Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் போதனா வைத்தியசாலையின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவேன் - டக்ளஸ் உறுதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் காணப்படும் ஆளணி மற்றும் பெளதீக வள பற்றாக்குறை தொடர்பில் சுகாதார அமைச்சருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையிலான பிரதிநிதிகளிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகைதந்திருந்த யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தலைமையிலான பிரதிநிதிகள் அமைச்சரை சந்தித்து வைத்தியசாலையின் ஆளணி மற்றும் பௌதிக வள பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு தேவைப்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர்.

குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலை தற்போது பல வைத்திய சேவை பிரிவுகள் விரிவாக்கம் கண்டுவரும் நிலையில் அதற்கான வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் ஊழியர்களின் பற்றாக்கறை அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டியதுடன் அதற்கான தீர்வு அவசியமானது என்றும் வலியுறுத்தியிருந்தனர்

மேலும் குறித்த வைத்தியசாலையானது தற்போது வடபகுதியில் பாரியளவிலான சேவையை முன்னெடுத்து வருகின்றபோதிலும் குறைந்தளவான வசதிகளுடனேயே காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள வைத்தியர்கள் யாழ்ப்பாணத்தின் வைத்திய சேவையின் தனித்துவத்தை நிலைநாட்டுவதற்காக அதனை வளப்படுத்த வேண்டும் என்றும் அதற்கான பிரிவுகளை யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்கான  வசதி வாய்ப்புக்களை பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தனர்.

வைத்தியர்கள் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் போதனா வைத்தியசாலையின் தேவைப்பாகளை நிவர்த்தி செய்துகொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சருடன் தாம் சந்திப்பொன்றை மேற்கொள்வதாக தெரிவித்திருந்ததுடன் அதனூடாக வைத்தியசாலையின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் வைத்தியர் பிரதிநிதிகளிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.https://www.virakesari.lk/article/89916

மீன் பிடி துறை அமைச்சருக்கு இங்கு என்ன வேலை..... அத்துறை சம்பந்தமான அமைச்சர் வர வேணும்  இல்லாட்டி வட மாகாணா அபிவிருத்திக்கு பொறுப்பான அரசின் பிரதிநிதியான அங்கஜன் வர வேணும்.

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

சிலரின் வேலை எல்லாவற்றுள்ளும் தலையை காட்டி பெயரெடுத்து அரசியல் செய்வது, செயற்பாடு பூச்சியம். நானும் ஒரு அரசியல்வாதி! ஆமா, தொல்பொருள் ஆராய்ச்சிக்கு தமிழர் யாரும் முன்வரவில்லை என ஒப்பாரி வைத்து திரிந்தார், இப்போ ஒருவர் முன்வந்திருக்கிறார். என்னாச்சு வாய் வீச்சு?  இவர் கதையை வேறு பக்கம் திருப்பிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Dash said:

23 minutes ago, satan said:

இரண்டு பேரும் தலைப்பை மட்டும் தான் வாசித்துக் கருத்துச் சொல்வீங்கள் போல! டக்கி ஆஸ்பத்திருக்குப் போகவில்லை, ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் டக்கியின் அலுவலகத்திற்கு வந்து கேட்டதற்கு தான் இந்த பதில். 

(இப்ப என்ன சொல்லப் போறீங்கள்? யாழ் ஆஸ்பத்திரி நிர்வாகம் முறைகெட்டு நடக்குது என்பீங்களோ?🤔)

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Dash said:

மீன் பிடி துறை அமைச்சருக்கு இங்கு என்ன வேலை..... அத்துறை சம்பந்தமான அமைச்சர் வர வேணும்  இல்லாட்டி வட மாகாணா அபிவிருத்திக்கு பொறுப்பான அரசின் பிரதிநிதியான அங்கஜன் வர வேணும்.

தானும் செய்யுறன் என்று காட்டனுமே.

ஆனால் இறுதியில்.. ஒன்றும் செய் படாது.  சுருட்டிப் பொக்கட்டுக்குள் போட கணக்குக் காட்ட திட்டங்கள்.. ஆளணி சேர்ப்பு காட்டனுமே. புல்லுக்குளம் நிரவலோடு போட்டது போல.. எத்தனை எத்தனை.. எனியும் தொடரும். 

