Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன உயர் மட்டக் குழு ஒன்று அவசரமாக கொழும்பு வருகின்றது; ஜனாதிபதி, பிரதமருடன் மட்டும் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீன உயர் மட்டக் குழு ஒன்று அவசரமாக கொழும்பு வருகின்றது; ஜனாதிபதி, பிரதமருடன் மட்டும் சந்திப்பு

Yang-Jiechi-696x392.jpg

சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான Yang Jiechi தலைமையிலான உயர் மட்டக்குழு ஒன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை கொழும்பு வருகின்றது.

இக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை மட்டும் சந்திக்கும் எனவும், சர்வதேச தொற்று நோயாக உருவெடுத்துள்ள கொரோனாவை எதிர்கொள்வது மற்றும், பொருளாதார உறவுகளைப் புதுப்பிப்பது போன்ற இரு தரப்பு விடயங்களையிட்டு ஆரபாய்வதற்காகவே இந்தக் குழு இலங்கை வருகின்றது.

நாளை மறுதினம், ஜனாதிபதியையும் பிரதமரையும் இக்குழுவினர் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பைத் தவிர வேறு இடங்களுக்கு இவர்கள் செல்லமாட்டார்கள் எனவும், ஜனாதிபதி, பிரதமரைத் தவிர வேறு சந்திப்புக்களில் ஈடுபடமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சினால் தெரிவிக்கப்படும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகளுடனேயே இவர்களுடைய விஜயம் இடம்பெறும். கொரோனா தொற்று பரவத் தொடங்கியதையடுத்து இலங்கைக்கு வரும் முதலாவது வெளிநாட்டு உயர்ட்டக்குழு இது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/சீன-உயர்-மட்டக்-குழு-ஒன்ற/

  • கருத்துக்கள உறவுகள்

சூடு பிடிக்குது போல.....😀

மாவு புளிக்கிறது அப்பத்துக்கு நல்லதுதானே..

😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீன உயர் குழு கொழும்பை வந்தடைந்தது; தனிமைப்படுத்தல் இல்லை! பி.சி.ஆர். பரிசோதனை மட்டும்

Yang-Jiechi-696x392.jpg

சீன கம்யூனிசக் கட்சியின் அங்கத்தவர்கள் உள்ளடங்கலாக 26பேரைக் கொண்ட உயர் மட்டத்தூதுக் குழு இலங்கை வந்துள்ளது. நேற்றிரவு 7.40 மணியளவில் இலங்கை வந்துள்ளனர். இதனை சீனத்தூதரகத்தின் பேச்சாளர் லூவோ உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை இந்த உயர்மட்ட தூதுக்குழுவினர் சந்திப்புக்களை நடத்தவுள்ளது. இன்று இந்தச் சந்திப்பு இடம்பெறும்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன பிரதிநிதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் அவர்களிடம் பிசிஆர் பரிசோதனை மாத்திரம் இடம்பெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹர்சா டி சில்வா எழுப்பியகேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீன பிரதிநிதிகள் குழுவினர் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் அவர்கள் ஒருநாள் விஜயமாக இங்கு வருகின்றனர் அவர்கள் உயர்மட்ட பிரதிநிதிகள் அவர்கள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீன பிரதிநிதிகள் குழுவை வரவேற்கவுள்ள இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய சீன பிரதிநிதிகள் தொடர்பில் பின்பற்றப்பவேண்டிய சுகாதர விதிமுறைகள் தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/சீன-உயர்-குழு-கொழும்பை-வந/

  • கருத்துக்கள உறவுகள்

பி.சி.ஆர் பரிசோதனை இன்றி சீனக் குழு இலங்கைக்குள் வந்தது எப்படி? எதிரணிகள் போர்க்கொடி.!

Screenshot-2020-10-09-23-40-10-608-com-a

சீனத்தூதுக் குழுவினருக்கு தனிமைப்படுத்தல் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை எதுவுமின்றி நாட்டிற்குள் பிரவேசிக்க வழங்கிய அனுமதி குறித்து நாடாளுமன்றத்தில் இன்றைய தினமும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

சீனாவிலிருந்து ஸ்ரீலங்காவிற்கு நேற்று இரவு விஜயம் செய்த 26 பேரடங்கிய தூதுக் குழுவை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.

