Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“குரங்கு கையில் பூமாலை..” ஆழிகுமரன் நினைவாக பல கோடி செலவில் கட்டப்பட்ட நீச்சல் தடாகத்தின் இன்றைய நிலை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“குரங்கு கையில் பூமாலை..” ஆழிகுமரன் நினைவாக பல கோடி செலவில் கட்டப்பட்ட நீச்சல் தடாகத்தின் இன்றைய நிலை..

IMG-20201014-WA0007.jpg

யாழ்.வல்வெட்டித்துறையில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தின் இன்றைய நிலை பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

இலங்கைக்கு மட்டுமல்லாது உலகத்துக்கே பெருமை தேடி தந்த ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாக அமைக்கப்பட்ட வல்வெட்டித்துறை நீச்சல் தடாகம் யாரும் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகிறது.

121521342_893893394474001_60061677408274

மங்கள சமரவீர நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட குறித்த நீச்சல் தடாகம் தமிழ் தேசியக்கட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆளுமையற்ற நிர்வாகத்தினால் மக்கள் மயப்படுத்தப்பட்ட குறித்த நீச்சல்  தடாகத்தை உரியமுறையில் பராமரிக்க முடியாத திராணியற்ற சபையாக வல்வெட்டித்துறை நகரசபை விளங்குகிறது. ஆகவே குறித்த நீச்சல் தடாகத்தை தனியாரிடமோ அல்லது சமூக நிறுவனங்களிடமும் ஒப்படைத்து உரிய முறையில் பாதுகாத்து அதன் பயன்பாட்டை மக்களுக்கு வழங்க ஆவண செய்ய வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாகும்.

https://jaffnazone.com/news/20999

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் உலகமுழுக்க டெங்கு டெங்கு நுளம்பு ஒழிப்பு என்று கத்திவிட்டு இப்ப அவங்களே நுளம்பு பக்ரரி  துறந்து வைத்து இருக்காங்களே .

அது சரி இப்ப யாரை குரங்கு என்கிறாங்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மத்திய கல்லூரியிலும் ஒரு நீச்சல் தடாகம் திறந்து வைக்கப் பட்டது. அதன் தற்போதைய நிலை எப்படி என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பெருமாள் said:

ஊர் உலகமுழுக்க டெங்கு டெங்கு நுளம்பு ஒழிப்பு என்று கத்திவிட்டு இப்ப அவங்களே நுளம்பு பக்ரரி  துறந்து வைத்து இருக்காங்களே .

அது சரி இப்ப யாரை குரங்கு என்கிறாங்கள் ?

அடுத்தவன் நிதியிலை தடாகம் கட்டி கையிலை கொஞ்ச காசு பாத்திருப்பினம். மற்றும் படி சமூக சேவை அது இது எண்டு ஒரு பளாயுமில்லை. 😁

திறந்து வைத்தவர்கள்/கட்டி கொடுத்தவர்கள்  தான் பராமரித்தும் குடுக்க வேண்டும் என்பது என்ன மாதிரியான மனநிலை 

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

121196380_774554416446654_8315021551948555669_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=ddXt-lhkg_cAX8PtJmd&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=50832d00b7d0f0b236b04b350a1044c1&oe=5FAD4680

121567002_774554383113324_6489790354124904091_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=82mPCOwvUfEAX8JI6me&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=60695d6a3ac1308ae87c67f51d361e3b&oe=5FAF5BB0

அருமையான ஒரு திட்டம் போதிய அளவு அறிவு இல்லாமையால் 
இது வீணடிக்க பட்டு இருக்கிறது என்றுதான் எனக்கு படுகிறது.
13 வயதுக்கு மேலான பெருசான பெண் பிள்ளைகள் அங்கு சென்று 
குளிப்பதில் அதற்கு உரிய ஆடை மற்றும் இன்ன பிற காரணங்கள் இருந்து 
இருப்பினும் குறைந்த பட்ஷம் இதை 12 வயதுக்கு உட்பட்ட ஆண் பெண் இருபாலரும் 
நீந்த கற்றுக்கொடுக்கவும் ஒரு நீச்சல் வகுப்பை சொல்லி கொடுக்கவும் பயன்படுத்தி 
இருக்கலாம். 6-8 மணித்தியாலங்கள் வரை நீருக்குள்ளால் நீந்தி சென்று சில பெண் 
கரும்புலிகள் சாதனை படைத்த மண் அது.

