Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்!

spacer.png

சிறந்த நிர்வாகத் திறன் தொடர்பான தர வரிசையில் தென்மாநிலங்கள் முதன்மை இடத்திலும், வட மாநிலங்கள் பின் தங்கியும் உள்ளன.

நாட்டின் சிறந்த நிர்வாகத் திறனுள்ள மாநிலமாக கேரளா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்கள் பிரிவில் பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடைபெறும் உத்தர பிரதேசம் கடைசி இடத்தில் இருக்கிறது. பொது விவகாரங்கள் மையம் (public affairs centre) வெளியிட்ட 2020ஆம் ஆண்டுக்கான பொது விவகாரக் குறியீடு அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது.

பெங்களூருவைச் சேர்ந்த லாப நோக்கமற்ற தன்னார்வ அமைப்பான இந்த மையத்தின் தலைவராக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் செயல்பட்டு வருகிறார்.

மாநிலங்களின் நிலையான வளர்ச்சி மற்றும் நிர்வாகத் திறனை அடிப்படையாக வைத்து இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தரம், வளர்ச்சி, நிலைத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களின் நிர்வாக செயல்திறன் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பெரிய மாநிலங்கள் பட்டியலில் தென்னிந்திய மாநிலங்கள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. கேரளா 1.388 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 0.912 புள்ளிகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதேபோல ஆந்திரா 0.531, கர்நாடகா 0.468 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இந்தப் பிரிவில் உத்தரபிரதேசம் (- 1.461), ஒடிசா (-1.201) மற்றும் பீகார் (-1.158) உள்ளிட்ட வட மாநிலங்கள் எதிர்மறை புள்ளிகளைப் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளன.

சிறிய மாநிலங்கள் பட்டியலில் 1.745 புள்ளிகளுடன் கோவா முதலிடம் வகிக்கிறது. மேகாலயா (0.797) இரண்டாவது இடத்திலும், இமாச்சல் பிரதேசம் (0.725) மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. இதில் மணிப்பூர் (-0.363), டெல்லி (-0.289) மற்றும் உத்தராகண்ட் (-0.277) ஆகியவை மோசமான செயல்பாடுகளுடன் எதிர்மறை புள்ளிகளைப் பெற்று பின்தங்கின.

யூனியன் பிரதேசப் பகுதிகளில் சண்டிகர் 1.05 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் ஆளும் புதுச்சேரி மாநிலம் 0.52 புள்ளிகளுடன் இரண்டாமிடமும், லட்சத்தீவுகள் 0.003 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் இருக்கிறது. எதிர்மறை புள்ளிகளுடன் தாதர் நாகர் ஹாவேலி, அந்தமான் நிகோபர் தீவுகள், ஜம்மு காஷ்மீர் ஆகியவை மோசமான நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ளன

இதுதொடர்பாக கஸ்தூரி ரங்கன் கூறுகையில், “பிஏஐ தரும் சான்றுகள் மற்றும் அது வழங்கும் தரவுகள் ஆகியவை இந்தியாவில் நடந்து வரும் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தைப் பற்றி சிந்திக்க மாநிலங்களை கட்டாயப்படுத்த வேண்டும்” என்றார்.

https://minnambalam.com/politics/2020/10/31/4/-best-governed-states-and-ut-pac-ranking-taminadu-get-2nd-rank

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்க மாட்டார்களே இப்படியான குறிகாட்டிகளை? அந்த 0.912 என்ற இலக்கத்தை பத்தினால் வகுத்துத் தான் கணக்குப் பார்ப்போம் என்பார்களே ஐயா?