இதன் பின் இன்றைய தினம் காலை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி மாளிகையில் வைத்து சீனத் தூதுக்குழு சந்தித்தது.

35 வருடங்களுக்கு முன் அப்போதைய சீன ஜனாதிபதியியுடன் மொழிபெயர்ப்பாளராக முதற்தடவை ஸ்ரீலங்கா வந்திருந்ததை நினைவுபடுத்திய முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சர் யாங் ஜீயேஷி, இம்முறை விஜயத்தில் 4 நாடுகளுக்கு பட்டியலிட்டுள்ள நிலையில் முதலாவது விஜயத்தை ஸ்ரீலங்காவிற்கு மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவிடமிருந்து பெற்ற கடன்களால் ஸ்ரீலங்கா கடன்பொறிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக பலர் கூறினாலும், நாட்டின் அபிவிருத்திகள் மக்களின் ஜவநோபாயம், பொருளாதாரத்தை உயர்த்த உதவியாக இருந்ததாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இந்த சந்திப்பில் குறிப்பிட்டார்.

மேலும் சீன அரசாங்கம் எதிர்காலத்திலும் ஸ்ரீலங்காவுக்கு உதவியளிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்த அவர், கடந்த போர்க்காலத்தில் சீனா வழங்கிய உதவிகளையும் நினைவுப்படுத்தினார்.

இதில் கருத்து வெளியிட்ட யாங் ஜீயேஷி, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் சௌபாக்கியத்திற்கான இலக்கு கொள்கைப் பிரகடனத்திலுள்ளவற்றை அமுல்படுத்த உதவியளிப்பதாக வாக்குறுதியளித்தார்.

மேலும் தற்போது இடம்பெற்றுவரும் சீன அபிவிருத்திப் பணிகளை பூரணப்படுத்தவும், விவசாயம், கல்வி, நீர் வடிகாலமைப்பு, டிஜிட்டல் வர்த்தகம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளை அபிவிருத்தி செய்யவும் மற்றும் அம்பாந்தோட்டை தொழிற்பேட்டை நிர்மாணிப்பினை விரைவாக முடிவுறுத்தவும் எதிர்பார்ப்பதாக யாங் ஜீயேஷி குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த சந்திப்புக்களை முடித்துக்கொண்ட சீனத்தூதுக்குழு, இன்று பகல் அலரிமாளிகையில் வைத்து ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தது.

இதில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர்களான பந்துல குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, சீன தூதுக்குழுவுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டனவா என்பது ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளரான மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர, அதுபற்றி தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

அதனை விமான நிலைய நிர்வாகக் குழுவினரே நிர்வகிக்கின்றனர் என்பதால் அவர்களிடமே உறுதிப்படுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு - இதனை வெளியுறவுகள் அமைச்சிடமே கேட்க வேண்டும். நாம் நாடு என்ற ரீதியில் செயற்படும்போது ஒரே வகையில் செயற்பட்டால் எல்லா விடயங்களையும் செய்ய முடியாமல் போகும். 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டியிருக்கிறது. இவ்வாறான நிலைமைகளின் போது 15 ஆவது தினத்தில் தொற்று ஏற்படாதா? என்று சிலர் வினவுகின்றனர். அவ்வாறெனில் மேலும் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தல் காலத்தை அதிகரிக்க முடியுமா? எனவே தான் அனைத்து வியடங்களில் இதனை பின்பற்ற முடியாமலுள்ளது”

எவ்வாறாயினும் சீனத்தூதுக் குழுவின் ஸ்ரீலங்காவுக்கான விஜயத்தின்போது கோவிட்-19 வைரஸ் தொடர்பில் அனைவரும் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் அவர்களுக்கு விதிக்கப்படாமையிட்டு எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இன்றைய தினமும் கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்ல, சீனத்தூதுக்குழு ஏன் கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் இன்றி அனுமதிக்கப்பட்டார்கள் என்று வினவினார்.

மேலும் கோவிட் -19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்திய நாடுகளில் ஸ்ரீலங்காவுக்கு இரண்டாம் இடமென குறிப்பிட்டுள்ள சீன அரசாங்கத்தின் கணிப்பு பொய்யானது, அதனை நம்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.

http://aruvi.com/article/tam/2020/10/09/17738/

  • கருத்துக்கள உறவுகள்

வட்டியும் வரேல்ல, முதலும் வரேல்ல .....

