Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கமலா ஹாரிஸின் வெற்றிக்கு உதவிய எனது மருமகள்: சத்ருகன் சின்ஹா

shatrughan-sinha-reveals-niece-preeta-was-closely-associated-with-kamala-harris-shares-pic  
 

ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெற்றிக்கு தனது மருமகள் உதவியதாக பாஜக முன்னாள் எம்.பி. சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சத்ருகன் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில், “ மனமார்ந்த வாழ்த்துக்கள். ஜோ பிடனின் அற்புதமான மற்றும் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை உலகமே கொண்டாடி வருகிறது. அதேபோல், கமலா ஹாரிஸின் வெற்றியும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த புகைப்படத்தில் கமலா ஹாரிஸுடன் இருப்பவர் பிரீத்தி சின்ஹா எனது மருமகள். இவர் கமலா ஹாரிஸ் கட்சியின் இளைஞர் அணியுடன் இணைந்து வெற்றிக்காக பாடுபட்டார்.

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் எங்களது பிரீத்தியின் பங்கு அதிகமாக இருந்தது.வெற்றிக்கு பாடுபட்ட ப்ரீதாவுக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

promoting & encouraging our own kamala & her people for this outstanding mega win. Our daughter, Preeta too deserves Kudos! Well done! God Bless! pic.twitter.com/MY4FSLl3Rv

— Shatrughan Sinha (@ShatruganSinha) November 8, 2020

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதி வாக்குகளில் 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் 214 பிரதிநிதிகள் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

https://www.hindutamil.in/news/india/600133-shatrughan-sinha-reveals-niece-preeta-was-closely-associated-with-kamala-harris-shares-pic-1.html

  • Replies 203
  • Views 22.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

124657731_188399289552220_7453004435579975104_o.jpg?_nc_cat=104&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=IOydYBSJym4AX-jWIVC&_nc_ht=scontent-frt3-1.xx&oh=eb921f3805ed981645d05c6613ac43c1&oe=5FCE3C4C

  • கருத்துக்கள உறவுகள்

ரோஹிணி ரவீந்திரன்  யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் இவர்தான் கமலா ஹாரிஸின் 
சீவ் ஒப்பி ஸ்டாவ் இவர் 2016இல் இருந்து கமலாவுக்கு வேலை செய்து வருவதோடு 
முழு டீமையும் வலி நடத்துவது இவர் தான். கமலா காரிஸ் ஜனாநாயக கட்சி ஜனாதிபதி வேட்ப்பாளராக 
நின்றபோதும் முழு பிரச்சார வேலைகளையும் செய்தவர் இவர்தான். 

இவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் நாட்களில் இருந்து பல ஜனநாயக கட்சி மேஜர் செனட்டர் களின் 
பிரச்சார குழுக்களில் வேலை செய்து வந்தவர். 

In announcing Kosoglu's elevation to chief of staff, Harris said in a statement that 'Rohini has been an invaluable leader on our team as we've fought for our shared values and the best of who we are during these first two years.

'Californians, and All Americans, are looking to their leaders in Washington, D.C. to protect our families and communities, and I'm proud to continue that fight with Rohini,' Harris said.

முன்னணி சிங்கள ஊடங்களில் இவரை பற்றிய செய்தி வருகிறது 
இவரது தாய் தந்தையர் பற்றி எல்லாம் அவர்கள் விரிவாக எழுதுகிறார்கள் 
எங்கள் கூமுட்டி தமிழ் ஊடகங்கள் கண்ணுக்கு இன்னமும் படவில்லை என்று எண்ணுகிறேன். 

Sri Lankan-American Rohini Lakshmi Kosoglu breaks barriers on way to  Capitol Hill | Indian-Americans | indiaabroad.com

Image

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

ரோஹிணி ரவீந்திரன்  யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் இவர்தான் கமலா ஹாரிஸின் 
சீவ் ஒப்பி ஸ்டாவ் இவர் 2016இல் இருந்து கமலாவுக்கு வேலை செய்து வருவதோடு 
முழு டீமையும் வலி நடத்துவது இவர் தான். கமலா காரிஸ் ஜனாநாயக கட்சி ஜனாதிபதி வேட்ப்பாளராக 
நின்றபோதும் முழு பிரச்சார வேலைகளையும் செய்தவர் இவர்தான். 