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது முன்பு  போல் ஊழல்களும் குழி பறிப்புக்களும்

குறைவாகத்தான் இருக்கின்றன

பின்னால்  வளர்ந்து  வருபவர்களின் மீதான  பயமும்

புதிய  தலைமுறையின்  மனமாற்றமும் காரணமாக  இருக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் ஆள்வதால் இருக்கலாம்!☺️

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, விசுகு said:

தற்பொழுது முன்பு  போல் ஊழல்களும் குழி பறிப்புக்களும்

குறைவாகத்தான் இருக்கின்றன

பின்னால்  வளர்ந்து  வருபவர்களின் மீதான  பயமும்

புதிய  தலைமுறையின்  மனமாற்றமும் காரணமாக  இருக்கலாம்

தமிழ் நாடு திராவிடர் ஆட்சியில் முன்னேறினாலும் "வீரத் தமிழர்" மீதான பயம் தான் காரணம் எண்டு சொல்ல வாறீங்கள் போல!😊

இப்போது மட்டுமல்ல, எப்போதுமே தென்மாநிலங்கள்  இந்தி பேசும் ஏனைய மாநிலங்களை விட பொருளாதாரத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் கொஞ்சம் முன்னணியில் தான்! இதற்கு அரசியல் வாதிகளை விட மக்களிடையே இருக்கும் உழைப்பாளிகள் தான் காரணம்!

ஆனால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இது மாறக் கூடும், வலது சாரிகள் ஆட்சிக்கு வந்து முதலீட்டாளர்களை ஆந்திரா, கர்நாடகம், கேரளா பக்கம் துரத்தினால்!

தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்கள் நீண்டகாலமாகவே பொருளாதாரத்திலும் கல்வியிலும் முன்னேறிய மாநிலங்களாகவே உள்ளன.   மத்திய அரசு வரி வருயாயில் முன்னேறிய மாநிலம் என்ற ரீதியில் தென்னிந்திய மாநிலங்களின் பங்களிப்பு வட மாநிலங்களை விட பல வருடங்களாக  அதிகமாகவே உள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, விசுகு said:

தற்பொழுது முன்பு  போல் ஊழல்களும் குழி பறிப்புக்களும்

குறைவாகத்தான் இருக்கின்றன

பின்னால்  வளர்ந்து  வருபவர்களின் மீதான  பயமும்

புதிய  தலைமுறையின்  மனமாற்றமும் காரணமாக  இருக்கலாம்

உண்மைதான் விசுகர்!  அண்மைக்காலமாக நாம் தமிழர் கட்சியின் செயல்த்திட்ட பிரச்சாரங்களை தென்மானில அரசுகள் அமுல் படுத்தி வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. தெலுங்கு தேசத்திலும் மலையாள தேசத்திலும் நாம் தமிழர் கட்சியின் திட்டங்களை   அதிகமாகவே செயல் படுத்துகின்றார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

அண்மைக்காலமாக நாம் தமிழர் கட்சியின் செயல்த்திட்ட பிரச்சாரங்களை தென்மானில அரசுகள் அமுல் படுத்தி வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. தெலுங்கு தேசத்திலும் மலையாள தேசத்திலும் நாம் தமிழர் கட்சியின் திட்டங்களை   அதிகமாகவே செயல் படுத்துகின்றார்கள்..

தெலுங்கு தேசம் என்ன மலையாள தேசம் என்ன அமெரிக்கா, உங்கள் யேர்மனியே நாம் தமிழர் கட்சியின் திட்டங்களை அதிகமாகவே செயல்படுத்தி முன்னேறுகிறார்கள் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தெலுங்கு தேசம் என்ன மலையாள தேசம் என்ன அமெரிக்கா, உங்கள் யேர்மனியே நாம் தமிழர் கட்சியின் திட்டங்களை அதிகமாகவே செயல்படுத்தி முன்னேறுகிறார்கள் 🤣

தலை கீழாக/விதண்டாவாதமாக சிந்திக்கும் உங்கள் பார்வை ஒரு பக்கம் நிற்க......