யாழ் போதனா வைத்தியசாலையில் இருக்கும் ஸ்கானர் கூட புலம்பெயர் உறவுகளின் அன்பளிப்பு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

இரண்டு பேரும் தலைப்பை மட்டும் தான் வாசித்துக் கருத்துச் சொல்வீங்கள் போல! டக்கி ஆஸ்பத்திருக்குப் போகவில்லை, ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் டக்கியின் அலுவலகத்திற்கு வந்து கேட்டதற்கு தான் இந்த பதில். 

(இப்ப என்ன சொல்லப் போறீங்கள்? யாழ் ஆஸ்பத்திரி நிர்வாகம் முறைகெட்டு நடக்குது என்பீங்களோ?🤔)

எல்லாவற்றையும் செய்யும் வல்லமை தன்னிடமே உண்டு என்று தம்பட்டம் அடிப்பதால் அவர்களிடம் போய் முறையிட்டுள்ளார்கள். அவர்களை சரியானவர்களிடம் அனுப்பி வைப்பதை விட்டு, தான் பெற்றுத் தருவேன் என்பது ஏமாற்று மட்டுமல்ல, பிழையான வழிகாட்டுதலையும்  வழங்குகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, satan said:

எல்லாவற்றையும் செய்யும் வல்லமை தன்னிடமே உண்டு என்று தம்பட்டம் அடிப்பதால் அவர்களிடம் போய் முறையிட்டுள்ளார்கள். அவர்களை சரியானவர்களிடம் அனுப்பி வைப்பதை விட்டு, தான் பெற்றுத் தருவேன் என்பது ஏமாற்று மட்டுமல்ல, பிழையான வழிகாட்டுதலையும்  வழங்குகிறார்.

அது சரி! செய்தியை வாசிக்கவில்லை என்று ஒப்புக் கொள்ள மாட்டிங்கள் என்று தெரியும்! நல்ல வேளை சத்தியமூர்த்தியை துரோகி முத்திரை குத்தவில்லை! அது வரைக்கும் நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, Justin said:

இரண்டு பேரும் தலைப்பை மட்டும் தான் வாசித்துக் கருத்துச் சொல்வீங்கள் போல! டக்கி ஆஸ்பத்திருக்குப் போகவில்லை, ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் டக்கியின் அலுவலகத்திற்கு வந்து கேட்டதற்கு தான் இந்த பதில். 

(இப்ப என்ன சொல்லப் போறீங்கள்? யாழ் ஆஸ்பத்திரி நிர்வாகம் முறைகெட்டு நடக்குது என்பீங்களோ?🤔)

தலைப்பு சரியாகத்தான் இருக்கு. உங்கள் மனநிலையும் கற்பனையும் தான் தவறு.

அமெரிக்காவில் வைத்தியசாலை சம்பந்தப்பட்ட அலுவல்களுக்கு கடற்றொழில் அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? சரி அப்படி போனவர்களுக்கு அந்த அமைச்சர் என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்?

இவரை நம்பிய மக்களுக்கு முதலில்ல மீன் பிடிக்க வழி செய்யட்டும்... அவர்கள் இன்னும் அல்லல் படுகின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

தலைப்பு சரியாகத்தான் இருக்கு. உங்கள் மனநிலையும் கற்பனையும் தான் தவறு.

அமெரிக்காவில் வைத்தியசாலை சம்பந்தப்பட்ட அலுவல்களுக்கு கடற்றொழில் அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? சரி அப்படி போனவர்களுக்கு அந்த அமைச்சர் என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்?

சிறிலங்கா அமெரிக்க தராதரமெண்டால் நீங்கள் ஏன் அண்ணை ஜேர்மனியில இருக்கிறீங்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Justin said:

ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் டக்கியின் அலுவலகத்திற்கு வந்து கேட்டதற்கு தான் இந்த பதில். 