முன்னணி சிங்கள ஊடங்களில் இவரை பற்றிய செய்தி வருகிறது 
இவரது தாய் தந்தையர் பற்றி எல்லாம் அவர்கள் விரிவாக எழுதுகிறார்கள் 
எங்கள் கூமுட்டி தமிழ் ஊடகங்கள் கண்ணுக்கு இன்னமும் படவில்லை என்று எண்ணுகிறேன். 

Sri Lankan-American Rohini Lakshmi Kosoglu breaks barriers on way to  Capitol Hill | Indian-Americans | indiaabroad.com

Image

எங்களுடைய கூமுட்டி ஊடகங்கள்.... ரஜனி, அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா என்ற ஆராய்ச்சியில் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, Maruthankerny said:

ரோஹிணி ரவீந்திரன்  யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் இவர்தான் கமலா ஹாரிஸின் 
சீவ் ஒப்பி ஸ்டாவ் இவர் 2016இல் இருந்து கமலாவுக்கு வேலை செய்து வருவதோடு 
முழு டீமையும் வலி நடத்துவது இவர் தான். கமலா காரிஸ் ஜனாநாயக கட்சி ஜனாதிபதி வேட்ப்பாளராக 
நின்றபோதும் முழு பிரச்சார வேலைகளையும் செய்தவர் இவர்தான். 

இவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் நாட்களில் இருந்து பல ஜனநாயக கட்சி மேஜர் செனட்டர் களின் 
பிரச்சார குழுக்களில் வேலை செய்து வந்தவர். 

யூதர்களை போல மூளைசாலிகள் எண்டது உண்மை தான் 😁

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

யூதர்களை போல மூளைசாலிகள் எண்டது உண்மை தான் 😁

ஆனால் ஒற்றுமை தான் குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

எங்களுடைய கூமுட்டி ஊடகங்கள்.... ரஜனி, அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா என்ற ஆராய்ச்சியில் இருக்கிறார்கள்.

 

45 minutes ago, குமாரசாமி said:

யூதர்களை போல மூளைசாலிகள் எண்டது உண்மை தான் 😁

 

33 minutes ago, ஏராளன் said:

ஆனால் ஒற்றுமை தான் குறைவு.

ஒரு ஈழத்தமிழர் துணை அதிபரின் மதியுரைஞராகவும் பாதுகாப்பு மற்றும் வேலை ஆட்களின் தலைமை பொறுப்பதிகாரியாகும் வெள்ளை மாளிகைக்கு போக போகிறார் என்றதும். சிங்களவர்கள் உசாராக இருக்கிறார்கள் இவரின் பூர்விகம் முதல் ஆய்வு செய்து எழுதுகிறார்கள் இவர்கள் புலிகளின் அபிமானிகள் என்ற கசப்பான எண்ணம் அவர்களுக்கு இன்னமும் கசப்பாகி இருக்கிறது. எதிரி மிகவும் உசாராக இருக்கிறான் எங்கள் தலைவர்கள் மக்களை ஏய்த்து பிழைப்பதில் கவனமாக இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

dd

கமலா ஹாரிஸ் அவர்களுக்கு, ஸ்ராலின்... எழுதிய வாழ்த்துக் கடிதம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

பைடனின் அரசமைப்பில் இன்னொரு தமிழரும் வெள்ளை மாளிகை செல்கிறார் 
சின்ன கவுண்டரம்மா மருத்துவ (தோற்று நோய்) ஆலோசகராக பணியாற்ற இருக்கிறார் இவரது தந்தை ஈரோடு தமிழ் நாட்டை சேர்ந்தவர் இவர் பிறந்தது அமெரிக்காவில் ஜான் கோபின்சன் மருத்துவ பீடத்தில் பணியாற்றி வருகிறார் 

செலின் கவுண்டர்  

10454898_648680658599161_9182393844277817841_o.jpg?_nc_cat=101&ccb=2&_nc_sid=09cbfe&_nc_ohc=W1pcDzgJvgkAX9sa9SK&_nc_ht=scontent.ffcm1-2.fna&oh=53851d35af19eb2951b53b172b8479ea&oe=5FD0598D

10535573_519635151503713_7546924548181717131_o.jpg?_nc_cat=108&ccb=2&_nc_sid=09cbfe&_nc_ohc=bM9LS89qrFsAX8OvPFL&_nc_ht=scontent.ffcm1-2.fna&oh=69a1f11c0909923da0a0e4675d067007&oe=5FCEC5D1

 

Céline Gounder, MD, ScM, FIDSA

 

 

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

ஆனால் ஒற்றுமை தான் குறைவு.