மேற்குலகில் வெற்றி பெற்ற விடயங்களைத்தான் நாம் தமிழர் கட்சியினரும் முன் வைக்கின்றார்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

தெலுங்கு தேசம் என்ன மலையாள தேசம் என்ன அமெரிக்கா, உங்கள் யேர்மனியே நாம் தமிழர் கட்சியின் திட்டங்களை அதிகமாகவே செயல்படுத்தி முன்னேறுகிறார்கள் 🤣

இதில் நக்கல் நளினத்திற்கு என்ன இருக்கிறது ☹️

சுயசார்பு பொருளாதாரம் என்பதுபுதியவிடயம் அல்லவே 🤥

நா.த.க வின் (சுய சார்புக்)கொள்கைகளை திமுக அல்லது அதிமுக கொண்டிருந்தால் உங்கள் நக்கல் வந்திருக்குமா 🤔

அதிகாரம் செலுத்த முற்படுவீர்கள் அது சரிவரவில்லையென்றால் கூழைக் கும்பிடு. 😏

  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் அவர்கள் சுயமாக ஓய்வுபெற்று சேவையிலிருந்து விடுபட விண்ணப்பித்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக தமிழ்நாட்டின் நிர்வாகக் மையமாகத்திகழும் தலைமைச்செயலகத்துக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என விகடன் இணையச்செய்தி கூறுகிறது.

இந்த கருத்துக்கணிப்பு சுத்த கம்பேக் தற்போது தமிழ்நாட்டை ஆழ்வது ஓபிஎஸ் தலைமியிலான அ தி மு க என்றால் யாராவது மாங்காய் மடையன் நம்புவான். மத்தியில் ஆளும் ப ஜ கவே தமிழ் நாட்டை ஆழ்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு வானதி சீனிவாசன் கூறியதை நினைவுபடுத்துகிறேன்.

யார் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என நாம்தான் தீர்மானிக்கவேண்டும் என. திமுக்காவுக்குச் சளைத்ததாக அதிமுக ஊழலில் ஊறியிருப்பது எல்லோருக்கும் தெரியும் விஜயபாஸ்கரின் குதா ஊழல் கோப்புகள் தொடங்கி ஓபிஎஸ்சின் ஊழல் வரைக்குமான அனைத்தும் இப்போது பாஜாக கைவசம் இருக்கு.

அதாவது பாஜக தமிழகத்தில் வலுவாகும்வரைக்கும் தொடர்ந்தும் இந்த நிலையைத் தக்கவைக்க ஒரு லெட்டர்பாட் அமைப்புக்குச் சொல்லி ஒரு அறிக்கையைத் தட்டி விட்டிருக்கு அதெளக்காக நாம் யாழ் களத்தில் குத்தி முறிகிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Elugnajiru said:

எழுஞாயிறு, என்னென்னவோ எழுதியிருக்கிறீர்கள், எழுத முதல் நீங்கள் குறிப்பிடும் "கருத்துக் கணிப்பு" என்பது 25 ஆண்டுகளாக இயங்கும் ஒரு அமைப்பின் பொருளாதார/சமூகத் தரவுகள் அடிப்படையிலான அறிக்கை என்றாவது முயற்சி செய்து கண்டறிந்திருக்கலாம்!

மறந்து விட்டேன், குதிரைக்கு முன்னால்  வண்டிலைப் பூட்டும் ஆளாயிற்றே நீங்கள்! முடிவு முன்னால், data பின்னால்!☺️

Edited by Justin
பிழை திருத்தம்

5 hours ago, Elugnajiru said:

.

இந்த கருத்துக்கணிப்பு சுத்த கம்பேக் தற்போது தமிழ்நாட்டை ஆழ்வது ஓபிஎஸ் தலைமியிலான அ தி மு க என்றால் யாராவது மாங்காய் மடையன் நம்புவான். மத்தியில் ஆளும் ப ஜ கவே தமிழ் நாட்டை ஆழ்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு வானதி சீனிவாசன் கூறியதை நினைவுபடுத்துகிறேன்.