அங்கிருக்கும் மக்களுக்கு போதிய அறிவும் இல்லை 
சிலதை ஏற்றுக்கொள்ள அவர்களை செருக்கும் விடுவதாக இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அபராஜிதன் said:

திறந்து வைத்தவர்கள்/கட்டி கொடுத்தவர்கள்  தான் பராமரித்தும் குடுக்க வேண்டும் என்பது என்ன மாதிரியான மனநிலை 

கட்டப்படும்போதே மிக முக்கியமான பிரச்சனையான   குளத்துக்கு  தேவையான 7லட்சம் லீற்றர் நல்ல தண்ணீர் எவ்வாறு பெறப்போகிறார்கள் என்பதுக்கு நடைமுறை சாத்தியமற்ற கடலநீரில் இருந்து நன்நீர் என்றார்கள் இன்று கவுண்டு போய் கிடக்கிறார்கள் .

யாழில் ஒருவருட மழை  வீழ்ச்சியின் அளவு தெரியுமா ? இந்த அரசியல்வாதிகளுக்கு ?

வெள்ளையானையை கொண்டுவந்து பாலைவனத்தில் வைத்து பராமரிப்பது போல் கதை .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நீச்சல் தடாகத்தைப் பராமரிக்க தினமும் பெருமளவிலான நீர் தேவையில்லை  பாவிக்கப்பட்ட நீரையே மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் சுத்திகரித்துப் பாவிக்கும் முறை வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது அதற்கு நவீன தொழில் நுட்பத்துடன் மிக அதிகமான மின்சாரமும் தேவைப்படும் நீர்த்தடாகத்தின் சுவர்களின் மேற்பரப்பில் தண்ணிர் வழிந்தோடக்கூடிய வழிமுறைகளை ஏற்படுத்தி தொடர்ந்து அந்த வாய்க்கால்கள்மூலம் நீர் வழிந்தோடி அந்நீர் நவீன வடிகட்டிகளூடாகச் சுத்திகரித்தபின் அந்நீர் மீண்டும் தடாகத்துக்குள் திரும்பவும் வரும்படியான தொழில்நுட்பம்தான் நான் சொல்வது  சுத்திகரிக்கப்பட்டு வரும் தண்ணீரில்ன் குளோரின் மற்றும் சுத்திகரிப்புக்குப் பாவிக்கப்பட்ட ஏனைய இராசாயணங்களது அனுமதிக்கப்பட்ட அடர்த்தியை எப்போதும் தகுதி வாய்தவர்களால் கண்காணிக்கப்படல்வேண்டும் 

தேசியத்தலைவர் பிறந்த ஊர் வல்வெட்டித்துறை ஆகும் அதே வல்வெட்டித்துறைய உள்ளடக்கிய உடுப்பிட்டித்தொகுதியிலேயே மகிந்தவினது பண்டாரநாயக்காவினதும் இடைப்பட்டவர்களதும் சிங்கள அரசியலின்மூலம் தமிழர்களைக்கொண்றொழித்த கைச்சின்னத்துக்கு அதிகூடிய விருப்பு வாக்குகள் வீழ்ந்தன. அதே அங்கயன் இராமநாதனுடன் செல்பி எடுத்தவர்கள் எல்லாம் விஜைசேதுபதியைத் துரோகி எனக்கூறுகிறார்கள் 
மணோ கூறியது என்னவென்றால் அதே தமிழர்கள் சிங்களக் கட்சிக்கு ஐந்து பாராளுமன்ற உருப்பினர்களைத் தானமாகக் கொடுத்திருக்கிறார்கள் ***************

Edited by நிழலி
அவச் சொல் நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

யாழ். மத்திய கல்லூரியிலும் ஒரு நீச்சல் தடாகம் திறந்து வைக்கப் பட்டது. அதன் தற்போதைய நிலை எப்படி என்று தெரியவில்லை.