22 hours ago, Justin said:

நல்ல வேளை சத்தியமூர்த்தியை துரோகி முத்திரை குத்தவில்லை! அது வரைக்கும் நன்றி!

இவர்களுக்கு எங்கே, யாருடன், எதை பேசுவது? என்கிற  விபரம் போதவில்லை என்று சொல்ல வருகிறார். அதை மற்றவர் தலையில் கட்டியடிக்க  முயல்கிறார். விட்டு நகருவோம் அது அவர் பிரச்சனை. 

இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் விவசாய நடவடிக்கைகளுக்கு நஸ்டஈடு; அமைச்சர் டக்ளஸ்

வாழை தோட்டம், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜீ போன்ற பயிர் செய்கைகள் இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ‘சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி’ எனும் தொனிப் பொருளிலான கலந்துரையாடலில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த வருடம் அம்பன் புயலினால் அழிவடைந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தொடர்ச்சியாக அமைச்சரவையில் கோரிக்ககை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய கலந்துரையாடலிலும் குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டினார். .

இதுதொடர்பில் பதில் அளித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஏற்கனவே 6 விதமான பயிர் செய்கைகளுக்கு நஸ்டஈடு வழங்கும் ஏற்பாடுகள் மாத்திரம் விவசாய அமைச்சில் காணப்பட்ட நிலையில், கடந்த காலங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு அமைய, மேற்குறிப்பிட்ட பயிர் செய்கைகளுக்கும் இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனவே, எதிர்காலத்தில் குறிப்பிட்ட பயர்செய்கைகள் பாதிக்கப்படும் போது உடனடியாக நஸ்டஈடு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விவசாய அமைச்சின் குறித்த நடவடிக்கைக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்ததுடன்,

அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் ஏற்கனவே அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு ஜனாதிபதியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

எனவே, அடுத்த அமைச்சரவையில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயுடன் இணைந்து குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி அம்பன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நஸ்டஈடு பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Reviews

http://thinakkural.lk/article/68978

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சப்பேரை தன்னைச்சுற்றி அணி திரட்டி ஏதோ படம் காட்டப் போறார் என்று நினைக்கிறேன். மாகாண சபைத் தேர்தல் ஏதும் அண்மையில்  வருகுதோ?

  • கருத்துக்கள உறவுகள்

18 hours ago, Justin said:

சிறிலங்கா அமெரிக்க தராதரமெண்டால் நீங்கள் ஏன் அண்ணை ஜேர்மனியில இருக்கிறீங்கள்? 

அண்ணை ஜெர்மனியிலை இருந்தாலென்ன வேற எங்கையாவது இருந்தாலென்ன கேட்ட கேள்விக்கு பதிலை காணம். ஓ இதுதான் அறிவுபூர்வமாக கருத்தெழுதுகிறது எண்டு எடுத்துக்கொள்ளலாமோ ??

அம்பன் புயலினால் ஏற்பட்ட அழிவுகளுக்கு நஸ்டஈடு – அமைச்சர் டக்ளஸின் தொடர் முயற்சிக்கு வெற்றி

யாழ்ப்பாணத்தில் அம்பன் புயலினால் அழிவடைந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த பாதிப்புக்களுக்கு நஸ்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கு தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று(16.09.2020) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் வீசிய அம்பன் புயல் காரணமாக யாழ்பபாணத்தில் கோப்பாய், ஊரெழு, அச்சுவேலி உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் இருந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்டங்கள் சுமார் 500 ஏக்கர் வரையில் அழிவடைந்திருந்தன.

அப்போதைய கொறோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் குறித்த பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று நிலமைகளை அவதானித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏற்பட்ட அழிவுகளுக்கு அரசாங்கதினால் நஸ்டஈடு வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதியளித்ததுடன், அழிவுகள் தொடர்பான மதிப்பீட்டை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபரை அறிவுறுத்தியிருந்துடன் அதுதொடர்பாக அமைச்சரவையின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார்.

இருப்பினும், பப்பாசி மற்றும் வாழை தோட்டங்கள் அழிவடைகின்ற போது நஸ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் எவையும் விவசாய அமைச்சிடமோ அல்லது அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடமோ இல்லாத நிலையில் நஸ்டஈடு வழங்குவதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டிருந்தது.