யூதனை போல தமிழர்களும் மூளைசாலிகள் எண்டு சொல்லி வாக்கு கேட்டது அமிர்தலிங்கம் கொம்பனி. அப்பிடியே ஈழத்தமிழர்களிடையே ஒற்றுமையை சீர்குலைத்தவர்களும் அதே அமிர்தலிங்கம் கொம்பனிதான்......அதிலை ஒண்டு இரண்டு இப்பவும் மிஞ்சியிருக்குதுகள். அதே வக்கிரத்தை தொடர்ந்து விதைக்குதுகள்.

4 hours ago, தமிழ் சிறி said:

dd

கமலா ஹாரிஸ் அவர்களுக்கு, ஸ்ராலின்... எழுதிய வாழ்த்துக் கடிதம்.

 அன்புள்ள சிறித்தம்பி! கடிதத்தின்ரை மிச்சத்தையும் இணையுங்கோ..... பொழிப்பு எக்கச்சக்கம் அதிலை கிடக்கு 😂

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை நாங்கள் யாழ்ப்பாணத்தார், தமிழர் என்றழைப்பதெல்லாம் முக்கியமல்ல! இவர்கள் தங்களை தமிழர், யாழ்ப்பாணத்தார் என்று அழைக்கிறார்களா என்பதே முக்கியம்😎 

(இது சத்தியமாய் என் சொந்தக் கேள்வியல்ல, எடப்பாடியாரைப் பார்த்து பலர் கேட்ட கேள்வி!)

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Justin said:

இவர்கள் தங்களை தமிழர், யாழ்ப்பாணத்தார் என்று அழைக்கிறார்களா என்பதே முக்கியம்😎 


மிகச்சரியாக சொன்னீர்கள் 👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

அமெ. புதிய தலைமை தமிழர்கள் நீதியைப் பெறுவதற்கு ஒத்துழைக்க வேண்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்

 
suresh-premachandran-011.png
 3 Views

அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன், “புதிய தலைவர்கள், இலங்கையில் பல தசாப்தகாலமாக தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துவரும் ஈழத் தமிழ் மக்கள் தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு தமது பரிபூரண ஒத்துழைப்பினை காத்திரமாகவும் வினைதிறனுடனும் அளிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு வடிவம் வருமாறு:

அமெரிக்காவிற்கான 46ஆவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து முடிவடைந்துள்ளது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோஸப் ரொபினட் பைடன் அவர்கள் ஜனாதிபதியாகவும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹரிஷ் அவர்கள் துணை ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஈழத் தமிழ் மக்களின் இதயபூர்வ வாழ்த்துகள்.

ஆபிரிக்க கறுப்பின வழித்தோன்றலான ஒபாமாவை ஜனாதிபதியாக்கி அழகுபார்த்த அமெரிக்க மக்கள், தென்னாசியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை துணை ஜனாதிபதியாக்கி ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளனர். தேர்தலில் வென்ற அமெரிக்கத் தலைவர்களுக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பும் இலங்கையின் அரசியல் தலைவர்கள், இந்தப் புதுமைகளையும் பழகிக்கொள்ளவேண்டும். ஆனால் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று இலங்கையில் அரசியல் செய்வோர் மிக மோசமான இனவாதிகளாக உருவெடுப்பது வெட்கக்கேடானதும் வேதனைக்குரியதுமாகும்.