யாழ். மத்திய கல்லூரிக்கும் றீகல் தியேட்டருக்கும் இடையே உள்ள குளத்தை ஒரு நீச்சல் தடாகமாக்கும் முயற்சிகளை அச்சமயம் யாழ்நகரசபை மேயராக இருந்த அல்பிரட் துரைப்பா என்பவர் மேற்கொண்டார். நன்னீர் குறைபாடு உள்ள அந்தப் பிரதேசத்தில் தடாகம் அமைப்பதற்கு எதிர்ப்புகளும் எழுந்தன. ஆனாலும் அரசுடன் அவருக்கிருந்த செல்வாக்கை வைத்து, பல லட்சங்கள் செலவுசெய்து குளம் தூர்வாரப்பட்டபோதுதான் பொது வைத்தியசாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் அதற்காக அமைக்கப்பட்ட குழாய்களும் அந்தக் குளத்தில் வந்து சேருவது தெரியவந்தது. ஆயினும் அதற்கான மாற்றுவழிகள் மேற்கொள்ள முடியாத நிலையில் திட்டம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன.

2 hours ago, பெருமாள் said:

கட்டப்படும்போதே மிக முக்கியமான பிரச்சனையான   குளத்துக்கு  தேவையான 7லட்சம் லீற்றர் நல்ல தண்ணீர் எவ்வாறு பெறப்போகிறார்கள் என்பதுக்கு நடைமுறை சாத்தியமற்ற கடலநீரில் இருந்து நன்நீர் என்றார்கள் இன்று கவுண்டு போய் கிடக்கிறார்கள் .

யாழில் ஒருவருட மழை  வீழ்ச்சியின் அளவு தெரியுமா ? இந்த அரசியல்வாதிகளுக்கு ?

வெள்ளையானையை கொண்டுவந்து பாலைவனத்தில் வைத்து பராமரிப்பது போல் கதை .

பெருமாள்,  ஒரு நீச்சல் தடாகத்தின் பயன்பாடு அதன் பெறுமதி  தெரியாத அங்கு வாழும்  மக்களின் சோம்பேறித்தனத்ததிற்கு வக்காலத்து வாங்க யார் யாரையோ எல்லாம் நீங்கள் திட்டித் தீர்கக வேண்டியுள்ளது. கவுண்டு கிடப்பது அங்குள்ள மக்களே அவர்களது சோம்பேறித்தனத்தால். 

குரங்கு கையில் பூமாலை என்ற தலைப்பு மிகப்பொருத்தமானதே. 

Edited by tulpen

4 minutes ago, Paanch said:

யாழ். மத்திய கல்லூரிக்கும் றீகல் தியேட்டருக்கும் இடையே உள்ள குளத்தை ஒரு நீச்சல் தடாகமாக்கும் முயற்சிகளை அச்சமயம் யாழ்நகரசபை மேயராக இருந்த அல்பிரட் துரைப்பா என்பவர் மேற்கொண்டார். நன்னீர் குறைபாடு உள்ள அந்தப் பிரதேசத்தில் தடாகம் அமைப்பதற்கு எதிர்ப்புகளும் எழுந்தன. ஆனாலும் அரசுடன் அவருக்கிருந்த செல்வாக்கை வைத்து, பல லட்சங்கள் செலவுசெய்து குளம் தூர்வாரப்பட்டபோதுதான் பொது வைத்தியசாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் அதற்காக அமைக்கப்பட்ட குழாய்களும் அந்தக் குளத்தில் வந்து சேருவது தெரியவந்தது. ஆயினும் அதற்கான மாற்றுவழிகள் மேற்கொள்ள முடியாத நிலையில் திட்டம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன.