எனினும், குறித்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில், விசேட அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக குறித்த அழிவுகளுக்கு நஸ்ட ஈட்டினை வழங்குதவற்கு ஜனாதிபதி உறுதிளித்திருந்தார்.

இந்நிலையிலேயே இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அம்பன் புயலினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் நஸ்டஈடு வழங்குவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் அழிவுகளுக்கு நஸ்டஈடு வழங்கும் விவசாய பயிர்களின் பட்டியலில் வாழை, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜீ போன்றவை இணைக்கப்பட்டுள்ளதாக நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://thinakkural.lk/article/69204

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2020 at 09:33, Eppothum Thamizhan said:

அண்ணை ஜெர்மனியிலை இருந்தாலென்ன வேற எங்கையாவது இருந்தாலென்ன கேட்ட கேள்விக்கு பதிலை காணம். ஓ இதுதான் அறிவுபூர்வமாக கருத்தெழுதுகிறது எண்டு எடுத்துக்கொள்ளலாமோ ??

பதில் அதிலேயே இருக்கிறது! புரிந்து கொள்ள கொஞ்சம் "வரிகளுக்கிடையே வாசிக்கும்" இயலுமை வேண்டும்! 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

பதில் அதிலேயே இருக்கிறது! புரிந்து கொள்ள கொஞ்சம் "வரிகளுக்கிடையே வாசிக்கும்" இயலுமை வேண்டும்! 

சிறிலங்கா அமெரிக்க தராதரமெண்டால் நீங்கள் ஏன் அண்ணை ஜேர்மனியில இருக்கிறீங்கள்? 

மேலே இருக்கிறது ஒரேவரி. இதில எதுக்கு இடையாலை போய்  நான் வாசிக்கவேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2020 at 03:36, Justin said:

இரண்டு பேரும் தலைப்பை மட்டும் தான் வாசித்துக் கருத்துச் சொல்வீங்கள் போல! டக்கி ஆஸ்பத்திருக்குப் போகவில்லை, ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் டக்கியின் அலுவலகத்திற்கு வந்து கேட்டதற்கு தான் இந்த பதில். 

(இப்ப என்ன சொல்லப் போறீங்கள்? யாழ் ஆஸ்பத்திரி நிர்வாகம் முறைகெட்டு நடக்குது என்பீங்களோ?🤔)

யார் நல்லது செய்தாலும் பிடிக்காது நம்ம ஆட்களுக்கு 

25 minutes ago, Justin said:

பதில் அதிலேயே இருக்கிறது! புரிந்து கொள்ள கொஞ்சம் "வரிகளுக்கிடையே வாசிக்கும்" இயலுமை வேண்டும்! 

போனமாதம் அம்மாவை அழைத்துச் சென்றேன் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது நிர்வாகம் நன்றாகவே இருக்கிறது  வெளிச்சுத்தத்தை கவனத்தில் எடுத்தால் நல்லது 

சுத்தம் செய்பவர்கள் இருந்தாலும் சில பொது இடங்களை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பது நமது மக்களுக்கு தெரியாது 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Eppothum Thamizhan said:

சிறிலங்கா அமெரிக்க தராதரமெண்டால் நீங்கள் ஏன் அண்ணை ஜேர்மனியில இருக்கிறீங்கள்? 

மேலே இருக்கிறது ஒரேவரி. இதில எதுக்கு இடையாலை போய்  நான் வாசிக்கவேண்டும்?

🤣சரி, இதோ உரித்த வாழைப்பழம், வாயை ஆவெண்டுங்கோ எ.தா: "சிறிலங்கா என்ற நாடு அமெரிக்க, ஜேர்மனி தராதரங்களை நெருங்காத ஊழல், சுத்துமாத்துகள், அரசியல் சாயங்கள் நிறைந்த நாடு! அமெரிக்காவில் , ஆஸ்பத்திரி குறைபாடுகளை மீன்பிடி அமைச்சிடம் கொண்டு செல்லவே மாட்டார்கள், எனவே மீன்பிடி அமைச்சு என்ன பதில் சொல்ல வேண்டுமென்ற கேள்வியே அர்த்தமற்றது!" 