இலங்கை அரசாங்கத்தால் ஈழத் தமிழ் மக்கள் மேல் யுத்தம் திணிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் வகைதொகையின்றி கொன்றுகுவிக்கப்பட்டனர். இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டனர். சர்வதேச சாட்சியங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, சாட்சியமற்ற யுத்தம் ஒன்று நடாத்தி முடிக்கப்பட்டது. இதனால் மனித உரிமை மீறல்களும், யுத்தக்குற்றங்களும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களும் வகைதொகையின்றி அரங்கேற்றப்பட்டது. இவ்வாறு யுத்தத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பல தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா முன்னின்று உழைத்ததை நாங்கள் நன்றியுடன் நினைவு கூர்கின்றோம். ஆனால் இப்பொழுது, ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களுக்கு தன்னால் உடன்படவோ அல்லது அதற்குக் கட்டுப்படவோ முடியாதென கூறி இலங்கை அந்தத் தீர்மானங்களிலிருந்து வெளியேறியுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளையும், உறவுகளையும் தேடி ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மற்றும் சகோதரிகள் ஆயிரத்து ஐநூறு நாட்களைக் கடந்தும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். உலகமெல்லாம் மனித உரிமைக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் குரல் கொடுக்கும் அமெரிக்க ஜனநாயகக் கட்சியினரும் அதன் தெரிவு செய்யப்பட்ட இன்றைய தலைவர்களான ஜோ பைடன் மற்றும் கமலா ஹரீஷ் போன்றவர்கள் பாதிக்கப்பட்ட மற்றும் நீதி கோரிநிற்கும் ஈழத் தமிழர்;களுக்காக குரல் கொடுக்க வேண்டுமெனவும் அவர்களது இழப்புகளுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒரு சர்வதேச விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு, அவர்களுக்கான நீதி மற்றும் நிவாரணம் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

யுத்தக் குற்றங்களை மேற்கொண்ட இலங்கை அரசாங்கத்தை சர்வதேச மன்றங்களில் பாதுகாப்போம் என இலங்கைக்கு விஜயம் செய்த சீனத் தலைவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு உறுதிமொழி அளித்திருக்கின்றார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்தவிதமான நீதி விசாரணைகளும் நடாத்த உலக நாடுகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. மனித உரிமைகள் குறித்து பேசினால்கூட சீன அரசாங்கம் தாங்கள் அரசுகளுடன் மாத்திரம்தான் உறவுகளைப் பேணுவதாகவும் மனித உரிமைகள் என்பது உள்நாட்டு விவகாரம் என்று தட்டிக்கழிக்கும் போக்கையே காணமுடிகின்றது. இந்த நிலையில், அமெரிக்க நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதியும் மற்றும் துணை ஜனாதிபதியும் ஈழத் தமிழ் மக்களின் அவலங்களைப் போககும்வகையில் அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டுமென்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டிநிற்கின்றோம்.

https://www.ilakku.org/அமெ-புதிய-தலைமை-தமிழர்கள/

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தங்களை தமிழர்களாக அழைக்கிறார்களோ இல்லையோ 
இனத்துக்காகவும் இனத்தின் இருப்புக்கவும் தம்மை ஆதிகியாக்கிய 
வீரர்களையும் அடுத்த தலைமுறையாவது தலை நிமிர்ந்து வாழ வேண்டும்
என்ற எண்ணத்துடனும் உணர்வுடனும் தங்கள் உடலில் வெடிமருந்து சுமந்த 
போராளிகளையும் எதிரிகூட வியந்து பார்த்தவர்களை 
கொச்சையாக அபேசிக்கொண்டு திரிந்து தங்களை அறிவாளிகள் என்று 
காட்ட வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை என்று உறுதியாக கூறுகிறேன் 

நிறை குடங்கள் தளும்புவது இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
தேர்தல் முடிவுகளுக்கு முன் டிரம்ப் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை நீக்கி விசுவாசிகளை நியமித்தார்

தேர்தல் முடிவுகளுக்கு முன் டிரம்ப் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை நீக்கி விசுவாசிகளை நியமித்தார்
 

டிரம்ப் நிர்வாகம் பாதுகாப்புத் துறையின் சிவில் தலைமைத்துவ கட்டமைப்பில் பெரும் மாற்றங்களைச் செய்து வைத்துள்ளது. அதன் மிக மூத்த அதிகாரிகளை நீக்கிவிட்டு, அவர்களுக்கு பதிலாக அதிபரின் விசுவாசிகளை மாற்றியுள்ளது.


அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை நீக்கிய சுமார் 24 மணி நேரத்திற்குப் பிறகு, பாதுகாப்புத் திணைக்களம் ஒரு அறிக்கையில் அறிவித்த மாற்றங்களின் சீற்றம், பென்டகனுக்குள்  இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளிடையே வளர்ந்து வரும் எச்சரிக்கை உணர்வைத் தூண்டியுள்ளது. 