அதாவது பாஜக தமிழகத்தில் வலுவாகும்வரைக்கும் தொடர்ந்தும் இந்த நிலையைத் தக்கவைக்க ஒரு லெட்டர்பாட் அமைப்புக்குச் சொல்லி ஒரு அறிக்கையைத் தட்டி விட்டிருக்கு அதெளக்காக நாம் யாழ் களத்தில் குத்தி முறிகிறோம். 

முதலில் இது கருத்து கணிப்பு அல்ல. மாநிலங்களின் வளர்சசி, நிர்வாகத்திறன் போன்ற பல விடயங்களை பகுப்பாய்வு செய்து அதற்கு சுட்டிகள் வழங்கப்படுவதாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க சார்பானது என்றால்  அவர்களுகள் எப்போதுமே வெறுக்கும் கம்யூனிஸ் கட்சி ஆட்சி நடத்தும் கேரளத்திற்கு முதலிடம் கிடைத்திராது. அதே வேளை பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசத்திற்கு இறுதி இடம் வழங்கப்பட்டிருப்பதை கவனிக்கவேண்டும். 

தமிழ்நாடு உட்படதென்மாநிலங்கள் நீண்ட காலமாகவே வளர்சசியடைந்த மாநிலங்களாக  உள்ளது என்ற  உண்மை இங்கு சிலருக்கு ஏனோ கசக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ளகூடியதாக உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

5 hours ago, Justin said:

எழுஞாயிறு, என்னென்னவோ எழுதியிருக்கிறீர்கள், எழுத முதல் நீங்கள் குறிப்பிடும் "கருத்துக் கணிப்பு" என்பது 25 ஆண்டுகளாக இயங்கும் ஒரு அமைப்பின் பொருளாதார/சமூகத் தரவுகள் அடிப்படையிலான அறிக்கை என்றாவது முயற்சி செய்து கண்டறிந்திருக்கலாம்!

மறந்து விட்டேன், குதிரைக்கு முன்னால்  வண்டிலைப் பூட்டும் ஆளாயிற்றே நீங்கள்! முடிவு முன்னால், data பின்னால்!☺️

எனக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் வாய்க்கால் வரப்புத் தகராறு ரெம்பநாளாகத் தொடர்கிறது.

கேரளாவில் நெடுநாளாகக் கம்யூனிஸ்டுகள் பலமாக இருக்கிறார்கள் ஆனால் இப்போது தமிழ்நாட்டில் அரசியல் தலமையில் வெற்றிடம் இருக்கு காலப்போகில் கேரளாவுக்கும் இதே நிலை வரலாம். 

இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் நிகர் நிலைப்  பல்கலைக்கழகம் எனும் பெயரில் ஆயிரக்கானக்கான மோசடிப் பல்கலைக்கழகங்கள் இருக்கும்போது எதற்கும் இருக்கட்டுமே என எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட இந்தமாதிரி அமைப்புகளைக்கொண்டு அறிக்கையைத் தயாரிப்பது பெரிய விடையம் இல்லை. 

அப்படி அவர்கள் மறுத்தால் இருக்கவே இருக்கு வருமானவரிச் சோதனை இதை நான் கூறவில்லை நடிகர் சத்தியராJ அவர்கள் எதையோ கூற தமிழிசை சவுந்தரராஜன் அவரது வீட்டுக்கு ஒரு ரைட் நடத்திவிட்டால் எல்லாம் சரி எனக்கூறியதை நினைவுபடுத்தவும்.

கூவத்தூரில் புறியாணிப்பொட்டலத்துடன் விருந்து படைத்து ஆட்டுமந்தைகளாக அடைத்துவைத்து முதல்வரைத் தேர்வுசெய்த கேவலம் நடந்தபின்பும் அந்த ஆட்சியைக் கலைக்காது அதை அடிமைப்படுத்தி தனது கட்சியின் நலனுக்காக அதைபாவிக்கும் மத்திய பாஜக அரசும், பத்திரிகைகளி வேலை செய்யும் பெண்கள் தங்களது மேலதிகாரிகளைப் பாலியல்ரீதியில் திருப்திப்படுத்தெயே பணியைத் தொடர்கிறார்கள் எனக்கூறிய நடிகர் எஸ் வீ சேகருக்கு அரஸ்ட் வாரண்ட் நீதிமன்றால் கொடுக்கப்பட்டும் கைதுசெய்யவேண்டிய காவல்துறை கான்ஸ்டபிளே அவருக்குக் காவல் காத்ததும் கள உறவுகளுக்கு நினைவில்லைப்போல. 