உண்மை பாஞ்ச். நகரத்தை தனது வீட்டைப் போல் பராமரித்தவர் அல்பிரட் துரையப்பா. அவரைப் போல் ஒரு சிறந்த மேயர் கடந்த அரை நூற்றாண்டில் இன்னும் யாழ்நகருக்கு கிடைக்கவில்லை.  

யாழ் ஆஸ்பத்திரி வீதியின் இருவழி போக்குவரத்தை சுலபமாக்குவதற்காக அன்று குறைந்த செலவில் கிடைத்த தார்ப்பீப்பாக்களை நிரையாக அடுக்கிய போது “பீப்பா மேயர்” என்று நக்கல் அடித்தனர் அன்றைய தேசியம் பேசிய கூட்டணியினர். பின்னர் அந்த தார்பீப்பாக்களுக்கு இடையில் மரங்களை நட்டு வீதியை செம்மைப்படுத்தினார். அவரின் காலத்தின் பின்னர் இப்படியான செயல் திட்டங்கள் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

பெருமாள்,  ஒரு நீச்சல் தடாகத்தின் பயன்பாடு அதன் பெறுமதி  தெரியாத அங்கு வாழும்  மக்களின் சோம்பேறித்தனத்ததிற்கு வக்காலத்து வாங்க யார் யாரையோ எல்லாம் நீங்கள் திட்டித் தீர்கக வேண்டியுள்ளது. கவுண்டு கிடப்பது அங்குள்ள மக்களே அவர்களது சோம்பேறித்தனத்தால். 

22 minutes ago, Elugnajiru said:

பராமரிக்க தினமும் பெருமளவிலான நீர் தேவையில்லை  பாவிக்கப்பட்ட நீரையே மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் சுத்திகரித்துப் பாவிக்கும் முறை வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது அதற்கு நவீன தொழில் நுட்பத்துடன் மிக அதிகமான மின்சாரமும் தேவைப்படும் நீர்த்தடாகத்தின் சுவர்களின் மேற்பரப்பில் தண்ணிர் வழிந்தோடக்கூடிய வழிமுறைகளை ஏற்படுத்தி தொடர்ந்து அந்த வாய்க்கால்கள்மூலம் நீர் வழிந்தோடி அந்நீர் நவீன வடிகட்டிகளூடாகச் சுத்திகரித்தபின் அந்நீர் மீண்டும் தடாகத்துக்குள் திரும்பவும் வரும்படியான தொழில்நுட்பம்தான் நான் சொல்வது  சுத்திகரிக்கப்பட்டு வரும் தண்ணீரில்ன் குளோரின் மற்றும் சுத்திகரிப்புக்குப் பாவிக்கப்பட்ட ஏனைய இராசாயணங்களது அனுமதிக்கப்பட்ட அடர்த்தியை எப்போதும் தகுதி வாய்தவர்களால் கண்காணிக்கப்படல்வேண்டும் 

துல்பன்  இந்த திட்டம் கோமாளி சிவாஜி லிங்கம் தூக்கி கொண்டு வரும்போதே அங்குள்ள மக்களால் Elugnajiru  சொல்வது போல் உள்ள அமைப்பையே கேட்டார்கள் இங்கும் அத்தகைய முறைதான் அநேக ஜிம் களில் ஆனால் விடாப்பிடியாக கடல் நீரில் இருந்து நல்ல தண்ணி பிரித்து எடுக்கும் இயந்திரம் மூலம் தண்ணீர் எடுப்பம் என்றார்கள்   இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று அங்கு வாழுபவர்களுக்கு புரியும் .

