுபாடு புலிகள் இன்றி. 

கிந்தியா, சீனவை வெளியேற்றுவது என்ற முனைப்பில், சிங்களத்தை அழுத்துவதற்கான 13 என்பதை பகடையாக்க / பேரமாக்க சந்தர்ப்பம்  இருக்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றி குணா.

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-09-14-22-50-49-396-org-m

Screenshot-2020-09-14-22-51-39-383-org-m

இவ்வளவு பெரிய மீசை வச்சிருக்க.. சின்ன பெடியன் மிரட்டுறான் வெக்கமா இல்ல..?

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2020 at 14:34, ரஞ்சித் said:

1987 ஆம் ஆண்டின் ஒப்பந்த்தத்தினை அப்படியே அமுல்ப்படுத்தவென்று இந்தியாவினால் இப்போது கோரமுடியுமா? அதற்கான தேவை அதற்கு இருக்கிறதா? போலீஸும் காணி அதிகாரமும் இல்லாத இந்த இணைந்த மாகாணங்களின் அமைப்பை சிங்களம் தருமென்று நினைக்கிறீர்களா? இப்போது இருப்பதுகூட 13 ஆம் திருத்த சட்டம் தானே? இது இருந்தும் என்ன பெரிதாக தமிழருக்குக் கிடைத்திருக்கிறதென்று நினைக்கிறீர்கள்?

இதே 13 ஆம் சட்டத் திருத்தம், போலீஸ், காணி அதிகாரத்தோடு, இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களாக தருமாறு இந்தியா வற்புருத்த வேண்டும். அதுவே எமக்கு இப்போதைக்கு உகந்த தீர்வாக அமையும் என்பது எனது எண்ணம். இப்போதைக்கு இந்தியாவினாலன்றி வேறு வழியில் தீர்வு வரப்போவதில்லை. அந்த நிலைக்கு எம்மைத் தள்ளிக்கொண்டுபோய் விட்டதும் இந்தியாதான். காங்கிரஸ் தோற்றுப்போய், ப ஜ க வந்திருக்கிறது, சிலவேளை காட்சிகள் மாறலாம்.  பார்க்கலாம். 

இலவு காத்த கிளின்னு கேள்விப்படிருப்பீங்கன்னு நினைச்சாக்கா..

ஏன்னா....நீங்க... கிளியபத்தியே கேக்கலிய போலிருக்கே..

😤

என்னத்தை பார்க்க... சீனாக்காரன் இலங்கையில் கால் ஊன்றிவிட்டான், இவர்கள் ஏமாந்த பேய்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.