நான் வண்டிலைக் குதிரைக்குமுன்பூட்டிப் பயணம் செய்யலாம் ஆனால் எனது கண்களுக்கு லாடம் கட்டிவிட்டு, கடந்தவைகளை மறந்து கனவுலகில் ஆகா இந்தியா வல்லரசாகிவிடும் கனவுகாண்போம் என அப்துல் கலாம் சொன்னவுடன் மல்லாக்காப் படுத்துக்கொண்டு கனவு காணவில்லை.

இந்தியாவுடணோ அல்லது தமிழ் நாட்டுடணோ எனக்கு ஒரு கொண்டான் கொடுத்தான் விடையத்தில் பிரச்சனை இருக்கு அதுதான் நான் இப்படிக்கூவுகிறேன். சும்மா போங்கசார்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

சுயசார்பு பொருளாதாரம் என்பதுபுதியவிடயம் அல்லவே

நா.த.க வின் (சுய சார்புக்)கொள்கைகளை திமுக அல்லது அதிமுக கொண்டிருந்தால் உங்கள் நக்கல் வந்திருக்குமா

சுயசார்பு பொருளாதாரம் என்பது புதியவிடயம் அல்ல.
கம்யுனிசத்தில் கொஞ்சம் எடுத்து ஹிட்லரிசத்தில் அதிகம் எடுத்து கலந்து நாம் தமிழர் கட்சி தெரிவிப்பதை  தென்மானில அரசுகள் அமுல் படுத்தி வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது என்று இங்கே நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் தெரிவித்ததை போன்று திமுக அல்லது அதிமுக ஆதரவாளர் தெரிவித்தாலும்...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

எனக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் வாய்க்கால் வரப்புத் தகராறு ரெம்பநாளாகத் தொடர்கிறது.

கேரளாவில் நெடுநாளாகக் கம்யூனிஸ்டுகள் பலமாக இருக்கிறார்கள் ஆனால் இப்போது தமிழ்நாட்டில் அரசியல் தலமையில் வெற்றிடம் இருக்கு காலப்போகில் கேரளாவுக்கும் இதே நிலை வரலாம். 

இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் நிகர் நிலைப்  பல்கலைக்கழகம் எனும் பெயரில் ஆயிரக்கானக்கான மோசடிப் பல்கலைக்கழகங்கள் இருக்கும்போது எதற்கும் இருக்கட்டுமே என எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட இந்தமாதிரி அமைப்புகளைக்கொண்டு அறிக்கையைத் தயாரிப்பது பெரிய விடையம் இல்லை. 

அப்படி அவர்கள் மறுத்தால் இருக்கவே இருக்கு வருமானவரிச் சோதனை இதை நான் கூறவில்லை நடிகர் சத்தியராJ அவர்கள் எதையோ கூற தமிழிசை சவுந்தரராஜன் அவரது வீட்டுக்கு ஒரு ரைட் நடத்திவிட்டால் எல்லாம் சரி எனக்கூறியதை நினைவுபடுத்தவும்.