ஏற்கனவே தேவையில்லாத சிங்கள ராணுவம் குடாநாட்டின்  கடல் நீர் புகும் இடம்களையும் மழை  நீர் கடலுக்குள் விரைவாக செல்வதுக்கு   ஊக்கியாக இருக்கிறார்கள் காரணம் அவர்களின் பங்கர்கள்  மழை  நேரங்களில் வெள்ளம் புகாமல் இருப்பதுக்கு அவர்களின் சொந்த இடம் இல்லைத்தானே. 

மாநகரசபையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்குள்ள மக்கள் உள்ளே செல்லவே முடியாது எப்பவுமே பூட்டு  போட்டு வைத்துள்ளார்கள் ஏன் என்று கேட்டால் சப்பை காரணம்கள் சொல்கிறார்களாம் . இதில் அங்குள்ள  மக்கள் என்ன செய்வது ?

துறப்பு விழாவுக்கு உரிய நீரையே  நிலாவரை கிணறு யாழின் நிலக்கீழ்  நீர் ஆதாரம் அங்கிருந்து பவுசர்கள்  மூலமா கொண்டுவந்து நிரப்பி கொண்டாடி உள்ளார்கள் .

11 minutes ago, tulpen said:

உண்மை பாஞ்ச். நகரத்தை தனது வீட்டைப் போல் பராமரித்தவர் அல்பிரட் துரையப்பா. அவரைப் போல் ஒரு சிறந்த மேயர் கடந்த அரை நூற்றாண்டில் இன்னும் யாழ்நகருக்கு கிடைக்கவில்லை.  

வீட்டை போல பார்த்தவருக்கு யாழ் ஆஸ்பத்திரி கழிவு நீர் எங்கு போகுதென்று தெரியாத அடி  முட்டாள் அவருக்கு வக்காலத்து வாங்க ஒரு கூட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

வெள்ளையானையை கொண்டுவந்து பாலைவனத்தில் வைத்து பராமரிப்பது போல் கதை .

ஆகா... இந்தக் கதை மாத்தள விமான நிலையத்தை நினைவூட்டுகிறதே, 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

ஆகா... இந்தக் கதை மாத்தள விமான நிலையத்தை நினைவூட்டுகிறதே, 

அரசியல்வாதிகள் பணம் சேர்ப்பதில் அதி புத்திசாலிகள் இலங்கையின் ஆங்கில பத்திரிகைகளில் இந்த வெள்ளையானை கதை பேமஸ் .

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு  பலமுறை  எழுதியது  தான்

மக்கள் தான் குரங்கு மனநிலையில் இருக்கிறார்கள்

உங்களுக்குத்தெரியும்

எனது ஊரிலே 7 மில்லியன் ரூபாய்கள் செலவளித்து

புங்குடுதீவு  மகாவித்தியாலயத்துக்கு சுற்றுமதில் கட்டிக்கொடுத்தோம்

வாசல்  கதவு  மட்டும்  பல  லட்சம்.

அந்தக்கதவு பூட்டுப்படாமல் காற்றுக்கு திறந்து திறந்து

மதிலில் அடிபட்டு மதில் உடைந்து  விட்டது

ஆனால் அதை அங்குள்ள மக்களோ

மாணவர்களோ  ஏன் அதிபர் ஆசிரியர்கள் கூட  கவனிக்கவில்லை

தடுக்க  வழிசெய்யவில்லை

இங்கிருந்து   ஊர் சென்ற ஒரு உறுப்பினரே அதை அவர்களின் கவனத்துக்கும் எமது கவனத்துக்கும் கொண்டு வந்தார்

இது தான் எல்லாவற்றிற்கும்?????