என்ன மாதிரி..... கஸ்டமெண்டா... இப்போதைக்கு கச்சதீவை தாருங்கோ.... பார்த்து செலவுக்கு ஜஞ்சை, பத்தை தாறம்....

இந்தியாவே.... அவயள நாம பார்க்கிறம்..... அது பிரச்சணை இல்லை..... வட்டிக்காசு இல்லாட்டி கச்சதீவு.....

ஒரு மறுமொழியில்லாமல் போனா.... எங்களுக்கு வெடிதான்....

அம்பாந்தோட்டப் பக்கம் எட்டிப் பார்த்துட்டு ஓடி வாறம்.... யோசிச்சு முடிவை சொல்லுங்க... 🥺😢😣

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Nathamuni said:

அது . 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நாதம்ஸ்...  நீங்கள் சொல்வது, நிதர்சனமான கருத்து. 👍
ஸ்ரீலங்காவிற்கு,   பல இறுக்கங்கள், விரைவில்...  வரப் போகின்றது என்பதை,
இந்தச்  சம்பவங்கள்.. கட்டியம் கூறி  நிற்கின்றன. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்...  நீங்கள் சொல்வது, நிதர்சனமான கருத்து. 👍
ஸ்ரீலங்காவிற்கு,   பல இறுக்கங்கள், விரைவில்...  வரப் போகின்றது என்பதை,
இந்தச்  சம்பவங்கள்.. கட்டியம் கூறி  நிற்கின்றன. :)

சிறிலங்காவுக்கு இறுக்கம்/ இறுக்கங்கள் வராது வராது வராது வராது வராது வராது வராது வராது வராது...வட கிழக்கிலை தமிழன்கள் இருக்கும் வரைக்கும் சிறிலங்காவுக்கு இறுக்கம்/ இறுங்கங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள்..😎

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நீங்கள்... யார், யாரை, சொல்கிறீர்கள் என, நினைத்து... சிரிப்பு. வருகுது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அட நமக்கு ஒரு நாளைக்கு பச்சை குத்தும் லிமிட் இவ்வளவுதானா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, பெருமாள் said:

அட நமக்கு ஒரு நாளைக்கு பச்சை குத்தும் லிமிட் இவ்வளவுதானா ?

ஒரு நாளைக்கு நாலுதான்......இனி 24 மணித்தியாலம் பொறுத்திருக்க வேணும்,கசவாரம் புடிச்ச யாழ்களம் எண்டு தெரியாதோ.....😁
பேஸ்புக்கிலை குத்துறமாதிரி காய்சமாடு கம்பிலை விழுந்த கதையெல்லாம் இஞ்சை இல்லை....😎

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

ஒரு நாளைக்கு நாலுதான்......இனி 24 மணித்தியாலம் பொறுத்திருக்க வேணும்,கசவாரம் புடிச்ச யாழ்களம் எண்டு தெரியாதோ.....😁
பேஸ்புக்கிலை குத்துறமாதிரி காய்சமாடு கம்பிலை விழுந்த கதையெல்லாம் இஞ்சை இல்லை....😎

நான் இந்த பச்சை புள்ளிகளை கணக்கில் எடுப்பதில்லை இந்தமுறை மாத்திரம் குத்தி பார்த்தன் இப்படி வந்திருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

ஒரு நாளைக்கு நாலுதான்......இனி 24 மணித்தியாலம் பொறுத்திருக்க வேணும்,கசவாரம் புடிச்ச யாழ்களம் எண்டு தெரியாதோ.....😁
பேஸ்புக்கிலை குத்துறமாதிரி காய்சமாடு கம்பிலை விழுந்த கதையெல்லாம் இஞ்சை இல்லை....😎

1 minute ago, பெருமாள் said:

நான் இந்த பச்சை புள்ளிகளை கணக்கில் எடுப்பதில்லை இந்தமுறை மாத்திரம் குத்தி பார்த்தன் இப்படி வந்திருக்கு .