எல்லாத்தையும் விரிவா எழுதினாத் தான் தமிழே விளங்குது, பெயரில தமிழ்🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யார் நல்லது செய்தாலும் பிடிக்காது நம்ம ஆட்களுக்கு 

போனமாதம் அம்மாவை அழைத்துச் சென்றேன் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது நிர்வாகம் நன்றாகவே இருக்கிறது  வெளிச்சுத்தத்தை கவனத்தில் எடுத்தால் நல்லது 

சுத்தம் செய்பவர்கள் இருந்தாலும் சில பொது இடங்களை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பது நமது மக்களுக்கு தெரியாது 

தனி, யாழ் ஆஸ்பத்திரியை அடிப்படையில் முதன் முதலில் சிறப்பாக்கியது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் , 90 களில். பின்னர் வந்த பணிப்பாளர்கள் அதில் இருந்தே மெது மெதுவாக முன்னேற்றி வந்திருக்கின்றனர்.  சத்தியமூர்த்தி மிகவும் உழைக்கிறார். எங்கே உதவி கிடைக்கிறதோ அங்கே அவர் நல்ல உறவுகளை வளர்த்து மருத்துவமனையை வளமாக்குவார்! வெளியூரில் வாழும் நம்மவர் "மேற்கத்தைய தராதர நிர்வாகம் யாழில் வரும் வரை எல்லாத்தையும் இழுத்துப் பூட்டு" என்று பேசுவது ஒன்றும் புதிதில்லையே!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

யதார்த்தமான கருத்து சொல்ல முற்படும் போது பல எதிர் தாக்குதலை சந்தித்து தான் ஆகவேண்டும் 

அதிகமாக சிங்களப் பிள்ளைகள்  மருத்துவம் படிக்கின்றனர் யாழ்ப்பாணத்தில் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

யதார்த்தமான கருத்து சொல்ல முற்படும் போது பல எதிர் தாக்குதலை சந்தித்து தான் ஆகவேண்டும் 

அதிகமாக சிங்களப் பிள்ளைகள்  மருத்துவம் படிக்கின்றனர் யாழ்ப்பாணத்தில் 

எல்லாத்தையும் யதார்த்தத்தின் பெயரால் நல்லா சமாளிக்கிறீங்கள்.

அது சரி.. சிங்களப் பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் மருத்துவம் படிப்பதையிட்டு பெருமைப்படுகிறீர்கள். தென்னிலங்கையில்... எத்தனை யாழ்ப்பாணப் பிள்ளைகள்.. மட்டக்களப்பு பிள்ளைகள் மருத்துவம் படிக்கினம்..??! இதுவும் ஒரு யதார்த்தமான கேள்வி தானே.. தெரிஞ்சா பதில் சொல்லுங்கோ..?!

மொத்த வட மாகாணத்திற்கே ஒரு மருத்துவ பீடம் தான். அதிலும் சிங்கள மாணவர்களை உள்வாங்கினால்.. தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை என்னாவது..???!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

🤣சரி, இதோ உரித்த வாழைப்பழம், வாயை ஆவெண்டுங்கோ எ.தா: "சிறிலங்கா என்ற நாடு அமெரிக்க, ஜேர்மனி தராதரங்களை நெருங்காத ஊழல், சுத்துமாத்துகள், அரசியல் சாயங்கள் நிறைந்த நாடு! அமெரிக்காவில் , ஆஸ்பத்திரி குறைபாடுகளை மீன்பிடி அமைச்சிடம் கொண்டு செல்லவே மாட்டார்கள், எனவே மீன்பிடி அமைச்சு என்ன பதில் சொல்ல வேண்டுமென்ற கேள்வியே அர்த்தமற்றது!" 