கூவத்தூரில் புறியாணிப்பொட்டலத்துடன் விருந்து படைத்து ஆட்டுமந்தைகளாக அடைத்துவைத்து முதல்வரைத் தேர்வுசெய்த கேவலம் நடந்தபின்பும் அந்த ஆட்சியைக் கலைக்காது அதை அடிமைப்படுத்தி தனது கட்சியின் நலனுக்காக அதைபாவிக்கும் மத்திய பாஜக அரசும், பத்திரிகைகளி வேலை செய்யும் பெண்கள் தங்களது மேலதிகாரிகளைப் பாலியல்ரீதியில் திருப்திப்படுத்தெயே பணியைத் தொடர்கிறார்கள் எனக்கூறிய நடிகர் எஸ் வீ சேகருக்கு அரஸ்ட் வாரண்ட் நீதிமன்றால் கொடுக்கப்பட்டும் கைதுசெய்யவேண்டிய காவல்துறை கான்ஸ்டபிளே அவருக்குக் காவல் காத்ததும் கள உறவுகளுக்கு நினைவில்லைப்போல. 

நான் வண்டிலைக் குதிரைக்குமுன்பூட்டிப் பயணம் செய்யலாம் ஆனால் எனது கண்களுக்கு லாடம் கட்டிவிட்டு, கடந்தவைகளை மறந்து கனவுலகில் ஆகா இந்தியா வல்லரசாகிவிடும் கனவுகாண்போம் என அப்துல் கலாம் சொன்னவுடன் மல்லாக்காப் படுத்துக்கொண்டு கனவு காணவில்லை.

இந்தியாவுடணோ அல்லது தமிழ் நாட்டுடணோ எனக்கு ஒரு கொண்டான் கொடுத்தான் விடையத்தில் பிரச்சனை இருக்கு அதுதான் நான் இப்படிக்கூவுகிறேன். சும்மா போங்கசார்.

உங்களுடைய கொண்டான் கொடுத்தான் பிரச்சினையை நீங்கள் யாழ் களத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள வேண்டும்!😊

நான் சுட்டிக் காட்டியதெல்லாம், இந்த நிரலைத் தயாரித்த அமைப்பு நிகர் நிலைப் பல்கலையும் அல்ல, உங்கள் கற்பனைகளில் நீங்கள் குறிப்பிடும் அமைப்புகளும் அல்ல! தரவுகளை வைத்து "நல்லாட்சிக்காக" பல ஆண்டுகளாக உழைக்கும் ஒரு அமைப்பு! 

எதையும் "கொண்டான் கொடுத்தான் பிரச்சினை, வாய்க்கால் வரம்புப் பிரச்சினை" என்ற கோபத்தில் பார்ப்பதை விட்டு உலக விடயங்களை அறிந்து கொள்வதும் விளங்கிக் கொள்வதும் முக்கியம்!

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சுயசார்பு பொருளாதாரம் என்பது புதியவிடயம் அல்ல.
கம்யுனிசத்தில் கொஞ்சம் எடுத்து ஹிட்லரிசத்தில் அதிகம் எடுத்து கலந்து நாம் தமிழர் கட்சி தெரிவிப்பதை  தென்மானில அரசுகள் அமுல் படுத்தி வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது என்று இங்கே நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் தெரிவித்ததை போன்று திமுக அல்லது அதிமுக ஆதரவாளர் தெரிவித்தாலும்...

பொருளாதார விடயங்கள் என்று வரும்போது பொருளாதாரத்தை மட்டும் நோக்குங்கள். நா. த. க யினரின் பல கொள்கைகள் விளக்கக் குறைவாகவும் காலத்துக்கு ஒத்ததாகவும் இல்லாமலிருக்கலாம். ஆனால் அவர்கள் முன்வைக்கும் பல கொள்கைகளை அண்டை மானிலங்கள் செயற்படுத்த முனைவது உண்மை. அதை உங்களால் மறுக்க முடியாது. 

ஆனால் ..