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

கட்டப்படும்போதே மிக முக்கியமான பிரச்சனையான   குளத்துக்கு  தேவையான 7லட்சம் லீற்றர் நல்ல தண்ணீர் எவ்வாறு பெறப்போகிறார்கள் என்பதுக்கு நடைமுறை சாத்தியமற்ற கடலநீரில் இருந்து நன்நீர் என்றார்கள் இன்று கவுண்டு போய் கிடக்கிறார்கள் .

யாழில் ஒருவருட மழை  வீழ்ச்சியின் அளவு தெரியுமா ? இந்த அரசியல்வாதிகளுக்கு ?

வெள்ளையானையை கொண்டுவந்து பாலைவனத்தில் வைத்து பராமரிப்பது போல் கதை .

நீங்கள் சொலவதின் படி, வடபகுதி அல்லது அதை ஒத்த காலநிலை உள்ள இலங்கைத்  தீவின் எந்த பகுதியிலும் செயற்கை நீச்சல் தடாகம் அமைக்க கூடாது.  

நீச்சல் தெரிந்து இருப்பது, முக்கியமாக வளர்ந்து வரும் தலைமுறைக்கு, பொருளாதாரம், உடல் நலம், பொழுதுபோக்கு என்பதில் முக்கியத்துவம் பெறுகிறது., ஏனெனில் எமது 2/3 அடிப்படை வளம் (நிலத்தை விட்டால்), கடலும், குளங்கள், ஆறுகள்.   

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

இதான் சொல்வது முந்திரித்தனமாய் மூக்கை நுழைக்க கூடாது என்பது .

என்கருத்துக்களை சரியாக வாசிக்காமல் வந்து கொளுவனும் என்பதுக்காக  இங்கு வந்து ................ .

நான் எங்கு நீச்சல் குளம் அமைப்பதை எதிர்த்தேன் ஏழு ஞாயிறு  சொல்வது போல் உள்ள திட்டமே  நடைமுறையில் சாத்தியம் என்பதையே இங்கு எழுதினது .அந்த நன்நீர் பிறப்பாக்கி இதுவரை அங்கு தொழில்ப்படவில்லை என்ற விபரமாவது தெரியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் உங்க ஆள் வடமராட்சி கிழக்கில் உள்ள ஐஸ் பாக்ரரிகளுக்கு அரசாங்கத்தால் அனுமதிக்க பட்ட அளவை விட கூடுதல் நிலக்கீழ் நன்நீரை உப யோகிக்க கோர்ட் ஏறி வாதாடி பெற்றுக்கொடுக்க இன்று வடமராட்ச்சியில் அநேக  நல் நீர் கிணறுகள் உவர்ப்பாக  மாறியுள்ளன சுமத்திரனுக்கு அந்த கேஸில் கிடைத்த வருமானம் தான் முக்கியம் அவரின் சுயநலத்தால்  பல்லாயிரக்கணக்கான மக்கள் உவர் நீரை பருகி இல்லாத நோய்களை சுமக்க தொடங்கியுள்ளார்கள் என்பதாவது அவருக்கு தெரியுமா ?

அங்கு 16 வயது பெண்பிள்ளைக்கும் சலரோகம் அங்கு 20 வயது ஆணுக்கு கழுத்தில் தைரொயிட் ஏன் என்று யாரவது சிந்திக்கிறார்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

நான் எங்கு நீச்சல் குளம் அமைப்பதை எதிர்த்தேன் ஏழு ஞாயிறு  சொல்வது போல் உள்ள திட்டமே  நடைமுறையில் சாத்தியம் என்பதையே இங்கு எழுதினது .அந்த நன்நீர் பிறப்பாக்கி இதுவரை அங்கு தொழில்ப்படவில்லை என்ற விபரமாவது தெரியுமா ?

நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்று சொல்லவில்லை.

ஆனால், நீங்கள்  சொன்ன மழை வீழ்ச்சி அளவு என்பது, யாழ் குடாவிற்கு பொதுவானது. வடபகுதியில் பல இடங்களுக்கும் பொருந்தும்.

