Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டிரைவ் இன் கலியாணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டிரைவ் இன் கலியாணம்

கொரோனா அடங்கீட்டுது. பிறகென்ன, ஒரு கலியாணத்தினை நடத்தி முடித்திடுவம் எண்டு ஒரு இந்தியன் கலியாணத்துக்கு பெரிய எடுப்பில் ஒழுங்கு பண்ணியாச்சு.

அக்டோபர் முதல் வார இறுதியில் கலியாணம்.

அடக் கடவுளே.... கொரோனா திருப்பியும் வருதாம். கூட்டம் கூட கூடாது, எண்டு பிரிட்டிஷ் அரசு சொல்லி விட்டது.

பின்ன எப்படி கலியாணம் செய்வது?

சரி, இந்து மதப்படி தேதி மாத்துறது சரி இல்லை.

கலியாணம் ஒழுங்கு செய்த கம்பெனிக்கும், பண இழப்பு.

சரி, மாத்தி யோசி...

டிரைவ் இன் கலியாணம்.

ஒரு கோலில் கலியாணம். மாப்பிளை, பொம்பிளை, இருபகுதியிலும் ஆக்கள், அய்யர், கேமரா காரர் எண்டு அரசாங்கம் சொன்ன அளவில் நடக்குது.

Cars gathered in front of a large screen showing a wedding.

வெளியே பெரிய ஸ்கிரீன் வைத்து இருக்கிறது. அழைக்கப்பட்ட அனைவரும் காரில் வந்து, அதுலேயே இருந்து ஸ்கிரீன் பார்த்து, வாழ்த்துகின்றனர்.

அவர்கள், இணையத்தில், முதலில் தெரிவு செய்த உணவு, குடி பானம், மாஸ்க் போட்ட ஈவென்ட் கம்பெனி காரர்களால் விநியோகிக்கப்படுகின்றது.

A man passes a bag of snacks through a car window.

கலியாணம் சட்டத்தினை மீறாத வகையில், அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடந்து முடிந்தது.

Roma Popat and Vinal Patel after their wedding ceremony.

இன்று பிரிட்டிஷ் பிரதமர், இது நல்ல ஐடியா என்று வேறு புகழ்ந்திருக்கிறார்.

இனி இப்படி தான் கலியாணங்களோ?

முக்கியமான விசயம்.... (நல்ல கதை... சும்மாவே கூப்பிட்டது)

மொய்யும், ஆசீர்வாதமும் வாங்க.... மாப்பிளை, பொம்பிளை வெளியிலை வந்து ஊஞ்சலிலை இருக்க, காரிலேயே, லயினிலை வந்து, கொடுத்து விட்டு போயிருக்கினம்.... 

Roma Popat and Vinal Patel on the back of a golf buggy in front of a large screen.

https://bbc.co.uk/news/uk-england-essex-54435275

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கேற்ற  கலியாணம் . கார் பாக்கிங் பிரச்சினையாய் இருக்காதோ ? காருக்குள்ள தானே நல்ல உடுபிடவையும் தேவையில்லை .drive  through   இல் சாப்பாடு 😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அவர்கள், இணையத்தில், முதலில் தெரிவு செய்த உணவு, குடி பானம், மாஸ்க் போட்ட ஈவென்ட் கம்பெனி காரர்களால் விநியோகிக்கப்படுகின்றது.

வெளியே 50 பொலிசை நிற்பாட்டி வைத்தால் ஒவ்வொரு காரும் வரவர மதுபோதையில் வாகனம் ஓட்டினார்கள் என்று வழக்கு பதிவு செய்யலாம். எங்கே பிரக்கிராசியர்?

  • கருத்துக்கள உறவுகள்

மொய் வாங்க போட்ட யோசனை... நன்றாக உள்ளது. 👍🏼 🙂

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் போகலாம் தானே... நாத போனனீரா

காருக்குள்ள தானே, மேக்கப்பும், நல்ல உடுப்புகளும் தேவையில்லை, 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

யாரும் போகலாம் தானே... நாத போனனீரா

காருக்குள்ள தானே, மேக்கப்பும், நல்ல உடுப்புகளும் தேவையில்லை, 😂

அறுபது மைல்.... மொய் வைக்காமல்... வரேலாதெண்டு.... போகேல்ல...😛

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை பெண்டுகள் உப்படியான வைபங்களுக்கு போவதே தங்கள் நகை மற்றும் உடுப்புகளை காட்டத்தானே.குடுக்கிற மொய்க்கு இதுவும் இலலை என்டால்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் நல்ல யோசனைதான்......போனமாம் காரில் இருந்தபடியே வாழ்த்தினமாம் உண்டு களித்தமாம் மொய் அளித்தமாம் வந்தமாம் என்று இருக்கோணும் .......!   👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, Nathamuni said:

டிரைவ் இன் கலியாணம்

கொரோனா அடங்கீட்டுது. பிறகென்ன, ஒரு கலியாணத்தினை நடத்தி முடித்திடுவம் எண்டு ஒரு இந்தியன் கலியாணத்துக்கு பெரிய எடுப்பில் ஒழுங்கு பண்ணியாச்சு.