ஒட்டுமொத்தமாக ஆதரவாளர்களை நையாண்டி செய்வது அவர்கள் மேலுள்ள வெறுப்பினால்  அல்லது காழ்ப்புணர்ச்சியினால் என்பது என் கணிப்பு. அது சரியானதும் அல்ல. ☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, tulpen said:

முதலில் இது கருத்து கணிப்பு அல்ல. மாநிலங்களின் வளர்சசி, நிர்வாகத்திறன் போன்ற பல விடயங்களை பகுப்பாய்வு செய்து அதற்கு சுட்டிகள் வழங்கப்படுவதாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க சார்பானது என்றால்  அவர்களுகள் எப்போதுமே வெறுக்கும் கம்யூனிஸ் கட்சி ஆட்சி நடத்தும் கேரளத்திற்கு முதலிடம் கிடைத்திராது. அதே வேளை பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசத்திற்கு இறுதி இடம் வழங்கப்பட்டிருப்பதை கவனிக்கவேண்டும். 

தமிழ்நாடு உட்படதென்மாநிலங்கள் நீண்ட காலமாகவே வளர்சசியடைந்த மாநிலங்களாக  உள்ளது என்ற  உண்மை இங்கு சிலருக்கு ஏனோ கசக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ளகூடியதாக உள்ளது. 

இந்தியாவிலேயே சகல வளமும் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடும் மற்றும் தென் மாநிலங்களும். மட்டுமே......அதிலும் தமிழ்நாடு சகல வளமும் பெற்ற நாடு. இங்கே சுரண்டல் அரசியல் நிறைந்துள்ளதை நீங்களும் உங்களைப்போன்ற பொதுவுடமை மனிதர்களும் புரிய மறுப்பது சகஜம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இந்தியாவிலேயே சகல வளமும் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடும் மற்றும் தென் மாநிலங்களும். மட்டுமே......அதிலும் தமிழ்நாடு சகல வளமும் பெற்ற நாடு. இங்கே சுரண்டல் அரசியல் நிறைந்துள்ளதை நீங்களும் உங்களைப்போன்ற பொதுவுடமை மனிதர்களும் புரிய மறுப்பது சகஜம்.

இது முற்றிலும் சரியான கருத்தல்ல! பெருமளவான வளங்களில் முன்னணி வகிப்பது பிரதான ஆறுகளின் தோற்றுவாய்க்கு அருகே இருக்கும் பஞ்சாப் போன்ற மானிலங்கள் தான்! 

தென் மாநிலங்களில், கல்வியும் அதனால் மனித வளமும் சிறப்பு!

ஆனால், இந்தத் திரியைப் பொறுத்தவரை, சுரண்டல் ஊழலும் பெரிதாக முன்னேற்றத்தின் குறிகாட்டிகளைப் பாதிக்கவில்லை! ஆனால், மக்களின் பூரணமான நிலைமையை இந்தக் குறிகாட்டிகள் பிரதிபலிக்க மாட்டாது என்பதும் உண்மை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, Justin said:

தென் மாநிலங்களில், கல்வியும் அதனால் மனித வளமும் சிறப்பு!

கல்வி வளம் மட்டும் மனித வளம் மட்டும் போதாது இயற்கை வளம் அத்தியாவசியம். அது தமிழ்நாட்டில் அதிகம். அதனால் வட மாநிலத்தவர் வருகை அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கல்வி வளம் மட்டும் மனித வளம் மட்டும் போதாது இயற்கை வளம் அத்தியாவசியம். அது தமிழ்நாட்டில் அதிகம். அதனால் வட மாநிலத்தவர் வருகை அதிகம்.

தண்ணீருக்கே மூன்று மாநிலங்கள் அடித்துக் கொள்கின்றன. நீங்கள் இயற்கை வளமென்று எதைக் குறிப்பிடுகிறீர்களோ புரியவில்லை!

வேறு மாநிலத்தவர் வருவது தொழில் நுட்பத் துறையில் தெற்கு சிறந்து விளங்குவதால். தமிழகத்தின் தற்போதைய மொத்த வருமானத்தில் 20% இற்கும் குறைவாகத் தான் இயற்கை வளம் சார்ந்த விவசாயத்தினால் கிடைக்கிறது என கருதுகிறேன். மிகுதி தொழில் துறை உற்பத்திகளும் சேவைகளும்! 