Who is Nesamani

மிஸ்டர்ர் ... வண்டு  முருகன்ஸ்...,
ஒரு நாளைக்கு... ஐந்து புள்ளிகள், உள்ளது என்பதை... கவனிக்கவும்.
- அதி உச்ச நீதிபதி, மோகனதாஸ். -  :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, தமிழ் சிறி said:

Who is Nesamani

மிஸ்டர்ர் ... வண்டு  முருகன்ஸ்...,
ஒரு நாளைக்கு... ஐந்து புள்ளிகள், உள்ளது என்பதை... கவனிக்கவும்.
- அதி உச்ச நீதிபதி, மோகனதாஸ். -  :grin:

காவியத் தலைவா எங்கு நீ சென்றாயோ! சிவாஜி கணேசன்- Dinamani

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

காவியத் தலைவா எங்கு நீ சென்றாயோ! சிவாஜி கணேசன்- Dinamani

பாலும், பழமும்...  கைகளில் ஏந்தி வரும் , எங்கள்  அன்புத் தலைவனை தேடுகின்றோம். ❤️ 💓

சர்வதேச அளவில் தொடர்ந்தும் இலங்கையின் இறைமை சுதந்திரத்திற்காக சீனா குரல்கொடுக்கும்- சீன பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை உட்பட அனைத்து சர்வதேச அமைப்புகளிலும் இலங்கையின் இறைமை சுதந்திரம் ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு முழுமையான ஆதரவை தொடர்ந்தும் வழங்கப்போவதாக சீனா உறுதியளித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனா உயர்மட்டக்குழுவினர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடனான சந்திப்பின்போது இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.
இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது சீன ஜனாதிபதியின் முன்னுரிமைக்குரிய விடயம் என சீன பிரதிநிதிகள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர்.

gota-chinse.jpg
இலங்கை தனது அபிவிருத்தி முயற்சிகளில் வெற்றியடைவதற்கு சீனா தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும் என சீன பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.
இலங்கையுடனான இரு தரப்பு உறவுகளை அபிவிருத்தி செய்வதை சீனா முன்னுரிமைக்குரிய விடயமாகியுள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சீனா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான திட்டம் உள்ளது எனவும் சீனா பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தேச அம்பாந்தோட்டை கைத்தொழில் வலய திட்டத்தினை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் சீனா பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் இலங்கை ஜனாதிபதி சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வார் என சீன பிரதிநிதிகள் குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

https://thinakkural.lk/article/78371

இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடன் வழங்க சீனா இணக்கம்

சீனாவிடமிருந்து இலங்கை 500 மில்லியன் டொலர் கடனுதவியை பெறவுள்ளது.
சீனாவிடமிருந்து 500மில்லியன் டொலர் சலுகை அடிப்படையிலான கடனை பெறுவதற்கான உடன்படிக்கையில் விரைவில் இலங்கை கைச்சாத்திடவுள்ளது.

mahinda-china-dele-300x186.jpg
சிலநாட்களுக்கு முன்னர் இலங்கை;கு விஜயம் மேற்கொண்ட சீன உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான பேச்சுவர்த்தைகளின் போது இது குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த கடனை இலங்கை பத்துவருட காலப்பகுதியில் திருப்பிசெலுத்தவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ள திறைசேரி அதிகாரிகள் கடனை எதற்காக பயன்படுத்தவேண்டும் என்பது குறித்து எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
பொருளாதார மீட்சி திட்டங்களுக்காக இந்த கடனை இலங்கை பயன்படுத்தவுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/78746

சீனா செல்கின்றார் ஜனாதிபதி கோட்டபய; முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும்

gotabaya-1-1-1024x521.jpgசீனாவின் உயர் மட்டக்குழு ஒன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டதையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சீனாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கின்றார்.

எதிர்வரும் டிசெம்பர் மாதம் இந்த விஜயத்தை அவர் முன்னெடுப்பார் எனவும், அதன்போது முக்கியமான உடன்படிக்கைகள் கைச்சாத்திடவிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

https://thinakkural.lk/article/78744

600 மில்லியன் யுவான்களை வழங்கியது சீனா!

சீன அரசாங்கம் இலங்கைக்கு 600 மில்லியன் யுவான் நிதியுதவியை வழங்கியுள்ளதாக (16.5 பில்லியன் ரூபாய்) இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் சீனாவுக்கிடையில் ஒக்டோபர் 9ம் திகதி கைச்சாத்திடப்பட்ட பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்திற்கு அமைவாகவே சீனா இலங்கைக்கு இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது.