அக்டோபர் முதல் வார இறுதியில் கலியாணம்.

அடக் கடவுளே.... கொரோனா திருப்பியும் வருதாம். கூட்டம் கூட கூடாது, எண்டு பிரிட்டிஷ் அரசு சொல்லி விட்டது.

பின்ன எப்படி கலியாணம் செய்வது?

சரி, இந்து மதப்படி தேதி மாத்துறது சரி இல்லை.

கலியாணம் ஒழுங்கு செய்த கம்பெனிக்கும், பண இழப்பு.

சரி, மாத்தி யோசி...

டிரைவ் இன் கலியாணம்.

ஒரு கோலில் கலியாணம். மாப்பிளை, பொம்பிளை, இருபகுதியிலும் ஆக்கள், அய்யர், கேமரா காரர் எண்டு அரசாங்கம் சொன்ன அளவில் நடக்குது.

Cars gathered in front of a large screen showing a wedding.

வெளியே பெரிய ஸ்கிரீன் வைத்து இருக்கிறது. அழைக்கப்பட்ட அனைவரும் காரில் வந்து, அதுலேயே இருந்து ஸ்கிரீன் பார்த்து, வாழ்த்துகின்றனர்.

அவர்கள், இணையத்தில், முதலில் தெரிவு செய்த உணவு, குடி பானம், மாஸ்க் போட்ட ஈவென்ட் கம்பெனி காரர்களால் விநியோகிக்கப்படுகின்றது.

A man passes a bag of snacks through a car window.

கலியாணம் சட்டத்தினை மீறாத வகையில், அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடந்து முடிந்தது.

Roma Popat and Vinal Patel after their wedding ceremony.

இன்று பிரிட்டிஷ் பிரதமர், இது நல்ல ஐடியா என்று வேறு புகழ்ந்திருக்கிறார்.

இனி இப்படி தான் கலியாணங்களோ?

முக்கியமான விசயம்.... (நல்ல கதை... சும்மாவே கூப்பிட்டது)

மொய்யும், ஆசீர்வாதமும் வாங்க.... மாப்பிளை, பொம்பிளை வெளியிலை வந்து ஊஞ்சலிலை இருக்க, காரிலேயே, லயினிலை வந்து, கொடுத்து விட்டு போயிருக்கினம்.... 

Roma Popat and Vinal Patel on the back of a golf buggy in front of a large screen.

https://bbc.co.uk/news/uk-england-essex-54435275

நல்ல ஐடியா.......ஹோல் செலவில்லை....கண்ட கண்ட அலைச்சல் இல்லை..😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

வெளியே 50 பொலிசை நிற்பாட்டி வைத்தால் ஒவ்வொரு காரும் வரவர மதுபோதையில் வாகனம் ஓட்டினார்கள் என்று வழக்கு பதிவு செய்யலாம். எங்கே பிரக்கிராசியர்?

வில்லன் வேறை எங்கையுமில்லை.......நடு வீட்டுக்குள்ளையே பிடிச்சுவைச்ச பிள்ளையார் மாதிரி  இஞ்சைதான் இருக்காங்க....😎

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
இதில் இருந்து தெரிவது என்னவென்றால்
நினைத்தால் ஒரு காரியத்தை எப்படியும் செய்து முடிக்கலாம்

மணமக்களின் கட் அவுட்டை ஒரு இடத்தில் வைத்துவிட்டு அங்கேயே போட்டோவும் எடுத்திருக்கலாம்
இதை முதலில் யோசித்திருந்தால் எனக்கு போட்டோ எடுக்கவில்லை
என்ற குறை  வந்திருக்காது😀

  • கருத்துக்கள உறவுகள்

memees.php?w=240&img=Z291bmRhbWFuaS9nb3V

நல்ல திட்டம் எட்டனா கொடுத்து போட்டு குடும்பமே தின்ன முடியாதலோ..👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.