அந்த இடங்களில் அமைத்தால் இந்த பிரச்னை வரும் என்று தானே சொல்கிறீர்கள்.

நன்னீர் பிறப்பாகி தொழில்படவில்லை என்று கவனிக்காமல் விட்டு விட்டார்கள் என்ற தோற்றமே நீங்கள் எழுதியதில் இருந்து விளங்க கூடியதாக உள்ளது.   

இததற்கான தீர்வு வழிமுறைகளை பற்றி (இந்த நீச்சல் தடகத்துக்கு) ஒருவருமே சிந்திக்கவில்லையா?      

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kadancha said:

யாழில் வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி எவ்வளவு ?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

யாழில் வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி எவ்வளவு ?

நினைவில் இல்லாவிட்டாலும் , அது பூச்சியத்திற்கு அண்மித்து இல்லை என்பது தெரியும், அதனால் மழை வீழ்ச்சி அளவு என்பது இரண்டாம், அல்லது மூன்றாம் பட்ச காரணம்.

ஓர் வசதி செய்து தரப்பட்டால், அதை பராமரிக்க வேண்டியது பாவிப்பார்கள் கடமை. 

பெருமாள், எல்லாவற்றையும் வேறு யாராவது பெற்று தருவார்கள் அல்லது செய்து தருவார்கள் என்று எதிர்பார்த்திஉ இருக்க கூடாது என்பதே நான் சொல்வது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kadancha said:

நன்னீர் பிறப்பாகி தொழில்படவில்லை என்று கவனிக்காமல் விட்டு விட்டார்கள் என்ற தோற்றமே நீங்கள் எழுதியதில் இருந்து விளங்க கூடியதாக உள்ளது.   

மக்களுக்கு என்று சொல்லி விட்டு ஏன் கவுன்சில் வைத்துக்கொண்டு இருக்குது உங்களுக்கு ஒன்று தெரியுமா அந்த ஊரில் பள்ளியும் சரி வைத்தியசாலையும் சரி அங்குள்ள ஊர் மக்களால் அமைக்கப்பட்டது  பேருக்கு அரசு மிகுதி 30 வீதமான கட்டிடடங்கள் அரசு அமைத்துக்கொண்டது இப்பவும் ஒன்றும் குறைந்து போகவில்லை மாநகரசபை அங்குள்ள மக்களிடம் பராமரிப்பை கொடுத்தாலே காணும் மிகுதியை அவர்கள் பார்த்துக்கொள்ளுவார்கள்  ஆனால் அரசியல் விடாது .

  • கருத்துக்கள உறவுகள்

சரி, பாவிக்காவிட்டாலும் அதை சுத்தமாக வைத்து இருக்கலாம் தானே? 

அதற்கான  ஊக்கம் ஏன் இல்லாமல் போனது, இப்படி விட்டால் தூர் வாரும்.   

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

பெருமாள், எல்லாவற்றையும் வேறு யாராவது பெற்று தருவார்கள் அல்லது செய்து தருவார்கள் என்று எதிர்பார்த்திஉ இருக்க கூடாது என்பதே நான் சொல்வது. 

வடகிழக்கில் எந்த  ஒரு ஊரையும் பார்க்காத உங்களுடன் வாதிடுவதில்  நேர விரயம் நன்றி வணக்கம் .

யாழில் நன் நீர் வளத்தை எப்படி கூட்டுவது என்று அருமையான திட்டத்தை கரவெட்டியை சேர்ந்த ஆனந்தராஜ எனும் எந்திரியார் 2015ல் வரைபு ஒரு பிளாக்கில் கண்டேன் சமிபத்தில் அதை தேடிய போது  காணவில்லை ஒரு சில நண்பர்களுடன் கதைத்த  போது  அவர் 2017ல் தவறி விட்டார் என்று சொல்கிறார்கள் அவர்பற்றிய மேலதிக விபரங்கள் யாரிடமும் இருக்கின்றதா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.