எஸ்பர், அவரது பணியாளர் தலைவர் மற்றும் கொள்கை மற்றும் உளவுத்துறையை மேற்பார்வையிடும் உயர் அதிகாரிகள் உள்பட நான்கு மூத்த சிவில் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு பதிலாக டிரம்ப் விசுவாசிகள் அங்கு மாற்றப்பட்டனர்.

ஆனால் இந்த நடவடிக்கைகள் பென்டகனுக்குள் குழப்ப உணர்வை அதிகரித்து உள்ளது. ஜோ பிடன் அதிபர்  தேர்தலில் வெற்றியாளராக அறிவிக்கபட்டார். ஆனால் இந்த முடிவை டிரம்ப் ஏற்க மறுத்துவிட்டார். குழப்பமான இந்த நேரம் நாட்டின் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்ற கவலைகள் அதிகரித்து வருகின்றன.

https://www.dailythanthi.com/News/World/2020/11/11133759/Trump-administration-removes-senior-defense-officials.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

கமலா ஹாரிஸிடம் மன்னிப்புக் கோரிய மலேசிய தொலைக்காட்சி

 
1-59-696x365.jpg
 2 Views
கமலா ஹாரிஸ் தாயை சட்டவிரோத குடியேறி எனக் கூறிய மலேசிய தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியுள்ளது.
 
அண்மையில் நடந்த அமெரிக்க தேர்தலில், அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் குறித்து செய்தியை வாசிக்கும் போது அவரை சட்டவிரோத குடியேறியின் மகள் எனக் குறிப்பிட்டதற்காக TV3 எனும் மலேசிய தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியுள்ளது.
 
கமலா ஹாரிஸ் தந்தை ஜமாக்காவைச் சேர்ந்தவர் என்றும் தாய் இந்தியாவிலிருந்து வந்த சட்டவிரோத குடியேறி என்றும் அத்தொலைக்காட்சி குறிப்பிட்டமை பெரும் விமர்சினத்திற்கும் கண்டனத்திற்கும் உள்ளாகியிருந்தது.
 
அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் மற்றும் கருப்பின துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறமை குறிப்பிடத்தக்கது. இவரது தாய் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்.
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Maruthankerny said:

அவர்கள் தங்களை தமிழர்களாக அழைக்கிறார்களோ இல்லையோ 
இனத்துக்காகவும் இனத்தின் இருப்புக்கவும் தம்மை ஆதிகியாக்கிய 
வீரர்களையும் அடுத்த தலைமுறையாவது தலை நிமிர்ந்து வாழ வேண்டும்
என்ற எண்ணத்துடனும் உணர்வுடனும் தங்கள் உடலில் வெடிமருந்து சுமந்த 
போராளிகளையும் எதிரிகூட வியந்து பார்த்தவர்களை 
கொச்சையாக அபேசிக்கொண்டு திரிந்து தங்களை அறிவாளிகள் என்று 
காட்ட வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை என்று உறுதியாக கூறுகிறேன் 

நிறை குடங்கள் தளும்புவது இல்லை. 

நல்ல மாட்டுக்கு  இல்லை நல்ல மாடுகளுக்கு ஒரு சூடு!! சூடு சுரணை இல்லாட்டி நாங்கள்  ஒன்றும் செய்ய இயலாது??

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல interesting விளையாட்டு தான். தங்களை தமிழர்களாக காட்டி கொள்ள விரும்பாதவர்களை எங்கள் தமிழன் என்று சொந்தம் கொண்டாடி பெருமை கொள்வது தன்னை தமிழர் என்று சொல்லி கொள்பவர்களை துரோகி, தெலுங்கன் என்று திட்டுவது  😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

இது ஒரு நல்ல interesting விளையாட்டு தான். தங்களை தமிழர்களாக காட்டி கொள்ள விரும்பாதவர்களை எங்கள் தமிழன் என்று சொந்தம் கொண்டாடி பெருமை கொள்வது தன்னை தமிழர் என்று சொல்லி கொள்பவர்களை துரோகி, தெலுங்கன் என்று திட்டுவது  😂

சின்ன திருத்தம் . தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு முதுகில் குத்துபவர்களை அல்லது தமிழர் முதுகிலேறி சவாரிசெய்பவர்களை என்று வரவேண்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