எல்லாத்தையும் விரிவா எழுதினாத் தான் தமிழே விளங்குது, பெயரில தமிழ்🤦‍♂️

நல்லா சமாளிக்கிறீர்கள். கேள்வி அவர்கள் மீன்பிடித்துறை அமைச்சரை சந்தித்து கேட்டதல்ல, இது அவருக்கு சம்பந்தமில்லாத துறையுடன் சம்பந்தப்பட்டதென்றால் அவர் என்ன கூறியிருக்கவேண்டுமென்பது! இது அவ்வளவு கஷ்டமான தமிழாக தெரியவில்லையே!!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, செண்பகம் said:

அம்பன் புயலினால் ஏற்பட்ட அழிவுகளுக்கு நஸ்டஈடு – அமைச்சர் டக்ளஸின் தொடர் முயற்சிக்கு வெற்றி

யாழ்ப்பாணத்தில் அம்பன் புயலினால் அழிவடைந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த பாதிப்புக்களுக்கு நஸ்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கு தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று(16.09.2020) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் வீசிய அம்பன் புயல் காரணமாக யாழ்பபாணத்தில் கோப்பாய், ஊரெழு, அச்சுவேலி உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் இருந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்டங்கள் சுமார் 500 ஏக்கர் வரையில் அழிவடைந்திருந்தன.

அப்போதைய கொறோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் குறித்த பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று நிலமைகளை அவதானித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏற்பட்ட அழிவுகளுக்கு அரசாங்கதினால் நஸ்டஈடு வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதியளித்ததுடன், அழிவுகள் தொடர்பான மதிப்பீட்டை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபரை அறிவுறுத்தியிருந்துடன் அதுதொடர்பாக அமைச்சரவையின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார்.

இருப்பினும், பப்பாசி மற்றும் வாழை தோட்டங்கள் அழிவடைகின்ற போது நஸ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் எவையும் விவசாய அமைச்சிடமோ அல்லது அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடமோ இல்லாத நிலையில் நஸ்டஈடு வழங்குவதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டிருந்தது.

எனினும், குறித்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில், விசேட அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக குறித்த அழிவுகளுக்கு நஸ்ட ஈட்டினை வழங்குதவற்கு ஜனாதிபதி உறுதிளித்திருந்தார்.

இந்நிலையிலேயே இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அம்பன் புயலினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் நஸ்டஈடு வழங்குவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் அழிவுகளுக்கு நஸ்டஈடு வழங்கும் விவசாய பயிர்களின் பட்டியலில் வாழை, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜீ போன்றவை இணைக்கப்பட்டுள்ளதாக நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://thinakkural.lk/article/69204

இவர் அமைச்சராகும் வரை நிவாரணம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். பல வீதிகள் கடந்த 5 வருடங்களாக திருத்தங்கள் இன்றி தான் திறந்து வைக்கனும் என்பதற்காகவே திருத்தப்படாமல் இருந்தது.

குறிப்பாக யாழ் நகரில்.. பிறவுண் வீதியை திருத்தவே மாட்டேன் என்று அடம்பிடித்தாராம் இந்த அமைச்சர். காரணம்... அது தமிழ் தேசியம் ஆக்கள் அதிகம் வாழுற வீதின்னு. கடந்த ஆட்சியில் தான் திருத்த ஆரம்பித்தார்கள்.. அதற்குள் இவர் வந்திட்டார்.. எனி அது கிடப்பிற்குப் போய் விடும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

நல்லா சமாளிக்கிறீர்கள். கேள்வி அவர்கள் மீன்பிடித்துறை அமைச்சரை சந்தித்து கேட்டதல்ல, இது அவருக்கு சம்பந்தமில்லாத துறையுடன் சம்பந்தப்பட்டதென்றால் அவர் என்ன கூறியிருக்கவேண்டுமென்பது! இது அவ்வளவு கஷ்டமான தமிழாக தெரியவில்லையே!!

அவர் ஏன் கூறவில்லை என்பதற்கான பதில் மேலே மேற்கோள் காட்டியதில் இருப்பதாகத் தெரியவில்லையோ? இனி வாழைப்பழத்தை ப்ளெண்டரில் போட்டு மூக்குக் குழாயிலா உங்களுக்கு ஊட்டுவது?🤔

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.