9 hours ago, குமாரசாமி said:

இந்தியாவிலேயே சகல வளமும் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடும் மற்றும் தென் மாநிலங்களும். மட்டுமே......அதிலும் தமிழ்நாடு சகல வளமும் பெற்ற நாடு. இங்கே சுரண்டல் அரசியல் நிறைந்துள்ளதை நீங்களும் உங்களைப்போன்ற பொதுவுடமை மனிதர்களும் புரிய மறுப்பது சகஜம்.

ஊழலும் சுரண்டலும் தெற்காசிய அரசியல்வாதிகளுடம் உள்ள ஒழிக்கப்பட வேண்டிய பிரச்சனைதான். 2 மில்லியனே உள்ள ஈழத்தமிழர்களிடையேயே  பல ஊழல் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களை நேரில் கண்டவர்கள் நாம். எனவே  தமிழ்நாட்டில் உள்ள 80 மில்லியன் தமிழ் மக்களில் இவ்வாறு ஊழல் அரசியலவாதிகள் இருப்பது தெரிந்த விடயம் தான். அதை மீறி அங்கு வளர்சசி உள்ளதற்கு   69 வீத இட ஒதுக்கீட்டால் கல்வி, பல மட்டங்களில் உள்ள மக்களை  சென்றடைந்ததும் ஒரு காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடே 2வது இடத்திலிருக்கென்றால் மற்ற மாநிலங்களின் நிலமை🤔

அரசியல் வாதிகள் தங்கள் குடும்பத்திற்கும் சாதி மத வெறிக்கு உழைக்கின்றார்கள், நாட்டின் முன்னேற்றத்திற்கு அல்ல, 

இந்தியா & அரசியல் வாதிகள்வெட்கப்பட வேண்டும் வெங்காய இறக்குமதிக்கு.  

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

ஆனால், இந்தத் திரியைப் பொறுத்தவரை, சுரண்டல் ஊழலும் பெரிதாக முன்னேற்றத்தின் குறிகாட்டிகளைப் பாதிக்கவில்லை! ஆனால், மக்களின் பூரணமான நிலைமையை இந்தக் குறிகாட்டிகள் பிரதிபலிக்க மாட்டாது என்பதும் உண்மை!

நானும் இதைத்தான் கூற நினைத்தேன். அபிவிருத்தி என்பது ஒரு புறம் இருக்க அதனால் தமிழக மக்கள் எல்லோரும் (அடித்தட்டு மக்கள் உட்பட) பயனடைகிறார்களா அல்லது மேல்தட்டு மக்களும் ஊழல் அரசியல்வாதிகளும்தான் பயனடைகிறார்களா என்பதுதான் கேள்வி??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

நானும் இதைத்தான் கூற நினைத்தேன். அபிவிருத்தி என்பது ஒரு புறம் இருக்க அதனால் தமிழக மக்கள் எல்லோரும் (அடித்தட்டு மக்கள் உட்பட) பயனடைகிறார்களா அல்லது மேல்தட்டு மக்களும் ஊழல் அரசியல்வாதிகளும்தான் பயனடைகிறார்களா என்பதுதான் கேள்வி??

இது எந்தக் குறிகாட்டிகளைக் கொண்டு அறிக்கை தயாரிக்கப் பட்டது என்பதைப் பொறுத்தது. தனி நபர் வருமானம் (PCI) மட்டும் என்றால் அது சராசரி அளவீடு மட்டுமே! நாட்டில் இருக்கும் ஏழைகளுக்கு அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே சுவறும்! இது எந்த நாட்டிற்கும் பொருந்தும்.

சேவைகளின் தரம், மக்கள் அரச நிர்வாகத்தை எப்படிப் பார்க்கின்றனர் போன்ற குறிகாட்டிகள் பயன்பட்டால், அது ஒருவரின் சமூக நிலையினால் சிறிய அளவிலேயே பாதிக்கப் படும் ஒரு குறிகாட்டி!
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.