இதேவேளை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவிடம் இருந்து கடனாக பெறவும் இலங்கை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/600-மில்லியன்-யுவான்களை-வழங/

  • கருத்துக்கள உறவுகள்

Mr.இந்திய வாத்திற்கு வயிறெரிய  தொடங்கியிருக்கும்,
துட்டை எறிந்து எறிந்து  நம்முடைய பழைய அயிட்டத்தை அமத்திகொண்டு திரியிறானே இந்த சப்ப மூக்கன், 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2020 at 09:06, குமாரசாமி said:

சிறிலங்காவுக்கு இறுக்கம்/ இறுக்கங்கள் வராது வராது வராது வராது வராது வராது வராது வராது வராது...வட கிழக்கிலை தமிழன்கள் இருக்கும் வரைக்கும் சிறிலங்காவுக்கு இறுக்கம்/ இறுங்கங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள்..😎

ஆர் விடமாட்டாங்கள் எண்டு சொல்லுறியள்? சீனனோ இந்தியனோ? 

இலங்கைக்கு 16.5 பில்லியன் டொலர்களை வழங்குகின்றது சீனா

இலங்கைக்கு 16.5 பில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.
அறிக்கையொன்றில் சீன தூதரகம் மேலும்தெரிவித்துள்ளதாவது

china-embassy-1.jpg

ஒக்டோபர் 9 ம் திகதி இலங்கைக்கு 16.5 பில்லியன் டொலர்களை வழங்குவது குறித்து சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கையிலேயே இலங்கைக்கு நிதிவழங்கும் விடயம் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு சீன உயர்மட்ட குழுவினர் விஜயம் செய்தவேளை இந்த உடன்படிக்கையில் சீனாவின் சர்வதேச ஒத்துழைப்பு அபிவிருத்தி முகவர் அமைப்பின் தலைவரும் இலங்கையின் நிதியமைச்சின் திறைசேரிசெயலாளரும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த அவசரமான மிகதேவைப்படுகின்ற உதவிக்காக இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கை அரசாங்கத்தினதும்மக்களினதும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/78914

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ரஞ்சித் said:

ஆர் விடமாட்டாங்கள் எண்டு சொல்லுறியள்? சீனனோ இந்தியனோ? 

நாங்கள் என்னத்துக்கு சீனா இந்தியா எண்டு யோசிப்பான்?????
 சிலோனிலை பிரச்சனையே இல்லை எண்டு உலகம் முழுக்க வீடு வீடாய் போய் சொல்லுறதுக்கு சம்பந்தன் கொம்பனியும் டக்ளசரும் காணுமே...😎

இனிமேல் ஒண்டும் தெரியாதமாதிரி இப்பிடியான விசர்க்கேள்வியள் கேட்டால் ஆரெண்டும் பாராமல் கடிச்சுப்போடுவன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செண்பகம் said:

இலங்கைக்கு 16.5 பில்லியன் டொலர்களை வழங்குகின்றது சீனா

இலங்கைக்கு 16.5 பில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.
அறிக்கையொன்றில் சீன தூதரகம் மேலும்தெரிவித்துள்ளதாவது

china-embassy-1.jpg

ஒக்டோபர் 9 ம் திகதி இலங்கைக்கு 16.5 பில்லியன் டொலர்களை வழங்குவது குறித்து சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கையிலேயே இலங்கைக்கு நிதிவழங்கும் விடயம் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு சீன உயர்மட்ட குழுவினர் விஜயம் செய்தவேளை இந்த உடன்படிக்கையில் சீனாவின் சர்வதேச ஒத்துழைப்பு அபிவிருத்தி முகவர் அமைப்பின் தலைவரும் இலங்கையின் நிதியமைச்சின் திறைசேரிசெயலாளரும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த அவசரமான மிகதேவைப்படுகின்ற உதவிக்காக இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கை அரசாங்கத்தினதும்மக்களினதும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/78914

இது கொஞ்சம் ஓவராக்கிடக்குது! மேல அதேயளவு ரூபாய் எண்டெல்லோ எழுதியிருக்கு. தினக்குரலின்ரை ஆசைக்கு ஒரு அளவுக்கணக்கு இல்லைப்போல??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.