இது ஒரு நல்ல interesting விளையாட்டு தான். தங்களை தமிழர்களாக காட்டி கொள்ள விரும்பாதவர்களை எங்கள் தமிழன் என்று சொந்தம் கொண்டாடி பெருமை கொள்வது தன்னை தமிழர் என்று சொல்லி கொள்பவர்களை துரோகி, தெலுங்கன் என்று திட்டுவது  😂

இதுக்குள்ளை ஆரை இழுத்துக்கொண்டு வாறியள்?  😎

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இதுக்குள்ளை ஆரை இழுத்துக்கொண்டு வாறியள்?  😎

தொடர்ந்தும் தூண்டில் போட்டபடி தான்.
போனால் மயிர்
வந்தால் மலை.

  • கருத்துக்கள உறவுகள்
வெள்ளை மாளிகையில் முக்கிய பதவிக்கு ரான் கிளைன் தேர்வு - ஜோ பைடன் நடவடிக்கை

வெள்ளை மாளிகையில் முக்கிய பதவிக்கு ரான் கிளைன் தேர்வு - ஜோ பைடன் நடவடிக்கை
 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய 77 வயது ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். அவர் ஜனவரி மாதம் 20-ந்தேதி அந்த நாட்டின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

ஆட்சி மாற்றத்துக்கான ஆயத்த நடவடிக்கைகளில் அவரும், அவரது குழுவினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.


இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வமான இல்லமான வாஷிங்டன் மாளிகையின் பணியாளர் குழு தலைவராக ரான் கிளைனை ஜோ பைடன் தேர்வு செய்துள்ளார். வெள்ளை மாளிகை நிர்வாகம், ரான் கிளைன் வசம் வரும். வெள்ளை மாளிகையின் மிக முக்கிய பதவி இது. ஜனாதிபதியின் அன்றாட செயல்பாடுகளை நிர்வாகம் செய்வார். வெள்ளை மாளிகையில் இவரது கவனத்துக்கு வராமல் ஒரு துரும்பு கூட அசைய முடியாது.

இவர் ஜோ பைடனின் மூத்த உதவியாளர் ஆவார். 1980-களில் இருந்து ஜோ பைடனிடம் இவர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது வெள்ளை மாளிகையின் மூத்த உதவியாளராகவும், துணை ஜனாதிபதி அல் கோரின் பணியாளர் குழு தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

ரான் கிளைன் பற்றி ஜோ பைடன் குறிப்பிடுகையில், “அவருக்கு ஆழ்ந்த, மாறுபட்ட அனுபவம் உண்டு. அரசியல் அரங்கில் அனைத்து தரப்பினருடனும் பணியாற்றும் திறனும் இருக்கிறது” என கூறினார். தனது தேர்வு பற்றி ரான் கிளைன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/World/2020/11/13044627/Ron-Klein-elected-to-key-post-in-White-House--Joe.vpf

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

தொடர்ந்தும் தூண்டில் போட்டபடி தான்.
போனால் மயிர்
வந்தால் மலை.

என்ன செய்ய இப்படியே புலம்பிக்கொண்டு திரிய வேண்டியதுதான், இன்னும் கொஞ்ச நாளில் 

அரசியல் பைத்தியம் - வாழ்க்கை கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

ஜோ பைடனுக்கு ஒருவாரத்திற்கு பிறகு வாழ்த்து தெரிவித்த சீனா..!

ஜோ பைடனுக்கு ஒருவாரத்திற்கு பிறகு வாழ்த்து தெரிவித்த சீனா..!

 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

ஆனால், சீனா, ரஷியா, மெக்சிகோ போன்ற சில நாடுகள் வாழ்த்து தெரிவிக்காததுடன், எந்த கருத்தும் கூறவில்லை. டிரம்ப் நிர்வாகத்தின்கீழ், அமெரிக்க-சீன உறவு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இருப்பினும், டிரம்பின் தோல்விக்கு மகிழ்ச்சி அடையும் விதத்தில் கூட சீனா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


இந்நிலையில் ஒரு வழியாக இன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், அமெரிக்க மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம், ஜோ பைடன் மற்றும் ஹாரிஸுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

https://www.dailythanthi.com/News/World/2020/11/13155112/China-Congratulates-Joe-Biden-On-US-Election-Win.vpf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.